Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

12 ராசிகளுக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017 : A clear Reference Guide...!

| Jul 27, 2016
நட்சத்திர வாரியாக மிகத் தெளிவாக , முக்கியமாக - வழிபாட்டு ஸ்தலங்களும், மந்திரங்களும் - எந்த எந்த கிரகத்துக்கு அந்த வழிபாடு என்கிற காரணங்களும், நான் படித்த வகையில் இந்த பதிவை  கொஞ்சம் வித்தியாசப் படுத்தி காட்டியது..! திரு . முருகு பாலமுருகன் அவர்கள் நக்கீரன் இதழுக்காக கணித்து வழங்கிய  குருப்பெயர்ச்சி பலன்களை நம் வாசக நண்பர்கள் தெரிந்து பயன்பெறுவதற்காக , பகிர்ந்து கொண்டுள்ளேன்..!

வாழ்க அறமுடன்...! வளர்க அருளுடன்..!

ரிஷி 

=====================================================================

 எல்லாம் வல்ல எம்பெருமான் முருகனின் அருளோடும், எனது தந்தை தெய்வத்திரு ஜோதிட சக்கரவர்த்தி முருகு இராசேந்திரன் அவர்களின் ஆசியோடும் இந்த குருப்பெயர்ச்சிப்பலனை உங்களுக்கு வழங்கியுள்ளேன். பொன்னவன் என போற்றப்படக்கூடிய குரு பகவான் வாக்கிய சித்தாந்தப்படி வரும் துர்முகி வருடம் ஆடி மாதம் 18-ஆம் தேதி, 02-08-2016 செவ்வாய்கிழமை காலை 09.27 (08.37 நாழிகைக்கு ) கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகி 02-09-2017 வரை கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யுவுள்ளார். கன்னியில் சஞ்சரிக்கும் குரு அதிசாரமாக துலா ராசியில் 17-01-2017 முதல் 10-03-2017 வரை சஞ்சரிக்க உள்ளார்.

(திருக்கணிதப்படி 11-08-2016 முதல் 11-09-2017 வரை).

கன்னி ராசியில் குரு பகவான் சஞ்சாரம் செய்யவுள்ள காலங்களில் 12 ராசிகளுக்கும் உண்டாகக் கூடிய பலா பலன்களை தெள்ளத் தெளிவாக எழுதியுள்ளேன். இதனைப் படித்து அனைவரும் பயன் பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
முனைவர் முருகுபாலமுருகன்
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

அஞ்சா நெஞ்சமும் துணிவும் தைரியமும் கொண்ட மேஷ ராசி நேயர்களே! ஆண்டுக்கோளான குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு 6-ஆம் வீட்டில் 02.08.2016 முதல் 02-09-2017 வரை சஞ்சாரம் செய்யவிருப்பது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். தேவையற்ற பிரச்சினைகள், வம்பு, வழக்குகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி குறையும். கணவன் மனைவிடையே வீண் வாக்குவாதங்கள் தோன்றும். நண்பர்களும் எதிரிகளாக செயல்படுவதால் மன நிம்மதி குறையும். குரு பார்வை 2, 10, 12-ஆம் வீடுகளுக்கு இருப்பதாலும், கேது 11-ல் சஞ்சரிப்பதாலும் ஓரளவுக்கு எதையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகளாலும் வீண் விரயங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது, பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளில் தடைகள் ஏற்பட்டாலும் வேலைப்பளு குறைவாகவே இருக்கும். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவு கிட்டும். சனி 8-ல் சஞ்சரித்து அஷ்டம சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. ராகு 5-ல் சஞ்சரிப்பதால் பிள்ளைகளிடம் விட்டு- கொடுத்துச் செல்வது உத்தமம்.

உடல் ஆரோக்கியம்உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகியபடியே இருக்கும் என்றாலும், எதையும் சமாளித்து அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். மனைவி, பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய ஆரோக்கிய பாதிப்புகளால் குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாள் நோய்களுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுப்பது நல்லது.

குடும்பம், பொருளாதார நிலைகணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்து விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் பிறருக்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். அசையும்- அசையா சொத்துகளால் வீண் செலவுகள் ஏற்படும்.

கொடுக்கல்- வாங்கல்பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் ஈடுபட்டிருப்பவர்கள் பெரிய தொகைகளை எந்தவொரு காரணத்தைக் கொண்டும் பிறருக்குக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். உங்களுக்கு தேவையற்ற வம்பு, வழக்குகளும் அதிகரிக்கும். எதிலும் கவனமுடனிருப்பது நல்லது.

தொழில், வியாபாரம்செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும் என்றாலும், வரவேண்டிய வாய்ப்புகளை கைநழுவிப் போகாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும். அபிவிருத்தி சாதகமாக இருக்கும். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். தொழிலாளர்களும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவதால் மனசஞ்சலங்கள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடை தாமதங்களுக்குப் பின் கிட்டும்.

உத்தியோகம்பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்காக நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உடல் நிலையில் உண்டாகக் கூடிய பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடுவதால் வேலைபளுவும் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் செய்யும் கெடுபிடிகளால் மனநிம்மதி குறையும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைப்படும்.

பெண்கள்உடல் நிலையில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவி  விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது, உற்றார்- உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைக்கவும். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்துகொள்வதைத் தவிர்க்கவும். பேச்சில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.

அரசியல்மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றினால் மட்டுமே அவர்களின் ஆதரவுடன் பதவியை தக்கவைத்துக்கொள்ள முடியும். எதிர்பார்க்கும் மாண்புமிகு பதவிகள் தாமதப்படும். கட்சிப் பணிகளுக்காக அதிக செலவுகள் செய்ய நேரிடும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

விவசாயிகள்பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்காது. போதிய நீர்வரத்தின்மையால் பயிர்கள் வாடும். பட்ட பாட்டிற்கு பலனின்றிப் போகும். வங்கிக் கடன்களை அடைக்க இயலாது. அரசு வழியில் வரவிருந்த மானிய உதவிகளும் தாமதப்படும். சேமிப்புகள் குறையும்.

கலைஞர்கள்வரவேண்டிய வாய்ப்புகள் போட்டிகளால் கைநழுவிப்போகும். நினைத்த கதாபாத்திரத்திரங்களில் நடிக்க முடியாது. பொருளாதார நிலையிலும் இடையூறுகள் நிலவுவதால் சுகவாழ்வு, சொகுசுவாழ்வில் பாதிப்பு ஏற்படும். சக நடிகர்களுடன் கவனமுடன் பழகுவது நல்லது.

மாணவ- மாணவியர்கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. அரசு வழியில் வரவேண்டிய உதவிகள் தாமதப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் தேடி வரும். உடன்பழகும் நண்பர்களால் சிறுசிறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதால் கவனம் தேவை. பயணங்களின்போது வேகத்தைக் குறைப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் கவனமுடன் இருக்கவும்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 02-08-2016 முதல் 20-09-2016 வரை சஞ்சாரம்குரு பகவான் பஞ்சமாதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. கேது 11-ல் சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு நற்பலன்களை அடையமுடியும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். 8-ல் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்திலும் நிம்மதிக் குறைவுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களும் தங்கள் பங்கிற்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். மனைவி, பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் பிறருக்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. பூர்வீக சொத்துகளால் எதிர்பார்க்கும் அனுகூலங்கள் தாமதப்படும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு கெடுபிடிகள் தோன்றும். வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 21-09-2016 முதல் 25-11-2016 வரை சஞ்சாரம்குரு பகவான் 4-ஆம் அதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இக்காலங்களிலும் தேவையற்ற பிரச்சினைகளையே சந்திக்க நேரிடும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. சனி 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படும் என்றாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். பொருசிளாதார நிலையிலும் ஏற்ற இறக்கமான சூழ்நிலை நிலவுவதால் ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. செய்யும் தொழில், வியாபாரத்தில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் உதவியால் ஓரளவுக்கு லாபத்தைப் பெருக்க முடியும். போட்டிகளை சமாளிக்க வேண்டியிருக்கும். பயணங்களால் சற்று அலைச்சலும் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதும், பிறர் விஷயங்களில் தலையிடாதிருப்பதும் நல்லது.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 26-11-2016 முதல் 16-1-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் ராசியாதிபதி செவ்வாயின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இது அவ்வளவு சாதக அமைப்பு என்று கூற முடியாது. கேது 11-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து நடப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது போன்றவற்றால் நற்பலனை அடையலாம். திருமண சுபகாரியகளுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றி கிட்டும். பணவரவுகளில் ஏற்றத் தாழ்வுகள் இருப்பதால் தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல் வாங்கலிலும் பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். தொழில், வியாபார ரீதியாக மேற்கொள்ளும் புதிய முயற்சிகளில் சில இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உண்டாகக்கூடிய எதிர்பாராத இடமாற்றங்களால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிப்பதோடு நேரத்திற்கு உணவுண்ண முடியாத நிலை ஏற்படும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் துலா ராசியில் 17-01-2017 முதல் 22-02-2016 வரை சஞ்சாரம்குரு பகவான் இக்காலங்களில் செவ்வாயின் நட்சத்திரத்தில் துலா ராசியில் அதிசாரமாக- ஜென்ம ராசிக்கு 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் பொருளாதார நிலையில் நல்ல மேன்மைகள் உண்டாகும். கடந்த காலங்களிலிருந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகி குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தடபுடலாக நடைபெறும். கடன்கள் குறையும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் உதவி கிட்டும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். பொன், பொருள் சேரும். கேது 11-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை ஏற்படும். போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் குறையும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களும் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயர்வடைவார்கள். சனி பகவான் 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 23.02.2017 முதல் 01.06.2017 வரைகுரு பகவான் வக்ரகதியிலிருப்பதால் இக்காலங்களிலும் நன்மையான பலன்களை அடையமுடியும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நடைபெறும். தாராள தனவரவுகளால் குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும். புதிய பூமி, மனை, வண்டி வாகனங்களையும் வாங்க முடியும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. செய்யும் தொழில், வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். போட்டி, பொறாமைகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் அதிகரிப்பதால் எந்தவொரு பணியிலும் முழுமையாக ஈடுபடமுடியும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 02-06-2017 முதல் 15-07-2017 வரை சஞ்சாரம்குரு உங்கள் ராசிக்கு 4-ஆம் அதிபதி சந்திரனின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்கள் நன்மை, தீமை நிறைந்ததாகவே இருக்கும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஜல சம்பந்தப்பட்ட பாதிப்புகள், வயிறு கோளாறு போன்றவை தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். மனைவி, பிள்ளைகளின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. மணமாகாதவர்களுக்கு வரன் அமையும் விஷயங்களில் தாமத நிலை உண்டாகும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் அதிகரிக்கும். வரவேண்டிய வாய்ப்புகளை கண்ணெதிரிலேயே பிறர் தட்டிச் செல்வதால் நிம்மதிக் குறைவு உண்டாகும். தொழிலாளர்களுக்குத் தரவேண்டிய சம்பள பாக்கிகள் நிலுவையில் இருக்கும். நண்பர்களே விரோதிகளாக மாறுவார்கள். சனி 8-ல் சஞ்சரிப்பதால் எதிலும் கவனமுடனிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 16-07-2017 முதல் 02-09-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் ராசியாதிபதி செவ்வாயின் நட்சத்திரத்தில், ஜென்ம ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளார். இதனால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். பொருளாதார நிலை அவ்வளவு சாதகமாக இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ செலவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களால் மன நிம்மதி குறையக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார்- உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. திருமண சுபகாரியகளுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றி கிட்டும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வரும் 27-07-2017-ல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது 10-ல் சஞ்சரிக்கவிருப்பதால், எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்றுவிட முடியும். கொடுக்கல்- வாங்கலில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் நிறைய போட்டிகளை எதிர்கொண்டே லாபத்தினை அடைய முடியும்.

நட்சத்திரப்பலன்அஸ்வினிமேஷ ராசியில் கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் ஜென்ம ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்படும். எந்தவொரு காரியத்திலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். எதிர்பாராத உதவிகள் சில அவ்வப்போது கிடைக்கப் பெறுவதால் கடனில்லாத கண்ணிய வாழ்க்கை வாழமுடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவது, உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

பரணிமேஷ ராசியில் சுக்கிரனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் கணவன், மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முன்கோபத்தைக் குறைந்து பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.

கிருத்திகை 1-ஆம் பாதம்மேஷ ராசியில் சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6-ல் குரு சஞ்சரிப்பதால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழிலில் சுமாரான லாபம் கிட்டும்.

அதிர்ஷ்டம் அளிப்பவைஎண்:         1, 2, 3, 9, 10, 11, 12நிறம்      : ஆழ் சிவப்புகிழமை: செவ்வாய்கல்: பவளம்திசை: தெற்குதெய்வம்: முருகன்

பரிகாரம்மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், வியாழக் கிழமைகளில் விரதமிருந்து குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலையை மாலையாகக் கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது, தானம் போன்றவற்றை காலைப் பொழுதிலும் (வியாழக் கிழமைகளில்) மந்திர ஜெபங்களை மாலைப் பொழுதிலும் செய்வது உத்தமம். சனி 8-ஆம் வீட்டில் சஞ்சரித்து அஷ்டமசனி நடைபெறுவதால் சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழு மலையில் வீற்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை வழிபடுவது, அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, சனிக்கிழமைகளில் விரதமிருந்து அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது, சனிக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீலநிற சங்குப் பூக்கள் கருங்குவளைப் பூக்களால் அர்ச்சனை செய்வது நல்லது. ராகு 5-ல் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மற்றும் மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வது, தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை தொழுநோயாளிகளுக்கு தானம் கொடுப்பது உத்தமம்.

=========================================================================

ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ஆடம்பர வாழ்க்கையில் அதிக ஆர்வம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே! உங்கள் ஜென்மராசிக்கு 8, 11-க்கு அதிபதி குரு 02-08-2016 முதல் 02-09-2017 வரை பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்து ஜென்ம ராசியைப் பார்வைசெய்ய இருப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் கடந்த கால பிரச்சினைகள் அனைத்தும் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி மணமாகாதவர்களுக்கு மணமாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். அசையும், அசையா சொத்துகளை வாங்கிச் சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்துகளாலும் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் சரளமான நிலையிருப்பதால் லாபம் பெருகும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் இருக்காது. சனி 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளும், கணவன், மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக்குறைவும் உண்டாகும் என்றாலும், குரு பார்வை ஜென்ம ராசிக்கும் 9, 11-ஆம் வீடுகளுக்கும் இருப்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலனை அடைய முடியும். தொழில், வியாபாரம் சிறந்த முறையில் நடைபெறும். புதிய புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும். கூட்டாளிகளை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகளும் இடமாற்றங்களும் கிடைக்கப் பெறும். எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகளால் அனுகூலமான பலன்களை அடைய முடியும்.

உடல் ஆரோக்கியம்உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவச் செலவுகள் அதிகம் உண்டாகாது. குடும்பத்திலுள்ளவர்கள் ஓரளவுக்கு சுபிட்சமாக இருப்பார்கள். கை கால் மூட்டுகளில் வலி, உடல் சோர்வு போன்றவை தோன்றி மறையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும்.

குடும்பம், பொருளாதார நிலைகணவன், மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பணவரவுகள் சிறப்பாக அமையும். அசையும், அசையா சொத்துகளையும் வாங்கி சேர்ப்பீர்கள். சிலருக்கு பூர்வீக சொத்துகளாலும் லாபம் கிட்டும். உற்றார்- உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும்.

கொடுக்கல்- வாங்கல்பணவரவுகளில் சரளமான நிலை இருக்கும். தாராள தனவரவுகளால் எல்லா கடன்களும் குறையும். கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் பெற முடியும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். பூர்வீக சொத்து விஷயங்களிலுள்ள வம்பு, வழக்குகள் யாவும் ஒரு முடிவுக்கு வரும். எதிர்பாராத பணவரவுகளும் கிடைக்கப் பெற்று பொருளாதாரம் மேம்படும்.

தொழில், வியாபாரம்தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். அரசு வழியில் ஆதரவுகள் தேடி வரும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் அனுகூலம் உண்டாகும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.

உத்தியோகம்பணியில் வேலைப்பளு குறைவாகவே இருக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுக்கள் மனதிற்கு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். எந்தவொரு பணியையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும்.

பெண்கள்உடல் நிலை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும். கணவன்- மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை பலப்படும். அழகான புத்திர பாக்கியமும் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் சுகவாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. அதிநவீன பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். உற்றார், உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். சேமிப்புகளும் பெருகும்.

அரசியல்பெயர், புகழ், பதவி யாவும் உயரக்கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை அளிக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேர்ந்தாலும் மறைமுக வருவாய்கள் பெருகும். அடிக்கடி வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு அமையும்.

விவசாயிகள்பயிர் விளைச்சல் சிறப்பாக அமைவதால் லாபம் பெருகும். புதிய நவீன கருவிகளை வாங்க முடியும். புதிய பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.

கலைஞர்கள்நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெறுவதால் உங்கள் திறமைக்கு தீனி போட்டதுபோல இருக்கும். கனவுகள் யாவும் நனவாகும். புதிய கார், பங்களா போன்றவற்றை வாங்குவீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த சம்பள பாக்கிகள் கிடைக்கப்பெறும்.

மாணவ- மாணவியர்கல்வியில் திறம்படச் செயல்பட முடியும். பேச்சுப்போட்டி, எழுத்துப் போட்டி போன்றவற்றில் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டிச்செல்வீர்கள். கல்விக்காக பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். நல்ல நண்பர்களின் சேர்க்கையால் பல நற்பலன்கள் உண்டாகும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 02-08-2016 முதல் 20-09-2016 வரை சஞ்சாரம்ஜென்ம ராசிக்கு 8, 11-க்கு அதிபதி குரு சஞ்சாரம் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் நட்பு கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலம் ஏற்றத்தை அளிப்பதாகவே இருக்கும். கடந்த காலப் பிரச்சினைகள் யாவும் விலகும். பணவரவுகள் மிகச் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ள முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். அழகான குழந்தை பாக்கியமும் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்த முடியும். பொன், பொருள் சேரும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்படச் செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரமுடியும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 21-09-2016 முதல் 25-11-2016 வரை சஞ்சாரம்குரு பகவான் நட்பு கிரகமான சந்திரனின் நட்சத்திரத்தில், 5-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் ஏற்றமான பலன்களே உண்டாகும். சொந்த பூமி, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். செய்யும் தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். பணவரவுகளும் சரளமாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலும் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்திலும் நிம்மதியான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். பொன், பொருள் சேரும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களும் உயர்பதவிகளை அடைய முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 26-11-2016 முதல் 16-1-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் 7, 12-க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில், ஜென்ம ராசிக்கு 5-ல் சஞ்சாரம் செய்யும் இக்காலங்கள் ஏற்றம் அளிப்பதாகவே அமையும். தாராள தனவரவு உண்டாகி பொருளாதார நிலையிலிருந்த நெருக்கடிகள் விலகும். கணவன், மனைவியிடையே சிறுசிறு ஊடல்கள் ஏற்பட்டாலும் பிரிவு உண்டாகாது. தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடைவிலகி தடபுடலாக கைகூடும்.  புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் அசையும் அசையா சொத்துகளையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். பொன், பொருள் சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான நிலையிருக்கும். செய்யும் பணிக்கு உயரதிகாரிகளிடம் பாராட்டுதல்கள் கிடைக்கப்பெறும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். அரசு வழியிலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் துலா ராசியில் 17-01-2017 முதல் 22-02-2017 வரை சஞ்சாரம்குரு களத்திர, விரய ஸ்தானாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் அதிசாரமாக 6-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் லாபங்களும் விரயங்களும் மாறி மாறி வரும். பொருளாதாரநிலை சுமாராகாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். கணவன், மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். புத்திர வழியில் தேவையற்ற மனசஞ்சலங்கள் உண்டாகும். புதிய வீடு, வாகனம் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் பொருள் தேக்கம் உண்டாகாது. பெரிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகளை பிறர் தட்டிச் செல்வதால் மனநிம்மதி குறையும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படுவதால் குடும்பத்தைவிட்டுப் பிரிய நேரிடும்.

குரு பகவான் வக்ரகதியில் 23-02-2017 முதல் 01-06-2017 வரைகுரு பகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கவுள்ளதால் இக்காலங்களில் அனுகூலமான பலன்களைப் பெற முடியாது. அசையும், அசையா சொத்துகளால் வீண் செலவுகள் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை உண்டாகும். எடுக்கும் காரியங்களில் இடையூறுகளே ஏற்படும். கணவன், மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். புத்திரர்களாலும் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உற்றார், உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படுவதால் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட்தேக்கம் உண்டாகாது. கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எந்த பிரச்சினைகளையும் எளிதில் எதிர்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 02-06-2017 முதல் 15-07-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் சந்திரனின் நட்சத்திரமாகிய அஸ்தத்தில் ஜென்ம ராசிக்கு 5-ல் சஞ்சாரம் செய்கிறார். இது அற்புதமான அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் தேவையற்ற வீண் வாக்குவாதங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது. பலருக்கு பல நல்ல காரியங்கள் செய்து நல்ல பெயரை எடுப்பீர்கள். பூமி, மனை போன்றவற்றை வாங்கும் யோகமும், சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களையும் தடையின்றி வசூலிக்க முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர், வெளிநாடு தொடர்புடையவற்றால் அனுகூலம் உண்டாகும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைக்கும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 16-07-2017 முதல் 02-09-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் களத்திர, விரய ஸ்தானாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில், 5-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் அனுகூலமான நற்பலன்களைத் தடையின்றிப் பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கணவன், மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். சிலருக்கு சொந்த பூமி, மனை வாங்கும் யோகம் அமையும். பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு, வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகளும், அரசு வழியில் ஆதாயங்களும் தேடி வரும். 27-07-2017-ல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகு 3-ல் சஞ்சரிக்கவிருப்பதால் உங்களுக்கு இருந்து வந்த சிறுசிறு பிரச்சினைகள் கூட விலகி எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியைக் கொடுக்கும். உத்தியோகஸ்தர்கள் திறமைக்கேற்ற உயர்வுகளைப் பெறுவார்கள்.

நட்சத்திரப்பலன்கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள்ரிஷப ராசியில் சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நினைத்ததெல்லாம் நிறைவேறும். தாராள தனவரவுகளால் பொருளாதார மேன்மை உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும். புத்திர வழியில் பூரிப்பு ஏற்படும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவீர்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.

ரோகிணிரிஷப ராசியில் சந்திரனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு திரிகோண ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். பொருளாதார மேன்மைகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். அசையும்- அசையா சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். கடன்கள் யாவும் படிப்படியாகக் குறையும்.

மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்ரிஷபராசியில் செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் உண்டாகும். கணவன்- மனைவிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. அசையும்- அசையா சொத்துகளை வாங்கிச் சேர்ப்பீர்கள். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். எதிர்பார்க்கும் இடமாற்றங்களும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்டம் அளிப்பவைஎண்:       5, 6, 8, 14, 15, 17நிறம்      : வெண்மை, நீலம்கிழமை: வெள்ளி, சனிகல்: வைரம்திசை: தென்கிழக்குதெய்வம்: விஷ்ணு, லட்சுமி

பரிகாரம்உங்கள் ஜென்ம ராசிக்கு 7-ல் சனி சஞ்சரிப்பதால், சனி பகவானுக்கு கருப்புநிற வஸ்திரம் சாற்றி, நீலநிற சங்குப் பூக்கள் மற்றும் கருங்குவளைப் பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது, அனுமனை வழிபடுவது. அனுமன் துதிகளைக் கூறுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. நல்லெண்ணெய், எள், கடுகு, சமையல் பாத்திரங்கள், குடை, செருப்பு, நீல மலர்கள் ஆகியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்வது, சனியின் பீஜ மந்திரமான ""ஹ்ரீம் ஸ்ரீம் க்ரஹ சக்ரவர்த்தினே, சனைச்சராய க்லீம் இம் சஹ ஸ்வாஹா"" என ஜெபிப்பது நல்லது. ராகு 4-ல் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சிவன் மற்றும் சண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்குவது, சனிக்கிழமைகளில் உபவாச விரதம் இருப்பது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

===========================================================================

மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்பாக செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே! உங்களுக்கு வரும் 02-08-2016 முதல் 02-09-2017 வரை ஆண்டுக்கோளான குரு ஜென்ம ராசிக்கு சுகஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளார். இதனால் வீண் அலைச்சல், டென்ஷன், சுகவாழ்வு பாதிப்பு போன்றவை உண்டாகும். வீடு, வாகனம் போன்றவற்றாலும் வீண் செலவுகள் ஏற்படும். ராகு 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும், சனி 6-ல் சஞ்சாரம் செய்வதாலும் எதையும் சமாளிக்ககூடிய ஆற்றல், பெரிய மனிதர்களின் ஆதரவு, பல பொது நலக்காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு போன்றவை உண்டாகும். கணவன், மனைவியிடையே பிரச்சினைகள் தோன்றினாலும் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபங்கள் கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர், வெளிநாடு தொடர்புடையவற்றால் அனுகூலங்கள் ஏற்படும். குரு பார்வை 8, 10, 12-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் மருத்துவச் செலவுகள் குறைவாகவே இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் பதவி உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். அரசியல்வாதிகளுக்கு பெயர், புகழ் உயரும். பல்வேறு பொதுநல காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை, சோர்வு உண்டாகும் என்றாலும் பெரிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. தேவை யற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்துக்கொள்ள முடியும். நேரத்திற்கு உணவு உண்பது நல்லது. நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு வருபவர்கள் மருத்துவ முறைகளை ஒழுங்காகக் கடைப்பிடிக்கவும்.

குடும்பம், பொருளாதார நிலைகணவன்- மனைவியிடையே அடிக்கடி தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றி மறையும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள் வதால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். பணவரவுகள் ஏற்ற இறக்க மாக இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கவும். சிலருக்கு அசையும்- அசையா சொத்துகளால் வீண் விரயங்கள் உண்டாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும்.

கொடுக்கல்- வாங்கல்பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை திருப்பிக் கேட்டாலே வீண் பிரச்சினை களை சந்திக்க வேண்டியிருக்கும். பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக இருக்கும். உடன் பழகுபவர்களிடம் சற்று கவனமுடனிருப்பது நல்லது.

தொழில், வியாபாரம்தொழில், வியாபாரம் சிறப்பாகவே நடைபெறும். எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். தொழிலாளர்களாலும், கூட்டாளிகளாலும் அனுகூலமான பலன்கள் உண்டாவதோடு, அபிவிருத்தியைப் பெருக்கவும் உறுதுணையாக இருப்பார்கள். எந்தவொரு காரியத்திலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்து வதற்கு முன் சற்று நிதானித்து சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

உத்தியோகம்பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உழைப்பிற்கேற்ற பலனை தடையின்றிப் பெறமுடியும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப் பட்டாலும் பதவி உயர்வுகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும்.

பெண்கள்உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். பணவரவுகள் திருப்திகரமாகவே இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி யாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது.

அரசியல்எதிர்பார்க்கும் மாண்புமிகு பதவிகள் கிடைக்கப் பெற்று பெயர், புகழ் உயரும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என்பதால் சற்றே அலைச்சல்களும் அதிகரிக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். மேடைப் பேச்சுகளில் சற்று கவனமுடனிருப்பது நல்லது.

விவசாயிகள்பயிர் விளைச்சல் சுமாராக இருந்தாலும் போட்ட முதலீட்டினை எடுத்துவிட முடியும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் சற்றே விரயங்களைச் சந்திப்பீர்கள். குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும்.

கலைஞர்கள்எதிர்பார்க்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று திறமைக்கு தீனி போட்டதுபோல இருக்கும். கைக்கு கிடைக்க வேண்டிய பணத் தொகைகள் தடையின்றிக் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை சற்றே குறைப்பது நல்லது. புதிய புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு கிடைக்கும்.

மாணவ- மாணவியர்கல்வியில் மந்த நிலை உண்டாகக்கூடிய காலம் என்பதால் தேவையற்ற பொழுதுபோக்குகளையும் பழக்க வழக்கங்களையும் தவிர்ப்பது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு சிறப்பாகவே இருக்கும். கல்விக்காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றிக் கிடைக்கும்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 02-08-2016 முதல் 20-09-2016 வரை சஞ்சாரம்குரு பகவான் தனக்கு நட்பு கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும் சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவை யற்ற அலைச்சல், டென்ஷன்கள், குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். என்றாலும் சனி பகவான் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். கணவன், மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க் கும் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் பதவி உயர்வுகள் கிடைக்கப் பெறும். ராகு 3-ல் சஞ்சரிப்பதால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் நல்ல லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் கிட்டும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 21-09-2016 முதல் 25-11-2016 வரை சஞ்சாரம்குரு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 4-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்களையே பெற முடியும். ராகு 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சனி 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிர்ப்புகள் விலகி வம்பு வழக்குகளில் சாதகப்பலன் உண்டாகும். குரு பார்வை 8, 10, 12-ஆம் வீடுகளுக்கு இருப்ப தால் கணவன், மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றி னாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்திலும் போட்டி, பொறாமைகளை சமாளிக்க முடியும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் நிம்மதியுடன் செயல்பட முடியும் என்றாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை ஏற்படும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 26-11-2016 முதல் 16-1-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் 6, 11-க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் சுக ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். என்றாலும் பணவரவுகள் தேவைக் கேற்றபடி இருக்கும். ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பதன் மூலம் வீண் விரயங்களைத் தவிர்க்க முடியும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் வீண் மனக்குழப்பங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களிலுள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நிலவினாலும் போட்ட முதலீட்டிற்கு பங்கம் ஏற்படாது. உத்தியோஸ்தர்களுக்கு எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்பட்டு சற்றே அலைச்சலை சந்திக்கவேண்டி வரும். என்றாலும் எதிர்பார்த்த உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். அரசியல் வாதிகளின் பெயர், புகழுக்கு களங்கம் ஏற்படாது.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் துலா ராசியில் 17-01-2017 முதல் 22-02-2017 வரை சஞ்சாரம்குரு செவ்வாயின் நட்சத்திரத்தில் 5-ஆம் வீடான துலா ராசியில் அதிசாரமாக சஞ்சரிக்கும் இக்காலங்களில் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அசையும், அசையா சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். தடைபட்ட திருமண சுபகாரியங் களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் சாதகப்பலனைப் பெறமுடியும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கடன்களும் குறையும். ராகு 3-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். கூட்டாளிகளிடன் சற்று விட்டுக்கொடுத்து நடந்துகொள்வதால் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்க்கும் மதிப்பெண் களைப் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

குரு பகவான் வக்ரகதியில் 23-02-2017 முதல் 01-06-2017 வரைகுரு பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகளிலிருந்த தடைகள் விலகும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால்  ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொன், பொருள் சேரும். அசையும்- அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவதால் மருத்துவ செலவுகள் குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது நல்லது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகஸ்தர் களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத ஊதிய உயர்வுகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 02-06-2017 முதல் 15-07-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் ஜென்ம ராசிக்கு தன ஸ்தானாதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டிய சூழ்நிலை இருக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் கைகூடும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது. உடன் இருப்பவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றும் என்பதால் பேச்சில் நிதானம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் வீண் மருத்துவச் செலவுகள் குறையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவது, பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். தொழிலில் போட்டிகள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். புதிய கூட்டாளிகளும் சேருவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகளால் அனுகூலம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உத்தியோகஸ்தர்களும் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 16-07-2017 முதல் 02-09-2017 வரை சஞ்சாரம்குரு ஜென்ம ராசிக்கு 6, 11-க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் சுமாரான நிலையே இருக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். உடல் நிலையில் சோர்வு, கை கால் மூட்டுகளில் வலி போன்றவை தோன்றி மறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். 27-07-2017ல் ஏற்படவுள்ள 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சாரம் செய்யவிருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சற்றே மந்த நிலை ஏற்பட்டாலும் பொருள் தேக்கம் உண்டாகாது. வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்றினாலும் குரு பார்வை 10-ஆம் வீட்டிற்கு இருப்பதால் உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கப்பெறும். வேலைப் பளுவும் குறையும்.

நட்சத்திரப்பலன்மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள்மிதுன ராசியில் செவ்வாயின் நட்சத்திரமான மிருகசீரிடத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு ஜென்ம ராசிக்கு சுகஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. எனவே இக்காலங்களில் பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாகவே இருக்கும். சனி 6-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். உற்றார்- உறவினர்களும் ஆதரவுடன் செயல்படுவார்கள். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம்.

திருவாதிரைமிதுன ராசியில் ராகுவின் நட்சத்திரமான திருவாதிரையில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். வீடு, வாகனம் போன்றவற்றால் சிறுசிறு விரயங்கள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். சனி 6-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் அதை சமாளித்து லாபத்தினைப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது.

புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்மிதுன ராசியில் குருவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் சுகஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சற்று அனுகூலமற்ற அமைப்பாகும். இதனால் பணவிஷயங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. சனி 6-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் வெற்றியினைப் பெறமுடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை தோன்றினாலும் பொருள்தேக்கம் ஏற்படாது. பணியில் நிம்மதியான நிலை இருக்கும்.

அதிர்ஷ்டம் அளிப்பவைஎண்:        5, 6, 8, 14, 15, 17நிறம் : பச்சை, வெள்ளைகிழமை : புதன், வெள்ளிகல் : மரகதம்திசை : வடக்குதெய்வம் : விஷ்ணு

பரிகாரம்
குரு பகவான் 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குரு எந்திரம் வைத்து வழிபடுவது, சிவனை வணங்கி ருத்ரம் ஜெபிப்பது, ருத்ராபிஷேகம் செய்வது, அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிறப் பூக்களை அணிவது நல்லது. குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை தோறும் நெய் தீபமேற்றி மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவது, 5 முக ருத்ராட்சம் அணிவது உத்தமம். 

=====================================================================

கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வெற்றிக் கொடியினை நாட்டக் கூடிய ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே! உங்கள் ஜென்ம ராசிக்கு 6, 9-க்கு அதிபதியான குரு 02-08-2016 முதல் 02-09-2017 வரை முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளார். இதனால் எதிலும் நன்மை, தீமை கலந்த பலன்களையே பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போடவேண்டியிருக்கும். பணவரவுகளில் சுமாரான நிலை இருந்தாலும் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்துவிட முடியும். சர்ப்ப கிரகமான ராகு 2லும், கேது 8லும் சஞ்சரிக்கவிருப்பதால் கணவன், மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். சனி 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் புத்திரவழியில் தேவையற்ற மனகவலைகள், பூர்வீக சொத்துக்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் பல போட்டிகளை சமாளித்தே எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கப் பெற்றாலும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். குரு பார்வை 7, 9, 11-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். எதிர்பாராத உதவிகள் தேடி வரும்.

உடல் ஆரோக்கியம்உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். புத்திர வழியில் மனசஞ்சலங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாவதால் மனநிம்மதி குறைவடையும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களும்  விரோதிகளாவார்கள்.

குடும்பம், பொருளாதாரநிலைகணவன்- மனைவி அனுசரித்து நடந்துகொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று நிலைமையை சமாளிப்பீர்கள். சொந்தமாக பூமி, மனை, வண்டி, வாகனம் போன்றவற்றை வாங்கும் விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது.

கொடுக்கல்- வாங்கல்பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவக்கூடிய காலம் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. பிறரை நம்பி பணவிஷயத்தில் முன்ஜாமீன் கொடுப்பதால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள், வம்பு வழக்குகளில் இழுபறி நிலைகள் உண்டாகும். கொடுத்த கடன்கள் தடைகளுக்குப் பின் வசூலாகும்.

தொழில், வியாபாரம்தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்ட முதலீட்டினை எடுத்துவிடக்கூடிய அளவிற்கு லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். கூட்டாளிகளிடம் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் அபிவிருத்தியைப் பெருக்குவதற்கு உதவிகரமாகவே செயல்படுவார்கள். புதிய முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே லாபத்தினைப் பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதில் கவனம் தேவை.

உத்தியோகம்பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தாலே பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்றே தாமதப்படும்.

பெண்கள்உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொண்டால் மட்டுமே அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத் தேவைகளைபூர்த்தி செய்துவிடமுடியும். கணவரிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. புத்திரர்களால் வீண் மனசஞ்சலங்கள் உண்டாகும்.

அரசியல்பெயர், புகழுக்கு பஞ்சம் இருக்காது என்றாலும் வருவாய் குறைவடையும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்கள் மேற் கொள்ள வேண்டி வருவதால் வீண் செலவுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உடனிருப்பவர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானம் தேவை.

விவசாயிகள்பயிர் விளைச்சல் சுமாராக இருப்பதால் பொருளாதார நிலையும் சுமாராகத்தானிருக்கும். பூமி, மனை போன்றவற்றால் சிறுசிறு வீண் செலவுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். பங்காளிகளிடம் விட்டுகொடுத்து நடப்பது நல்லது.

கலைஞர்கள்புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவதில் தாமத நிலை உண்டாகும். கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பணவரவுகளிலும் சுமாரான நிலையே இருக்கும். ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக்கொண்டால் கடன்கள் குறையும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.

மாணவ- மாணவியர்கல்வியில் முழு ஈடுபாடுட்டுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும். முடிந்தவரை தேவையற்ற நட்புகளைத் தவிர்ப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போடவேண்டியிருக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் தாமதப்படும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 02-08-2016 முதல் 20-09-2016 வரை சஞ்சாரம்ஜென்ம ராசிக்கு 6, 9-க்கு அதிபதியான குருபகவான் சூரியனின் நட்சத்திரத்தில் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் பொருளாதார ரீதியாக தட்டுபாடுகள் ஏற்படும். எடுக்கும் எந்த காரியத்தையும் எளிதில் செய்துமுடிக்க முடியாது. உற்றார்-  உறவினர்களின் வருகை  வரவுக்கு மீறிய செலவுகளை உண்டாக்கும். முன்கோபத்தை குறைத்துக்கொள்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். திருமண முயற்சிகளில் தடை தாமதம் உண்டாகும். திருமண மானவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாக சில மருத்துவ செலவுகளை செய்யவேண்டி வரும். உத்தியோகஸ்தர்கள் பணிகளை சிரமப்பட்டே செய்து முடிக்க முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலிலும் பிரச்சினைகள் உண்டாகும். கொடுத்த கடன்களை வசூலிக்க முடியாது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர் பார்க்கும் கடனுதவிகள் தாமதப்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியாத நிலை உண்டாகும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 21-09-2016 முதல் 25-11-2016 வரை சஞ்சாரம்ஜென்ம ராசிக்கு 6, 9-க்கு அதிபதியான குருபகவான் ராசியாதிபதி சந்திரனின் நட்சத்திரத்தில் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சாரம் செய்வதாலும், ராகு- கேது 2, 8-ல் சஞ்சரிப்பதாலும் குடும்பத்தில் ஒற்றுமைக்குறைவு, தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பண வரவுகளில் நெருக்கடிகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு தேவையற்ற இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போடவேண்டியிருக்கும். தொழில் வியாபாரம் செய்யபவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை தவிர்த்துவிடுவது நல்லது. அரசுவழியில் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 26-11-2016 முதல் 16-1-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் தனக்கு நட்பு கிரகமான செவ்வாயின் நட்சத்திரத்தில் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. கணவன், மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றி ஒற்றுமை குறையும். பொருளாதார தட்டுப்பாடுகளால் நிம்மதிக் குறைவும், கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைகளும் ஏற்படும். புத்திரவழியில் வீண் செலவுகள் உண்டாகும். உற்றார்- உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகளும் தேவையற்ற பிரச்சினைகளும் தோன்றி பிரிவினைகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிப்பதால் உடல் நிலை சோர்வடையும். அடிக்கடி பயணங்களும் செல்ல வேண்டி வருவதால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி உண்டாவதால் அவர்கள் பணிக்கு வருவதிலும் சிக்கல்கள் உண்டாகும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் துலா ராசியில் 17-01-2017 முதல் 22-02-2017 வரை சஞ்சாரம்குருபகவான் தனக்கு நட்பு கிரகமான செவ்வாயின் நட்சத்திரத்தில் சுக ஸ்தானமான 4-ல் அதிசாரமாக சஞ்சாரம் செய்வதால் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எந்த காரியத்திலும் வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்பட முடியும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்கியே காணப்படும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். உடன் பிறப்புகளால் எதிர்பாராத அனுகூலப்பலனைப் பெற முடியும். கொடுக்கல்- வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தாங்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கப்பெற்றாலும், உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் பாடுபட வேண்டியிருக்கும். அதிகாரிகளின் ஆதரவு சற்றே மனஅமைதியை உண்டாக்கும். அரசியல்வாதிகளுக்கு பெயர் புகழ் உயரும் என்றாலும், மக்களின் தேவைகளை உணர்ந்து பாடுபட்டால்தான் மக்களின் ஆதரவைத் தொடர்ந்து பெறமுடியும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் அமையும்.

குரு பகவான் வக்ரகதியில் 23-02-2017 முதல் 01-06-2017 வரைகுருபகவான் வக்ரகதியிலிருப்பது சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதால் குடும்ப வாழ்வில் பல பிரச்சினைகள் ஏற்படும் என்றாலும் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் மகிழ்ச்சியான பலன்களை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று நல்ல முன்னேற்றங்களை அடைவார்கள். வெளியூர், வெளிநாடு தொடர்பு உடையவற்றால் அபிரிமிதமான லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணிகளை திறம்பட எளிதில் செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். எதிர்பாராத தன வரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடந்த கால கடன்களும் நிவர்த்தியாகும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 02-06-2017 முதல் 15-07-2017 வரை சஞ்சாரம்குருபகவான் ராசியாதிபதி சந்திரனின் நட்சத்திரத்தில் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சாரம் செய்வதால் உடல் நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். பெண்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் சிரமம் உண்டாகும். குடும்பத்திலும் ஒற்றுமை குறையும். உறவினர்கள் சாதகமாக செயல்படுவதால் சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற இடமாற்றத்தை சந்தித்தாலும், கௌரவப்பதவிகள் கிடைக்கப் பெறும். பூர்வீக சொத்து வழக்குகளால் லாபமற்ற நிலையே உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் ஓரளவுக்கு அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் செய்ல்படுவது நல்லது.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 16-07-2017 முதல் 02-09-2017 வரை சஞ்சாரம்குரு தனக்கு நட்பு கிரகமான செவ்வாயின் நட்சத்திரத்தில் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சாரம் செய்வதால் சற்று சோதனையான பலன்களையே எதிர்கொள்ள நேரிடும். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். நண்பர்களே எதிரிகளாக மாறக்கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் என்னதான் பாடுபட்டாலும் அதற்கான முழு பலனை அடைய முடியாது. எதிர்பார்த்த உயர்வுகள் தாமதப்படுவதால் எதையும் முழுமையாக செயல்படுத்த முடியாத நிலை உண்டாகும். எடுக்கும் காரியங்களில் வீண் விரயமும், தடை தாமதங்களும் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் அலைச்சல் அதிகரிக்கும். எதிரிகளின் பலம் கூடி உங்கள் பலம் குறையக்கூடிய காலமாக அமையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்ததால் அலைச்சல்களை குறைத்துகொள்ள முடியும்.

நட்சத்திரப்பலன்புனர்பூசம் 4-ஆம் பாதம்கடக ராசியில் குருவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும் சனி 5-ல் சஞ்சரிப்பதால் ஏற்ற இறக்கமான பலனைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டால் குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்துவிட முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது.

பூசம்கடக ராசியில் சனியின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு திருமண சுபகாரியங்களில் தடை தாமதம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றமான நிலையினை அடைய முடியும். பணவரவுகள் திருப்திகரமாகவே இருக்கும். ஆடம்பரச் செலவுகளை சற்றே குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். பூர்வீக சொத்துகளால் சற்றே வீண் செலவுகள் ஏற்படும்.

ஆயில்யம் கடக ராசியில் புதனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும்.  பிறருக்கு வாக்குறுதிகள் கொடுப்பதைத் தவிர்க்கவும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்களில் தாமத நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திருப்தியான நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பொதுநலக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்டம் அளிப்பவைஎண்:       1, 2, 3, 9, 10, 11, 12, 18நிறம்       : வெள்ளை, சிவப்புகிழமை: திங்கள், வியாழன்கல்: முத்துதிசை: வடகிழக்குதெய்வம்: வெங்கடாசலபதி

பரிகாரம்
கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3-ல் குரு சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலையை மாலையாகக்கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது, தானம் போன்றவற்றை காலைப் பொழுதிலும் மந்திர ஜெபங்களை மாலைப் பொழுதிலும் செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள்நிறப் பூக்களை அணிவது நல்லது. வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வது, ""ஓம் ஜீரம் ஜரிம் ஜீரௌம் ச குரவே நமஹ"" என்ற குரு மந்திரத்தை துதிப்பது, புஷ்பராகக் கல்லை மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்வது உத்தமம். ராகு 2-ல் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சிவன் மற்றும் சண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்குவது நல்லது. கேது 8-ல் சஞ்சரிப்பதால் தினமும் விநாயகரை வழிபடுவது, கேது மந்திரங்களைக் கூறுவது, ""ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் ச கேதவ நமஹ"" என்ற பீஜ மந்திரத்தைக் கூறிவருவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

=====================================================================

சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

நன்மையையும் தீமையையும் சரிசமமாக எடுத்துக்கொண்டு தன் சொந்த முயற்சியால் முன்னேறக் கூடிய ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே! உங்கள் ராசியாதிபதி சூரியனுக்கு நட்பு கிரகமான பொன்னவன் என போற்றப்படக்கூடிய குரு 02-08-2016 முதல் 02-09-2017 வரை ஜென்மராசிக்கு தனஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கலிலிருந்த இடையூறுகள் விலகி லாபம் அமையும். பொன், பொருள் சேரும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும்.  சர்ப்ப கிரகங்களான ராகு ஜென்மராசியிலும், கேது 7-லும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாவதோடு குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். சனி பகவான் சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் அர்த்தாஷ்டம சனி நடைபெறுகிறது. இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. உங்களுடைய அசையும்- அசையா சொத்துகளால் வீண் செலவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல். டென்ஷன்கள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் சிறுசிறு நெருக் கடிகள் ஏற்படும் என்றாலும் லாபம் தடைப்படாது. கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த லாபத்தை அடைந்து விட முடியும். குரு பார்வை 6, 8, 10-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளும் வலிமை, நல்ல உடல் ஆரோக்கியம் யாவும் கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடிகள் உண்டானாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பல பொதுநலக் காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்உடல்நிலை சிறப்பாக இருக்கும். எப்பொழுதாவது சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். குடும்பத்தில் உள்ளவர்களால் கடந்த காலங்களில் ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் குறையும். சுபிட்சமான நிலை இருப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். ஜென்மத்தில் ராகு இருப்பதால் நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது.

குடும்பம், பொருளாதாரநிலைகணவன், மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தாராள தன வரவுகளால் எல்லா தேவைகளும் பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவை வாங்கும் யோகமும் உண்டாகும். உற்றார்- உறவினர்கள் சிறுசிறு பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் உதவ வேண்டிய நேரத்தில் உதவி செய்வார்கள். எதிர்பாராத திடீர் உதவிகளும் கிடைக்கப்பெற்று கடன்கள் குறையும்.

கொடுக்கல்- வாங்கல்குரு தனஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை சிறப்பாகவே இருக்கும். கொடுக்கல்- வாங்கலிலும் நல்ல லாபம் உண்டாகும். பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளிலும் தீர்ப்பு சாதகமாக அமையும்.

தொழில், வியாபாரம்தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். புதிய புதிய வாய்ப்புகளும் தேடி வரும். சிறுசிறு போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளித்து லாபம் பெற முடியும். வெளியூர். வெளிநாடு தொடர்புடையவற்றாலும் சாதகப்பலன் உண்டாகும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதும், தேவையற்ற வாக்கு வாதங்களைத் தவிர்ப்பதும் நல்லது.

உத்தியோகம்பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் வேலைப்பளுவைக் குறைத்துக் கொள்ள முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். பொருளாதாரம் மேம்படும்.

பெண்கள்உடல் ஆரோக்கியம் மந்தமாக இருந்தாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர பாக்கியமும் கிட்டும். சிலருக்கு சொந்த பூமி, மனை போன்ற வற்றை வாங்கும் யோகம் உண்டாகும். என்றாலும் சற்று சிந்தித்து செயல் படுவது நல்லது. உற்றார்- உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும்.

அரசியல்மக்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் பெயர் புகழுக்குப் பஞ்சம் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகள் யாவற்றிலும் தடையின்றி வெற்றி கிட்டும். பொருளாதார நிலையும் உயர்வடையும். உங்கள் பேச்சிற்கு மக்களிடையே செல்வாக்கு அதிகம் ஏற்படும். மறைமுக வருவாய்களும் பெருகும். உடனிருப்பவர்களிடம் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.

விவசாயிகள்பயிர் விளைச்சல் மிகச்சிறப்பாக இருக்கும். சந்தையில் விளை பொருளுக்கேற்ற விலை தாராளமாகக் கிடைக்கும். நவீனகரமான புதிய முயற்சிகளில் அனுகூலமான பலனைப் பெறமுடியும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பூர்வீக சொத்துக்களும் கைக்கு வந்து சேரும்.

கலைஞர்கள்எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சம்பளத் தொகைகளும் தாராளமாகக் கிடைப்பதால் பொருளாதார நிலையும் உயரும். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும் என்றாலும், அதன்மூலம் அனுகூலமும் உண்டாகும். ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும்.

மாணவ- மாணவியர்கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அறிவாற்றல், பேச்சாற்றல், ஞாபகசக்தி போன்றவற்றால் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்க்க முடியும். அரசு வழியில் எதிர்பார்த்துக் காத்திருந்த உதவிகள் தடையின்றிக் கிட்டும். கல்விக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 02-08-2016 முதல் 20-09-2016 வரை சஞ்சாரம்குரு பகவான் உங்கள் ராசியாதிபதி சூரியனின் நட்சத்திரமான உத்திர நட்சத்திரத்தில் தனஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். சனி 4-ல் சஞ்சரிப்பதால் அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் ஏற்படும். பிள்ளைகளிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. கொடுக்கல், வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் வசூலாகும். தொழில், வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் சற்றே அதிகரிக்கும் என்றாலும் வரவேண்டிய வாய்ப்புகள் வந்துசேரும். உத்தியோகஸ் தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளும் தடையின்றிக் கிட்டும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் வேலைப்பளுவும் குறையும். கல்வி பயிலுபவர்களுக்கு சற்று மந்தநிலை, ஞாபகமறதி போன்றவை உண்டாகும் என்பதால் கல்வியில் கவனத்தைச் செலுத்துவது மிகவும் நற்பலனை தரும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 21-09-2016 முதல் 25-11-2016 வரை சஞ்சாரம்குரு ஜென்ம ராசிக்கு 2-ல் தனக்கு நட்பு கிரகமான சந்திரனின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இக்காலத்தில் பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். தூரப் பயணங்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். உற்றார்- உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். திருமணமாகாதவர்களுக்கு மணமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். வீடு, வாகனம் போன்றவற்றால் சிறுசிறு விரயங்கள் தோன்றினாலும் எதையும் சமாளித்துவிடுவீர்கள். தாராள தன வரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். பொன், பொருள் சேரும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமைந்து அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தொழில், வியாபாரத் திலும் நல்ல லாபம் கிட்டும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று கொடுத்த கடன்கள் திருப்திகரமாக வசூலாகும். உத்தியோகத்திலும் உயர்வடைய முடியும். தடைப்பட்ட பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 26-11-2016 முதல் 16-1-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் கன்னி ராசியில் செவ்வாயின் சாரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் ஏற்றமான பலன்களையே பெற முடியும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் ஒற்றுமை குறையாமல் இருக்கும். சிலருக்கு பூமி, மனையால் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பணம் கொடுக்கல், வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கல்வி பயிலுபவர்கள் சற்று முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் எதிர்பார்க்கும் மதிப்பெண்கள் கிட்டும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சற்றே சாதக நிலை ஏற்படும். பல்வேறு பொதுநலக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பும் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதும், வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பதும் நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பதவி உயர்வுகளும் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகளாலும் நற்பலன்கள் உண்டாகும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் துலா ராசியில் 17-01-2017 முதல் 22-02-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் இக்காலங்களில் தனக்கு நட்பு கிரகமான செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்தாலும், அதிசாரமாக ஜென்ம ராசிக்கு 3-ஆம் வீடான துலா ராசியில் சஞ்சாரம் செய்யவிருப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு இல்லையென்பதால் எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். குடும்பத்திலுள்ளவர்களை மிகவும் அனுசரித்துச் செல்ல வேண்டி வரும். சனி 4-ல் சஞ்சரிப்பதால் அலைச்சல், டென்ஷன் அதிகமாக இருக்கும். உடல்நிலை சற்றே சோர்வடையும். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் ஆடம்பரச் செலவுகளை சற்றே குறைத்துக் கொள்வது நல்லது. அசையும், அசையா சொத்துக்களால் சிறுசிறு விரங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் லாபம் ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகளை செய்ய வேண்டியிருக்கும்.

குரு பகவான் வக்ர கதியில் 23-02-2017 முதல் 01-06-2017 வரைகுரு பகவான் வக்ர கதியிலிருப்பதால் பணவரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும். உடல் நிலையில் சோர்வு, கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் போன்றவை தோன்றி மறையும். என்றாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. கொடுக்கல், வாங்கலில் சற்று கவனம் தேவை. ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலையிருக்கும். வேலையாட்கள் அனுகூலமாகச் செயல்படுவார்கள். உடல்நிலை ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக இருக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். தேவையற்ற  பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களைக் குறைத்துக்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைப்பளு அதிகமாக இருக்கும் என்றாலும், உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பால் எதையும் சமாளிக்க முடியும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சற்று மந்தமான நிலை இருக்கும் என்பதால் தேவையற்ற பொழுதுபோக்குகளை தவிர்ப்பது நல்லது. முன்கோபத்தை குறைத்துக் கொள்வது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 02-06-2017 முதல் 15-07-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் இக்காலங்களில் சந்திரனின் நட்சத்திரத்தில் 2-ல் சஞ்சரிப்பதால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகளும் தாராளமாக அமையும். கடன்கள் குறைந்து மனநிம்மதி ஏற்படும். பொன், பொருள் சேரும். தடைப்பட்ட சுபகாரியங்களில் வெற்றி கிட்டும். சனி 4-ல் சஞ்சரிப்பதால் அசையும், அசையா சொத்துகளால் வீண் செலவும், தேவையற்ற பயணங்களால் அலைச்சல்களும் உண்டாகும். திருமணம் போன்ற மங்களகரமான காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி ஒற்றுமையுடன் செயல்பட முடியும். புத்திர வழியில் சிறுசிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். கொடுக்கல், வாங்கலில் சரளமான நிலையிருக்கும். தொழில், வியாபாராத்தில் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். வேலையாட்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளும் இடமாற்றங்களும் கிடைக்கும். பல பொதுநலக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு, பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 16-07-2017 முதல் 02-09-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் 2-ல் சஞ்சரிக்கும்  இக்காலங்களில் சிறப்பான நற்பலன்களை அடைய முடியும். சனி ஜென்ம ராசிக்கு 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் ஆடம்பரச் செலவுகளைச் செய்ய முடியும். வீடு, வாகனம் போன்றவற்றால் வீண் விரயங்கள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும்.  திருமண சுப காரியங்கள் கைகூடும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். 27-07-2017ல் ஏற்படவுள்ள சர்ப்ப கிரக மாற்றத்தால் கேது 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பது சாதமான அமைப்பு என்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை மேலும் பெருக்கிக் கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெறுவதோடு உயரதிகாரிகளின் ஆதரவுகளும் மகிழ்ச்சி அளிக்கும்.

நட்சத்திரப்பலன்மகம்சிம்ம ராசியில் கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணவரவுகள் திருப்திகரமாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியும். பொன், பொருள் சேரும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபங்கள் பெருகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமானதாக இருக்கும்.

பூரம்சிம்ம ராசியில் சுக்கிரனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர பாக்கியமும் கிட்டும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலும் சரளமாக நடைபெறும். உடனிருப்பவர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் தடையின்றிக் கிட்டும்.

உத்திரம் 1-ஆம் பாதம்சிம்ம ராசியில் ராசியாதிபதி சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. சுகவாழ்வு, சொகுசு வாழ்வு திருப்திகரமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் திருமண சுப காரியங்களும் கைகூடும். பொன், பொருள் சேரும். கடன்கள் நிவர்த்தியாகும். கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தொழில், வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அபிவிருத்தி பெருகும்.

அதிர்ஷ்டம் அளிப்பவைஎண்    : 1, 2, 3, 9, 10, 11, 12, 18நிறம் : வெள்ளை, சிவப்புகிழமை : ஞாயிறு, திங்கள்கல் : மாணிக்கம்திசை : கிழக்குதெய்வம் : சிவன்

பரிகாரம்
சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் சாதகமாக சஞ்சரித்தாலும் சர்ப்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசியிலும், கேது 7-லும் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சிவன் மற்றும் சண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்குவது நல்லது. தினமும் விநாயகரை வழிபடுவது, கேது மந்திரமான ""ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ" என்ற பீஜ மந்திரத்தைக் கூறிவருவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது. ஜென்மராசிக்கு 4-ல் சனி சஞ்சரிப்பதால் சனிக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்குப் பூக்கள் மற்றும் கருங்குவளைப் பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது, அனுமனை வழிபடுவது, அனுமன் துதிகளைக் கூறுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. சனியின் பீஜ மந்திரமான, ""ஹ்ரீம் ஸ்ரீம் க்ரஹ சக்ரவர்த்தினே சனைச்சராய க்லிம் இம் சஹ ஸ்வாஹா"" என ஜெபிப்பது உத்தமம்.

=====================================================================

கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

எதிலும் நிதானமுடன் செயல்பட்டு வெற்றிக்கொடியினை நாட்டக் கூடிய ஆற்றல் கொண்ட கன்னி ராசி நேயர்களே! உங்கள் ஜென்ம ராசியிலேயே குரு 02-08-2016 முதல் 02-09-2017 வரை சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். பணவரவுகளிலும் ஏற்ற இறக்கமாக நிலையே இருக்கும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளால் மனசஞ்சலங்கள் ஏற்படும் என்றாலும் சனி முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதாலும், கேது 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். பொதுநல காரியங்களிலும் ஈடுபாடு அதிகரிக்கும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் நிறைய ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து லாபத்தினைப் பெற்றுவிட கூடிய ஆற்றல் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் ஊதிய ஊயர்வுகள் தாமதப்பட்டாலும், பதவி உயர்வுகள் கிடைக்கப் பெறுவதால் மகிழ்ச்சியுடன் பணிபுரிய முடியும். மாணவர்கள் கல்வியில் சற்றே கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்றுவிடலாம். பண விஷயத்தில் சிந்தித்துச் செயல்பட்டால் அனுகூலப்பலன் உண்டாகும்.

உடல்ஆரோக்கியம்உடல் நிலையில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரணக் கோளாறு,  உடல் சோர்வு போன்றவை உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் மன உளைச்சலைத் தவிர்க்கலாம்.

குடும்பம், பொருளாதார நிலைகுடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து நடப்பது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய காலம் என்பதால் எதிலும் விட்டுக்கொடுத்து செயல்படுவது உத்தமம். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்துவிட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும். புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் ஏற்படும். வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும்.

கொடுக்கல்- வாங்கல்பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும் என்பதால் பெரிய முதலீடுகளை எதிலும் ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில்  நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகமான தீர்ப்பு உண்டாகும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் தடைகள் ஏற்படாது.

தொழில், வியாபாரம்தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமான நிலையே இருக்கும். என்றாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். புதிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். போட்டி பொறாமைகள் அதிகரித்தாலும் எதையும் சமாளித்துவிட முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து நிதானமுடன் செயல்படுவதும் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதும் நல்லது.

உத்தியோகம்உத்தியோகத்தில் ஓரளவுக்கு நிம்மதியுடன் செயல்பட முடியும். சில நேரங்களில் பணியில் வீண் பழிச்சொற்களுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும் உங்கள் திறமையால் எதையும் சமாளித்து எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெறுவீர்கள். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். உடன் பணிபுரிபவர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் எதையும் சமாளித்து முன்னேற முடியும்.

பெண்கள்உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதிருப்பது உத்தமம். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் நற்பலனை அடையலாம். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும்.

அரசியல்பெயர், புகழுக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. உடனிருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டியிருந்தாலும், மக்களின் ஆதரவு மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும்.

விவசாயிகள்பயிர் விளைச்சல் சுமாராக இருக்கும். பட்ட பாட்டிற்கான பலனைப் பெற சற்று எதிர்நீச்சல் போடவேண்டி வரும். பணவரவுகளும் சுமாராகத் தானிருக்கும். புதிய பூமி, மனை போன்றவற்றால் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். நவீன கருவிகளை வாங்குவீர்கள்.

கலைஞர்கள்கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் சிறுசிறு இடையூறுகள் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது.

மாணவ- மாணவியர்கல்வியில் சற்று மந்த நிலை உண்டாகக் கூடிய காலம் என்பதால் அதிக கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. தேவையற்ற பொழுது போக்குகளைத் தவிர்ப்பதால் படிப்பில் நாட்டம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்பட்டாலும் வெளியாட்களின் உதவிகள் எதிர்பாராமல் கிடைக்கப் பெறும். கல்விக்காக பயணங்களையும் மேற்கொள்வீர்கள்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 02-08-2016 முதல் 20-09-2016 வரை சஞ்சாரம்குரு பகவான் தனக்கு நட்பு கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்வதால் இக்காலங்களில் அவ்வளவு சிறப்பான பலன்களை அடைய முடியாது. என்றாலும் சனி 3-ஆம் வீட்டில் இருப்பதால் ஓரளவுக்கு அனுகூலங்களைப் பெறமுடியும். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறமுடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் ஓரளவுக்கு நற்பலன்களைப் பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வந்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதில் கவனம் தேவை. பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். ஆன்மிக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடக்கும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 21-09-2016 முதல் 25-11-2016 வரை சஞ்சாரம்குரு பகவான் ஜென்ம ராசியில் லாபாதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் ஏற்ற இறக்கமான பலன்களைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்பு, கை கால்வலி, உடல் சோர்வு போன்றவை உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். சனி 3-ல், கேது 6-ல் சஞ்சாரம் செய்வதா எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பரச் செலவுகளை சற்றே குறைத்துக் கொண்டால் கடன்கள் உண்டாவதைத் தவிர்க்கமுடியும். புத்திரவழியில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன்- மனைவியிடமும் அன்யோன்யமான நிலையிருக்கும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்திலும் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உயர்வுக்கு வழிவகுக்கும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 26-11-2016 முதல் 16-1-2017 வரை சஞ்சாரம்குரு ஜென்ம ராசியில் 3, 8-க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்திலும் உஷ்ண சம்பந்தப்பட்ட  பாதிப்புகள் உண்டாகும். 3-ல் சனி சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். என்றாலும் சிந்தித்து செயல்படுவது உத்தமம். கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகைகளை பிறரை நம்பிக் கொடுக்காமலிருப்பது நல்லது. திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கும் சில நேரங்களில் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். என்றாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற்றுவிட முடியும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். பயணங்களால் ஓரளவுக்கு நற்பலன் அமையும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் துலா ராசியில் 17-01-2017 முதல் 22-02-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் அதிசாரமாக துலா ராசியில் ஜென்ம ராசிக்கு 2-ல் செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யவுள்ளார். இக்காலங்களில் அனுகூலமான பலன்களைப் பெறமுடியும். சனியும் 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகளில் திருப்திகரமான நிலையிருக்கும். பொன், பொருள் சேரும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளைத் தற்போது மேற்கொள்ளலாம். கொடுக்கல், வாங்கலும் லாபமளிக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். தொழில், வியாபாரத்தில் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெறமுடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நற்பலனை உண்டாக்கும். அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கப்பெற்று எதையும் சமாளித்து விடமுடியும்.

குரு பகவான் வக்ர கதியில் 23-02-2017 முதல் 01-06-2017 வரைகுரு வக்ர கதியிலிருப்பதால் குடும்பத்தில் எதிர்பாராத வீண் செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் சற்று கவனம் செலுத்த வேண்டி வரும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படுவதால் நல்ல வரன்கள் தட்டிப்போகும். சனி 3-ல் சஞ்சரிப்பதால் பணவரவு சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகளும், பிள்ளைகளால் மன சஞ்சலங்களும் தோன்றும். தெய்வீக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பல பெரிய மனிதர்களின் நட்புகளும் கிட்டும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. பூர்வீக சொத்துகளால் வம்பு, வழக்குகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும்போது சிந்தித்துச் செயல்படவும். கூட்டாளிகளின் ஆதரவுகள் சிறப்பாகவே இருக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்க இருந்த உயர்வுகள் தாமதப்படும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 02-06-2017 முதல் 15-07-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் லாபாதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். தொழில், வியாபாரரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சிறுசிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் ஓரளவுக்கு அனுகூலங்களை அடைய முடியும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் பிறரைநம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். பண விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கணவன், மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். குடும்பத்தி லுள்ளவர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப் பிடிக்கவும். நீங்கள் நல்லதாக நினைத்துப் பேசும் வார்த்தைகளும் பிறர் மனதைப் புண்படுத்திவிடும். பிள்ளைகளால் மனநிம்மதி குறையும். அசையும்- அசையா சொத்துகளால் வீண் செலவுகள் உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற பொழுதுபோக்குகளைத் தவிர்ப்பதும் கல்வியில் அதிக கவனம் செலுத்துவதும் நல்லது.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 16-07-2017 முதல் 02-09-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் ஜென்ம ராசியில் செவ்வாயின் சாரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் சுமாரான நிலையே இருக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். உடல் நிலையில் சோர்வு, கை கால் மூட்டுகளில் வலி போன்றவை தோன்றி மறையும். ஆன்மிக, தெய்வீக காரியங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். வீடு, வாகனம் போன்றவை வாங்கும் முயற்சிகளில் சற்றே தாமத நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவ மாணவிகள் கல்வியில் சற்று கவனம் எடுத்து கொள்வது தேவையற்ற பொழுது போக்குகளைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் சற்றே மந்த நிலை ஏற்பட்டாலும் பொருள் தேக்கம் உண்டாகாது. வண்டி வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். 27-7-2017-ல் ஏற்படவுள்ள சர்ப்ப கிரக மாற்றத்தால் ராகு 11-க்கு மாறவிருப்பது நல்ல அமைப்பாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்றினாலும் உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கப்பெறும். வேலைப் பளுவும் குறைந்தே காணப்படும்.

நட்சத்திரப்பலன்உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள்கன்னி ராசியில் சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியிலேயே குரு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். என்றாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகிவிடும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளை சந்தித்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்றுவிடுவீர்கள். குடும்பத்திலுள்ள வர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும்.

அஸ்தம்கன்னி ராசியில் சந்திரனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால், உடல்நிலையில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயங்களில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் ஒற்றுமையுடன் செயல்படமுடியும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவினாலும் பொருள்தேக்கம் ஏற்படாது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.

சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்கன்னி ராசியில் செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடை, தாமதங்களுக்குப்பின் வெற்றியினைப் பெறுவீர்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சிறுசிறு விரயங்களை எதிர்கொள்வீர்கள். உத்தியோ கஸ்தர்கள் உயர்வடைய முடியும்.

அதிர்ஷ்டம் அளிப்பவைஎண்:        4, 5, 6, 7, 8நிறம்: பச்சை, நீலம்கிழமை: புதன், சனிகல்: மரகதப் பச்சைதிசை: வடக்குதெய்வம்: ஸ்ரீ விஷ்ணு

பரிகாரம்
கன்னி ராசியில் பிறந்த நீங்கள், குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களைத் தொடர்ந்து செய்துவருவது, வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலையை மாலையாகக் கோர்த்து அணிவித்து மஞ்சள்நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது, தானம் போன்றவற்றை காலைப் பொழுதிலும் (வியாழக் கிழமைகளில்) மந்திர ஜெபங்களை மாலைப் பொழுதிலும் செய்வது, ஐந்து முக ருத்ராட்சம் அணிவது, குரு எந்திரம் வைத்து வழிபடுவது, சிவனை வணங்கி ருத்ரம் ஜெபிப்பது, ருத்ராபிஷேகம் செய்வது, அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள்நிறப் பூக்களை அணிவது நல்லது. ராகு 12-ல் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சிவன் மற்றும் சண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்குவது, சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை தொழுநோயாளிகளுக்கு தானம் கொடுப்பது நல்லது. 

=========================================================================

துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

சுக வாழ்வு, சொகுசு வாழ்வு வாழ்வதில் அலாதி பிரியமும், அழகாக உடை உடுத்துவதில் ஆர்வமும் கொண்ட துலா ராசி நேயர்களே! ஆண்டுக்கோளான குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் 02-08-2016 முதல் 02-09-2017 வரை சஞ்சாரம் செய்யவிருப்பதால் குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை காணப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்பதால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். சனி 2-ஆம் வீட்டில் சஞ்சரித்து ஏழரைச் சனியில் குடும்பசனி நடைபெறுவதால் கணவன்- மனைவியிடையே வீண் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உற்றார்- உறவினர்களும் தேவையற்ற கருத்துவேறுபாடுகளை ஏற்படுத்துவார்கள். ராகு 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய ஆற்றல் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற முடியும். தொழில், வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். அபிவிருத்தியும் பெருகும். லாபங்களில் சிறுசிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் தடை உண்டாகாது. குரு பார்வை 4, 6, 8 -ஆமிடங்களுக்கு இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதிக அளவில் மருத்துவச் செலவுகள் உண்டாகாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

உடல் ஆரோக்கியம்உடல் நிலையில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும். குடும்பத்திலுள்ளவர்களல் ஏற்படகூடிய மருத்துவச் செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். பிள்ளைகளால் தேவையற்ற மனநிம்மதிக் குறைவுகள் ஏற்படும். பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும்.

குடும்பம், பொருளாதார நிலைகுடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் உங்களுக்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளிலும் தடைகள் உண்டாகும். அசையும்- அசையா சொத்துகளால் வீண் விரயங்களும் ஏற்படும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

கொடுக்கல்- வாங்கல்பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும்போது சிந்தித்துச் செயல்படவும். பண விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுத்தால் வீண் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறியான நிலையே நீடிக்கும்.

தொழில், வியாபாரம்தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வரவேண்டிய வாய்ப்புகள் சரியான நேரத்திற்கு வந்து சேரும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும்போது கவனம் தேவை. வெளியூர், வெளிநாட்டுப் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் ஓரளவுக்கு அனுகூலம் உண்டு. போட்டி பொறாமைகளை சமாளிக்க முடியும்.

உத்தியோகம்பணியில் உயரதிகாரிகளின் கெடுபிடிகள் மனநிம்மதிக் குறைவை ஏற்படுத்தினாலும், உடன்பணிபுரிபவர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப்பெற்றாலும் வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல் ஏற்படும்.

பெண்கள்உடல் நிலையில் சற்று கவனம் எடுத்துக் கொள்ளவும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். உற்றார்- உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் ஓரளவுக்கு கிடைக்கும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை.

அரசியல்சமுதாயத்தில் பெயர், புகழுக்கு பஞ்சம் ஏற்படாது என்றாலும் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கட்சிப் பணிகளுக்காக நிறைய வீண் செலவுகளை மேற் கொள்ள வேண்டியிருக்கும். கட்சி ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். பொருளாதாரநிலை சுமாராக இருக்கும்.

விவசாயிகள்பயிர் விளைச்சல் சுமாராகத்தானிருக்கும். போட்ட முதலீட்டினை எடுக்க சற்று எதிர்நீச்சல் போடவேண்டும். பங்காளிகளின் ஆதரவுகள் ஓரளவுக்கு மனநிம்மதியினை உண்டாக்கும். கால்நடைகளால் எதிர்பார்த்த லாபம் அமையும். புதிய பூமி, மனை போன்றவற்றை வாங்கும் விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது.

கலைஞர்கள்கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பார்த்துக்கொள்ளவும். போட்டி பொறாமைகள் அதிகரிக்கக்கூடிய காலம் என்பதால் உடனிருப்பவர்களிடம் கவனம் தேவை. வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளால் அலைச்சல் ஏற்பட்டாலும் ஓரளவுக்கு அனுகூலங்கள் உண்டாகும்.

மாணவ- மாணவியர்கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களை தடையின்றிப் பெறமுடியும். முடிந்தவரை தேவையற்ற நட்புகளையும் பொழுதுபோக்குகளையும் தவிர்ப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். கல்விக்காக பயணங்களையும் மேற்கொள்வீர்கள். விளையாட்டுப் போட்டிகளின்போது சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 02-08-2016 முதல் 20-09-2016 வரை சஞ்சாரம்குரு பகவான் தனக்கு நட்பு கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும், ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத வீண் விரயங்கள் அதிகரிக்கும். பொருளாதார நிலையிலும் ஏற்ற இறக்கமான நிலையே நிலவும். என்றாலும் எதையும் சமாளித்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம்செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களின் ஆதரவும் ஓரளவுக்கு இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டி பெறாமைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்றுவிட முடியும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதால் அபிவிருத்தியையும் பெருக்கிக் கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் பணியில் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 21-09-2016 முதல் 25-11-2016 வரை சஞ்சாரம்குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ஆம் அதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும், ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது சற்று சாதகமற்ற அமைப்பாகும். இதனால் பொருளாதார நிலையில் சுமாரான அமைப்பே இருக்கும். ராகு 11-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. ஏழரைச் சனி தொடருவதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் வெற்றியினைப் பெற முடியும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்த்தால் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய போட்டிகள் நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 26-11-2016 முதல் 16-1-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் விரய ஸ்தானத்தில் செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் நினைத்ததை ஓரளவுக்கு நிறைவேற்ற முடியும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமையான நிலையினை அடைய முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்கள் குறையும். குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். குடும்பத்தில் ஏற்படக் கூடிய சிறுசிறு பிரச்சினைகளை வேற்று நபர்களுடன் பகிர்ந்து கொள்ளாமலிருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் வீண் விரயங்களை எதிர்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திருப்தியான நிலையிருக்கும் என்றாலும் வேலைப் பளுவும் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் சற்று மந்தமான நிலையில் நடைபெற்றாலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்றுவிட முடியும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் துலா ராசியில் 17-01-2017 முதல் 22-02-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் அதிசாரமாக ஜென்ம ராசியிலேயே சஞ்சரிப்பதால் ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ள முடியும். ஏழரைச் சனியில் குடும்பச் சனி நடைபெறுவததால் கணவன், மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ள அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதார நிலையும் ஏற்ற இறக்கமாக இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படும். ராகு 11-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் உடன் பணிபுரிவர்களின் ஆதரவு கிட்டும். ஆன்மிக, தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 23-02-2017 முதல் 01-06-2017 வரைகுரு பகவான் வக்ர கதியிலிருப்பதால் பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களும் இக்காலங்களில் கைகூடும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை மேம்படும். சுபிட்சங்கள்  அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் லாபம் கிட்டும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். அசையும், அசையா சொத்துகளும் சேரும். உற்றார் உறவினர்களால் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்துவந்த போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் கிட்டும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. வெளியாட்களிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்த நிலை உண்டாகும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 02-06-2017 முதல் 15.07.2017 வரை சஞ்சாரம்குரு பகவான் ஜீவனாதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், அஜீரணக் கோளாறு இருக்கும். குடும்பத்திலுள்ளவர் களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய தேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதி குறையும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. 11-ல் ராகு இருப்பதால் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும் சனி பகவான் 2-ல் சஞ்சரிப்பதால் முடிந்த வரை பேச்சைக் குறைத்து, மற்றவர்கள் விஷயத்தில் தலையீடு செய்யாதிருக்கவும். அரசியல்வாதிகள் மக்களின் தேவையறிந்து செயல்பட்டால் மட்டுமே நன்மதிப்பைப் பெறமுடியும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 16-07-2017 முதல் 02-09-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் தன, களத்திர ஸ்தானாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்கிறார். இதனால் குடும்பத்தில் பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். 2-ல் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமையான நிலையினை அடைய முடியும். தேவையற்ற அலைச்சல்கள் சற்றே குறையும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். உற்றார்- உறவினர்களால் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது மனநிம்மதியைத் தரும். கல்வியில் ஓரளவுக்கு முன்னேற்றப் பலனைப் பெறமுடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவது உத்தமம். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும்.

நட்சத்திரப்பலன்சித்திரை 3, 4-ஆம் பாதங்கள்துலா ராசியில் செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு சற்று ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். பொருளாதார நெருக்கடிகளால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சற்று கடன் வாங்க நேரிடும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்பதால், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.

சுவாதிதுலா ராசியில் ராகுவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு பண வரவுகளில் சுமாரான நிலையே இருக்கும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல், வாங்கலில் நம்பியவர்களே ஏமாற்ற நினைப்பார்கள். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். குடும்பத்திலுள்ளவர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருள் தேக்கம் ஏற்படாது.

விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்துலா ராசியில் குருவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு எடுக்கும் காரியங்களில் தடை தாமதங்களுக்குப் பிறகு வெற்றி கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளிப்பீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகக்கூடும் என்பதால் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாவதுடன் குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். எதிர்பாராத வீண் விரயங்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டம் அளிப்பவைஎண்     : 4, 5, 6, 7, 8நிறம்     : வெள்ளை, பச்சைகிழமை: வெள்ளி, புதன்கல்: வைரம்திசை: தென்கிழக்குதெய்வம்: லட்சுமி

பரிகாரம்
துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு 12-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலையை மாலையாகக் கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது, தானம் போன்றவற்றை காலைப் பொழுதிலும் (வியாழக் கிழமைகளில்) மந்திர ஜெபங்களை மாலைப் பொழுதிலும் செய்வது நல்லது. ஏழரை சனி தொடருவதால் சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழு மலையில் வீற்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை வழிபடுவது, அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது நல்லது. சனிக்கிழமைகளில் விரதமிருந்து அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது, சனிக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீலநிற சங்குப் பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் முடிந்த உதவிகளைச் செய்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. 

======================================================================

விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

மற்றவர்களிடம் நயமாகப்பேசி எளிதில் காரியங்களை சாதித்துக் கொள்ளும் விருச்சிக ராசி நேயர்களே! பொன்னவனான குரு பகவான் 02-08-2016 முதல் 02-09-2017 வரை ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும்.  இதனால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் அனைத்தும் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். சனி ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி நடைபெறுகிறது. உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை, சேர்வு, கை கால் மூட்டுகளில் வலி போன் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வதும், உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பதும் நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. எந்தவொரு செயலிலும் ஒரு முறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. குரு சாதகமாக சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெறமுடியும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எல்லா வகையிலும் ஏற்றங்கள் ஏற்படும். பதவி உயர்வுகளும் தடையின்றி கிட்டும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். குரு பார்வை 3, 5, 7-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் நினைத்ததை நிறைவேற்ற முடியும். பூர்வீக சொத்துகளாலும் அனுகூலங்கள் உண்டாகும். பொன், பொருள் சேரும்.

உடல் ஆரோக்கியம்உடல் நிலை சுமாராகத்தானிருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், கை கால் மூட்டுகளில் வலி உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். என்றாலும் எதையும் சமாளித்து அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். முன்கோபத்தைக் குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

குடும்பம், பொருளாதாரநிலைகுடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடன்கள் குறைந்து தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். மணமானவர்களுக்கு சிறப்பான புத்திர பாக்கியமும் உண்டாகும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களால் அனுகூலப் பலனைப் பெற முடியும்.

கொடுக்கல்- வாங்கல்பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். மற்றவர்களுக்குச் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். கடன் வாங்கியவர்களுக்கும் அதனை அடைக்கும் வலிமையும் வல்லமையும் உண்டாகும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகள் முடிவுக்கு வரும். அதிநவீன பொருட்கள் சேரும்.

தொழில், வியாபாரம்தொழில், வியாபாரத்தில் சிறுசிறு போட்டிகள் நிலவினாலும் அனைத்தையும் சமாளித்து லாபத்தினைப் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளிலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபத்தினைப் பெறமுடியும்.

உத்தியோகம்பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்பட்டாலும் தடையின்றிக் கிடைக்கும். பொருளாதாரநிலை மிகவும் சிறப்பாக இருக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனநிறைவைத் தரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிட்டும்.

பெண்கள்உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். குடும்பத்தின் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருக்கும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து நடப்பது நல்லது. கடன்கள் குறையும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். பொன், பொருள் சேரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுகள் கிட்டும். வேலைப் பளு குறையும்.

அரசியல்பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் மக்களின் தேவைகள் அனைத்தையும் தடையின்றி பூர்த்தி செய்ய முடியும்.

விவசாயிகள்பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். போதிய நீர்வரத்தும் உண்டாகும். சந்தையில் விளைபொருளுக்கேற்ற விலை கிடைக்கப் பெறும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகளும் கைகூடிய மகிழ்ச்சியளிக்கும்.

கலைஞர்கள்நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ரசிகர்களின் பேராதரவுகள் உங்களுக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு கிடைக்கப் பெறும். படப்பிடிப்பிற்காக பயணங்களையும் மேற்கொள்வீர்கள்.

மாணவ- மாணவியர்கல்வியில் சிறப்பான மேன்மைகள் உண்டாகும். கல்விரீதியாக எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். நல்ல நட்புகளின் சேர்க்கையால் அனுகூலங்கள் தேடிவரும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளைப் பெற்று பள்ளி கல்லூரி களுக்கு பெருமை சேர்ப்பீர்கள். அரசு வழியில் ஆதாயங்கள் கிட்டும்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 02-08-2016 முதல் 20-09-2016 வரை சஞ்சாரம்குரு பகவான் ஜீவனாதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்ற முடியும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். ஏழரைச்சனியில் ஜென்மச் சனி தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். கொடுக்கல் வாங்கலும் சரளமாக நடைபெறும். கடன்கள் நிவர்த்தியாகும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளும் அனுகூலமாகச் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அலைச்சல்களும் வேலைப் பளுவும் குறையும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 21-09-2016 முதல் 25-11-2016 வரை சஞ்சாரம்குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானாதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். அறிவாற்றலால் எதையும் சாதிப்பீர்கள். ஏழரைச் சனி தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் தோன்றும் என்றாலும் பெரிய கெடுதியில்லை. தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வெளியூர்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் சொந்த பூமி, மனை யாவும் சேரும். அசையும், அசையா சொத்துகளால் அனுகூலமடைவீர்கள். குடும்பத்திலும் சுபிட்சமான நிலை உண்டாகும். மகிழ்ச்சி தரக்கூடிய இனிய சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். உற்றார்- உறவினர்கள் அனுகூலமாகச் செயல்படுவார்கள். கல்வி பயிலுபவர்களுக்கு கல்வியில் நல்ல மேன்மை உண்டாகி மதிப்பெண்கள் உயரும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 26-11-2016 முதல் 16-1-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் உங்கள் ராசியாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இக்காலங்களில் அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் லாபம் அமையும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கொடுக்கல், வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். பொன், பொருள் சேரும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் துலா ராசியில் 17-01-2017 முதல் 22-02-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் இக்காலங்களில் உங்கள் ராசியாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்றாலும், அதிசாரமாக ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். இதுமட்டுமின்றி ஏழரைச் சனியில் ஜென்ம சனி தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் மன நிம்மதி குறையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை நிலவும். வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செல்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சலைக் குறைத்துக் கொள்ள முடியும்.

குரு பகவான் வக்ர கதியில் 23-02-2017 முதல் 01-06-2017 வரைகுரு பகவான் வக்ர கதியிலிருப்பதால் நற்பலன்கள் ஏற்படுவதில் தடைகள் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் முடிந்த வரை ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. சனி ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை, சோர்வு போன்றவை உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உறவினர்களின் ஆதரவுகள்  ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை எதிர்கொண்டே லாபத்தினைப் பெற முடியும். பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்துக் கொள்ளலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திருப்தியான நிலை இருக்கும் என்றாலும் வேலைப் பளு அதிகரிக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளிலும் தாமத நிலை உண்டாகும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 02-06-2017 முதல் 15-07-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் லாப ஸ்தானத்தில் பாக்கியாதிபதி சந்திரனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் கடந்தகால பிரச்சினைகள் யாவும் குறையும். பண வரவுகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். திருமணமாகாதவர்களுக்கு மணமாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கடன்களும் குறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற யாவும் கிடைக்கப் பெறும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 16-07-2017 முதல் 02-09-2017 வரை சஞ்சாரம்குரு உங்கள் ராசியாதிபதியான செவ்வாயின் சாரத்தில் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். 27-07-2107-ல் ஏற்படவுள்ள சர்ப்பகிரக மாற்றத்தால் கேது 3-ல் சஞ்சரிக்கவிருப்பதால் ஆன்மிக, தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களைத் தடையின்றிப் பெற முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்துகொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ளலாம். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேரமுடியும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள்.

நட்சத்திரப்பலன்விசாகம் 4-ஆம் பாதம்விருச்சிக ராசியில் குருவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தி யாகும். கணவன், மனைவியிடையே சிறுசிறு ஊடல்கள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவு உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

அனுஷம்விருச்சிக ராசியில் சனியின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகளி லிருந்த நெருக்கடிகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் தடையின்றி லாபம் அமையும். கடன்கள் நிவர்த்தியாகும். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். பொன், பொருள் சேரும். குடும்பத்திலுள்ள வர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். சேமிக்க முடியும்.

கேட்டைவிருச்சிக ராசியில் புதனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு லாபஸ்தானத்தில்  சஞ்சரிப்பதால் தடைப்பட்ட திருமண சுப காரி யங்கள் கைகூடும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொண் டால் குடும்ப ஒற்றுமை சிறப்படையும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கும். எதிர் பார்த்த இடமாற்றங்களும் தடையின்றிக் கிட்டும். வேலைப்பளு குறையும்.

அதிர்ஷ்டம் அளிப்பவைஎண்:         1, 2, 3, 9, 10, 11நிறம்     :    ஆழ்சிவப்பு, மஞ்சள்கிழமை:     செவ்வாய், வியாழன்கல்:         பவளம்திசை:     தெற்குதெய்வம்:     முருகன்

பரிகாரம்
விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு சாதமாக சஞ்சரித்தாலும் ஏழரைச் சனி தொடருவதால் வியாழக்கிழமைகளில் திருப்பதி ஏழு மலையில் வீற்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை வழிபடுவது, அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது நல்லது. சனிக்கிழமைகளில் விரதமிருந்து அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது, சனிக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீலநிற சங்குப் பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. ராகு 10-ல் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சிவன் மற்றும் சண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்குவது உத்தமம். கேது 4-ல் சஞ்சரிப்பதால் தினமும் விநாயகரை வழிபடுவது, கேது மந்திரமான ""ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ'' என்ற பீஜ மந்திரத்தைக் கூறிவருவது. செவ்வல்லிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

===========================================================================

தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது பாடுபடும் ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே! உங்கள் ராசியாதிபதி குரு 02-08-2016 முதல் 02-09-2017 வரை ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளார். இது செய்யும் தொழில். உத்தியோக ரீதியாக நெருக்கடிகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். கேது 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு இடையூறுகளை சந்தித்தாலும் தடைகளுக்குப் பின் வெற்றியினைப் பெற்ற விட முடியும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவது, பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்படும். சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். எந்தவொரு விஷயத்திலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். ஜென்ம ராசிக்கு 12-ல் சனி சஞ்சரித்து ஏழரைச்சனியில் விரயச்சனி நடைபெறுவதால் எதிர்பாராத வீண்விரயங்களை எதிர்கொள்ளகூடிய சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் உண்டாகும். உடன் இருப்பவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

உடல் ஆரோக்கியம்உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றும். உடல் அசதி, கை, கால் மூட்டுகளில் வலி மனநிம்மதிக் குறைவு போன்றவை உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களால் உண்டாகக் கூடிய மருத்துவச் செலவுகளால் வீண் விரயங்கள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் ஏற்படும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலைகுடும்ப ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்கள் சில தடைகளுக்குப் பின் நிறைவேறும். உற்றார் உறவினர்களிடையே வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வீடு, வாகனம் போன்றவற்றால் அனுகூலங்கள் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது.

கொடுக்கல்- வாங்கல்பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். கொடுத்த கடன்களை சில தடைகளுக்குப் பின்புதான் திரும்பப் பெறமுடியும். அதே போல் பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும்.

தொழில், வியாபாரம்செய்யும் தொழில், வியாபாரத்தில் நிறைய போட்டிகளை சந்திக்க வேண்டி வரும். இதனால் வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாட்டினால் அபிவிருத்தி குறையும். தொழிலாளர்களும் தங்கள் பங்கிற்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். அவர்களுக்கு தரவேண்டிய சம்பளத் தொகைகளில் தடைகள் ஏற்படும். அரசு வழியில் நிம்மதிக்குறைவு உண்டாகும்.

உத்தியோகம்பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியாது. எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகளை கண்ணெதிரிலேயே பிறர் தட்டிச்செல்வதால் மன நிம்மதி குறையும். எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

பெண்கள்உடல் நிலையில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். புத்திரவழியில் சிறுசிறு நிம்மதிக் குறைவுகள் உண்டாகும். அசையும்- அசையா சொத்துகளால் வீண்செலவு ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும்.

அரசியல்உடனிருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் தடைகள் ஏற்படும். மக்களின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ள அரும்பாடு படவேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய வீண் செலவுகளும் உண்டாகும்.

விவசாயிகள்பயிர் விளைச்சல் சுமாராகத்தான் இருக்கும். போதிய நீர்வரத்து இல்லாததால் பயிர்கள் கருகும் நிலை உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். போட்ட முதலீட்டினை எடுக்கவே நிறைய உழைப்பினை மேற்கொள்ள நேரிடும்.

கலைஞர்கள்எதிர்பார்த்த கதாபாத்திரங்களுக்காக காத்திருக்காமல் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. பண வரவுகளில் தாமத நிலை ஏற்படுவதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படையும். உடனிருப்பவர்களே  போட்டியாளர்களாக மாறுவார்கள். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அலைச்சல்கள் உண்டாகும்.

மாணவ- மாணவியர்கல்வியில் மந்தநிலை ஏற்படக் கூடிய காலம் என்பதால் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த அளவிற்கு மதிப்பெண்களைப் பெற முடியாவிட்டாலும் தேர்ச்சியடையும் அளவிற்கு மதிப்பெண்கள் கிடைக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் கிடைக்கவேண்டிய மானியத் தொகைகள் சற்று தாமதப்படும்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 02-08-2016 முதல் 20-09-2016 வரை சஞ்சாரம்குரு பகவான் பாக்கிய ஸ்தானாதிபதியாகிய சூரியனின் நட்சத்திரத்தில் ஜீவனஸ்தானமான 10-ல் சஞ்சாரம் செய்கிறார். இதுமட்டுமின்றி ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் சனி சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப் பிடிப்பது நல்லது. உற்றார்- உறவினர்களையும் அனுசரித்துச் செல்ல வேண்டி வரும். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரத்திலும் நிறைய போட்டிகள் நிலவும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 21-09-2016 முதல் 25-11-2016 வரை சஞ்சாரம்ஜென்ம ராசிக்கு அட்டம ஸ்தானாதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் செய்வதால் ஓரளவுக்கு சுமாரான பலன்களையே பெற முடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உற்றார்- உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பல பொதுநலக் காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் அதன்மூலம் லாபத்தை அடைய முடியும். புத்திர வழியில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய கெடுதி இல்லை. தொழில், வியாபாரத்தில் எதிர் நீச்சல் போட்டாவது ஏற்றத்தை அடைவீர்கள். கூட்டாளிகளால் ஓரளவுக்கு சாதகப் பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனத்தை செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதமாகக் கிடைக்கும். பொருளாதாரநிலை தேவைக்கேற்றபடி இருக்கும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 26-11-2016 முதல் 16-1-2017 வரை சஞ்சாரம்குரு 5, 12-க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் 10-ல் சஞ்சரிப்பது தொழில், வியாபார ரீதியாக வீண் விரயங்களையும், நெருக்கடிகளையும் ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும், செவ்வாய் உங்கள் ராசியாதிபதி குருவுக்கு நட்பு கிரகம் என்பதால் எதையும் சமாளிக்கும் வலிமையும் வல்லமையும் உண்டாகும். ஜென்மராசிக்கு 12-ல் சனி சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்குப் பல முறை சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாகவே இருக்கும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் இழுபறி நிலையிருந்தாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் பணியில் நெருக்கடிகளைச் சந்தித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் துலா ராசியில் 17-01-2017 முதல் 22-02-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் இக்காலங்களில் அதிசாரமாக லாபஸ்தானமான 11-ஆம் வீட்டில் தனக்கு நட்பு கிரகமான செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் கடந்த காலப் பிரச்சினைகள் குறையும். பணவரவுகளிலிருந்த தடைகள் விலகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளிலும் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். பொன், பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர், வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும்.

குரு பகவான் வக்ர கதியில் 23-02-2017 முதல் 01-06-2017 வரைகுரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலையினை அடைய முடியும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் மன நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்துக் காத்திருந்த ஊதிய உயர்வு, இடமாற்றம் போன்றவையும் கிடைக்கப் பெறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். உத்தியோகரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்திலும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உங்களுக்கு ஏழரைச் சனியில் விரயச் சனி நடைபெறுவதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துகளல் ஓரளவுக்கு லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 02-06-2017 முதல் 15-07-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் நன்மை- தீமை கலந்த பலன்களையே பெறமுடியும். உடல் நிலையில் சற்று அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. சனி சாதகமற்று சஞ்சரிப்பதால் வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதும் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் நற்பலனைத் தரும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் கேது 3-ல் இருப்பதால் எதையும் சமாளிக்க முடியும். புத்திர வழியில் மனக்கவலைகள் தோன்றி மறையும். பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு விரயங்களும் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற பயணங்களையும் பெரிய முதலீடுகளையும் தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளாலும் வீண் பிரச்சினைகள் உண்டாகும். தொழிலில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருள் தேக்கம் உண்டாகாது. உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள முடியும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 16.07.2017 முதல் 02.09.2017 வரை சஞ்சாரம்குரு பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் இக்காலங்களிலும் ஏற்ற இறக்கமான பலன்களையே பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தினரால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். 27-07-2017-ல் ஏற்படவுள்ள சர்ப்ப கிரக மாற்றத்தால் கேது 2-ல், ராகு 8-ல் சஞ்சரிக்கவிருப்பதால் குடும்பத்திலுள்ள வர்களை அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று எதையும் சமாளிக்க முடியும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகள் உண்டாவதோடு போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் அனுகூலம் கிட்டும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது.

நட்சத்திரப்பலன்மூலம்தனுசு ராசியில் கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சுமாராகத் தானிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். மணமாகாதவர்களுக்கு வரன்கள் கிடைப்பதில் தாமத நிலை உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கடன்கள் சற்றே குறையும்.

பூராடம்தனுசு ராசியில் சுக்கிரனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 10-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகள் ஏற்படும். போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போகும் என்றாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள். பணவரவுகளிலும் சுமாரான நிலையே இருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடனில்லாமல் வாழ முடியும். உத்தியோகத்தில் வேலைப் பளு அதிகரிக்கும்.

உத்திராடம் 1-ஆம் பாதம்தனுசு ராசியில் சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு ஜீவன ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றுவதில் தடைகள் ஏற்படும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே வெற்றியினைப் பெறமுடியும். பணவரவுகளிலும் சுமாரான நிலையே இருக்கும் என்றாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகி விடும். கொடுக்கல், வாங்கல் போன்றவற்றில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்டம் அளிப்பவைஎண்     :    1, 2, 3, 9, 10, 11, 12நிறம்:    மஞ்சள், பச்சைகிழமை:     திங்கள், வியாழன்கல்:         புஷ்ப ராகம்திசை:     வடகிழக்குதெய்வம்:     தட்சிணாமூர்த்தி

பரிகாரம்
தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணா மூர்த்திக்கு கொண்டைக்கடலையை மாலையாகக் கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது, தானம் போன்றவற்றை காலைப் பொழுதிலும் மந்திர ஜெபங்களை மாலைப் பொழுதிலும் செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிற பூக்களை அணிவது, வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வது, ""ஓம் ஜீரம் ஜரிம் ஜீரௌம் ச குரவே நமஹ"" என்ற குரு மந்திரத்தை துதிப்பது, புஷ்பராகக் கல்லை மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்வது உத்தமம். ஏழரைச் சனி நடைபெறுவதால் ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் முடிந்த உதவிகளைச் செய்வது, அனுமனை வழிபடுவது, அனுமன் துதிகளைக் கூறுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, நல்லெண்ணெய், எள், கடுகு, சமையல் பாத்திரங்கள், குடை, செருப்பு, நீல மலர்கள் ஆகியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்வது, சனியின் பீஜ மந்திரமான ""ஹ்ரீம் ஸ்ரீம் க்ரஹ சக்ரவர்த்தினே, சனைச்சராய க்லிம் இம் சஹ ஸ்வாஹா"" என ஜெபிப்பது, நீலக்கல் மோதிரம் அணிவது நல்லது.

=====================================================================

மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

உழைப்பையே குறிக்கோளாகக் கொண்டு வாழும் பண்பு கொண்ட மகர ராசி நேயர்களே! பொன்னவனான குரு பகவான் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் 02-08-2016 முதல் 02-09-2017 வரை சஞ்சரிப்பதும் ராசியாதிபதி சனி 11-ல் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பாகும். எந்த வித பிரச்சினைகளையும் எளிதில் எதிர்கொண்டு வெற்றியையும் லாபத்தினையும் பெறுவீர்கள். தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் யாவும் விலகி தடபுடலாக கைகூடும். நல்ல வரன்கள் தேடி வரும். சர்ப்ப கிரகங்களான கேது 2-ல், ராகு 8-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது, உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். அசையும்- அசையா சொத்துகளை வாங்கும் யோகமும் அமையும். கடன்கள் யாவும் படிப்படியாக நிவர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில், வியாபாரத்தில் புதிய புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக்கூடிய வாய்ப்புகளும் தேடி வரும். குரு பார்வை ஜென்ம ராசிக்கும், 3, 5-ஆம் வீடுகளுக்கும் இருப்பதால் ஆரோக்கிய பாதிப்புளை சமாளிக்கும் அமைப்பும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களை அடைய முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகளால் வெளிவட்டாரம் விரிவடையும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பொன், பொருள் சேரும். சேமிப்பு பெருகும்.

உடல் ஆரோக்கியம்உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகியபடிதான் இருக்கும் என்றாலும், பெரிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. குடும்பத்திலுள்ளவர்களால் ஏற்பட்ட கடந்தகால மருத்துவச் செலவுகள் தற்போது குறையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலைக் குறைத்துக்கொள்ளலாம். சில நேரங்களில் நிம்மதிக் குறைவு ஏற்படும்.

குடும்பம், பொருளாதார நிலைகணவன்- மனைவியிடையே வீண்வாக்கு வாதங்கள் ஏற்படக்கூடும். முடிந்த வரை குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எந்தவொரு செயலிலும் பிறர் மனதை புண்படுத்தாதிருப்பதும் நற்பலனை உண்டாக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். சொந்த வீடு, வாகனம் போன்றவை வாங்கும் யோகமும் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். சேமிப்பும் பெருகும்.

கொடுக்கல்- வாங்கல்பொருளாதார நிலை உயர்வாக இருப்பதால் கடந்த காலங்களிலிருந்த நெருக்கடிகள் குறையும். கடன்கள் நிவர்த்தியாகும். கொடுக்கல், வாங்கலில் இருந்த பிரச்சினைகள் குறையும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளிலும் தீர்ப்பு சாதகமாக அமையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

தொழில், வியாபாரம்தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் தடையின்றிக் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் அனுகூலம் கிட்டும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சாதகப்பலன் அமையும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்தால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

உத்தியோகம்பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்துக் காத்திருந்த உயர் பதவிகள் கைக்கு கிடைக்கப் பெறும். பொருளாதார ரீதியாகவும் மேன்மைகள் உண்டாகும். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை அமையும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது.

பெண்கள்உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது அவசியமாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர பாக்கியமும் அமையும். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலமும், அசையும் அசையா சொத்துகள் வாங்கும் யோகமும் உண்டாகும். கணவன் மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் தோன்றி மறையும்.

அரசியல்பெயர் புகழுக்கு குறை ஏற்படாது என்றாலும் உடன் பழகுபவர்களிடம் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். பணவரவுகளில் திருப்தியான நிலையிருப்பதால் கட்சிப் பணிகளை நிறைவேற்றுவதில் தடை உண்டாகாது. மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும்.

விவசாயிகள்பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். பட்ட பாட்டிற்கான பலனை தடையின்றிப் பெற முடியும். பணவரவுகளிலிருந்த தடைகள் விலகும். புதிய வழிமுறைகளைக் கையாண்டு நல்ல விளைச்சலைப் பெருக்க முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும்.

கலைஞர்கள்நல்ல நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ரசிகர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். படப்பிடிப்பிற்காக பயணங்களையும் மேற்கொள்வீர்கள். சிலர் நவீன கார், பங்களா போன்றவற்றை வாங்குவீர்கள்.

மாணவ- மாணவியர்கல்வி பயிலுபவர்களுக்கு சிறப்பான முன்னேற்றப் பலன்கள் உண்டாகும். அரசு வழியில் அனுகூலங்கள் கிடைக்கும். நல்ல நட்புகளாகத் தேர்ந்தெடுத்துப் பழகுவது நற்பலனைத் தரும். தேவையற்ற பொழுது போக்குகளைத் தவிர்ப்பது உத்தமம். விளையாட்டுப் போட்டிகளிலும் சாதனைகள் செய்து பள்ளி, கல்லூரிகளுக்குப் பெருமை சேர்க்க முடியும்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 02-08-2016 முதல் 20-09-2016 வரை சஞ்சாரம்குரு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். சனியும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் என்றாலும் சர்ப்பகிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடந்துகொள்வது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடைவிலகி கைகூடும். நல்ல வரன்கள் தேடிவரும். உற்றார்- உறவினர்களிடமிருந்தும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில், வியாபார ரீதியாகவும் முன்னேற்றங்கள் உண்டாகும். போட்டிகள் குறையும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வினைப் பெற்று வாழ்வில் முன்னேற்றமடைவார்கள்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 21-09-2016 முதல் 25-11-2016 வரை சஞ்சாரம்குரு பகவான் ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானாதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் 9-ல் சஞ்சரிப்பதால் செல்வம், செல்வாக்கு உயரும். தாராள தன வரவுகளைக் கொடுக்கும். குடும்பத்தில் சிறப்பான ஒற்றுமை உண்டாகும். அசையும்- அசையா சொத்துகளையும் வாங்க முடியும்.  பூர்வீக சொத்துகளாலும் லாபம் கிட்டும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது, உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. மணமாகாதவர்களுக்கு மணமாகக் கூடிய வாய்ப்புகள் அமையும். புத்திரபாக்கியம் கிட்டும்.  பொன், பொருள் சேரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் திறம்படச் செயல்பட முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 26-11-2016 முதல் 16-1-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் பாக்கியஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. சர்ப்பகிரகங்கள் சாதகமற்று இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் தோன்றினாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலையே இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து லாபங்கள் பெருகும். பயணங்களால் நற்பலனை அடைவீர்கள். பொன், பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை அடைய முடியும். மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கப்பெறும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் துலா ராசியில் 17-01-2017 முதல் 22-02-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் துலா ராசியில் ஜென்ம ராசிக்கு 10-ஆம் வீட்டில் செவ்வாயின் நட்சத்திரத்தில் அதிசாரமாக சஞ்சாரம் செய்கிறார். குரு 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் தொழில், வியாபார ரீதியாக ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது.  பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்படவும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்க்கவும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே ஒற்றுமையினை அடைய முடியும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகள் ஏற்படும் என்றாலும், சனி 11-ல் இருப்பதால் பெரிய கெடுதியில்லை.

குரு பகவான் வக்ர கதியில் 23-02-2017 முதல் 01-06-2017 வரைகுரு பகவான் வக்ரகதியிலிருப்பதால் நன்மை- தீமை கலந்த பலன்களையே பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெற முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. பணம் கொடுக்கல் வாங்கலில் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டாகும். அபிவிருத்தியும் பெருகும். கூட்டாளிகளாலும் தொழிலாளர்களாலும் வீண் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன் மூலம் ஆதாயங்களும் உண்டாகும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 02-06-2017 முதல் 15-07-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில், பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். கடந்த காலங்களிலிருந்த நெருக்கடிகள் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல்நிலையும் சுறுசுறுப்புடன் அமையும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் தடையின்றிப் பூர்த்தியாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்து சேர்க்கைகளும் பொன், பொருள் சேர்க்கைகளும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். சுபகாரியங்கள் தடபுடலாகக் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல், வாங்கல் லாபமளிக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். பல பெரிய மனிதர்களின் நட்புகளால் வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். பூர்வீக சொத்து விஷயங்களிலுள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். கடன்கள் குறைந்து கண்ணியமான வாழ்க்கை அமையும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 16-07-2017 முதல் 02-09-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் ஜென்ம ராசிக்கு 9-ஆம் வீட்டில் செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். இக்காலங்களில் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அசையும்- அசையா சொத்துகளும் சேரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் பணிபுரிய முடியும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். உற்றார்- உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திருப்தியுடன் செயல்பட முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன் மூலம் ஆதாயங்களும் உண்டாகும். தொழில், வியாபாரம் மேன்மையடையும். 27-07-2017-ல் ஏற்படவுள்ள சர்ப்ப கிரக மாற்றத்தின் மூலம் கேது ஜென்ம ராசியிலும் ராகு 7-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும்.

நட்சத்திரப்பலன்உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள்மகர ராசியில் சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நினைத்தது நிறைவேறும். பண விஷயத்திலிருந்த நெருக்கடிகள் குறைந்து தாராள தனவரவு உண்டாகும். கடன்கள் நிவர்த்தியாகும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். பொன், பொருள் சேரும். அசையும்- அசையா சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். செய்யும் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

திருவோணம்மகர ராசியில் சந்திரனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் ஜென்ம ராசிக்கு 9-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரம் உயர்வடையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு திருமணமாகும். புத்திர பாக்கியமும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் ஏற்படும். பண விஷயங்களில் இருந்த தடைகள் விலகும். உத்தியோ கஸ்தர்கள் விரும்பிய உயர்வுகளைப் பெற முடியும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு தடைப்பட்ட புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். சேமிப்புகள் பெருகும்.

அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்மகர ராசியில் செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் தடபுடலாகக் கைகூடும். சிலருக்கு புத்திர பாக்கியமும் அமையும். ஆரோக்கியம் சுமாராக இருந்தாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். அசையும், அசையா சொத்துகள் சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டும். கௌரவான நிலைகளும் உண்டாகும். தொழில், வியாபாரம் நல்ல முறையில் நடைபெறும். கடன்கள் யாவும் குறையும்.

அதிர்ஷ்டம் அளிப்பவைஎண்:         5, 6, 8, 14, 15, 17கிழமை:     புதன், சனிதிசை:     மேற்குநிறம்     :    நீலம், பச்சைகல்:         நீலக்கல்தெய்வம்:     ஐயப்பன்

பரிகாரம்
மகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குருவும் சனியும் சாதமாக சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். கேது 2-ல், ராகு 8-ல் சஞ்சரிப்பதால், ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சிவன் மற்றும் சண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்குவது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன் படுத்துவது. ""ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் சஹ ராஹவே நமஹ' என்ற பீஜ மந்திரத்தைக் கூறி வருவது நல்லது. தினமும் விநாயகரை வழிபடுவது, கேது மந்திரமான ""ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவே நமஹ'' என்ற பீஜ மந்திரத்தைக் கூறிவருவது, செவ்வல்லிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

====================================================================
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கோபம் கொள்ளும் குணம்கொண்ட கும்ப ராசி நேயர்களே! உங்கள் ஜென்மராசிக்கு 2, 11-க்கு அதிபதியான குரு அஷ்டம  ஸ்தானமான 8-ஆம் வீட்டில் 02-08-2016 முதல் 02-09-2017 வரை சஞ்சாரம் செய்யவுள்ளார். இது சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துகொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாவதோடு குடும்பத் திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். அசையும்- அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை எதிர்கொள்ள நேரிடும். சனியும் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபார ரீதியாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. மந்த நிலை நிலவினாலும் பொருள் தேக்கம் ஏற்படாமல் ஒரளவுக்கு லாபம் கிட்டும். தேவையற்ற அலைச்சல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தி லிருப்பவர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளை கண்ணெதிரிலேயே பிறர் தட்டிச் செல்வார்கள். குரு பார்வை 2, 4, 12-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் குடும்ப வாழ்வில் ஓரளவுக்கு சுபிட்சமும் ஒற்றுமையும் நிலவும்.

உடல் ஆரோக்கியம்உடல் நிலை சுமாராகத்தானிருக்கும் சில நேரங்களில் சிறப்பாக இருந்தாலும் பல நேரங்களில் ஆரோக்கிய பாதிப்பினை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்களாலும் உடல் நிலை சோர்வடையும். வேலைப்பளுவும் அதிகரிக்கும். குடும்பத்திலுள்ளவர்களுக்கு உண்டாகக் கூடிய பாதிப்புகளால் வீண் செலவுகள் அதிகரிக்கும்.

குடும்பம், பொருளாதார நிலைகுடும்ப ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். ஏதாவது வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகளில் நெருக்கடிகள் தோன்றும் என்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்ய கடன்வாங்க வேண்டியிருக்கும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும்.

கொடுக்கல்- வாங்கல்பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் பிறரை நம்பி கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பண விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்ததைக் கேட்டால் அடுத்தது பகை என்பது போலாகும். வீண் விரயங்கள் உண்டாகும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும்.

தொழில், வியாபாரம்தொழில், வியாபாரம் ஓரளவுக்கு முன்னேற்றமளிப்பதாக இருந்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனம் தேவை. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொள்வதால் தொழிலில் முடக்கம் ஏற்படாது. அரசு வழியில் உதவிகள் தாமதப்படும்.

உத்தியோகம்பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் நலக்குறைவுகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடுவதால் வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சுமாராகத் தானிருக்கும். சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க நேரிடும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

பெண்கள்உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரணக் கோளாறு, உடல் சோர்வு போன்றவை உண்டாகும். உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. திருமணமாகாதவர்களுக்கு வரன்கள் கிடைப்பதில் தாமத நிலை ஏற்படும். கணவன், மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். குடும்ப விஷயங்களைப் பற்றி பிறரிடம் பேசுவதைத் தவிர்க்கவும் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது.

அரசியல்மக்களின் ஆதரவைப் பெற அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நல்லது. உடனிருப்பவர்களால் பெயர், புகழுக்கு பங்கம் ஏற்படலாம். மேடைப் பேச்சுகளில் நிதானத்தைக் கையாளவும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.

விவசாயிகள்பயிர் விளைச்சல் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. போதிய நீர் இன்மையால் பயிர்கள் வாடிப்போகும். போட்ட முதலீட்டினை எடுக்க முடியாது. அரசு வழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகளில் தாமத நிலை ஏற்படும். வங்கிக்கடனை செலுத்த முடியாமல் போகும்.

கலைஞர்கள்நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திராமல் இருப்பதைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. போட்டிகள் அதிகரிக்கக்கூடிய காலம் என்பதால் அலைச்சல்களும் அதிகரிக்கும். வரவேண்டிய பணத்தொகைகள் சற்று இழுபறிக்குப் பின் கிடைக்கும். சேமிக்க முடியாது.

மாணவ- மாணவியர்கல்வியில் முழு ஈடுபாட்டினைச் செலுத்த முடியாது. கவனம் சிதறும். தேவையற்ற நட்புகள் உங்களை வேறு பாதைக்கு இழுத்துச் செல்லும். முடிந்த வரை வீண் பொழுதுபோக்குகளைத் தவிர்ப்பது நல்லது. நல்ல மதிப்பெண்களைப் பெற்றால் மட்டுமே பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவினைப் பெற முடியும். விளையாடும்போது கவனம் தேவை.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 02-08-2016 முதல் 20-09-2016 வரை சஞ்சாரம்உங்கள் ஜென்மராசிக்கு 2, 11-க்கு அதிபதியான குருபகவான் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சூரியனின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துகொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். உற்றார்- உறவினர்களை சற்று அனுசரித்து நடப்பது நல்லது. கொடுக்கல், வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பதன் மூலம் வீண்பிரச்சனைகளைக் குறைக்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை எதிர்கொள்ள நேரிட்டாலும் பொருள்தேக்கம் ஏற்படாது. தொழிலாளர்களால் சிறுசிறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.  உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற இடமாற்றங்கள் ஏற்படும். வேலை பளுவும் கூடும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 21-09-2016 முதல் 25-11-2016 வரை சஞ்சாரம்குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சந்திரனின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில்  கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்திலுள்வர்களிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதையும் சமாளிக்க முடியும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிடைக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்லவேண்டியிருக்கும். சிலருக்கு அசையும்- அசையா சொத்துகளால் வீண் செலவுகள் தோன்றும். தொழில்,  வியாபாரம் செய்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கக்கூடிய காலம் என்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களும் தங்கள் பணிகளில் சற்று கவனமுடனிருப்பது, உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கல்வி பயிலுபவர்கள் சற்று ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்ணைப் பெறமுடியும்.
குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 26-11-2016 முதல் 16-1-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் 3, 10-க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். கணவன், மனைவியிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு நிம்மதி குறையும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து நிதானமாக செயல்படுவது நல்லது. உற்றார்- உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகி அபிவிருத்திகள் குறையக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். முடிந்த வரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தைவிட்டுப் பிரிய நேரிடும். அலைச்சல், டென்ஷன்களும் அதிகரிக்கும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் துலா ராசியில் 17-01-2017 முதல் 22-02-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் இக்காலங்களில் துலா ராசியில் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு 9-ல் செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இக்காலங்களில் பல பொதுநலக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளைத் தடையின்றி மேற்கொள்ளலாம். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் மேன்மையடையும். உற்றார், உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து லாபம் பெருகும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். பயணங்களால் சிறுசிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் ஆதாயமும் உண்டு. உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பால் வேலை பளுவை சற்றுக் குறைத்துக் கொள்ளலாம்.

குரு பகவான் வக்ர கதியில் 23-02-2017 முதல் 01-06-2017 வரைகுரு வக்ர கதியிலிருப்பதால் இக்காலங்களிலும் ஏற்றமான பலன்களையே பெறுவீர்கள். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்காது. குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. எதிர்பாராத தனவரவுகளால் குடும்பத்தின் பொருளாதாரம் உயரும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதசமாகச் செயல்படுவார்கள். ஆடை ஆபரணம் சேரும். சிலருக்கு அசையா சொத்து யோகமும் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை விலகி நல்ல வரன்கள் தேடி வரும். புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும். கொடுக்கல் வாங்கலும் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். தொழில், வியாபாரம் நல்ல நிலையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். போட்டிகள் குறையும். பல பொதுநலக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 02-06-2017 முதல் 15-07-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யும். இக்காலங்களில் ஓரளவுக்கு ஏற்றத்தைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நிறைய போட்டி பொறாமைகளாலும் தொழிலாளர்களின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளாலும் லாபங்கள் குறைந்து மந்த நிலை உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைப்பதில் தாமத நிலை ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடக்கவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளையும் இடமாற்றங் களையும் சில தடைகளுக்குபின் பெற முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்து உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நல்ல அனுகூலங்களைப் பெற முடியும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 16-07-2017 முதல் 02-09-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் 3, 10-க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்கள் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலப்பலனை அடையமுடியும். புத்திர வழியில் சிறுசிறு மன உளைச்சல்கள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உற்றார்- உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்திலுள்ளவர்களால் அடிக்கடி மருத்துவச் செலவுகளை சந்திப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது சிந்தித்து செயல்படுவது உத்தமம். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சில சிக்கல்கள் நிலவும். 27.07.2017ல் ஏற்படவுள்ள சர்ப்பகிரக மாற்றத்தால் ராகு 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எந்தவித எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். போட்டி பொறாமைகள் குறையும்.
நட்சத்திரப்பலன்அவிட்டம் 2, 3-ஆம் பாதங்கள்கும்ப ராசியில் செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் பணவரவுகளில் சிறுசிறு நெருக்கடிகளை சந்திப்பீர்கள். என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கக்கூடும் என்பதால் கிடைத்த வாய்ப்புகளைக் பயன்படுத்திக்கொள்வது லாபத்தை அளிக்கும்.

சதயம்கும்ப ராசியில் ராகுவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும், குடும்பத்தின் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடிகள் ஏற்படக் கூடிய காலம் என்பதால் எதிலும் கவனம் தேவை.

பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்கும்ப ராசியில் குருவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் அட்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு இல்லை என்பதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உடல் நிலையில் சற்றே கவனம் செலுத்தவும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. தொழில், வியாபா ரத்தில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் பொருள் தேக்கம் ஏற்படாது.

அதிர்ஷ்டம் அளிப்பவைஎண் :    5, 6, 8, 14, 15, 17கிழமை:     வெள்ளி, சனி திசை:     மேற்குநிறம்     :    வெள்ளை, நீலம்கல்:         நீலக்கல்தெய்வம்:     விநாயகர்

பரிகாரம்கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 8-ல் குரு சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணா மூர்த்திக்கு கொண்டைக்கடலையை மாலையாகக் கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். தானம் போன்றவற்றை காலைப் பொழுதிலும் (வியாழக் கிழமைகளில்) மந்திர ஜெபங்களை மாலைப்பொழுதிலும் செய்யவும். சனி 10-ல் சஞ்சரிப் பதால் சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை வழிபடுவது, அனுமனையும் விநாயக ரையும் வழிபடுவது நல்லது. சனிக்கிழமைகளில் விரதமிருந்து அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது, சனிக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீலநிற சங்குப் பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊன முற்ற ஏழை, எளியவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. ராகு- கேது சாதக மற்று சஞ்சரிப்பதால், ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சிவன் மற்றும் சண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்குவது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன் படுத்துவது, ""ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் சஹ ராஹவே நமஹ'' என்ற பீஜ மந்திரத்தைக்கூறி வருவது நல்லது. தினமும் விநாயகரை வழிபடுவது, ""ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவே நமஹ"" என்ற பீஜ மந்திரத்தைக் கூறிவருவது, செவ்வல்லிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.  

====================================================================
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

சிரித்த முகத்துடன் அனைவரிடத்திலும் அன்புடன் பழகும் குணம் கொண்ட மீன ராசி நேயர்களே! உங்கள் ராசியாதிபதி குரு ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7ஆம் வீட்டில் 02-08-2016 முதல் 02-09-2017 வரை சஞ்சாரம் செய்யவிருப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும். திருமணம் போன்ற சுபகாரியங்களும் தடபுடலாகக் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். புத்திர பாக்கியமும் சிறப்பாக அமையும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். சிலருக்கு சொந்த வீடு, கார் போன்றவை வாங்கும் யோகம் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். உங்களுக்குள்ள கடன்களும் பைசலாகும். ராகு 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்து விஷயங்களிலுள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். தொழில், வியாபாரம் செய்பவர் களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். கூட்டா ளிகள் சாதகமாக அமைவார்கள். அபிவிருத்தியும் பெருகும். சனி 9-ல் சஞ்சரிப்பதால் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ் தர்கள் தங்கள் பணிகளில் திறம்படச் செயல்பட்டு எதிர்பார்த்த உயர்வு களைப் பெற முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும்.

உடல் ஆரோக்கியம்உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். நீண்டநாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் மருத்துவச் செலவுகள் குறையக் கூடிய வாய்ப்பு உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்கள் சுபிட்சமாக இருப்பார்கள். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள்.

குடும்பம், பொருளாதார நிலைகுடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். புத்திர வழியிலும் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். நினைத்தது நிறைவேறும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். பூர்வீகச் சொத்துகளும் கைக்குக் கிடைக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.
கொடுக்கல்- வாங்கல்கொடுக்கல்- வாங்கலில் கடந்த காலங்களிலிருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணலாம். கொடுத்த கடன்களும் வீடுதேடி வரும்.  விரோதிகளும் நண்பர்களாவார்கள். நல்ல நட்புகளால் நற்பலன் அமையும். எதிர்பாராத தனவரவுகளும் உண்டாகும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். பங்காளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள்.

தொழில், வியாபாரம்செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி மேன்மை உண்டாகும். கூட்டாளி களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழிலாளர்களும் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய அமைப்பும் உண்டாகும்.

உத்தியோகம்பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த ஊதிய உயர்வு உத்தியோக உயர்வு போன்ற யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங் களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிட்டும்.

பெண்கள்உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கணவன்- மனைவியி டையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு அழகான புத்திர பாக்கியமும் கிட்டும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் யாவும் சேரும். பண வரவுகள் சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மணமாகாதவர்களுக்கு மண மாகும். உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும்.
அரசியல்பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தடையின்றிக் காப்பாற்றமுடியும். கட்சிப் பணிகளை சிறப்பாகச் செய்வீர்கள். கட்சிப் பணிகளுக்காக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும்.

விவசாயிகள்பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளைபொருளுக்கு சற்று கூடுதலான விலை சந்தையில் கிடைக்கும். தாராள தனவரவுகளால் நவீன யுக்திகளைக் கையாள முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் கிடைக்கும். வீடு, மனை, புதிய நிலம் போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். கடன்கள் குறையும்.

கலைஞர்கள்சிறப்பான கதாபாத்திரங்கள் கிடைக்கும். நினைத்த அளவிற்கு உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பொருளாதாரம் மேம்படும். ஆடம்பர கார், பங்களா போன்றவற்றை வாங்குவீர்கள். சின்னத் திரையில் இருப்பவர்களாலும் ஜொலிக்க முடியும். வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வீர்கள்.

மாணவ- மாணவியர்கல்வியில் பல சாதனைகளைச் செய்ய முடியும். நல்ல மதிப்பெண் களைப் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். அரசு வழியில் கிடைக்கப் பெறும் உதவிகள் தக்கசமயத்தில் உதவும். விளை யாட்டு போட்டிகளிலும் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் பெற முடியும். நல்ல நட்புகளால் நற்பலன்கள் தேடி வரும். ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிக்கும்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 02-08-2016 முதல் 20-09-2016 வரை சஞ்சாரம்உங்கள் ராசியாதிபதி குரு பகவான் தனக்கு நட்பு கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்மராசிக்கு 7-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் நினைத் தது நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொன், பொருள் சேரும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். புத்திர பாக்கியம் கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் நிவர்த்தியாகும். குடும்பத்தில் நவீன பொருட் சேர்க்கைகள் அமையும். உற்றார் உறவினர் களின் வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். புதிய கூட்டாளி களால் அபிவிருத்தி பெருகும். வேலையாட்கள் ஒற்றுமையுடன் செயல்படு வார்கள். பணம் கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெறும். பயணங்களால் நல்ல அனுகூலங்கள் ஏற்படும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 21-09-2016 முதல் 25-11-2016 வரை சஞ்சாரம்ராசியாதிபதி குரு, 5-ஆம் அதிபதி சந்திரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் உடல் நிலை அற்புதமாக அமையும். கணவன், மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதாரம் உயர்வடையும். பொன், பொருள் சேரும். கொடுக்கல் வாங்கல் நல்ல நிலையில் நடைபெற்று லாபம் பெருகும். விரோதிகளும் நண்பர்களாகச் செயல்படுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களும் சாதகமாக மாறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளுக்கேற்ற பாராட்டு தல்களைப் பெறுவார்கள். ராகு பகவான் 6-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலம் இருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் நம்பிக்கையையும் முன்னேற்றத்தையும் அளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர் களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். கடன்கள் குறையும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 26-11-2016 முதல் 16-1-2017 வரை சஞ்சாரம்ராசியாதிபதி குரு பகவான் 2, 9-க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் அற்புதமான நற்பலன்களை பெறுவீர்கள். செய்யும் தொழில், வியாபாரத்தில் மேன்மை களும் கூட்டாளிகளால் லாபங்களும் உண்டாகும். புதிய நவீன கருவி களை வாங்கிப் போடுவீர்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பு டையவற்றால் அனுகூலங்கள் ஏற்படும். பணம் தாராளமாக வருவதால் கொடுக்கல், வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. கணவன், மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களும் தடபுடலாக நடந்தேறும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடை பெறும். உற்றார், உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வுகளைப் பெற்று முன்னேற முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிக்கும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் துலா ராசியில் 17-01-2017 முதல் 22-02-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் அதிசாரமாக துலாராசியில் 8-ஆம் வீட்டில் செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். குரு 8-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகள், அஜீரணக் கோளாறு போன்றவை உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று மந்த நிலை ஏற்படும் என்பதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும் என்றாலும், நிறைய போட்டிகளையும் எதிர்கொள்ளவேண்டி வரும். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கும் சேர்த்து பொறுப் பேற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. ஜென்ம ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்துவிட முடியும்.

குரு பகவான் வக்ர கதியில் 23-02-2017 முதல் 01-06-2017 வரைகுரு பகவான் வக்ர கதியிலிருப்பதால் பணம் கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாகக் கொடுக்காதிருப்பது நல்லது. பணம் விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். எடுக்கும் எந்த வொரு காரியத்திலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் ஏற்படுவதால் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்திலுள்ளவர்களாலும் வீண் விரயங்கள் ஏற்படும். சனி பாக்கிய ஸ்தானத்திலும், ராகு 6-லும் இருப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெறுவீர்கள். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சற்றே மந்த நிலை நிலவினாலும் பொருள்தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ் தர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 02-06-2017 முதல் 15-07-2017 வரை சஞ்சாரம்ராசியாதிபதி குரு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் அனுகூலமான நற்பலன்களைத் தடை யின்றிப் பெறுவீர்கள். கடந்த கால பிரச்சினைகள் யாவும் விலகி எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைக் கொடுக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் உதவிகரமாக இருப் பார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். சிலருக்கு சொந்த பூமி, மனை வாங்கும் யோகம் அமையும். பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு, வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகளும், அரசு வழியில் ஆதாயங்களும் தேடி வரும். உத்தியோகஸ்தர்களின் திறமைக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 16-07-2017 முதல் 02-09-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் 7-ஆம் வீட்டில் செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். பொருளாதார உயர்வுகளால் நினைத்தது நிறைவேறும். அசையும்- அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். பணம் கொடுக்கல், வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். வரும் 27-07-2017ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தின்மூலம் கேது 11-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் செய்யும் தொழில், வியாபார ரீதியாக நல்ல முன்னேற்றத்தைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும்.

நட்சத்திரப்பலன்பூரட்டாதி 4-ஆம் பாதம்மீன ராசியில் ராசியாதிபதி குருவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்ப தால் எல்லா வகையிலும் நற்பலன்கள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றிப் பூர்த்தியாகும். கணவன்- மனைவி யிடையே ஒற்றுமை பலப்படும். திருமணமாகாதவர்களுக்கு மணமாகும். பொன்னும் பொருளும் சேரும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடையவார்கள். பொருளாதாரம் உயரும்.

உத்திரட்டாதிமீன ராசியில் சனியின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 7-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடை விலகி கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். சிலருக்கு சொந்த வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக் கூடிய யோகம் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்திலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும்.

ரேவதிமீன ராசியில் புதனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். மங்களரமான சுப காரியங் கள் கைகூடும். பொருளாதார உயர்வுகளால் நினைத்தது நிறைவேறும். அசையும், அசையா சொத்துகள் சேரும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் சிறப்பான லாபம் அமையும். கடன்கள் யாவும் குறையும்.

அதிர்ஷ்டம் அளிப்பவைஎண்:         1, 2, 3, 9, 10, 11, 12கிழமை:     வியாழன், ஞாயிறுதிசை:     வடகிழக்குநிறம்:     மஞ்சள், சிவப்புகல்:          புஷ்ப ராகம்தெய்வம்:     தட்சிணாமூர்த்தி

பரிகாரம்
மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு சாதகமாக சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். சனி 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சனிக் கிழமைகளில் திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை வழிபடுவது, அனுமனையும் விநாயகரையும் வழிபடு வது நல்லது. சனிக்கிழமைகளில் விரதமிருந்து அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது, சனிக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்குப் பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர் களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள் வது நல்லது. கேது 12-ல் சஞசரிப்பதால் தினமும் விநாயகரை வழிபடுவது, ""ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவே நமஹ"" என்ற பீஜ மந்திரத்தைக் கூறி வருவது, செவ்வல்லிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது. 
===========================================================================

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com