Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

பரவசம்.....!

| Jun 14, 2014
சமீபத்தில் என் நெருங்கிய நண்பர் ஒருவருடன் அண்ணாமலை கிரிவலம் சென்று வந்தேன். வட இந்தியாவை சேர்ந்தவர். 32 வயது இளைஞர். எனக்கு ஒரு ஏழு வருடங்களுக்கு மேல் நல்ல பழக்கம். பழகுவதற்கு இனிமையானவர். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருந்தவர். காரில் பயணம் செய்ததைவிட வானில் பறந்து  கொண்டிருந்த நேரம் அதிகம்...... இருந்த போதிலும் மிக எளிமையானவர். ஆன்மீகத்தில் நிறைய ஈடுபாடு உண்டு. பண்டிட் ஸ்ரீ ரவிஷங்கர் அவர்களின் வாழும் கலைப் பயிற்சி பாசறையில் தியானம் கற்று பத்து வருடங்களுக்கு மேல் தினமும் முறையான தியானம் செய்து வருபவர்.

அவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது கிடைத்த சில தகவல்களை நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்  என நினைக்கிறேன்.

ஒரு வருடத்திற்கு முன்பு தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு , முழு நேரமாக இப்போது யோகா , தியானம் பற்றி கற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். வெளிநாட்டில் இருந்தும் நிறைய பேர் அவரிடம் பயிற்சி மேற்கொள்கின்றனர்.......

என்ன இப்படி , திடீர் முடிவு..? நிச்சயமாக நீங்கள் இதற்க்கு முன்பு வாங்கிய சம்பளத்திற்கு , இப்போது வரும் வருமானம் குறைவாகத்தானே இருக்கும் என்றேன். ஆமாம் குறைவு தான். ஆனால் மனம் நிறைவாக இருக்கிறது என்றார். (அது சரி, வசதியான வீட்டுப் பிள்ளை. ஒண்டிக் கட்டை வேறே... தாராளமா அவர் நினைக்கலாம் , நமக்கு அப்படியா? மாசத்துலே கடைசி அஞ்சு நாள் வரவே கூடாது இறைவா ன்னு  கடவுள் கிட்டே ஸ்பெஷல் அப்ளிகேஷன் போடுற ஆளுங்க இங்கே எல்லாம்.......)

நான் சொல்ல வந்த விஷயம் அது இல்லே....!  மேட்டருக்கு வர்றேன்..!

"தியானம் நாம எதுக்கு பண்ணனும்னு தெரியுமா? உங்களுக்கு தெரியும், உங்க கிட்டே போய் கேட்குறேன் பாரு"ன்னு சொன்னார்...!

( எனக்கு தெரியாதுய்யா , நீ சொல்லு , நானும் தெரிஞ்சுக்கிறேன்...)

"ம்ம்... தெரியும்..! இருந்தாலும் சொல்லுங்க...!", "மன அமைதிக்காக பண்றது...! எந்த ஒரு செயலிலும் ஒரு நிதானம் வரும்... தெளிவு இருக்கும். ..... லட்சியத்தை அடையறதுக்கு ஒரு இது...." இப்படின்னு நான் பாட்டுக்கு அளந்து விட்டுக்கிட்டு இருந்தேன்....!

ஹ்ம்ம்... பஹூத் படியாஹை ... ! நீங்க சொல்றது எல்லாமே சரி...! ஆனால், தியானம் பண்ற எல்லோருக்குமே ஏன் இந்த பலன்கள் கிடைக்கிறது இல்லே..? ஒரு சிலருக்கு கிடைக்குது. ஒரு சிலருக்கு கிடைக்கிறதே இல்லை... ஏன்..?

அட ஆமாம் இல்லே..! எத்தனையோ பேர் ஆரம்பிப்போம்..! கொஞ்ச நாள் கழிச்சு, அடப் போங்கப்பா, இது ஒன்னும் இல்லே... ஒன்னு  நமக்கு செட் ஆகலை , இல்லை மத்தவங்க பொய் சொல்றாங்க ன்னு நினைச்சு  ஒதுங்கி இருப்போம்..!

தெரியலையே,.சொல்லுங்க...!

" ஒருத்தர் பண்ற தியானத்தோட பலன்கள் , அவருக்கு முந்தைய ஏழு தலைமுறைக்கும், அவருக்கும் , அதன் பிறகு வரப்போற ஏழு தலைமுறைக்கும் பலன் கொடுக்கும்."  (அட... ! கன்டினியூ பண்ணு...!)

"இப்போ நாம பண்ற தியானத்தோட பலன்கள் - நம்ம முந்தைய தலைமுறைக்கு கிடைச்சு அவங்க 'கோட்டா' எல்லாம் பூர்த்தி செஞ்சு , அதன் பிறகு தான் நமக்கும் , நம்ம சந்ததிக்கும் கிடைக்கும்....!
உங்க குழந்தைகளுக்கு - நீங்க ரெண்டே ரெண்டு விஷயம் தான் கொடுக்க முடியும். ஒன்னு, நல்ல கல்வி.இரண்டாவது உங்களோட தியானத்தோட பலன்கள்..... வேற எது நீங்க கொடுத்தாலும் அது நிலை இல்லாதது...!
உங்க முந்தைய தலைமுறையில் யாரும்  தியானம் செய்யாத பட்சத்தில் , நீங்க அவங்களுக்கும் சேர்த்து - தியானம் செய்ய, செய்ய - உங்களுக்கு பலன்கள் விரைவில் கிடைக்க ஆரம்பிக்கும்...! இதனால தான் ஒரு சிலருக்கு உடனடியா பலன்கள் தெரிவதில்லை....!"
"உங்களுக்கு தெரிந்து - இன்றைக்கு மிக மிக நல்ல நிலையில் இருக்கும் குடும்பத்தை  கவனித்துப் பாருங்கள்... இப்போது இருக்கும் அவர்களோ, அல்லது அவர்களின் மூத்த தலைமுறையில் இருப்பவர்களோ செய்த தியானத்தின் வலிமை அவர்களை வழி நடத்தும்"னு சொன்னார்....!

நிச்சயமா இது , நான் இது வரைக்கும் கேள்விப்படாத ஒரு விஷயம்....!
அது மட்டும் இல்லை, "இந்த பூமியில் வாழ்ந்து முடித்த ஆத்மாக்கள் அனைத்தும் மோனப் பேரு நிலையில் தவம் செய்த படி தான் இருக்கும்...! கண்ணை மூடி தியானம் செய்யும். அது தான் அவர்களுக்கு உணவு, வலிமை.... எல்லாம்... ஒவ்வொரு ஆத்மாவும் தவம் செய்த நிலையிலேயே அவர்களின் சந்ததியின் வாழ்க்கையை , நடவடிக்கைகளை கவனிக்கின்றனர்."

"நீங்கள் செய்யும் தியானம் , உங்களுக்கும் உங்கள் பித்ருக்களுக்கும் ஒரு மிகப் பெரிய பலம் கொடுக்கும்... அவர்கள், உங்களின் நல்லதுக்கு தேவையானவற்றை , வழிகளை தகுந்த முறையில் தெரியப் படுத்துவார்கள் ..."

உண்மையிலேயே மிரண்டு போயிட்டேன்...! அடேங்கப்பா... எப்பேர்பட்ட விஷயம்...! என்னாலே, பல தலைமுறைகளுக்கு தேவையான ஒரு நல்ல விஷயம் பண்ணக்கூடிய ஒரு வாய்ப்பை விடலாமா? இந்த நல்ல விஷயம் தெரிவதற்கு என்னோட தகப்பன் மனம் வைத்தாரே ...! அவருக்கு மீண்டும் ஒருமுறை மனப் பூர்வமா நன்றி....!
நிச்சயம் தியானம் தொடர்ந்து செய்யனும்னு ஒரு வைராக்கியம், குறிக்கோள் ... இத்யாதி ...இத்யாதி....எல்லாம் வந்து ,  கொஞ்சம் கொஞ்சமா நாமளும் முன்னுக்கு வரணும்..!

சரி, நம்ம வாசக நண்பர்களுக்கும் சொல்லிடலாம்னு தான், இப்போ எழுதுனது....! தெரியப்படுத்துவதை தெரியப் படுத்திடலாம்... அதுக்கு அப்புறம் உங்க இஷ்டம் ..... நண்பர்களே...!

அப்புறம், இந்த வருட குருப் பெயர்ச்சி பலன்கள் பற்றி , கீழே வீடியோ லிங்க் கொடுத்து உள்ளேன்.... பார்த்து, கேட்டு பயன் பெறுங்கள்....!

மீண்டும், மீண்டும் ஒரே ஒரு விஷயம் மட்டும் மனதில் நன்றாக பதிந்து கொள்ளுங்கள்... நம் ஒவ்வொருவருக்கும் அந்த இறை அருள் பரிபூரணமாக உள்ளது.... கஷ்டங்கள் கிடைப்பது , நம்மை பண்படுத்தி வலிமை பெற செய்வதற்கே....! விடியலை நோக்கி விரைவில் பயணித்துக் கொண்டு இருக்கிறோம்...! 

அப்பாடா , அடிக்கடி எழுதுறது இல்லைன்னு , சந்தோஷப்படாதீக....! ஒன்னு சொன்னாலும் உருப்படியான விஷயமா இருக்கணும் நினைக்கிற ஆளுக நாங்க எல்லாம்...! (பேசுறப்போ எல்லாம் , நாங்க , நாங்க ன்னு  சொல்றியே, எத்தனை பேருடா இருக்கிறீங்க , உங்க குரூப்ல ? வெளியில தெரியிறது ஒரு ரூபம். உள்ளுக்குள்ளே... பல ரூபங்கள் இருக்குது....! லேடன் கிட்ட பேசுறயா )

படிச்சதோட நிக்காம , Implement பண்ணிப் பாருங்க...! சீக்கிரம் திரும்பி வாரோம்....!


12 comments:

prakalsh said...

தொடர்ந்து எழுதுங்கள் பிளீஸ். பிரகாஷ், வேலூர்.

KUMARAN BALURAMDOSS said...

Respected Sir,

UNGALIN INDHA PONNANA SEITHIKU NANDRIKAL SOLLA VARTHAI PATHADU.

ELLAM IRAIVAN SEYAL.

Ungal Atricle-i ethir paarthu irundhatharku palan unnduu. Nandri Nandri Nandri.

kumaran-riyadh

Nallaswamy Raju said...

SUPERB ARTICLE.THANKS A LOT

nathan said...

அருமையான விஷயம் கூறியுள்ளீர்கள். அண்ணா,இப்பெல்லாம் முன்ன மாதிரி பதிவு போடறதில்லை. நேரம் கிடைக்கும் போது கண்டிப்பா எங்களுக்கு இத மாதிரி நிறைய சொல்லிக்கொண்டே இருங்கள். நன்றி.

சரவணன் said...

வணக்கம் ரிஷி சார்....உங்க நண்பர் சொன்ன விசியம் புதுசான அணுகுமுறை... நிச்சியமா, தியானம் - யோகம் - ஒருமுக படுத்துதல் - பிரார்த்தனை செய்ய செய்ய நம்மோட அணுவினும் அணுவான மூலக்கூறுகளை நாமளா தெரியாம சரி செய்றோம். அதே மூலக்கூறுகள் இன்னொரு வடிவமா நம்ம குழந்தை வடிவுல வரும் பொழுது செழுமையா வரும் (ஆனா அதை பாதூகாக்கமா விட்டுர்றோம்). அப்புறும் இன்னொரு விசியம் சொன்னதுல...நம்ம முன்னோர்கள் நம்மள ஆன்மாவா இருந்து பார்த்துட்டு வராங்கன்னு சொல்லும் போது... நாம தப்பு செய்யவே தோணாது (Because we'll be aware that someone of us watching us while doing injustice)... நம்மளோட ஆன்மாவை தேடறது தானே ஆன்மிகம்...with warm regards..Saravanan.K.S

Satyanarayanan Venkataraman said...

Mythra mugurtham is not updated after April 2014. So many friends is get good things in the life. Please update this and to help so many people

Jayaa Velmani said...

please write an article per week compulsory to improve ourselves

NAHARANI said...

Halo rishi sir it is timely needy article ...tnx naharani

vijayalakshmipadmanathan said...

hello sir , we all are waiting for ur new post

bkarthikeyan said...

Almost one year no posts Rishi sir... We are expecting more from you like rightmantra, aanmigakadal, aanmigam.blogspot, enganesan, sithanarul, etc etc

dilip said...

This article gives a good message.....thanks for sharing Rishi sir

AXian said...

Rishi Sir,

Seekiram Thirumbi vareenu sonnenga.......please sir...seekiram vanga......
We are missing you a lot.
pleaseee.....come back......
We are waiting for you.

Thanks

Regards
Uday

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com