Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

வாழ்வில் மிக மேலான உண்மை எது ?

| Feb 4, 2014
ரொம்ப நாளா நம்ம தளத்துலே உங்க முத்திரை பதிவு எழுதவே இல்லையே, அடிக்கடி எழுதுங்க சார், என்று ஏராளமான அன்புக் கட்டளைகள். (முத்திரைப் பதிவுன்னா ? ) ஊர் , உலகத்துல மத்தவங்க சொல்லாததையா புதுசா சொல்லிடப் போறோம் - அட, போங்க பாஸ் ...!

முன்னைவிட இப்போ எல்லாம் கொஞ்சம் பிஸியாகிட்டேன். ஆனா வாய்ப்பு கிடைக்கிறப்போ நிச்சயம் எழுதணும். நம்ம கட்டுரையை எவ்வளவு பேர் எதிர் பார்ப்பாங்க ! இதுவேற அப்பப்போ தோணும்...(கொஞ்சம் ஓவரா போறேனோ !)

 பிஸின்னு எல்லாம் இல்லீங்கண்ணா , சோம்பேறித்தனம் முக்கியமா....  அப்புறம், எழுதி என்ன பண்ணப் போறோம், இதோ இருக்கிறாரே இவரு பெரிய எழுத்தாளர்னு நாலு பேர் சொல்றப்போ , நமக்கு ஒன்னும் கிர்ர்ன்னு போதை ஏறப்போறது இல்லை. படிச்சு , முடிச்ச பிறகு - நீங்க  உங்க வேலையை பார்க்கப் போறீங்க. நான் என் வேலையை பார்க்கப் போறேன்... நம்ம சொல்லியா ஜனங்க திருந்தப் போறாங்க... யாரும் , யார்  சொல்லியும் திருந்தப் போறது இல்லை... இது வந்து கொஞ்சம் உங்களை சிந்திக்க வைக்கிற முயற்சி .... அவ்வளவே. அதுக்கு அப்புறம் உங்க கையிலேதான் இருக்கு...

சரி, எழுதலாம். நாம படிச்ச , உணர்ந்து கொண்ட விஷயங்களை பகிர்ந்துக்கலாம். ஆனா உருப்படியா ஒரு விஷயம் எழுதணும் - னு  கொஞ்சம் கிறுக்குவோம்...!  படிங்க..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க..!
=======================================================================


இதோ பாருங்கள், நாம் அனைவரும் இறந்துவிடுவோம் இந்த உண்மையை எப்போதும் உங்கள் மனத்தில் கொள்ளுங்கள். அப்போது மட்டுமே உங்கள் மனத்திலிருந்து அற்பத்தனம் விலகும்; செயல்திறன் உருவாகும்; உடலும் உள்ளமும் புத்தெழுச்சி பெறும்! உங்களுடன் தொடர்பு கொள்பவர்களும் தாங்கள் நன்மை அடைந்ததாகக் கருதுவார்கள்....... (சுவாமி விவேகானந்தர் )

போட்டி, பொறாமை , பிடிவாதம் , கோபம் எல்லாம் எதற்கு? அதனால ஏதாவது பிரயோஜனம் இருக்கா?  வேளை வந்துவிட்டால் ஒரே நொடியில் நமது உயிர் இந்த உடம்பை விட்டு சிட்டாகப் பறந்துவிடும்........  அப்படி இருக்கும்போது வெறும் தேக சுகம் மட்டும் எண்ணி இருப்பதால், என்ன கிடைக்கப் போகிறது? கொஞ்ச நாளைக்கோ , கொஞ்ச வருஷங்களுக்கோ - நம்ம ஆத்மா வாடகைக்கு எடுத்திட்டு வாங்கி வந்த உடம்புதான் இது...! இந்த உடம்பு இல்லை நீங்கள்..!  நீங்கள் இன்னும் பல படி உயர்ந்த ஆத்மா..! உங்களுக்கு அழிவே இல்லை... இன்னும் மேலே மேலே வளரப்போற ஆத்மா.. அந்த கடவுளாகவே ஆகப்போகிற ஆத்மா...! நம்மை உணர்ந்து , நம்மை அடுத்த லெவெலுக்கு எடுத்துச் செல்வது முக்கியம்...!

உலகம் , வேகமாக முன்னேறிக் கொண்டு இருக்கிறது. நம்ம கண்ணு முன்னாலே , பக்கத்து வீட்டுக்காரன் பல மடங்கு முன்னேறி இருக்கிறான் பாருங்க...! அது மாதிரி...! நம்ம நம்மளை உணராம இருந்தோம்னா , இன்னும் பல ஜென்மத்துக்கு இதே மாதிரி கஷ்டப்பட்டுக்கிட்டு , ஆசா பாசங்களில் உழண்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான்...!

அட, இந்த உடம்பு நமக்கு சொந்தமில்லைன்னு - அதுக்காக என்ன வேணும்னாலும் பண்ண கூடாது. சிகரெட் பிடிக்கிறது, சரக்கு அடிக்கிறது , கறி சாப்பிடறது எல்லாமே, உங்களுக்கு நீங்களே வைச்சுக்கிற ஆப்பு...!
அடுத்த ஜென்மம் இல்லை , இந்த ஜென்மத்துலே கூட - கை,கால் வலி, வாதம்ன்னு வந்து , கடைசி காலத்துலே ரத்தக் கண்ணீர் MR ராதா ரேஞ்சுல பினாத்திக்கிட்டு இருக்க வேண்டியதுதான்...! இப்போ நம்ம உடம்பை எப்படி நல்லபடியா  வைசுக்கிறோமோ , அதற்க்கேற்ப அடுத்த ஜென்மத்துல இன்னும் நல்ல உடம்பு கிடைக்கும். உடம்பு நல்லபடியா , நீங்க நேசிக்கிற அளவு இருந்திட்டா , மனசு ஆரோக்கியம் ஆகும். மனசு வலுப்பட எண்ணங்கள் தெளிவாகும். செயல்கள் உருப்படியா இருக்கும். உப்பு, புளி , காரம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா குறைச்சா, உங்க உடம்புலே கிடைக்குமே ஒரு மாற்றம்...! நீங்களே வாவ்ன்னு ... உங்களுக்கு சபாஷ் போட்டுக்கலாம்..!

அடச்சே...நாமளா இந்த சிக்கன் 65, மட்டன் சுக்கா சாப்பிட்டோம்ன்னு தோணும்?
=====================================================================

என்கூட பழகுறவங்க சில பேரு, சார், கறி - மீன் மட்டும் அவாய்ட் பண்ண முடியலை சார்னு சொல்வாங்க...! சின்ன வயசுல இருந்தே நாக்கு அந்த ருசிக்கு பழகி , விட முடியலை சார்.....! நம் வாசகர்களிடத்தும் இதே எண்ணம் தோன்றலாம்...! அவங்களுக்கு நான் ஒரு வழி சொல்லி இருக்கேன்...! Try yourself too..!

நீங்க சிக்கனோ, மட்டனோ, மீனோ சாப்பிடனும்னு நினைச்சா... வெளியிலே , ஹோட்டலில் .சாப்பிடாதீங்க..! உங்க வீட்டிலேயே சாப்பிடுங்க... ! வெளியிலே சுகாதாரம் இருக்காது. என்ன மசாலா , கலர் பொடி கலக்குறாங்களோ..?
உங்க வீட்டிலே சமைச்சு சாப்பிடுங்க...! ஆனா கறி - நீங்க சுத்தம் பண்ணி , உங்க வீட்டு அம்மா கிட்ட கொடுங்க..! ( இதைத்தானே பண்றோம்..!)- அது மட்டும் போதாது....! ஆடோ -கோழியோ  நீங்க உங்க கையாலே அதை கொன்னு , கறி சுத்தம் பண்ணணும் ....! நீங்க கொல்லும்போது அந்த கோழியோ, ஆடோ - கோக் கோக் கோக் னோ - அல்லது மெஹ்ஹ் மெஹ்ஹ் னு - சந்தோஷ கூச்சல் போடுமே .... கண்ணில காதலோட , நம்ம வளர்த்த முதலாளி அடடா... உங்களுக்காக உசிரையே கொடுக்கிறோம்னு கண்ணிலே பேசுமே...! அந்த உணர்வை ரசித்து , அதன் பின் சாப்பிடுங்கள்...!

உங்க வீட்டில வாங்கி , நீங்க ஆடு வளர்க்கணும் ...... அது பசிக்கிறப்போ , அதுக்கு புல்லு எல்லாம் கொடுத்து, ஒய்வு நேரத்துல அதை மேய்ச்சல்க்கு எல்லாம் கூட்டிப் போகணும்... வீட்டுலே ஒரு புள்ளை மாதிரி வளரும்...! அதை உங்க கையாலே வெட்டி - அதுக்குப் பிறகு சாப்பிடுங்க..!

எங்க ஊர்லே wine shop பக்கத்துல சிக்கன் போடுறவர் வீட்டுப் பையன் ஒருவன் சுத்த சைவம்....! வீட்டுல வளர்த்த ஆட்டை சாமிக்கு பலி கொடுக்கிறோம்ன்னு , அந்த பையன் கண்ணு முன்னாலேயே வெட்டி, அதை சமைச்சு - சாப்பிடுன்னு  சொல்ல,அன்னைக்கு விட்டவன்தான் ....! ச்சே மனுஷங்களாடா நீங்க, நம்ம கூட ஒரு தம்பி மாதிரி வளர்ந்துச்சே யா..! ன்னு அன்னைக்கு விட்டது தான்...! "ச்சே, பாவம் சார் .... கறி சாப்பிடக்கூடாது சார்...!" ன்னு அந்த சின்ன பையன் சொல்றது, எத்தனை பேருக்கு புரியப் போகுதோ...?

=================================================================

நம்ம உயிருக்கே ஒரு உத்தரவாதம் இல்லே...! இதுல அடுத்த உயிரை பறிச்சு , ஒரு குற்ற உணர்ச்சி கூட இல்லாமே... கூசாம இருக்கோம். இவ்வளவு தப்பு பண்ணிட்டு , கடவுளே என்னை மட்டும் ஏன் இந்த அளவுக்கு சோதிக்கிறேயேன்னு கதறுறோம்..! உயிர் ஜனித்து இருப்பதே,  அந்த ஆதி மூலத்தின் அருள் பெற்று அவனை அடையத்தானே...!

நம்ம கூடப் பிறந்தவங்களும், நமக்கு அடுத்துப் பிறந்தவங்களும் , நமக்கு முன்னே பிறந்தவங்களும் எல்லோருமே மரணம் எய்துகின்றனர்.மரணம் சாஸ்வதம்... ! நடக்கப்போகிற நிஜம்...! இடையிலே எதுக்கு இவ்வளவு ஆட்டம், அகந்தை, ஆணவம்....?
 ======================================================================
அப்புறமா, உய் ன்னு விசில் அடிக்க வேண்டிய ஒரு விஷயம்.  சிகெரெட் பிடிக்கிறதால என்ன ஆகும்னு சமீபத்துல ஒரு விளம்பரம் வருது , deadly கான்செப்ட்....! பார்த்தா உண்மையிலே பதறுது....! இப்போ உள்ளே போற புகை, நிக்கோடின் மூச்சுக் குழலை சுத்தமா அடைக்குதுன்னு, கொஞ்சம் அருவருப்பாவே காட்டுறாங்க....! மலை ஏறும்போது , மூச்சு வாங்கும் பாருங்க...! smokers க்கு கொஞ்சம் அதிகமாவே இருக்கும்.... ! மண்ணு திங்கப் போற உடல் தானேன்னு நினைக்காதீங்கண்ணே.... ! எல்லோரும் தான் போகப் போறோம்...! நோய் நொடியில ஏன் போகணும்...?
=====================================================================
சுவாமி விவேகானந்தர் சொல்வதை மேலும் கேட்போம்...!

மரணத்தைப்பற்றி நினைப்பதால் மனம் உடைந்து சோகம் உண்டாகாதா?

உண்டாகும். முதலில் மனமுடைந்து சோகமும் துயர எண்ணங்களும் எழத்தான் செய்யும். சில நாட்கள் அப்படியே கழியட்டும். பின்னர் இதயத்தில் புதிய வலிமை புகுவதைக் காண்பீர்கள். எப்போதும் மரணத்தைப்பற்றி நினைப்பது உங்களுக்கு ஒரு புதிய வாழ்வைத் தந்து உங்களை மேன்மேலும் சிந்திக்கத் தூண்டுகிறது; வெறுமை, வெறுமை அனைத்தும் வெறுமை என்பதன் உண்மையை உங்கள் கண்முன் ஒவ்வொரு கணமும் கொண்டுவருகிறது.

நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் கடந்து செல்லட்டும். உங்கள் ஆன்மா சிங்கத்தின் வலிமையுடன் விழித்தெழுவதைக் காண்பீர்கள். உள்ளேயிருந்த சிறிய ஆற்றல், பேராற்றலாக மாறுவதை உணர்வீர்கள். எப்போதும் மரணத்தை நினையுங்கள்.

நம்மோட இந்து மதம் என்ன சொல்கிறது தெரியுமா?

மரணத்திற்குப்பிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர்; சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப்பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்.
உயிர்கள் பல்வேறு பிறவிகளை எடுத்து கடைசியில் நிறைநிலையை அடைகின்றன என்பது மறுபிறவிக் கோட்பாடு.

வாழும் காலத்தில் எத்தகைய செயல்களைச் செய்கிறோமோ, என்னென்ன அனுபவங்களைப் பெறுகிறோமோ அதற்கேற்ப அடுத்த பிறவி வாய்க்கிறது. சாதாரணமாக வாழ்கின்ற ஒருவன் மீண்டும் மனிதப் பிறவியைப் பெறுகின்றான். ஏராளமாக நற்செயல்கள் செய்பவன் அதிக புண்ணியம் பெற்று தேவலோகத்தில் வாழ்கிறான். தீமைகள் செய்பவன் மிருகங்களாக தாவரமாகப் பிறக்கிறான்.

எனவே எதைச் செய்கிறோம் என்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். எத்தகைய எண்ணங்களை நம் மனத்தில் நினைக்கிறோம் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் எண்ணங்களே செயலாக உருவெடுக்கின்றன. செயலும் அனுபவமும், அவற்றிற்கேற்ப அடுத்த பிறவியும் உயர்வானதாக அமையும்.

நம்மோட புனித நூல் எது? பகவத் கீதை. வேதங்கள், உபநிடதங்கள், ஆரண்யங்கள் , இதிகாசங்கள்... எல்லாம் நம்மோட வாழ்வை பக்குவப்படுத்த , நம் முன்னோர்கள் அளித்த கொடைகள்...! இதைப் பற்றி கொஞ்சமாவது தெரிஞ்சு வைச்சு இருக்கோமா? பள்ளிக் கூடத்தில எதையோ படிச்சு, காலேஜ்ல எதையோ படிச்சு - படிச்சதுக்கு சம்பந்தமே இல்லாம , ஒரு வேலை செஞ்சுக்கிட்டு - என்ன பண்றோம், எப்படி வாழணும்னே தெரியாமே ..... திடீர்னு செத்துப் போய் ........ திரும்ப இதே மாதிரி , ஏன், இதைவிட கேவலமா ஒரு வாழ்க்கை வாழப் போகிறோமா? சரி , இவைகளை பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்குவோமா ? ஒரு பழைய ராமகிருஷ்ண மிஷன் வெளியீட்டு புத்தகம் ஒன்றில் உள்ள தகவலை தருகிறேன்.....!

வேதங்கள்: உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது பாரதத் திருநாடு ஆன்மஒளியில் விழித்தெழுந்தது. அதன் தவப் புதல்வர்களாகிய ரிஷிகள், இருளைக் கடந்து, "பொன்னிறத்தில் ஒளிரும் மாபெரும் இறைவனை நான் அறிந்துகொண்டேன். அவரை அறிவதால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும். வேறு எந்த வழியும் இல்லை. அழியாத அமரத்துவத்தின் குழந்தைகளே, கேளுங்கள்" என்று பூமியில் வாழ்பவர்களை மட்டுமல்ல, பிற உலகங்களில் வாழ்வோரையும் அறை கூவினர். குறித்து வைக்கப்பட்ட சரித்திரமோ, பாரம்பரியத்தின் மங்கிய வெளிச்சமோகூட ஊடுருவ முடியாத, காலத்தின் அந்த நீண்ட நெடுந்தொலைவில் இந்த உலகை புனிதமாக்கியபடி வாழ்ந்த அந்த ரிஷிகள் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள்.

உலகிலேயே மிகப்பழைய நூல் இந்த சிந்தனைக் கருவூலம்தான். இது எப்போது தோன்றியது என்பது ஒருவருக்கும் தெரியாது. இக்கால ஆராய்ச்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இது எட்டாயிரம் அல்லது ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றியதாக இருக்கலாம்.........ஆனால் அன்று போலவே இன்றும் அவை புதுமை மாறாமல் இருக்கின்றன; ஏன் முன்னைவிட புதுப் பொலிவுடன் திகழ்வதாகவே கூறலாம்.

வேதங்கள் யாராலும் எழுதப்பட்டவை அல்ல. என்றென்றும் நின்று நிலவுகின்ற உண்மைகளின் தொகுப்பே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது. மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் இருக்கும். அவ்வாறுதான் ஆன்மீக உலகின் விதிகளும்........அவை கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்னரும் இருந்தன, நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும்  என்று எழுதுகிறார் சுவாமி விவேகானந்தர், ரிஷிகள் அந்த விதிகளை வெளிப்படுத்தினார்கள், அவ்வளவுதான்.
========================================================================

கடோபநிஷத் என்று ஒரு உபநிஷத் இருக்கிறது. மரணத்திற்குப் பின்னால் என்ன என்பதை - அக்கு வேறு , ஆணி வேறாக பிரித்து மேய்ந்து இருக்கிறார்கள்....!  படித்துப் பாருங்கள்... இது எல்லாம் - கப்சா, புரூடா இல்லை... நம்பிக்கையோடு படித்துப் பாருங்கள்....! நிச்சயம் உங்களை புரட்டிப் போட்டு விடும்.....! பொட்டில் அடித்தால் போல பல சிந்தனைகளை தூண்டும்....!
நம்ம பதிவு வரவில்லையே என்று நினைப்பவர்கள் , கொஞ்சம் உபநிஷத்துக்கள் பக்கம் உங்கள் பார்வையை திருப்புங்கள்...., அப்புறம் உங்களுக்கு நேர விரயம் நிச்சயம் ஆகாது....!! மிகச் சரியான ஒரு பாதையில், உங்கள் பயணம் தொடரும்....! எனக்கும் அதைப் பற்றி, நான் அறிந்தவரையில் சுருக்கமாக ஒரு கட்டுரை எழுத ஆசை தான்....! பார்க்கலாம், இறைவன் சித்தம்...!

 சரி, மீண்டும் சிந்திப்போம்...!

வணக்கத்துடன்,

ரிஷி....................

வாழ்க அறமுடன்! வளர்க அருளுடன்!

18 comments:

KUMARAN BALURAMDOSS said...

Respected Sir,

Ungalin Aanmiga Payanathil Engalaiyum(Family) kai korthu Kollungal. Already we are stoped Non-Veg,etc., and reading kata upanishath(thro-Dinamalar -kovilkal pages, lot of informations towards devotion and lifethings to up).

Ungaling Saliyatha Thondu Thodara Annamalaiyai Vendum Anbu Ullam...,

kumaran-riyadh

Ramasubramanian said...

Great message for all of us. Thanks JII, please do write more articles like this, since in the world, very few people can write and can inspire more people, with God's grace you are having that art of inspiring writings. Om Namashivaya!!

Ramasubramanian said...

Thanks so much JII, Good message. Please do write more articles.

Om Namashivaya

INDIAN MARKET ANALYSER said...

ரிஷி ஜி,,
அருமையான பதிவு ,,,,,,,,,,

Ganesh said...

good one!

sivakumar said...

கொஞ்சம் உபநிஷத்துக்கள் பக்கம் உங்கள் பார்வையை திருப்புங்கள்...., அப்புறம் உங்களுக்கு நேர விரயம் நிச்சயம் ஆகாது....!! மிகச் சரியான ஒரு பாதையில், உங்கள் பயணம் தொடரும்....! எனக்கும் அதைப் பற்றி, நான் அறிந்தவரையில் சுருக்கமாக ஒரு கட்டுரை எழுத ஆசை தான்....!

காத்திருக்கிறோம் ... உங்களின் கட்டுரைக்காக !!! THANKS A LOT !

Amuthan Sekar said...

..................................

கடோபநிஷத் என்று ஒரு உபநிஷத் இருக்கிறது. மரணத்திற்குப் பின்னால் என்ன என்பதை - அக்கு வேறு , ஆணி வேறாக பிரித்து மேய்ந்து இருக்கிறார்கள்....! படித்துப் பாருங்கள்... இது எல்லாம் - கப்சா, புரூடா இல்லை... நம்பிக்கையோடு படித்துப் பாருங்கள்....! நிச்சயம் உங்களை புரட்டிப் போட்டு விடும்.....! பொட்டில் அடித்தால் போல பல சிந்தனைகளை தூண்டும்....!

..................................

Thank you very much Rishi. Your articles are very great and True.

If possible, Kindly let us know. where shall we get the கடோபநிஷத் book.

Thanks,
Amuthan Sekar

perumal shivan said...

rishi sir,

pinni pedaleduththittinga en manathai !

UNNAI PADIKKUMPOTHUTHAAN NAANKOODA SINTHIKKA THODANGUGIREN

UNNAI SINTHIKKUMPOTHUTHAAN NAAN KOODA EZHUTHA MUYALGIREN .

neengalum familyum nalama sir? nalamenru nambugiren.

nanri

s.perumal
8144201515
coimbatore(walajapet)

KG P said...

Yes Rishi Sir, Thank you Very much for your valuable post

KG P said...

Thank You Rishi Ji, Eagerly waiting for kado:Upanishad.

k balachandar said...

http://temple.dinamalar.com/news_detail.php?id=9576

Please refer above link.,

thanks,
Regards,

BALA.

Manickame Velu said...

Dear Rishi Sir
Thanks for Your Article
Waiting For More
V.Manickam
Pondicherry

swami m said...

வாரம் ஒரு முறையாவது பதிவிடவும்

அருட்சிவஞான சித்தர் said...

....உயிர் ஜனித்து இருப்பதே, அந்த ஆதி மூலத்தின் அருள் பெற்று அவனை அடையத்தானே...!

Sure... Very Grace words.

Rajeswari Sambandam said...

THANK U LOT FOR YOUR POST

pcram5356 said...

நம்ம உயிருக்கே ஒரு உத்தரவாதம் இல்லே...! இதுல அடுத்த உயிரை பறிச்சு , ஒரு குற்ற உணர்ச்சி கூட இல்லாமே... கூசாம இருக்கோம். இவ்வளவு தப்பு பண்ணிட்டு , கடவுளே என்னை மட்டும் ஏன் இந்த அளவுக்கு சோதிக்கிறேயேன்னு கதறுறோம்..! உயிர் ஜனித்து இருப்பதே, அந்த ஆதி மூலத்தின் அருள் பெற்று அவனை அடையத்தானே...!

என் நெஞ்சை நெகிழ வைத்த வரிகள். தொடரட்டும் தங்களின் சிந்தனையை தூண்டும் பதிவுகள்.
நன்றி வணக்கம். வாழ்க வளமுடன்

ananth said...

Good one Ji

AhamBirumaasmi

SayeePrackash said...

Really a thought provoking article. keep it up and god bless you all.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com