Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

காசி ! (Article on Special yaagam 2013-2014)

| Oct 25, 2013
மதிப்பிற்குரிய அன்பு வாசக நண்பர்களுக்கு வணக்கம். இந்த வருட தொடக்கத்தில் நம் வாசகர்கள் பெருமளவு பங்கு பெற்ற " ருண, ரோக , சத்ரு - நாசன" யாகம் உங்கள் அனைவர்க்கும் நினைவில் இருக்கும் என்று நம்புகிறேன். அந்த யாகத்தின் பயனால் பலன் அடைந்த சில நண்பர்கள், இந்த வருடத்தில் யாகம் எப்போது - இந்தவருடமும் பங்கு கொள்ள வேண்டும் என்று விரும்பி  மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்கள். 

(சென்ற வருடம் - யாகம் தொடர்பான நமது பழைய கட்டுரையை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.)

இந்த யாகத்தை நடத்திய சக்தி உபாசகர் ஐயா அவர்கள் - இந்த வருடம் தீபாவளி முடிந்த பிறகு (03.11.2013) அன்று -  லோக மாதாவின் சக்தி ஸ்தலங்களை தரிசனம் செய்ய விரும்பி ஒரு நீண்ட தீர்த்த யாத்திரை மேற்கொள்ளவிருக்கிறார். திரும்பி வருவதற்கு பல நாட்களாகும் மாசி மாதம் பிறந்த பிறகுதான் தென்னகம் திரும்புவதாக கூறியிருக்கிறார்.


நமது இந்த யாகம் பற்றி கேட்டதற்கு - சென்ற மார்கழி மாதம் செய்ததைப் போன்று இந்த வருடம் யாகம் வளர்த்து செய்ய முடியாதென்றும், ஆனால் தினமும் - சிறிய அளவில் ஹோமம் வளர்த்து, ஆத்மார்த்தமாக அம்மனை வேண்ட இருப்பதாகவும் கூறினார். சென்ற வருடம் யாகம் நடந்த அந்த ஒரு மண்டல காலத்திற்கும், இந்த வருட கால கட்டத்தில் காசியில் தங்கி இருக்கப் போவதாக கூறியுள்ளார். 

அன்னை விசாலாட்சியாகவும், அன்ன பூரணியாகவும் - அப்பன் விஸ்வநாதராகவும் , மகா காலபைரவராகவும் -  முழு சக்தியுடன் அருள் புரிந்து கொண்டு இருக்கும் - புண்ணிய பூமியாம் காசி ஷேத்திரத்தில் இந்த வருடத்தில் 22.12.2013 அன்று தொடங்கி 07.02.2014 வரை தினமும் - தன்னலம் கருதா பொதுநல நோக்குடன் இந்த ஸ்பெஷல் ஹோமம் நடைபெற விருக்கிறது.

யாத்திரை தொடங்கி , முடியும் வரை மற்றும் தேவையும் தகுதியும் உள்ள துறவிகளுக்கு அன்னதானம், வஸ்திர தானம், மண்டல ஹோமம்  உட்பட மொத்த செலவிற்கும் - ஐயா அவர்களின் நெருங்கிய நட்பு வட்டத்தில் உள்ள தொழிலதிபர் ஒருவரும், என்னைப் போன்ற இன்னும் சில நண்பர்களும் பொறுப்பேற்றிருக்கிறோம்.


வாசகர்கள் - சென்ற வருடம் செய்தது போலவே ,உங்கள் பெயர் , குலம் / கோத்திரம் (தெரிந்தால் குறிப்பிடவும்). பிறந்த நட்சத்திரம், முகவரி , முக்கியமான கோரிக்கை விவரங்களுடன் - மின்னஞ்சல் செய்யலாம்
( மெயில் ID  : Editor@livingextra.com ) - ஒவ்வொரு நாளும் ஹோமத்தின்போது சங்கல்பம் செய்கையில் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற பிரார்த்தனை செய்யப்படும். உங்கள் மின்னஞ்சல் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 02.11.2013 மதியம் இரண்டு மணிக்குள். அதன் பிறகு வருபவற்றை , ஐயா அவர்களிடம் சேர்ப்பிப்பது எனக்கு சற்று சிரமம்.
=========================================


சென்ற முறை - நம்மிடம் கோரிக்கை அனுப்பியிருந்த  வாசகர்கள் எல்லோருக்காகவும் தொடர்ந்து பிரார்த்தனை செய்யவிருப்பதாக கூறினார். 

சென்ற வருடத்தில் யாகத்திற்கு நன்கொடை அளித்ததைப் போன்று இந்த வருடம் எதுவும் தேவைப்படாது  என்றும், அன்னையின் அருள் கடாட்சத்தால் ஒரு குறையும் இல்லை என்றும் கூறிஇருக்கிறார்.

இருந்தாலும், இந்த புண்ணிய கைங்கரியத்தில் தங்கள் பங்களிப்பு இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள், உங்கள் பிரச்னைகளுக்கு இந்த யாகத்தின் மூலம் தீர்வு கிடைக்கும் என்று உளமார நம்புபவர்கள்  - தங்களால் இயன்ற காணிக்கையை, யாகம் தொடர்பாக நான் கடந்த முறை அளித்து இருந்த வங்கி எண்ணிற்கு - பரிவர்த்தனை செய்யலாம்.

கடந்த வருடம் பணம் அனுப்பி , இன்னும் முக்கிய கோரிக்கைகள் நிறைவேறாமல் இருப்பவர்கள், மீண்டும் அனுப்ப வேண்டாம். உங்கள் பிரார்த்தனை நிறைவேற, அன்னை அருள் புரிய - விசேஷ பிரார்த்தனைகள் தொடர்ந்து நடைபெறும்.

கடந்த வருட யாகத்தின் பயனால் - உங்கள் வாழ்வில் ஒரு மலர்ச்சி ஏற்பட்டு, தொடர்ந்து நலமும், முன்னேற்றமும் வேண்டும் என்று நம்பிக்கையுடன் நினைப்பவர்கள் - இந்த வருடமும் தொடர்ந்து அனுப்பலாம். பணம் அனுப்பும் அன்பர்கள் தயவு செய்து 02.11.2013 ஆம் தேதிக்கு மேல் அனுப்ப வேண்டாம். பணம் அனுப்புபவர்கள் தங்கள் விவரங்களை குறிப்பிட்டு மறக்காமல் , மெயில் செய்யவும்.


சென்ற வருடம் போலவே - யாகம் நடைபெறும் 48 நாட்களிலும் - அசைவம் தவிர்த்து, மனது சுத்தமாக ,  நம்பிக்கையுடன் இறையை வேண்டுங்கள். உங்கள் கோரிக்கை நிச்சயம் நிறைவேறும். இது மிகவும் பலம் பொருந்திய காலம். நம்புங்கள். நிச்சயம் நடக்கும்.

ஏற்கனவே நிறைய வாசகர்கள் , யாகத்தின் பயனால் சில நல்ல சம்பவங்கள் நடந்ததை சந்தோஷத்துடனும் , பரவசத்துடனும் தெரிவித்து இருந்தனர். அதே போன்று, இந்த வருடமும் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறியதும், உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சியடைவேன். 
 
மேலும் ஐயா அவர்களிடம் பேசியபோது - அவரே முன்னின்று பூஜை  செய்யவிருப்பது, அனேகமாக இந்த வருடம் தான் கடைசியாக இருக்கும் என்பதை சூசகமாக உணரமுடிந்தது. அடுத்த வருடம் அவரது மேற்பார்வையில், அனேகமாக இன்னொருவர் செய்வார் என்று நினைக்கிறேன்.

வாசகர்கள் இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ளலாம்..! இந்த பதிவை தாமதமாக படிக்க நேரிட்டால், அதற்காக வருந்தவேண்டாம்...! மனமார அன்னையை வேண்டி அருகில் இருக்கும் ஆலயத்தில் ஒரு பதினோரு ரூபாயை உண்டியலில் செலுத்திவிட்டு , பிரார்த்தனை செய்து விட்டு வாருங்கள்...! விரைவில் நல்லது நடக்கும்!

===============================================

சரி, காசி பற்றி உங்களுக்கு பல தகவல்கள் தெரிந்து இருக்கும். இருந்தாலும் எனக்கு தெரிஞ்ச ஒன்னு ரெண்டு விஷயத்தை சொல்றேன்... உங்களுக்குத் தெரியுமா பாருங்க!

(1) காசி நகரில் - 
இதுவரை மேலே கருடன் பறந்ததை பார்த்தவர்கள் கிடையாது.
(2) காசி நகரில் - என்னதான் வாசனை மிக்க பூச் செடிகளை நட்டு வளர்த்தாலும் , அதில் மலரும் பூக்களுக்கு மணம் என்பது அறவே இருக்காது.
(3) மேலே உயர இருந்து PICTORAIL VIEW வில் பார்த்தால் - காசி நகரமே, எம்பெருமான் சிரசில் சூடி இருக்கும் சந்திரனின் பிறை வடிவம் போன்று இருக்கிறதாம்.
(4) மாடுகள் சர்வ சாதாரணமாக திரியும் வீதிகளில், யாரையும் மாடு முட்டுவதில்லை.

இதெல்லாம் பார்த்தா, எதோ ஒரு காரணம் இருக்கும் என்பது புரிகிறதா? புராணங்கள் கூறிய எல்லா தகவல்களும் வெறும் கதை இல்லை சார்...! ஏதோ விஷயம் இருக்குது ...! முன்னோர்கள் காசிக்கு அவசியம் ஒருதடவையாவது போயிட்டு வரணும்னு ஏன் சொல்லி இருக்கிறாங்கன்னு தெரியலை...! ஆனா சர்வ நிச்சயமா வெறுமனே பிக்னிக்  மாதிரி / டூர் மாதிரி போயிட்டு வர மட்டும் இருக்காதுன்னு நம்புகிறேன்..!

வீட்டுல வயசான அம்மா / அப்பா / பாட்டி / தாத்தா இருந்தால் - அவர்கள் பயணம் செய்யும் அளவுக்கு உடல் ஒத்துழைத்தால் - அவசியம் ஒருமுறை அவர்களை காசிக்கு கூட்டிச் சென்று வாருங்கள் ...! இதை விட நீங்கள் அவர்களுக்கு செய்ய வேண்டிய பெரிய உதவி  எதுவும் இல்லை..! அவர்கள் வாழ்த்துவதே போதும்! நீங்கள் பெருமையுடன் உங்கள் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்..! 


சரி, மீண்டும் சந்திப்போம்....! 

வாழ்க அறமுடன் ! வளர்க அருளுடன்!

ரிஷி.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com