Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

புண்ணியம் சேர்க்கிறதில என்ன சார் பிரயோஜனம்.?

| Nov 5, 2013
அன்பு நண்பர்களுக்குமீண்டும் ஒருமுறை  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

யாகத்தில் சங்கல்பம் செய்வதற்காக வந்திருந்த கோரிக்கைகளையும், யாகத்திற்கு நமது வாசகர்கள் அளித்துள்ள நன்கொடையையும் -(நவம்பர் 1ஆம் தேதி வரை வந்தவற்றை) , ஐயா அவர்களிடம் சேர்ப்பித்து விட்டேன். அதன்பிறகு வந்த மெயில் கோரிக்கைகளையும், சிலர் நேற்றைய தேதியில் நன்கொடை அனுப்பித்து இருந்தனர் - அவற்றையும் இந்த வார ஞாயிற்று கிழமைக்குள் சேர்த்துவிடுகிறேன். இதன்பிறகு நன்கொடை அனுப்புபவர்கள் , தயவு செய்து அனுப்ப வேண்டாம். அவற்றை ஐயா அவர்களிடம் சேர்ப்பதில் எனக்கு கொஞ்சம் சிரமம். நீங்கள் அனுப்பும் நன்கொடை இங்கு முக்கியமில்லை.பணத்தை விட ஆத்மார்த்தமான பக்தி இருந்தால் போதும்.
கோரிக்கைகளை அனுப்பத் தவறியவர்கள் மட்டும், இந்த வார சனிக்கிழமைக்குள் அனுப்பி வைக்கவும். கண்டிப்பாக லிஸ்ட்டில் இணைக்கப்படும்.


Rush your mail request by 9th Nov. It's a rare chance & who knows we will get a chance again for next year....

சென்ற முறை யாகத்தில் கலந்துகொண்டு பயன் பெற்றவர்கள் , சிலர் தங்கள் பரவச அனுபவத்தை, நீண்ட நாள் வேண்டுதல் சில மாதங்களிலேயே நிறைவேறிய அதிசயத்தை பகிர்ந்துகொண்டனர். அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி...!
கோரிக்கைகள் அனுப்பிய அனைவருக்கும் நானும் தனிப்பட்ட முறையில், மனப்பூர்வமாக அண்ணாமலையாரை பிரார்த்திக்க விருக்கிறேன்..!
நம்பிக்கையுடன் இருங்கள்.... உங்கள் நியாயமான கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும்.

=================================================

NIFTY TRADING சம்பந்தப்பட்ட தகவல்களை , தனியே ஒரு ப்ளாக் தொடங்கி,  அங்கே அவற்றை பதிவிட முடிவு செய்துள்ளேன். நமது இந்த தளத்தில் TRADING சம்பந்தப்பட்ட தகவல்கள் இனிமேல் வராது. நமது நீண்ட நாள் ஆன்மீக வாசகர்களுக்கு இடையூறாக இருக்கவேண்டாம் என நினைக்கிறேன்.

BLOG ஆரம்பிக்கும் வரை - E Mail - மூலம் தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படும். தகவல்கள் தேவைப்படுவோர், உங்கள் மின்னஞ்சலிலிருந்து ( editor@livingextra.com   ) என்கிற முகவரிக்கு  TEST MAIL அனுப்பவும். சப்ஜெக்ட் இல் TRADING TIPS என எழுதி அனுப்பவும்...உங்கள் மின்னஞ்சல் முகவரி , குரூப் மெயிலில் இணைக்கப்பட்டு தொடர்ந்து தகவல்கள் உங்கள் ID க்கு அனுப்பப்படும்.
================================================

சமீபத்தில் ஒரு வாரமலர் பகுதியில் ஒரு அருமையான தகவல் படிக்க வாய்ப்பு கிடைத்தது.  திரு.வைரம் ராஜகோபால் அவர்கள் எழுதிய கட்டுரை. இதைப்போன்ற பல கருத்துக்கள் நாம் படித்து , மறந்தும் இருப்போம்.. ....
மீண்டும் ஒருமுறை நம் நெஞ்சத்தில் பதிந்து கொள்ள, நம் வாசகர்களுக்காக இங்கே பதிவிடுகிறேன்..! படித்துப் பயன் பெறுங்கள்!


எல்லாரும் சுகமாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார் பகவான்; ஆனால், எல்லாருமே சுகமாக இருக்க முடிவதில்லை. காரணம், அவரவர் கர்மவினைகளுக்குத் தகுந்தபடி தான், வாழ்க்கை அமைகிறது. பூர்வ புண்ணியம் இருந்தால், செல்வம், சுக போகங்களை இந்த ஜென்மாவில் அனுபவிக்கலாம். புண்ணியம் இல்லாவிடில், சிரமப்பட வேண்டியது தான்; பணக்காரனை பார்த்து, பெருமூச்சு விட வேண்டியது தான்.

ஆயிரம் பேருக்கு, இலவசமாக சாப்பாடு போடுவதை, "சகஸ்ர போஜனம்' என்பர். ஆயிரத்துக்கும் அதிகமானால் பரவாயில்லை; குறையக் கூடாது. சாப்பாடு என்றால் ஏதோ, "போட்டதை சாப்பிட்டு விட்டு போ...' என்பது மாதிரியல்ல; வயிறு நிறைய சாப்பாடு. பல வித பதார்த்தங்கள், லட்டு, ஜிலேபி, பாயசம், அக்காரவடிசல்... இப்படி ஏகப்பட்ட அயிட்டம், சகஸ்ர போஜனத்தில் உண்டு.


எல்லாரும் சந்தோஷமாக சாப்பிட வருகின்றனர். அதில், ஒருவனுக்கு வயிற்று வலி. ஒரு உருண்டை சாம்பார் சாதம் உள்ளே போனாலே, வயிற்று வலி வந்து விடும். இவனால் எப்படி நன்றாக சாப்பிட முடியும்? மற்றொருவனுக்கு சர்க்கரை வியாதி. இவனால் லட்டு, ஜிலேபி, பாயசம் எதையும் சாப்பிட முடியாது. இவனாலும் ஆசை தீர, வயிறு நிறைய சாப்பிட முடியாது.


அடுத்தவன், உடல் நலமில்லாதவன். நாட்டு மருந்து சாப்பிடுகிறான். பூசணிக்காய், பாகற்காய், மாங்காய், வாயு பதார்த்தங்களை, சாப்பிடக் கூடாது என்பது, வைத்தியரின் உத்தரவு. இவனாலும், திருப்தியாக சாப்பிட முடியாது.


"எல்லாரும், வேண்டியதைக் கேட்டு, திருப்தியாக சாப்பிடுங்கள்' என்றார் சாப்பாடு போடும் அன்பர். ஆனால், அப்படி சாப்பிட முடியாதவர்களும் இருக்கின்றனரல்லவா... இதைப் போலத் தான் பகவான், எல்லாரும் சுகமாக இருக்க வேண்டும் என்று விரும்பி, அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தாலும், இவர்களுடைய தீவினை காரணமாக, சுகத்தைப் பெற முடிவதில்லை. இதற்கு, பகவான் என்ன செய்ய முடியும்?


போனது போகட்டும்... இந்த ஜென்மாவிலாவது, நல்ல காரியங்களை செய்து, புண்ணியத்தை தேடிக் கொள். அடுத்த பிறவியிலாவது செல்வச் செழிப்புடன் சுகமாக இருக்கலாம், என்கின்றனர் தவசீலர்கள். ஆனால், நம்மில் பலருக்கு, பணம் தான் கண்ணுக்குத் தெரிகிறது; புண்ணியம் தெரிவதில்லை. அதனால், கண்ணுக்குத் தெரிந்த பணத்தின் மீது ஆசை!


சேர்த்து சேர்த்து வைத்து, எண்ணி எண்ணி பார்த்து, சந்தோஷப்படுகிறான். புண்ணியத்தை தேடிக் கொள் என்றால்,"போங்க சார்... புண்ணியத்தை எவன் கண்டான்...' என்கின்றனர். ஆனால், கண்ணுக்குத் தெரியாத புண்ணியம் தான் பரலோகத்திலும், அடுத்த பிறவியிலும், கை தூக்கி விடும் என்பதை, புரிந்து கொள்வதில்லை.........


நன்றி: தினமலர் - வாரமலர் Oct 13,2013.

10 comments:

Amuthan Sekar said...

Thank you Rishi...

My advanced best wishes for your new trading related blog.

Thanks,
Amuthan Sekar

Chandira Sekaran said...

பனத்தையும் புன்னியத்தயும் ஒரு சேர கிடைக்கவேண்டும் என நம் வாசகர்கலுக்கு தாங்கல் அலிக்கும் பதிவுகல் போற்றதக்கது..வலர்க உங்கல்
தொண்டு..

KUMARAN BALURAMDOSS said...

Respected Sir,

THANK YOU FOR YOUR ' PUNNIYAM THEDI' Article.

MANITHANUKKU THEVAI MANITHAM,
MANITHATHUKKU THEVAI MANAMUM PANAMUM.

THOSE TWO WILL GET THRO YOUR BLOGS - BY GODS GRACE (THRO YOU)

MUKTHIYUDAN VAALA VAALTHUM ULLAM
kumaran baluramdoss & family - Bangalore.

arul said...

informative post

NAHARANI said...

halo rishi sir best wishes and thanks after long time again came for anmeegam with annamalaiyar blessings..all goes well and what you says are 100% true.. the unvisible puniyam only saves us from much of the present known worldly problems.. Naharani chennai

ramasamymylappan said...

Dear Rishi Sir
Congratulations for your new Nifty Tading Blog.Still now my Trading process is going on.I get every things then I contact you sir.Every day or every week give one post for our wealth and health sir.And please pray for me and my family,relatives for the KASI Special Yaagam.

Thanks & Regards
R.Mylappan.

thangaraaj meenachisundaram said...

Thank you Rishi...

My advanced best wishes for your new trading related blog.meenachisundaram
9976714777

Jothimanikandan N said...

Myself also eagerly awaiting your trading blog

சரவணன் said...

ஹாய் ரிஷி சார், வணக்கம்! மன்னிச்சுடுங்க உங்க பதிப்புகளை என்னால் படிக்க முடியலை. அதனால் என்னால போன முறை பங்கேற்ற மாதிரி இந்த தடவை என்னோட sharing பணத்தை அனுப்ப முடியல. அடுத்த முறைக்காக காத்துட்டு இருக்கேன்.
ஒரு சிலர் சொல்லி கேள்வி பட்டது என்னன்னா... நாம நம்மளை விட தகுதியில இல்ல அந்தஸ்தில இல்ல வேற எந்த விதத்திலயவது குறஞ்சவங்களை போன பிறவியில நாம கொடுமை/ பாவம் செய்திருந்தால் அது அப்படியே இந்த பிறவியில நமக்கு repeat ஆகும்னு. அதுக்கு உதாரணம் ஒரு சம்பவம் கேள்வி பட்டேன். ஒரு நண்பனோட சொந்தகாரங்க அம்மா அவங்களோட வயசான காலத்துல (40 - 50) பசி பசின்னு பசிக்குது ஆனா ஒரு கவளத்தை விழுங்கும் போதே அது வாந்திய வெளியில வந்துருது...அப்போ அவங்க என்ன பாவம் செஞ்சிருந்தால் இப்படி ஒரு கொடுமை அனுபவிசிருப்பங்க? இந்த மாதிரி கேள்வி படும் பொழுது..... ம்ம்ம் safetyயா இரு சரவணா 'ன்னு சொல்லிக்குவேன்.

Sundhar Dhyan said...

it is great to read that new blog for trading. i welcome your idea, all the best.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com