Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

மஹா சிவராத்திரி ! - The Ultimate day for all your successful Endeavours!

| Mar 9, 2013
வாழ்க்கையில் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவரும் தவற விடக்கூடாத நாள் இந்த சிவராத்திரி. என்னதான் நாம் முயற்சி எடுத்தாலும் தெய்வ அனுகூலம் நமக்கில்லாத வரை, அந்த முயற்சிகள் கை கூடுவது அரிது. அந்த அனுகூலத்தை உங்களுக்கும் ஏன் , உங்கள் சந்ததி அனைவருக்கும் கிடைக்கச் செய்யவல்ல அற்புதமான நாள் - இந்த சிவராத்திரி. ஒரே ஒருமுறை சிவனை நினைத்து இந்த விரதம் இருந்து பாருங்கள். நீங்கள் இந்த நாளில் விடாமல் ஜெபிக்க விருக்கும் ஓம் சிவ சிவ ஓம் மந்திரம் - உங்கள் வாழ்க்கை முழுமைக்கும் வளம் சேர்க்க , அண்ணாமலையாரை வேண்டி மனப் பூர்வமாக வாழ்த்துகிறேன்.

நமது வாசக நண்பர் ஒருவர் நெட்டில் இருந்து நமது வாசகர்களுக்காக அனுப்பிய இந்த கட்டுரையை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். படித்துப் பாருங்கள். மேலும் நமது தளத்தில் சிவராத்திரி பற்றி பல தகவல்களை ஏற்கனவே கொடுத்து இருக்கிறேன் இருந்தாலும் இந்த நாளில் நமது பழைய பூர்வ ஜென்மம் பற்றிய கட்டுரையை உங்களுக்கு நினைவு கூற பிரியப்படுகிறேன். படித்துப் பாருங்கள்.

உங்கள் சிந்தனைக்கு விருந்தாக அமையும். சிவனருள் பெறப் போகும் இந்த விரத தினத்தில் - சில வாசகர்களுக்கு பூர்வ ஜென்ம நினைவுகள் தோன்ற விருக்கின்றன. இது நிச்சயம்.
அந்த காரணத்திற்காகவே , இந்த பழைய கட்டுரையை நினைவு படுத்துகிறேன்.அவர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்...

நமது பூர்வஜென்மம் பற்றிய முந்தைய கட்டுரையைப் படிக்க க்ளிக் செய்யவும் :
 
http://www.livingextra.com/2012/02/poorva-jenmam.html

==============================================
நண்பர் அனுப்பியிருந்த கட்டுரை :  

சிவராத்திரி அ‌ன்று விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி சிவசந்நதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது. அவ்வாறு பூஜை மேற்கொண்டு பூஜையைச் செய்து முடிக்க முடியாதவர்கள் கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும் பூஜை‌யி‌ல் கல‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

அன்று முழுவது‌ம் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌க்க வேண்டும். பகலில் உறங்கக்கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

வீ‌ட்டி‌ல் பூஜை செ‌ய்வதாக இரு‌ந்தா‌ல், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையை‌த் துவ‌க்க வே‌ண்டு‌ம்.

ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம்.

சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம். 


பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும். சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா,பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோயிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.

சிவனு‌க்கு செ‌ய்ய‌ப்படு‌ம் அ‌பிஷேக‌ங்களு‌க்கான பொரு‌ட்களை வா‌ங்‌கி கொடு‌‌த்து பூஜை‌யி‌ல் கல‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

இர‌வி‌ல் ‌சிவனு‌க்கு செ‌ய்ய‌ப்படு‌ம் பூஜைக‌ள் கு‌றி‌த்த முழு ‌விவர‌மு‌ம் இ‌ங்கு தர‌ப்ப‌ட்டு‌ள்ளது. அத‌ற்கே‌ற்ற பொரு‌ட்களை ‌நீ‌ங்க‌ள் வா‌ங்‌கி அ‌ளி‌க்கலா‌ம்.

முதல் சாமம்:- பஞ்சகவ்ய அபிசேகம் - சந்தனப்பூச்சு - வில்வம், தாமரை அலங்காரம் - அர்ச்சனை பச்சைப் பயிற்றுப் பொங்கல் நிவேதனம் - ருக்வேத பாராயணம்.

இரண்டாம் சாமம்:- சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த பஞ்சாமிர்தம் அபிசேகம் - பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்துச் சார்த்துதல், துளசி அலங்காரம் - வில்வம் அர்ச்சனை - பாயாசம் நிவேதனம் - யசுர் வேத பாராயணம்.

மூன்றாம் சாமம்:- தேன் அபிசேகம் - பச்சைக் கற்பூரம் சார்த்துதல், மல்லிகை அலங்காரம் - வில்வம் அர்ச்சனை - எள் அன்னம் நிவேதனம் - சாமவேத பாராயணம்.

நான்காம் சாமம்:- கரும்புச்சாறு அபிசேகம் - நந்தியாவட்டை மலர் சார்த்துதல், அல்லி நீலோற்பலம் நந்தியாவர்த்தம் அலங்காரம் - அர்ச்சனை - சுத்தான்னம் நிவேதனம் - அதர்வன வேத பாராயணம். 


அன்றையதினம் இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை பூஜையையு‌ம், உச்சிக்கால பூஜையையு‌ம் அப்போதே முடிக்க வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.

அதன் பின் உபதேச‌ம் தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும்.

இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.

பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடை‌பிடி‌ப்பத‌ற்கு ஈடாகாது.

===============================================

வாழ்க அறமுடன்! வளர்க அருளுடன்!

7 comments:

ahaha said...

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்.........

வாழ்வில் உன்னதமான நிலையை அடைய சிவனை துதிப்போம்
ஓம் சிவ சிவ ஓம்

இராஜராஜேஸ்வரி said...


சிந்தனைக்கு விருந்தாக அமைந்து சீர்மிகு சிவனின் புகழ்பாடும்
சிறப்பான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

http://jaghamani.blogspot.com/2013/03/blog-post_2284.html

செல்வவளம் தரும் சிவராத்திரி ..

manikandan said...

அய்யா இந்த சிவராத்திரி பதிவு இட்டமைக்கு, எனது Nantikal

udaya kumar said...

Dear Reshi sir

Yesderday i was in Tiruvalam temple at 6pm pooja. I got good feeling where standing near 1300 years tree because inside more people. i have one doubt why nandi not looking sivan its totally opposite i am asking there but no one give correct reason so please share me the reason or may be post in your blog earlier please share that link.
thank
uk

கோடியில் ஒருவன் said...

ஆசிரியரின் சிவராத்திரி பற்றிய பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். அடுத்த வாழ்வில் ஸ்டேஜில் ஏறுவதால் பழசை மறந்துட்டாரோன்னு நினைச்சேன்.

ஆனா.... மறக்கலை.... அருமையான பதிவு. என்னைய மாதிரி ஆளுங்களுக்கு ரொம்ப உபயோகமா இருந்திச்சு.

// பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடை‌பிடி‌ப்பத‌ற்கு ஈடாகாது.//

கடைசி பத்தி உண்மையிலேயே ஆசிரியரோட டச்.

அடுத்த பதிவு அடுத்த சிவராத்திரிக்கு இருக்காது என்று நம்புவோமாக!

- கோடியில் ஒருவன்

Mariammal E said...

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்.........

வாழ்வில் உன்னதமான நிலையை அடைய சிவனை துதிப்போம்
ஓம் சிவ சிவ ஓம்


nama sivaya ................

Venugopal Marimuthu said...

நன்றிகள் பல உரித்தாகுக...!!!

ஓம் சிவசக்தி ஓம் ஓம் சிவசக்தி ஓம் ஓம் சிவசக்தி ஓம்...!!!

வேணுகோபால் மாரிமுத்து மும்பை 400088.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com