Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

சுமை கனத்தவனால், சங்கீதத்தை ரசிக்க முடியாது...........!.

| Mar 2, 2013
ஒருவனது கடந்த காலம் எப்படி இருந்த போதிலும், அவன் எவ்வளவு தவறுகள் செய்திருந்தாலும், எவ்வளவு அஞ்ஞானத்தில் வாழ்ந்திருந்த போதிலும், அவனது உள்ளத்தின் ஆழத்தில் ஒரு உன்னதமான தூய்மை உள்ளது. அது அற்புதமான சித்தியாக மலர்ந்து வெளிப்பட முடியும். தன்னுடைய கஷ்டங்கள், இன்னல்கள், தடைகள், இடையூறுகள் இவைகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இராமல், அந்த உள்ளத் தூய்மை மீது ஒருமுனைப்படுதல், அதைப் பற்றியே சிந்தித்தல் இதுவே அவன் செய்ய வேண்டியதெல்லாம்....
                                                        - ஸ்ரீ அரவிந்த அன்னை
=========================================================================

அது ஒரு பெரிய MNC கம்பெனியின் அனுவல் மீட்டிங். ஏன் எதிர்பார்த்த அளவுக்கு சேல்ஸ் ஆகலைன்னு குரூப் டிஸ்கஷன் நடந்துக் கிட்டு இருக்குது. அங்கு இருந்த ஒவ்வொருத்தரும் ஆளாளுக்கு ஒரு ஒரு காரணம் சொல்லிக்கிட்டு இருக்கிறாங்க.

அப்போ அந்த கம்பெனி CEO ஒரு சின்னதா ஒரு கேஸ் ஸ்டடி சொன்னார்.

ஒரு சிச்சுவேஷன் : ஒரு ஊர்ல ஒரு குளம் இருக்கு. அந்த ஊர்ல ஒரு பத்து குடும்பம் இருக்கு. அந்த குளத்தில தினமும் கடவுள் ஒரு மீன் அனுப்புவாரு. ஒரு நாளைக்கு ஒரு மீன் தான். காலையில் மூணு மணியில் இருந்து நாலு மணிக்குள்ளே அந்த மீன் வந்திடும்.அந்த மீனைப் பிடிக்கிறவங்க, குடும்பத்துக்கு ஒரு நாள் சாப்பாட்டுக்கு அந்த மீன் போதும். மீன் கிடைக்காதவங்க, வெளியிலே கஷ்ட்டப்பட்டு வேலை செஞ்சு வந்தாத் தான் வீட்டிலே அடுப்பு எரியும். ஆனா, வெளியிலே வேலை கிடைக்குமா? கூலி, நேரத்துக்கு கிடைக்குமான்னு எந்த உத்திரவாதமும் இல்லை.

இப்போ, நீங்க அந்த ஊர்ல இருக்கிறதா நினைச்சிக் கோங்க ! வீட்டில குழந்தைங்க ரெண்டு நாளா பட்டினி. ரெண்டு நாளா மீன் பிடிக்கவே போகலை. காலை நேரம். தூக்கம். சோம்பேறித்தனம். வெளியில் வேலை கிடைக்கும்னு நம்பி, எங்கேயும் கிடைக்காம, காசும் கடனுக்கு கிடைக்காம, குழந்தைகளுக்கு சாப்பிட கூட வழி இல்லாத ஒரு நிலை...!

மூணாவது நாள் என்ன செய்வோம்?

கண்டிப்பா மீன் வரும்னு தெரியும். ஒரே ஒரு மீன்தான். வேற யாரும் வந்து பிடிக்கிறதுக்குள்ளே, இன்னைக்காவது பிடிக்கணும்னு தோணும் இல்லே..! பசியோட துடிக்கிற பிஞ்சுங்க முகம் ஞாபகம் வரும்போது - தூக்கமாவது ஒன்னாவது....!

மூணு மணிக்கு மேலே தான் வரும்னு தெரியும்.

நீங்க பன்னிரண்டு மணிக்கே போய் அங்கே  நிப்பீங்க தானே... அங்கே பார்த்தா.. உங்களுக்கு முன்னாலே இன்னும் அஞ்சாறு பேர் நிக்கிறாங்க....! இருந்தாலும் நம்பிக்கையோட குளத்திலே இறங்கி தேடுவீங்க தானே....? அந்த நேரத்தில, இது ஆச்சு , அது ஆச்சுன்னு சாக்கு, போக்கு சொல்ல மாட்டோம்ல...?

இதே ஒரு மீனுக்கு பதிலா... நூறு மீன் ஒரு நாளைக்கு வந்தால்.........?அங்கே தன்னைப்போல மெத்தனமும், சோம்பேறித்தனமும் வந்துவிடும்.

"அப்போ , நம்மளை மாதிரி நம்ம போட்டிக் கம்பெனிங்க - ஆயிரம் விக்கிற இடத்துல, நம்ம கம்பெனி ப்ராடக்ட் நூறு கூட தாண்ட மாட்டேங்குது. நாம எல்லாம் இங்க சாக்கு - போக்கு காரணம் சொல்லிக்கிட்டு இருக்கோம். ஏன்? ஒரு மீன் தான் கிடைக்கும்னு நினைச்சு வேலையைப் பாருங்க. இல்லையா, இதே நிலைமைதான் கண்டினியூ ஆகும்னா, இதே அலட்சியம் தான் வாழ்க்கைனா , நாளைக்கு எல்லார் குடும்பமும் - பசியிலதான் வாட வேண்டி இருக்கும். இதுக்கு அப்புறம் உங்க சாமர்த்தியம்..!" னு சொல்லிட்டு எழுந்து போயிட்டார்.
=============================================================================

வாழ்க்கையிலே கிட்டத்தட்ட நாம எல்லோரும் இந்த நிலைமைல தான் இருக்கிறோம். எதாவது கொஞ்சம் நேரம் கிடைச்சாலும், மனசு நம்மளை அடிமைப் படுத்த ஆரம்பிச்சிடும். கூர்ந்து கவனிச்சோம்னா, வாழ்க்கையில எவ்வளவு நேரத்தை வீணடிக்கிறோம், எவ்வளவு அலட்சிய மனப்பான்மையோட இருக்கிறோம்னு நல்லாப் புரியும்.

ஒருபக்கம் ஆண்டவன் சோதனை. நல்ல முயற்சி நடந்துக்கிட்டு இருக்கும்போதே  நேரம் சரி இல்லைன்னு ஒன்னும் தர மாட்டாரு. இந்த லட்சணத்துல நமக்கே நம்ம மேலே , நம்ம முன்னேற்றம் மேலே அக்கறை இல்லைனா, ஆண்டவன் கூட ," அடப் போயா "ன்னு , 'அம்போ'ன்னு விட்டிடுவாரு.

பெரும்பாலானோருக்கு இருக்கிற ஒரே அலட்சியம் - இதுதான் . அட, குளம் நிறைய மீன் இருக்குதுயா, பிடிக்கிறவங்க எல்லோரும் பிடிச்சிட்டு போனதுக்கு அப்புறம், நாம மெதுவா போய், பிடிப்போம்..! 
அதுக்கு அப்புறம் இருக்கிற எல்லாத்தையும் பிடிச்சிட்டுப் போயிட்டாங்கன்னு, அடுத்தவங்களைப் பார்த்துக்கிட்டு பெருமூச்சு விட்டுக்கிட்டே இருக்க வேண்டியது.....

ஒரே ஒரு மீன் தான்னு நினைச்சிக்கிட்டு ஒட்டு மொத்த முயற்சியும் மனதொருமித்து , எல்லா செயலையும் செய்வோம்....! அப்புறம் பாருங்க ! நிஜமாவே நாமளும் ஜெயிச்சவங்க லிஸ்ட் ல இருப்போம்..! முயற்சி மெய் வருத்த எனில், இறையும் அதற்குத் தகுந்த கூலி  நிச்சயம் தரும்!
=====================================================================

சரி இப்போ தலைப்புக்கு வர்றேன். இது எங்க அப்பா அடிக்கடி சொல்ற பொன்மொழி!

வாழ்க்கையில் ஒரு அளவுக்கு மேல் கஷ்டம், சுமை ஏறிய பிறகு, அவனுக்கு சுகமான சங்கீதத்தைக் கூட ரசிக்கும் மனோபாவம் கிடைக்காது. ஒரே வழி, சுமையை குறைக்க வேண்டியதுதான். ( மீன் பிடிச்சே ஆக வேண்டியதுதான்.)

சரி, எடுக்கிற எல்லா விஷயங்களும் சொதப்பலோ , சொதப்பல். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்னை. கடன் கிடைக்கலைன்னு ஒருத்தர் சொன்னா, கொடுத்த காசு வர மாட்டேங்குதுன்னு இன்னொருத்தர். வேலை கிடைக்கலைன்னு ஒருத்தர். வேலைல டார்ச்சர்ன்னு இன்னொருத்தர்.

வீடு கட்ட முடியலைன்னு  ஒருத்தர். வீட்டுல குடி வந்தவங்க அடாவடித்தனம்னு இன்னொருத்தர். உங்கள் பக்கம் நியாயம் இருந்து , எதிரிகளின் கை ஓங்கி - கோர்ட் , கேஸ் என்று நீங்கள் போக நினைக்காமல் , பிரச்னை அதே நேரம் சுமுகமாக முடியவேண்டும் என்று நினைக்கிறீர்களா?

"ஆமாம்யா, ஆன்மீக ரீதியில் இதற்க்கு ஒரு தீர்வு , பரிகாரம் இருக்கிறதா"?

இருக்குதுங்கண்ணா!

ஆனால், எல்லோருக்கும் கொஞ்சம் பிடிக்காத ஒரு விஷயம்.   நல்ல நாள் , விசேஷ தினம் , கூட்டம் அலை மோதுற கோவிலுக்கு, அந்த நாள் போகாம இருக்கிறது. Crazy guys...ன்னு தோணும் இல்லையா! இந்த பிரச்னைகளுக்கு தீர்வு இந்த விஷயத்தில் தான் அடங்கி இருக்கிறது.


ஊர் கூடி தேர் இழுக்கும் திருவிழா நடக்குமே, அந்த நாளில் - கூட்டத்தோடு கூட்டமாக நீங்களும் வடம் பிடித்து, ஒரு இரண்டு அடியாவது நடக்க முடிந்தால் போதும். அதாவது, நீங்கள் இழுக்க , இறைவன் உங்களை நோக்கி வருகிறான்.


 ஒரு பெரிய ஜன சமுத்திரமே , இறைவனை மனதில் நினைத்துக்கொண்டு , வடம் பிடிக்கும்போது - மிகப்பெரிய அருள் அலைக்கு பாத்திரமாவீர்கள். அது எப்பேர்ப்பட்ட - இன்னல்களையும் தீய சக்திகளையும் தகர்க்கும்.  இறைவனே உங்களை நோக்கி வரும்போது, எல்லா நல்ல விஷயங்களும், மன நிம்மதியும், ஐஸ்வர்யமும் தொடர்ந்து கிடைக்கும். உங்களை சுற்றி இருக்கிற நட்பு பலப்படும். நல்லதொரு கூட்டு முயற்சி கிடைக்கும்.   உங்களுடன் மோதியது மலையே ஆனாலும், அது இருந்த இடம் தெரியாமல் பந்தாடப்படும்.அடுத்த முறை, கூட்டம் அலர்ஜி என்று எண்ணாமல், தேர் திருவிழாவில் வடம் பிடிக்க வாய்ப்பு கிடைத்தால் தவற விடாதீர்கள்....!

எத்தனை நாள் தான் , தாங்க முடியாத சுமையோடு அமிழ்ந்து கிடப்பது , வாருங்கள் நாமும் சங்கீதம் ரசிப்போம்.....!
 

13 comments:

Investment Consultant said...

sir nice sir

ahaha said...

சுமை கனத்தவனால், சங்கீதத்தை ரசிக்க முடியாது...
உங்கள் பதிவை படித்தேன் என் சுமை குறைந்தது... நன்றி...
ஓம் சிவ சிவ ஓம்

arul said...

thanks for sharing this important post

krishna said...

i cannot understand what your say what how can we do tell me clearly i am so confused

krishnamoorthi
tiruvannamali

ahaha said...

மதிப்பிற்குரிய ஐயா
எனது ஜாதகம்
ரா.சதீஷ்குமார்
பிறந்தது 9.1.1980 / 12.15 pm வந்தவாசி
ஜாதக விவரம்
ஜன்மநட்சத்திரம் அஸ்தம் 1ம்பாதம்
ஜன்மராசி கன்னி,ஜன்மலக்னம் மீனம்,அம்சாலக்னம் மீனம்,ஆயுள்லக்னம் துலாம்
வக்ரம் குரு
உச்சம்
நீச்சம்
கர்ப்ப செல்லு போக இருப்பு சந்திர தசை 8வருடம்7மாதம்9நாள்

ஐயா கடந்த சில வருடங்களாக எனக்கு கடன் மற்றும் சூழ்நிலை மனகுழப்பம் உள்ளது.நான் தற்பொழுது பங்கு சந்தை வியபாரம் செய்து வருகிறேன் எனக்கு உறுதுணையாக இருந்தவர்கள் இப்பொழுது சிலரே,என் பிரச்சனை தீர தாங்கள் வழி காட்டுவீர் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

மகிழ்ச்சியான விஷயம் தங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் என் மனைவி 3மாதம் கர்ப்பவதியாகயுள்ளாள் இரட்டை குழந்தை நான் கடவுளுக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன்.
ஓம் சிவ சிவ ஓம்
My Email id: rsk.tvm.2010@gmail.com

இராஜராஜேஸ்வரி said...

எத்தனை நாள் தான் , தாங்க முடியாத சுமையோடு அமிழ்ந்து கிடப்பது , -

அருமையான தீர்வுக்கு நன்றிகள்..

Ashok said...

Nice post sir.

Muthukumar said...

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,
இந்த பதிவு எனக்காகவே இட்டுள்ளது போல உள்ளது. இனி கோவிலில் கூட்டம் இருப்பது பற்றி நினைக்காமல் வேண்டுதலை மட்டும் நினைத்து செல்வேன்.
நன்றி...
அன்புடன்,
முத்துக்குமார். எஸ்.

Gnanam Sekar said...

நல்ல பதிவு . வாருங்கள் நாமும் செல்வோம் தேர் இழுக்க

NAHARANI said...

ஒரு பெரிய ஜன சமுத்திரமே , இறைவனை மனதில் நினைத்துக்கொண்டு , வடம் பிடிக்கும்போது - மிகப்பெரிய அருள் அலைக்கு பாத்திரமாவீர்கள். அது எப்பேர்ப்பட்ட - இன்னல்களையும் தீய சக்திகளையும் தகர்க்கும். இறைவனே உங்களை நோக்கி வரும்போது, எல்லா நல்ல விஷயங்களும், மன நிம்மதியும், ஐஸ்வர்யமும் தொடர்ந்து கிடைக்கும். உங்களை சுற்றி இருக்கிற நட்பு பலப்படும். நல்லதொரு கூட்டு முயற்சி கிடைக்கும். உங்களுடன் மோதியது மலையே ஆனாலும், அது இருந்த இடம் தெரியாமல் பந்தாடப்படும்.

you are right.. this theer and the words above rewinds my days at thiruvarur by 1983-1985 days.. daily we saw happily the great thiruvarur theer simply standing at its stand when we go for school and a day come with the GODs grace.. we all blessed by almighty to touch the theer vadam while on roads till returning to templeyard .. this happends only with his greatness ..

THEIVAM said...

nandri sir, inimel vadam pidikka muthal aala nanthan nirpen

வே.நடனசபாபதி said...

தங்களது வலைப்பதிவை இன்றைய வலைச்சரம் (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_9.html ) வலைப்பதிவில் அறிமுகப்படுத்தியுள்ளேன். காண்க.

கோடியில் ஒருவன் said...

தேரை இழுக்குறதுல இவ்வளவு விஷயம் இருக்குன்னு தெரியாம போச்சே.... ரொம்ப நன்றி சார்.

எந்த சுமை கனத்தவனோ உங்க கிட்டே புலம்பியிருக்கான்னு மட்டும் புரியுது. பாவம் சார் அந்த அப்பாவி.

(சரி;... ஆரம்பத்துல இருக்குற பத்தி யாருக்கு? ஸ்பெஷலா ஹைலைட் பண்ணியிருக்கிறதால கேட்டேன்...!)

- கோடியில் ஒருவன்

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com