Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

மானும், நானும், நாமும்...! (சிந்திக்க வேண்டிய ஒரு நீதிக்கதை..!)

| Feb 25, 2013
அன்பு வாசக நண்பர்களுக்கு என் பணிவான வணக்கம். மிக முக்கியமான சில வேலைகள் காரணமாக பதிவு எதுவும் அளிக்க முடியாமல் இருந்தேன். இறையின் திருவருளால் நல்ல விதமாக முடிந்து , ஒரு மிகப் பெரிய மன நிம்மதி கிடைத்து இருக்கிறது. இடைப்பட்ட நேரத்தில் அக்கறையுடன் மின்னஞ்சல் அனுப்பி விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி ! இனி வழக்கம்போல் நமது தளத்தில் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு விசேஷ பதிவுகள் கண்டிப்பாக வரும்.

வாசகர்கள் அனைவருக்கும் மிக மகிழ்ச்சியான இன்னொரு விஷயம் - நம் அனைவர் நலனுக்காகவும் கடந்த ஒரு மண்டலமாக நடந்துவந்த யாகம் அருமையாக நடந்து முடிந்து இருக்கிறது. யாகம் நடந்து முடிந்த கடைசி நாளில் , மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்தது. இத்தனைக்கும் மழை வருவதற்கு அன்றைய காலை வரை எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்தது அதிசயம் தான். இறைவனே மனம் குளிர்ந்த மாதிரி ஒரு பூரிப்பு, உவகை கிடைத்து இருக்கிறது.

யாகத்தின்போது சங்கல்பத்தில் பெயர் உச்சரிக்கப் பட்ட ஒவ்வொருவருக்கும் , பல வழிகளிலும் முன்னேற்றம் நிச்சயம் கிடைக்கும் என்று அந்த உபாசகர் , உறுதியாக கூறி இருக்கிறார். அதை மெய்ப்பிக்கும் வகையாக எனக்கு இதுவரை பதினாறு பேர் மின்னஞ்சல் மூலம் அவரவர் அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக ஐந்து பேரின் அனுபவங்கள் , சத்தியமாக இறையருள் மூலமே நடந்து இருக்க வேண்டும் . அந்தளவுக்கு நெக்குருக வைக்கும் சம்பவங்கள். இதற்க்கு ஒரு அணில் போல என்னை இறை ஒரு கருவியாக்கிக் கொண்டதில் , ஆத்மார்த்தமான திருப்தி எனக்கு.....!
கூடிய விரைவில் அனைவருக்கும் அவரவர் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற , நானும் உண்மையாக , மனமார பிரார்த்திக்கிறேன்.

ஒரே ஒரு வேண்டுகோள் - சில தனிப்பட்ட பகிர்ந்து கொள்ள இயலாத அனுபவங்களை மின்னஞ்சலிலும் பகிர்ந்து கொள்ளக் கூடியவற்றை இங்கே பின்னூட்டத்திலும் , யாகம் மூலம் உங்களுக்கு கிடைத்த நற்பலன்களை பகிர்ந்து கொண்டால், இன்னும் பல வாசகர்களுக்கு நம்பிக்கை அதிகமாகும்.
நம்பிக்கை பலப்பட பலப்பட, நல் வழி புலப்படும் . அதற்க்கு உங்கள் கருத்துக்கள் பேருதவியாக இருக்கும். சில அனுபவங்களை , சம்பந்தப்பட்டவரின் அனுமதியுடன் தனிப் பதிவாகவும் தர விருக்கிறேன்.
=======================================================================
நமது வாசக நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த மின்னஞ்சலை கீழே கொடுத்துள்ளேன். நேரமின்மை காரணமாக , தமிழாக்கம் செய்யவில்லை. படித்துப் பாருங்கள். நம் அனைவருக்கும் மிக முக்கியமான செய்தி அடங்கி இருக்கிறது. மீண்டும் நாளை அடுத்த பதிவில் சந்திக்கலாம். 


 ============================

Stochastic Probability Theory - Pregnant Deer Scenario
Consider this scenario: In a remote forest, a pregnant deer is about to give birth to a baby.
It finds a remote grass field near by a river and slowly goes there thinking it would be safe.
As she moves slowly, she gets labor pain. at the same moment, dark clouds gather around that area and lightning starts a forest fire.

Turning left she sees a hunter who is aiming an arrow from a distance.

As she tries to move towards right, she spots a hungry lion approaching towards her.

Stochastic Probability Theory - Pregnant Deer Scenario:

What can the pregnant deer do .as she is already under labor pain ?

What do you think will happen?

Will the deer survive?

Will it give birth to a fawn?

Will the fawn survive?

OR

Will everything be burnt by the forest fire ?


That particular moment ?

Can the deer go left ? Hunters arrow is pointing

Can she go right ? Hungry male lion approaching

Can she move up ? Forest fire

Can she move down ? Fierce river

Answer: She does nothing. She just focuses on giving birth to a new LIFE.

The sequence of events that happens at that fraction of a second (moment) are as follows:

In a spur of MOMENT a lightning strikes (already it is cloudy ) and blinds the eyes of the Hunter. At that MOMENT, he releases the arrow missing and zipping past the deer. At that MOMENT the arrow hits and injures the lion badly. At that MOMENT, it starts to rain heavily and puts out the forest fire. At that next MOMENT, the deer gives birth to a healthy fawn.
In our life, its our MOMENT of CHOICE and we all have to deal with such negative thoughts from all sides always. Some thoughts are so powerful they overpower us and makes us clueless. Let us not decide anything in a hurry. Lets think of ourselves as the pregnant deer with the ultimate happy ending.
Anything can happen in a MOMENT in this life. If you are religious, superstitious, atheist, agnostic or whatever you can attribute this MOMENT as divine intervention, faith, sudden luck, chance (serendipity), coincidence or a simple dont know'.

We all feel the same.

But, whatever one may call it, I would see the priority of the deer in that given moment was to giving birth to a baby. because LIFE IS PRECIOUS.

Hence, whether you are deer or a human, keep that faith and hope within...

==================================================

17 comments:

இராஜராஜேஸ்வரி said...

//கூடிய விரைவில் அனைவருக்கும் அவரவர் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற , நானும் உண்மையாக , மனமார பிரார்த்திக்கிறேன்.//

எனது நியாயமான பிரார்த்தனை -

மனதை வாட்டிக்கொண்டிருப்பது -கடையும் நட்த்திக்கொண்டு வாடகைதராமல் வழக்குத்தொடுத்து அலையவைத்துக்கொண்டிருப்பவர் யாகத்தின் பலனால் காலிசெய்து நியாய்மான வாடகை கிடைத்தால் - நீதி கிடைத்தால் -

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியல்லவா ? -

தாமதிக்காமல் நீதி கிடத்தால் பகிர்ந்து கொள்ளுவேன் ..

இராஜராஜேஸ்வரி said...

இத்தனைக்கும் மழை வருவதற்கு அன்றைய காலை வரை எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்தது அதிசயம் தான். இறைவனே மனம் குளிர்ந்த மாதிரி ஒரு பூரிப்பு, உவகை கிடைத்து இருக்கிறது.


அந்த உவகை - இறைவனின் கருணை மழை நனைக்கும் நாளை எதிர்பார்த்து பிரார்த்திக்கிறேன் ..

Alagappan MR said...

Thanks for posting this wonderful story.

nithya krishna said...

really a great mail. this gives lot of positive thoughts. its true. Thoughts makes everything. thoughts whould be as per law of nature.

thanks for posting such a beautiful mail.

கோடியில் ஒருவன் said...

அடடா... ஆசிரியர் மனசு மாறி - பதிவு எழுதா விரதம் முடிச்சு பதிவு போட்டுட்டாரேன்னு சந்தோஷப்பட்டா ஒரு மான் கதையை சொல்லி எஸ்கேப் ஆகிட்டாரு.

ஆனாலும் மான் கதை ரொம்ப உருக்கம். சரியான தேர்வு. அனுப்பியவருக்கும், பதிவு செய்த உங்களுக்கும் என் நன்றி சார்.

என்ன தான் நடக்கப்போகுதோன்னு சஸ்பென்ஸோட படிச்சேன். நிச்சயம் அருமையான முடிவு.

என்ன சார் பண்றது வாழ்க்கையில பல நேரங்கள்ல இந்த மாதிரி மான் மாதிரி தான் வாழவேண்டியிருக்கு....

என்ன இந்த மானுக்கு உதவி பண்ற கடவுள் நம்மளை மட்டும் கண்டுக்க மாட்டேங்குறாரே என்பது தான் என் வருத்தம்.

யாகம் பற்றி நண்பர்கள் எழுதியனுப்பிய அனுபவங்களை சீக்கிரம் பகிர்ந்துகொள்ளுங்க. (அந்த பதிவு நிச்சயம் மார்ச் 25 ஆம் தேதி வராது என்று நம்புவோமாக!)

யவனிகை said...

feeling excited to see our writings after a long time na,
s, after all this s our life, It wont leave us,
nice story na, going to say this in our office anthem meet,

om kriya babaji nama om om namachivaya

viswanathan said...

Fantastic lesson from the story
Thank you
S.Viswanathan

manikandan said...

நல்ல கதை சார், எல்லோர் வாழ்விலும் இப்படி நடந்தால் மகிழ்ச்சி தான்,
ஒம் சிவாய நமக,

பத்ம ப்ரியா said...

A good story which teaches us to do our duty as all the upcoming dangers will be met by the Almighty. But I guessed the ending of the story that the aim of the hunter will go to the Lion and the heavy rain will end off the fire . Any how it is an excellent story.
Please keep writing as we are missing these kinds of postings.
M. Padmapriya

Venky said...

வணக்கம் Sir..... ( என்னடா இது ரொம்ப நாளாகவே நம்ம நண்பரை காணோம் என்று பார்த்தேன் ......... )

யாகம் பற்றி கேட்கவே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.... எதனால் என்றால் நாம் எல்லோரும் கடவுளை நம்புகிறோம்..... ( மறுபடியும் ) சொல்லுகிறேன் கடவுளை மட்டுமே நம்புகிறோம் ........

அந்த மானை போல நாம், நம் கடமையை மட்டும் கண்ணாக / கடமையை மட்டும் குறிக்கோளாக தலை மேல் ஏற்றுக்கொண்டு செய்தோமானால் .... அந்த கடவுள் நம்ம கை விடமாட்டார் என்று பரிபூர்ணமாக நம்புவோர்களில் அடியேனும் ஒருவன் ...

அந்த விதத்தில் நாங்களும் ( நானும் என் மனைவியும் ) ஒரு பெரிய கடமையை எங்கள் தலை மேல் எடுத்துக்கொண்டு முயற்ச்சி செய்து கொண்டுதான் இருக்கிறோம்.... அதுவும்... கடந்த 2 வருடமாக .................இருந்தாலும் அந்த கடவுள் எதற்காகவோ தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறார் ... அவர் எதை செய்தாலும் அது எங்களுக்கு பரி பூர்ண த்ருப்தியாகத்தான் இருக்கும் ... அந்த நம்பிக்கையோடுதான் இன்னும் அந்த கடமையை தொடருகிறோம்... அது வேறு ஒன்றும் இல்லை..... எங்கள் பெண் கல்யாணம் தான்.... 1985 born ....

என் பெண் ஒரு Computer Engineer..... and currently working in US for the past 3 years.....

கடவுள் புண்ணியத்தில் சுத்த ஜாதகம் ... இதுவரை பார்காத ஜாதகம் இல்லை .... ஏதோ கிட்டி முட்டி கொஞ்சம் கிட்டக்க வந்தால்... மனிதர்கள் சரியில்லை என்று தெரியவருகிறது..... என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை.... இருந்தும் கடவுளை பரிபூர்ணமாக நம்புகிறோம்.... அந்த கடவுள் ஏதோ ஒரு பெரிய நன்மையை செய்வதற்குத்தான் இந்தவிஷயத்தில் இவ்வளவு தாமதம் பண்ணுகிறார் என்றும் நம்புகிறோம்... எங்களுக்காக.................. எங்கள் பெண் திருமணம் கூடிய சீக்கிரம் நடைபெற நாங்கள் உங்களையும் தயவு செய்து பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்ளுகிறோம்..... ஒன்றும் தப்பாக நினைதுவிடவேண்டாம்...என்றும் மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம். இது சம்பந்தமாக நாங்கள் எந்த ஒரு தனிப்பட்ட கடவுளை / அம்பாளை தரிசிக்க வெண்டுமாயின் தயவு சேந்து அதையும் தெரிவிகும்படியும் கேட்டுக்கொள்ளுகிறோம்

உங்கள் அன்புள்ள வெங்கடரமணி - பெங்களூர்

P VENKATARAMANI - 99452 83007

raguraman said...

After long time,awesome article.Thanks a lot.

sathiya raj said...

am happy to see the poster after a long time sir and thanks for the story it gives a more self confidence to every one.

இராஜராஜேஸ்வரி said...

Venky அவர்களே தங்கள் .பெண் திருமணம் கூடிய சீக்கிரம் நடைபெற மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறோம் ..

மிக விரைவில் தங்கள் மகளின் திருமணம் பொருத்தமான துணையோடு நிகழ்ந்து சகல் சிறப்புகளுடன் சீரும் சிறப்புமாய் வாழ மனம் நிறைந்து வாழ்த்துகிறோம் ..

THEIVAM said...

Nanum oru manakathaan nirkiren, iravan enna seiya irukiraro????

jobs and carreers said...

<>
last my name has joined in last moment, but this year i wish give my name earlier

so iam eagerly waiting for this margali pournami

-

Sunrise said...

really great story thanks for the post,

radha subbu said...

Great story.... thanks for sharing.....

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com