Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

இந்த வருடத்தில் நீங்கள் வணங்க வேண்டிய ஆலயங்கள்....!

| Jan 3, 2013
நமது வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஒவ்வொருவருக்கும் கடந்த ஆண்டைவிட இந்த வருடம் பொலிவுடனும், பொருளாதார வளர்ச்சியுடனும் , நோய் நொடி இல்லாமல், தன்னம்பிக்கை வளர்க்கும் விதமாக, இயற்கைப் பேரிடர் இல்லாத , சமூக அசம்பாவிதம் இல்லாமல் , நிம்மதியான குடும்ப வாழ்வு அமையவும் - மனமார அந்த உலகப் பரம்பொருளாம் அருணாச்சலத்தை வேண்டி வாழ்த்துகிறேன்...!

நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி, ருண - ரோக - சத்ரு நாசன யாகம் நேற்று தொடங்கி ,(இந்த முறை இன்னும்) சீரும் , சிறப்புமாக நடந்து கொண்டு இருக்கிறது. நேற்றுவரை நம் வாசகர்கள் அளித்த மொத்த தொகையும் ஒரு ரூபாய் கூட குறையாமல், உரிய முறையில் ஒப்படைக்கப்பட்டு , ஒவ்வொருவர் கோரிக்கைகளும் சங்கல்பம் செய்யும்போது உச்சரிக்கப்பட்டது. நமது வாசகர்களில் மட்டும் நூற்று இருபத்தைந்து பேர் தங்களால் இயன்ற அளவுக்கு காணிக்கை அளித்து உள்ளனர். சிலர் அனுப்ப முடியாத சூழ்நிலையில் இருந்தாலும் , அவர்களின் கோரிக்கையும் ஏற்று , இணைத்துள்ளோம். ஓரிருவர் தொகையை ஒப்படைத்த பிறகு, பரிவர்த்தனை செய்தனர். அவர்களின் தொகையும் இன்று மாலைக்குள்  அந்த பண்டிதரிடம் சேர்ப்பிக்கப்படும்.

என்மேல் நம்பிக்கை வைத்து , தொகையை அனுப்பிய உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இதற்க்கு மேல் பணம் அனுப்ப விரும்புபவர்கள் தயவு செய்து அனுப்பவேண்டாம். எனது நண்பர், நாளை யாகம் நடக்கும் ஊரில் இருந்து கிளம்பவிருப்பதால், நேரத்திற்கு நான் பணத்தை ஒப்படைப்பது கொஞ்சம் சிரமமான காரியம். பொங்கல் விடுமுறை சமயத்தில் தான் நான் அந்த ஊருக்கு செல்ல முடியும் என்கிற சூழ்நிலை. அதுவரை உங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்து இருக்கும் பொறுப்பு , டென்ஷன் அதிகரிக்கும்.

நான் ஏற்கனவே கூறி இருந்தபடி பணம் அனுப்புவது முக்கியமான விஷயமே அல்ல. யாகத்தில் கலந்து கொள்ள வேண்டும், உங்கள் பெயரும் யாகத்தில் உச்சரிக்கப் பட வேண்டும் என்கிற மனம் போதும். யாகம் தொடர்ந்து நாற்ப்பத்தெட்டு நாட்களும் தங்கு தடையின்றி நடைபெற அந்த பரம்பொருள் துணை நிற்கும் என்று நம்புகிறேன்.

யாகத்திற்காக பங்களித்த மற்றும் கோரிக்கை அனுப்பிய உங்கள் ஒவ்வொருவருக்கும், இந்த யாகம் தொடங்கிய நேற்றைய தினத்தில் இருந்து - அதிக பட்சம் மூன்று மாதத்திற்குள், உங்களின் நியாயமான கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும். இது உறுதி!!!  ஒரு சிலருக்கு நீங்கள் பணம் அனுப்பிய தினத்தில் இருந்தே , சில நல்ல அறிகுறிகள் தென்பட்டு இருக்கும். காரியங்களும் நிறைவேறியிருக்கும். நம்பமுடியாத அதிசயம் போல கூட தோன்றும்.காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை மாதிரி கூட தோன்றலாம்.ஆனால் உங்கள் மனதுக்கு , இது இந்த யாகத்தின் பலனால் தான் என்று தோன்றினால் , அவசியம் நீங்கள் உங்கள் அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். அந்த பண்டிதரும் மகிழ்வார்.யாகம் நடத்துவது எதற்காக என்று சாஸ்திரங்கள் என்ன தான் கூறினாலும், அவரவர் அனுபவமே முக்கியம் என்று கருதுபவன் நான். பகிர்ந்து கொள்ளக்கூடிய விஷயம் என்றால் நம் வாசகர்களிடமும் தெரியப் படுத்தலாம். இது அடுத்த முறை யாகத்தில் கலந்து கொள்ள நினைப்பவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

சிலரது கோரிக்கைகள் - நீண்ட கால கோரிக்கைகள். அவர்களும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் கோரிக்கைகளை  நிறைவேற்றவைக்கும் வித்து , நேற்றே ஊன்றப் பட்டுவிட்டது என்கிற நம்பிக்கையுடன் , தொடர்ந்து உங்கள் முயற்சியை மேற்கொள்ளுங்கள். இறையருள் தக்க சமயத்தில் உங்களை அரவணைத்து , உங்களை நல்வழிப்படுத்தும்.


இந்த முறை அன்பளிப்பு அளித்தவர்கள் அடுத்த முறை அன்பளிப்பு அளிக்க தேவை இல்லாத அளவுக்கு, உங்கள் பிரச்சினைகள் முற்றிலும் தீர்ந்தோ, அல்லது பெருமளவு உங்கள் கோரிக்கைகள் நிறைவேறியோ இந்த மூன்று மாதத்திற்குள் முடிவுக்கு வந்தால், அடுத்த முறை நீங்கள் அனுப்பும்போது இன்னும் அதிக உவகையோடு அனுப்பினால் உங்களை விட நான் அதிக சந்தோசமடைவேன். இந்த புத்தாண்டு மிக மிக மனதுக்கு மகிழ்ச்சி தரும் விதத்தில் உங்கள் அனைவருக்கும் தொடங்கி வைக்க, இறைவன் என்னை ஒரு கருவியாக்கியத்தில் நெஞ்சார்ந்த நிறைவடைகிறேன்.


யாகம் தொடர்ந்து நடைபெறும் இந்த நாட்களில் , நம் வயிற்றுக்குள் இருக்கும் அக்னியையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள். நாம் உண்ணும் உணவு , குடிக்கும் திரவம் மனதுக்கு உகந்ததாக இருக்கட்டும். அசைவம், மது தவிர்த்தால் பலன்கள் இன்னும் விரைவாக கிடைக்கும்.
பலன்கள் கிடைத்ததும் ,இதே பதிவில் பின்னூட்டம்  இட ஏதுவாக - இந்த வருடத்தின் முதல் பதிவாக இது இருக்கிறது. கவனம் வைத்துக் கொள்ளுங்கள். 

கடன் பிரச்னையில் தவிப்பவர்கள் - தீர்வு விரைவில் வந்தே ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் வரும் பத்தொன்பதாம் தேதி வரை , இருவேளையும் நீராடி , வீட்டில் விளக்கேற்றி அன்னை அன்னபூரணியை மனதார வேண்டி வாருங்கள். இந்த வருடம் முழுவதும் பொருளாதார ரீதியாக எந்த ஒரு சங்கடங்களும் ஏற்படாமல் நிச்சயம் வழி கிடைக்கும்.உடல் நலத்துடன் இருப்பவர்கள் இந்த நாட்களில் விரதம் விருப்பதும் நன்மை பயக்கும்.
=================================================
இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள்...! கட்ட பொம்மன் யாருன்னு நல்ல வேளை எல்லோருக்கும் தெரிஞ்சு இருக்குது. சிவாஜி கணேசன் புண்ணியத்தாலே... கட்ட பொம்மன் ஒரு தீவிர திருச்செந்தூர் முருக பக்தர். கோவிலில் பூஜை முடிந்த பிறகுதான் உணவு உண்ணுவார். பூஜை வேளைகளில், கோவிலில் மணி அடிக்கும்போது , அவருக்கு அந்த நேரத்தை உணர்த்துவதற்கென்றே - ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்திலும் பெரிய பெரிய காண்டாமணி கட்டி இருந்தார்களாம். பூஜை ஆரம்பித்ததும் , முதல் மணி அடிக்க - அந்த சத்தம் கேட்டு அடுத்த மணி, அதற்க்கு அடுத்த மணி என்று ராஜாவின் அரண்மனை வரையிலும் அந்த சத்தம் கேட்குமாம். நாட்டுக்காக உயிரையே கொடுத்தவர்கள் எத்தனையோ பேர் இருந்தாலும் , வீரத்தை வித்திட்டு சென்ற ஆத்மா - கட்டபொம்மன் ஆத்மா..!
ஒவ்வொரு முறை , செந்தூர் செல்லும்போதும் கட்ட பொம்மன் ஞாபகம் வரும். காற்றில் கலந்து அவர் குரல் எங்கோ ஒலிப்பது போலவும் இருக்கும். இந்த நன்னாளில் அவரை நினைவு கூறுவோம். சமீபத்தில் கட்டபொம்மன் பரம்பரையில் வந்த வாரிசு ஒருவரைப் பற்றியும் கேள்விப்பட நேர்ந்தது. ஐயோ பாவம், கால ஓட்டத்தில், சுயநலம் மிக்க அரசியல் வாதிகளின் இந்த ராஜாங்கத்தில் , பசியுடன் போராடும் எத்தனையோ கோடி பேரில் , இந்த ராஜ வாரிசும் அடக்கம்.  


கட்டபொம்மன் என்றதும் இன்னொரு சுவாரஸ்யமான ஞாபகம் வரும் எனக்கு. ஒரு பத்து வருடங்களுக்கு முன்னே, எங்கள்  ஊர் பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டேன். குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டி நடந்து கொண்டு இருந்தது. ஒரு சிறிய குழந்தை நாலு வயது தான் இருக்கும். பஞ்சகச்சம் கட்டி , தலைப்பாகை வைத்து , அட்டை கத்தி கையில் வைத்து பெரிய மீசையுடன் , தளிர் நடையிட்டு வந்தான். ஒவ்வொரு குழந்தையும் மைக் பிடித்து அவரவர் அணிந்து வந்த வேடத்தின் பெயரை சொல்ல வேண்டும். நான் தான் பாரதி. நான்தான் மகாத்மா காந்தி. நான் தான் விவேகானந்தர். இப்படி....
இந்த பையன் வந்து மைக் பிடித்ததும் பெயர் மறந்து விட்டது....!
ஹ்ம்ம்.. ஹ்ம்ம்... நான் தான். நான் தான்.... பின்னாலிருந்து டீச்சர் கட்ட பொம்மன் சொல்லு என்று முணு  முணுக்க.. அட, திடீர்னு ஞாபகம் வந்து விட்டது ....
நான் தான் ...... " வீர பாண்டிய , பொம்முக் கட்டன் " என்று சொன்னானே பார்க்கலாம்.....!
கூட்டத்தில் சிரிப்பு அடங்க முழுசாக ஐந்து நிமிடம் ஆனது..... .
அவனுக்குத் தான் முதல் பரிசு.... சும்மாவா ? பத்து வருஷம் கழிச்சும் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்குதுன்னா , பார்த்துக்கோங்களேன்..!  

=================================================


தென்னாங்கூர் - கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? வந்தவாசியில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் ஒரு ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. காஞ்சியில் இருந்து 40 கிலோ மீட்டர் இருக்கும் என நினைக்கிறேன். அருமையான ஒரு விஷ்ணு ஆலயம் இருக்கிறது. பாண்டுரங்கன் ஆலயம். சுமார் இரண்டு ஆள் உயர சாளக்கிராமத்தால் ஆன பெருமாள் , அழகாக நிற்கிறார். அதிகமாக சொன்னால் நீங்கள் நேரில் பார்க்கும்போது , உங்கள் உற்சாகம் குறைந்துவிடும். விஷ்ணுவை வழிபடுபவர்கள் , அவசியம் செல்ல வேண்டிய ஆலயம். சில கோவில்களுக்குச் சென்றால், திரும்ப திரும்ப வர தோன்றும் இல்லையா? அந்த வரிசையில் இந்த தென்னாங்கூர் நிச்சயம் வரும். காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் பேருந்துகள் நின்று செல்லும் என நினைக்கிறேன். அல்லது வந்தவாசியில் இருந்து ஆட்டோவில் செல்லலாம். வந்தவர்கள் அனைவரையும், ஒரு ஐந்து நிமிடம் அமர வைத்து கண்குளிர பெருமாளை தரிசிக்க வைக்கின்றனர்...! வாய்ப்பு கிடைக்கும்போது ஒருமுறை சென்று வாருங்கள்!

=================================================


நாளிதழ்களில் வார இதழ்களில் நான் ராசிபலன்கள்  படிப்பது ரொம்ப ரேர். ஆனால், திரு. வித்யாதரன் அல்லது "அதிர்ஷ்டம்" சுப்பிரமணியம் அவர்கள் எழுதும்போது கேள்வி பதில் முடிவிலோ அல்லது ராசி பலன்கள் முடிவிலோ சில ஆலயங்களை குறிப்பிட்டு எழுதுவார்கள். அது என்ன திறமையோ அல்லது ஏதாவது யட்சிணி தேவதை சொல்கிறதோ , அவர்கள் சொல்லும் ஆலயங்களுக்கு குறிப்பிட்ட ஜாதகர் சென்று வந்தால் - அபரிமிதமான பலன்கள் கிடைப்பது உறுதி..!  என்னுடைய அனுபவத்தில் பலமுறை இதை நான் உணர்ந்து இருக்கிறேன்.

அந்த வகையில் - இந்த ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் எழுதும்போது திரு. வித்யாதரன் அவர்கள் ஒவ்வொரு ராசிக்கும் பரிந்துரைத்த ஆலயங்களை நம் வாசகர்களிடம் தெரியப்படுத்துகிறேன். இந்த வருடத்தில் உங்களால் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த கோவிலுக்குச் சென்று , முறைப்படி இறைவனை வணகி வாருங்கள்...! இந்த வருடம் முழுவதும் உங்கள் இல்லங்களில் நிம்மதி நிலவும்! முயற்சி செய்து பாருங்கள்.....!மேஷ ராசி : கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள ஸ்ரீ முஷ்ணம் பூவராக சுவாமியை தரிசித்து வாருங்கள். அன்னதானம் செய்யுங்கள்.


 ரிஷப ராசி : திண்டிவனம் - விழுப்புரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மயிலம் முருகனை தரிசித்து வணங்குங்கள். முதியோர் இல்லங்களுக்குச் சென்று இயன்ற அளவு உதவுங்கள்.


மிதுன ராசி : கும்பகோணத்திற்கு அருகேயுள்ள அய்யாவாடியில் அருளும் பிரத்யங்கராதேவியை தரிசித்து வாருங்கள். அன்னதானம் செய்யுங்கள்.


கடக ராசி : மயிலாடுதுறை - கும்பகோணம் பாதையில், குத்தாலத்திற்கு அருகேயுள்ள க்ஷேத்ரபாலபுரம் பைரவரை வணங்குங்கள். தந்தையிழந்த பிள்ளைக்கு உதவுங்கள்.


சிம்ம ராசி : ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை நடராஜரை தரிசித்து வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.


கன்னி ராசி : கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருபுவனம் சரபேஸ்வரரை தரிசியுங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள்.


துலா ராசி : மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவிற்கு உதவுங்கள்.


விருச்சிக ராசி : விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வாருங்கள். புற்றுநோயாளிகளுக்கு உதவுங்கள்.


தனுர் ராசி : தேனி - கம்பம் வழியில் தேனியிலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள வீரபாண்டி கௌமாரியை தரிசித்து வாருங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள்.


மகர ராசி : சுக்கிராச்சார்யார் பூஜித்த சென்னை-மயிலாப்பூரில் அருளும் வெள்ளீஸ்வரரை வணங்குங்கள். மாற்றுத் திறனாளிக்கு உதவுங்கள்.


கும்ப ராசி : கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தொலைவிலுள்ள அம்மன்குடி துர்க்கையை தரிசியுங்கள். பார்வையற்றவருக்கு உதவுங்கள்.


மீன ராசி : தஞ்சாவூருக்கு அருகேயுள்ள திருக்கண்டியூரில் அருள்பாலிக்கும் ஹரசாப விமோசனப் பெருமாளை தரிசியுங்கள். புற்றுநோய் பாதித்தவர்களுக்கு உதவுங்கள்.

==============================================

13 comments:

chandirasekaran anjur said...

நல்ல பதிவு சார்..ஜோதிடபாடங்கல் எப்போ எழுதபோரீங்க சார்.நாங்க காத்துகிட்டு இருகக்கோம்..

Balaji Palamadai said...

Dear Sir,
How can i send my korrikkai request for this yagaam?
I have even mailed you regarding sending money for this yagam, but there was no reply from you sir. I think its because of my fate...

vijaya said...

Sir,
I really want to take a small part of this runa-roga-sathru nasana yaagam. I mail to you two times to know about the bank details. But my unluckiness that you don't give the details.Please pray for me.

Gnanam Sekar said...

அய்யா வணக்கம் நல்ல தகவல் . நன்றி

Rishi said...

@ Balaji Palamadai & @ Vijay -
Please send your requests/prayers/korikkaikal to my mail Id : editor@livingextra.com
I have personally replied to all the mails, whatever sent to that ID. It seems that your mails are not received / by oversight misplaced.
Please send your requests, I will include them in the list and will be recited from tomorrow in the special yaagam.
Please do not feel dejected. Every one of us, is blessed by HIM.
Wish you all the best !

Muthukumar said...

மதிப்பிற்குறிய ஆசிரியருக்கு,
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்,
முத்துக்குமார். எஸ்.

ghatam SURESH's RHYTHM said...

மிக மிக அருமை. தென்னாங்கூர் சுவாமி ஹரிதாஸ் கிரி கட்டிய பெரும் புண்ணிய ஸ்தலம். அன்னதானமும் ஞான தானமும் தினசரி நடக்கின்ற ஆலயம்.

இராஜராஜேஸ்வரி said...

நான் தான் ...... " வீர பாண்டிய , பொம்முக் கட்டன் " என்று சொன்னானே பார்க்கலாம்.....!
கூட்டத்தில் சிரிப்பு அடங்க முழுசாக ஐந்து நிமிடம் ஆனது..... .
அவனுக்குத் தான் முதல் பரிசு.... சும்மாவா ? பத்து வருஷம் கழிச்சும் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்குதுன்னா , பார்த்துக்கோங்களேன்..! //

மழலை மொழி ஆனந்தப்படுத்தியது ..பல ஆண்டுகள கடந்தபின்னும் ..

பயனுள்ள அருமையான தகவல்கள் நிறைந்த பகிர்வுகளுக்கு மனம் நிறைந்த நன்றிகளும் பாராட்டுக்களும் ...

manikandan said...

Dear sir,
Its a great thing, that peoples who R facing Heavy problems in their life, am really Hatsoff to U sir

Balaji Palamadai said...

Dear Sir, I have emailed you my Prayer Requests/korikkaikal to your email id sir. Thank u again.

Many thanks,
Balaji

THEIVAM said...

சார் உங்களோட அன்புள்ள டைரி படிச்சுட்டு "http://appaorualayam.blogspot.in/" அப்படின்னு ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு இருக்கேன். எனக்கு ப்ளாக் பத்தி எதுவும் தெரியாது அப்பாவுக்கு எதாவது பெருமை சேர்க்கணும் அப்படிங்கிற நோக்கத்துல ஆரம்பிச்சுட்டேன் . நீங்க குருவா இருந்து வழி காட்டனும். உங்க அனுமதி கிடைத்த பிறகுதான் நான் அடுத்த போஸ்டிங் போட ஆரம்பிப்பேன். உங்கள் அனுமதிக்காக காத்து இருக்கிறேன்

கோடியில் ஒருவன் said...

அஞ்சு நாள் பொங்கல் லீவுக்கு ஊருக்கு போயிட்டு வந்து பார்த்தா... நான் நினைச்ச மாதிரி ஆசிரியர் பதிவே போடலே... அடுத்த பொங்கலுக்குத் தான் பதிவு போடுறதா உத்தேசமா?

ஆசிரியர் அவர்களே பொங்கல் எல்லாம் எப்படி போச்சு? வெயிட்டான பொங்கல் போல.... தளம் பக்கம் வரவேயில்லே?

மத்தபடி வீரபாண்டிய கட்ட பொம்மனை நினைவு படுத்தியதற்கு நன்றி....

தென்னாங்கூர் கோவில் பற்றிய விபரத்திற்கும் நன்றி. உங்க வர்ணனனையை கேட்கும்போது உடனே நேர்ல போகனும்போல இருக்கு.

அந்தந்த ராசிக்கென்று ஜோதிடர்கள் கூறியுள்ளதாக நீங்கள் குறிப்பிட்டுள்ள கோவில்கள் அனைத்தும் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்கள். அந்தந்த ராசிக்காரங்க தான் போகணும்னு நினைச்சி மத்தவங்க ஒதுக்கிடாதீங்க. எல்லாரும் மேற்படி கோவில்களுக்கு போய் தரிசனம் பண்ணி பலன்களை அள்ளிக்கோங்க.

குறிப்பு : நீங்க தொடர்ந்து ரெகுலரா பதிவு போடுறதுக்கு ஒரு யாகம் ஏற்பாடு செய்யலாம்னு இருக்கேன். நிச்சயம் தாறுமாறான ஆதரவு கிடைக்கும் என்பது மட்டும் உறுதி!

NAHARANI said...

மிக சரியான நேர தகவல் இனிய புத்தாண்டு பொங்கல் நல வாழ்த்துக்கள் இந்த வருடமும் இனிமையாகவே இறை அருளால் துவங்கயுள்ளது . ஜனவரி 10 ம் தேதி rightmandra தெரிவித்துள்ள ஆன்மீக கண்காட்சி இந்த வருடம் எப்ப வரும் என எனது தாயார் வினவுகிறார் .. கடந்த ஆண்டு ரிஷி சார் தெரிவித்தும் தாயாருடன் பிள்ளைகளையும் அழைத்து சென்றோம் காஞ்சி மடத்தார் அளித்த பெரியவரது திரு காட்சி இன்றும் கண் நிறைந்துள்ளது . நன்றி ரிஷி சார்

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com