Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

Supplementary for Yaagam & Anbulla Diary article......

| Dec 24, 2012
அன்பு நண்பர்களுக்கு வணக்கம். நமது யாகம் பற்றிய கட்டுரையைப் படித்த நண்பர்கள் பலர் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு இருந்தனர். அவர்களுக்கு வங்கி விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் பயன் படுத்திக் கொள்ளலாம். யாகத்தில் பங்கு பெற விருப்பம் இருந்தும், ஒரு சிலர் பணம் அனுப்ப முடியாத அளவுக்கு கஷ்டத்தில் இருக்கலாம். அல்லது பணம் அனுப்ப மனமில்லாமல் தயங்கலாம். அவர்கள் கூட தயங்காமல், உங்கள் கோரிக்கையை அனுப்புங்கள். { நம் வாசகர்களுக்காக , நான் இதைக் கூட செய்யாவிட்டால் எப்படி? ஏற்கனவே தனிப்பட்ட முறையில் நான் இதற்க்கு பங்களிப்பதால், உங்கள் கோரிக்கைகளும் நிறைவேற தாராளமாக உங்கள் பெயரையும் பரிந்துரைக்க முடியும். உங்கள் கோரிக்கை நியாயமாக இருக்கும் பட்சத்தில்}.

உங்களையும் முடிந்தால் பங்களிக்க சொன்னது, உங்களுக்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கவேயன்றி, வேறு எந்த காரணமும் அல்ல. தயக்கமோ, மனமின்றி அரை குறை நம்பிக்கையோடோ நீங்கள் பணம் அனுப்பவேண்டாம். முழுக்க, முழுக்க உங்கள் வாழ்க்கையில் மலர்ச்சி ஏற்படுத்த மட்டுமே இந்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளேன். 100% இறை மேல் நம்பிக்கை கொண்டு, இது ஒரு ஏமாற்று வேலை என்று நினைக்காதவர்கள் மட்டும் , வங்கி விவரம் கேட்டு மெயில் அனுப்புங்கள். ஜனவரி மாதம் 2 ஆம் தேதி தொடங்கும் யாகம் பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நம் பொருளாதார, உடல் நலம் சம்பந்தப்பட்ட அத்தனை பிரச்னைகளுக்கும் முழு தீர்வு கிடைக்கும் என மனதார நம்புவோம்....!


========================================================
அன்புள்ள டைரி கட்டுரையை படித்த நமது வாசக நண்பர் திரு. முத்துக்குமார். ஒரு அருமையான கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.....
பின்னூட்டத்தில் இருப்பதால் , உங்கள் பார்வைக்குத் தப்பிவிடக்கூடும் என்பதால்....... கீழே பகிர்ந்து உள்ளேன்.Blogger Muthukumar said...
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,
அம்மா, அப்பா மேல் பாசம் வைத்துள்ள பிள்ளைகளில் நானும் ஒருவன். என்னிடம் பழகும் நண்பர்களிடம் பெற்றோரை மதிக்க நான் கூறும் அறிவுரை, ‘உனக்கு ஒரு குழந்தை பிறந்து அது வளரும் போது அந்த மழழையின் செயல்களில் நீ படும் சந்தோசம்தானே உன் அப்பாவும், அம்மாவும் அடைந்திருப்பார்கள், ஒரு நிமிடம் யோசித்து பார்...’. எதிலும் மாற்று கருத்து கூறும் நிறைய நண்பர்கள்கூட இதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
முக்கியமாக நமது வாசகர்களுக்கு நான் சொல்லிக்கொள்ளும் சிறு வேண்டுகோள், “ தயவு செய்து குழந்தைகளை 12-ம் வகுப்பு வரை விடுதியில் (ஹாஸ்டல்) தங்கி படிக்க வைக்க வேண்டாம். முடிந்தவரை உங்கள் அருகில் வைத்திருக்க முயலுங்கள். இன்று கலாச்சாரம் என்ற பெயரில் நமது உறவுமுறைகளே அவர்களுக்கு தெரியாமல் போய்விடுகிறது. கல்வி என்பது இன்று மிக அவசியமான ஒன்று என்றாலும், சொந்தபந்தங்களின் உறவுமுறைகளும், பாசமும் வேண்டும். பெரும்பாலும் விடுதியில் தங்கி படிக்கும் மணவர்கள் விடுமுறைநாட்களில் வந்திருந்தாலும் தனிமையையே விரும்புகின்றனர் அல்லது அவர்களது நண்பர்களிடம் செல் பேசுவதையோ வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
எனது உறவினரின் நண்பர் வீட்டில், ஒருவர் புற்றுநோயால் அவதிப்பட்டு, மருத்துவர் ஒரு மாதம் இருப்பதே கடினம் என்று கூறியும் அவரது மகன் வேலைக்காக வெளிநாடு சென்றுவிட, 10 நாளில் அவனது தந்தை இறந்துவிட்டார். அவரது ஈமக்கிரியை செய்ய மகனால் வர முடியாதது அங்கு வந்திருந்தவர்களிடையே மிகுந்த வருத்ததை அளித்தது. இந்த மாதிரியான நிகழ்வுகளால் உறவுமுறைகளில் ஏற்படும் பாதிப்புக்களை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே அதன் வலி தெரியும்”...
நன்றி...
அன்புடன்,
முத்துக்குமார். எஸ்

=================================================================

கருத்துக்கள் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி. முத்து சார்! அருமையான கருத்தை எடுத்து சொல்லி இருக்கிறீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி...! வெளி நாட்டில் வேலை பார்ப்பவர்கள் மட்டுமா? இங்கே இருக்கும் சென்னையில் வேலை பார்ப்பவர்கள் கூட தன் வீட்டில் இறப்பு நடந்த பிறகு , மதியம் வாக்கில் தான் வந்து சேருகின்றனர் கிராமங்களில். அடித்துப் பிடித்து !?. இல்லாவிட்டால் ஊர் அசிங்கப் படுத்தி விடுமாம். இந்த அளவுக்காவது பாசம் இருக்குதே என்று தலையில் அடிக்க வேண்டி வருகிறது. இத்தனைக்கும் திடீர் மரணம் இல்லை. அவர்கள் காத்து இருந்து, காத்து இருந்து நிகழவில்லையே என்று சலித்த பிறகும் , நடக்காத மரணம்....! தாயாவது , தகப்பனாவது.....!  இவர்கள் எல்லாம் என்ன சாதிக்கப் போகிறார்களோ...?
அந்த உறவினரின் நண்பர் , எந்த தைரியத்தில் இன்னும் உயிரோடு இருக்கிறார்? ஒருவேளை தன் குழந்தைகளுக்கு ஒரு உதாரண தந்தையாக இருக்க நினைத்து சம்பாதிக்கிறாரோ ?

சமீபத்தில் ஒரு கோவை பக்கம் இருக்கிற builders - prospect ஒன்று பார்த்தேன். கிட்டத்தட்ட ஐந்து நட்சத்திர வசதிகளுடன் கூடிய apartments . காலனி வசதி. புல் செக்யூரிட்டி. Most attractive feature என்ன தெரியுமா? இறந்த பிறகு, சகல மரியாதைகளுடன் Funeral சடங்கு செய்து வைக்கிறார்களாம்...... நம்ம ஊர்ல தான் இருக்கிறோம். வயதான , வசதியான ஆட்கள் நலனுக்காக. Advt கொடுத்த ரெண்டு நாளில் எல்லாம் புக் ஆகிடுச்சு. மாடர்ன் முதியோர் இல்லம் போல, இந்த கான்செப்ட். பாம்பே, பெங்களூர் எல்லாம் இது எப்போவோ வந்து இருக்கும் போல...!


நல்ல ஸ்கூல்ல படிக்க வைக்கிறோம், CBSE English medium எல்லாம் ஓகே... நம்ம சக்திக்கு மீறி, நம்ம குழந்தைங்க நல்லா படிக்கணும்னு நினைச்சு படிக்க வைச்சு , கடைசியில அவன் அமேரிக்கா போறேன், ஐரோப்பா போறேன்னு கிளம்பிடுவான். கூட வாழ்க்கைத் துணை இருக்கிற வரை , பேச்சுக்காவது ஆளு இருக்கும்...அதுக்கு அப்புறம்? எத்தனை நாள் அமெரிக்காவில இருக்கிறது? ரெண்டு மாசம், மூணு மாசம் ஓகே.... அதுக்கு அப்புறம், சொர்க்கத்துக்கு போகும் வரைக்கும், நம்ம ஊர் தான் , என்னைக்கும் சொர்க்கம்....
அட போடா... வேலை , வெங்காயம்....! எனக்கு எங்க அப்பா ,அம்மா கிட்ட போகணும்னு லட்சக் கணக்கில் சம்பளம் வாங்கிய வேலையை கூட உதறித் தள்ளி, பிழைக்கத் தெரியாத மனுஷன் பட்டம் வாங்கும் ஆளும் இருக்கின்றனர்........


நீங்க சொன்ன மாதிரி, சின்ன வயசுலேயே பாசம், உறவுகள் மனசுல பதியலைனா, பின்னால இந்த கஷ்டம் எல்லாம் வரத்தானே செய்யும்...!
பெரியவர் பத்து நாள் கழிச்சு இல்லை, அந்த புள்ளை  போன அன்னைக்கே செத்து இருந்திருப்பார்.... மனசு அளவுல...!
அந்த பெரியவரின் ஆத்மா சாந்தியடைய மனமார பிரார்த்திப்போம்.

2 comments:

jayasundaram said...

Ennaku enna sollarathunu theriyala anna...

கோடியில் ஒருவன் said...

ஆசிரியர் அவர்களே,

உங்கள் நல்ல முயற்சி நிச்சயம் மகத்தான வெற்றி பெறும். ப்ராப்தம் இருப்பவர்கள் பலன் பெறுவார்கள்.

திரு.முத்துக்குமார் அவர்களே, மிகப் பெரிய வாழ்வியல் கருத்து ஒன்றை மிக மிக அனாயசமாக சொல்லிவிட்டீர்கள்

நீங்கள் கூறுவது முற்றிலும் சரி.

12 ஆம் வகுப்பு அல்ல டிகிரி படிக்கும்போதும் கூட பிள்ளைகள் நம் வீட்டில் நம்முடனே தங்கி படிக்கும் வகையில் தான் நாம் அனைத்தையும் பார்த்துக்கொள்ளவேண்டும். நம் கஷ்டங்களை பக்குவமாக சொல்லி தான் அவர்களை வளர்க்கவேண்டும். சிலத் தாங்கல படும் கஷ்டங்கள் பிள்ளைகளுக்கு தெரியக்கூடாது என்று நினைக்கிறார்கள். அது தவறு. தவறு. தவறு.

இல்லையெனில் நம் கண்ணை விற்று சித்திரம் வாங்கி அதை பற்றி பெருமைப்பட்டுக்கொள்ளும் கதை தான்.

இதை தனிப் பதிவாக பதிவு செய்த ஆசிரியருக்கு நன்றி.

- கோடியில் ஒருவன்

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com