Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

ருண, ரோக, சத்ரு நாசனம் (ஒரு ஸ்பெஷல் யாகம்) - Only for the blessed!

| Dec 23, 2012
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். மிக முக்கியமான ஒரு விஷயம் பற்றி இங்கு பார்க்கவிருக்கிறோம். உங்களின் சில முக்கியமான பிரச்னைகளுக்கு ஒரு முற்றிலும் பொருத்தமான , முழு முதல் தீர்வாக இது அமையவிருக்கிறது. இது ஒரு ஸ்பெஷல் யாகம் பற்றியது. 

இன்று ஆன்மிகம், ஜோதிடம் என்கிற பெயரில் பரிகாரம் பண்ணுகிறேன் பேர் வழி என்று கிடைத்ததை  சுருட்டும் போலிகள் தான் அதிகம் மலிந்து விட்டனர். முதலே இல்லாமல் வாய்ப் பேச்சையே மூலதனமாக வைத்து , மிகப் பெரிய வர்த்தகமாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். சரி, பரிகாரம் பலன் கொடுத்ததா என்றால், ஒரு சதவீதம் கூட முன்னேற்றம் இருக்காது. சுய நலம் பாராமல் , ஒழுக்கத்துடன் , நேம , நியதிகள் முற்றிலும் பிறழாமல் - ஆன்மீக பரிகாரம் பண்ணுபவர்கள் , வெகு சிலரே. அப்படி ஒரு சிலர் இருந்தாலும் அவர்கள் வெளிச்சத்துக்கு வருவது அபூர்வம்.

சரி, தலைப்பை பார்த்ததும் சரியாக புரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு யாகம் பற்றியது. என்ன என்று யோசிக்கிறீர்களா?

ருணம் என்றால் - கடன். ரோகம் என்றால் வியாதி. சத்ரு என்றால் என்ன வென்று உங்கள் எல்லோருக்குமே தெரியும். கடன், நோய், எதிரி என்று மூன்றையுமே முற்றிலும் அழிக்கும் யாகம் என்று அர்த்தம். 

ஜோதிட சாஸ்திரம் இந்த மூன்று பலன்கள் பார்ப்பதற்கு ஆறாம் வீட்டை பார்க்கவேண்டும் என்கிறது. ஆறாம் வீட்டுக்கு உரியவன் நிலை , அங்கு அமர்ந்து இருக்கும் கிரகங்கள், அந்த வீட்டைப் பார்வை இடும் கிரகங்கள் என்று மூன்று நிலைகளை பரிசீலிக்க சொல்கிறது. ஆறாம் வீட்டுக்கு உரியவன் தசையோ , புக்தியோ நடந்தால் - அந்த ஜாதகர் கடன், நோய் எதிரியால் அவதியுறும் நிலை ஏற்படுகிறது.


என்னதான் ஓகோவென்று வியாபாரத்திலோ, அல்லது லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் உத்தியோகத்தில் இருந்தாலும் - இந்த மூன்றில் ஏதோ ஒன்றில் அவதியுற்றால் - மனிதனுக்கு நிம்மதி எப்படி கிடைக்கும்? எவ்வளவு சம்பாதிச்சாலும் - லோன், வட்டி என்றே மொத்த பணமும் சென்று கொண்டே இருந்தால், வருடக் கணக்கில் இதே நிலைமை நீடித்தால் ?

வரும் சம்பாத்தியம் முழுவதும் அல்லது பெரும்பாலும் தனக்கோ அல்லது வீட்டில் இருப்பவர்களின் வைத்திய செலவுக்கே செலவழிக்கும் சூழ்நிலை இருந்தால்? செலவழித்தும் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லாத சூழல் இருந்தால் ....? எதிரி என்று இருப்பவனைக் கூட சமாளிக்கலாம். நண்பர்கள் போர்வையில் கூட இருந்தே குழி பறிக்கும் கூட்டம் எப்போதும் கூடவே இருந்தால் , எந்த காலத்தில் வாழ்க்கையில் ஏற்றம் பெறுவது?

சரி, எதனால் இந்த நிலை ஒரு ஜாதகருக்கு ஏற்படுகிறது?  தெரிந்தோ , தெரியாமலோ அடுத்தவர் சொத்தை, பணத்தை அனுபவிப்பவர்கள், நியாமில்லா முறையில் அதிகாரத்தை பயன்படுத்தி கையூட்டு பெறுபவர்கள், முறைப்படி உழைக்காத பணம் சொத்துக்களாக இருக்கப் பெற்றவர்கள், தனக்கு வசதி இருந்தும் - வைத்தியம் பார்க்க உதவி கேட்டு வாசல் தேடி வந்த முடியாத ஏழைகளுக்கு, உதவி மறுத்து அவமானப் படுத்துபவர்கள், தனது கீழ்த்தரமான செயலால் அடுத்தவர் குடும்பத்தை , வாழ்க்கையை அடியோடு சீர்குலைத்தவர்கள் -இந்த மாதிரி செய்கைகளை அந்த ஜாதகரோ , அல்லது அவர்களின் மூத்த தலைமுறையை சேர்ந்தவர்களோ செய்து இருந்தால் - அது குறிப்பிட்ட நேர காலத்தில் திரும்பி - அந்த ஜாதகர்களை தாக்குகிறது. 


இதற்க்கு ஏதாவது பவர்புல் பரிகாரம் இருக்கிறதா? உண்மையிலே அக்கறை கொண்டு, நியதிப்படி செய்பவர்கள் இருக்கிறார்களா?


எனக்குத் தெரிந்து ஒருவர் இருக்கிறார். கடந்த சில வருடங்களாக பழக்கம். நெருக்கம் அதிகம். ஓய்வு பெற்ற ஆசிரியர். ஒரு தீவிர வராஹி உபாசகர். சமஸ்கிருதம் முறையாக பயின்றவர்.தன்னைப் பற்றி வெளி உலகுக்கு தெரியப்படுத்துவதைக்  கூட விரும்பாதவர். முக்கியமாக அடுத்தவர் பரிகாரத்திற்கு என்று தரும் பணத்தில் இருந்து ஒரு ரூபாயை கூட தன்னோட சுய நலத்திற்க்காக பயன் படுத்தாதவர். வீட்டின் கன்னி மூலையில் , எப்போதும் சில மூலிகை கலந்த மண் பானை நீர் இருக்கும். யாருக்காவது பரிகாரம் என்று கூறினால் அந்த பானையில் இருந்து நீர் அருந்திய பிறகுதான் கூறுவார்.  இதனால் அந்த பரிகார பாவம் அவரை தாக்குவதில்லை என்று கூறுகிறார்.


முக்கியமாக இந்த ருண , ரோக சத்ரு யாகத்தை ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் பௌர்ணமி முடிந்த தேய்பிறை பஞ்சமியில் தொடங்கி - இடைவிடாமல் நாற்ப்பத்தெட்டு  நாட்களுக்கு தினமும் வீட்டில் அக்னி வளர்த்து ஹோமம் செய்கிறார். அவரது இளம் வயதில் நேர்ந்த சில அனுபவங்களுக்கு இழந்த இழப்புக்களுக்கு தீர்வு தேடி, மிகப் பெரிய யோகி ஒருவரின் அறிவுறுத்தலில் கடந்த பதினைந்து வருடங்களாக இந்த யாகம் நடத்தி வருகிறார்.
27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் , 9 நவக் கிரகங்கள் என ஒவ்வொன்றுக்கும் ஒரு நாள் வீதம் நாற்ப்பத்தெட்டு நாட்கள் முறைப்படி, அவற்றின் முழு பலன்கள் கிடைக்க முறைப்படி ஹோமம் நடத்தப்படுகிறது.


மார்கழி மாதம் என்பது தேவர்களுக்கு விடியலுக்கு முந்தைய , பிரம்ம முகூர்த்த காலம். தேய்பிறையில் இந்த யாகம் செய்வதால் நமது கெடுதல் பலன்கள் வெகு விரைவில் தேய ஆரம்பிக்கிறது. (இதே நாளில் தான் அன்னபூரணி விரதம் ஆரம்பித்து பதினேழு நாட்கள் தொடர்ந்து நடக்கும்.)


பரிகாரம் என்பது வெயில் காலத்தில் , லேசான மழை காலத்தில் கையில் ஒரு குடையோ , அல்லது ரெயின்  கோட்டோ கையில் எடுத்துக் கொண்டு வெளியில் செல்வதற்கு சமம். லேசான அவதியுடன் திரும்பி விடலாம். பரிகாரம் பவர்புல் என்றால்.


ஆனால் , நாம் செய்து இருக்கும் பாவம் கடும் புயலுடன் கூடிய மழைக்கு சமம் என்றால், ரெயின் கோட்டும் , குடையும் பிரயோஜனப்படாது. அதையும் தொலைத்து விட்டுத்தான் வர நேரும். கடும் பாவம் செய்தவர்களுக்கு பரிகாரம் செய்வது , பண விரயம் மட்டும் தான். கஷ்டங்களை அனுபவித்து விடுவது கர்மத்தையாவது குறைக்கும், இனி வர விருக்கும் நாட்களிலாவது.


நீங்கள் மேற்கூறிய தீய பலன்களால் அவதிப்பட்டுக் கொண்டு வாழ்க்கையில் விடியலுக்காக  தவிர்ப்பவர்களாக இருந்தால் - இந்த யாகம் உங்களுக்கு நிச்சயம் பலனளிக்கும். 


லாஜிக் , ப்ராசெஸ் எல்லாம் ஓகே. ஆனால் அனுபவம் தான் ஆசான்.
எனக்கு நேரடி அனுபவம் இருக்கிறது இந்த விஷயத்தில். சில வருடங்களுக்கு முன்பு இந்த யாகத்தில் பங்களித்ததின் பலன் , அதே வருடத்தில் , நான்கே மாதங்களில் ஒரு மிகப் பெரிய பிரச்னை முடிவுக்கு வந்து , சில மாதங்களில் எதிர்பாராத ஒரு உதவி கிடைத்து பெரியஅளவில் நிலம் வாங்க முடிந்தது.இன்றைக்கு அதே நிலம் வாங்க வேண்டும் என்றால் , குறைந்தது பத்து மடங்கு அதிகமாக நான் விலை கொடுக்க வேண்டி இருந்திருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக கடன் எல்லாம் தீரும்போது கிடைக்கும் மன நிம்மதிக்கு விலையே இல்லை எனலாம். 


உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று , இந்த பதிவை படிக்கும் இந்த நொடி நீங்கள் மனதார நம்பினால் , நீங்களும் இந்த யாகத்திற்கு மனமுவந்து உதவ எண்ணினால் என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் . (Editor@livingextra.com) வங்கி , அக்கௌன்ட் நம்பர்  விவரங்கள்  தெரியப்படுத்தப்படும். Please mention the subject as " Special Yaagam"

PAYPAL  மூலம் அனுப்ப விரும்புபவர்கள் விரும்பினால் என்னுடைய ID யிலேயே அனுப்பலாம். உங்கள் சார்பாக நானே அந்த பெரியவரிடம்  சேர்த்துவிட முடியும். ( PAYPAL ID : Rishyasirungar@gmail.com)

பணம் அனுப்ப விருப்பவர்கள் , உங்கள் பெயர் , குலம் - கோத்திரம் (தெரிந்தால் குறிப்பிடவும்). பிறந்த நட்சத்திரம், முகவரி , முக்கியமான கோரிக்கை விவரங்களுடன், நீங்கள் அனுப்பிய தொகை விவரத்தையும் குறிப்பிட்டு எழுதவும்.
ஹோமத்தின் போது உங்கள் பெயரை உச்சரித்து நடத்த இந்த குறிப்புக்கள் தேவைப்படுகிறது.


நீங்கள் அளிக்கும் காணிக்கை எவ்வளவு என்பது முக்கியம் அல்ல. உங்கள் பங்களிப்பு இருந்தாலே போதும்.நீங்கள் பணம் அனுப்ப விரும்பினால் வந்து சேர வேண்டிய கடைசி தேதி : 02.01.2013


இந்த யாகம் முடிந்து மீதம் இருக்கும் தொகை முழுவதும் சாதுக்களுக்கு வஸ்திர தானம் செய்ய பயன்படுத்த விருக்கிறார். அதனால் மன நிம்மதி கிடைத்து , நிம்மதியான தூக்கம் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.
நீங்கள் பங்கு கொண்டாலும் , கொள்ளாவிட்டாலும்  வராஹியின் அருள் நம் அனைவருக்கும் தொடர்ந்து கிடைக்கட்டும்.!

Wish you all the best!


வாழ்க அறமுடன்! வளர்க அருளுடன்!

7 comments:

Ganesan said...

Superb sir!! thank you so much!! i ill send u a mail in this hommam :)

ஓம்போகர் said...

தன்னுடைய வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களுக்கான காரணம்,தன்னுடைய கர்மவினைகளே என்று ஒரு சிலரே உணருகிறார்கள்.

பாவத்திற்கு புண்ணியங்கள் ஈடு கிடையாது.

நற் கர்மாக்கள் செய்வதோடு,மேற் கொண்டு தீய கர்மாக்களை செய்யாமல் தவிர்த்து வாழ்வதே,மிக சிறந்த இறை பரிகாரமாகும்.

Sunish said...

Dear Rishi Sir,

You are feeding us with more valuable information, really stimulates us. Many thanks, have send email to you requesting for the Special Yagam details.

Thanks,
Sunish

Gnanam Sekar said...

.நல்ல தகவல் . நன்றி அய்யா .

KING said...

இப்படி தன்னலம் கருதாமல் அடுத்தவருக்காக செய்கிறார் இதில் இருந்தே தெரிகிறது இந்த யாகத்தின் மூலம் கிடைக்கபோகும் பலன்


RAJA

Krish said...

வணக்கம் ஐயா வணக்கம், என்னால பணம் அனப்ப முடியல என் பெயரில பூஜை செய்ய வேண்டிய அவசியமில்லை, ஆனால் நம்ம ரத்தம் கற்பிழந்து, மானமிழந்து, ஏன் கேட்க நாதியில்லாம அழிஞ்சிகிட்டிருக்கு இலங்கையில அவங்கள கப்பாத்த ஈழ தமிழர்கள் பெயரில, தனி தமிழீழ நாடு வேண்டும். அதற்கு தனி தமிழீழ நாடு பெயரையும் சேர்த்து நடத்துமாறு கேட்டுக்கிறேன். நீங்க நடத்துற யாகத்தால அவங்களுக்கு நல்லது நடந்தா சந்தோசம். அன்புடன் உங்கள் வாசகன் கிருஷ்ணமூர்த்தி.செ

Aru Arumugam said...

ஐயா,
இந்த யாகம் இந்த வருடம் நடத்தப் படுகிறதா? தெரியப் படுத்தவும்

நன்றி
ஆறுமுகம்

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com