Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

ராகு - கேது பலன்கள் & ஜோதிட பாடங்கள்

| Dec 19, 2012
அன்பு நண்பர்களுக்கு வணக்கம். நமது ராகு / கேது பலன்கள் கட்டுரைக்குப் பிறகு ஜோதிட பலன்கள் கேட்டு வந்து இருக்கிற கடிதங்கள் நான் எதிர் பார்த்ததைவிட அதிகம். சென்ற ஞாயிற்றுக்கிழமையே அனைவருக்கும் பதில் அனுப்பிவிடலாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால், ஒரு பத்து சதவீதம் கூட இன்னும் முடியவில்லை. பெரும்பாலானோர் , ராகு / கேது பலன் மட்டும் இல்லாது , சில குறிப்பிட்ட கேள்விகளுடனும் , பொதுப் பலன்கள் வேண்டியும் அனுப்பி இருந்ததால் - பார்ப்பதுதான் பார்க்கிறோம் முழுவதுமாக அனலைஸ் செய்து அனுப்பி விடலாம் என்று ஒரு நாளைக்கு ரெண்டு / மூன்று வீதம் அனுப்பி வருகிறேன். அதனால் , கேள்விக்கு பதில் வராதவர்கள் கவலை கொள்ள வேண்டாம். வெகு நிச்சயம் இன்னும் சில தினங்களில் உங்களுக்கு மெயில் வந்து சேரும். (இந்த டிசம்பர் மாத இறுதிக்குள்).

ஒரு விஷயம் மட்டும் இங்கே தெளிவு படுத்த விரும்புகிறேன். உங்கள் பிறந்த ஜாதகத்தில் , யார் யாருக்கெல்லாம் - மேஷத்தில் ராகுவோ / கேதுவோ இருந்தால் , அவர்கள் அனைவரும் இன்னும் ஒன்றரை வருட காலத்துக்கு கொஞ்சம் கவனமுடன் இருப்பது நல்லது. ஜோதிட சாஸ்திரப்படி - ஒரு அவமானம் , தலைகுனிவு , மனது வருத்தப்படும் ஒரு நிகழ்வு நடப்பதற்கு சாத்தியம் அதிகம். குடும்பம் / உத்தியோகம் என்று எதிலும் ஒரு பிடிப்பற்ற , விரக்தி அடையும் நிலைமைக்கு தள்ளும்.  பொருளாதார ரீதியாக ஒரு ஸ்திரமற்ற நிலைமைக்கு , கிட்டத்தட்ட ஏழரை / அஷ்டம சனி காலத்துக்கு சமமான ஒரு நிலையைப் போல இருக்கும். கடந்த ஒரு மாதமாகவே இந்த நிலை அவர்களுக்கு தோன்றி இருக்க கூடும்.  ( ஒரு மாசமாவா? காலம் முழுக்க அப்படியே தான் சார் இருக்கு - காசு விஷயத்துலன்னு சொல்றீங்களா? - உங்களுக்கு ஒரு நல்ல பரிகாரம் அடுத்த கட்டுரையில் சொல்கிறேன்...) ஏற்கனவே உச்ச சனியுடன் ராகு இணைகிறார். சனி பகவானுக்கு டபுள் ஆக்ட் கொடுத்த கணக்கு இது.
முக்கியமாக இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட ஜாதகர்களை , கொஞ்சம் கவனமுடன் வாழ்க்கையை அணுக வேண்டி அறிவுறுத்தவே - ஜாதக குறிப்புக்கள் அனுப்ப சொல்லி இருந்தேன்.

இந்த அமைப்பு இருக்கும் எல்லோருக்குமே இப்படியா என்றால், இல்லை . பெரும்பாலோருக்கு உண்டு. நல்ல தசா , புக்தி நடந்தால் கவலை இல்லை. எனினும் கவனமுடன் இருப்பது நலம்.

இந்த மாதிரி அமைப்புள்ளவர்கள் -  விநாயகர் வழிபாடும் / ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மன் வழிபாடும் செய்துவர - நிலைமை மாறும். பெரிய அசம்பாவிதங்கள் நிச்சயம் நடக்காது. தினமும் ராகு கால நேரத்தை பயன்படுத்த முடியாதவர்கள் - வார விடுமுறை நாட்களில் அவசியம் அருகில் இருக்கும் அம்மன் ஆலயம் சென்று குறைந்தது ராகு காலம் முடியவிருக்கும் அரைமணி நேரமாவது சென்று வணங்கி வரவும். அதாவது வீட்டில் ஓய்வில் இருந்தால், அன்றைய தின ராகு கால நேரம் உங்களுக்கு ஆலயத்தில் தான் இருக்க வேண்டும். இதை நீங்கள் கடைபிடித்தாலே , எப்பேர்ப்பட்ட இடையூறும் நிகழாது . இது நிச்சயம்.  விநாயக பெருமானுக்கு சதுர்த்தி விரதம் இருக்கலாம். இது கேதுவால் வரும் வினைகளை குறைக்கும்.


தினமும் குறைந்தது பதினைந்து நிமிடமாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தில்  " ஓம் சிவ சிவ ஓம் " மந்திர ஜெபமோ அல்லது சொர்ண ஆகர்ஷன பைரவர் மூல மந்திரமோ ஜெபிப்பது நல்லது. இரண்டையும் ஒருவரே சொல்ல வேண்டாம். யாருக்கு எது சூட்டபிள் என்று ஜாதகம் பார்த்த பிறகு தெரியப்படுத்துகிறேன். இது சனி பகவானின் தாக்கம் குறைய கைகொடுக்கும்.

முறை தவறிய உறவுகள் இருந்தால் முழுவதும் துண்டிப்பது நல்லது. முறைகேடான உறவுகளுக்கு வாய்ப்பு இருந்தாலும், தவறியும் சந்தர்ப்பம் கொடுத்து விட வேண்டாம். கட்டம் கட்டி கவிழ்த்துவிட காத்து இருப்பார்கள். ஜாக்கிரதையுடன் இருங்கள். 


மேலும் சில எளிய பரிகாரங்களை - சம்பந்தப்பட்ட ஜாதகர்களுக்கு , மெயிலில் தெரியப்படுத்துகிறேன். 


நான் ஏற்கனவே " கல்யாணத் தேனிலா" கட்டுரையில்  ப்ராமிஸ் பண்ணியபடி - குழந்தை பாக்கியம் சம்பந்தமாக & கடன் நிவாரணம் பொருளாதார மேம்பாடு சம்பந்தமாக - இரண்டு ஸ்பெசல் கட்டுரைகள் இந்த வாரத்தில் வெளியாகவுள்ளன. படித்துப் பயன் பெறுங்கள்


=================================================

ஜோதிட பாடங்கள் நமது தளத்தில் தொடர்ந்து படித்த நண்பர்கள் சிலர் , மீண்டும் தொடர்ந்து பதிவிடும்படி வேண்டுகோள் விடுக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் இந்த பதிவுகள் வெளியிடப்பட்டு ஒவ்வொரு பதிவும் பத்தாயிரம் முறைக்கு மேல் பார்வையிடப்பட்டு இருந்தாலும், எனக்கு இதில் எவ்வளவு பேர் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மெயிலிலோ , பின்னூட்டம் மூலமாகவோ தொடர்பு கொண்டவர்கள் வெகு சிலரே. குறைந்தது ஒரு நூறு பேராவது உண்மையிலேயே ஆர்வமாக இருந்தால் - மீண்டும் ஒரு வருடத்திற்கு - வாரம் ஒரு பதிவு வீதம் ஒரு ஐம்பது பதிவுகள் வெளியிடலாம் என்று நினைக்கிறேன். வெறுமனே ஜோதிட நுணுக்கங்கள் மட்டுமின்றி, ஆன்மீக புத்துணர்வு அளிக்கும் வகையில் ,  வாழ்க்கை மேம்பாட்டுக்கு உதவும் வகையில் , உத்வேகமும் , உற்சாகமும் அளிக்கும் வகையில் அந்த பதிவுகள் அமையும். ஆனால் , அவை நீங்கள் அளிக்கும் ஆதரவைப் பொறுத்து தான் இருக்கிறது. ஆர்வம் இருப்பவர்கள் பின்னூட்டம் இடவும். பார்க்கலாம் எத்தனை பேர் இதில் ஈடுபாடு காட்டுகிறீர்கள் என்று. வழக்கமான Conventional மெத்தட் இல்லாமல் , எளிமையாக, சுவாரஸ்யமாக கொடுப்பதற்கு நான் தயார். முழுவதும் படித்து முடித்தவர்கள் , ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து , நீங்களே ஜாதகம் எழுதி , கணிக்கும் வரை பக்காவாக ரெடியாகி விடுவீர்கள். 

ஆனால் சில கண்டிஷன்கள் உண்டு. படித்து முடிக்கும் காலம் முழுவதும் அசைவம் தவிர்க்கவேண்டும். தினமும் குறைந்தது பதினைந்து நிமிடமாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தில்  " ஓம் சிவ சிவ ஓம் " மந்திர ஜெபமோ அல்லது சொர்ண ஆகர்ஷன பைரவர் மூல மந்திரமோ ஜெபிக்க வேண்டும். யார் எதை ஜெபித்தால் உடனடி பலன்கள் கிடைக்கும் என்று , நீங்கள் மெயிலில் தொடர்பு கொள்ளும்போது தெரிவிக்கிறேன். நீங்கள் பிறந்த லக்கினம் & பிறந்த ராசியை தெரியப்படுத்தவும்.  Mail me at :  Editor@livingextra.com.
இவை எல்லாம் தவிர , நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலும் அடுத்தவர் மனதைப் புண்படுத்தும்படி, உங்கள் மன சாட்சிக்கு விரோதம் இல்லாமல் இருக்க வேண்டும். இதுக்கு நீங்க ரெடின்னா , நான் ரெடி. வரும் பௌர்ணமியிலிருந்து , பாடங்கள் தொடங்கி விடலாம்.கண்டிஷன் எல்லாம் பயங்கரமா இருக்கேன்னு பார்க்காதீங்க. குரு தட்சணை மாதிரி எடுத்துக்கோங்க.ஜோதிடம் பயில இருப்பவர்கள் மட்டும் இல்லாது , நம் வாசகர்கள் அனைவரும் மேலே குறிப்பிட்ட பழக்கங்களை கடைபிடிக்கலாம். இது எல்லாமே  உங்கள் வாழ்வின் முன்னேற்றத்துக்கு, இன்னும் ஒரு படி உங்களை மேலே அழைத்துச் செல்லும்.


ஜோதிட பதிவுகள் வந்தாலும், அதை நமது பிற வாசகர்களும் பார்வையிடுங்கள். ஒவ்வொரு பதிவிலும் , சில முக்கியமான , அருமையான தெய்வீக தகவல்களும் உள்ளடங்கியே இருக்கும்.


மீண்டும் அடுத்த ஒரு சிறப்பு பதிவில் உங்களை சந்திக்கிறேன்....!
வாழ்க அறமுடன்!
வளர்க அருளுடன்!

57 comments:

நா.பத்மநாபன் said...

மிக்க நன்றி ஆசிரியர் அவர்களே

RAMESH V said...

Thanks for your kind information.

யவனிகை said...

கண்டிப்பா ஜோதிட பதிவு போடுங்கண்ணா, பரிகாரம் சொல்றேன் அப்டிங்கற பேர்ல, பேசி வச்சிக்கிட்டு கமிஷன் அடிக்கிற இந்த காலத்ல, நீங்க ஜோதிட பதிவு போட்டிங்கன்னா உண்மைலேயே எங்கள்ல பல பேருக்கு பெரிய உதவியா இருக்கும்,
புண்ணியம் கட்டிக்கிறதுக்கு கசக்கவா செய்யிது, குரு தட்சணையா இது கூடவாணா பண்ண மாட்டோம், பௌர்ணமிக்காக வெய்ட் பண்றோம்
ஓம் க்ரியா பாபாஜி நம ஓம் ஓம் நமச்சிவாய

THEIVAM said...

குருவே சரணம், உங்களுக்கு குரு தட்சணை கொடுத்தாச்சுன்னு நினைச்சுகோங்கோ, பட் இந்த அசைவம் மேட்டர் தான்.......... கொஞ்சம் முடியும்னு தெரில, வேற ஒன்னும் இல்ல சின்ன வயசுல இருந்தே அசைவம் சாப்பிட்டாதான் உடம்புக்கு தெம்பா இருக்கும் அப்படின்னு சொல்லிட்டாங்க அப்புறம் ருசி வேற மசாலா வாசம் இதெல்லாம் தான் காரணம். பட் உங்கள மாதிரி குரு அருள் இருந்தா கண்டிப்பா என்னால முடியும்கிற நம்பிக்கை இருக்கு. நான் ரெடி. என்னோட ராசி, லக்னம் மெயில் பண்ணுறேன். நீங்க ஆரம்பிங்க ரொம்ப ஆர்வமா இருக்கேன்.

Anbu Karasu said...

Thank you and waiting for New Informations

raguraman said...

I am very interested to study the Joditham. I am promising, to follow your instructions.Thank you

P.S.Karthikeyan Sagadevan said...

எங்களுக்காக ஆசிரியர் நேரம் ஒதுக்கியதற்கு மிக்க நன்றி. பதிவிற்காக காத்திருக்கிறோம்.

arul said...

thanks waiting for new posts

Balamurugan Jaganathan said...

மிக்க நன்றி ஆசிரியர் அவர்களே

ARUL said...

I am very very interested to study.

Bharathi said...

நிச்சயமாக...... உங்களது ஜோதிட பாட பதிவை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறேன்...

SHINE.com said...

Iam expecting your new jothidapadam and aslo following the conditions thanks Rajendran

virutha said...

I am eagerly waiting for your jothidapadam post n try to follow ur conditions sir since avoiding non-veg is the little tough but have confidence to overcome.Thank you sir.

VIJAY - HARISH said...

Thanks😃

நந்தவனம் said...

sir manichukonga Ennoda sathagam unga kitta anupi iruken thirumbavum ippa Anupuren ,Neega mela sonthaupura irukuramathuri iruku koncham parthu sollunga sir

D.Soundararajan said...

sure sir,We are ready ...eagerly waiting for your lessons...

NAHARANI said...

ரிஷி சார் நீங்கள் சொல்லி நாங்கள் தயார் // ஏற்கனவே 2012 ஜனவரி முதல் தேதி ஆரம்பித்து இன்று வரை சுத்த சைவம் // மற்றயவைகும் ரெடி// மெயிலில் மீதி தேவையான விவரம் // நன்றி குருவே நாகராணி சென்னை

Sajo said...

Sir, Plz start a jothidam class. i am searching good teacher for this for a long time. we shall follow your requests :)...............

Amuthan Sekar said...

Eagerly waiting for your lessons Mr. Rishi. I am a regular reader/fan of your great blog. Thank you very much for your great posts.

R.Purushothaman said...

Thank you very much sir.

anbudan PONNIvalavan said...

respected sir
eagerly waiting for your lessons; please start
thanks
aruna ponnivalavan

Srivathsan Margan said...

Eagerly awaiting your lessons. Thank you

shiva said...

Please write sir, we are expecting with interest.. Thank you.

M.A.Nandha Kummar said...

Thanking you and I am eagerly awaiting for the training with disipline
Nandhakummar

Unknown said...

Hari om.we wait for ur lessons.thanku

Sunish said...

Hi Rishi Sir,

Waiting for this news for a very long time, if I am not wrong since May 2012. Please do start the lesson, also I have sent few queries/doubts in the earlier lesson, sent reminder email as well. Please clarify my doubt.
Hats off to your noble deed.

sri said...

ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்,

ஐயா ஜோதிட பாடத்தை முழுவதும் படிக்க மிகவும் ஆவல். சிறு வயதில் இருந்தே சைவ போசனம்தான் சாப்பிடுகிறேன். எங்கள் ஜாதகத்தை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

globetrotter said...

Dear Mr.Rishi, that's excellent news that you are planning to continue the lessons again.

Keep up the good work

Cheers,
prasanna

Muthukumar said...

நல்ல விஷயத்தை தெரிந்துகொள்ள எதையும் தவிர்க்கலாம்.... I am already veg...

நன்றியுடன்,
முத்துக்குமார்.ச.

Chandru said...

thanks for your kind information

elil said...

Nice post sir I am very eager read u r next post on astrology . Iam sending my birth chart see wether I can learn astrology .

shiva said...

Dear sir, we are waiting for your horoscope lessons. Please start writing here sir..

Gokul said...

Dear Rishi Sir,

Morning. Pls Continue the works with same Spirit Sir.. Its Really Encouraging and useful to all of us..

People Living in Abroad like me is the good moral support..
Best Wishes for this New year Sir...

Gokul

Jothimanikandan N said...

To learn astrology we must give Guru Thatchina, but you are asking us to forgive some bad habits and to follow some good habits. I appreciate you and proud to be as your Sisyan. I will strictly follow your instructions. Please post your Astrology lessons. I have also emailed my details. Eagerly waiting for your Astrology Lesson Posts.

Senthil said...

we are eagerly waiting

bala said...

bala said
i am eager to learn jothida paadam , thank you guru, follow your instructions

subramanian said...

i am waiting for your lession thank you

perumal shivan said...

jothida pathivu podunga rishi sir , athuvum aanmigaththin oru vazhithaane enraikku athiga padiththavargal elaingargal jothidaththai virumbugiraargal.
nanri.

Lotus said...

We are all waiting for the lesson.
Kandipa jodhida padivugal podavum. Thank you in advance


chandirasekaran anjur said...

ஐயா! என்ன எப்படி சொலிட்டிங்க உங்க பாடத்த தவராம படிச்சுட்டு வர்றேன்,கிட்ட தட்ட 20 படங்க்கல என் டைரில் எழுதி வச்சிருக்கேண் என் கனினியில் save பன்னி வசிருக்கேன்,திரும்ப திரும்ப அத படிக்கிறேன்,மெலும் பதிவுகல தெடிட்டு இருக்கேன்,ஆனா கிடக்கில ,ஜொதிட பாடங்கல் என்ர தலைப்பில்,போனா,ஜொதிடபாடம் ஒரு டுபாகூர்சமச்சாரம்,என்ர கட்டுரை மட்டுமெ வருது,தயவு செய்து அந்த தலைப்பில் ஜோதிடபாடம் மட்டுமெ வைங்க, நீங்க தொடர்ந்து இத எழுதனும்,please..

நெஞ்சினிலே...நெஞ்சினிலே said...

குருவே இதுக்குதான் இதனை நாள காத்திருக்கேன், ஆரம்பிங்க குருவே படிக்க நாங்க ரெடி. இறைவனின் நல்லாசியுடன் ஒரு நல்ல அறிவியல தெரிஞ்சுக்க போறோம்னு மனசு துடிக்குது. என் ஜாதக விபரங்களை உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்புகிறேன். விஜயராகவன்.ச

CHANDRASEKAR said...

Dear rishi sir. Pls write your jothida padam becous i read your artical regularly.i have noted twenty lesson in my dairy and saved my sistem.read it again and again.so many doughts i have.i ask that your mail personaly .so pls continue your jothida padam.....

Nithi said...

Annaa, Please start. We are with you.

Nithi

கோடியில் ஒருவன் said...

குரு... சிஷ்யன்.. வாத்தியார்...ஜோதிட பாடம்.... ஹூம்.....ஹூம்.. ஒன்னுமே விளங்கலை.

பட்டிக்காட்டுல வயல்வெளியை தவிர வேற எதையுமே பார்த்து பழக்கப்படாத ஒருத்தன் சிங்கப்பூர் ஷாப்பிங் சென்டருக்கு நடுவாலே நின்னு மேல பார்த்தா அவனுக்கு என்ன தோணுமோ அப்படி தோணுது எனக்கு இந்த பதிவை பார்க்கும்போது.

காலண்டர்ல பேப்பர் கிழிக்கும்போது ராசிபலன் பாக்குறது தான் நம்மோட அதிக பட்ச ஜோதிட ஈடுபாடு. (அதைக்கூட என்னைக்காவது ஒரு நாள் பார்க்கும்போது நமக்கு டெரர் கிளப்புற மாதிரியே போட்டிருப்பாங்க!).

அது சரி. ரிஷிக்கு எங்கேடா சீடர்கள்னு இத்தனை நாள் யோசிச்சிக்கிட்டுருந்தேன். இம்புட்டு பேர் இருக்குறதை பார்க்கும்போது தான் புரியுது ரிஷி சாதாரண ரிஷி இல்லே.. ராஜரிஷின்னு.. (சரியாத் தானே பேசுறேன்? ஓவரா இல்லேல்ல? ஓ.கே ஒ.கே)

- கோடியில் ஒருவன்

சரவணன் said...

ரிஷி சார், நீங்க சொன்னீங்க "குறைந்தது ஒரு நூறு பேராவது உண்மையிலேயே ஆர்வமாக இருந்தால் - மீண்டும் ஒரு வருடத்திற்கு - வாரம் ஒரு பதிவு வீதம் ஒரு ஐம்பது பதிவுகள் வெளியிடலாம் என்று நினைக்கிறேன்"...சார், தயவு செஞ்சு நூறு பேர் கணக்கு பாக்காதீங்க...உங்க பதிவுகள படிக்கற சிலருக்கு சில விசயங்கள ஆர்வம் இருக்காது...சிலருக்கு சில விசயங்கள ஞாபகம் வெச்சுக்க முடியாது...சிலரால உங்க Dec 19 பதிவை படிக்க முடியாம போகலாம்...(நானும் இன்னக்கி தான் படிச்சேன், ரெண்டு நாள் சென்னை office'க்கு போனதாலே miss பண்ணிட்டேன்). சார், கொஞ்ச பேர் ஒரு ஸ்கூல்'ல படிக்க முடியலங்கருதுக்காக, ஸ்கூல் பாடம் நடத்தாதுன்னு சொன்னா, பாடம் படிக்க ஆர்வமா இருக்குற நாங்க எங்க போறது, என்ன பண்ணறது? So ஒரு அன்பான வேண்டுகோள், ஜோதிட பாடம் படிக்க நாங்க ஆர்வமா இருக்கோம். நீங்க தயவு செஞ்சு பாடம் தொடங்குங்க. உங்க blog பதிவுகளால், நீங்க எங்க பசிய தணிச்ச மாதிரி உங்களால நாங்களும் அடுத்தவங்க பசிய தீர்ப்போம்.

உங்களோட முன்னாடி ஜோதிட பாடங்களை print out எடுத்து வெச்சுருக்கேன். கடந்த 6 மாசமா அசைவம் சாப்பிடறதை விட்டுட்டு, உடம்பை கொஞ்சம் கொஞ்சமாக சுத்தபடுதிட்டு வரேன். நம்ம பசிக்கு சாப்பிட எவ்வளவோ இருக்க, நாக்கு ருசிக்கு இன்னொரு உயிரை கொன்னு தின்னோமேன்னு கஷ்டமா இருக்குது. கடைல விக்குறு மீன்களை பார்த்தா, அடுக்கி வெச்ச பிணங்களை மாதிரி இருக்குது. நல்லது நடக்க கெட்டதை விடுவது தப்பே இல்லை. So, கொஞ்ச கொஞ்சமா கவிச்சி சாப்பிடறதை விடுங்க Friends....! Non-Veg விடுவதற்கு இன்னும் கஷ்டம்ன்னு சொல்லுறவங்களுக்கு ஒரு வாக்கியம் சொல்லுறேன்..."நாம ஒரு பிணம்தின்னி அல்ல"

Harish said...

I'm very much interested. I took printout of all the 'Jothida paadangal' and stored in safely. Very informative.

Saravanakumar Karunanithi said...

Thank you so much, Waiting for it :)

Gopinathan m.v. said...

Guruji,
It is nice to read Jothidam lesson publised by you. It is very clear and easy to understand. I request you to continue to publish.

Jeya said...

Rishi Sir I am also waititing for your lesson.
I'm very much interested.please continue your lesson.

Sakthivel V.P said...

Dear Rishi Sir,

I am also ready to learn jothidam from you. I am eagerly waiting for this kind of article.

இராஜராஜேஸ்வரி said...

ஜோதிட பாடங்கள் அறிய காத்திருக்கிறோம் ...

Apc Manikandan said...

sure v will follow u

kala vicknesh said...

ஜோதிட பாடங்கள் அறிய காத்திருக்கிறோம்

Dinesh Babu MP said...

Sir,I have sent my lagnam and rasi.. waiting to learn jathagam

Satheesh Kumar said...


குருவே சரணம், உங்களுக்கு குரு தட்சணை கொடுத்தாச்சுன்னு நினைச்சுகோங்கோ!
ஜோதிட பாடங்கள் அறிய காத்திருக்கிறோம்.

ram said...

I m eager to learn from you..

M Gopi said...

Dear Sir,

Really nice post of your Jothidam sutchamam lessons.. ur lessons r all known our life.. Jathakam is a very critical like a chess game.. please continued ur lessons sir awaiting for your posts..

Yours,
Gopi

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com