Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

அனைத்து கஷ்டங்களும் ஒரு சுகமான அனுபவமே!!!

| Dec 17, 2012

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/health/pregnant1.jpg

எல்லாக் கஷ்டத்தையும் , மனுஷங்க மேல இறக்கி வைக்க முடியாது. அது நம்ம குடும்பமா இருந்தாலும் சரி , இல்லை நெருங்கிய நண்பர்களா இருந்தாலும் சரி. ஆனா, ஒருத்தர் மேல நீங்க தைரியமா இறக்கி வைக்கலாம் . அந்த நம்பிக்கைக்கு உரியவன் ஆண்டவனே. பாரம் இறங்கினால் சுமை குறையும். சுமை குறைந்தால் மனம் லேசாகும். மனம் லேசானால் வாழ்வின் ருசி வளரும். எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண்போம். அவற்றின் மீது அன்பு செய்வதே உண்மையான பக்தி வழிபாடு.
உலகம் முழுவதும் கடவுள் இல்லை என்று சொன்னாலும், எனக்குக் கடவுள் என்றும் உண்டு’ என்றார் மகாத்மா காந்தி. 
 
திருமுருக கிருபானந்த வாரியார் , இறைவன் தனக்கு உதவியதை நிரூபித்து உலகுக்கே எடுத்து சொன்னவர். 

வாரியார் சுவாமிகளின் சிறு வயதில் ஒரு காலில் கண்ணாடி குத்தி பெருத்த சேதத்தை உண்டு பண்ணி விட்டது. புண் பழுத்துப் போய் காலையே எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆனார். மருத்துவர், காலை எடுத்து விட ரூ 500 கேட்டார்.

வாரியார் சுவாமிகள், " ஒரு காலை எடுப்பதற்கு இந்த மருத்துவருக்கே இவ்வளவு கொடுக்க வேண்டும் என்றால் , இரண்டு கால்களை தந்த முருகனுக்கு நான் எவ்வளவு கொடுக்க வேண்டும் " என்று யோசிக்கலானார். காலை , மாலை என்று இருவேளைகளில் 41 நாட்கள் சிந்தாரிப்பேட்டை முருகன் கோயில் பிரகாரத்தைச் சுற்றி வந்தார்.
புண் இருந்த அடையாளமே காலில் இல்லாமல் போனது. 


இது உண்மையில் நடந்த சம்பவம். ஒரு அளவுக்குத் தான் நமக்கு வர்ற கஷ்டங்களை சமாளிக்க முடியும் கையை மீறி விஷயங்கள் நடக்கும்போது , ஆண்டவான்னு அவரை சரணடைபவர்களை , அவர் கை விடுவதில்லை . நம் ஒவ்வொருவருக்குமே இதைப் போன்ற அனுபவங்கள் அடிக்கடி நிகழும் . ஆனால் பிரச்னை முடிந்தவுடனே , நாம் அவனது கருணையை நினைத்துக்கூட பார்ப்பதில்லை - திரும்ப ஒரு பூதாகரமான பிரச்னை வரும்வரை...!
==================================================

அற்புதமான ஆன்மீகப் பேச்சாளர் திரு. சுகி. சிவம் அவர்கள் கூறிய கருத்து ஒன்றை இங்கே பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். படித்துப் பாருங்கள் :

வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்களை பிற்காலத்தில் படாமல் இருக்க இளமையில் கொஞ்சம் கஷ்டப்படலாமே?


 காலை 5 மணிக்கு எழுவது கஷ்டம். ஆனால் பிற்காலத்தில் படுக்க இடம் இல்லாமல், குடியிருக்க வீடு இல்லாமல் கஷ்டப்படாமல் இருக்க படுக்கையை விட்டு 5 மணிக்கே எழலாமே!


உடலில் முதுகுவலி, மூட்டுவலி என்று திணறாமல் இருக்க உடற்பயிற்சி என்று கஷ்டப்படலாமே!


பட்டினி அல்லது கடை உணவு என்கிற பெருங்கஷ்டம் ஏற்படாமல் இருக்க சமையல் என்கிற ஒன்றை அறிய அல்லது சமைக்க கஷ்டப் படலாமே...நானும் அறிவேன் இது எல்லாருக்கும் பொருந்தாது என்று, இருந்தாலும் முடிந்தவரை முயற்சி செய்வோம் பிற்காலத்தில் மற்றவரை சார்ந்திராது இருக்க.ஒழுங்கற்ற, எதிர்பாராத கஷ்டத்தைத் தவிர்க்க திட்டமிட்ட கஷ்டங்கள் படுவது அவசியம்.சிரமங்கள் நம்மை பலப்படுத்துகின்றன.

கஷ்டங்கள் நம்மை வலுப்படுத்துகின்றன.துயரங்கள் நம்மை உருவாக்குகின்றன. எதிர்பாராத சிரமங்களைத் தவிர்க்க எதிர்பார்க்கும் சிரமங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். 

அனைத்து கஷ்டங்களும் ஒரு சுகமான அனுபவமே!!!
========================================================================

இது நான் சமீபத்தில் படித்த, ஒருவர் பகிர்ந்துகொண்ட அனுபவம்: ஒரு நாள் பணி நிமித்தமாக ஒரு மணி நேரம் காரில் காத்திருக்க வேண்டிய நிலை. அப்போது நான் கண்ட காட்சி என் வாழ்க்கையில் திருப்பு முனையாக இமைந்தது.
நான் காத்திருந்த இடத்தின் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் பழைய பேப்பர் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பவர், அந்த குப்பையைக் கிளறி அவருக்குத் தேவையான சில பொருட்களை எடுத்துச் சென்றார்.பின் சிறிது நேரம் கழித்து மற்றொரு பழைய பொருள் சேகரிப்பவர் வந்து அப்படியே செய்தார். அது போல் அந்த ஒரு மணி நேரத்தில் ஆறு நபர்கள் வந்து, அந்த குப்பைத் தொட்டியைக் கிளறி தேவையானது கிடைக்க, நம்பிக்கையோடு அடுத்த இடம் சென்றனர்.


வாழ்க்கையில் மிகவும் தோல்விகளைச் சந்தித்து எதிர்காலம் கேள்விக்குறி என்ற நிலையில் அப்போது இருந்தேன். ஆனால் ஒரே ஒரு குப்பைத் தொட்டியில் ஆறு பேருக்குப் பலன் கிடைக்கும் போது, இந்த பரந்த உலகில் வாழ்க்கையில் முன்னேற எத்தனையோ நேர்மையான, நிலையானஒளிமயமான வாய்ப்புகள் உண்டு என்பதை அறிந்து, அதன் பிறகு மனதில் உறுதியோடு செயல்பட்டேன்.  என்ன புரியுதுங்களா? அதனால, வாழ்க்கையிலே எந்த ஒரு சூழ்நிலையிலும் எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சு, மனம் தளர்ந்து விடாதீர்கள். நமது நேர்மையான முயற்சிக்கு நிச்சயம் வெகுமதி உண்டு.

14 comments:

jayasundaram said...

Boost is the secret of sachin's energy..Rishi Brother's Article's & Advice's is Secret of my(our) Energy..

Nanjil Kannan said...

Arumanyaana pathivu annaa .. anaa romba sinnathaa pochae :(

SHINE.com said...

mihavum payanulla katturaikal aalosanaikal melum thodaravendum

Thava Kumaran said...

அருமையான பதிவுங்க..ஐயா..
வாரியார் சுவாமிகளின் கதை மெல்சிலிர்க்க வைக்கிறது.

யவனிகை said...

அண்ணா, இந்த கதை அனேகருக்கு தெரிந்திருக்கும். முன்னொரு காலத்தில் கடவுள்மீது நம்பிக்கையில்லாமல் திரிந்த மகனை ஒழுங்குபடுத்த அவனை கூப்பிட்டு 'இந்தா, இந்த அரிசியை போய் வீதி வீதியாக விற்று வா' என சொன்னார்களாம், அவனும் 'அரிசி, அரிசி' என கூவிக் கொண்டு தெரு வழியாக விற்றுச் சென்றான். அடுத்த நாள் அவனை கூப்பிட்ட பெற்றோர்கள் கொஞ்சம் வசம்பை குடுத்து இதை விற்றுவா என்றார்கள், இவனும் 'வசம்போ, வசம்போ' என விற்று வந்தான்,
அடுத்த நாள் இரண்டையும் குடுத்து விற்று வர சொல்கிறார்கள், இவனும் ' அரிசிவசம்பு, அரிசிவசம்பு' என் கூவி வர அது மருவி 'அரிசிவசம்பொ ' என ஆகிறது. சும்மா இருப்பார்களா நம் ஆச்சியும் அப்புச்சியும், கிளம்பி விட்டார்கள் வரம் தர. அவன் முன்னே ரிஷப வாகனத்தில் தோன்றி அவனுக்கு எல்லா சம்பத்துகளையும் குடுத்து மறைந்தார்களாம். ஆகவே அவனை பரிபூரணமாக நம்பி சரணடைபவர்களை அவன் விட்டுவிடுவானா என்ன,
ஓம் க்ரியா பாபாஜி நம ஓம் ஓம் நமச்சிவாய

ramesh (an angel from a devil ) said...

thank you sir

Gnanam Sekar said...

நல்ல பதிவு நன்றி அய்யா

THEIVAM said...

niraiya feel panna vaikirenga

சரவணன் said...

தீக்குள் விரலை வைத்தால் நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா ....!!!! என்ன ஒரு வரிகள்! மகாகவி அனுபவிச்சு எழுதி இருக்காறு! வாரியார் கோயில் வலம் வந்தப்போ அவரோட பரவச மன நிலையை நினைத்தால், ஒரு சிலிர்ப்பு! எங்க பூமியில் வேலை செஞ்சுட்டு, நல்ல பசியோட வீட்டுக்கு வந்து சாப்பிட்ட...ஆஹா பூமியிலே சொர்க்கம் கண்டேன்! நாம செய்யுற காரியங்கள் மனசார ரசிச்சு, லயச்சு செஞ்சா, வாழ்க்கைய நல்லா ரசிச்சு அனுபவிக்க முடியும். வாரியாரின், "ஒரு காலை எடுப்பதற்கு இந்த மருத்துவருக்கே இவ்வளவு கொடுக்க வேண்டும் என்றால் , இரண்டு கால்களை தந்த முருகனுக்கு நான் எவ்வளவு கொடுக்க வேண்டும் " என்று யோசிக்கலானார் என்ற வரிகள் சிந்திக்க வேண்டியது அவசியம்.
வீட்டிலும், நண்பர்களும் சொன்னங்க "சொந்தகாரங்க, Friends வீட்டுக்கு போய் அடிக்கடி பார்த்து பேசி touch வெச்சுக்கோ, அப்போதான் உனக்கு ஏதாவதுன Help'க்கு வருவாங்க" அப்படின்னு...... நானும் யோசிச்சேன், சாதாரண விசயத்துக்கே மனுசன்கள touch தேவைன்ன, நம்மள, நம்ம வாழ்க்கைய கை பிடிச்சி நடத்தி விடுற அந்த அய்யன போய் நிறைய முறை பார்க்கோணும் தானே? அதையும் கஷ்டமா நெனைக்காம இஷ்டமா பண்ணுன, நிச்சயம், "தீக்குள் விரலை வைத்தால் நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா ....!!"

கோடியில் ஒருவன் said...

பசியோடு இருக்கும் குழந்தைகளுக்கு ஏதோ போனாப் போகுது என்று ஆசிரியர் சற்று இரக்கப்பட்டு பதிவை போட்டது போல தெரியுது.

வாரியார் சுவாமிகளும் காஞ்சி மகாபெரியவரும் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே நாம் செய்த பாக்கியம் தான்.

வாரியாரை பற்றி ஒரு விஷயம் சொல்லணும்.. அடக்கத்துக்கு பேர் போனவர் அவர். கையெழுத்து போடும்போது கூட கிருபானந்தவாரியார் அப்படின்னு போடமாட்டார். 'கிருபானந்தவாரி' அப்படின்னு அங்கேயே நிறுத்திடுவார்.

அவரை பற்றிய இந்த தகவல் அருமை.

குப்பைத்தொட்டியை வைத்து கூட ஆசிரியர் ஒரு கலக்கல் கருத்தை கூறியிருக்கிறார். சிந்திக்கவேண்டிய ஒன்று.

குப்பைத்தொட்டி பற்றி எனக்கு இன்னொரு கருத்து உண்டு. நம் மனதில் உள்ள குப்பைகளை விட குப்பைத் தொட்டி எந்த விதத்திலும் கேவலம் அல்ல.

மற்றபடி பாரதி விழாவுல ஆசிரியரை சந்திச்சதுல மகிழ்ச்சி.

நாகராணி மேடம் கிட்டே நான் யாருன்னே காட்டிக்காம பேசிகிட்டிருந்தேன். எப்படி இருக்கீங்க மேடம்?

விழா சிறப்பாக நடந்து முடிந்தது. முல்லைவனம் சாரிடம் காய்கறி விதைகள் வாங்கிவந்துள்ளேன். அனைவருக்கும் நன்றி.

- கோடியில் ஒருவன்

நா.பத்மநாபன் said...

ராகு கேது பலன்கள் =மின்னஞ்சல் கிடைக்கவிலையே
பத்மநாபன்

senthil senthil said...

mihavum nandru

அதிரை தங்க செல்வராஜன் said...

திருமுருக வாரியார் அவர்களின் சொற்பொழிவுகள் இந்த தளத்தில் உள்ளது.
http://sumukam.wordpress.com/discourses/thirumuruga-kripananda-variar/

Learner said...

என் மனமார்ந்த நன்றி இந்த அருமையான பதிவுகள் மற்றும் நல்ல commentsக்கு!

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com