Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

வாழ்க்கையில் சாதிக்க துடிக்கும் ஒவ்வொருவருக்கும்.!

| Dec 5, 2012
வாசக நண்பர்களுக்கு என் பணிவான வணக்கம். ராகு , கேது பலன்கள் சம்பந்தமாக மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்ட ( Till  5th  Dec) அனைவருக்கும்  வரும் 16 ஆம் தேதிக்குள் , கண்டிப்பாக விரிவான மின்னஞ்சல் வந்து சேரும்.

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் ஒரு அருமையான நிகழ்ச்சி ஏற்பாடாகி இருக்கிறது. நமது தேசிய கவி பாரதியாரின் பிறந்த நாள் கொண்டாட்டம்..! நமது தளத்தின் நீண்ட நாள் வாசகரும் நண்பருமான சுந்தர் அவர்கள் ஒரு மகத்தான முயற்சி மேற்கொண்டு , இந்த விழா ஏற்பாடுகளை செய்துள்ளார்..!

பாரதி பிறந்த நாள்..! இதுல என்ன மகத்தான முயற்சி ன்னு கேட்குறீங்களா?
அந்த பங்க்ஷனுக்கு வருவதற்கு இசைந்துள்ள VIP லிஸ்ட் பாருங்க .....! உண்மையிலேயே மிரட்டலா இருக்கும்.!


ரொம்ப நாட்களுக்கு முன்னாள் நமது சாதனையாளர்கள் கட்டுரையை படித்து விட்டு , நிறைய நண்பர்கள் சார் இவங்க எல்லாரையும் , கூப்பிட்டு நம் வாசகர்களுக்கு ஒரு Get  together பங்க்ஷன் ஏற்பாடு பண்ணினால், நமது எத்தனையோ வாசகர்களுக்கு  வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பு முனையாக இருக்குமே என்று கேட்டு இருந்தனர்.
அப்போதே சில நெருங்கிய நண்பர்களிடம் சொல்லி இருந்தேன்..! ஒரு நாள் பண்ணனும் . முயற்சி பண்ணுவோம் என்று. அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று நிச்சயமாக நான் நினைக்கவில்லை .
கனவு மெய்ப்ப வேண்டும் என்று - பாரதி அன்னைக்கு சொன்னது, இன்னைக்கு நடக்குது. அமரகவிக்கு அர்த்தம் இப்போ தானே புரியுது...! இவ்வுலகை விட்டு சென்று இத்தனை வருடங்களுக்குப் பிறகும் - இந்த பிறந்த நாள் மூலம் மானிடம் உய்ய - இதோ இன்னொரு வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது நமது எட்டையபுரத்து சிங்கம்.
=======================================
திரு இளங்கோ  - உலகமெங்கும் லட்சக்கணக்கான இளைஞர்களை , மாணவர்களை சந்தித்து கலந்துரையாடல் மூலம் , தன்னம்பிக்கை டானிக் ஏற்றிக் கொண்டு இருப்பவர். மனிதர்களின் உள்ளே உறங்கி கிடக்கும் திறமைகளை தட்டி எழுப்பி பல ஆயிரக் கணக்கான வெற்றியாளர்களை உருவாக்கியவர். தனக்கு பார்வை இல்லை என்ற போதிலும், பல லட்சக்கணக்கானவர்களின் அறிவுக் கண்களை திறந்த ஒரு மாமனிதர்..!

திரு. நந்தகுமார் - I.R.S - பத்தாம் வகுப்பு கூட ஒழுங்காக படிக்க முடியாத ஒரு மனிதர், லாட்டரி டிக்கெட் விற்று , மெக்கானிக் வேலை செய்து - திரும்ப டுடோரியல் மூலம் படிப்பைத் தொடர்ந்து , நம் நாட்டிலேயே கடினமான பரீட்சையாக கருதப்படும் UPSC தேர்வை வென்று , இன்று சென்னை மாநகர் வருமானவரித் துறை உதவி கமிஷனராக நாட்டிற்கு சேவை செய்து வருபவர். பல சாதாரண கல்வி கூடங்களுக்கு ,சென்று  அங்குள்ள மாணவர்களுக்கு சாதிக்க கூடிய சக்தியை தொடர்ந்து தந்து கொண்டு இருப்பவர் ..!
இவர்கள் இருவரையும் பற்றி நம் தளத்தில் ஏற்கனவே கட்டுரை கொடுத்து இருந்தோம் நம் வாசகர்களுக்கு ஞாபகம் இருக்கலாம்!

தலைமை விருந்தினர்...! அம்மாடி ..... இப்படி ஒரு மனிதரா என்று உலகமே வியந்து போற்றும் ஒரு மகாத்மா! திரு. பாலம். கல்யாண சுந்தரம் ஐயா அவர்கள். தான் வாழ் நாள் முழுவதும் ஒரு லைப்ரேரியனாக மாதா மாதம் சம்பாதித்த தொகையை - இல்லாதவர்களுக்கு சேவை செய்தவர். அட ஆமாங்கய்யா.! ஒரு பைசா விடாம! அவர் வீடு சொத்து முழுக்க...! அவருக்கு வேண்டிய சாப்பாடு , செலவுக்கு - ஒரு ஹோட்டலில் சப்ளையராக வேலை பார்த்தாராம். இவர் செய்த சேவைகளை ,கேள்விப்பட்டு  உலகம் முழுக்க வந்து குவிந்த நன்கொடை விருதுகள் - என கோடிக்கணக்கான ரூபாய் முழுவதும் - மக்கள் சேவைக்கே என அர்ப்பணித்தவர். நம் ஊர் ரஜினிகாந்த் முதல், பில் கிளிண்டன் போன்ற உலகின் பல பல VIP மனிதர்கள் இவரை பார்க்க வாய்ப்பு கிடைக்குமா என ஏங்குகின்றனர். ரஜினிகாந்த் இவரை தனது தந்தை ஸ்தானத்தில் வைத்து இருக்கிறார். எளிமைக்கு மறுபெயர் ...! இப்படி ஒரு மனிதர் நம்மிடம் வாழ்ந்தார் என்பதை நாம் கர்வத்துடன் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.. அப்பேற்பட்ட மகாத்மா!குறித்து வைத்துக் கொள்ளுங்கள்..! ஒரு மாபெரும் வரலாற்று நாயகன் என உலகமே இவரை கொண்டாடும் நாள் நெருங்கிக் கொண்டு இருக்கிறது..!

நாலாவது உள்ளவர் பாருங்க...! ஒரு சுற்றுச் சூழல் ஆர்வலர் . இன்னைக்கு ஒவ்வொரு மனுஷனும் , ஒரு லிட்டர் தண்ணி குடிக்கிறமோ ,  இல்லையோ - ஆனா ஒரு லிட்டர் பெட்ரோல் செலவு பண்ணாம இருக்கிறது இல்லை. போதாதுக்கு, வீடு - பிளாட் என்று , காடுகளை விடுங்க - மரங்களே இனிமேல்  டிஸ்கவரி , NGC ப்ரோகிராம்ல தான் வருங்கால சந்ததி பார்க்கணும் போல. இது எல்லாருக்கும் தெரியும் தான். என்ன பண்றது..! நாம நம்ம பொழைப்பை பார்ப்போம் வருங்கால சந்ததியைப் பற்றி அரசாங்கம் தான் பார்க்கணும் ன்னு போய்க்கிட்டே இருக்கிறோம்! இல்லை உலகத்தைப் பற்றி  கவலைப்பட நானும் இருக்கேன் என்று இதுவரை சுமார் முப்பது லட்சம் மரங்களை நட்டு, முறையே பராமரித்தும் வருபவர்.

இப்படி நான்கு மகத்தான மனிதர்களை ஒருங்கே சந்திக்கும் பாக்கியம் , வாழ்வின் ஒரு அற்புதமான தருணம், நம் வாழ்க்கையை நாமே செப்பனிட - இது ஒரு அருமையான வாய்ப்பு - இந்த விழா!

AC ஹால் - இன்விடேஷன் டிக்கெட்டுக்கு காசு ன்னு எந்த பந்தாவும் இல்லாம - வரும் எல்லோருக்கும் அனுமதி  இலவசம். பாரதி பதினொன்னாம் தேதி தானே பிறந்தார்னு , அன்னைக்கு ப்ளான் பண்ணாம - நம்மளை மாதிரி எல்லோரும் கலந்துக்கிட ஏதுவா , ஞாயிற்றுக்கிழமை - சாயங்காலம் பங்க்ஷன்.

இப்படி ஒரு அருமையான எண்ணம் ஏற்பட்டு , இந்த வாய்ப்பை நமக்கு ஏற்படுத்திய நல்ல உள்ளம் திரு. சுந்தருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

எவ்வளவோ பணிகளுக்கு இடையிலும் - ஒரு சாதாரண மனிதரின் அழைப்பை ஏற்று , நமக்காக , நம்மைப் போல சாமான்யர்களை, வாசகர்களை சந்திக்க சம்மதம் தெரிவித்த - இந்த சாதனை நாயகர்களை , அவர்களின் முயற்சிகளை நாம் நேரடியாக உற்சாகப் படுத்த - இந்த கட்டுரையை படிக்கும் அனைவரும் அவசியம் முயற்சி  செய்யுங்கள்.!

உங்கள் வாழ்க்கையின் திருப்புமுனை இதோ உங்களுக்கு ஏற்பட , இறை இசைந்துள்ளது என்பதை உணரத் தொடங்குவீர்கள்..!  

இந்த விஷயம் கேள்விப்பட்டு , இதன் அருமை உணர்ந்த நண்பர் ஒருவர் - இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே பூனாவில் இருந்து வருகிறார்... ! சொன்னதுக்கு ரொம்ப நன்றி சார்னு அவர் சொல்லுறப்போ - ரொம்ப சந்தோசமா இருக்கு.  அதனால , நம்ம தமிழ் நாட்டுல இருக்கிறவங்க - , தயக்கம் , கூச்சம் இல்லாம கண்டிப்பா வாங்க ....! சென்னையில் இருக்கிறவங்க குடும்பத்தோட வாங்க..! உங்க வீட்டில படிக்கிற பசங்க, இளைஞர்கள் இருந்தா அவசியம் அவங்களை கூட்டிட்டு வாங்க..! இது நம்ம வீட்டு விசேஷம்...! நாம பெருமை பட வேண்டிய விசேஷம்!

 
மனிதம் வளர்ப்போம்...!

நிகழ்ச்சியின் ஒவ்வொரு அம்சமும் பாரதியை நினைவு கூர்வதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கும் பயனுள்ள வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளது.
கடவுள் வாழ்த்து பாடும்போதே நீங்கள் விழாவில் மிகவும் ஒன்றிவிடுவீர்கள் என்பது உறுதி.

நாள் :  டிசம்பர் 09, 2012 ஞாயிற்றுக் கிழமை மாலை
நேரம் : 5.50 PM to 8.30 PM
இடம் : அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோவில், பி.டி.ராஜன் சாலை, (சிவன் பார்க் அருகே) கே.கே.நகர், சென்னை -78.
பஸ் ரூட் : 17D, 11G, 49A, 12G, 11H, 5E      பஸ் ஸ்டாப் : சிவன் பார்க்
19 comments:

arul said...

great thanks for the invitation

யவனிகை said...

நன்றிணா , நான் வர முடியுமான்னு தெரியல, கண்டிப்பா சென்னைல இருக்குற என் எல்லா நண்பர்களுக்கும் தெரியப்படுத்துறேன்.
ஓம் க்ரியா பாபாஜி நாம ஓம் ஓம் நமச்சிவாய

Anandhiselva said...

Rishi, You have missed the name of the fourth guest. please include it.

Also, I may not be able to come for this event, but really its good to have such things happening around it.

Thumbs up for you and Sundar.

Regards,
Anandhiselva

தமிழ் காமெடி உலகம் said...

உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி......

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/

NAHARANI said...

Respected sir, thro your website i happened to met Mr.Sundar sir.. Thanks for this special day event invitation.. may by the grace of God planning to come surly. Nahrani Chennai

Senthilvelu Jambuvelu said...

thanks for your invitation sir

கோடியில் ஒருவன் said...

ரொம்ப நன்றி ரிஷி சார்....
இப்படி ஒரு வாய்ப்புக்காகத் தானே இத்தனை நாள் காத்திருந்தேன்.
வாழ்வில் எது எதற்கோ நான் நேரம் ஒதுக்கியிருக்கிறேன்.
ஆனால் இப்படி ஒரு மகத்தான சாதனையாளர்களை ஒருங்கே சந்திக்கும் சந்தர்ப்பம் மறுபடியும் எனக்கு கிடைக்குமா என்று தெரியாது.
நான் அங்கே நிச்சயம் இருப்பேன் ரிஷி சார்...
மேலும் செய்த பாவங்கள் எல்லாம் இப்படிப்பட்ட நல்ல மனிதர்களை ஒருங்கே சந்தித்தாலாவது தொலையும் என்று நம்புகிறேன்.
சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுத்த இறைவனுக்குன் நன்றி!
அது சரி நீங்க வர்றீங்க தானே?

sowri said...

Thank you so much. I will attend for sure

Rishi said...

கோடியில் ஒருவன் சார், நம்ம நண்பர் Rightmantra .com சுந்தர் சார் கண்டிப்பா வந்தே ஆகணும்னு அன்புக் கட்டளையே போட்டிருக்கார் . அது போக இது ஒரு அருமையான வாய்ப்பு . மிஸ் பண்ணா , நான் தான் ரொம்ப பீல் பண்ண வேண்டி வரும் பின்னாலே. அது மட்டும் இல்லாம உங்களை மாதிரி நம்மோட வாசகர்கள் வரும்போது, நான் கண்டிப்பா அங்கே இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும் . அதனாலே நான் நிச்சயம் அங்கே இருப்பேன்....!

perumal shivan said...

mikka nanri rishi sir

jayasundaram said...

மதிப்புக்குரிய ரிஷி அண்ணா ,
வணக்கம் . முதலில் நான் எனது நன்றியய் சமர்ப்பணம் செய்கிறேன் ..அண்ணா நான் " ஸ்ரீ அகஸ்தியாய நம"லிகித ஜெபம் எழுத தொடங்கிய சில நாட்களில் எனது வாழ்கையில் பல மாற்றங்கள்...பல கோவில் தரிசனகள் கிடைத்தன, பல நல்ல மனிதர்கள் சந்திப்பு அவர்கள் அறிவுரை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் . எல்லாவற்றுக்கும் மேலாக நான் எழுதிய லிகத ஜெபத்தை என் கைப்பட அந்த ஜீவ சமாதியில் வைத்து வழிபடும் பாக்கியமும் கிடைத்தது..அண்ணா நான் தற்பொழுது லண்டனில் உள்ளேன் , சொன்னால் பல பேர் நம்ப மாட்டார்கள் எனக்கு லண்டன் செல்ல Rs . 12,300க்கு டிக்கெட் கிடைத்தது (உங்கள் பார்வைக்கு அதையும் அனுப்பி உள்ளேன் )....ஒண்ணு மட்டும் உறுதி அண்ணா குலதெய்வ வழிபாடும் , முன்னோர்கள் வழிபாடும் செய்துவிட்டு நாம் விரும்பும் தெய்வங்களின் கால்களில் சரணாகதி அடைந்து விட்டால், கடலத் தூக்கிப் போட்டாலும் அலை(இறைவன்) நம்மை அழகாய் கரை சேர்த்து விடும் என்று புரிந்துகொண்டேன் அண்ணா .....அண்ணா எனக்கு 8இல் செவ்வாய், சனி 2-ம் உள்ளது வாழ்கையில் வாங்காத அடி இல்லை http://www.livingextra.com/2012/09/blog-post_14.html இந்த பதிவு எனக்கு என்று எழுதப் பட்டது போன்று இருந்தது ,அண்ணா இப்போ என் மனம் சிறிது பக்குவ பட்டு விட்டது...தொடர்ந்து முயற்சி செய்வோம்,நல்லதை நினைப்போம் ,நல்லதை செய்வோம், முயற்சி என் கையில் முடிவ அவன் (இறைவன் ) கையில் என்று விட்டு விட்டேன் ...இன்னும் நான் லிகித ஜெபம் எழுதிக் கொண்டுதான் உள்ளேன் ...இதைப் படிக்கும் அனைத்து livingextra அன்பு சொந்தகளும் " ஸ்ரீ அகஸ்தியாய நம" என்ற லிகித ஜெபம் எழுதி அகஸ்தியரின் அருள் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ....
Passenger Names Type Base Fare Taxes & Fees Total

Mr. Jayasundaram Mohanasundaram Adult INR 10,691 INR 1,612 INR 12,303

Subtotal INR 12,304

Grand Total INR 12,304

Chennai - London - Heathrow Apt | Sat, 24 November 12, 10:00 hrs

Departure Arrival Non-Stop Flight

Chennai(MAA) Riyadh(RUH) Non-Refundable Fare

Terminal I Terminal 2

Saudia Sat, 24 Nov 12, 10:00 hrs Sat, 24 Nov 12, 13:00 hrs Duration:5h 30m

SV-769 Cabin:EconomyCHANGE PLANE LAYOVER 13hr 10mDeparture Arrival Non-Stop Flight

Riyadh(RUH) London - Heathrow Apt(LHR) Non-Refundable Fare

Terminal 2 Terminal 4

Saudia Sun, 25 Nov 12, 02:10 hrs Sun, 25 Nov 12, 05:55 hrs Duration:6h 45m

SV-101 Cabin:Economy


ஸ்ரீ அகஸ்தியாய நம....ஓம் நமசிவா

சரவணன் said...

ரிஷி சார் ....எங்கள மாதிரி பெங்களூர் தமிழர்களுக்கும் இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி (of-course காவேரி பிரச்சினை தற்காலிகமாக நிக்கும் பொழுது) ஏற்பாடு செஞ்சா எங்களுக்கும் கொஞ்சம் புத்துணர்வு கிடைக்கும்...வேலைக்கு பின்னாடி போயி போயி Sunday ஒரு நாள் தான் உடம்புக்கும் மூளைக்கும் ரெஸ்ட் கிடைக்குது ஆனா தெம்பும் புத்துணர்வும் கிடைக்கருதில்லை ... இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடந்த தான் உண்டு.....So மனசு வைச்சு சிபாரிசு பண்ணுங்க..

கோடியில் ஒருவன் said...

எவ்ளோ பெரிய விஷயத்தை ஜஸ்ட் லைக் தட் சொல்லியிருக்கீங்க ஜெயசுந்தரம் அவர்களே....
FAITH EVEN MOUNTAINS என்று சொல்வார்கள்.
அகத்தியர் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே இந்த அற்புதத்திற்கு காரணம்.
நீங்கள் மேன்மேலும் அனைத்து நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ அகத்தியர் வழி காட்டுவார்.
இதை ஒரு தனிப் அளிக்கும்படி ரிஷி அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
ஞாயிறு சந்திப்போம்.

Simple Sundar said...

மிக்க நன்றி ரிஷி அவர்களே.

மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் எழுதியிருப்பதை படித்தாலே அனைவருக்கும் நிச்சயம் விழாவிற்கு தவறாமல் வரவேண்டும் என்று தோன்றும். மிக அற்புதமான நடை.

உங்களை அங்கு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். LIVINGEXTRA.COM வாசகர்கள் மற்றும் பாரதி அபிமானிகளை அனைவரையும் கூட இத்துடன் வரவேற்கிறேன்.

அனைவரும் அவசியம் குடும்பத்துடன் கலந்துகொண்டு இந்த எளிய விழாவை சிறப்பியுங்கள். நீங்களும் பயன்பெறுங்கள்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

நன்றி...

சுந்தர்,
www.rightmantra.com

Sunish said...

Rishi Sir,
Best Wishes for your noble service to humanity.

Sir, please let us know why there is no lessons nowadays on Jothidam, it had stopped at Lesson 21.
Looking forward for you continuing classes/lesson of Jothidam.

Thanks,
Sunish

Gnanam Sekar said...

விழா சிறப்புற வாழ்த்துக்கள் அய்யா.

NAHARANI said...

ஒரு நல்ல விளக்கு ( ரிஷி ) மற்றதை ஏற்றி ( சுந்தர்) அதன் பிரகாசத்தில் மற்றை விளக்குகளுக்கு வழி காட்டுவதை ஒரு திருவிழா துவக்கமாக பார்க்க நேரிட்டது ரொம்ப மகிழ்ச்சி ( நன்றி சுவாமி(!). நாங்களும் விட்டில் பூச்சிகளாகாமல் விளக்காக ஒளி விடவே விருப்பம் . அங்கே போனால் பெரிய பெரிய சூரியன் நட்சத்திரம் போல பாலம் ஐயா இளங்கோஐயா , நந்தகுமார்ஐயா முல்லைவனம் ஐயா எல்லாம் வந்து பிரகாசமாக ஒளிர்ந்தது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி.. எல்லாத்துக்கும் மேல ரிஷி அண்ட் livingextra .com நம்பவே முடியலை இன்னம்கூட. தேங்க்ஸ் அண்ட் thank யு god for ஆல் தட் யு gave அண்ட் giving still .naharani chennai

THEIVAM said...

Thank you sir, ithu pondra sevaikal thodarattum sir

Balaiya Kalimuthu said...

Inter thadakam iyya

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com