Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

Date with a Woman!

| Dec 25, 2012
நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த அருமையான மெயில். எளிமையான ஆங்கிலத்தில் இருப்பதால் அப்படியே தருகிறேன். படித்துப் பாருங்கள்.!
Really an Awesome article!
==================================================================

After 21 years of Marriage, my Wife wanted me to take another Woman
out to Dinner and a Movie.

She said I Love You but I know this other Woman loves you and would Love
to spend some Time with You.


The other Woman that my Wife wanted me to visit was my MOTHER,

who has been a Widow for 19 years,

but the demands of my Work and my three Children had made it possible
to visit her only occasionally.


That night I called to Invite her to go out for Dinner and a Movie.


'What's wrong, are you well,' she asked?

My Mother is the type of Woman who suspects that

a Late Night Call or a Surprise Invitation is a sign of Bad News.


'I thought that it would be pleasant to be with you,'
I responded.

'Just the two of us.'


She thought about it for a moment, and then said,
'I would like that very much.'
That Friday after work, as I drove over to pick her up I was a bit Nervous.
When I arrived at her House, I noticed that she too seemed to be Nervous
about our Date.

She waited in the Door with her Coat on.

She had Curled her Hair and was wearing the Dress that she had worn to
Celebrate her last Wedding Anniversary.


She smiled from a face that was as Radiant as an Angel's.


'I told my Friends that I was going to go out with My Son, and they were impressed, '

She said, as she got into the Car.

'They can't wait to hear about our meeting'.

We went to a Restaurant that, although not Elegant, was very Nice and Cozy.

My Mother took my Arm as if She were the First Lady.


After we sat down, I had to read the Menu. Large Print.

Half way through the entries, I lifted my eyes and saw Mom sitting
there staring at me.
A Nostalgic Smile was on her Lips.

'It was I who used to have to Read the Menu when you were Small,'

She said.

'Then it's Time that you Relax and let me Return the Favor,'

I responded.


During the Dinner, we had an Agreeable Conversation, nothing
Extra-ordinary, but catching up on recent Events of each others Life.

We talked so much that we missed the Movie.

As we arrived at her House later,

She said, 'I'll go out with you again, but only if you let me invite you.'

I agreed.


'How was your Dinner Date?' asked My Wife when I got Home.

'Very Nice. Much more so than I could have Imagined,' I answered.


A few days later, my Mother died of a Massive Heart Attack.

It happened so suddenly that I didn't have Time to do anything for her.
Some time later, I received an Envelope with a Copy of a Restaurant Receipt

from the same place Mother and I had dined.


An Attached Note Said:

'I paid this Bill in Advance.

I wasn't sure that I could be there;

But nevertheless, I paid for Two Plates –

One for You and the Other for Your Wife.

You will never know what that Night meant for Me.
I Love You,
My Son.'


At that moment, I understood the Importance of saying in Time:
'I LOVE YOU!'

and to give our Loved Ones the Time that they Deserve.

Nothing in Life is more important than God and your Family.

Give them the Time they Deserve, because these Things cannot be
Put Off till 'Some Other Time.'


Pass This Along To Everyone

With An Aging Parent,
To A Child,
To An Adult,
To Anyone With A Parent,

And Most Importantly,
To Someone
You Truly Love

Supplementary for Yaagam & Anbulla Diary article......

| Dec 24, 2012
அன்பு நண்பர்களுக்கு வணக்கம். நமது யாகம் பற்றிய கட்டுரையைப் படித்த நண்பர்கள் பலர் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு இருந்தனர். அவர்களுக்கு வங்கி விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் பயன் படுத்திக் கொள்ளலாம். யாகத்தில் பங்கு பெற விருப்பம் இருந்தும், ஒரு சிலர் பணம் அனுப்ப முடியாத அளவுக்கு கஷ்டத்தில் இருக்கலாம். அல்லது பணம் அனுப்ப மனமில்லாமல் தயங்கலாம். அவர்கள் கூட தயங்காமல், உங்கள் கோரிக்கையை அனுப்புங்கள். { நம் வாசகர்களுக்காக , நான் இதைக் கூட செய்யாவிட்டால் எப்படி? ஏற்கனவே தனிப்பட்ட முறையில் நான் இதற்க்கு பங்களிப்பதால், உங்கள் கோரிக்கைகளும் நிறைவேற தாராளமாக உங்கள் பெயரையும் பரிந்துரைக்க முடியும். உங்கள் கோரிக்கை நியாயமாக இருக்கும் பட்சத்தில்}.

உங்களையும் முடிந்தால் பங்களிக்க சொன்னது, உங்களுக்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கவேயன்றி, வேறு எந்த காரணமும் அல்ல. தயக்கமோ, மனமின்றி அரை குறை நம்பிக்கையோடோ நீங்கள் பணம் அனுப்பவேண்டாம். முழுக்க, முழுக்க உங்கள் வாழ்க்கையில் மலர்ச்சி ஏற்படுத்த மட்டுமே இந்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளேன். 100% இறை மேல் நம்பிக்கை கொண்டு, இது ஒரு ஏமாற்று வேலை என்று நினைக்காதவர்கள் மட்டும் , வங்கி விவரம் கேட்டு மெயில் அனுப்புங்கள். ஜனவரி மாதம் 2 ஆம் தேதி தொடங்கும் யாகம் பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நம் பொருளாதார, உடல் நலம் சம்பந்தப்பட்ட அத்தனை பிரச்னைகளுக்கும் முழு தீர்வு கிடைக்கும் என மனதார நம்புவோம்....!


========================================================
அன்புள்ள டைரி கட்டுரையை படித்த நமது வாசக நண்பர் திரு. முத்துக்குமார். ஒரு அருமையான கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.....
பின்னூட்டத்தில் இருப்பதால் , உங்கள் பார்வைக்குத் தப்பிவிடக்கூடும் என்பதால்....... கீழே பகிர்ந்து உள்ளேன்.Blogger Muthukumar said...
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,
அம்மா, அப்பா மேல் பாசம் வைத்துள்ள பிள்ளைகளில் நானும் ஒருவன். என்னிடம் பழகும் நண்பர்களிடம் பெற்றோரை மதிக்க நான் கூறும் அறிவுரை, ‘உனக்கு ஒரு குழந்தை பிறந்து அது வளரும் போது அந்த மழழையின் செயல்களில் நீ படும் சந்தோசம்தானே உன் அப்பாவும், அம்மாவும் அடைந்திருப்பார்கள், ஒரு நிமிடம் யோசித்து பார்...’. எதிலும் மாற்று கருத்து கூறும் நிறைய நண்பர்கள்கூட இதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
முக்கியமாக நமது வாசகர்களுக்கு நான் சொல்லிக்கொள்ளும் சிறு வேண்டுகோள், “ தயவு செய்து குழந்தைகளை 12-ம் வகுப்பு வரை விடுதியில் (ஹாஸ்டல்) தங்கி படிக்க வைக்க வேண்டாம். முடிந்தவரை உங்கள் அருகில் வைத்திருக்க முயலுங்கள். இன்று கலாச்சாரம் என்ற பெயரில் நமது உறவுமுறைகளே அவர்களுக்கு தெரியாமல் போய்விடுகிறது. கல்வி என்பது இன்று மிக அவசியமான ஒன்று என்றாலும், சொந்தபந்தங்களின் உறவுமுறைகளும், பாசமும் வேண்டும். பெரும்பாலும் விடுதியில் தங்கி படிக்கும் மணவர்கள் விடுமுறைநாட்களில் வந்திருந்தாலும் தனிமையையே விரும்புகின்றனர் அல்லது அவர்களது நண்பர்களிடம் செல் பேசுவதையோ வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
எனது உறவினரின் நண்பர் வீட்டில், ஒருவர் புற்றுநோயால் அவதிப்பட்டு, மருத்துவர் ஒரு மாதம் இருப்பதே கடினம் என்று கூறியும் அவரது மகன் வேலைக்காக வெளிநாடு சென்றுவிட, 10 நாளில் அவனது தந்தை இறந்துவிட்டார். அவரது ஈமக்கிரியை செய்ய மகனால் வர முடியாதது அங்கு வந்திருந்தவர்களிடையே மிகுந்த வருத்ததை அளித்தது. இந்த மாதிரியான நிகழ்வுகளால் உறவுமுறைகளில் ஏற்படும் பாதிப்புக்களை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே அதன் வலி தெரியும்”...
நன்றி...
அன்புடன்,
முத்துக்குமார். எஸ்

=================================================================

கருத்துக்கள் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி. முத்து சார்! அருமையான கருத்தை எடுத்து சொல்லி இருக்கிறீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி...! வெளி நாட்டில் வேலை பார்ப்பவர்கள் மட்டுமா? இங்கே இருக்கும் சென்னையில் வேலை பார்ப்பவர்கள் கூட தன் வீட்டில் இறப்பு நடந்த பிறகு , மதியம் வாக்கில் தான் வந்து சேருகின்றனர் கிராமங்களில். அடித்துப் பிடித்து !?. இல்லாவிட்டால் ஊர் அசிங்கப் படுத்தி விடுமாம். இந்த அளவுக்காவது பாசம் இருக்குதே என்று தலையில் அடிக்க வேண்டி வருகிறது. இத்தனைக்கும் திடீர் மரணம் இல்லை. அவர்கள் காத்து இருந்து, காத்து இருந்து நிகழவில்லையே என்று சலித்த பிறகும் , நடக்காத மரணம்....! தாயாவது , தகப்பனாவது.....!  இவர்கள் எல்லாம் என்ன சாதிக்கப் போகிறார்களோ...?
அந்த உறவினரின் நண்பர் , எந்த தைரியத்தில் இன்னும் உயிரோடு இருக்கிறார்? ஒருவேளை தன் குழந்தைகளுக்கு ஒரு உதாரண தந்தையாக இருக்க நினைத்து சம்பாதிக்கிறாரோ ?

சமீபத்தில் ஒரு கோவை பக்கம் இருக்கிற builders - prospect ஒன்று பார்த்தேன். கிட்டத்தட்ட ஐந்து நட்சத்திர வசதிகளுடன் கூடிய apartments . காலனி வசதி. புல் செக்யூரிட்டி. Most attractive feature என்ன தெரியுமா? இறந்த பிறகு, சகல மரியாதைகளுடன் Funeral சடங்கு செய்து வைக்கிறார்களாம்...... நம்ம ஊர்ல தான் இருக்கிறோம். வயதான , வசதியான ஆட்கள் நலனுக்காக. Advt கொடுத்த ரெண்டு நாளில் எல்லாம் புக் ஆகிடுச்சு. மாடர்ன் முதியோர் இல்லம் போல, இந்த கான்செப்ட். பாம்பே, பெங்களூர் எல்லாம் இது எப்போவோ வந்து இருக்கும் போல...!


நல்ல ஸ்கூல்ல படிக்க வைக்கிறோம், CBSE English medium எல்லாம் ஓகே... நம்ம சக்திக்கு மீறி, நம்ம குழந்தைங்க நல்லா படிக்கணும்னு நினைச்சு படிக்க வைச்சு , கடைசியில அவன் அமேரிக்கா போறேன், ஐரோப்பா போறேன்னு கிளம்பிடுவான். கூட வாழ்க்கைத் துணை இருக்கிற வரை , பேச்சுக்காவது ஆளு இருக்கும்...அதுக்கு அப்புறம்? எத்தனை நாள் அமெரிக்காவில இருக்கிறது? ரெண்டு மாசம், மூணு மாசம் ஓகே.... அதுக்கு அப்புறம், சொர்க்கத்துக்கு போகும் வரைக்கும், நம்ம ஊர் தான் , என்னைக்கும் சொர்க்கம்....
அட போடா... வேலை , வெங்காயம்....! எனக்கு எங்க அப்பா ,அம்மா கிட்ட போகணும்னு லட்சக் கணக்கில் சம்பளம் வாங்கிய வேலையை கூட உதறித் தள்ளி, பிழைக்கத் தெரியாத மனுஷன் பட்டம் வாங்கும் ஆளும் இருக்கின்றனர்........


நீங்க சொன்ன மாதிரி, சின்ன வயசுலேயே பாசம், உறவுகள் மனசுல பதியலைனா, பின்னால இந்த கஷ்டம் எல்லாம் வரத்தானே செய்யும்...!
பெரியவர் பத்து நாள் கழிச்சு இல்லை, அந்த புள்ளை  போன அன்னைக்கே செத்து இருந்திருப்பார்.... மனசு அளவுல...!
அந்த பெரியவரின் ஆத்மா சாந்தியடைய மனமார பிரார்த்திப்போம்.

ருண, ரோக, சத்ரு நாசனம் (ஒரு ஸ்பெஷல் யாகம்) - Only for the blessed!

| Dec 23, 2012
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். மிக முக்கியமான ஒரு விஷயம் பற்றி இங்கு பார்க்கவிருக்கிறோம். உங்களின் சில முக்கியமான பிரச்னைகளுக்கு ஒரு முற்றிலும் பொருத்தமான , முழு முதல் தீர்வாக இது அமையவிருக்கிறது. இது ஒரு ஸ்பெஷல் யாகம் பற்றியது. 

இன்று ஆன்மிகம், ஜோதிடம் என்கிற பெயரில் பரிகாரம் பண்ணுகிறேன் பேர் வழி என்று கிடைத்ததை  சுருட்டும் போலிகள் தான் அதிகம் மலிந்து விட்டனர். முதலே இல்லாமல் வாய்ப் பேச்சையே மூலதனமாக வைத்து , மிகப் பெரிய வர்த்தகமாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். சரி, பரிகாரம் பலன் கொடுத்ததா என்றால், ஒரு சதவீதம் கூட முன்னேற்றம் இருக்காது. சுய நலம் பாராமல் , ஒழுக்கத்துடன் , நேம , நியதிகள் முற்றிலும் பிறழாமல் - ஆன்மீக பரிகாரம் பண்ணுபவர்கள் , வெகு சிலரே. அப்படி ஒரு சிலர் இருந்தாலும் அவர்கள் வெளிச்சத்துக்கு வருவது அபூர்வம்.

சரி, தலைப்பை பார்த்ததும் சரியாக புரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு யாகம் பற்றியது. என்ன என்று யோசிக்கிறீர்களா?

ருணம் என்றால் - கடன். ரோகம் என்றால் வியாதி. சத்ரு என்றால் என்ன வென்று உங்கள் எல்லோருக்குமே தெரியும். கடன், நோய், எதிரி என்று மூன்றையுமே முற்றிலும் அழிக்கும் யாகம் என்று அர்த்தம். 

ஜோதிட சாஸ்திரம் இந்த மூன்று பலன்கள் பார்ப்பதற்கு ஆறாம் வீட்டை பார்க்கவேண்டும் என்கிறது. ஆறாம் வீட்டுக்கு உரியவன் நிலை , அங்கு அமர்ந்து இருக்கும் கிரகங்கள், அந்த வீட்டைப் பார்வை இடும் கிரகங்கள் என்று மூன்று நிலைகளை பரிசீலிக்க சொல்கிறது. ஆறாம் வீட்டுக்கு உரியவன் தசையோ , புக்தியோ நடந்தால் - அந்த ஜாதகர் கடன், நோய் எதிரியால் அவதியுறும் நிலை ஏற்படுகிறது.


என்னதான் ஓகோவென்று வியாபாரத்திலோ, அல்லது லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் உத்தியோகத்தில் இருந்தாலும் - இந்த மூன்றில் ஏதோ ஒன்றில் அவதியுற்றால் - மனிதனுக்கு நிம்மதி எப்படி கிடைக்கும்? எவ்வளவு சம்பாதிச்சாலும் - லோன், வட்டி என்றே மொத்த பணமும் சென்று கொண்டே இருந்தால், வருடக் கணக்கில் இதே நிலைமை நீடித்தால் ?

வரும் சம்பாத்தியம் முழுவதும் அல்லது பெரும்பாலும் தனக்கோ அல்லது வீட்டில் இருப்பவர்களின் வைத்திய செலவுக்கே செலவழிக்கும் சூழ்நிலை இருந்தால்? செலவழித்தும் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லாத சூழல் இருந்தால் ....? எதிரி என்று இருப்பவனைக் கூட சமாளிக்கலாம். நண்பர்கள் போர்வையில் கூட இருந்தே குழி பறிக்கும் கூட்டம் எப்போதும் கூடவே இருந்தால் , எந்த காலத்தில் வாழ்க்கையில் ஏற்றம் பெறுவது?

சரி, எதனால் இந்த நிலை ஒரு ஜாதகருக்கு ஏற்படுகிறது?  தெரிந்தோ , தெரியாமலோ அடுத்தவர் சொத்தை, பணத்தை அனுபவிப்பவர்கள், நியாமில்லா முறையில் அதிகாரத்தை பயன்படுத்தி கையூட்டு பெறுபவர்கள், முறைப்படி உழைக்காத பணம் சொத்துக்களாக இருக்கப் பெற்றவர்கள், தனக்கு வசதி இருந்தும் - வைத்தியம் பார்க்க உதவி கேட்டு வாசல் தேடி வந்த முடியாத ஏழைகளுக்கு, உதவி மறுத்து அவமானப் படுத்துபவர்கள், தனது கீழ்த்தரமான செயலால் அடுத்தவர் குடும்பத்தை , வாழ்க்கையை அடியோடு சீர்குலைத்தவர்கள் -இந்த மாதிரி செய்கைகளை அந்த ஜாதகரோ , அல்லது அவர்களின் மூத்த தலைமுறையை சேர்ந்தவர்களோ செய்து இருந்தால் - அது குறிப்பிட்ட நேர காலத்தில் திரும்பி - அந்த ஜாதகர்களை தாக்குகிறது. 


இதற்க்கு ஏதாவது பவர்புல் பரிகாரம் இருக்கிறதா? உண்மையிலே அக்கறை கொண்டு, நியதிப்படி செய்பவர்கள் இருக்கிறார்களா?


எனக்குத் தெரிந்து ஒருவர் இருக்கிறார். கடந்த சில வருடங்களாக பழக்கம். நெருக்கம் அதிகம். ஓய்வு பெற்ற ஆசிரியர். ஒரு தீவிர வராஹி உபாசகர். சமஸ்கிருதம் முறையாக பயின்றவர்.தன்னைப் பற்றி வெளி உலகுக்கு தெரியப்படுத்துவதைக்  கூட விரும்பாதவர். முக்கியமாக அடுத்தவர் பரிகாரத்திற்கு என்று தரும் பணத்தில் இருந்து ஒரு ரூபாயை கூட தன்னோட சுய நலத்திற்க்காக பயன் படுத்தாதவர். வீட்டின் கன்னி மூலையில் , எப்போதும் சில மூலிகை கலந்த மண் பானை நீர் இருக்கும். யாருக்காவது பரிகாரம் என்று கூறினால் அந்த பானையில் இருந்து நீர் அருந்திய பிறகுதான் கூறுவார்.  இதனால் அந்த பரிகார பாவம் அவரை தாக்குவதில்லை என்று கூறுகிறார்.


முக்கியமாக இந்த ருண , ரோக சத்ரு யாகத்தை ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் பௌர்ணமி முடிந்த தேய்பிறை பஞ்சமியில் தொடங்கி - இடைவிடாமல் நாற்ப்பத்தெட்டு  நாட்களுக்கு தினமும் வீட்டில் அக்னி வளர்த்து ஹோமம் செய்கிறார். அவரது இளம் வயதில் நேர்ந்த சில அனுபவங்களுக்கு இழந்த இழப்புக்களுக்கு தீர்வு தேடி, மிகப் பெரிய யோகி ஒருவரின் அறிவுறுத்தலில் கடந்த பதினைந்து வருடங்களாக இந்த யாகம் நடத்தி வருகிறார்.
27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் , 9 நவக் கிரகங்கள் என ஒவ்வொன்றுக்கும் ஒரு நாள் வீதம் நாற்ப்பத்தெட்டு நாட்கள் முறைப்படி, அவற்றின் முழு பலன்கள் கிடைக்க முறைப்படி ஹோமம் நடத்தப்படுகிறது.


மார்கழி மாதம் என்பது தேவர்களுக்கு விடியலுக்கு முந்தைய , பிரம்ம முகூர்த்த காலம். தேய்பிறையில் இந்த யாகம் செய்வதால் நமது கெடுதல் பலன்கள் வெகு விரைவில் தேய ஆரம்பிக்கிறது. (இதே நாளில் தான் அன்னபூரணி விரதம் ஆரம்பித்து பதினேழு நாட்கள் தொடர்ந்து நடக்கும்.)


பரிகாரம் என்பது வெயில் காலத்தில் , லேசான மழை காலத்தில் கையில் ஒரு குடையோ , அல்லது ரெயின்  கோட்டோ கையில் எடுத்துக் கொண்டு வெளியில் செல்வதற்கு சமம். லேசான அவதியுடன் திரும்பி விடலாம். பரிகாரம் பவர்புல் என்றால்.


ஆனால் , நாம் செய்து இருக்கும் பாவம் கடும் புயலுடன் கூடிய மழைக்கு சமம் என்றால், ரெயின் கோட்டும் , குடையும் பிரயோஜனப்படாது. அதையும் தொலைத்து விட்டுத்தான் வர நேரும். கடும் பாவம் செய்தவர்களுக்கு பரிகாரம் செய்வது , பண விரயம் மட்டும் தான். கஷ்டங்களை அனுபவித்து விடுவது கர்மத்தையாவது குறைக்கும், இனி வர விருக்கும் நாட்களிலாவது.


நீங்கள் மேற்கூறிய தீய பலன்களால் அவதிப்பட்டுக் கொண்டு வாழ்க்கையில் விடியலுக்காக  தவிர்ப்பவர்களாக இருந்தால் - இந்த யாகம் உங்களுக்கு நிச்சயம் பலனளிக்கும். 


லாஜிக் , ப்ராசெஸ் எல்லாம் ஓகே. ஆனால் அனுபவம் தான் ஆசான்.
எனக்கு நேரடி அனுபவம் இருக்கிறது இந்த விஷயத்தில். சில வருடங்களுக்கு முன்பு இந்த யாகத்தில் பங்களித்ததின் பலன் , அதே வருடத்தில் , நான்கே மாதங்களில் ஒரு மிகப் பெரிய பிரச்னை முடிவுக்கு வந்து , சில மாதங்களில் எதிர்பாராத ஒரு உதவி கிடைத்து பெரியஅளவில் நிலம் வாங்க முடிந்தது.இன்றைக்கு அதே நிலம் வாங்க வேண்டும் என்றால் , குறைந்தது பத்து மடங்கு அதிகமாக நான் விலை கொடுக்க வேண்டி இருந்திருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக கடன் எல்லாம் தீரும்போது கிடைக்கும் மன நிம்மதிக்கு விலையே இல்லை எனலாம். 


உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று , இந்த பதிவை படிக்கும் இந்த நொடி நீங்கள் மனதார நம்பினால் , நீங்களும் இந்த யாகத்திற்கு மனமுவந்து உதவ எண்ணினால் என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் . (Editor@livingextra.com) வங்கி , அக்கௌன்ட் நம்பர்  விவரங்கள்  தெரியப்படுத்தப்படும். Please mention the subject as " Special Yaagam"

PAYPAL  மூலம் அனுப்ப விரும்புபவர்கள் விரும்பினால் என்னுடைய ID யிலேயே அனுப்பலாம். உங்கள் சார்பாக நானே அந்த பெரியவரிடம்  சேர்த்துவிட முடியும். ( PAYPAL ID : Rishyasirungar@gmail.com)

பணம் அனுப்ப விருப்பவர்கள் , உங்கள் பெயர் , குலம் - கோத்திரம் (தெரிந்தால் குறிப்பிடவும்). பிறந்த நட்சத்திரம், முகவரி , முக்கியமான கோரிக்கை விவரங்களுடன், நீங்கள் அனுப்பிய தொகை விவரத்தையும் குறிப்பிட்டு எழுதவும்.
ஹோமத்தின் போது உங்கள் பெயரை உச்சரித்து நடத்த இந்த குறிப்புக்கள் தேவைப்படுகிறது.


நீங்கள் அளிக்கும் காணிக்கை எவ்வளவு என்பது முக்கியம் அல்ல. உங்கள் பங்களிப்பு இருந்தாலே போதும்.நீங்கள் பணம் அனுப்ப விரும்பினால் வந்து சேர வேண்டிய கடைசி தேதி : 02.01.2013


இந்த யாகம் முடிந்து மீதம் இருக்கும் தொகை முழுவதும் சாதுக்களுக்கு வஸ்திர தானம் செய்ய பயன்படுத்த விருக்கிறார். அதனால் மன நிம்மதி கிடைத்து , நிம்மதியான தூக்கம் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.
நீங்கள் பங்கு கொண்டாலும் , கொள்ளாவிட்டாலும்  வராஹியின் அருள் நம் அனைவருக்கும் தொடர்ந்து கிடைக்கட்டும்.!

Wish you all the best!


வாழ்க அறமுடன்! வளர்க அருளுடன்!

அன்புள்ள டைரி ................ (A must read Article)

| Dec 22, 2012
ஐஸ் கட்டி , ஐஸ் ஆகுறதுக்கு முன்னாலே தண்ணியாத் தான் இருக்கு. அதுக்கு அப்புறமும் தண்ணியாத் தான் ஆகப் போகுது. நம்ம வாழ்க்கையும் ஐஸ் கட்டி மாதிரி தான். இதுக்கு முன்னால அவன் கிட்டத் தான் இருந்தோம். இதுக்கு அப்புறமும் அவன் கிட்ட தான் போகப்போறோம்.இடையில அவன் டைரக்ட் பண்ற நாடகத்துல ஒரு ரோல் தான் நாம எல்லோருமே. நம்மை உணர்ந்தால் அதுவே போதும். இப்போதைக்கு  ஐஸ் கட்டி மாதிரி உறைஞ்சு  போய் கிடக்கிறோம். ஒன்னு , ஐயோ, இப்படி ஆகிடுச்சேன்னு கடந்த காலத்தைப் பற்றி , நடந்ததை நினைத்து புலம்பிக்கிட்டே -நிகழ் காலத்தை வீணடிக்கிறோம். இல்லையா - வருங்கால கனவு கோட்டையிலேயே , கையில் கிடைக்கும் வாய்ப்புக்களை தவற விடுகிறோம்.கிடைக்கிற ஒவ்வொரு நிமிஷமும் நமக்கு பொக்கிஷம்... அடுத்த நிமிஷம் நாம இருக்கப் போறது அவன் கையிலேதான். உபயோகப்படுத்திக் கொள்வோம்.

வாழ்க்கை விளையாட்டில் மறைத்து வைத்து இருக்கும் விதி ரொம்ப சிம்பிள். செய்ற வேலையை கரெக்டா செய். நிம்மதியா இரு. உன்னோட குடும்பத்தை , சுற்றி இருப்பவர்களை சந்தோசமாக வைத்துக் கொள். இவ்வளவுதான். ஆனால், இதைத் தான் செய்கிறோம் என்று நினைத்துக் கொண்டு, இதைத் தவிர எல்லாமே நாம் செய்து வருகிறோம். ஓடி ஓடி உழைக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே , குடும்பத்தை கவனிக்க கூட நேரம் இல்லாமல் , சந்தோசங்களை தொலைக்கிறோம். எதுவுமே நம் கையில் இருக்கும் வரை அதன் மதிப்பு தெரிவதில்லை. அதுவே, முற்றிலும் தொலைத்த பிறகு - அது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பாக தெரியும்.

குறிப்பாக உறவுகள் விஷயத்தில் இது மிகவும் பொருந்தும்.

கீழே ஒரு சம்பவம் கொடுத்துள்ளேன். நிச்சயம் உங்கள் மனதில் சில எண்ணங்கள் ஓடும். நீங்க எப்படி இருக்கிறீங்க? இனிமேல் என்ன பண்ணப் போறீங்கன்னு , ஒரு நாலு வார்த்தை எழுதினா, நம்ம வாசகர்கள் எல்லோருக்குமே சந்தோசமா இருக்கும்... எழுதுறதுக்கு முன்னாலே, நீங்க உலகத்துல எந்த மூலையில் இருந்தாலும், ஒரு ரெண்டு நிமிஷம் , உங்க அப்பா அம்மாவுக்காகவே ஒதுக்கினா, அவங்க கூட போன் ல பேசினா கூட, உங்கள் சகோதரனா நான் சந்தோசப்படுவேன்..!

*************************************************************
அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. பகல் பதினோரு மணி. வீட்டுல அந்த இளைஞர் அப்போதான் தூங்கி எழுந்து டிபன் சாப்பிட ஆரம்பிக்கிறார். நைட் எல்லாம் நண்பர்கள் கூட ஆட்டம் போட்டு லேசா ஹேங் ஓவர். சாப்பாடுல உப்பு கம்மி. காரம் அதிகம் ன்னு அம்மாக் கிட்ட ஒரு உறுமல் வேற.  "நாளைக்கு உன் பொண்டாட்டி கிட்ட வக்கனையா வடிச்சுப் போடா சொல்றா"ன்னு அவங்க 'கம்'முன்னு உள்ளே வேலை பார்க்கப் போய்ட்டாங்க. 'ஹால்'ல ஈசி சேர்ல சோர்வா அந்த இளைஞரோட அப்பா. வாழ்க்கையில ஓடி, ஆடி , அடங்கி கடைசி கட்டத்துல இருக்கிறவர். என்னத்தை வாழுறாங்க இந்த காலத்துப் பசங்கன்னு அவர் முகத்திலேயே அந்த சலிப்பு தெரியுது. 

இன்னும் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியலையேங்கிற  கவலை. பொறுப்பு இன்னும் பத்தலையே . பிள்ளையை சரியா வளர்த்தோமா? வளர்க்கணும்னு நினைச்சாலும் இந்த சமூகம் வளர்க்க விடுதா? டிவி, இன்டர்நெட் , அரசாங்கமே ஊக்குவிக்கிற டாஸ்மாக் கடைகள் . சொன்னாலும் காது கொடுத்து கேட்குதுங்களா பசங்க...... யப்பா... முடியலைடா.
டிவி ல ஏதோ 20-20 கிரிக்கெட் மேட்ச். ஆஸ்திரேலியாவும்  ஏதோ இன்னொரு டீமும். நம்ம ஆளு சுவாரஸ்யமா பார்க்குறார். ஹோ..ஜஸ்ட் மிஸ்..! அட அடா ..செம சான்ஸ் ....மிஸ் பண்ணிட்டான்...
"டே தம்பி.. ! உன்கூட கொஞ்சம் பேசணுமே..!"
"என்னப்பா வேணும்? மேட்ச் பாக்கறப்போ எதுக்கு டிஸ்டர்ப் பண்றே ?"
"இந்தியா தான் விளையாடலைலே... என் கூட கொஞ்சம் பேசிக்கிட்டு இரேன்..?"
"என்ன?" - கூடவே சலிப்பு , முறைப்பு.
"வா, கொஞ்சம் வெளியில போயிட்டு வரலாம். "
"முடியாது...." (கத்துறான்.)
"தெரு வரைக்கும் தான்டா! ஒரு ரெண்டு நிமிஷம் தான்...."


வர வர வீட்டுல கூட மனுஷன் நிம்மதியா இருக்க முடியலை. அவர்க்கு கேட்கட்டும்னே கொஞ்சம் சத்தமா வார்த்தை.


"சரி வாங்க...!"
வெளியில வரும்போது ... வீட்டு கேட்டுல ஒரு காக்கா உட்கார்ந்து இருக்குது.
"இது என்ன?" ன்னு பெரியவர் கேட்குறார்.
"ஏன்? உங்களுக்கு தெரியாதோ? "
"நீ சும்மா சொல்லேன்..."
"காக்கா."
திரும்பவும், "இது என்ன? "
"ஏன்ப்பா ? பயங்கர கோபம்.....வருது. உனக்கு வேலை வெட்டி இல்லைனா கம்முன்னு உள்ளே போய் தூங்கு. இல்லை ஏதாவது ராமாயணம் திருவிளையாடல்னு படம் பாரு. இல்லை புஸ்தகம் படி. எனக்கு ஆயிரம் வேலை இருக்கு. நான் வர்றேன்."
மொபைல் எடுத்து இன்னொரு ப்ரெண்ட்க்கு போன் பண்ணி " மச்சான் படத்துக்கு போகலாமா? இதோ நான் வந்துக்கிட்டே இருக்கேன். நீயும் வந்திடு...."
"நீ உள்ளே போப்பா.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..."
"டேய் ...தம்பி.... நில்லுடா.. ஒரு ரெண்டு நிமிஷம்.....டே....டே....!"
 டர்ருன்னு பைக் ஸ்டார்ட் பண்ணி , நம்ம ஆளு மேட்னி ஷோ பார்க்க கெளம்பிட்டாரு.

வயசு ஆயிட்டாலே இந்த பெருசுங்க தொல்லை தாங்க முடியலை. ...... சலிச்சுக்கிட்டே தியேட்டர் போயிட்டு , தன்னோட அபிமான நடிகர் படம் பார்க்க ஆரம்பிச்சுட்டான்...!

பெரியவர் மனசு நொந்தபடியே வீட்டுக்குள்ள திரும்பிட்டார்.
"என்னங்க...? இவனை எங்கே காணும்? "
"எங்கேயோ சினிமா பார்க்க கிளம்பிட்டான். நம்ம கிட்ட பேச எங்க நேரம் இருக்கு?"
"நீங்க எதையாவது சொல்லி இருப்பீங்க? சரி நீங்க சாப்பிடுங்க..!"
"இல்லைமா..! நான் கொஞ்சம் தூங்குறேன்... உடம்பு ஏதோ பண்ணுது.... நீ எழுப்பாதே..! "
"சரி...!"
"பத்திரமா இரு... ஜானகி..!"
"என்ன திடீர்னு...?"
"சும்மா தான் சொன்னேன்... நான் தூங்கப் போறேன்...! "
"ம்ம்..."

உள்ளே பொய், தன்னோட பழைய டைரி ஒன்னை எடுத்துப் பார்க்கிறார். ஒரு இருபது , இருபத்தஞ்சு வருஷம் முன்னாலே இருக்கும்.....அதுலே குத்து மதிப்பா... எதோ ஒரு பக்கம்..
படிச்சவர் கண்ணுலே இருந்து இரண்டு சொட்டு கண்ணீர்....
"ராமா....!"
 மனசு முழுக்க ராமா ... ராமா ன்னு ஒரே பிதற்றல்.. அப்படியே பாயை விரிச்சு படுத்திட்டார்...
================================
நம்ம ஆளு வெளியில போயிட்டு வந்த களைப்புல உள்ள வர்றார்... "அம்மா..! நான் வெளியில சாப்பிட்டு வந்திட்டேன். கொஞ்ச நேரம் தூங்குறேன்.. டிஸ்டர்ப் பண்ணாதே"ன்னு உள்ளே போக...
"டேய் , அப்பா சாப்பிடாம படுத்திட்டார்... அவரை எழுப்பி விட்டுட்டு நீ தூங்கு."
"உனக்கு வேற வேலை இல்லை..சரி......!"

"அப்பா ......."
என்ன இது, பழைய டைரி எடுத்திக்கிட்டு , கீழே  பாய்ல படுத்து இருக்கார். தலையணை கூட வைக்கலை.
விரிந்து இருந்த அந்த டைரி பக்கம் கண்ணுல படுது... மணி மணியான எழுத்துக்கள்.

22.12.1987


                                        ===  உ   ===   

                                         ஸ்ரீராமஜெயம் 

- இன்று என் வாழ்வின் மிக முக்கியமான சந்தோசமான நாள். என் மகன் நடக்கும் சூட்சுமத்தை கற்றுக் கொண்டு விட்டான். சந்தோசமாக வீட்டு கேட் வரை 'தத்தக்கா , பித்தக்கா' என்று நடந்து வந்தான். அவனுக்கு அது ரொம்ப பிடித்து இருந்தது. அவன் நடப்பதை பார்க்க எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்து இருந்தது. கீழே விழப் போனவனை வாரி அணைத்துக் கொண்டேன். கால் வலிக்குமே என்று லேசாக பிடித்து விட்டேன். அந்த சுகம் லேசாக அவன் கண் கிறங்குவதில் இருந்து எனக்குப் புரிந்தது. அப்போது வீட்டு கேட்டில் ஒரு காகம் வந்து அமர்ந்தது. எங்கள் சந்தோசத்தில் பங்கு கொள்ளவே வந்தது போல இருந்தது.
"ன்ன்னா ?"
இது அவனுக்கே உரிய மழலை பாஷை. எங்கள் இருவருக்கும் இந்த பாஷை தெரியும்.
இது என்ன என்று கேட்கிறான். நான் "காக்கா" என்றேன்.
ஹா.. ஹா... கிக் கிக் .... அவனுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. அவன் காக்கா என்று சொல்ல முயற்சி செய்தான் முடியவில்லை. என்  கன்னத்தில் ஒரு முத்தமிட்டான்.....
மறுபடியும், அந்த காகத்தின் பக்கம் கை நீட்டி.... "ன்ன்னா ?"
நானும் காக்கா என்றேன்... திரும்ப கிக் கிக்... முத்தம்....
இப்படியே... இருபத்தேழு தடவை நடந்தது. இருபத்தேழு முறையும் முத்தமிட்டான்.....
நான் இதுவரை பிறந்ததில் இருந்து இவ்வளவு சந்தோசமாக இருந்ததில்லை....!
எனக்கு என் பையன் போதும். ..... அவன் மட்டுமே இனி வாழ்க்கை, மூச்சு , எல்லாமே.!
எனக்கு சக்தி இருந்தால் அந்த காக்காவுக்கு ஒரு கோவில் கட்ட வேண்டும் என்று தோன்றுகிறது. இன்றிலிருந்து தினமும் காகத்திற்கு சாதம் வைத்த பின்பே , நான் சாப்பிடவேண்டும் என்று உறுதி மொழி எடுக்கிறேன்........
============================

ஐயோ... நம்ம அப்பாவுக்கு என் மேல , இவ்வளவு பாசமா? காலைல கேட்டுல காக்கா வந்ததைப் பார்த்திட்டு ரெண்டாம் தடவை கேட்டதுக்கே அவர் மேல எம்புட்டு கோபம் வந்துச்சு...! ச்சே ... நான்லாம் ஒரு மனுஷனா? அவர் கூட மனசு விட்டுப் பேசி.. எவ்வளவு நாளாச்சு.....?
"அப்பா.... எழுந்திருப்பா... சாப்பிட்டு தூங்கு...."
 

தியேட்டர்ல விசில் அடிச்சு, கத்தி கத்தி தொண்டை மக்கர் பண்ணியது. அவன் குரலே அவனுக்கு வித்தியாசமாக தெரிந்தது.

"அப்பா...!"

"அப்பா...!"
" அப்பா.........ஆஆஆஆஆஆஆ...."
 

அப்பாவின் உயிர் எப்போதோ பிரிந்து இருந்தது.........

*************************************************************
நாமளும் ஒரு ஜென்மத்து வாய்ப்பை வீணடிக்கனுமா ?அன்பை அடிக்கடி வார்த்தைகளால் வெளிப்படுத்துவோமே......!

ராகு - கேது பலன்கள் & ஜோதிட பாடங்கள்

| Dec 19, 2012
அன்பு நண்பர்களுக்கு வணக்கம். நமது ராகு / கேது பலன்கள் கட்டுரைக்குப் பிறகு ஜோதிட பலன்கள் கேட்டு வந்து இருக்கிற கடிதங்கள் நான் எதிர் பார்த்ததைவிட அதிகம். சென்ற ஞாயிற்றுக்கிழமையே அனைவருக்கும் பதில் அனுப்பிவிடலாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால், ஒரு பத்து சதவீதம் கூட இன்னும் முடியவில்லை. பெரும்பாலானோர் , ராகு / கேது பலன் மட்டும் இல்லாது , சில குறிப்பிட்ட கேள்விகளுடனும் , பொதுப் பலன்கள் வேண்டியும் அனுப்பி இருந்ததால் - பார்ப்பதுதான் பார்க்கிறோம் முழுவதுமாக அனலைஸ் செய்து அனுப்பி விடலாம் என்று ஒரு நாளைக்கு ரெண்டு / மூன்று வீதம் அனுப்பி வருகிறேன். அதனால் , கேள்விக்கு பதில் வராதவர்கள் கவலை கொள்ள வேண்டாம். வெகு நிச்சயம் இன்னும் சில தினங்களில் உங்களுக்கு மெயில் வந்து சேரும். (இந்த டிசம்பர் மாத இறுதிக்குள்).

ஒரு விஷயம் மட்டும் இங்கே தெளிவு படுத்த விரும்புகிறேன். உங்கள் பிறந்த ஜாதகத்தில் , யார் யாருக்கெல்லாம் - மேஷத்தில் ராகுவோ / கேதுவோ இருந்தால் , அவர்கள் அனைவரும் இன்னும் ஒன்றரை வருட காலத்துக்கு கொஞ்சம் கவனமுடன் இருப்பது நல்லது. ஜோதிட சாஸ்திரப்படி - ஒரு அவமானம் , தலைகுனிவு , மனது வருத்தப்படும் ஒரு நிகழ்வு நடப்பதற்கு சாத்தியம் அதிகம். குடும்பம் / உத்தியோகம் என்று எதிலும் ஒரு பிடிப்பற்ற , விரக்தி அடையும் நிலைமைக்கு தள்ளும்.  பொருளாதார ரீதியாக ஒரு ஸ்திரமற்ற நிலைமைக்கு , கிட்டத்தட்ட ஏழரை / அஷ்டம சனி காலத்துக்கு சமமான ஒரு நிலையைப் போல இருக்கும். கடந்த ஒரு மாதமாகவே இந்த நிலை அவர்களுக்கு தோன்றி இருக்க கூடும்.  ( ஒரு மாசமாவா? காலம் முழுக்க அப்படியே தான் சார் இருக்கு - காசு விஷயத்துலன்னு சொல்றீங்களா? - உங்களுக்கு ஒரு நல்ல பரிகாரம் அடுத்த கட்டுரையில் சொல்கிறேன்...) ஏற்கனவே உச்ச சனியுடன் ராகு இணைகிறார். சனி பகவானுக்கு டபுள் ஆக்ட் கொடுத்த கணக்கு இது.
முக்கியமாக இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட ஜாதகர்களை , கொஞ்சம் கவனமுடன் வாழ்க்கையை அணுக வேண்டி அறிவுறுத்தவே - ஜாதக குறிப்புக்கள் அனுப்ப சொல்லி இருந்தேன்.

இந்த அமைப்பு இருக்கும் எல்லோருக்குமே இப்படியா என்றால், இல்லை . பெரும்பாலோருக்கு உண்டு. நல்ல தசா , புக்தி நடந்தால் கவலை இல்லை. எனினும் கவனமுடன் இருப்பது நலம்.

இந்த மாதிரி அமைப்புள்ளவர்கள் -  விநாயகர் வழிபாடும் / ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மன் வழிபாடும் செய்துவர - நிலைமை மாறும். பெரிய அசம்பாவிதங்கள் நிச்சயம் நடக்காது. தினமும் ராகு கால நேரத்தை பயன்படுத்த முடியாதவர்கள் - வார விடுமுறை நாட்களில் அவசியம் அருகில் இருக்கும் அம்மன் ஆலயம் சென்று குறைந்தது ராகு காலம் முடியவிருக்கும் அரைமணி நேரமாவது சென்று வணங்கி வரவும். அதாவது வீட்டில் ஓய்வில் இருந்தால், அன்றைய தின ராகு கால நேரம் உங்களுக்கு ஆலயத்தில் தான் இருக்க வேண்டும். இதை நீங்கள் கடைபிடித்தாலே , எப்பேர்ப்பட்ட இடையூறும் நிகழாது . இது நிச்சயம்.  விநாயக பெருமானுக்கு சதுர்த்தி விரதம் இருக்கலாம். இது கேதுவால் வரும் வினைகளை குறைக்கும்.


தினமும் குறைந்தது பதினைந்து நிமிடமாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தில்  " ஓம் சிவ சிவ ஓம் " மந்திர ஜெபமோ அல்லது சொர்ண ஆகர்ஷன பைரவர் மூல மந்திரமோ ஜெபிப்பது நல்லது. இரண்டையும் ஒருவரே சொல்ல வேண்டாம். யாருக்கு எது சூட்டபிள் என்று ஜாதகம் பார்த்த பிறகு தெரியப்படுத்துகிறேன். இது சனி பகவானின் தாக்கம் குறைய கைகொடுக்கும்.

முறை தவறிய உறவுகள் இருந்தால் முழுவதும் துண்டிப்பது நல்லது. முறைகேடான உறவுகளுக்கு வாய்ப்பு இருந்தாலும், தவறியும் சந்தர்ப்பம் கொடுத்து விட வேண்டாம். கட்டம் கட்டி கவிழ்த்துவிட காத்து இருப்பார்கள். ஜாக்கிரதையுடன் இருங்கள். 


மேலும் சில எளிய பரிகாரங்களை - சம்பந்தப்பட்ட ஜாதகர்களுக்கு , மெயிலில் தெரியப்படுத்துகிறேன். 


நான் ஏற்கனவே " கல்யாணத் தேனிலா" கட்டுரையில்  ப்ராமிஸ் பண்ணியபடி - குழந்தை பாக்கியம் சம்பந்தமாக & கடன் நிவாரணம் பொருளாதார மேம்பாடு சம்பந்தமாக - இரண்டு ஸ்பெசல் கட்டுரைகள் இந்த வாரத்தில் வெளியாகவுள்ளன. படித்துப் பயன் பெறுங்கள்


=================================================

ஜோதிட பாடங்கள் நமது தளத்தில் தொடர்ந்து படித்த நண்பர்கள் சிலர் , மீண்டும் தொடர்ந்து பதிவிடும்படி வேண்டுகோள் விடுக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் இந்த பதிவுகள் வெளியிடப்பட்டு ஒவ்வொரு பதிவும் பத்தாயிரம் முறைக்கு மேல் பார்வையிடப்பட்டு இருந்தாலும், எனக்கு இதில் எவ்வளவு பேர் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மெயிலிலோ , பின்னூட்டம் மூலமாகவோ தொடர்பு கொண்டவர்கள் வெகு சிலரே. குறைந்தது ஒரு நூறு பேராவது உண்மையிலேயே ஆர்வமாக இருந்தால் - மீண்டும் ஒரு வருடத்திற்கு - வாரம் ஒரு பதிவு வீதம் ஒரு ஐம்பது பதிவுகள் வெளியிடலாம் என்று நினைக்கிறேன். வெறுமனே ஜோதிட நுணுக்கங்கள் மட்டுமின்றி, ஆன்மீக புத்துணர்வு அளிக்கும் வகையில் ,  வாழ்க்கை மேம்பாட்டுக்கு உதவும் வகையில் , உத்வேகமும் , உற்சாகமும் அளிக்கும் வகையில் அந்த பதிவுகள் அமையும். ஆனால் , அவை நீங்கள் அளிக்கும் ஆதரவைப் பொறுத்து தான் இருக்கிறது. ஆர்வம் இருப்பவர்கள் பின்னூட்டம் இடவும். பார்க்கலாம் எத்தனை பேர் இதில் ஈடுபாடு காட்டுகிறீர்கள் என்று. வழக்கமான Conventional மெத்தட் இல்லாமல் , எளிமையாக, சுவாரஸ்யமாக கொடுப்பதற்கு நான் தயார். முழுவதும் படித்து முடித்தவர்கள் , ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து , நீங்களே ஜாதகம் எழுதி , கணிக்கும் வரை பக்காவாக ரெடியாகி விடுவீர்கள். 

ஆனால் சில கண்டிஷன்கள் உண்டு. படித்து முடிக்கும் காலம் முழுவதும் அசைவம் தவிர்க்கவேண்டும். தினமும் குறைந்தது பதினைந்து நிமிடமாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தில்  " ஓம் சிவ சிவ ஓம் " மந்திர ஜெபமோ அல்லது சொர்ண ஆகர்ஷன பைரவர் மூல மந்திரமோ ஜெபிக்க வேண்டும். யார் எதை ஜெபித்தால் உடனடி பலன்கள் கிடைக்கும் என்று , நீங்கள் மெயிலில் தொடர்பு கொள்ளும்போது தெரிவிக்கிறேன். நீங்கள் பிறந்த லக்கினம் & பிறந்த ராசியை தெரியப்படுத்தவும்.  Mail me at :  Editor@livingextra.com.
இவை எல்லாம் தவிர , நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலும் அடுத்தவர் மனதைப் புண்படுத்தும்படி, உங்கள் மன சாட்சிக்கு விரோதம் இல்லாமல் இருக்க வேண்டும். இதுக்கு நீங்க ரெடின்னா , நான் ரெடி. வரும் பௌர்ணமியிலிருந்து , பாடங்கள் தொடங்கி விடலாம்.கண்டிஷன் எல்லாம் பயங்கரமா இருக்கேன்னு பார்க்காதீங்க. குரு தட்சணை மாதிரி எடுத்துக்கோங்க.ஜோதிடம் பயில இருப்பவர்கள் மட்டும் இல்லாது , நம் வாசகர்கள் அனைவரும் மேலே குறிப்பிட்ட பழக்கங்களை கடைபிடிக்கலாம். இது எல்லாமே  உங்கள் வாழ்வின் முன்னேற்றத்துக்கு, இன்னும் ஒரு படி உங்களை மேலே அழைத்துச் செல்லும்.


ஜோதிட பதிவுகள் வந்தாலும், அதை நமது பிற வாசகர்களும் பார்வையிடுங்கள். ஒவ்வொரு பதிவிலும் , சில முக்கியமான , அருமையான தெய்வீக தகவல்களும் உள்ளடங்கியே இருக்கும்.


மீண்டும் அடுத்த ஒரு சிறப்பு பதிவில் உங்களை சந்திக்கிறேன்....!
வாழ்க அறமுடன்!
வளர்க அருளுடன்!

அனைத்து கஷ்டங்களும் ஒரு சுகமான அனுபவமே!!!

| Dec 17, 2012

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/health/pregnant1.jpg

எல்லாக் கஷ்டத்தையும் , மனுஷங்க மேல இறக்கி வைக்க முடியாது. அது நம்ம குடும்பமா இருந்தாலும் சரி , இல்லை நெருங்கிய நண்பர்களா இருந்தாலும் சரி. ஆனா, ஒருத்தர் மேல நீங்க தைரியமா இறக்கி வைக்கலாம் . அந்த நம்பிக்கைக்கு உரியவன் ஆண்டவனே. பாரம் இறங்கினால் சுமை குறையும். சுமை குறைந்தால் மனம் லேசாகும். மனம் லேசானால் வாழ்வின் ருசி வளரும். எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண்போம். அவற்றின் மீது அன்பு செய்வதே உண்மையான பக்தி வழிபாடு.
உலகம் முழுவதும் கடவுள் இல்லை என்று சொன்னாலும், எனக்குக் கடவுள் என்றும் உண்டு’ என்றார் மகாத்மா காந்தி. 
 
திருமுருக கிருபானந்த வாரியார் , இறைவன் தனக்கு உதவியதை நிரூபித்து உலகுக்கே எடுத்து சொன்னவர். 

வாரியார் சுவாமிகளின் சிறு வயதில் ஒரு காலில் கண்ணாடி குத்தி பெருத்த சேதத்தை உண்டு பண்ணி விட்டது. புண் பழுத்துப் போய் காலையே எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆனார். மருத்துவர், காலை எடுத்து விட ரூ 500 கேட்டார்.

வாரியார் சுவாமிகள், " ஒரு காலை எடுப்பதற்கு இந்த மருத்துவருக்கே இவ்வளவு கொடுக்க வேண்டும் என்றால் , இரண்டு கால்களை தந்த முருகனுக்கு நான் எவ்வளவு கொடுக்க வேண்டும் " என்று யோசிக்கலானார். காலை , மாலை என்று இருவேளைகளில் 41 நாட்கள் சிந்தாரிப்பேட்டை முருகன் கோயில் பிரகாரத்தைச் சுற்றி வந்தார்.
புண் இருந்த அடையாளமே காலில் இல்லாமல் போனது. 


இது உண்மையில் நடந்த சம்பவம். ஒரு அளவுக்குத் தான் நமக்கு வர்ற கஷ்டங்களை சமாளிக்க முடியும் கையை மீறி விஷயங்கள் நடக்கும்போது , ஆண்டவான்னு அவரை சரணடைபவர்களை , அவர் கை விடுவதில்லை . நம் ஒவ்வொருவருக்குமே இதைப் போன்ற அனுபவங்கள் அடிக்கடி நிகழும் . ஆனால் பிரச்னை முடிந்தவுடனே , நாம் அவனது கருணையை நினைத்துக்கூட பார்ப்பதில்லை - திரும்ப ஒரு பூதாகரமான பிரச்னை வரும்வரை...!
==================================================

அற்புதமான ஆன்மீகப் பேச்சாளர் திரு. சுகி. சிவம் அவர்கள் கூறிய கருத்து ஒன்றை இங்கே பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். படித்துப் பாருங்கள் :

வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்களை பிற்காலத்தில் படாமல் இருக்க இளமையில் கொஞ்சம் கஷ்டப்படலாமே?


 காலை 5 மணிக்கு எழுவது கஷ்டம். ஆனால் பிற்காலத்தில் படுக்க இடம் இல்லாமல், குடியிருக்க வீடு இல்லாமல் கஷ்டப்படாமல் இருக்க படுக்கையை விட்டு 5 மணிக்கே எழலாமே!


உடலில் முதுகுவலி, மூட்டுவலி என்று திணறாமல் இருக்க உடற்பயிற்சி என்று கஷ்டப்படலாமே!


பட்டினி அல்லது கடை உணவு என்கிற பெருங்கஷ்டம் ஏற்படாமல் இருக்க சமையல் என்கிற ஒன்றை அறிய அல்லது சமைக்க கஷ்டப் படலாமே...நானும் அறிவேன் இது எல்லாருக்கும் பொருந்தாது என்று, இருந்தாலும் முடிந்தவரை முயற்சி செய்வோம் பிற்காலத்தில் மற்றவரை சார்ந்திராது இருக்க.ஒழுங்கற்ற, எதிர்பாராத கஷ்டத்தைத் தவிர்க்க திட்டமிட்ட கஷ்டங்கள் படுவது அவசியம்.சிரமங்கள் நம்மை பலப்படுத்துகின்றன.

கஷ்டங்கள் நம்மை வலுப்படுத்துகின்றன.துயரங்கள் நம்மை உருவாக்குகின்றன. எதிர்பாராத சிரமங்களைத் தவிர்க்க எதிர்பார்க்கும் சிரமங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். 

அனைத்து கஷ்டங்களும் ஒரு சுகமான அனுபவமே!!!
========================================================================

இது நான் சமீபத்தில் படித்த, ஒருவர் பகிர்ந்துகொண்ட அனுபவம்: ஒரு நாள் பணி நிமித்தமாக ஒரு மணி நேரம் காரில் காத்திருக்க வேண்டிய நிலை. அப்போது நான் கண்ட காட்சி என் வாழ்க்கையில் திருப்பு முனையாக இமைந்தது.
நான் காத்திருந்த இடத்தின் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் பழைய பேப்பர் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பவர், அந்த குப்பையைக் கிளறி அவருக்குத் தேவையான சில பொருட்களை எடுத்துச் சென்றார்.பின் சிறிது நேரம் கழித்து மற்றொரு பழைய பொருள் சேகரிப்பவர் வந்து அப்படியே செய்தார். அது போல் அந்த ஒரு மணி நேரத்தில் ஆறு நபர்கள் வந்து, அந்த குப்பைத் தொட்டியைக் கிளறி தேவையானது கிடைக்க, நம்பிக்கையோடு அடுத்த இடம் சென்றனர்.


வாழ்க்கையில் மிகவும் தோல்விகளைச் சந்தித்து எதிர்காலம் கேள்விக்குறி என்ற நிலையில் அப்போது இருந்தேன். ஆனால் ஒரே ஒரு குப்பைத் தொட்டியில் ஆறு பேருக்குப் பலன் கிடைக்கும் போது, இந்த பரந்த உலகில் வாழ்க்கையில் முன்னேற எத்தனையோ நேர்மையான, நிலையானஒளிமயமான வாய்ப்புகள் உண்டு என்பதை அறிந்து, அதன் பிறகு மனதில் உறுதியோடு செயல்பட்டேன்.  என்ன புரியுதுங்களா? அதனால, வாழ்க்கையிலே எந்த ஒரு சூழ்நிலையிலும் எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சு, மனம் தளர்ந்து விடாதீர்கள். நமது நேர்மையான முயற்சிக்கு நிச்சயம் வெகுமதி உண்டு.

வாழ்க்கையில் சாதிக்க துடிக்கும் ஒவ்வொருவருக்கும்.!

| Dec 5, 2012
வாசக நண்பர்களுக்கு என் பணிவான வணக்கம். ராகு , கேது பலன்கள் சம்பந்தமாக மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்ட ( Till  5th  Dec) அனைவருக்கும்  வரும் 16 ஆம் தேதிக்குள் , கண்டிப்பாக விரிவான மின்னஞ்சல் வந்து சேரும்.

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் ஒரு அருமையான நிகழ்ச்சி ஏற்பாடாகி இருக்கிறது. நமது தேசிய கவி பாரதியாரின் பிறந்த நாள் கொண்டாட்டம்..! நமது தளத்தின் நீண்ட நாள் வாசகரும் நண்பருமான சுந்தர் அவர்கள் ஒரு மகத்தான முயற்சி மேற்கொண்டு , இந்த விழா ஏற்பாடுகளை செய்துள்ளார்..!

பாரதி பிறந்த நாள்..! இதுல என்ன மகத்தான முயற்சி ன்னு கேட்குறீங்களா?
அந்த பங்க்ஷனுக்கு வருவதற்கு இசைந்துள்ள VIP லிஸ்ட் பாருங்க .....! உண்மையிலேயே மிரட்டலா இருக்கும்.!


ரொம்ப நாட்களுக்கு முன்னாள் நமது சாதனையாளர்கள் கட்டுரையை படித்து விட்டு , நிறைய நண்பர்கள் சார் இவங்க எல்லாரையும் , கூப்பிட்டு நம் வாசகர்களுக்கு ஒரு Get  together பங்க்ஷன் ஏற்பாடு பண்ணினால், நமது எத்தனையோ வாசகர்களுக்கு  வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பு முனையாக இருக்குமே என்று கேட்டு இருந்தனர்.
அப்போதே சில நெருங்கிய நண்பர்களிடம் சொல்லி இருந்தேன்..! ஒரு நாள் பண்ணனும் . முயற்சி பண்ணுவோம் என்று. அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று நிச்சயமாக நான் நினைக்கவில்லை .
கனவு மெய்ப்ப வேண்டும் என்று - பாரதி அன்னைக்கு சொன்னது, இன்னைக்கு நடக்குது. அமரகவிக்கு அர்த்தம் இப்போ தானே புரியுது...! இவ்வுலகை விட்டு சென்று இத்தனை வருடங்களுக்குப் பிறகும் - இந்த பிறந்த நாள் மூலம் மானிடம் உய்ய - இதோ இன்னொரு வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது நமது எட்டையபுரத்து சிங்கம்.
=======================================
திரு இளங்கோ  - உலகமெங்கும் லட்சக்கணக்கான இளைஞர்களை , மாணவர்களை சந்தித்து கலந்துரையாடல் மூலம் , தன்னம்பிக்கை டானிக் ஏற்றிக் கொண்டு இருப்பவர். மனிதர்களின் உள்ளே உறங்கி கிடக்கும் திறமைகளை தட்டி எழுப்பி பல ஆயிரக் கணக்கான வெற்றியாளர்களை உருவாக்கியவர். தனக்கு பார்வை இல்லை என்ற போதிலும், பல லட்சக்கணக்கானவர்களின் அறிவுக் கண்களை திறந்த ஒரு மாமனிதர்..!

திரு. நந்தகுமார் - I.R.S - பத்தாம் வகுப்பு கூட ஒழுங்காக படிக்க முடியாத ஒரு மனிதர், லாட்டரி டிக்கெட் விற்று , மெக்கானிக் வேலை செய்து - திரும்ப டுடோரியல் மூலம் படிப்பைத் தொடர்ந்து , நம் நாட்டிலேயே கடினமான பரீட்சையாக கருதப்படும் UPSC தேர்வை வென்று , இன்று சென்னை மாநகர் வருமானவரித் துறை உதவி கமிஷனராக நாட்டிற்கு சேவை செய்து வருபவர். பல சாதாரண கல்வி கூடங்களுக்கு ,சென்று  அங்குள்ள மாணவர்களுக்கு சாதிக்க கூடிய சக்தியை தொடர்ந்து தந்து கொண்டு இருப்பவர் ..!
இவர்கள் இருவரையும் பற்றி நம் தளத்தில் ஏற்கனவே கட்டுரை கொடுத்து இருந்தோம் நம் வாசகர்களுக்கு ஞாபகம் இருக்கலாம்!

தலைமை விருந்தினர்...! அம்மாடி ..... இப்படி ஒரு மனிதரா என்று உலகமே வியந்து போற்றும் ஒரு மகாத்மா! திரு. பாலம். கல்யாண சுந்தரம் ஐயா அவர்கள். தான் வாழ் நாள் முழுவதும் ஒரு லைப்ரேரியனாக மாதா மாதம் சம்பாதித்த தொகையை - இல்லாதவர்களுக்கு சேவை செய்தவர். அட ஆமாங்கய்யா.! ஒரு பைசா விடாம! அவர் வீடு சொத்து முழுக்க...! அவருக்கு வேண்டிய சாப்பாடு , செலவுக்கு - ஒரு ஹோட்டலில் சப்ளையராக வேலை பார்த்தாராம். இவர் செய்த சேவைகளை ,கேள்விப்பட்டு  உலகம் முழுக்க வந்து குவிந்த நன்கொடை விருதுகள் - என கோடிக்கணக்கான ரூபாய் முழுவதும் - மக்கள் சேவைக்கே என அர்ப்பணித்தவர். நம் ஊர் ரஜினிகாந்த் முதல், பில் கிளிண்டன் போன்ற உலகின் பல பல VIP மனிதர்கள் இவரை பார்க்க வாய்ப்பு கிடைக்குமா என ஏங்குகின்றனர். ரஜினிகாந்த் இவரை தனது தந்தை ஸ்தானத்தில் வைத்து இருக்கிறார். எளிமைக்கு மறுபெயர் ...! இப்படி ஒரு மனிதர் நம்மிடம் வாழ்ந்தார் என்பதை நாம் கர்வத்துடன் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.. அப்பேற்பட்ட மகாத்மா!குறித்து வைத்துக் கொள்ளுங்கள்..! ஒரு மாபெரும் வரலாற்று நாயகன் என உலகமே இவரை கொண்டாடும் நாள் நெருங்கிக் கொண்டு இருக்கிறது..!

நாலாவது உள்ளவர் பாருங்க...! ஒரு சுற்றுச் சூழல் ஆர்வலர் . இன்னைக்கு ஒவ்வொரு மனுஷனும் , ஒரு லிட்டர் தண்ணி குடிக்கிறமோ ,  இல்லையோ - ஆனா ஒரு லிட்டர் பெட்ரோல் செலவு பண்ணாம இருக்கிறது இல்லை. போதாதுக்கு, வீடு - பிளாட் என்று , காடுகளை விடுங்க - மரங்களே இனிமேல்  டிஸ்கவரி , NGC ப்ரோகிராம்ல தான் வருங்கால சந்ததி பார்க்கணும் போல. இது எல்லாருக்கும் தெரியும் தான். என்ன பண்றது..! நாம நம்ம பொழைப்பை பார்ப்போம் வருங்கால சந்ததியைப் பற்றி அரசாங்கம் தான் பார்க்கணும் ன்னு போய்க்கிட்டே இருக்கிறோம்! இல்லை உலகத்தைப் பற்றி  கவலைப்பட நானும் இருக்கேன் என்று இதுவரை சுமார் முப்பது லட்சம் மரங்களை நட்டு, முறையே பராமரித்தும் வருபவர்.

இப்படி நான்கு மகத்தான மனிதர்களை ஒருங்கே சந்திக்கும் பாக்கியம் , வாழ்வின் ஒரு அற்புதமான தருணம், நம் வாழ்க்கையை நாமே செப்பனிட - இது ஒரு அருமையான வாய்ப்பு - இந்த விழா!

AC ஹால் - இன்விடேஷன் டிக்கெட்டுக்கு காசு ன்னு எந்த பந்தாவும் இல்லாம - வரும் எல்லோருக்கும் அனுமதி  இலவசம். பாரதி பதினொன்னாம் தேதி தானே பிறந்தார்னு , அன்னைக்கு ப்ளான் பண்ணாம - நம்மளை மாதிரி எல்லோரும் கலந்துக்கிட ஏதுவா , ஞாயிற்றுக்கிழமை - சாயங்காலம் பங்க்ஷன்.

இப்படி ஒரு அருமையான எண்ணம் ஏற்பட்டு , இந்த வாய்ப்பை நமக்கு ஏற்படுத்திய நல்ல உள்ளம் திரு. சுந்தருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

எவ்வளவோ பணிகளுக்கு இடையிலும் - ஒரு சாதாரண மனிதரின் அழைப்பை ஏற்று , நமக்காக , நம்மைப் போல சாமான்யர்களை, வாசகர்களை சந்திக்க சம்மதம் தெரிவித்த - இந்த சாதனை நாயகர்களை , அவர்களின் முயற்சிகளை நாம் நேரடியாக உற்சாகப் படுத்த - இந்த கட்டுரையை படிக்கும் அனைவரும் அவசியம் முயற்சி  செய்யுங்கள்.!

உங்கள் வாழ்க்கையின் திருப்புமுனை இதோ உங்களுக்கு ஏற்பட , இறை இசைந்துள்ளது என்பதை உணரத் தொடங்குவீர்கள்..!  

இந்த விஷயம் கேள்விப்பட்டு , இதன் அருமை உணர்ந்த நண்பர் ஒருவர் - இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே பூனாவில் இருந்து வருகிறார்... ! சொன்னதுக்கு ரொம்ப நன்றி சார்னு அவர் சொல்லுறப்போ - ரொம்ப சந்தோசமா இருக்கு.  அதனால , நம்ம தமிழ் நாட்டுல இருக்கிறவங்க - , தயக்கம் , கூச்சம் இல்லாம கண்டிப்பா வாங்க ....! சென்னையில் இருக்கிறவங்க குடும்பத்தோட வாங்க..! உங்க வீட்டில படிக்கிற பசங்க, இளைஞர்கள் இருந்தா அவசியம் அவங்களை கூட்டிட்டு வாங்க..! இது நம்ம வீட்டு விசேஷம்...! நாம பெருமை பட வேண்டிய விசேஷம்!

 
மனிதம் வளர்ப்போம்...!

நிகழ்ச்சியின் ஒவ்வொரு அம்சமும் பாரதியை நினைவு கூர்வதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கும் பயனுள்ள வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளது.
கடவுள் வாழ்த்து பாடும்போதே நீங்கள் விழாவில் மிகவும் ஒன்றிவிடுவீர்கள் என்பது உறுதி.

நாள் :  டிசம்பர் 09, 2012 ஞாயிற்றுக் கிழமை மாலை
நேரம் : 5.50 PM to 8.30 PM
இடம் : அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோவில், பி.டி.ராஜன் சாலை, (சிவன் பார்க் அருகே) கே.கே.நகர், சென்னை -78.
பஸ் ரூட் : 17D, 11G, 49A, 12G, 11H, 5E      பஸ் ஸ்டாப் : சிவன் பார்க்
ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com