Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

திருவலம் கோவில் கும்பாபிஷேகமும் , கோணிப்பை சித்தரும் ...!

| Nov 17, 2012

 


புராண காலத்தில் மட்டுமன்றி சமீபகாலத்திலும்கூட எத்தனையோ மகான்கள் நம்மிடையே வாழ்ந்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுள் ஒருவர்தான் கோணிப்பை சாமியார். இடுப்பில் கிழிந்த கோணிப்பையை மட்டுமே இவர் அணிந்ததால் கோணிப்பை சாமியார் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அதுவே இவர் பெயராக நிலைத்து விட்டது.

வேலூர் மாவட்டம் திருவலத்தில் உள்ளது வில்வநாதீஸ்வரர் திருத்தலம். இது ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டது. அவனது மனைவியின் தாய் வீடு, திருவலம் நகரம்தான். அரசனால் கட்டப்பட்ட அரனாலயம் அநேக ஆண்டுகள் கடந்த நிலையில் புதர் மண்டி கவனிப்பார் எவரும் இன்றிக் கிடந்தது. அந்த தருணத்தில்தான் சிவானந்தன் என்பவர் அங்கு வந்து சேர்ந்தார். 1960-களில் வந்த அவர், ஆலயத்தின் அவல நிலை கண்டு வருந்தினார். மண்டிக்கிடந்த புதர்களை தன்னந்தனி ஆளாய் களையத் தொடங்கினார். முதலில் அதைப் பார்த்த திருவலம் நகரவாசிகள் யாரோ பித்துப் பிடித்தவர். வீட்டில் இருந்து விரட்டப்பட்டவர் என்றெல்லாம் அவரை ஏளனம் செய்தனர். பிற்காலத்தில் அவர் பெரிய யோகியாக விளங்கப் போகிறார் என்பது, பாவம் அவர்கள் யாருக்கும் தெரியவில்லை.

அந்த பக்தரோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் கோயிலைச் சீரமைப்பதில் மட்டுமே நேரத்தைச் செலவழித்தார். அதோடு, கோயிலுக்கு ஏழைகள் எத்தனை பேர் வந்தாலும் அவர்களுக்கு வயிராற கூழ் ஊற்றவும் ஏற்பாடு செய்தார். தாமே முயன்று கோயிலைச் சீரமைத்து அவரே கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்தபோது ஊரே வியந்து நின்று பார்த்தது. அவர்மேல் மதிப்பும் மரியாதையும் வைத்தது. கோயிலின் உள்ளே உள்ள வில்வ மரத்தின் கீழ் அமர்வதுதான் அவரது வாடிக்கை. அதிகம் பேசாமல் மவுனமாகவே இருந்த அவர் ஏதாவது சொன்னால், அந்த வாக்கு அப்படியே பலித்தது. செய்தி ஊர் முழுவதும் பரவ, அவரை தரிசிக்க பலதரப்பட்ட மனிதர்கள் குவிந்தனர். 

கை நீட்டிக் காசோ பணமோ வாங்க மாட்டார் அவர். அவர் அருகில் யாராவது காசை வீசிவிட்டுச் சென்றால், தன்னைப் பார்க்க வருபவர்களுக்கு சின்னக் குச்சியால் அந்தக் காசுகளை தள்ளிக் கொடுப்பார். அவர் ஆசியால் வாழ்வில் வளமும் நலமும் அடைந்தோர் பலர். எல்லாம் இருந்தபோதிலும் கோயில் திருப்பணியில்தான் அதிக ஆர்வம் காட்டிய கோணிப்பை சாமியாரின் தலைமையில் எட்டு முறை கும்பாபிஷேகம் கண்டது கோயில். இக்கோயிலுக்கென நால்வர், நாயன்மார்கள், தொகையடியார்கள் சிலைகளும், செப்புத் திருமேனிகளும் செய்து வைத்துள்ளார். அதோடு கந்தகோட்டம், திருத்தணி, பொள்ளாச்சி கோயில்களுக்கு மரத்தேரும், வெள்ளித் தேரும் அளித்திருக்கிறார். திருப்பதி கோயிலுக்கும்கூட உதவிகள் செய்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

இவர் அளித்த வில்வ விபூதி மகிமையால் பல நோய்கள் குணமாகியுள்ளது என்றும்; குழந்தை வரம் கிடைத்தது என்றும் பல பக்தர்கள் சொல்கிறார்கள். பக்திப் பணியோடு சமுதாயப் பணிகளையும் மேற்கொண்டிருந்த இவர், தான் ஜீவ சமாதியடையும்போது என்ன செய்ய வேண்டும், அதன்பின் அமையப் போகும் அதிஷ்டானம் எப்படியிருக்க வேண்டும் என்பதையும் முன்கூட்டியே வடிவமைத்துக் கட்டிவைத்தார். பின்னர், 1988ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று திருவலம் கோயிலின் நுழைவாயிலுக்கு இடது புறத்தில் ஜீவ சமாதியாகிவிட்டார். கோணிப்பை சாமியார் எங்கள் ஊருக்கு வந்த பின்னர்தான் பல நன்மைகள் நடந்தது. அதனால் அவரை மகானாகவும் தெய்வமாகவும் போற்றுகிறோம். இன்றும் எங்கள் மனதில் அவர் நீங்கா இடம் பெற்றிருக்கிறார் என்கிறார்கள். வேலூர் மாவட்டம் திருவலத்தில் கோணிப்பை சாமியாரின் ஜீவசமாதி உள்ளது.

(Thanks for the Article from Dinamalar )

சமீபத்தில் இந்த ஜீவ சமாதிக்கு சென்று வந்த என் நண்பர் ஒருவருக்கு, ஒரு மிகப் பெரிய நீண்ட நாள் பிரச்னை உடனே தீர்ந்து இருக்கிறது.  

அடடா சொல்ல மறந்துட்டேனே.... திருவலம் கோவிலுக்கு இந்த முறை கும்பாபிசேக விழா நடந்து கொண்டு இருக்கிறது.

நாளை குடமுழுக்கு நீராட்டு விழா. காலை பத்து மணி வரை நடைபெறுகிறது.

அதனால் வாய்ப்பு இருப்பவர்கள் அவசியம் கலந்து கொண்டு அவன் அருளைப் பெற வேண்டுகிறேன். கும்பாபிசேகம் முடிந்து ஒரு மண்டலம் வரை அருள் அலைகள் அபரிமிதமாக வெளிப்படும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அதனால் ஒருவேளை நாளை செல்ல முடியாதவர்கள் கூட, உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்பொழுது ஒருமுறை சென்று வாருங்கள்....
 

வில்வநாதரின் மகிமைகள் பற்றிய எனது பழைய கட்டுரையை மறந்து இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.... படிக்காதவர்கள், அந்த கட்டுரையை படிக்க,  இங்கே க்ளிக் செய்யவும்..  

7 comments:

யவனிகை said...

மிக்க நன்றி அண்ணா,
இந்த முறை கண்டிப்பாக சென்று வர முயற்சிக்கிறோம், ஒரு சிறு சந்தேகம், இந்த கோணிப்பை சாமியாரும், சதுரகிரி சாக்குப்பை சாமியாரும் ஒன்றா,
என் அனுபவத்தை பொறுத்தவரை கடவுளை விட சித்தர்களையும், மகான்களையும் வணங்கும்போது நம் பிரச்சனைகள் உடனடியாக தீர்வதை காணலாம்,
அவர்கள் இறைவனிடம் நேரடியாக பேச கூடியவர்கள், நாம் மனதார கூப்பிட்டால் கூப்பிட்ட குரலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் எந்த பந்தாவும் இல்லாமல் ஓடி வர கூடியவர்கள். எல்லோருக்கும் ஒரு குரு கண்டிப்பாக இருப்பார். நேரம் கூடி வரும்போது அவர் நம்மை தேடி வருவார், ஆனால் அதற்க்கு நம் மனம் பக்குவபட்டிருக்க வேண்டும், அந்த பக்குவம் அந்த இறைவனாலேயே நமக்கு கிட்டும். அண்ணா சென்னை காளிகாம்பாள் கோயில் பற்றி கொஞ்சம் பதிவிடுங்களேன், கொஞ்ச நாளாக அந்த கோயில் செல்ல வேண்டும், அதைப் பற்றி உங்கள் எழுத்துக்கள் வாயிலாக தெரிந்து கொள்ள வேண்டும் என ஆவலாக உள்ளது.
ஓம் க்ரியா பாபாஜி நாம ஓம் ஓம் நமச்சிவாய

SUN said...

thank you very much sir.
continue your wonderful job
Sundari

கோடியில் ஒருவன் said...

திருநெல்வேலியில இருட்டுக்கடையில உட்கார்ந்துகிட்டு, "இன்னும் அஞ்சு நிமிஷத்துல அல்வா சாப்பிடப்போறேன். முடிஞ்சா வாங்க"ன்னு மெட்ராஸ்ல இருக்குறவனை கூப்பிடுற மாதிரி இருக்கு நீங்க அடுத்த நாள் நடக்கப்போற கும்பாபிஷேகத்துக்கு முந்தின நாள் எங்களை கூப்பிடுறது.

ஆனா ஒன்னு.... மிகப் பெரிய புண்ணியவான்யா நீர்.

பின்னே... இப்படி ஒரு சிறப்பு பெற்ற கோவிலோட கும்பாபிஷேகத்த்தை நேர்ல பாக்குற பாக்கியம் கிடைச்சிருக்கே...

(நம்ம பஞ்சாயத்தை கோணிப்பை சித்தர் கிட்டே தான் வெச்சுக்கணும். இதோ வர்றேன் சார் ஒரு நாள் அங்கே...!)

NAHARANI said...

U R right rishi sir.. this temple as was told by you on previous posting we visited with family..really GOD made wonders in my life..when i am writing this now i pray and thank much the Thiruvalam sivaji and the siddhar there lives..also because of RISHI sir only we came across Simplesunder sir and this sunday with his invitation planning for BHARATHI VIZHAA and THIRUNEERMALAI TEMPLE VISIT.

ramanathan said...

We went to the temple this sunday. thanks for Your information about temples and for having a well blessed life.

ramanathan said...

we went to thiruvalam temple this sunday .thanks for your information.you have given link to web site furnishing details of siva temples with gurukkal name, telephone number detail route. for (i.e.) 333 temples in Thiruvotriyur, manali and athipattu.Now iam not able to find out the site.If it is possible please give the link details.Once again thanks.

A.Velusamy said...

We Need Jothida Paadam Continuation

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com