Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

ஆயிரம் அதிசயம் ! ஒரு சிலிர்ப்பூட்டும் அண்ணாமலை அனுபவம்!

| Oct 27, 2012
சென்ற ஞாயிற்றுக்கிழமை - நானும் என் நண்பர் ஒருவரும் அண்ணாமலை செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. சும்மா சொல்லக்கூடாது. மழை என்றால் அப்படி ஒரு மழை. கொட்டோ கொட்டோவென்று கொட்டிக் கொண்டு இருந்தது. எட்டு மணி சுமாருக்கு கோவிலுக்குள்ளே சென்றோம். தரிசனம் முடித்த பிறகு, இரவில் கிரிவலம் செல்வதாகத் திட்டம் இருந்தது. நவராத்திரி  சீசன் நடந்து கொண்டு இருந்தது அல்லவா? ஆலயம் முழுவதும் ஒரு அற்புதமான அதிர்வில் இருந்தது. கூட்டமும் அதிகம் இல்லை. வந்து இருந்த கொஞ்ச பேரையும் வருண பகவான் மிரட்டிக் கொண்டு இருந்தார். கூட்டத்தோடு வரிசையில் முதல் தரிசனம் முடித்த பிறகு, பிரஹாரத்தில் துர்க்கை சந்நிதிக்கு நேரே நின்றுகொண்டு, மனதிற்குள் மிருத்யுஞ்ஜெய மந்திரம் ஜெபிக்கத் தொடங்கினேன்.

இடையில் யாரோ ஒரு VIP அவர் குடும்பத்தோடு வந்து இருந்தார். கரைவேட்டி. ஒரு முன்னாள் எம்.எல்.ஏ.வோ அல்லது மந்திரியாகவோ இருக்க கூடும் என்று நினைக்கிறேன். கோவில் ஊழியர் ஒருவர் அவரைப் பிரத்யேகமாக கூட்டிச் சென்று, சிறப்பு தரிசனம் செய்வித்து அம்மன் சந்நிதிக்கு கூட்டி சென்றார். அப்போதே, மனசுக்குள் ஒரு எண்ணம். "நாம எல்லாம் , இந்த மாதிரி பெரிய ஆள் ஆனால், நமக்கும் இப்படி ஸ்பெசல் தரிசனம் செய்ய அனுமதி கிடைக்கும் இல்லே..! "

" ஹோய் ! மனசே அடங்கு! ஜெபம் பண்ணும்போது என்ன அங்கே சத்தம்! இங்கே கவனி! யாரை எங்கே எப்படி வைக்கணும்னு அவனுக்குத் தெரியாதா? உனக்கு என்ன வேணும்? தரிசனமா..VIP அந்தஸ்தா? அதை அப்புறம் பார்க்கலாம். இப்போ நீ ஜெபம் பண்றே..அதை மட்டும் கவனி" ன்னு இன்னொரு மனசு மிரட்ட ( ரமணர் சொன்ன மாதிரி ரெண்டு மனசு இருக்குது பாஸ்..!) "... த்ரியம்பகம் யஜாமகே....... " திரும்ப ஜெபத்தில் இறங்கிவிட்டேன். ஒரு அன்பர் பால் பிரசாதம் கொடுத்து விட்டுச் சென்றார். குடித்ததும் ஒரு சந்தோசம் கிடைத்தது. (நாமளும் ஏதோ புண்ணியம் செஞ்சு இருக்கிறோம்பா...  அண்ணாமலையார் பிரசாதமாச்சே..!)

திடீரென்று ஒரு கும்பல் - நூறு பேருக்கு மேல் இருக்கும். பரதம் ஆடும் குழு ஒன்றும், வேறு ஏதோ கல்லூரியில் இருந்தும் வந்து இருந்தார்கள் போல. எல்லோரும் தரிசனம் முடித்து , ஆலயத்தில் உள்ள கல்யாண மண்டபம் சென்று விட்டார்கள். இப்போது அண்ணாமலையார் சந்நிதியில் எண்ணிப் பார்த்தால், ஒரு பத்து, இருபது பேர் தான் இருந்து இருப்போம். அலுவலக ஊழியர்கள் தான் அதில் அதிகம். அப்போதுதான் மனதிற்குள் திரும்ப ஒரு எண்ணம். மீண்டும் ஒரு முறை ஐயனை பார்க்கலாமே என்று. வரிசையில் ஒரு ஆள் என்றால், ஒரு ஆள் இல்லை. நேரே சந்நிதிக்கு சென்றோம். ஆலயம் நடை சாத்தும் நேரம் அது. அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது. இடையில் கொஞ்ச நேரம் தூறிக் கொண்டு இருந்த மழை, வலுத்து பட்டையைக் கிளப்ப - ஒருவர் கூட வெளியில் நடமாட முடியாத சூழல். நான் சந்நிதியில் அந்த உலகப் பரம் பொருளின் நேரே. சொன்னால் நம்ப மாட்டீர்கள்! சரியாக முப்பத்தைந்து நிமிடம் - நான், என் உடன் வந்த நண்பர், ஆலய அர்ச்சர்கள் இருவர் - அந்த அண்ணாமலையார்..! நாங்கள் மட்டும் தான்! அர்ச்சகர்கள் இருவரும், அவர்கள் பாட்டுக்கு ஒருவர் உள்ளிலும், ஒருவர் வெளியிலும் சுத்தம் செய்து கொண்டு இருக்க, எங்கள் இருவருக்கும் கிடைத்தது, ஒரு உலக மகா VIP தரிசனம். ஏகாந்தம் என்றால், அப்படி ஒரு ஏகாந்தம்..!

எத்தனையோ கோடி கோடி பக்தர்களும், தேவாதி தேவர்களும்  - அவரது ஒரு நொடி தரிசனம் கிடைத்துவிடாதா என்று ஏங்கித் தவிக்கும் நிலையில் , அருணாச்சலேஸ்வரர், இந்த அற்ப்பாதி அற்பனுக்கு இப்படி ஒரு வாய்ப்பைக் கொடுத்தது , என் பிறவிப் பயனே அடைந்தது போல் இருந்தது. சத்தியமாக அந்த நிமிடங்களில் எனக்குக் கிடைத்த பரவசம், வார்த்தைகளில் விவரிக்க முடியாதது. அருமையான அலங்காரம். அவருக்குப் பின்புறமாக, ஒரு மலை மாதிரி லேசாக புடைப்பு சிற்பம் மாதிரி இருக்கிறது. அண்ணாமலையைப் போன்றே இருக்கும் என நினைக்கிறேன். எனக்கு அந்த கயிலாயத்தில் அவர் முன்னே நின்று கொண்டு இருப்பது போலவே இருந்தது.

VIP தரிசனம் கேட்டே இல்லை! போதுமாப்பா.. குழந்தே? ன்னு அண்ணாமலையார் தலை தடவுவது போல, ஒரு கணம் சிலிர்ப்பாக இருந்தது!

எவ்வளவு பேச முடியுமோ, அவ்வளவு பேசி , வேண்டி, மந்திர ஜெபம் செய்து - கண் இமைக்க கூட மனமின்றி , அந்த ஈசனைப் பிரிய மனமில்லாமல் , வெளியே வந்தேன். செஞ்ச பாவம் எல்லாம் மன்னிக்கப்பட்டு, மீண்டும் ஒரு தேவ பிறவி கிடைத்தது போல இருந்தது.

வெளியில் வந்து ரொம்ப நேரத்திற்கு , நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை. முகத்தில் இருந்த புன்முறுவல் குறையவே இல்லை. இப்படியே இதே சந்தோசத்தோட, காரை எடுத்திட்டு வீட்டுக்குப் போயிடலாமா, இன்னொரு நாள் கூட மலை சுத்திக்கிடலாமே என்றெல்லாம் தோண ஆரம்பித்து விட்டது.

கூட வந்த நண்பருக்கு இதுதான் முதல் முறை என்பதால், இறுதியில் கிரிவலம் சென்றே திரும்பலாம் என்று முடிவெடுத்து - பொறுமையாக மலை சுற்ற ஆரம்பித்தோம். நம்ம ஊரு இல்லே..! இந்திர லிங்கம் தாண்டினதும் வழக்கம்போல பவர்கட். மழையின் பின்னணி இசை, தரையெல்லாம் சொத சொத ஈரம். ஆனால், மனசுக்குள் இருந்த உற்சாக ஊற்று , எந்த சிரமத்தையும் பொருட் படுத்த விடவில்லை. பொறுமையாக தட்டுத் தடுமாறி அக்னி லிங்கம் ஆர்ச் திரும்ப, "வாங்க" என்பதுபோல் - கரெண்ட் வந்து விட்டது. கண்குளிர தரிசனம்.
(ராத்திரி கிரிவலம் அங்கே போறப்போ எல்லாம், ஒரு நாய் இருக்குது. படிமேல கம்முன்னு உட்கார்ந்து இருக்கும்...! நீங்க யாராவது நோட் பண்ணி இருக்கிறீங்க? )
எமலிங்கம் தாண்டினதும், இடையில் ஒரு இருபது நிமிடம் இடி மின்னலுடன் மழை பெய்தது. சாலையில் சென்று கொண்டு இருந்த வண்டிகள் எல்லாம் ஓரம் கட்டி நின்றுவிட்டன...!

நாங்களும் ஓரம் இருந்த ஒரு ஹோட்டலுக்குள் ஒதுங்கி நிற்க, அப்போதுதான் அணைந்து இருந்த அடுப்பு, கொஞ்சம் கத கதப்பாக இருந்தது. இதில் என்ன ஆச்சரியம்னு கேட்குறீங்களா..? அந்த கொட்டுற மழைலேயும் ஒருத்தர், மேலே சட்டை கூட போடாமல், வெறும் வேஷ்டியுடன் - மெதுவாக , சீரான வேகத்தில் நடந்து கொண்டு இருந்தார். கால்களில் லேசான தள்ளாட்டம் இருந்த மாதிரிதான் இருந்தது. பார்க்கவே கொஞ்சம் மிரட்சி. ஒருவேளை போதை தெளியாம , பக்கத்து கிராமத்து ஆள் யாரோ நடந்து போறார் போலன்னு தான் நெனைச்சேன்..!

அப்புறமா, அடி அண்ணாமலை தாண்டும்போது எங்களுக்கு முன்னே நடந்து போய்க்கொண்டு இருந்தார். அதே மெதுவான நடை, அங்கே கொட்டும் மழையில் பார்த்தபோது இருந்த அதே சீரான வேகம். இடையில் எங்கேயும் நின்னு கூட இருக்க மாட்டார் போல! அவரைக் கடந்து போகும்போது, "மலை சுத்துறீங்களா"ன்னு, ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டார். "ஆமாங்க"ன்னு மட்டும் சொல்லிட்டு தொடர்ந்தோம்..!

யப்பா..! இப்படியும் மலை சுத்த முடியுமா? நீ மனுஷனாய்யா ன்னு தான் தோணிச்சு..!
யாருக்குத் தெரியும்? 

முதல் தடவை வந்தப்போ, அங்க பிரதட்சணம் பண்ண ஆளையே பார்த்தேன்..! அதனால,  இந்த மாதிரி நிறைய அதிசயமான மனிதர்கள் (?) இங்கே நிறைய பேர் இருக்கிறாங்க! என்ன, இவங்க எல்லாம் போறப்போ, நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைச்சதுன்னு நினைச்சு சந்தோசப்பட்டுக்கிட வேண்டியதுதான்..!

திரும்ப ஒரு இடத்துல வர்றப்போ.. பவர் கட்.  ஆனா இந்த தடவை , இருட்டு எல்லாம் இல்லை. பின்னே..? "நாங்க இருக்கிறோம்ல" ன்னு கூடி இருந்த மேக கூட்டத்தை எல்லாம் விலக்கிட்டு , 'பளிச்'சுன்னு சந்திரன் ஜாம் ஜாம் னு வந்தார். சுற்றி கருந்திரளாய் மஞ்சுப் பொதி...  'பளிச்'சுன்னு நிலா! சான்ஸே  இல்லை.. இப்படி ஒரு லைட்டிங் சென்ஸ்.... அந்த ஆண்டவனால் மட்டுமே சாத்தியம்! மலையை மட்டும் ஆவலா, உத்து உத்துப் பார்த்துக்கிட்டே வந்தோம்..!

அதிகாலை மூன்றரை மணிக்கு, கிரிவலம் முடிந்து  ராஜகோபுரம் முன்னாலே நின்னப்போ, மனசு சுத்தமா துடைச்சு விட்ட மாதிரி இருந்தது....! சாலை முழுவதும் அதையே பிரதிபலித்தது..! 


என்னடா, பைத்தியக்காரன் மாதிரி உளறிக் கொட்டிக்கிட்டு இருக்கிறானே, இதுலே இருந்து என்ன சொல்ல வர்றேன்னு கேட்குறீங்களா? நிஜமாவே அந்த மொமென்ட் லூசு மாதிரி தான் சார் இருந்தேன்..!

கடவுள் இருக்கிறார் சார்..! நம்ம குழந்தை கடையிலே ஏக்கமா எதையாவது பார்த்திச்சுன்னா , அதை வாங்கி கொடுப்போம் இல்லே? அந்த மாதிரி நாம ஏக்கமா வேண்டிக் கேட்டோம்னா, நியாயமான வேண்டுதல்னா, அதை நிறைவேற்றுகிறார்..! அந்த மாதிரி நிறைவேற்றுவதில், அருணாச்சலத்துக்கு நிகர் அவரே!


நாப்பது, அம்பது லட்சம் பேர் , தீபத்துக்கு வர்றாங்களே, அது சாதாரண விஷயமா என்ன?


அந்த கூட்டத்துலே போறதுக்கு , நமக்கு அசௌகர்யமாத் தான் இருக்கும். ஆனா, ஒரே ஒரு தடவையாவது போக முயற்சி செய்யுங்கள்..! எத்தனையோ தேவ புருஷர்களுக்கும், சித்தர்களுக்கும் எவ்வளவோ பிரயத்தனம் பண்ணினாலும் அவர்களுக்கே அந்த வாய்ப்பு கிடைப்பதில்லையாம்  ..! அந்த மாதிரி கோடி கோடி புண்ணியம் பண்ணிய சித்தர் பெருமக்கள் காலடி படும் அந்த நாளில், அவர்களுடன் , அவர்கள் மூச்சுக் காற்று கலந்த அந்த சூழலில்  நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தால், அதைத் தவற விடுவானேன் ...?


எங்கே சார்? இருக்கிற கஷ்டத்துல முழி பிதுங்கி இருக்கிறோம்? இதுலே சாமி கும்பிடவான்னு தோணுதா? கை குடுங்க சார்..! உங்களை கஷ்டம் படுத்தி எடுக்குதுன்னா, ஆண்டவன் உங்களை பார்க்க ஆரம்பிச்சிட்டார்னு அர்த்தம். கை கொடுக்கப் போறார்னு அர்த்தம். யாருக்கு கஷ்டம் இல்லே? செஞ்ச கர்மாவை கழிக்கத்தானே, பிறப்பே எடுத்து இருக்கிறோம்? கழுதை , சீக்கிரம் கழியிதுன்னு நினைச்சு சந்தோசமா ஒரு தடவை வந்து போங்க..! உங்களை தூக்கிவிட ஒரு கரத்துடன் , ஆண்டவன் ஏற்கனவே ஒருவரை அனுப்பி இருப்பதை உணர்வீர்கள்..!  

 ஓம் சிவ சிவ ஓம்! 

இதைப் படிக்கும் அனைவருக்கும் அந்த அண்ணாமலையார் ஆசி, பரிபூரணமாக கிடைக்க மனமார வேண்டுகிறேன்..!
 

வாழ்க அறமுடன்! வளர்க அருளுடன்! 
23 comments:

Nanjil Kannan said...

arumayaana manithar annaa neenga :) arumayaana anubavam :) ella pugalum iraikkae :)

நாதன் said...

அண்ணா நிறைய கட்டுரை முன்ன மாதிரி நீங்க எழுதனும். உங்க எழுத்தோட ஊக்கத்தால சதுரகிரி தரிசனம் பண்ணிட்டேன் ...

Nithi said...

வாழ்க வளமுடன்...

ரிஷி said...

மிக அருமையான கட்டுரை. உள்ளார்ந்து எழுதியிருக்கிறீர்கள். குளிரைப் பற்றி படிக்கும்போது என் உடல் குளிர்வதாயும் ஈசனின் அருகாமையை விளிக்கையில் நானே அருகில் இருந்ததுபோலவும் உணர்ந்தேன். சிவத்தை சிந்தையில் இருத்தி செயலாற்றினால் ஜீவன் பரிபூரணமாய் விளங்கும்!

Mangala said...

ஐயா, படித்தவுடன் மனசு சிலிர்த்துவிட்டது. கண்களில் கண்ணீர் தானாக பெருக்கெடுத்தது. வாழ்க வளமுடன்.!!!

SRIECE said...

i hope that was really wonderful day for you, Vazhga Valamudan..

உ.சங்கர் said...

"உங்களை கஷ்டம் படுத்தி எடுக்குதுன்னா, ஆண்டவன் உங்களை பார்க்க ஆரம்பிச்சிட்டார்னு அர்த்தம்." என்ன ஒரு ஆணித்தரமான கருத்து. நல்ல பதிவு. நம் பைரவ பெருமானின் அலங்காரம் உள்ளத்தை கொள்ளை கொண்டது. வாழ்க வளமுடன்.

uthramoorthy G said...

Sir really your very lucky person you got it good darashanam in annamalayar temple. I am thinking to go this temple but I couldn’t. But I hope very soon I will get chance to go to this temple with your pry

Anonymous said...

DEAR SIR VANAKKAM.I AM ALWAYS WAITING TO READ YOUR ARTICLES EAGERLY AND ALSO I AM TELLING ALL MY FRIENDS RELATIVES ABOUT YOUR ARTICLES. REALLY WE ARE SO THANKFUL TO YOU FOR ALL THE ARTICLES OF YOURS.

WE AWNT MORE SUCH ARTICLES WE EXPECT FROM YOU. NARAYANAN, NEWZEALAND

sakthi said...

கட்டுரை படிக்கும் போது நானே அண்ணாமலையாரை தரிசித்தது போல் ஒரு பரவச நிலையை அடைந்தேன்
வாழ்த்துக்கள்

perumal shivan said...

mikka nanri

Indu said...

Feeling jealous:))))))

raji said...

nalla pathivu

raji said...

mikka nantrikal

P.S.Karthikeyan Sagadevan said...

அருமையான கட்டுரை....
நீங்கள் உண்மைல்லையே பெரிய பாக்யசாலி...

NAHARANI said...

"உங்களை கஷ்டம் படுத்தி எடுக்குதுன்னா, ஆண்டவன் உங்களை பார்க்க ஆரம்பிச்சிட்டார்னு அர்த்தம், aamaam. miga chari..Always the head of hills our annamalai.. beautiful photos.. this month sivarathiri i was in saidapet karaneeswar temple but mind roaring the thiruvannamalai trip by lost month only. Thanks NAHARANI CHENNAI

கோடியில் ஒருவன் said...

ஆசிரியரின் அனுபவத்தை படித்ததும் உடனே அண்ணாமலைக்கு கிளம்பவேண்டும் என்று தோன்றுகிறது. கொடுத்து வைத்த குழந்தை ஐயா நீங்கள்.... பின்னே அந்த இடத்துல அரை மணி நேரம் நிக்க சான்ஸ் கிடைக்குதுன்னா சும்மாவா?

//////////// அந்த மாதிரி கோடி கோடி புண்ணியம் பண்ணிய சித்தர் பெருமக்கள் காலடி படும் அந்த நாளில், அவர்களுடன் , அவர்கள் மூச்சுக் காற்று கலந்த அந்த சூழலில் நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தால், அதைத் தவற விடுவானேன் ...? ////////////

சரி...சரி... அண்ணாமலையார் ஏதோ வெயிட்டா சொல்லி அனுப்பியிருக்கார் போல... எங்களையெல்லாம் திருவண்ணமலைக்கு PACK பண்றதுல இவ்வளவு உறுதியா இருக்கீங்க?

//////////// ஏகாந்தம் என்றால், அப்படி ஒரு ஏகாந்தம்..! ////////////

உங்க வரியை படிச்சவுடனேயே இனிது இனிது ஏகாந்தம் இனிதுன்னு கந்தன் கருணையில கே.பி.சுந்தராம்பாள் பாடினது தான் ஞாபகத்துக்கு வருது.

/////////// நம்ம ஊரு இல்லே..! இந்திர லிங்கம் தாண்டினதும் வழக்கம்போல பவர்கட். ///////////

/////////// திரும்ப ஒரு இடத்துல வர்றப்போ.. பவர் கட். ///////////

இதென்ன பவர் கட் ஸ்பெஷல் கிரிவலமா? ஹூம்... திருவண்ணாமலையிலேயே பவர் கட் அப்படின்னா... இதுல சொல்றதுக்கு ஒண்ணுமில்லே... அந்த அருணாச்சலேஸ்வரர் தான் அவரையும் காப்பாத்திகிட்டு தமிழ்நாட்டையும் காப்பத்தனும்.

/////////// உங்களை கஷ்டம் படுத்தி எடுக்குதுன்னா, ஆண்டவன் உங்களை பார்க்க ஆரம்பிச்சிட்டார்னு அர்த்தம் ///////////

அப்போ என்னைய ஆண்டவன் ரொம்ப நாளா பார்த்துக்கிட்டுருக்கான் போலருக்கே.... (பட் இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு!)

/////////// இதைப் படிக்கும் அனைவருக்கும் அந்த அண்ணாமலையார் ஆசி, பரிபூரணமாக கிடைக்க மனமார வேண்டுகிறேன்..! ///////////

நினைச்சாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. அதை பத்தி படிச்சா கேக்கணுமா என்ன?

- கோடியில் ஒருவன்

Sunish said...

Rishi Sir,

Amazing narration, thanks for sharing your wonderful experience. This has made me to think about a beautiful experience which my brother and myself got during the girivalam, few years before.

Tilak Dev Anand said...

marma engalum panchakshara ragasyamum pothintha malai annamalai

Sivakama Sundari said...

Thanks for sharing. Next time when you happened to go there go to Edaikkattu siddar samadhi near Pay gopuram behind amman sannadhi.

selva said...

உண்மையாகவே நானும் இந்த அனுபவத்தை பெற்று இருக்கிறேன். சில நாட்களுக்கு முன் என் குடும்பத்தினருடன் எங்கள் குல தெய்வம் வாழைபந்தல் பச்சையம்மன் கோயில் சென்றோம். மதியம் நேரம் இருக்கவே திருவண்ணாமலை செல்ல முடிவு செய்து இரவு 8 மணி அளவில் சென்றோம் அப்போது நீங்கள் சொன்னது போல கோயிலில் மிக சிலரே இருந்தனர். அப்போது திருவண்ணாமலையாரை தரிசனம் செய்தோம் சில நிமிடங்கள் மட்டுமே பார்க்க முடிந்தது .கொஞ்ச நேரம் தான் பார்த்தோம் என்று நினைத்துகொண்டே வெளி பிரகாரத்தில் நடந்து கொண்டு இருந்தோம் அபோது கோயில் அர்ச்சகர் கொஞ்சம் இருங்க அபிஷேகம் நடக்க போகுது உள்ளே போங்க என்று குரல் கொடுத்தார். நாங்கள் பேசியது அண்ணாமலையாருக்கு கேட்டுவிட்டது என்று நினைத்து கொண்டே பாலபிஷேகதை பார்த்து மன திருப்தியுடன் அன்னையை தரிசனம் செய்து வீடு திரும்பினோம். திருப்தி வீடு திரும்பும் வரை மனம் சந்தோஷமாக இருந்தது. திருச்சிற்றம்பலம்

Rokini said...

ஐயா,


அண்ணாமலையான் பக்தர்களை எப்போதும் தன் அருகில் அழைத்து கொள்வான்
பக்தியின் மூலம் எந்த டிக்கெட் இல்லாமலும் அவர் அருகில் செல்லலாம்
என் பிறந்த ஊர் திருவண்ணாமலை ,கிரி வலம் வரும் போது உள்ளம் உருகி அழைத்தால் நிச்சயம்
இறை தரிசனம் கிட்டும். கனவா ? நினைவா ? என பிரமிப்பில் ஆழ்நது விடும் அதிசயங்கள் பல நடந்துள்ளது
நிறைய அனுபவித்துள்லேன்

"ஞான தபோதனரை வாவென்று அழைக்கும் மலைஅல்லவா "


ரோகிணி .

இராஜராஜேஸ்வரி said...

நம்ம குழந்தை கடையிலே ஏக்கமா எதையாவது பார்த்திச்சுன்னா , அதை வாங்கி கொடுப்போம் இல்லே? அந்த மாதிரி நாம ஏக்கமா வேண்டிக் கேட்டோம்னா, நியாயமான வேண்டுதல்னா, அதை நிறைவேற்றுகிறார்..! அந்த மாதிரி நிறைவேற்றுவதில், அருணாச்சலத்துக்கு நிகர் அவரே!

உணர்வால் உணரும் அற்புதப்பகிர்வுகள்...

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com