Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

மன இருளை அகற்றி ஆன்மீக ஒளியை பரவச் செய்வோம்!

| Oct 17, 2012
நம் தளத்தின் வாசகர் மற்றும் என் நண்பர் திரு.சுந்தர் அவர்களை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். சில அருமையான கட்டுரைகள் பின்னூட்டங்கள் மூலமாக, நம் வாசர்களுக்கு நன்கு அறிமுகமானவர். தனியார் நிறுவனம் ஒன்றில் முதன்மை கிராபிக் டிசைனராக பணிபுரியும் அவர் ONLYSUPERSTAR.COM என்னும் ரஜினி அவர்களை பற்றிய ஒரு  தளத்தை கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். ஒரு பிளாக் ஸ்பாட்டாக ஆரம்பிக்கப்பட்ட அந்த தளம் இன்று மிகப் பெரிய ஒரு ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. ரஜினி அவர்களை பற்றி மிகைப்படுத்தப்படாத செய்திகளை அளிப்பதோடு மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையில் திரு.ரஜினி அவர்கள் வலியுறுத்தும் பல நல்ல விஷயங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க தன்னாலான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். ரஜினி அவர்களை பற்றிய செய்திகளை தவிர, ஆன்மிகம், நீதிக்கதைகள், பல்துறை வெற்றியாளர்களின் பேட்டி என அதில் கொட்டிக்கிடக்கும் பொக்கிஷங்கள் ஏராளம்.

நம் தளத்தில் நாம் வெளியிட்ட சாதனையாளர்கள் திரு. இளங்கோ, திரு.நந்தகுமார் ஐ.ஆர்.எஸ் ஆகியோரை பற்றிய கட்டுரைகளை படித்து, அதன்பால் ஈர்க்கப்பட்டு, அவர்களை நேரடியாகவே சென்று விரிவான பேட்டி எடுத்து அவர்களிடம் இருந்து பல நன்முத்துக்களை அவர் அள்ளிக்கொண்டு வந்ததும் அதை நமது தளத்தில் நான் பகிர்ந்ததும் கூட உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த தளத்தில் நான் வெளியிடும் பதிவுகளை பற்றி அடிக்கடி என்னிடம் அவர் பேசுவதுண்டு. நானும் அவரது தளத்தில் வெளியாகும் பதிவுகளை பற்றி பேசுவேன். இருவருக்குள்ளும் பல விஷயங்களில் உணர்வு ரீதியிலான ஒற்றுமை , ஆன்மீக தேடல் மற்றும் வாழ்வில் உயர்வது குறித்த லட்சிய தாகம் இருந்தது கண்டு பெரு மகிழ்ச்சி அடைந்தேன். என்னிடம் பேசும்போதெல்லாம் தான் ஒரு பிரபல தளத்தின் ஆசிரியர் என்ற உணர்வே இல்லாமல், நமது LIVINGEXTRA.COM ன் வாசகர் போன்று தான் பேசுவார். நம் தளத்தில் நான் கூறும் பல விஷயங்களை நடை முறை வாழ்க்கையில் பின்பற்ற முயற்சிகள் எடுத்து அதில் ஓரளவு வெற்றியும் கண்டு வருபவர் அவர். (அவரது சமீபத்திய பதிவுகளை பார்த்தாலே உங்களுக்கு புரியும்) அந்த வகையில் என்னை விட சந்தோஷப்படுபவர் வேறு யாராக இருக்கமுடியும்?

இத்தனை ஆண்டுகள் வலைத்தளம் நடத்தி அதன் மூலம் கைவரப் பெற்ற எழுத்தாற்றலை கொண்டு, இந்த சமூகமும், மக்களும், அவர் வாசகர்களும் பயன்பெற ஏதாவது செய்யவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு அதன் விளைவாக RIGHTMANTRA.COM என்ற புதிய தளம் ஒன்றை துவக்கியிருக்கிறார்.

கடந்த விநாயகர் சதுர்த்தி திருநாளில் பிள்ளையார் சுழி போடப்பட்ட அந்த தளத்தில் சுய முன்னேற்றம், ஆன்மிகம், ஆலய தரிசனம், உடல் நலம் உள்ளிட்ட வாழ்க்கைக்கு பயன் தரும் பல்வேறு நல்ல விஷயங்களை, பதிவிட்டு வருகிறார்.

அவருக்கு இருக்கும் எழுத்து, அனுபவம், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் திரையுலக தொடர்புகளை வைத்து அவர் புதிதாக ஒரு வணிக ரீதியிலான சினிமா தளத்தையே வெற்றிகரமாக நடத்தலாம். ஆனால் அவரோ ஆன்மீகத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். சில பிரபல பொழுதுபோக்கு இணையங்கள் ஒரு பெரும் ஊதியத்தை தருவதாக கூறி அவரை தங்கள் தளத்தை ஏற்று நடத்த கூப்பிட்டபோது அவர் மறுத்துவிட்டார். "வர்த்தக நிர்பந்தங்களுக்கு உட்பட்டு என்னால் எதையும் எழுத முடியாது. என் மனசாட்சிக்கு விரோதமாக தகுதியற்ற நட்சத்திரங்களை, நடிகர் நடிகைகளை எல்லாம் புகழ்ந்து எழுதுவது என்னால் முடியவே முடியாத ஒன்று. பேனைப் பெருமாளாக்கும் விஷயங்கள், மற்றும் நடிகர் நடிகைகளை பற்றிய கட்டுக்கதைகளை கிசுகிசுக்களை எழுதுவது என்பதெல்லாம் கனவில் கூட நான் விரும்பாத ஒன்று. 

அணுவளவும் அடுத்தவர் உள்ளத்தை ஊனப்படுத்தும் எழுத்தை நான் எழுதவே மாட்டேன். எத்தனையோ சோதனைகளுக்கு இடையே இறைவன் எனக்கு எழுத்தாற்றலை அளித்தது இந்த அற்ப விஷயங்களை எழுதி சம்பாதிக்கவா? நிச்சயம் இல்லை. ஆன்மீகத்தையும், தன்னம்பிக்கையையும் பரவச் செய்வதே இனி என் பணி. இதில் வெற்றி தோல்வியை பற்றி நான் சிறிதும் கவலைப்படவில்லை" என்று உறுதியுடன் கூறுகிறார். அவரது மனவுறுதிக்கு ஒரு சல்யூட்!

சமீபத்தில் ஒரு நாள் பேசும்போது ONLYSUPERSTAR.COM  தளத்தை விரைவில் நிறுத்தப்போவதாக கூறினார். "நன்கு வளர்ந்து நிற்கும் ஒரு சூழ்நிலையில் எதற்கு நிறுத்துகிறீர்கள்? நல்ல விஷயங்களைத் தானே அங்கும் சொல்லி வருகிறீர்கள். நேரம் கிடைக்கும்போது அங்கும் பதிவுகள் இடலாமே..." என்று கூறி அவரது முடிவுக்கு தற்காலிக அணை போட்டிருக்கிறேன். முடிவு அவர் கையில் தான்.

அவரது RIGHTMANTRA.COM தளத்தை நமது தளம் போல நீங்கள் பாவித்து,  நல்லாதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நமது தளத்தில் பதிவிடப்படாத அன்று நீங்கள் எவரும் ஏமாற்றமடைய வேண்டியதில்லை. அவரது தளம் நிச்சயம் உங்களுக்கு விருந்து படைக்கும். அதே போல, அவரது தளத்தில் அவர் பதிவிடாத அன்று இங்கு நமது தளத்தில் உங்களுக்கு பதிவு இருக்கும். இரண்டு தளத்திலும் இருந்தால் இரட்டை விருந்து என நினைத்து சந்தோஷப்படுங்கள்.

இந்த பதிவை நான் துவக்கத்திலேயே அளிப்பதாக கூறியிருந்தேன். அவர் தான், "தளம் இன்னும் முழுமையாக தயாராகவில்லை. அது ஓரளவு தயாராகி நான் பதிவுகளை தினசரி போடத் துவங்கிய பின்னர் நீங்கள் பதிவை அளிக்கவும். அதுவும் கூட நீங்கள் விரும்பினால் தான்" என்று கூறியிருந்தார். தற்போது அவரது தளம் ஓரளவு தயாராகி பதிவுகளை போடத் துவங்கிவிட்டார். நீங்களும் படியுங்கள். அதில் கூறப்படும் நல்ல விஷயங்களை நான்கு பேரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். பயன்பெறுங்கள்.

இணைக்கப்பட்ட படத்தில் கூறியுள்ளபடி, ஒரு விளக்கு இன்னொரு விளக்கை ஏற்றுவதன் மூலம் எதையும் இழந்துவிடாது. ஆனால், அந்த இடத்தில் ஒளி  இரண்டு மடங்காகிவிடும். அது போல அனைவரும் அவரவர் மனதில் உள்ள இருளை அகற்றி ஆன்மீக ஒளியை நம்மை சுற்றி பரவச் செய்வோம்.


நன்றி!

ஓம் சிவ சிவ ஓம் !

18 comments:

Amuthan Sekar said...

Thank you very much..

Arunsiva said...

வணக்கம் சார்,
படம் போட்டு சிம்பாலிக்கா புரிய வச்சிட்டிங்க! இனி நாங்க இந்த ரெண்டு தீப ஒளியை (ஏற்கனவே எப்ப கரண்ட் இருக்கும்னே தெரியாத தங்க தமிழ்நாட்டில் ) எங்கள் வாழ்வின் வழிகாட்டியாக கொண்டு, வாழ்வை ஒளிமயமக்குவோம்.

நன்றி.
உங்கள் ஒலி(Right Mantra)பரவட்டும்.

Kousalya said...

thank you and introducing one more web site convey my regards to Mr.Sundar.
Kousalya

VIJAY - HARISH said...

Thanks

Anonymous said...

It's really Hapy of life, which is Part of "Aanmigam"

R.Ganeshanandhan

Balaji said...

arumaiyana thagaval. thank you and keep spreadingur message

Venkat

Simple Sundar said...

மிக்க நன்றி ரிஷி அவர்களே!

உங்களின் பெருந்தன்மை அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்று.

என்னை பற்றிய உங்கள் வார்த்தைகள் எனக்கு மேலும் உற்சாகத்தை தருகிறது. என்னை அவை மேலும் பொறுப்புள்ளவனாக ஆக்கும்.

ரிஷி அவர்கள் அளவுக்கு என்னால் எழுத முடியாது. நண்பர்கள் அனைவரும் குற்றங்குறைகளை பொறுத்துக்கொண்டு எம் தளத்தை ஆதரிக்கவேண்டும். ஆன்மீக ஒளி திக்கெட்டும் பரவி, அறியாமை இருள் விலக அனைவரும் துணை நிற்கவேண்டும்.

நண்பர்கள் மற்றும் இந்த தள வாசகர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

நல்லதே நினைப்போம். நல்லதே பேசுவோம். நல்லதே செய்வோம்.
நல்லதே..... நடக்கும்!


- சிம்பிள் சுந்தர்,
RightMantra.com

rekha said...

thank you

Narayanasamy said...

நன்பர் சுந்தர் அவர்களின் முயற்சி மேலும் மேலும் சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவன் சிவபெருமான் அவருக்கு துணை இருப்பார் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அவர் பணி நெடுங்காலம் தொடர வாழ்த்துக்கள்.

நாராயணசாமி
www.shivatemples.com

P C Balasubramanian said...

Wishing Sunder a great and exciting new journey, actions decide our destiny, all the very best

Anonymous said...

Interesting content on the other hand I would like to explain to you that I think there is trouble with your RSS feeds when they appear to not be working for me. Might be just me but I was thinking I would suggest it.

யவனிகை said...

All the very best sundarji
om kriya babaji nama om
om namachivaya om

NAHARANI said...

It is really pleasure to enter thro another way into GODs world.. Hats off to Rishi sir for such a wonderful facebook to Sunder sir's website. Another quality that we would like to takeup from Rishi sir.. That a light can only light another one..wishing u all the best NAHARANI CHENNAI

THEIVAM said...

neenga suggest panna sariathan sir irukkum

கோடியில் ஒருவன் said...

ஆசிரியருக்கு மிக்க நன்றி!

நன்றி ஒருவர்க்கு செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் என வேண்டா
நின்று தளரா வளர் தெங்கு தானுண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால் - மூதுரை

ஒருவருக்கு செய்யும் உதவிக்கு என்ன கைம்மாறு கிடைக்கும் என்று கருதவேண்டாம்.
வேரில் ஊற்றப்படும் உவர் நீரை உறிஞ்சி, தன் தலைக்கு மேலே நன்னீரை தரும் தென்னை போல.

என்ற அவ்வையின் வாக்குப்படி ரிஷி அவர்கள் ஒரு நல்ல முயற்சிக்கு தோள் கொடுத்துள்ளார்.

- கோடியில் ஒருவன்

மாரீஸ் கண்ணன் said...

நண்பர் சுந்தரின் இந்த முயற்சி வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனால் பிரத்திகிறேன்.
.
மாரீஸ் கண்ணன்

கோடியில் ஒருவன் said...

தெய்வம் சார் சொன்னதை நான் வழிமொழிகிறேன்!

ரிஷி அவர்கள் சொன்னால் சரியாகத் தான் இருக்கும்!!

மீண்டும் நன்றி ரிஷி அவர்களே!!!

- கோடியில் ஒருவன்

இராஜராஜேஸ்வரி said...

ஒரு விளக்கு இன்னொரு விளக்கை ஏற்றுவதன் மூலம் எதையும் இழந்துவிடாது. ஆனால், அந்த இடத்தில் ஒளி இரண்டு மடங்காகிவிடும்.

ஒளி வீச ஒளி பெற்ற விளக்கு .. வாழ்த்துகள்..

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com