Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

நம் வீட்டுக்கு வந்து இருக்கும் விருந்தாளிகள்!

| Oct 11, 2012

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcTLI6NqKuAj97WT7Z4PX8o59o9vyW_LBlf5ukJAAgt5MI5GNCH8

அன்பு நண்பர்களுக்கு வணக்கம். முன்ன மாதிரி அடிக்கடி பதிவு போட முடியலைங்கிற வருத்தம், உங்களை விட எனக்கு அதிகமாகவே இருக்குது. விஜயதசமிக்குப் பிறகு, தினம் ஒரு குட்டிப் பதிவாவது வரும். அதனால அதுவரை கொஞ்சம் பொறுமை காக்கவும்.

இப்போது மகாளய பட்சம் நடந்து கொண்டு இருக்கிறது. ரொம்ப ரொம்ப விசேஷமான ஒரு நேரம் இது. சென்ற வருடம் இதைப் பற்றி நான் எழுதிய ஒரு பதிவை , வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டி, அந்த பதிவின் 'லிங்க்'கை கீழே கொடுத்துள்ளேன்.

இதற்க்கு முன்பே, நீங்கள் படித்து இருந்தாலும் - திரும்பவும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.


வரும் திங்கள் கிழமை (15.10.2012 ) மகாளய அமாவாசை வருகிறது. இந்த தினத்தில் , நீங்கள் விரதமிருந்து இறைவனை வேண்டினால், அதன் பிறகு நடக்கும் அதிசயத்தை நீங்களே கண்கூடாக உணரமுடியும்...!


உங்கள் முன்னோர்களிடமிருந்து ஒரு அன்பு கடிதம்! விருட்சமாக வளர்ந்து நில்... ! An Extreme Special Article !


உங்கள் நியாயமான கோரிக்கைகள் விரைவில் நிறைவேற அனைவருக்கும் என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்...!
 =============================================
இன்று தினமலரில் ஒரு கட்டுரை படித்தேன். சில சமயங்களில் இறைவனும் அழுகிறாராம்.  அந்த பத்தியை கீழே கொடுத்துள்ளேன்... படித்துப் பாருங்கள்.
 

திருக்கோட்டியூர் நம்பி என்ற வைஷ்ணவ அடியார் எழுதிய வார்த்தா மாலை என்ற கிரந்தத்தில் வரும் ஒரு பாடல் பெரும் உண்மைகளைக் கூறும். கடவுள் மனிதனைப் படைத்து ஏதோ ஒரு மகத்தான காரியத்தைப் புரிய உலகிற்கு அனுப்புகிறார். ஆனால் அவன் இங்கு வந்ததும் எந்நேரமும் எதையாவது பிடித்துக் கொண்டுச் சுற்றித் திரிகிறான். எதற்காக? 

அனைத்தும் வயிற்றுக்காகத்தான். உணவு உடலுக்குப் போகிறது. அவ்வுடல் ஆண்டு அனுபவித்த பின் இறுதியில் மண்ணிற்குப் போகிறது. இறைவன் அளித்த உயிரோ கர்மத்தோடு போகிறது. நல்லவை செய்திருந்தால் நல்லவிதமாகப் போகும். தீயதைச் செய்திருந்தால் தீயதாகப் போகும். இப்படி, தான் படைத்த மனிதன் மண்ணோடும் கர்மத்தோடும் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வதைப் பார்த்து, இறைவன் உயர்ந்த காரியம் செய்ய உலகிற்கு அனுப்பி வைத்தேன்; இவன் இப்படி ஆகிவிட்டானே! என்று கண்ணீர் வடிப்பாராம்.

இதனை திருக்கோட்டியூர் நம்பி கூறுகிறார்:
விருத்தி சோறோடே போகும்
சோறு உடம்போடே போகும்
உடம்பு மண்ணோடே போகும்
உயிர் கர்மத்தோடே போகும்
ஈஸ்வரன் கண்ண நீரோட கை வாங்கும்.


உலகியலில் உழன்று லௌகீக நினைவுகளிலேயே ஊறிக் கிடப்பவர்களைப் பார்த்து தெய்வம் சிரிக்கிறது - பரிகாசமாக!
=============================================
இந்த நேரத்திற்கு எவ்வளவு பொருத்தமான விஷயம் பார்த்தீர்களா?

எத்தனையோ ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு நம் சந்ததியின் வித்து தொடங்கி - அது நீண்டு கொண்டு இருக்கிறது. நம் பரம்பரையே நல்லபடி இருக்க வேண்டும் என்பது - மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஆசை. ஆனால், நிஜத்தில் நம் நிலைமை பரிதாபமாக இருந்தால், அந்த முன்னோர்களும் கண்ணீர் வடித்துக் கொண்டு இருப்பார்களே..! நாம் அவர்களை முறைப்படி கூப்பிட்டால், அவர்களின் உதவி வேண்டும் என வேண்டினால், ஏங்கினால் -  ஓடி வந்து உதவ தயாராக இருப்பார்கள். அப்படிப்பட்ட விருந்தாளிகள் நம் வீடு தேடி வந்து இருக்கும் இந்த நேரத்தை , தவறாமல் பயன் படுத்துவோம்...!


மகாளய பட்சம் பற்றிய இன்னொரு பழைய கட்டுரையை படிக்க கீழே க்ளிக் செய்யவும்...!

கர்ம வினைகளை அழித்து - ஆரோக்கியம், மன நிம்மதி , செல்வ வளம் பெற - மகாளய பட்ச வழிபாட்டு முறைகள்


காலையில் நீங்கள் வீட்டை விட்டு வரும்போதே, ஒரு காக்கா உங்களை பார்த்து சத்தம் போட்டு கூப்பிடுதா பாருங்க..! சும்மா தற்செயலா கூப்பிடலை பாஸ்..! உங்களை பார்த்து தான் சத்தம் போடுது..! நம்மளையும் கொஞ்சம் ஞாபகம் வைச்சுக்கோ குழந்தைங்கிற மாதிரி அதோட சத்தம் கேட்கும், கவனிச்சுப் பாருங்க!  

வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை கவனியுங்கள்...! ஒரு வருடத்திற்குள் உங்கள் வாழ்க்கை மிக நல்ல நிலைக்கு முன்னேற்றம் அடையப் போவது உறுதி..!

உங்கள் நண்பர்களுக்கு , இந்த கட்டுரையை படிக்க சொல்லி எடுத்துக் கூறுங்கள்..! நல்ல விஷயம் நாலு பேருக்கு சென்றடைய உதவுவதும் ஒரு புண்ணிய காரியமே!


மீண்டும் விரைவில் அடுத்த கட்டுரையில் சந்திக்கிறேன்..!

வாழ்க அறமுடன்! வளர்க அருளுடன்!

10 comments:

கோடியில் ஒருவன் said...

சரியான நேரத்தில் சரியான பதிவு. சரியான நினைவூட்டல்.

மகாளயத்தின் அருமைகளை உணரச் செய்தமைக்கு ஆசிரியருக்கு நன்றியோ நன்றி!

பித்ருக்களுக்கு நாம் முறைப் படி செய்ய வேண்டிய தர்ப்பணம் உள்ளிட்டவைகளை செய்யாது இருந்தால் அவர்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும். பித்ருக்களின் சாபம் இருந்தால் - அதாவது அவர்கள் நம் மீது அதிருப்தியில் இருந்தால் நமது இல்லங்களில் சுப காரிய தடை உள்ளிட்ட பல தடைகள் தோன்றும். இவை, என்ன பரிகாரம் செய்தாலும் நீங்காது.

ஆசிரியர் கூறுவது போல அத்தகையோர் இந்த மகாளய அமாவாசை தினத்தை நன்கு பயன்படுத்திக்க்கொள்ளவேண்டும்.

தர்ப்பணம் உள்ளிட்டவைகளை செய்வது சிறப்பு. அப்படி இயலாதவர்கள் பசுமாட்டிற்கு அகத்திக் கீரை வாங்கி தரவேண்டும். உங்கள் ஊரில் உள்ள மார்க்கெட்டில் அகத்திக் கீரை நிச்சயம் கிடைக்கும்.

அடுத்து, இந்தப் பதிவில் ராமரை பற்றி படித்தது மனதிற்கு மிகப் பெரிய நிறைவை தந்தது.

"இறைவன் உருவாக்கிய வேதங்களின் படி வாழ முடியாது... அது மிகவும் கஷ்டம்... நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று" என்றெல்லாம் த்ரேதா யுகத்தில் ரிஷிகள் மத்தியிலும் பூலோகவாசிகள் மத்தியிலும் ஒரு பேச்சு கிளம்பியது.

அது தவறு... தான் உருவாக்கிய வேதங்களின் படி மனிதன் வாழ முடியும் என்று அனைவருக்கும் எடுத்துக்காட்டவேண்டியே பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன், மனிதனாக ராமாவதாரம் எடுத்தார். தனது தெய்வீக சக்தியை பயன்படுத்தாமல் சராசரி மனிதனாக வேத நெறிகளை அற நெறிகளை பின்பற்றி வாழ்ந்துகாட்டினான் அச்சுதன்.

வாரம் குறைந்தபட்சம் இரு பதிவாவது போடவேண்டுமாய் ஆசிரியரை கேட்டுக்கொள்கிறேன். நல்லவிஷயத்தை கொடுக்காம தாமதப்படுத்துவது கூட ஒரு வகையில், பாவம் தான். (இப்படியெல்லாம் சொன்னத் தான் உங்களை வழிக்கு கொண்டு வரமுடியும்! அதான்!!)

பி.கு. : என்ன இன்னும் சாவித்ரியை காணோம்?

- கோடியில் ஒருவன்

Anonymous said...

nall visayam. correct timela potinga
very good information to all readers how you get the miracle informations?
thank you vvery much
selvi

Sunish said...

Hi Rishi Sir,
Very useful pooja, let everyone make use of it.
Just one clarification on oorai, you have mentioned that daily 6-7 am is that day's oorai, meaning Monday - Chandran oorai, Wednesday - Budhan oorai.
Is it not the 1st one hour from the time of Sun Rise? Rather than always 6-7 am.
Eg., In Chithirai month Sun Rise is at 5:45 am where as in Margazhi it is at 6:20 am, so it is always 1st one hour from Sunrise and not 6-7 am always throught out the year.
Please correct me I am wrong.

Anonymous said...

Hi Rishi sir,

thanks for usefull information.

Rishi said...

Thank you Sunish Sriram Sir! You have asked a right question. I think, I have told earlier in an article. The Fist Hora , of the day starts based on the Sunraise of that particular day / month. Our Panchangam says clearly the sunrise time of that specific month. It is not the constant time of 6 to 7 o' clock. OK?

Duraisamy said...

காகம் எதுவும் இதுவரை வரவில்லை. ஆனால் வெள்ளை நிறப் புறா ஒன்று 4-5 நாட்களாக தினமும் வந்து அரிசி, தோசை, பயறு ஆகியவற்றைக் கேட்டு (!) வாங்கிச் சாப்பிடுகிறது. சாப்பாட்டு நேரத்தில் 'இன்னிக்கு புறா வந்து சாப்பிட்டுச்சா ' என்பது என் குழந்தைகள் கேட்கும் ஒரு முக்கியமான கேள்வி ஆகும்.

Rishi said...

Duraisamy sir! Really You are a lucky person! Keep going! Thanks for sharing this experience.

pollaa vinayen said...

ungal pathivugal migavum payanullathaga irukirathu..thodarnthu konde irukavum..nandri

KALA KANNAN said...

Yes Rishi sir,

Even me too experienced like Mr. Duraiswamy. all the 15 days of Mhalayapaksham, by divine grace i could feed doggy and birds. when i am late (due to household work), the kakka just shouts and reminds me to feed. as mentioned in ur post, i always feed drakshai. and also dry pulses (nava daniyam) as per the day and rice. also luck by chance could feed the new born calf and cow. Infact the calf waits for me and when it sees me, it stands up properly so that i can feed banana comfortably.

This yr i feel that my "munnorgal" have really become happy. I feel a sense of satisfaction.

shashikala

NAHARANI said...

For all the 15 days a crow and its young regularly sit our house near and we offered wat is our that day food.. this is right time reminder sir thank you rishi sir NAHARANI CHENNAI

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com