Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

ஆண்டவன் போடும் கணக்கு அது புரியுமா நமக்கு!

| Sep 17, 2012

அன்பு நண்பர்களுக்கு வணக்கம். நம் வாழ்க்கையில் நடக்கும் எந்த ஒரு காரியத்திற்கும், ஒரு காரணம் இருக்கும். கடவுளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் அது. சமீபத்தில் ஜப்பானில் சுனாமியின் கோர தாண்டவத்திற்க்குப் பிறகு, அங்கு நடந்த ஒரு விஷயம் , ஜப்பான் இந்த உலகத்திற்கே கொடுத்த ஒரு பாடம். டிசிப்ளின். நிவாரண உதவியாக உணவுப் பொட்டலம் வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் எல்லோரும் வரிசையில் நின்று வாங்குகின்றனர். கூச்சல், குழப்பம், தள்ளு முள்ளு எதுவும் இல்லை. ஒரு சிலருக்கு கிடைக்காமல் உணவுப் பொருட்கள் காலியான போது, ஒரு சிலர் - தனக்கு ஒன்று போதும். மிகுதியாக உள்ளதை இவருக்கு கொடுங்கள், என்று திருப்பிக் கொடுத்தனர். மேலும் இன்னொரு அதிசயம். நம் ஊரில் ஒவ்வொரு முறையும் நடக்குமே, நெஞ்சில் அறைந்து கொண்டு , கண்ணீர் பிளிற, ஒப்பாரி வைப்பார்களே - "கடவுளே உனக்கு கண் இல்லையா"? என்று பார்ப்பவர் நெஞ்சம் பதற - அந்த மாதிரி ஒரே ஒருவர் கூட புலம்பவில்லை. மவுனமாக, அந்த வலியை ஜீரணித்து, அதன் பிறகு அதில் இருந்து மீண்டு வந்து , சரித்திரம் படைக்கிறார்கள்.


WHATEVER HAPPENS LIFE MUST MOVE ON

சென்ற வாரம் ஒருநாள், நண்பர் சுந்தர் அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, அவர் ஒரு விஷயத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அவர் குடும்பத்தினர் பழனிக்கு யாத்திரை சென்று திரும்பும்போது ட்ரெயினில் , அவர்களது லக்கேஜ் பேக் ஒன்று திருட்டு போயிருக்கிறது. அதேநாளில் இங்கே சென்னையில் இவரது பாக்கெட்டில் இருந்த ஒரு பொருளும் தவறி தொலைந்து போயிருக்கிறது. ஒரே நாளில், அடுத்தடுத்த இழப்புக்கள், கொஞ்சம் அவரை ஆடிப் போக வைத்து இருக்கின்றன. இருந்தாலும், நடந்த நிகழ்வுக்கு நிச்சயம் எதோ ஒரு காரணம் இருக்கும், என்று தன்னைத் தானே சமாதானப் படுத்திக்கொண்டு இருக்கிறார்.தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது மாதிரி, ஒரு பெரிய இழப்புக்குப் பதிலாக இதோடு முடிந்தது - கடவுள் கருணை மிக்கவன் என்று நினைத்தாராம். என்னே ஒரு மனப் பக்குவம்!

இதே கருத்தை வலியுறுத்தும், ஒரு அருமையான கதையை , அவர் தனது தளத்தில் ஏற்கனவே பகிர்ந்துள்ளார். நமது வாசகர்களும் தெரிந்து கொள்ளும்விதமாக நமது தளத்திலும், இங்கே பகிர்ந்துள்ளேன். படித்துப் பயன் பெறுங்கள். 

=================================================
ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவர் இருந்தார். கோவிலை பெருக்கி சுத்தம் செய்வது தான் அவரது பணி. அதை குறைவின்றி செவ்வனே செய்து வந்தார். கோவில், தன் வீடு. இரண்டும் தான் அவரது உலகம். இதை தவிர வேறொன்றும் தெரியாது.

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை தரிசனம் செய்த வண்ணமிருந்தனர். ‘இறைவன் இப்படி எல்லா நேரமும் நின்றுகொண்டே இருக்கிறானே… அவனுக்கு சோர்வாக இருக்காதா?’ என்று எண்ணிய அவர் ஒரு நாள், இறைவனிடம் “எல்லா நேரமும் இப்படி நின்று கொண்டேயிருக்கிறாயே… உனக்கு பதிலாக நான் வேண்டுமானால் ஒரு நாள் நிற்கிறேன். நீ சற்று ஓய்வெடுத்துக் கொள்கிறாயா?” என்று கள்ளம் கபடமில்லாமல் கேட்க, அதற்க்கு பதிலளித்த இறைவன், “எனக்கு அதில் ஒன்றும் பிரச்னையில்லை. எனக்கு பதிலாக நீ நிற்கலாம். ஆனால் ஒரு முக்கிய நிபந்தனை. நீ என்னைப் போலவே அசையாமல் நிற்கவேண்டும். வருபவர்களை பார்த்து புன்முறுவலுடன் ஆசி வழங்கினால் போதும். யார் என்ன சொன்னாலம் கேட்டாலும் நீ பதில் சொல்லக் கூடாது. நீ ஒரு சாமி விக்ரகம் என்பதை மறந்துவிடக்கூடாது. என் மீது நம்பிக்கை வைத்து அசையாது நின்றாலே போதுமானது” என்று கூற, அதற்கு அந்த பணியாள் ஒப்புக்கொண்டார்.

அடுத்த நாள், இறைவனைப் போலவே அலங்காரம் செய்துகொண்டு, கோவில் கர்ப்ப க்ரஹத்தில்   இவர் நிற்க, இறைவனோ இவரைப் போல தோற்றத்தை ஏற்று கோவிலைப் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து வந்தான். முதலில்,  ஒரு மிகப் பெரிய செல்வந்தன் வந்தான். தன் வியாபாரம் சிறப்பாக இருக்கவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டு, ஒரு மிகப் பெரிய தொகையை உண்டியலில் காணிக்கையாக போட்டான். செல்லும்போது, தவறுதலாக தனது பணப்பையை அங்கு தவற விட்டுவிடுகிறான். இதை கர்ப்ப க்ரஹத்தில் இறைவன் வேடத்தில் நின்றுகொண்டிருக்கும் நம் ஹீரோ பார்க்கிறார். ஆனால், இறைவனின் நிபந்தனைப்படி அவரால் ஒன்றும் பேசமுடியவில்லை. அப்படியே அசையாது நிற்கிறார்.

சற்று நேரம் கழித்து ஒரு பரம ஏழை அங்கு வந்தான். அவனிடம் உண்டியலில் போட ஒரே ஒரு ரூபாய் மட்டுமே இருந்தது. “என்னால் இது மட்டும் தான் உனக்கு தர முடிந்தது. என்னை மன்னித்துவிடு இறைவா. என்றும் போல, என்னை ரட்சிக்கவேண்டும். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் அடிப்படை தேவைகள் கூட கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. எல்லாவற்றையும் உன்னிடமே விட்டுவிடுகிறேன். நீயாக பார்த்து ஏதாவது எனக்கு ஒரு வழி சொல்” என்று மனமுருக கண்களை மூடி நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்துகொண்டான்.

சில வினாடிகள் கழித்து கண்ணை திறந்தவனுக்கு எதிரே, அந்த செல்வந்தன் தவறவிட்ட பணப்பை கண்ணில் பட்டது. உள்ளே பணத்தை தவிர தங்கக் காசுகளும் சில வைரங்களும் கூட இருந்தன. இறைவன் தனக்கே தன் பிரார்த்தனைக்கு செவிமெடுத்து அதை அளித்திருக்கிறான் என்றெண்ணி, அப்பாவித்தனமாக அதை எடுத்துக்கொள்கிறான்.

இறைவன் வேடத்தில் நின்றுகொண்டிருந்த, அந்த சேவகரால் இப்போதும் எதுவும் சொல்லமுடியவில்லை. அதே புன்சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தார்.
சிறிது நேரம் கழித்து, ஒரு கப்பல் வியாபாரி வந்தான். ஒரு நீண்ட தூர பயணமாக கப்பலில் அன்று அவன் செல்லவிருப்பதால், இறைவனை தரிசித்து அவர் ஆசி பெற வேண்டி வந்தான். இறைவனிடம் பிரார்த்தனை செய்தான். அந்த நேரம் பார்த்து, பணப் பையை தொலைத்த செல்வந்தன், காவலர்களுடன் திரும்ப கோவிலுக்கு வந்தான்.

அங்கு, கப்பல் வியாபாரி பிரார்த்தனை செய்வதை பார்த்து, “இவர் தான் என் பணப்பையை எடுத்திருக்க வேண்டும். இவரை பிடித்து விசாரியுங்கள்” என்று காவலர்களிடம் கூற, காவலர்களும் அந்த கப்பல் வியாபாரியை பிடித்து செல்கிறார்கள். “இறைவா என் பணத்தை அபகரித்தவரை அடையாளம் காட்டியமைக்கு நன்றி!” என்று அந்த செல்வந்தன் இறைவனைப் பார்த்து நன்றி கூறிவிட்டு செல்ல, நம் ஹீரோ உடனே இறைவனை நினைத்துக்கொள்கிறார். “இது நியாயமா? அப்பாவி ஒருவன் தண்டிக்கப்படலாமா? இனியும் என்னால் சும்மாயிருக்க முடியாது…” என்று கூறி, “கப்பல் வியாபாரி திருடவில்லை. தவறு அவர் மீது இல்லை!” என்று இறைவன் வேடத்தில் நின்றிருந்த நம் பணியாள் நடந்த உண்மைகளை அனைவரிடமும் சொல்கிறார். உடனே, செல்வந்தரும், கப்பல் வியாபாரி இருவரும் நெகிழ்ந்து போய், உண்மையை கூறியமைக்கு இறைவனிடம் நன்றி சொல்லிவிட்டு செல்கின்றனர்.

இரவு வருகிறது. கோவில் நடை சாத்தப்படுகிறது. இறைவன் வருகிறார். மூலஸ்தானத்தில்  நின்றுகொண்டிருந்த நம் பணியாளிடம் இன்றைய பொழுது எப்படியிருந்தது என்று கேட்கிறார். “மிகவும் கடினமாக இருந்தது. உன் வேலை எத்தனை கஷ்டம் என்பதை புரிந்துகொண்டேன். ஆனால் ஒரு நல்ல காரியம் செய்தேன்….” என்று காலை கோவிலில் நடந்ததை கூறினான்.
இறைவனோ இதே கேட்டவுடன் மிகவும் அதிருப்தியடைந்தார்.  என்னடா இது, நம்மை பாராட்டுவான் என்று நினைத்தால் இப்படி கோபித்து கொள்கிறானே என்று பணியாள் துணுக்குற்றான்.

“நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி நீ ஏன் நடந்துகொள்ளவில்லை….? என்ன நடந்தாலும் பேசக்கூடாது, அசையக்கூடாது என்ற என் நிபந்தனைகளை நீ ஏன் மீறினாய்….? உனக்கு என் மீது நம்பிக்கை இல்லை. இங்கு வருபவர்களது மனநிலையை அறியாதவனா நான்? ”

இறைவன் தொடர்ந்து பேசலானான்…. “செல்வந்தன் அளித்த காணிக்கை, தவறான வழியில் சம்பாதித்தது. அது அவனிடத்தில் மொத்தமாக உள்ள செல்வத்தில் ஒரு சிறு துளி தான். ஒரு துளியை எனக்கு காணிக்கையாக அளித்துவிட்டு, நான் பதிலுக்கு அவனுக்கு எண்ணற்றவைகளை  தரவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். ஆனால் அந்த ஏழை கொடுத்ததோ அவனிடம் எஞ்சியிருந்த இருந்த ஒரே ஒரு ரூபாய் தான். இருப்பினும் என் மீது முழு நம்பிக்கை வைத்து என்னை வணங்க வந்தான். அன்போடு அதை கொடுத்தான்.

இந்த சம்பவத்தில், கப்பல் வியாபாரியின் தவறு எதுவும் இல்லை. இருந்தாலும், இன்றைக்கு அவன் திட்டமிட்டபடி கப்பல் பயணம் செய்தால், விபத்தை சந்திக்க நேரிடும். புயலில் தாக்குண்டு அவனும் அவன் கப்பலும் காணாமல் போயிருப்பார்கள். அதிலிருந்து அவனை காக்கவே அவனை தற்காலிகமாக திருட்டு பட்டம் சுமக்க செய்து சிறைக்கு அனுப்ப நினைத்தேன். அந்த ஏழைக்கு அந்த பணமுடிப்பு போய் சேரவேண்டியது சரி தான். அவன் அதை நான் கொடுத்ததாக எண்ணி போற்றுவான்.

இதன் மூலம் அந்த செல்வந்தனின் கர்மா ஓரளவாவது குறைக்கப்படும். அவன் பாவப் பலன்கள் துளியாவது குறையும். இப்படி ஒரே நேரத்தில் அனைவரையும் நான் ரட்சிக்க நினைத்தேன். ஆனால், நீயோ என் எண்ணங்கள் எல்லாம் உனக்கு தெரியுமென்று நினைத்து, உன் எண்ணங்களை செயல்படுத்தி அனைத்தையும் பாழ்படுத்திவிட்டாய்.” என்றான் இறைவன் கோபத்துடன்.சேவகன், இறைவனின் கால்களில் விழுந்து தன் தவறுக்கு மன்னிக்க வேண்டினான்.

“இப்போது புரிந்துகொள். நான் செய்யும் அனைத்திற்க்கும் காரணம் இருக்கும். அது ஒவ்வொன்றையும் மனிதர்களால் புரிந்துகொள்ளமுடியாது. அவர்களின் நலம் வேண்டியே நான் ஒவ்வொருப் பொழுதையும் கழிக்கிறேன். அவரவரது கர்மாவின் படி பலன்களை அளிக்கிறேன். நான் கொடுப்பதிலும் கருணை இருக்கிறது. கொடுக்க மறுப்பதிலும் கருணை இருக்கிறது.” என்றான் இறைவன் புன்னகைத்தபடி.
————————————————-
நம் வாழ்வில் இப்படித் தான்… நம்மை சுற்றி நடக்கும் பல சம்பவங்களுக்கு காரணங்களை நம்மால் புரிந்துகொள்ளமுடியாது. இறைவன் ஒவ்வொன்றிலும் ஒரு காரணத்தை ஒளித்துவைத்திருப்பான். அதை கண்டுபிடிப்பதில் தான் அனைவரும் வேறு படுகின்றனர்.
எதையும் எதிர்கொள்ளும் மனோபாவத்தையும், புரிந்துகொள்ளும் பக்குவத்தையும் இறைவனிடம் எப்போதும் வேண்டுவோம். இப்போதைய தேவை அது தான்.

அதே போல நமக்கு ஏற்படும் ஒவ்வொரு சோதனையின் போதும், மனம் தளராது இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து, ‘எல்லாம் நமது நன்மைக்கே’ என்ற பக்குவத்தை நாம் வளர்த்துக்கொண்டால், எப்பேர்பட்ட சோதனைகளும் சாதனைகளாகிவிடும். எந்த துரோகமும் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது.

Source : Onlysuperstar.com

16 comments:

suresh said...


“இப்போது புரிந்துகொள். நான் செய்யும் அனைத்திற்க்கும் காரணம் இருக்கும். அது ஒவ்வொன்றையும் மனிதர்களால் புரிந்துகொள்ளமுடியாது. அவர்களின் நலம் வேண்டியே நான் ஒவ்வொருப் பொழுதையும் கழிக்கிறேன். அவரவரது கர்மாவின் படி பலன்களை அளிக்கிறேன். நான் கொடுப்பதிலும் கருணை இருக்கிறது. கொடுக்க மறுப்பதிலும் கருணை இருக்கிறது.” என்றான் இறைவன் புன்னகைத்தபடி.

உண்மை

ஓம்போகர் said...

இப்பிறவியில் நமக்கு ஏற்படுகிற,இன்பம், துன்பம்,வெற்றி, தோல்வி,ஆரோக்கியம், நோய்,செல்வம்,வறுமை,போன்ற அனைத்தும் நம்முடைய,முன் ஜென்ம கர்மவினைகளால்,நிர்ணயம் செய்யபட்டவையே.

இதற்கும் இறைவனுக்கும் சம்மந்தம் கிடையாது.கர்மாக்களால் ஏற்படுகிற துன்பங்களை,நாம் இறைவனின் அருளோடு ஒப்பிட்டு,பார்ப்பதால் சலிப்பு ஏற்பட்டு,தெய்வ நிந்தனைக்கும்,நாத்திக வாதத்திற்கும் ஆரம்ப காரணமாகிறது.

நாம் நம்முடைய கர்மாக்களை ஒழுங்குபடுத்தினால்,இறைவன் இனி நமக்கு வர ( தர ) போகிற பிறவிகளை,ஒழுங்குபடுத்துவான்.

ombhogar.blogspot.com

chandirasekaran anjur said...

கப்பல் வியாபாரியின் தவறு எதுவும் இல்லை. இருந்தாலும், இன்றைக்கு அவன் திட்டமிட்டபடி கப்பல் பயணம் செய்தால், விபத்தை சந்திக்க நேரிடும். புயலில் தாக்குண்டு அவனும் அவன் கப்பலும் காணாமல் போயிருப்பார்கள். அதிலிருந்து அவனை காக்கவே அவனை தற்காலிகமாக திருட்டு பட்டம் சுமக்க செய்து சிறைக்கு அனுப்ப நினைத்தேன்........
ஆனால் அவனுடன் பயனம் செய்யவிருந்த மற்ற பயனிகல்100 க்கு மேற்பட்டோர்.ஒறே சமயத்தில் என்ன பாவம் செய்தனர் ஐயா....

Read more: http://www.livingextra.com/#ixzz26kIRZP2Q

dinesh kumar said...

respected sir,
I had.got the correct news at correct tim ....aya en valkayi niraya annupavathai paarthu kondu irukinraen ....kumbam rasi pooratathi natchithram ,midhuna laknam eppadi valkai irrukum endru sattru sonnal podhum en endral ovuru jodhidar ovoruuraiyaga palan soli kondu irukuranga date of birth. 28/09/1985 pudhan disai arambika poguth u v era solranga
en valkai eppudi irrukum please Ionian splints aha....

Bhavani said...

நன்றி அய்யா, பிறவா நிலைக்கு
என்ன வழி?

devadass snr said...

நடந்தால் நல்லது நடக்காவிட்டால் அதைவிட நல்லது.
எனது மனதில் இறைவனைப் பற்றிய சிந்தனையே இதுதான்.
இதை எப்படி எழுத்து வடிவில் கொண்டு வர இயலாமல் இருந்தேன்.
அந்த செயலை தாங்கள் செய்து என்னை நெகிழ வைத்துவிட்டீர்கள்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

Karthi Keyan said...

Very Super

திருவாரூர் சரவணன் said...

அகத்தியர் லிகிதஜெபம் எழுத வழிகாட்டியதற்கு என் அன்பு நன்றிகள்.

இது பற்றி நீங்கள் ஏற்கனவே எழுதியிருந்த பதிவை படித்த பிறகு பல சிக்கல்களுக்கு நடுவில் அலட்சியமாக விட்டுவிட்டேன். ஆனால் கடந்த வாரத்தில் நீங்கள் மீண்டும் பதிவில் நினைவூட்டியதை பார்த்து கொஞ்சமாக எழுத தொடங்கினேன். இதுவரை 600தான் எழுதியிருப்பேன். எழுத ஆரம்பித்த மறு நாளில் இருந்தே மிகச்சின்ன சின்ன மாற்றங்கள் ஏற்பட்டன. அவற்றால் பெரிய லாபமோ, அதிக அளவில் நன்மையோ இல்லை என்றால் கூட தூரத்தில் தெரியும் சிகரத்தின் உச்சியை அடையும் நம்பிக்கையை கொடுக்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

5 மாதங்களுக்கு முன்பு வலைப்பூவுக்கு புதிய டொமைன் நேம் வாங்கினேன். ஆனால் ஹோஸ்டிங் செய்ய தனியாக பணம் செலுத்த வேண்டுமே என்று அலட்சியமாக எந்த முயற்சியும் எடுக்காமல் விட்டுவிட்டேன். இப்போது நேற்று வேறு ஒரு தளத்திற்கு எதேச்சையாக போனபோது BigRockல் வாங்கிய டொமைன் நேம்-ஐ blogger தளத்திற்கும் பயன்படுத்தலாம் என்ற தகவல் தெரிந்து இன்று Activate செய்து விட்டேன்.

நம்பிக்கையுடன் எழுதினால் அகத்தியர் நம்மை கைவிட மாட்டார் என்று புரிகிறது.

மீண்டும் ஒரு முறை நன்றி.

THEIVAM said...

eppavum pol ippavum kalakittinga boss

Kutti said...

miga arumai

Anonymous said...

Hello Mr.Rishii,

Your articles are excellent and goes deep into our way of life. Great work as always. Please let me know the date of gubera girivalam in this year!

Thanks

Prabhu

nithya krishna said...

hello sir,

Thanks a lot for giving info abt Agathiyar ligidha jabam.i also felt so much confident n happy on
writing ligitha jabam. thank u very much.Agathiyar in arulal eludham bagyam kidaitharku kodi nandrigal.
GoD blesses U.

Sunrise said...

Excellent story If every accepts that each and every actions were done by god for some good reasons then there wont be any revenge taking in our life. Peoples must remain clam by putting the burden on gods sake and live our life happily

Thanks
Senthil

கோடியில் ஒருவன் said...

மிக அற்புதமான கதையை பகிர்ந்தமைக்கு நன்றி ஆசிரியர் அவர்களே!

கடவுளைப் போல ஒரு நடுநிலைமையான நீதிபதி வேறு எவரும் இல்லை. பல சமயம் அவனது தீர்ப்பு நமக்கு விளங்குவதில்லை. காரணமும் புரிவதில்லை. ஏனெனில் நமக்கெதிராக அங்கு சாட்சி சொல்பவை நமது வினைகளே அன்றி வேறு எதுவும் இல்லை.

- கோடியில் ஒருவன்

NAHARANI said...

Its gods wish that we run this life.. we are just a bit before him..thats all..we are just watchers but not directors..Really we act on his screen.. NAHARANI CHENNAI

இராஜராஜேஸ்வரி said...

இறைவன் ஒவ்வொன்றிலும் ஒரு காரணத்தை ஒளித்துவைத்திருப்பான். அதை கண்டுபிடிப்பதில் தான் அனைவரும் வேறு படுகின்றனர்.
எதையும் எதிர்கொள்ளும் மனோபாவத்தையும், புரிந்துகொள்ளும் பக்குவத்தையும் இறைவனிடம் எப்போதும் வேண்டுவோம். இப்போதைய தேவை அது தான்.

எல்லாம் நன்மைக்கே ..!

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com