Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

பயணங்கள் முடிவதில்லை..!

| Sep 11, 2012
சக்கரம் - மனிதனின் கண்டுபிடிப்பில் மிக மகத்தான ஒன்று. சக்கரம் கண்டுபிடித்த பிறகு பயணங்கள் எளிதாகின. நாகரீகம் வளர்ந்தது. இன்று விஞ்ஞானம் வளர்ந்து இருக்கும் நிலையில், துரித பயணம் நமக்கு பலவிதங்களில் பயனுள்ளதாக இருக்கிறது. முன்பு எல்லாம் கிராமங்களில் மாட்டு வண்டியில் தான் எல்லா பயணமுமே. அது ஆஸ்பத்திரியாக இருந்தாலும் சரி, கோவிலாக இருந்தாலும் சரி. ஆனால் இப்போது நூறு கிலோ மீட்டர் தூரம் கூட ஒரு மணி நேரத்தில் செல்ல முடிகிறது. வாகனம் அப்படி. சாலை வசதிகள் அப்படி... ! விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. ஆனால் அதன் இன்னொரு பக்கம்.....  விபத்துக்கள் - அநியாயமாக தினமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன...!

ஐயா, நாம நல்லாத் தான் காரோ, டூ வீலரோ ஓட்டுறோம்..! எதிர்ல வர்றவரும் அதே நிதானத்தில் வந்தா பரவா இல்லை. இல்லைனா? சிவ சிவான்னு நாம பாட்டுக்கு 'பைக்'ல போறோம்.. காத்து இருந்த மாதிரி நாய் உள்ளே புகுந்தா..? தலை எழுத்து , விழுந்து எந்திக்கனும்னு..! என்ன சார் பண்றதுன்னு சொல்றீங்களா? ஆனா, அதுக்கு நாம் கொடுக்கும் விலை, விலை மதிப்பே இல்லாததாச்சே ...! சும்மா விட முடியாது இல்லையா?

நண்பர் ஒருத்தர் சமீபத்தில் கேட்டு இருந்தார்... சார், அடிக்கடி இரவு பயணம் பண்ண வேண்டி இருக்குது. உத்தியோகம் அப்படி... ஆனா, ஒரு நாள் கூட நிம்மதியா போக முடியலை. ஒவ்வொரு தரம் ட்ரைவர் ப்ரேக் அடிக்கும்போதும் உயிர் போய் திரும்ப வருது... ஒவ்வொரு தடவையும் ஹார்ட் அட்டாக் வந்திடும்போல....! அதுக்கு ஏத்த மாதிரி , லாரியோ - காரோ அப்பளம் மாதிரி நொறுங்கிப் போய் ரோட்டில கிடக்குறதைப் பார்க்கிறப்போ... எனக்கு என் புள்ளை, குட்டி ஞாபகம் தான் உடனே வருது. .. "கடவுளே , எனக்கும் என் குடும்பத்துக்கும், எங்க பரம்பரைக்கும், ஏன் உலகத்துல இருக்கிற யாருக்கும்  எந்த காலத்திலயும், இப்படி ஒரு விபத்து நடந்துடவே கூடாதுன்னு வேண்டிக்கிடுவேன்.... இதுக்கு ஏதாவது ஆன்மீக ரீதியாக ஒரு நல்ல பூஜை , பரிகாரம் இருந்தா சொல்லுங்க சார்"னு கேட்டார்..!

அனேகமா நாம் எல்லோரும் இந்த வேண்டுதலை கடவுள் கிட்டே கண்டிப்பா ஒரு தடவையாவது வைத்து இருப்போம்...! "கடவுளே நல்லபடியா, பயணம் முடிச்சு வரணும்...!"

சரி, இதுக்கு ஒரு அருமையான எளிய வழிமுறை இருக்கு.
நம்பிக்கையோடு செய்து பாருங்கள். நிச்சயம், விபத்து, துர் மரணம் எந்த காலத்திலும் நிகழாது. சில வருடங்களுக்கு முன்பு சதுரகிரி சென்று இருந்தபோது, அங்கு ஒரு துறவியிடம் நான் இதை கேட்டபோது, அவர் எனக்கு சொல்லிய விஷயம் இது....! இதை நினைவு கூறும் இந்த நாளிலும், அந்த துறவியின் முகமும், சந்தன மகாலிங்கர் சந்நிதியில் மூலிகை மணம் கமழ, சாரல் மழையின் சட சட சப்தமும், கனன்று கொண்டிருந்த நெருப்பில் தூவப்பட்ட சாம்பிராணியின் நறுமணமும் - இன்றும் எனக்கு ஒரு கணம் சிலிர்க்கும் விஷயம்.

அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதை, அந்த சிவன் எனக்கு அளித்த பாக்கியமாகவே கருதுகிறேன். ! இந்த பதிவினைப் படிக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் ..!

ஒரு வெற்றிலையில் கொஞ்சம் பசுவின் சாணத்தில் செய்யப்பட்ட திருநீறும், ஒரு எலுமிச்சம்பழமும் வைத்து அருகில் ஒரு டம்ளரில் தண்ணீரை வைத்துக் கொள்ளவும். பின்பு கீழ்க்கண்ட ஸ்லோகத்தை 108 முறை ஜெபிக்கவேண்டும்.

தியானித்து அதன் பிறகு, திருநீறில் கொஞ்சம் வாயில் போட்டு, நெற்றியிலும் பூசிக்கொள்ளவும். பின்பு அருகில் இருந்த தண்ணீரை கொஞ்சம் அருந்திக்கொள்ள வேண்டும். அந்த எலுமிச்சம்பழத்தை உங்களுடன் பயணத்தின்போது வைத்துக் கொள்ளலாம். நீங்கள் சொந்த வாகனம் வைத்து இருந்தால், அந்த எலுமிச்சம் பழத்தை வாகனத்திலேயே வைத்துக் கொள்ளலாம்.

ஜெபிக்க வேண்டிய ஸ்லோகம் :

த்ர்யம்பகம் யஜா மஹே ஸுகந்திம்  புஷ்டி வர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனாத் - ம்ருத்யோர் முக்ஷி ய மாம்ருதாத்: 


இந்த மந்திரத்தை மனதுக்குள் 108 முறை ஜெபிக்கவேண்டும். 

இந்த மந்திரத்திற்குப் பெயர் மஹா ம்ருத்யுஞ்ஜெய  மந்திரம்.
வெற்றிலை வெறும் வெற்று இலை அல்ல. வெற்றியை நமக்கு அளிக்கும் இலை. சீதாப் பிராட்டியே அனுமனுக்கு அசோகவனத்தில் வெற்றிலை மாலையணிவித்து, வெற்றியுடன் காரியம் முடிய ஆசி பண்ணினாராம்.  வெற்றிலை அப்பேர்ப்பட்ட சக்தி கொண்ட மூலிகை. எலுமிச்சை - ராஜ கனி என்று , மந்திரம் தெரிந்த அனைவருக்கும் தெரியும் கனி. பசுவின் சாணத்தில் செய்யப்பட்ட விபூதி, எலுமிச்சை, வெற்றிலை மூன்றும் ஒரே இடத்தில் இணையும்போது - மந்திரங்களை ஈர்க்கும் மகத்துவம் அவற்றுக்கு கிடைக்கிறது. ஜெபித்த கையோடு - நீர் அருந்த, அந்த அதிர்வு அப்படியே ஜெபிப்பவர்களின் உடம்பில் தங்கி - மிகப் பெரும் கவசமாகி விடுகிறது.

வாகன பயணம் என்று இல்லை. எப்போதெல்லாம், நோய் , நொடி வேதனை என்று குடும்பத்தில் சூழல் நிலவுகிறதோ - அந்த நேரங்களில் மேற்கூறிய ஜெபத்தை பண்ணி விபூதி பூசலாம்.

சிவ பெருமானுக்கு மிகவும் உகந்த ஸ்லோகம் இது.  இதை தொடர்ந்து ஜெபிக்க, ஜெபிக்க உங்கள் உடம்பில் உள்ள எந்த நோயும் பஞ்சாய்ப் பறந்து விடுவது நிச்சயம். ஜெபிக்கும் காலங்களில் அசைவம் தவிர்ப்பது அவசியம். ஏனென்றால், இந்த கால கட்டத்தில், சிவனின் அருட்பார்வை உங்கள் மேல் விழத் தொடங்குகிறது. நம்மால் முடிந்த அளவுக்கு நாடி சுத்தியுடன் இருப்பது மிக முக்கியம். நோய் நொடியில்லாத, நீண்ட ஆயுள் நம் ஒவ்வொருவருக்கும் கிடைத்து , அந்த பரம சிவனின் மேலான அருளுக்குப் பாத்திரமாவோம்..!

நீங்கள் முதலில் இதை நடைமுறைப் படுத்திப் , பின் தகுதி உள்ளவர்களுக்கும் பரிந்துரைக்கலாம்! 

மீண்டும் சந்திப்போம்! 

ஓம் சிவ சிவ ஓம் !
வாழ்க அறமுடன் ! வளர்க அருளுடன் !10 comments:

Ramesh Diwakaran S said...

nalla pathivu

கோடியில் ஒருவன் said...

ஆசிரியர் இதே வேகத்தில் பதிவுகளை அளிக்கவேண்டும் என்று முப்பத்து முக்கோடி தேவர்களையும் வேண்டி வணங்கிக்கேட்டுக் கொள்கிறேன்.

பயனுள்ள... தேவையான ஒரு பதிவு. பதிவளித்த ஆசியருக்கும்... இது பற்றி கேட்டுக்கொண்ட அவரது நண்பருக்கும் நன்றி..நன்றி...!!

வீட்டை விட்டு வெளியே கிளம்பினால் திரும்பவும் பத்திரமாக வருவோம் என்பதற்கு இங்கு எந்த உத்திரவாதமும் இல்லை. வாகனங்கள் பெருத்த அளவிற்கு சாலை வசதிகள் கட்டமைப்பு வசதிகள் கூடவில்லை. பல சாலைகள் இன்னும் இருவழிப் பாதையாக மாற்றப்படவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இனிமையான பாதுக்காப்பான பயணத்திற்கு இந்த சுலோகம் மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

//லாரியோ - காரோ அப்பளம் மாதிரி நொறுங்கிப் போய் ரோட்டில கிடக்குறதைப் பார்க்கிறப்போ//

அது போன்ற தருணங்களில் வாழ்க்கையின் நிலையாமை நன்கு புரிகிறது. நமக்கோ நம்மை சார்ந்தவர்களுக்கோ இப்படி ஆகக்கூடாது என்று இறைவா என்று சுயநலம் பொருந்திய பிரார்த்தனை அரங்கேறுகிறது.

//சில வருடங்களுக்கு முன்பு சதுரகிரி சென்று இருந்தபோது, அங்கு ஒரு துறவியிடம் நான் இதை கேட்டபோது//

துறவிகள், முனிவர்கள், ரிஷிகள், சாதுக்கள் இவங்கல்லாம் நிறையே பேர் ப்ரெண்ட்ஸ்ஸா இருப்பாங்க போல. பெரிய ஆளுதான் சார் நீங்க.

//பசுவின் சாணத்தில் செய்யப்பட்ட விபூதி, எலுமிச்சை, வெற்றிலை மூன்றும் ஒரே இடத்தில் இணையும்போது - மந்திரங்களை ஈர்க்கும் மகத்துவம் அவற்றுக்கு கிடைக்கிறது.//

அருமையான தகவல். நன்றி ஆசிரியரே.

விபூதி என்ற சொல்லுக்கு செல்வம் என்ற அர்த்தம் ஒன்று இருக்கிறது. நண்பர்களுக்கு தெரியுமா?

வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் ஒன்று உள்ளது.

ஆசிரியர் கூறியுள்ள சுலோகத்தை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி அனைவரும் இனிமையான பாதுக்காப்பான பயணத்தை மேற்க்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

- கோடியில் ஒருவன்

Madan said...

Maha Mrityunjay Mantra 108 times - Maha Mrityunjay Mantra .

http://www.youtube.com/watch?v=pEz9nKIQjiI

SARA said...

வணக்கம். எனக்கு திரியம்பகம் மந்திரத்தில் அதிக நம்பிக்கை உண்டு.ஒருமுறை என் மகனுக்கு (அப்பொழுது 2 வயது)காய்ச்சை கண்டு epilesy எனும் ஒருவகை வலிப்பி நோய் கண்டது. என் நண்பரின் மூலம் 41 நாட்கள் நான் இம்மந்திரத்தைக் கூறினேன் (1 நாள் 21 முறை மட்டுமே). என்ன ஆச்சிரியம்.42 வது நால் வலிப்பின் வேகம் குறைந்து. 2 1/2 வயதில் முற்றாக அழிந்து. இன்று சிவனின் அருளால் சுகமாக இருக்கிறான்.ஆனால், நான் இன்றும் திரியம்பகம் மந்திரத்தை விடுவதாக இல்லை. என்னால் இயன்றவரை கூறிக் கொண்டுதான் இருக்கிறேன்.மந்திரம் எளிது பொருளோ பெரிது.நன்றி

Rishi said...

சாரா அவர்களுக்கு : உங்களது இந்த நேரடி அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு, மிக்க நன்றி. மனிதனின் இயல்பு - நாமே எதையும் அனுபவிக்கும்வரை,இறை வழிபாடு, மந்திர ஜெபங்கள் - எல்லாமே கேலியாகத் தான் இருக்கும். இந்த மந்திரத்தின் சக்தியை - நான் பலமுறை உணர்ந்தவன். அனுபவித்தவன். குறிப்பாக, சதுரகிரி, அண்ணாமலை கிரிவலம் செல்லும் நேரங்களில் இந்த மந்திர ஜெபத்தை மேற்கொண்டு வந்தால், நம் உடம்பே ஒரு பவர் ஹவுஸ் மாதிரி மாறிவிடுகிறது. அந்த நேரங்களில் நம் கையால் பூசப்படும் விபூதிக்கு உள்ள மகிமையே தனி..! என்ன, அந்த மாதிரி நேரங்களில் , எல்லாம் நம்ம கையினால தானோ என்று கொஞ்சம் கர்வம் தலைக்கேறும்... அதை மட்டும் கொஞ்சம் அடக்கி விட்டால் போதும்.... ! எது எப்படி என்றாலும், எல்லாம் அவன் சித்தம்! அவன் ஆடும் கூத்து. நாம அவன் இயக்கத்தில் இயக்கப்படும் பொம்மைகள். தாங்கள் மனமுவந்து உங்கள் சொந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு , மீண்டும் ஒரு முறை நன்றி...! பார்க்கலாம், எத்தனை பேர் இந்த கட்டுரையைப் படித்து , பயன் பெறுகிறார்கள் என்று..! எத்தனை பேர் இந்த பின்னூட்டம் படிக்கும் பேறு பெறுகிறார்கள் என்று..! வாசகர்கள் இது போன்ற - சுய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டால், நம் மற்ற வாசகர்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும்.
வாழ்க அறமுடன்! வளர்க அருளுடன்!

Easy (EZ) Editorial Calendar said...

மிகவும் நல்ல பதிவு....

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Saran said...

இறை அருளால் நலமும் வளமும்
உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கட்டும்...

Bhavani said...

sir, please tell about chathuragiri experience because i eagerly wants to go there but i don't got the chance, if u tell means it was more helpful to me

Sivaraman K said...

Thank you sir. Please continue your efforts. It will save many people.

யவனிகை said...

என்ன சொல்றது, இதுக்காகத்தாண்ணா இத்தன பேர் உங்களோட பதிவுக்காக தவம் இருக்காங்க, எத்தனையோ ஆன்மீக வலைப்பதிவுகள் இருந்தும், ஒரு தாத்பரியம்னா அதோட உள்ளர்த்தம் எல்லோரும் புரியுற மாதிரி, எல்லாரும் ரசிக்கிறமாதிரி, எங்களுக்கு என்ன தேவையோ அதை குடுத்து............. உண்மைலேயே பரிகாரம் செய்றதவிட உங்க வார்த்தைகள்'லயே பாதி பிரச்சனையே தீர்ந்துட்ட மாதிரி நம்பிக்கை வருதுண்ணா...........
அப்புறம் நீங்களும் குடுப்பிங்க குடுப்பிங்கன்னு பாக்குறேன், அண்ணா நானும் வாராகி மாலை தேடிக்கிட்டுதான் இருக்கேன், இருந்தா குடுங்கன்னா, உங்களுக்கு கோடி புண்ணியமா போகும், அப்புறம் படம் சூப்பர், எனக்கு எப்பவும் ரொம்ப ரொம்ப பிடிச்ச ரவிவர்மாவோட படம், நேரம் போறதே தெரியாம பாத்துகிட்டே இருக்கலாம், ரொம்ப நன்றி படத்துக்கு,
ஓம் க்ரியா பாபாஜி நம ஓம் ஓம் நமச்சிவாய

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com