Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

ரகசியமாய் ஒரு ரகசியம்

| Sep 10, 2012
அன்பு உள்ளம் கொண்ட வாசக நண்பர்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கம். டோனோக்ராப் என்றொரு கருவி இருக்கிறது. ஒலி வடிவத்தை வரி வடிவாக கொண்டு வரும். ஒரு குழாய் போன்ற கருவியில் நீங்கள் ஒரு வார்த்தை அல்லது எழுத்தை உச்சரித்தால், அதன் அதிர்வுக்கு ஏற்ப , மணல் போன்ற துகள்கள் அந்த அதிர்வை உள் வாங்கி அந்த எழுத்தை வரி வடிவமாக்கித் தரும். உலகின் தொன்மையான மொழிகளில் உள்ள எழுத்துக்களில் பல எழுத்துக்கள் அப்படியே வருகின்றதாம். நமது தமிழ், சமஸ்கிருதம் உட்பட.நினைத்துப் பார்க்கவே வியப்பாக இருக்கிறது. அந்த கால மனிதர்களின் திறமையை நினைத்து , நாம் பெருமிதம் கொள்ளலாம்.

இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், நமது ஓம் உச்சரிக்கும்போது , அது கிட்டத்தட்ட ஸ்ரீ சக்கரத்தை வரிவடிவமாக தருகிறது என்கிறார்கள். இது உண்மையோ , பொய்யோ தெரியாது. ஆனால், நிச்சயமாக நமது மந்திரங்களுக்கு மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தும் சக்தி இருப்பதை , நாம் மறுக்க முடியாது.

மனதுக்கு திடம் கொடுப்பவை - மன திறம் - மந்திரம் என்பது. சில மந்திரங்களை , நாம் குறிப்பிட்ட அதிர்வில் ஜெபிக்க, அந்த சக்தி நம் செயல்களை முறைப்படுத்தி, நம்மை ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறது.

நம் எண்ணியது ஈடேற வேண்டுமெனில், தினமும் ஒரு அரை மணி நேரம், நம்மை - நம் மனதை உற்று நோக்க வேண்டும். மனம் முதலில் அலை பாயும், நாள் ஆக ஆக அது நம் வசப்படும். நம் சொல் பேச்சு கேட்கும். நாம் என்பது , நம் ஆத்மா. ஆத்மா இருப்பதையே நாம் உணராமல் இருந்தால், நம் வாழ்க்கையும் ஏனோ, தானோ வென்றுதான் இருக்கும்.

மிக நேர்த்தியாக முத்துக்கள், ஒரு கயிற்றில் கோர்க்கப்பட்டு இருக்கும் ஒரு முத்து மாலை ஒன்றை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். அதில் கோர்க்கப்பட்டுள்ள கயிறு நம் கண்ணுக்கு தெரிவதில்லை. ஆனால் கயிறு நிச்சயம் இருக்கிறது இல்லையா? அந்த கயிறு போன்றதுதான் நம் ஆத்மா. முத்துக்கள், நம் எண்ணங்கள் போன்றவை. ஒரு எண்ணத்திற்கும், இன்னொரு எண்ணத்திற்கும் உள்ள இடைவெளியில் நம் ஆத்மாவை நம்மால் உணர முடியும். அப்படி என்றால், என்ன அர்த்தம். ஒரு எண்ணத்திற்கும், இன்னொரு எண்ணத்திற்கும் இடைவெளி தேவை. அல்லது எண்ணங்களே இல்லாத நிலையை அதிகமாக்க வேண்டும். அந்த நிலைதான் - நம்மை பரவசப் படுத்தும் நிலை.

ஒவ்வொருவருக்கும் அவரவர் மூலாதாரத்தில் ஒரு மிகப் பெரும் சக்தி சுருண்டு கிடக்கிறது. முறையான மூச்சுப் பயிற்சியினாலும், மந்திர அதிர்வாலும், இந்த சக்தி தூண்டப்பட்டு மேல் நோக்கி எழும்பும். இந்த நிலையை அடைந்தவருக்கு அவர் எடுக்கும் முயற்சியில் தோல்வியே கிடையாது எனலாம். 

மனம் என்பது ஒளிக்கற்றை என்று எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஒளிக் கற்றைக்கு ஒளியை சப்ளை செய்யும் டார்ச் லைட் போன்றது அந்த மூல ஆதாரமே. ஆத்ம ஒளி என்று எடுத்துக்கொள்ளலாம். இந்த அண்ட சராசரம் முழுவதும் வியாபித்து இருப்பதும், ஆலயங்களில் குவிக்கப்பட்டு இருப்பதும் இந்த ஒளி வெள்ளமே..! இந்த ஒலி / ஒளிக்கற்றையை நாம் ஈர்க்கவேண்டும் எனில், நம் உடம்பு ஒரு ஆன்ட்டெனாவாக மாற வேண்டும். அப்படி மாற்றத் தான் நமக்கு தியானமும், மந்திர ஜெபமும்...

நாம் இந்த பிறவியில் செய்யும் நன்மை,  தீமை எல்லாமே நம் மனதில் பதிவாகிறது இல்லையா? இதை யாரும் மறுக்க முடியாது. இறந்த பிறகும், இந்த நினைவடுக்குகள் அப்படியேதான் நம் ஆன்மாவில் இருக்கின்றன. நாம் அடுத்த பிறவி எடுக்கும்போது, நமது நல்ல கெட்ட பலன்களுக்கு ஏற்ப, நம் எண்ணங்களை, செயல்களை மனது தீர்மானித்து, நம்மை செயல்பட வைக்கிறது. நவ கிரகங்கள் நம் ஜாதக கட்டங்களில் உட்கார்வதும் அதற்க்கேற்ப்பத்தான். நம் தலைஎழுத்து அல்லது விதி எனப்படுவது , இவ்வாறாக எழுதப்படுகிறது.

முறையான தியானம் மூலம், நம் மனதை விழிப்படையச் செய்வதன் மூலம், நமது இதற்க்கு முந்தைய பிறவியின் நிலையைக் கூட நம்மால் உணர முடியும். நாம் எவ்வளவோ புண்ணியங்கள் செய்து இருக்க கூடும் அல்லவா? அதற்குரிய பலன்களை நாம் அனுபவிக்க வேண்டும் அல்லவா? எதோ, வந்தோம் வாழ்ந்தோம் என்று இருக்கவா நாம் பிறந்தோம்...? I want to be the best என்று தேடுகிறோம் அல்லவா? நம்மைத் தேடும் அந்த மகத்தான முயற்சி ஆரம்பிப்பது - அந்த தியானப் பயிற்சியில் தான்.

தினமும், ஒரு குறிப்பிட்ட நேரத்தை தேர்ந்தெடுத்து - நம்மை முதலில் கவனிப்போம். மனது என்ன எண்ணுகிறது என்று அதன் பின்னாலேயே சென்று , அந்த எண்ணங்களை கவனிப்போம்... அந்த எண்ணங்கள் எங்கு இருந்து பிறக்கிறது என்று அதன் பிறப்பிடத்தை கூர்ந்து நோக்குவோம்... அங்கு நம்மைத் திருத்த ஆரம்பிப்போம்..

இந்த தியானம் தான், நீங்கள் உங்களுக்கு இந்த பிறவியில் சேர்க்க விருக்கும், உங்களுக்காக சேர்க்க விருக்கும் மிகப் பெரிய பொக்கிஷம்....!

அதிகாலை எழுந்து, தியானம் முடித்து - ஒரு அரை மணிநேரம், தனியாக நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள்...! விழிப்படைந்த மனம் உங்களுடன் பேச ஆரம்பிக்கும். அதன் பிறகு, உங்கள் வாழ்க்கையை நீங்கள் புரட்டிப் போட முடியும். நீங்கள் நினைத்த எந்த செயலையும், வெற்றிகரமாக முடிக்க முடியும்....

நம்மை முதலில் அறிவோம்..! உலகெங்கும் வியாபித்து இருக்கும் அந்த இறையை, நம் உள்ளே கண்டு கொள்ள முடியும்...

இதன்பிறகு, நம் செயல்களில் கிடைக்கவிருக்கும் நேர்த்திக்கு , இந்த உலகமே நம் அடி பணியும்..!
========================================
என் நண்பர் ஒருவர் சென்ற மாதம் மெடிக்கல் செக் செய்து வந்தார். அவருக்கு வயது நாற்பது தான் இருக்கும். உடம்பில் சுகர் அதிகமாகிவிட்டது. இனி வாழ்க்கை முழுவதும் மருந்து, மாத்திரை, ஊசி, உணவுக் கட்டுப்பாடு எல்லாம் கடை பிடித்தே ஆக வேண்டுமாம். சுகர் வரவே கூடாது என்றால், தினமும் 45 நிமிடம் வாக்கிங் போனால் போதும். வாழ்க்கை முழுவதும் சுகர் பிரச்னை நம் பக்கமே வராது என்கிறார்கள் டாக்டர்கள்...  நாம் தான், இதை தீர்மானிக்க வேண்டும். தினமும் உடற் பயிற்சி செய்ய வேண்டுமா...? இல்லை மாதம் பத்தாயிரம் மருந்துக்கு அழவேண்டுமா..? 

ஏழுமணி வரை தூங்கிவிட்டு , காலை டிபன் கூட சாப்பிடாமல் , அவசர அவசரமாக வேலைக்கு செல்லும் பழக்கம் இருப்பவர்கள் அனைவரும், உடனடியாக மாறத் துவங்குங்கள்... சுவர் இருந்தால்தான் படம் ஓட்ட முடியும்..!
==========================================


சில தினங்களுக்கு முன்பு ஒரு வயதான பெரியவர் , நம் வாசகர் மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். மிகுந்த சிரத்தையுடன் அகத்திய லிகித ஜெபம் எழுதி வருகிறார். எழுத ஆரம்பித்த இரண்டே நாளில் ஒரு அதிசயம் நடந்ததாம். வரவே வராது என்று நினைத்த ஒரு பழைய கடன் வசூல் ஆனது. இது அந்த அகத்தியரின் திருவிளையாடல் தான் என்று மிக்க மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருந்தார். படித்த எனக்கே சந்தோசமாக இருந்தது. நமது வாசகர்கள் ஒவ்வொருவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாமே..! பிரச்னைகளுக்கா பஞ்சம் நமக்கு?  
===========================================================
எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய ஒரு அருமையான கட்டுரையை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. நம் வாசகர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம். சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இதைப் படிக்க நேர்ந்தால், இனி வாழ் நாளில் மறந்தும் தொட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.... அந்த கட்டுரையைப் படிக்க கீழே உள்ள 'லின்க்'கை க்ளிக்  செய்யுங்கள்...

நான் விட்ட பிறகும் அது விடவில்லையே” – பாலகுமாரன்

===========================================================

பிரணவ மந்திரத்தின் மகிமை பற்றி , தினமலர் நாளிதழில் வெளியான ஒரு அருமையான கட்டுரையை , நம் வாசகர்களுக்காக கீழே பகிர்ந்துள்ளேன்.... படித்துப் பாருங்கள்!
ஓம் என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன. ஆதிபகவானாகிய இறைவனே! ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், என்பது இதன் பொருள். ஒவ்வொரு தடவையும் ஓம் என்று சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகா என்றெல்லாம் அவரவர் இஷ்டதெய்வத்தை அழைக்கிறோம். ஓம் முருகா, ஓம் விநாயகா, ஓம் விஷ்ணு, ஓம் சிவாயநம என்று சொல்லும் போது, அந்தந்த தெய்வங்களிடம் என்னை உன்னோடு சேர்த்துக்கொள் என்று பொருள் தெரிந்தோ, தெரியாமலோ கெஞ்சுகிறோம். காலம் வரும்போது, இந்த மந்திரம் சொன்னதற்குரிய பலன் உறுதியாகக் கிடைக்கும். பிறப்பற்ற நிலையும் பரமானந்தமும் ஏற்படும்.

ஓம் என்னும் மந்திரத்திற்குள் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும்,, காக்கும் கடவுளான விஷ்ணுவும்,சம்ஹார மூர்த்தியாகிய ருத்திரனும் அடக்கம்.ஓம் என்னும் மந்திரம் ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக்கொள்ள முடியும்.எடுத்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்.எதிர்ப்பு சக்திகள் நீங்கும்.மன சாந்தி ஏற்படும்.உலகத்தோடு ஒட்டி வாழலாம்,வயது முதிர்ந்தோர் இந்த ஏகாட்சரத்தால் ஏகாந்த நிலையை அடையலாம். வாய்விட்டு ஜபிக்காமல் மனதிற்குள் “ஒம்”, “ஓம்”, “ஓம்” என ஜபிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓ. . . ம் என நீட்டியும் மனதால் ஜபிக்கலாம்.

கிழக்குப் பார்க்க அமர்ந்து கண்களை மூடி ஜெபிப்பது நன்று.மாடி வீட்டில் இருந்து ஜபித்தால் பலன் கூடும்.மலை மேல் இருந்து ஜெபித்தால் பல மடங்கு சக்தி கிடைக்கும்.எந்த மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாலும்,குறைந்தது ஒரு லட்சம் உரு ஏற்றியபின் தான் பலன் கிடைக்க ஆரம்பிக்கும்.உங்கள் உடலின் மின்சக்தி மற்றும் காந்த சக்தி ஏற்படும். வியாதியஸ்தர் முன் ஜெபித்தால் அவர்களின் நோய் நீங்கும்.

வேப்பங்குச்சியால் குழந்தைகள் நாக்கில் “ஓம்” என எழுத அவர்கள் கல்வி மேம்படும்.சுத்தமான பசுஞ்சாண விபூதியில் “ஓம்” என எழுதிக்கொடுக்க வயிற்று நோய்கள் நீங்கும். ஒரு எலக்ட்ரானிக் எலக்ட்ரோ மீட்டர் மூலமாக சாதாரண மனிதனின் மின் சக்தியை அளக்க வேண்டும்.பின் ஒம் ஓம் ஒம் என்று ஒரு லட்சம் முறை ஜபித்தவரின் மின்சக்தியை அளக்க வேண்டும்.அப்போது இருவருக்குமுள்ள வேறுபாடு நன்கு தெரியும். வாகனம் ஓட்டும்போதும், தெருவில் நடக்கும்போதும் எந்த மந்திரமும் ஜபிக்கக் கூடாது.

இப்போதைக்கு விடை பெறுகிறேன்... மீண்டும் சந்திப்போம்..! ஜீவ ஆத்மப் பேரொளியுடன் நாம் இணைய அந்தப் பரம்பொருள் நம் அனைவருக்கும் கருணை செய்ய , அந்த இறைவனை மனதாரப் பிரார்த்திக்கிறேன்..! 

12 comments:

ஓம்போகர் said...

மிகவும் அருமை.
முதலில் யோகமார்கத்தின் மகத்துவத்தை உணர்த்தியது.
இரண்டாவது மந்திரசாஸ்திர மகிமையையும்,
முடிவாக மூன்றாவது 'ஆத்மாவின்' மகத்துவத்தையும் அறிவித்தது.

சித்தர் போகர் பற்றிய சுட்சும தகவல்களுக்கு

ombhogar.blogspot.com

Vetri said...

Thank you very much for your post and all your efforts.

devadass snr said...

அன்பு நண்பரே எங்கே கடந்த 25 வருடமாக எங்கள் பதிவுப் பக்கமே வரவில்லை.எங்களது இளம் மனது களை ஏன் தவிக்க விட்டீர்கள்.
நல்லவேளை இப்போதாவது வந்தீர்களே.இன்னும் காலதாமதம் செய்திருந்தீர்களே ஆனால் சுப்ரீம் கோர்டில் ஹேபியஸ் மனு தாக்கல் செய்யலாம் என இருந்தேன்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

devadass snr said...

அன்பு நன்பரே ஒரு சந்தேகம் அல்லது ஒரு தெளிவு.துாப ஸ்கந்த யோகம். என்றால் என்ன?
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

kasi said...

ji varagi maalai pdf kidaikumaa

geniusakv@gmail.com

Anonymous said...

Really I gain more knowledge through this forum, for long time.

No words to express my gratitude.

But I Salute The Moderator and see his expanded knowledge.

Thank you, Sir.

I pray the Almighty for your High Health and Wealth.

கோடியில் ஒருவன் said...

இப்படி ஒரே பதிவில் ஏகப்பட்ட நல்ல விஷயங்களை பேக் செய்து தந்து எங்களை திணறடித்து விட்டீர்களே... இவனுங்க கொஞ்ச நாளைக்கு பதிவுன்னே கேட்கக்கூடாதுன்னு திட்டம் போட்டு செஞ்சாப்ல இருக்கு....

மூல ஆதாரம், ஆத்ம ஒளி இது மாதிரி வார்த்தைகளெல்லாம் என்னைய மாதிரி மரமண்டைகளுக்கு புரியுமோ? டீசெர்ஸ் ட்ரைனிங் எக்ஸாம் பேப்பர் மாதிரி ரொம்ப TOUGH ஆ இருக்கு. விளங்கிக்கொண்டு பின்னர் படிக்க. ஹூம்....

/////////மிக நேர்த்தியாக முத்துக்கள், ஒரு கயிற்றில் கோர்க்கப்பட்டு இருக்கும் ஒரு முத்து மாலை ஒன்றை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். அதில் கோர்க்கப்பட்டுள்ள கயிறு நம் கண்ணுக்கு தெரிவதில்லை. ஆனால் கயிறு நிச்சயம் இருக்கிறது இல்லையா?/////////

சூப்பர். சரியான உதாரணம். உவமை.

/////////நவ கிரகங்கள் நம் ஜாதக கட்டங்களில் உட்கார்வதும் அதற்க்கேற்ப்பத்தான். நம் தலைஎழுத்து அல்லது விதி எனப்படுவது , இவ்வாறாக எழுதப்படுகிறது./////////

சூப்பர் பாயிண்ட். தலைஎழுத்தோட சூட்சுமத்தை ஜஸ்ட் லைக் தட் சொல்லிட்டு போயிட்டீங்களே....

/////////ஏதோ, வந்தோம் வாழ்ந்தோம் என்று இருக்கவா நாம் பிறந்தோம்.../////////

யாரையோ தாக்குற மாதிரி இருக்கே.... (என்னைய இல்லையே?)

/////////அதிகாலை எழுந்து, தியானம் முடித்து - ஒரு அரை மணிநேரம், தனியாக நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள்.../////////

பெரும்பாலும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மருத்துவர்கள் கூறுவதும் இதைத் தான். எங்கே கேக்குறோம்.

/////////தினமும் 45 நிமிடம் வாக்கிங் போனால் போதும். வாழ்க்கை முழுவதும் சுகர் பிரச்னை நம் பக்கமே வராது என்கிறார்கள் டாக்டர்கள்... நாம் தான், இதை தீர்மானிக்க வேண்டும். தினமும் உடற் பயிற்சி செய்ய வேண்டுமா...? இல்லை மாதம் பத்தாயிரம் மருந்துக்கு அழவேண்டுமா..? /////////

நம்மோட ஆரோக்கியம் நம்ம கிட்டே தான் இருக்கு. நாம தான் அதை தினமும் 7 கி.மீ. நடந்துபோய் வாங்கிட்டு வரணும்னு மாகாத்மா காந்தி சொன்னது தான் ஞாபகத்துக்கு வருது. எவ்ளோ பெரிய ஞானியா இருந்திருக்கணும் அவர்!

///////// ஏழுமணி வரை தூங்கிவிட்டு , காலை டிபன் கூட சாப்பிடாமல் , அவசர அவசரமாக வேலைக்கு செல்லும் பழக்கம் இருப்பவர்கள் அனைவரும், உடனடியாக மாறத் துவங்குங்கள்... சுவர் இருந்தால்தான் படம் ஓட்ட முடியும்..! /////////

சரி... சரி... என்னோட பர்சனல் விஷயத்தையெல்லாம் ஏன் இப்படி பகிரங்கப்படுத்துறீங்க.....? நமக்குள்ளே ஒரு டீலிங்குக்கு வருவோமா?

///////// சில தினங்களுக்கு முன்பு ஒரு வயதான பெரியவர் , நம் வாசகர் மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். மிகுந்த சிரத்தையுடன் அகத்திய லிகித ஜெபம் எழுதி வருகிறார். எழுத ஆரம்பித்த இரண்டே நாளில் ஒரு அதிசயம் நடந்ததாம். /////////

நல்ல விஷயம். நாமும் தாமதப்படுத்தாது அகத்திய லிகித ஜெபம் எழுதி பலன் பெறுவோம்.

/////////சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இதைப் படிக்க நேர்ந்தால், இனி வாழ் நாளில் மறந்தும் தொட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.... /////////

சிகரெட்டா... அப்படின்னா இன்னா? வெள்ளைக் கலர்ல இருக்கும்.... வாயில வெச்சு நெருப்பு வெச்சா... குபு குபுன்னு புகைல்லாம் வருமே... அது தானே? ச்சே...ச்சே... நான் அதை தொட்டது கூட இல்லேப்பா...

மற்றபடி சூப்பர் பதிவுக்கு ஒரு சூப்பர் நன்றி!

இடைவெளி விடாது தொடர்ந்து பதிவளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். (ஒரு நம்பிக்கை தான்! ஹா...ஹா...ஹா...!!)

- கோடியில் ஒருவன்

Jeya said...

guru Sir, fantastic comments.
now i eager to meet you.if i can type in tamil, i will say my mind thought. but i donot know how to type in tamil.
anyhow thank you for posting like unvaluable commenets.

Anonymous said...

ஐயா, ஏன் வாகனம் ஓட்டும்போதும், தெருவில் நடக்கும்போதும் எந்த மந்திரமும் ஜபிக்கக் கூடாது. விளக்கம் தரவும்.

யவனிகை said...

அதெல்லாம் சரிணா, ஆனா என்ன மாதிரி ஞான சூன்யத்துக்கு என்ன பண்ணாலும் த்யானத்ல மனம் லயிக்க மாட்டேன்குதே, நீங்களே சொல்லிடிங்க, முயற்சி பண்றோம்,
///மிக நேர்த்தியாக முத்துக்கள், ஒரு கயிற்றில் கோர்க்கப்பட்டு இருக்கும் ஒரு முத்து மாலை ஒன்றை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். அதில் கோர்க்கப்பட்டுள்ள கயிறு நம் கண்ணுக்கு தெரிவதில்லை. ஆனால் கயிறு நிச்சயம் இருக்கிறது இல்லையா? அந்த கயிறு போன்றதுதான் நம் ஆத்மா. முத்துக்கள், நம் எண்ணங்கள் போன்றவை. ஒரு எண்ணத்திற்கும், இன்னொரு எண்ணத்திற்கும் உள்ள இடைவெளியில் நம் ஆத்மாவை நம்மால் உணர முடியும்.///
இதைவிட யாரும் ஆன்மாவை பற்றி இவ்வளவு எளிதாக விளக்க முடியாது, யாரு............ எங்க அண்ணால..........
ஓம் க்ரியா பாபாஜி நம ஓம் ஓம் நமச்சிவாய

Rishi said...

வணக்கம் சகோதரி. அந்த அளவுக்கு எல்லாம் நான் ஒன்னும் பெரிய ஆள் ஆகலீங்க. எல்லாம், எங்கேயோ படிச்சது அல்லது யாரோ சொன்னது தான். உள்ளுக்குள்ளே படிஞ்சது, அப்போ அப்போ வெளியில் வருது, அவ்வளவுதான்.

mabel ediht Hernandez said...

வணக்கம் நீங்கள் 2% ஒரு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வேண்டும்? நீங்கள் எந்த இணை அல்லது மோசமான கடன் இல்லை, ஏனெனில் நீங்கள் வங்கி கடன்கள் மறுக்கப்படுகின்றன? நீங்கள் வங்கி மன அழுத்தம் சோர்வாக? பிறகு நீங்கள் சரியான இடத்தில் உள்ளன, உங்கள் மின்னஞ்சல் வழியாக இப்போது எங்களை தொடர்பு (mabelhernandezloan@gmail.com)

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com