Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

நம்பிக்கை நெஞ்சில் வை!

| Sep 3, 2012
அன்பு நண்பர்களுக்கு வணக்கம். அப்பழுக்கற்ற இறை நம்பிக்கையுடன், நம் இடைவிடா முயற்சிகளும் இணைந்து இருந்தால், எந்த ஒரு காரியத்திலும் வெற்றி நிச்சயம்.

நமது வாசகர் ஒருவர் அகத்தியரின் லிகித நாம ஜெபம் எழுதியதால், அவருக்கு கிடைத்த பலன் பற்றி, நெக்குருகி மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். மிகுந்த மன உளைச்சலில் , இனி வாழ்ந்தே பிரயோஜனம் இல்லை என்ற நிலைக்கு விதி அவரைத் தள்ளி விட, உரிய நேரத்தில் அவருக்கு இந்த தகவல் கிடைக்க, மிகுந்த நம்பிக்கையுடன் எழுதி வந்த அவருக்கு, மிக அற்புதமான பலன்கள் கிடைக்கத் துவங்கி இருக்கின்றன. இறையருள் தொடர்ந்து கிடைத்து, அவரது இன்னல்கள் முற்றிலும் தீர , அகத்திய மகரிஷியின் வழி காட்டுதல் அவருக்குத் தொடர்ந்து கிடைக்கும் என நம்புகிறேன்.

ரொம்ப பெர்சனலாக சில விஷயங்கள் எழுதி இருப்பதால், அந்த கடிதத்தை இங்கே அப்படியே தர இயலாத நிலைமையில் உள்ளேன். அவர் அடைந்து இருக்கும் வேதனைகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. அவ்வளவு அவமானமும், துடைத்து எறியப் பட்டது போல, இப்போது அவருக்கு நடக்கும் ஆச்சரியங்கள் , சாதாரண மனித முயற்சிகளுக்கு அப்பாற்ப்பட்டது.

நமது பதிவைப் படித்த வாசகர்களிலும், நிறைய பேர் எழுதிப் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டே இருந்து இருப்பீர்கள். அப்புறம், வழக்கம் போல் இருக்கும் பிரச்னைகளில் உழன்று கொண்டு , நேரம் கிடைக்காமல் ... மனதுக்குள்ளேயே அகத்தியரை துதித்து விட்டு , கடவுள் நம் மேலும், கருணை பார்வை பார்க்க மாட்டாரா என்று 'கம்'மென்று இருப்பீர்கள். அத்தனை பேருக்கும் ஒரு வேண்டுகோள்...! ஒருமுறை முயற்சித்துப் பாருங்களேன்...!
நிச்சயம் அந்த அருமையான தாக்கத்தை உணர்வீர்கள்.

லிகித ஜெபம் பற்றிய பழைய பதிவைப் படிக்காதவர்கள், முழு விவரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

எனது வழக்கமான சாதகப் பயிற்சிகளுடன், நானும் இந்த லிகித ஜெபம் எழுதுவதாலும், தொடர்ந்து விஷ /
மலமாதமாக வந்து கொண்டு இருப்பதால், ஜோதிட  பரிகாரங்கள் பற்றி அலசுவது , ஜோதிடர்களுக்கு கொஞ்சம் விபரீதமான பலன்களை தரும் என்பதை உணர முடிவதாலும், பதிவுகளுக்காக நேரம் செலவிடுவதைக் குறைத்துள்ளேன். கூடிய சீக்கிரம், நீங்கள் எதிர் பார்த்துக் கொண்டு இருக்கும் அனைத்து கட்டுரைகளும், வர விருக்கின்றன. விஜயதசமிக்குப் பிறகு, ஒரு நாளைக்கு ஒரு பதிவு நிச்சயம் வரவிருக்கிறது. தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கும் அனைத்து நண்பர்களுக்கும், என் மனமார்ந்த நன்றி..!

========================================================================


தவறான பாதையில் நம்மைத் தள்ளிவிட, விதிக்கு ஒரு நொடி போதும். ஆனாலும், இந்த புள்ளை நல்லா வரணும் என்று எண்ணி, அந்த இறைவன் கருணை நம் அனைவருக்கும், என்றும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. இறைவன் இருக்கிறாரோ, இல்லையோ - ஆனால் நம்பிக்கையோடு தொடர்ந்து முயற்ச்சித்தால் - இறைவன் கருணையும் நமக்கு கிடைக்கும் .  அப்படி சாதித்துக் காட்டிய ஒரு ஹீரோ - திரு. நந்தகுமார், IRS அவர்களின் கதையை , நம் வாசகர்களுக்கு ஏற்கனவே அறிமுகப்படுத்தி இருந்தேன். அவருடன் நிகழ்ந்த ஒரு விரிவான நேர்முகப் பேட்டியை நண்பர் சுந்தர் , தனது தளத்தில் பதிவிட்டு இருந்தார். படிக்கும் ஒவ்வொருவருக்கும், அதன் மூலம் பல செய்திகள் அடங்கி இருக்கின்றன.

அட, என்ன சார், வாழ்க்கை - எல்லா முயற்சியும் ஊத்திக்குது... என்ன தான் பண்றது, என்று விரக்தியின் விளிம்பில் இருக்கும் அனைவரும், நிச்சயம் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை இது. குறிப்பாக, வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் நம் வாசகர்கள் அனைவரும், தவறாமல், படிக்க வேண்டிய கட்டுரை இது. படித்து, உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்..!
 

 http://onlysuperstar.com/?p=15220

http://onlysuperstar.com/?p=15376
=======================================================================
என்னதான் நம் பூர்வ ஜென்ம கர்மாப் படிதான் வாழ்க்கை என்றாலும், எந்த வித தீய பலன்களையும் உடைக்கும் சக்தி இறை வழிபாட்டிற்கு உண்டு.  அதிலும், பிரதோஷ வழிபாட்டிற்கு கிடைக்கும் பலன்கள் அளப்பரியது.
நம் வாசக நண்பர் திரு. மகேஷ்  இணையத்தில் இருந்து கீழ்க் கண்ட, பிரதோஷ வழிபாட்டு முறை பற்றி அனுப்பி இருந்தார். நீங்களும் படித்துப் பாருங்கள். அவருக்கும் , இணையத்தில் இதைப் பிரசுரித்த அன்பு நெஞ்சத்துக்கும், என் மனமார்ந்த நன்றி. 


பிரதோஷ வரலாறும், மகிமையும் : 

அகிலாண்டேஸ்வரி ஒருமுறை தேவலோக கன்னிகை ஒருத்திக்கு, அவளது நடனத்தை மெச்சும் வண்ணம் தனது கழுத்தில் இருந்த மலர் மாலையை பரிசாக தர, கன்னிகையோ அதனை எதிரில் வந்து கொண்டிருந்த துர்வாச முனிவரிடம் கொடுத்து சென்றாள். தேவலோகம் சென்ற துர்வாசர், அம் மாலையை இந்திரனுக்கு பரிசளிக்க, மாலையின் மகிமையை அறியாத இந்திரன், அம் மாலையை தனது யானையிடம் ர, யானை மாலையை தனது கால்களால் மிதித்து சிதைத்தது. கோபத்திற்கு பெயர் பெற்றவராயிற்றே துர்வாசர். இந்திரனையும், தேவர்ளையும் ஒரு சேர சபித்தார். சாப விமோச்சனம் பெற வேண்டி, தேவரும், இந்திரனும் பரந்தாமனை வேண்டினர். மன்ம் இளகிய பரந்தாமனும், திருப்பாற்கடலை கடைந்து, அதிலிருந்து வெளிப்படும் அமிர்தத்தை அருந்துமாறு கூறினார்.

மந்திரகிரி மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு, அசுரர்கள் பாம்பின் தலைப் பகுதியை அசுரரும் வால் பகுதியை தேவரும் பிடித்து கடைய தொடங்கினர். மலை சாய்ந்தது. உடனே, மஹாவிஷ்ணு "கூர்ம அவதாரம் " எடுத்து மலையை தாங்கி பிடித்தார். அன்று 10 வது திதியான தசமி திதியாகும். மெலும் கடையும் பொழுது, வாசுகி வலி தாங்காமல் விஷம் கக்க, அப்பொழுது கடலிலும் நஞ்சு தோன்ற இரண்டும் சேர்ந்து "ஆலகாலம் " என்ற கடுமையான விஷமானது.

 
இதைக் கண்ட வானவர் அஞ்சி நடுங்க, திருமாலும் நான்முகனும் அவர்களை கயிலை சென்று பரமனிடன் தஞ்சமடையுமாறு சொன்னார்கள். வானவரும் அவ்வாறே செய்ய, கயிலை நாதன், தனது தொண்டனான சுந்தரனை அழைத்து அந்த ஆலகால விஷத்தை எடுத்து வரச் சொன்னார். யாராலும் அணுக முடியாத அந்த விஷத்தை சுந்தரன் நாவல் பழம் போல் உருட்டி எடுத்து வர, முக்கண்ணன் அதனை, எல்லோரையும் காக்கும் பொருட்டு தனது வாயில் இட, பரமன் உண்டால் பெரும் கேடு விழையுமே என அஞ்சிய உமையாள் பரமனின் கண்டத்தில் தனது கை கொண்டு தடுக்க, விஷமானது சிவனின் கண்டத்திலேயே தங்கி சிவனாரது கழுத்து நீல நிறமானது. பெருமானும் "நீலகண்டரானார்". இது நடந்தது ஏகாதசி அன்று மாலை பொழுதில். பின்னர் தேவர் சிவனின் கூற்றுப்படி பாற்கடலை மீண்டும் கடைந்தனர். மறுநாளான துவாதசி திதியன்று பாற்கடலில் அமிர்தம் தோன்ற தேவர்கள் அதனை உண்டு சாகா வரத்தை திரும்ப பெற்றனர்.

ஆனால், சிவனை மறந்தனர். பின்னர், பிரம்ம தேவர், தேவர்களின் குற்றத்தை உணர்த்த, தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கயிலை நாதனை அடைந்து மன்னித்தருள வேண்டினர். சிவ பெருமானும், மனம் கனிந்து தனக்கு முன்னால் இருந்த ரிஷப வாகனத்தின் இரு கொம்புகளுக்கு இடையில், அம்பிகை காண திருநடனம் புரிந்தார். அனைவரும் அதை கண்டு களித்து பெருமானை வணங்கினர். இது நடந்தது திரயோதசி திதியன்று மாலை வேளையில். இதுவே பிரதோஷ காலம் என வழிபடப்படுகிறது. ( ஒவ்வொரு திரயோதசி திதியன்றும் மாலை வேளை 4:30 முதல் 06:00 வரை ) பிரதோஷ வேளையாகக் கொண்டு சிவ பெருமானுக்கான சிறப்பு பூஜைகள் ஒவ்வொரு சிவாலயங்களிலும் நடைபெறும்.

பிரதோஷ பூஜை சிவ பெருமானுக்கு மட்டுமே உரிய பூஜை. சிவ பெருமனை விஷ்ணு, பிரம்மன் முதலிய அனைத்து தெய்வங்களும் வழிபடும் நேரம். எனவே, இக் காலங்களில் வேறு எந்த கடவுளருக்கும் பூஜைகள் நடைபெறாது. சிவாலயங்களில் உள்ள மற்ற கடவுளரின் நடைகள் சார்த்தப்பட்டிருக்கும் அல்லது திரையிடப்பட்டிருக்கும். 

 Navagraha Temples Kumbakonam

பிரதோஷ காலங்களும், விரத மகிமைகளும்

ஐந்து வகையான பிரதோஷ காலங்கள் உண்டு. அவையாவன
1. நித்திய பிரதோஷம் 2. பஷ பிரதோஷம் 3. மாத பிரதோஷம் 4. மஹா பிரதோஷம் மற்றும் 5. பிரளயப் பிரதோஷம். தினமும் வரும் மாலை வேலைகள் நித்திய பிரதோஷம் எனவும், வளர்பிறை பிரதோஷங்கள் பஷ பிரதோஷம் எனவும், தேய்பிறை பிரதோஷங்கள் மாத பிரதோஷம் எனவும், தேய்பிறை சனிக் கிழமைகளில் வரும் பிரதோஷம் மஹா பிரதோஷம் அல்லது சனிப் பிரதோஷம் எனவும், பிரளய காலத்தில் வரும் பிரதோஷங்கள் பிரளய பிரதோஷம் எனவும் வழிபடப்படுகிறது.

பிரதோஷ காலங்களில் உபவாசம் இருந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேக, ஆராதனைகள் செய்ய வேண்டும். பிரதோஷ காலங்களில் சிவ பெருமான் அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்கிறார். எனவே இக் காலங்களில் ஈஸ்வரனை நினைத்து தியானம் செய்வது மிகச் சிறந்த பலன் அளிக்கும். " சிவாய நம " என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிப்பது மிகுந்த நன்மைகளை தரும். சிவ புராண பாடல்களை பாடியும் எம் பெருமானை வழிபடலாம். சிவ பெருமான் ஆலகால விஷத்தை உண்டு மயங்கிய நேரம் " கார்த்திகை மாத சனிக் கிழமை " தினம். பிரதோஷ தினம், மும்மூர்த்திகளும், தேவர்களும் ஒன்று சேர்ந்து உபவாசம் இருந்த திருநாளாகும்.
கார்த்திகை மாத சனிப் பிரதோஷம் மிகச் சிறப்பு.


நந்தி தேவருக்கு பூஜைகள் முடிந்த பின்னர் பிரதோஷ புஜைகள் மூலவருக்கு செய்யப்படும்.மூலவருக்கு தீபாராதனை முடிவுற்ற பின்னர் நந்தி தேவரது காதுகளில் யாரும் கேட்கா வண்ணம் நமது வேண்டுதல்களை சொல்ல வேண்டும். தேவர்களின் பெரும் குறைகளையே தீர்த்த நந்தி பெருமான் நமது குறைகளையும் நிச்சயம் சர்வேஸ்வரனிடம் கொண்டு சேர்ப்பார் என்பது நிச்சயம். தொடர்ந்து 12 வாரங்கள் செய்ய, 13 வது வாரம் நமது குறைகள் தீர்ந்ததை உணரலாம். மூலவரின் தீபாராதனையை நந்தி தேவரின் இரு கொம்புகள் வழியே காண்பது சிறந்த பலனை கொடுக்கும். பிரதோஷ காலங்களில் சிவ பெருமான் நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கிடையே திருநடனம் புரிகின்றார் என்பது ஐதீகம். இத்தகைய தரிசனம் சகல பாவங்களையும் போக்கும். அனைத்து விதமான தோஷங்களையும் நீக்கும்.

மீண்டும் சந்திப்போம்!
ஓம் சிவ சிவ ஓம்!

வாழ்க அறமுடன்! வளர்க அருளுடன்! 
========================================================================

15 comments:

SIVANADIMAI VELUSAMI said...

OHM NAMASIVAAYA
OHM NAMASIVAAYA MATTUME THOOLA PANCHATCHRAM,ATHAI MATTUME SOLLA VENDUM. SIVAAYA NAMA ENPATHU SOOTCHUMA PANCHATCHARAM. SIVAYA SIVA ENPATHU ATHISOOTCHUMA PANCHATCHARAM.ENAVE SAMAANYARKALAANA NAAM OHM NAMASIVAAYA SOLVATHE SARI.OHM SIVASIVA OHM JABAM SEIVATHU ERAIVANIN PANCHATCHARATHAI SURUKKUVATHU POLA.THIRUCHITRAMBALAM

SIVANADIMAI VELUSAMI said...

ohm namasivaya
naangal ohm namasivaya nama ligitha jabam prathosa velayil sivalayankalil elutha form print seithu koduthu varukirom thangalum intha sevaiyai ungal oor sivalayankalil seyya viruppam irunthal elavasamaka anuppukirom.RUDRATCHAM (5 MUGAM)elavasamaaha anuppukirom.ellaa kaalathilum rudratcham aninthu sinarul peruvom.vaalha sivaneri.
contact;ananya24velu@gmail.com

THIRUCHITRAMBALAM

Saravanakumar Karunanithi said...

Thanks, Please Keep Writing :)

sugantha said...

Sir,vanakkam.There is a long delay in the post.this post is very good .sir ,u are very correct regarding ligitha nama jepam.i thought to write namajepam but due to laziness and workburden i postpone the matter .instead i worship sri agasthiyar regularly.now i will try to write
sugantha.

Anonymous said...

Can all(including ladies)recite OM NAMASIVAYA?

Simple Sundar said...

ரிஷி அவர்களே, நான் அளித்த பதிவை பற்றி இங்கே எடுத்து கூறியமைக்கு மிக்க நன்றி. இங்கு தான் நான் திரு.நந்தகுமார் அவர்களை பற்றி படித்து தெரிந்துகொண்டேன்.

இன்று இந்த பதிவு வெளியானதும், மீண்டும் அவரை தொடர்புகொண்டு இது பற்றி கூறினேன். மிக்க மகிழ்ச்சியடைந்தார். நம் தளத்தை பார்ப்பதாகவும் கூறினார்.

வர வர பதிவுக்கு நிறைய கேப் விடுவது போல் தெரிகிறதே?? அது பாவமல்லவா...! இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது ஏதாவது பதிவளிக்கவேண்டும் என்று வாசர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.
சிம்பிள் சுந்தர்,
OnlySuperstar.com

SIVANADIMAI VELUSAMI said...

THERE IS NO PARTIALITY IN SIVAN ,LORD SIVA ALREADY GIVE EQUAL RIGHTS TO SAKTHI(LADIES

kasi said...

"varahi maalai" tamil pdf kidaikuma irunthal anppavum'

kasi viswanathan
geniusakv@gmail.com

Anonymous said...

sir
one doubt
prothodam andru virudham iruthu
kantepakka abishegam parkanuma
nan working women, viratham iruthu
5.45 koyilugu poi vanthal palan illiya
sivan koiluguthan pogananmba
amman koil irukum sivanai parkakudatha
clarifiy
selvi

Kousalya said...

yes sir, i am also writing Sri Agasthiyaya Nama - Legitha Jebham. One of your reader said in First Para is true in my life also. I am also getting good returns its amazing and true i feel it. Thank you and pl. keep writing.Kousalya

Murali said...

Almost i received 5 lakhs nama jebam. two ladies are nearing 1 lakh jebam. As blessed by bhogar, the ligitha jebam will touch 1 crore and let the blessing of vellaadai siddhar together with agasthiar reach the universe. the kumbabisegam of this temple as described in www.sivamayam.org will be in january. All devotees can circulate this message and include everyone in this spirit divine job.

Rishi matrum veeramuni avl ku google nandrikal

Muralidharan

கோடியில் ஒருவன் said...

ரொம்ப நாள் கழித்து தாகம் தீர்க்கும் வண்ணம் ஒரு பதிவளித்தமைக்கு ஆசிரியருக்கு ரொம்ப நன்றி. பயனுள்ள பதிவுகளை பகிர்ந்தமைக்கும் நன்றி!!

///////என்னதான் நம் பூர்வ ஜென்ம கர்மாப் படிதான் வாழ்க்கை என்றாலும், எந்த வித தீய பலன்களையும் உடைக்கும் சக்தி இறை வழிபாட்டிற்கு உண்டு.//////

இந்த ஒரு நம்பிக்கையிலே தான் பாஸ் இங்க நிறையே பேர் வண்டி ஓடிக்கிட்டிருக்கு.

//////அதிலும், பிரதோஷ வழிபாட்டிற்கு கிடைக்கும் பலன்கள் அளப்பரியது//////

பிரதோஷத்தோட அருமை பெருமைகளை நாளெல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம்.

//////ஐந்து வகையான பிரதோஷ காலங்கள் உண்டு. அவையாவன 1. நித்திய பிரதோஷம் 2. பஷ பிரதோஷம் 3. மாத பிரதோஷம் 4. மஹா பிரதோஷம் மற்றும் 5. பிரளயப் பிரதோஷம்.////

இது பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். தற்போது விரிவாக தெரிவித்தமைக்கு நன்றி.

////தொடர்ந்து 12 வாரங்கள் செய்ய, 13 வது வாரம் நமது குறைகள் தீர்ந்ததை உணரலாம்.////

அன்றாட வாழ்க்கையில போராடுறதுக்கே நேரம் போய்டுது. இதுல பைசா பிரயோஜனம் இல்லாத நாம இழுத்து விட்டுக்குற வேலைகள் வேற. இதெல்லாம் முடிச்சி... ஆண்டவனை பார்க்கவோ அவன் கோவிலுக்கு போகவே எங்கே நேரம் இருக்கு? இப்படி வாழ பிடிக்கலே. இந்த சுழல்ல இருந்து எப்படி மீண்டு வர்றதுன்னு தான் தெரியலே.

- கோடியில் ஒருவன்

யவனிகை said...

அண்ணா முதல்ல 100000000000000000000000000 times சாரி கேட்டுக்குறேன், உங்களோட இவ்ளோ commitments க்கு நடுவிலயும் எங்களுக்காக டைம் ஒதுக்கி எந்த பலனும் எதிர்பார்க்காம பதிவு போடுறிங்க, ஆனா உங்களுக்கு ஒரு கமென்ட் போடுறதுக்கு எங்களுக்கு டைம்லாம் அட்ஜஸ்ட் பண்ண வேண்டி இருக்கு, சாரினா,
ஆனா அண்ணா சூப்பர்......... சூப்பர்............. சூப்பர்.................
எல்லா பதிவுமே கலக்கலா இருக்கு,
உண்மையாகவே லிகித ஜெபத்தின் பலனை வரையறுத்துக் கூற முடியாது, என் அனுபவத்தில் கண்ட உண்மை, நான் அகஸ்தியர் அய்யனின் திருநாமத்தை எழுதவில்லை, மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு பெரிய பிரச்சனை, எத்தனையோ கோவில், பரிகாரம், பரிகாரம் செய்த கொஞ்ச நாள் ஏதோ பலன் இருந்தது போல் தோன்றும், ஆனால் பழைய குருடி கதவை திறடி என்பது போல அதே பிரச்சனை திரும்பவும் தலையெடுக்கும், பழையபடி இன்னும் தீவிரமாக கோவில், பரிகாரம் இப்படியே சென்று கொண்டிருந்தது, ஒருநாள் தெரிந்தவர் ஒருவர் சொல்லி ஒரு பெயரை எழுத தொடங்கினேன், எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்றிருந்த நான் ஏதோ நம்பிக்கை இல்லாமல்தான் எழுத தொடங்கினேன், எண்ணி பத்தே நாள்தான், இன்றுகூட யார் கேட்டாலும் அடித்து சொல்வேன், நான் அதை எழுத தொடங்கியதால்தான் முடியவே முடியாது என இருந்த அந்த விஷயம்கூட நடந்தது, ஆனால் ஒன்று ஒப்புக்கொள்ள வேண்டும், என் அப்பனின் திருவுளம் இல்லாமல் அது எனக்கு தெரிய வந்திருக்காது, பிரச்னையும் தீர்ந்திருக்காது,
எனக்கென்னவோ நம் வாசகர்களில் யாரோ ஒருவருக்கு குறிப்புணர்த்தவே அண்ணா வழியாக அப்பனும் குருவாகிய அகஸ்திய மகானும் திரும்ப திரும்ப இதை உணர்த்துகிறார் என்றே தோன்றுகிறது........ நம்பிக்கையோடு நம்மால் முடிந்த நேரம் எழுதினால்கூட போதும், மனதை ஒருமுகப்படுத்தி பக்தியோடு உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையுமே மந்திரம் தானே,
ஓம் க்ரியா பாபாஜி நம ஓம் ஓம் நமச்சிவாய

Anonymous said...

sir, i just saw this post yesterday .. Im not living in india at present...but i have started writing the mantra from today ...after completing the book can i keep it to myself ?

இராஜராஜேஸ்வரி said...

பிரதோஷம் பற்றிய விரிவான விளக்கங்களுக்கு நன்றிகள்..

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com