Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே..!

| Aug 7, 2012
நமது சென்ற கட்டுரைக்கு , வாசகர்கள் தெரிவித்த கருத்துக்கள் அபாரம், அற்புதம். ஒவ்வொருவரையும் சிந்திக்க தூண்டியவையாக இருந்தது. இன்னும் தேடுதல் , தீவிரமாகி இருக்கும் என்று நம்புகிறேன். இதைப் பற்றி, மிக தெளிவான , அழகான கட்டுரை ஒன்றை விரைவில் அளிக்க விருக்கிறேன்.

நமது பதிவை வாசிக்கும் வாசகர்கள்,
அந்த கட்டுரையின் கீழே கமெண்ட்ஸ் பகுதியில் உள்ள கருத்துக்களை அவசியம் பார்வையிடவும். ஒவ்வொன்றும் மணி மணியான கருத்துக்கள்

நமது நண்பர் சுரேஷ் நேற்று ஒரு பின்னூட்டம் இட்டு இருந்தார். அவரது, முந்தைய கருத்துக்களையும் விட இன்னும் அழகான கருத்துக்கள். நமது வாசகர்களுக்காக கருத்துக்கள் தெரிவித்த அனைத்து வாசக நண்பர்களுக்கும், என் மனமார்ந்த நன்றி. அவரது இந்த பின்னூட்டம், நமது இன்னும் பல வாசகர்களின் பார்வையில் தப்பி விடக் கூடாது என்பதற்காக , இதை தனிப் பதிவாக இங்கே கொடுத்துள்ளேன்...

வெறுமனே வாசிப்பு சுகத்துடன், நின்று விடாமல் - இன்னும் நம் மனதை கூர்ந்து கவனிப்போம்... அது நமக்கு ஒளி மிகுந்த பாதைக்கு நம்மை கண்டிப்பாக அழைத்துச் செல்லும்..!

Thank you so much Suresh sir! Keep going ! My best wishes to you for all your endeavors!

================================================

ஒரு உயிர் மனித ஜென்மமாக பிறவி எடுப்பதற்கு முன்னால், ஒரு செல் உயிரினமாக பிறவி எடுத்த பின்பு, பல ஆயிரம் வருடங்களாக பல பல பிறவிகளை கடந்து மனிதனாக பிறவி எடுக்கிறது. அதனால் தான் மனிதனின் குணங்கள் மிருக குணங்களை கொண்டு கூடவே அறிவையும் கொண்டுள்ளது.

நிஜமாகவே வாழ்க்கையின் நோக்கம் மகிழ்ச்சியாக, ஆனந்தமாக வாழ்வது ஆகும். மகிழ்ச்சியாக, ஆனந்தமாக வாழவேண்டுமென்றால் போதும் என்ற மனம் வேண்டும். பிற உயிர்களை நேசிக்கவேண்டும். பிறருக்கு உதவவேண்டும்.

சாகும்போது எதுவுமே கொண்டுசெல்ல முடியாது என்று உணரவேண்டும்
நம் உடலை விட்டு உயிர் பிரிந்து போனபின், சில காலங்கள் கழித்து நம் பக்கத்து பரம எதிரி வீட்டில் மகனாகவோ பேரனாகவோ பிறந்தால், நம் போன ஜென்மத்து சொந்த மகனையோ அல்லது கொஞ்சி விளையாடிய பேரனையோ நம் பரம எதிரியாகவோதான் பார்ப்போம். அதனால் பிறரை தன் உயிர் போல் நேசிக்கவேண்டும் .

நம் கல்வி முறையில் மாற்றம் தேவை.
சைவ உணவு மட்டுமே உண்ணவேண்டும்.
அசைவ உணவு உண்ணும் ஒருவர் பூரண சைவ உணவு மட்டுமே உண்ணத்தொடங்கினால் சுமார் இரண்டு மாதத்திலேயே அவருடைய கஷ்டங்கள் மாறுவதை அவரால் உணரமுடியும். இதனை நான் அனுபவபூர்ணமாக உணர்ந்து அதன்படி கடைபிடிக்கிறேன்.

நம் வாழ்க்கையை பற்றி எவ்வளவு சொன்னாலும் யாராலும் புரிந்து கொள்ள முடியாது. அப்போது புரிந்துகொள்ள என்ன வழி?. வழி இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் ஆன்மீக யோகா கற்று அப்படி பயிற்சி எடுத்தால் நிஜமாகவே வாழ்க்கை என்பது என்ன என்பதனை அறியலாம்.

ஒரு திடலில் சுமார் ஐம்பது வயதான இரண்டு மாமரங்கள் இருந்ததாம். அதில் ஒன்று இதுவரை பூ பூத்து காய் காய்க்காததால் அந்த மரம் அடர்த்தியான இலைகளோடு நல்ல நிழல் தரும்படி நின்றதாம். அதனால் அந்த நிழலில் நின்று யோக பயிற்சி பதினாலு நாட்கள் நடந்தது. பயிற்சி முடிந்த பதினாலாவது நாள் அந்த மரம் இலை தெரியாதவாறு வெறும் பூவாக பூத்து குலுங்கி நின்றதாம். ஓர் அறிவு பெற்ற மரத்துக்கே இப்படி என்றால் ஆறறிவு பெற்ற மனிதனுக்கு எவ்வளவு பிரயோஜனம் கிடைக்கும். இது உண்மையில் நடந்ததாக யோக ஆசிரியர் கூறினார்.

இது உண்மையா என்று நானும் அறிய பூக்காத ஒரு மாமரத்தின் பக்கத்தில் இருந்து பயிற்சி செய்து வந்தேன் .அது உண்மை என்பதை கண்கூடாக உணர்ந்தேன். அதனால் தேவையில்லாமல் ஒரு செடி அல்லது ஒரு மரத்தின் இலையை கூட கிள்ளக்கூடாது. புல்,மரம்,செடி,கொடி,பூ போன்றவற்றை ரசிக்கலாம், இயற்கையை நினைத்து வியக்கலாம்.

ஒரு ஊரில் இரு தரப்பு மக்கள் ஒன்றை ஒன்று அடித்துக்கொண்டார்களாம். அதை பார்த்து ஒரு புறாகுஞ்சு தாய்புறாவிடம் அவர்கள் ஏன் ஒன்றை ஒன்று அடித்துக்கொள்கிறார்கள் என்று கேட்டதாம்.அதற்கு தாய் புறா சொன்னதாம்,நாம் கோவிலில் வசித்தபோது நம்பெயர் புறா,கோவில் குடமுழக்கின் போது நாம் சர்ச்சில் வசித்தோம் அப்போதும் நம்பெயர் புறாதான். டிசம்பர் மாதம் வெள்ளை அடித்தபோது தர்காவில் குடி புகுந்தோம் அப்போதும் நம்பெயர் புறாதான். ஆனால் மனிதன் கோவில் போனால் அவன் இந்து ,சர்ச் போனால் அவன் கிறிஸ்தவன், தர்கா போனால் அவன் முஸ்லிம் என்று ஆகிவிடுகிறான் அதனால் அவர்களுக்குள் சண்டை என்று கூறியதாம்.இது எழுத்தாளர் ராஜேஷ் குமார் எழுதிய கதை.
நாமும் எல்லோரையும் நேசிப்போம்.

18 comments:

கோடியில் ஒருவன் said...

சுரேஷ் அவர்களே என்ன சொல்வது... என் கண்களை திறந்துவிட்டீர்கள். சென்ற பதிவிலேயே உங்களது கருத்து அபாரம். அதற்கே நான் உங்களுக்கு பாராட்டு தெரிவித்திருக்க வேண்டும். மன்னிக்கவும். விரிவான பின்னூட்டத்தை விரைவில் அளிக்கிறேன். மிக்க நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பல கருத்துக்கள்...

ஒரு சின்ன விளக்கம் :
எல்லாவிதமான தவறுகளையும் செய்து கொண்டு / செய்து விட்டு, யோகா செய்வதில் எந்த பிரயோசனமும் இல்லை...

அப்படி செய்த என் பள்ளிக்கூட நண்பன் இப்போது இல்லை... (இரு பெண் குழந்தைகள் - மனைவி முன்பே இறந்து விட்டார்கள்)

எல்லாவற்றிக்கும் மனமே காரணம்...

என்னைப் பொறுத்தவரை : தன்னை தான் அறிந்து கொள்வதே மிகச் சிறந்த யோகா... (அதையும் தானே அறிந்தால் மிகவும் சிறப்பு...) அதை விட சிறந்த யோகா எதுவும் இல்லை என்பது என் கருத்து... நன்றி...

தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

யவனிகை said...

/// உயிர் பிரிந்து போனபின், சில காலங்கள் கழித்து நம் பக்கத்து பரம எதிரி வீட்டில் மகனாகவோ பேரனாகவோ பிறந்தால், நம் போன ஜென்மத்து சொந்த மகனையோ அல்லது கொஞ்சி விளையாடிய பேரனையோ நம் பரம எதிரியாகவோதான் பார்ப்போம்.///
உண்மைதான், அவன் செயல்களுக்கான காரணத்தை அவன் மட்டுமே அறிவான்,
சிறுவயதில் நாம் எதை வெறுக்கிறோமோ, வாழ்க்கையின் பிற்பகுதியில் அதுவே நம் வாழ்க்கையாகி விடுமாம், உதாரணமாக ஆசிரியர் தொழிலையே வெறுப்போம், வேறு வேலை எதுவும் சரிவராமல் பிடிக்காத தொழிலையே செய்ய வேண்டி வரும், உப்புமா என்றாலே அதை குடுப்பவர்களுக்கே பாதியை திருப்பிக் குடுப்பதுதானே நம் பழக்கம், வேறு சூழ்நிலைகளில் அதையே தினம் உண்ண வேண்டியநிலை ஏற்ப்படும்,
ம்ம்ம்,கடைசியில் வரும் கதை நல்ல கதைதான், கதையிலுள்ள பாசிடிவ் அப்ரோச், நல்லிணக்கம் பிடித்தது, ஆனால் மொத்தமாக அப்படியே ஒப்புக்கொண்டால் இந்துமதத்தின் தனித்தன்மையையே உருவி எடுத்துவிட்டது போல் தோன்றுகிறதே, ஆனால் உங்கள் ஒட்டு மொத்த கருத்துக்களின் crux நன்றாக இருக்கிறது,
ஓம் க்ரியா பாபாஜி நம ஓம், ஓம் நமச்சிவாய

கோடியில் ஒருவன் said...

சுரேஷ் அவர்களே, சென்ற பதிவில் வாழ்க்கை என்றால் என்ன என்பது பற்றி தாங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் அருமை. குறிப்பாக இலங்கையில் முள்வேலியில் இருந்திருந்தால் ஆன்மிகம் பற்றி அறிய முடியுமா அல்லது பேசமுடியுமா என்று நீங்கள் எழுப்பியிருக்கும் கேள்வி அர்த்தம் மிக்கது.

வாழ்க்கையே ஒரு பெரும் போராட்டமாக நித்தம் நித்தம் செத்துப் பிழைக்கும் மக்கள் எத்தனையோ பேர் ஆன்மிகம் பற்றி யோசிக்க கூட முடியாமல் இருக்கிறார்கள். ஆனால் நாமோ ஆன்மீகம் பற்றி விவாதித்துக்கொண்டிருப்பதே இறைவன் நமக்கு இட்ட பிச்சை என்றே நான் கருதுகிறேன்.

என்னுடைய முன்னாள் நெருங்கிய நண்பர் ஒருவர் (அவரை என்கிட்டே இருந்து என் எதிரிகள் பிரிச்சிட்டாங்க) என்னிடம் பேசும்போதெல்லாம் அடிக்கடி "யாரையும் சபிக்கதீர்கள், யாரையும் எதற்காகவும் சபிக்காதீர்கள்" என்று என்னிடம் கூறுவதுண்டு. நான் அப்போது நினைத்துக்கொள்வேன்... 'இதென்ன அபத்தமாக இருக்கிறது' என்று. காரணம் நான் ஒரு தவறும் செய்யாத போது என்னை பாடாய் படுத்துபவர்களையும் துன்புறுத்துபவர்களையும் நான் எப்படித் தான் கையாள்வது? அவர்கள் வழியிலேயே சென்று என்னால் திருப்பி அடிக்க முடியாது. அப்புறம் அவர்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாம் போய்விடும். இருப்பது ஒரே வழி... "ஒரு நாள் உங்களுக்கு இதற்காக நிச்சயம் இறைவனிடம் கடுமையான தண்டனை உண்டு" என்று சபிப்பது தான். அது தவறு என்று எனக்கு தெரிந்தபோதும் என்னால் அதை தவிர்க்க முடியவில்லை. அது அப்படியே நடந்துவிட நான் ஒன்றும் மகான் அல்ல என்றாலும், எனக்குள் இருக்கும் வன்மத்தை கொஞ்சமாவது இறக்கிவைக்க அது ஒரு வடிகால் என்ற ரீதியல் தான் பார்த்துவந்தேன்.

ஆனால் தற்போது உங்கள் கீழ்கண்ட கருத்தை படித்தவுடன், தான் அது எத்தனை தவறு என்று தெரிகிறது.

//நம் உடலை விட்டு உயிர் பிரிந்து போனபின், சில காலங்கள் கழித்து நம் பக்கத்து பரம எதிரி வீட்டில் மகனாகவோ பேரனாகவோ பிறந்தால், நம் போன ஜென்மத்து சொந்த மகனையோ அல்லது கொஞ்சி விளையாடிய பேரனையோ நம் பரம எதிரியாகவோதான் பார்ப்போம். அதனால் பிறரை தன் உயிர் போல் நேசிக்கவேண்டும்.//

மேற்படி மூன்று வரிகள் எத்தனையோ விஷயங்களை எனக்கு உணர்த்திவிட்டது. மிக்க நன்றி.

ஆசிரியர் கூறியபடி பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே என்று நினைக்கவேண்டியது தான். (இப்போ மட்டும் என்ன? அவர்களுக்கு தானே அவன் அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறான்!)

இறுதியாக நீங்கள் சொல்லியிருக்கும் கதை சூப்பரோ சூப்பர்.

என்னைக் கேட்டால் இறைவனின் படைப்புக்களிலேயே கேவலமானது எது என்றால் அது இந்த பாழும் ஆறறிவு பெற்ற மனித ஜென்மம் தான். விலங்குகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன.

யவனிகை பின்னூட்டத்தில் கூறியிருக்கும் விஷயங்கள் அபாரம். குறிப்பாக //அவன் செயல்களுக்கான காரணத்தை அவன் மட்டுமே அறிவான்//.

உப்புமா விஷயம் உண்மையிலும் உண்மை. (உப்புமா நல்லா செய்வீங்க போலிருக்கே!) இப்போதும் நான் எந்த உறவினர் வீட்டுக்கு சென்றாலும் என்னை வரவேற்ப்பது உப்புமா தான். என்ன செய்ய?

- கோடியில் ஒருவன்

நந்தவனம் said...

suresh sir oda karthu oru unmaiyana neriya idangalil nadathukittu irukum oru kannuku pullapadatha visayathai arumai pathivittu super nandri Risya sirunga sir

arul said...

information about mango tree is new

யவனிகை said...

//அவன் செயல்களுக்கான காரணத்தை அவன் மட்டுமே அறிவான்//.
@ கோடியில் ஒருவன் சார், அட போங்க சார், இந்த வரிகளை நீங்கள்தான் அடிக்கடி உபயோகிப்பீர்கள், சொந்த சரக்கெல்லாம் இல்ல,

rasican said...

எனக்குள் அமிழ்ந்து தேட தூண்டிய பதிப்பு அருமை ,இது போல
கருத்துக்கள் இன்னும் ஆழமாக இருக்க தூண்டும் வாழ்த்துக்கள்

THEIVAM said...

Rishi sir konjam engalukkaka time othukka kudathaaa???? pls viraivil ungal adutha pathivai ethirparkiren

Saravanakumar.B said...

மிகவும் பயனுள்ள பதிவு ....

http://spiritualcbe.blogspot.in/

ISMAIL said...

அய்யா ரொம்ப ஆவலா பதிவு வரும்ன்னு எதிர்பார்க்கிற ப்ளாக்ல ஒன்னு இது. இவ்வளவு நாள் இடை வெளியில் ஒன்றுமே போடாதது எங்களுக்கு ஏமாற்றமாக உள்ளது. தயவு செய்து விரைவில் புதிய பதிவு போடவும்.

கோடியில் ஒருவன் said...

நேத்தைக்கு இங்கெல்லாம் சரியான மழை. என்னனே புரியலே. அப்புறம் தான் புரிஞ்சது... நம்ம ரிஷி சார் அதிசயமா தளம் பக்கம் எட்டிப் பார்த்து கமெண்ட்ஸ்ல்லாம் கொஞ்சம் அப்ரூவ் பண்ணியிருக்கிறார்னு. இதுக்கே இப்படின்னா பதிவு போட்டா... ?

Anonymous said...

Vaaram thorum idhil padhivukal vara endha kovilukku pogavendum sir.

Sakthi
Tiruppur

sri kum said...


om namasivaya, i have seen your website for the news of thiruvalam sivan temple. i saw that temple very impressive to me. i am sivabakthar, where is sivan temple, i am going to that temple. thanks for your information.

sri kum said...

om namasivaya, i had seen thiruvalam sivan temple. very impressive to me. where is sivan temple i will be there in temple and pray that temple. every body should go to that temple. they can easily solve the problems to visit that temple. thks

Anonymous said...

அய்யா ரொம்ப ஆவலா பதிவு வரும்ன்னு எதிர்பார்க்கிற ப்ளாக்ல ஒன்னு இது. இவ்வளவு நாள் இடை வெளியில் ஒன்றுமே போடாதது எங்களுக்கு ஏமாற்றமாக உள்ளது. தயவு செய்து விரைவில் புதிய பதிவு போடவும்
pls sir update the block
rds
selvi

Bhavani said...

Super

இராஜராஜேஸ்வரி said...

ஆன்மீக அதிர்வுகள் மரத்திற்குப் புரிகிறது
மரமண்டைகள் தான் உணர்வதில்லை ..

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com