Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

கல்யாணத் தேன் நிலா ! காய்ச்சாத பால் நிலா!

| Aug 7, 2012

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த தடவை மன்னிப்பு எல்லாம் கேட்கப்போறது இல்லை. ரொம்ப ஓவரா கலாய்க்கிறீங்கப்பா  ..! என்ன ஒரு அன்பும் , பண்பும் கலந்த அதிகார மிரட்டல்..! உரிமையோடு கோபித்துக்கொள்வது.அட அடா.. ! நிஜமாகவே உங்கள் பாசத்தை கண்டு கொஞ்சம் நெகிழ்ச்சியாகவே இருக்கிறது..!  சரி பரவா இல்லை. நம்ம நண்பர்களுக்கு இல்லாத சலுகையா..? எத்தனையோ பேர் , புது பதிவிற்காக தினமும் வந்து ஏமாந்து சென்று இருப்பீர்கள்... ஐயா எல்லோரும் இந்த எளியவனை மன்னிக்கவும். குடும்பம், அலுவல் பணிகள் தவிர்த்து ஓய்வு நேரத்தில் மட்டுமே இந்த தளத்தில் பதிவுகள் போடுவது என்று வைத்து இருக்கிறேன். வீட்டில் ஜூனியர் வேறு... கம்பெனியில் இருந்து எப்போடா வீட்டுக்கு வருவேன் என்று எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

ஆன்மீகத்திலும்  நான் இப்போதுதான் ஆனா, ஆவன்னா எழுத தொடங்கி இருக்கும் ஒரு மாணவன். ஊருக்கு மட்டும் உபதேசம் செய்து ஒதுங்கும் ஆள் இல்லை. ரொம்ப சாதாரணமான, எதார்த்தமான மனுஷன். சில ஆன்மீக சாதகப் பயிற்சியை விடாது செய்வதையும் என் ஒரு கடமையாக கருதி செய்து கொண்டு இருக்கிறேன். அதனால் கடந்த சில மாதங்களாக, கொஞ்சம் நேரம் ஒதுக்குவதில் சிரமப்பட்டேன் தான்.  நான் இங்கு செய்வது தெரிஞ்ச சில விஷயங்களை பகிர்ந்து கொள்வது ஒரு சாதாரண விஷயம்தான்.

நம்மோட சில முரட்டு அன்பு வாசக நண்பர்களின்  வேண்டுகோளுக்காக, குறைந்தது வாரம் ஒரு பதிவாவது போட முயற்ச்சிக்கிறேன். அதனால் நிறைய பேரின் ஏமாற்றம் தவிர்க்கப்படும் என நினைக்கிறேன். நமக்கு தினமும் ஆயிரக்கணக்கில் வாசகர்கள் வந்து குவியணும்,  எல்லோரும் நம்மளை ஆஹா ஓஹோன்னு கொண்டாடனும்ன்னு எல்லாம் ஒன்னு இல்லை. ஏனோ, தானோன்னு வெறுமனே வாசிப்பு சுகத்தில் மட்டும் லயித்து விடாமல், உண்மையிலேயே ஒரு வழி கிடைக்கும் என்கிற நம்பிக்கையோடு , உள்ளே வர்ற ஒரு பத்து பேர் போதும். வெறுமனே படிக்கறதோட நிறுத்தாமல், சில நல்ல விஷயங்கள் உணர்ந்து வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி, ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ விரும்பும்  - நாம என்ன இப்போ பண்ணிக்கிட்டு இருக்கோம், என்ன பண்ணப் போறோம் இந்த ரெண்டு கேள்விக்கும் பதில் தெளிவா தெரிஞ்ச வாசக நண்பர்கள் போதும்.

ரொம்ப நேரம், கம்ப்யூட்டரே கதின்னு இருக்கிறதும் தப்பு. ஒரு போதைப் பழக்கம் மாதிரி தான் இதுவும். இந்த மாதிரி தான், இன்னைக்கு இருக்கிறதுல நிறைய பேர் இருக்கிறாங்க. ஆரம்பத்தில் இது பெரிய பாதிப்பு ஏற்படுத்தாது எனினும், போகப் போக - செய்யும் வேலைக்கே இது உலை வைத்து விடும். கண்ட குப்பைகளையும் பார்க்க தூண்டும். சினிமாவுக்கும், கிரிக்கெட்டுக்கும் இன்டெர் நெட்ல வெட்டியா செலவு செய்ற நேரத்துக்கு, வாழ்க்கை லட்சியம் என நினைக்கும் ஒரு நல்ல விஷயத்துக்கு - தினம் ஒரு அரை மணி நேரம் நெட்டில் தேடினால், அவர்கள் உண்மையிலேயே சாதிக்கும் நாளை நெருங்கிக் கொண்டு இருப்பவர்கள் என உறுதியாக கூறலாம்.

அதனாலே, நம்ம 'சைட்' க்கே  உங்க ஓய்வு நேரத்தில் மட்டுமே வந்து பாருங்கள்.. விடுபட்ட பதிவுகளை பாருங்கள்... பயன் பெறுங்கள்...!
ஆனா, ஒன்னு - நம்ம பதிவு படிப்பீங்களோ, படிக்க மாட்டீங்களோ - லைப் ல ஒரு நல்ல நிலைக்கு நீங்க வரணும், அதுக்கு என்ன பண்ணணுமோ - பண்ணுங்க.. உங்க வீடோ, ஆபீசோ - எல்லா இடத்திலும் - நீங்கள் மனத்தில் பெருமிதத்துடன் உலா வரும் அளவுக்கு - உங்கள் செய்கைகள் நல்ல விதமாக அமையட்டும்.அன்பு எங்கெல்லாம் குறைகிறதோ, அங்கெல்லாம் குறைகள் பெரிதாகத் தோன்றும்.. அதனால் , நேசம் வளர்ப்போம். நிச்சயம் ஜெயிப்போம்!

சரி, இன்னைக்கு ஒரு முக்கியமான விஷயம் பற்றி பார்க்கலாம்....!
நமது ஜோதிட நண்பர் ஒருவர் நமக்கு ஜோதிட ஆலோசனை கேட்டு வந்த கடிதங்களை கொஞ்சம் ஆராய்ந்து ஒரு Statistics சம்மரி கொடுத்தார். மொத்தம் வந்த கடிதங்களில், 28 % - குழந்தை வரம் குறித்து, 29 % கடன் தொல்லையில் இருந்து விடுபடுவது பற்றி, 30 % திருமணம் நடைபெறவில்லை / ம(ண) ன முறிவு - மறு மனம் பற்றி - இதர கேள்விகள் 13 %. அதனால் மனதில் ஒரு எண்ணம் ஏற்பட்டது. இந்த மூன்று கேள்விகளுக்கும், தலா ஒரு மூன்று / நான்கு பதிவு போட்டால் , பல ஆயிரக்கணக்கான பேருக்கு , உரிய நேரத்தில் அவை பயன் அளிக்குமே என்று தோன்றியது ..... சரி என்று தொடங்கி இருக்கிறேன்.... First topic is : Marraige......!

கண்ணுகளா, அடுத்த பதிவு வர தாமதம் ஆனாலும், கொஞ்சம் பொறுமையா இருங்க.. வர வேண்டிய நேரத்தில கரெக்டா வரும்... ஓகே ?
==============================================================

இரண்டு கண், இரண்டு காது, இரண்டு கை, இரண்டு கால் என்று இரண்டு இரண்டாக நமக்கு படைத்த இறைவன் - நமது உயிரையே இயக்கும் இதயத்தை மட்டும் ஏன் ஒன்றாக படைத்து விட்டான்....? தெரியுமா ..? ஒவ்வொரு மனிதனுக்கும் பொருத்தமான இன்னொரு இதயத்தை தேர்ந்தெடுத்து - இணைத்துக் கொள்ளத்தான்.  (அடேங்கப்பா.. ரூம் போட்டு யோசிக்கிறதுங்கிறது இதைத்தானோ? )

ஒரு பெண்ணுக்கு பூரணம் தாய்மை. பெண்ணாகப் பிறந்ததன் பரிபூரண ஆனந்தம் அது. அந்த பூரணத்தை , மஞ்சள் குங்கும மங்கலத்தை தருவதாலேயே , கணவன் அவளின் உயிரையும் விட மேலானவனாகிறான். கட்டிய துணையைத் தவிர - பிற பெண்களை மனதாலும் நினையாமல் - உயிருக்குயிராய் இணைந்து குடும்பம் நடத்துவதால்தான், நம் பாரதம் இன்னும் உயிர்ப்புடன் இயங்குகிறது. ஆனால், எல்லோருக்கும் இப்படி பெருமையான வாழ்க்கை அமைகிறதா... ?

இரண்டு மனங்களை, இரண்டு இதயங்களை இணைப்பது - திருமணம். ஆனால், எல்லோருக்கும் பொருத்தமான இல்லறத்துணை கிடைக்கிறதா, என்றால் - இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதற்குப் பல காரணங்கள் உள்ளன.  நல்ல மண வாழ்க்கை அமைவது அவரவரின் பூர்வ ஜென்ம பலாபலன்,  கொடுப்பினை  என்று ஜாதகம் கூறினாலும், விதியையே மாற்றும் சக்தி இறைவழிபாட்டிற்கு எப்போதுமே உண்டு.


https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcSOCS5CrufNDroc5sRC_Ld4BjirUDDMmhSktW6AZ2DiDzBb4zt0

அப்படிப்பட்ட சர்வ வல்லமை பொருந்திய வழிபாட்டு முறைகளை , சரியான நேரத்தில் செய்வது - நம் வாழ்வில் எந்த தடைகளையும் உடைத்து , நமது எண்ணம் ஈடேறச் செய்யும். அப்படிப்பட்ட மகத்தான ரகசியங்களை இங்கே உங்களுக்கு அறிமுகப் படுத்துவதில் - இந்த கட்டுரையின் ஆசிரியராக நான் பெருமிதம் கொள்கிறேன். இவை அனைத்தும் - நமது சித்தர் பெருமக்களினால் அறிமுகப் படுத்தப்பட்டவை. தகுதி வாய்ந்த அன்பர்களுக்கு , உரிய நேரத்தில் இவற்றை கிடைக்க செய்வதில் - அந்த பரம்பொருள் என்னை ஒரு கருவியாக்கியதில் எனக்கு மனப்பூர்வ மகிழ்ச்சி.

 ஜாதகப் பொருத்தம் பார்ப்பதையும் விட - மண வாழ்வுக்கு முக்கியமான விஷயம் - தகுதி. ஒவ்வொருவரும் குடும்பம் நடத்த தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது கல்வியோ, ஞானமோ - பொருளாதாரமோ , நற்பண்புகளோ , தீய பழக்கங்கள் இல்லாமல் இருப்பதோ  இப்படி  எல்லாம்.

ஆணோ , பெண்ணோ - நல்ல கல்வி, வசதி , பிற திறமைகள் வளர்ப்பது எல்லாம் எதற்க்காக , ஒரு மனதுக்கு இனிய வாழ்க்கைத் துணை கிடைத்து, மழலைச் செல்வத்துடன் கூடிய ஒரு குடும்பம் அமையத் தானே. எத்தனை எத்தனை கனவுகள், நாம் வளரும்போது நமக்குக் கிடைக்காதவை எல்லாம் , நமது குழந்தைக்கு கிடைக்க செய்ய வாழும் முயற்சி தான் நம் வாழ்க்கை பயணத்தின் வசந்தம் என்று அல்லவா நினைத்துக் கொண்டு இருக்கிறோம் ?  இதில் இணையே இன்னும் கிடைக்க வில்லை என்றால் , அது எத்துணைக் கொடுமை? இறைவா, அப்படி என்ன நான் பாவம் செய்து விட்டேன், எனது பாவங்களை மன்னித்து , எனக்கு இந்த ஜென்மத்தில் ஒரு நல்ல வாய்ப்பைத் தரமாட்டாயா? இப்படி நம் வாசகர்களிலோ, அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களிலோ - இதைப் போன்ற நிலையில் யாராவது இருக்கிறார்களா? அவர்களுக்கு இந்த கட்டுரை ஒரு மாபெரும் பொக்கிஷம்.

உங்கள் ஜாதகத்தை கையில் எடுத்துக்கொள்ளுங்கள். மொத்தம் பன்னிரண்டு கட்டம் இருக்கும். மேஷம் முதல் மீனம் வரை. அவற்றில் ஒரு இடத்தில் "ல" என்று போட்டு இருக்கும். லக்னம் என்று சொல்வார்கள். அந்த இடத்தை முதல் வீடாகக் கொண்டு , கடிகாரச் சுற்றுப்படி ஏழாம் வீடு எது என்று பாருங்கள். அந்த இடத்தின் அதிபதி பண்ணும் லீலை தான் - நட்பும் , திருமண வாழ்வும். நவக் கிரகங்களில் - சுக்கிரன் என்னும் கிரகமும் , ஏழாம் வீட்டு அதிபதியும் தான் , அந்த ஜாதகருக்கு கிடைக்க விருக்கும் திருமண வாழ்வை , விதியின் ரூபத்தில் தீர்மானிக்கிறார்கள். இவர்களுக்கு உரிய ப்ரீதி செய்வது, முதல் தடையை தகர்க்கும்.

உங்கள் நலனுக்காக - பன்னிரண்டு ராசிக்கும் உரிய வீட்டு அதிபர்களை கொடுத்துள்ளேன். செவ்வாய் - மேஷம், விருச்சிகம். சுக்கிரன் - ரிஷபம், துலாம். புதன் - மிதுனம், கன்னி. சந்திரன் - கடகம். சூரியன் - சிம்மம். குரு - தனுசு, மீனம். சனி - மகரம், கும்பம்.

சுக்கிரன், ஏழாம் வீடு அதிபதி தவிர - செவ்வாய்க்கும், ராகு - கேதுவுக்கும் -  பெரும் பங்கு இருக்கிறது.ஏழாம் அதிபரோ, சுக்கிரனோ - நீசமாக இருந்து, அல்லது நீச கிரகங்களுடன் இணைந்து, அல்லது ஏழாம் வீட்டிற்கு நீச கிரகங்களின் பார்வை இருந்து , அல்லது ராகு கேது , லக்கினத்திலோ - இரண்டாம் வீட்டிலோ இருந்து - அல்லது இலக்கின அதிபர் பலம் இல்லாது இருந்து , சனியும் சந்திரனும் இணைந்தோ, அல்லது ஒருவருக்கொருவர் ஏழாம் வீட்டில் இருந்து, செவ்வாய் தோஷ அமைப்புடன் இருந்து என்று - ஏராளமான விதிமுறைகளை கணித்து, ஜோதிடர் அதற்க்கு உரிய பலன்களை , பரிகாரங்களை சொல்லுவார்.

திருமண நிர்ணயித்தலில் லக்கினாதிபதி, பூர்வ புண்ணிய அதிபதி, களத்திராதிபதி, குடும்ப அதிபதி, வீர்ய ஸ்தானமான மூன்றாம் இட அதிபதி என ஒவ்வொரு இடமும் முக்கிய பங்கு வகிக்கிறது.இப்படி, அவர் அவர்க்குரிய ஜாதகங்களை தனிப்பட்ட முறையில் அலசி , ஆராய்ந்து - பலன் சொல்வது அவசியமெனினும், கீழே நாம் பார்க்க விருப்பது - பொதுவான முறையில் , அனைவருக்கும் பலன் தரக்கூடிய வழிபாட்டு முறைகளைப் பற்றியே.

திருமணம் - தெய்வ திருமணமாக இருந்தாலும் ( இரு வீட்டார் முறைப்படி செய்து வைப்பது ) - குரு திருமணமாக இருந்தாலும் (மத குருமார்கள் நடத்தி வைப்பது) , காந்தர்வ மணமாக இருந்தாலும் ( நம்ம லவ் மேரேஜ் ) , அல்லது சூழ்நிலை காரணமாக மணந்து இருந்தாலும் - எந்த சூழலிலும் - கணவன் மனைவியாக மாறிவிட்டவர்களை - இழித்தோ , பழித்தோ பேசக் கூடாது. 

திருமணத்தின் முடிவுகள் அனைத்தும் இறைவனால் வகுக்கப்பட்ட விதி.
அப்படி பழித்துப் பேசுபவர்களது குடும்பத்திலும், அவர்கள் வம்சா வழியில் அதே போல ஒரு சூழ்நிலை உருவாகுமாம். வம்சா வழியால் வரும் தோஷம், அவர்கள் திருமண வாழ்வைப் படுத்தி எடுத்திவிடும். வம்சா வழி தோஷத்தைப் பற்றி, நம் பழைய பதிவுகளில் பாருங்கள். பித்ரு தோஷம், தேவ கடன், ரிஷி கடன், பிரேத சாபம், திருஷ்டி சாபம், சர்ப்ப தோஷம், அபிசார தோஷம் இப்படி - பல தோஷங்களை நீக்குவதற்க்கே - இறை வழிபாடு. இதைப் பற்றி தனியாக ஒரு பதிவே போடலாம். அந்த பதிவைப் படித்த பிறகு, நிச்சயம் எந்த பாவம் செய்ததால் இந்த கஷ்டம் என்று மனத்தால் ஒவ்வொருவரும் உணரமுடியும். 

சரி, என்ன என்ன வழிபாடு செய்ய வேண்டும்?

யானையின் பலம் தும்பிக்கையில். மனிதனுக்குப் பலம் நம்பிக்கையில். இறை வழிபாடு செய்யும்போது, நம்பிக்கையோடு செய்யுங்கள். அது மிக மிக அவசியம்.

 1) காலண்டரில் - பரணி, பூரம், பூராடம் நட்சத்திரம் ஏதாவது வெள்ளிக்கிழமையில் வருகிறதா என்று பாருங்கள். அந்த நாளில் - சுக்கிர ஹோரை வரும் நேரத்தில் - அதாவது காலை ஆறு மணி முதல், ஏழு மணிவரை - மதியம் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை, அல்லது இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணிவரை - ஏதோ ஒரு மணி நேரத்தில் - அந்த பரந்தாமன் உறையும் ஸ்ரீரங்கம் சென்று , மனமார ரங்கநாதரை வேண்டி வாருங்கள்.ஆலயம் சென்று, அங்கு சக்கரத்தாழ்வாரை வணங்கி , பின் தாயார் சந்நிதிக்குச் செல்லவும். தாயாரை வணங்கி வலம் வந்து விட்டுப் பின் ஸ்ரீ ரெங்கநாதரை வழிபட வேண்டும்.

ஸ்ரீரங்கம் செல்ல இயலாதவர்கள், கஞ்சனூர் சென்று சுக்கிரனுக்கு உரிய அபிசேகம் , ஆராதனை செய்யலாம். இரண்டுக்குமே வாய்ப்பு இல்லாதவர்கள் , வெள்ளிக் கிழமை தோறும் விரதம் இருந்து , அருகில் இருக்கும் பெருமாள் ஆலயம் சென்று , மேற்குறிப்பிட்ட ஏதோ ஒரு நேரத்தில் - பெருமாளை சேவித்து வாருங்கள்.

அல்லது - உங்கள் ஏழாம் வீட்டு அதிபதிக்கு உரிய தேவதையை, அந்த அதிபருக்கு உரிய கிழமையில் - மேலே குறிப்பிட்ட மூன்று மணி நேரங்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் - தொடர்ந்து வழிபட்டு வாருங்கள்.

இந்த குறிப்பிட்ட காலக் கணக்கில், ஒரு மாபெரும் சூட்சுமம் அடங்கி இருக்கிறது. இந்த வழிபாட்டை முறைப்படி செய்வது - நல்ல வரன் அமைவதோடு, நீங்கள் விரும்பும் வரனே , உங்களை நாடி வர வைக்கும்.

2 )  உங்கள் குலதெய்வத்தை மனதார தினமும் தொழுது வாருங்கள்.

3 )  உங்கள் நட்சத்திரத்துக்குரிய விருட்சத்தை வளர்க்கலாம். விருட்சம் வளர்க்க இயலவில்லை என்றால், அந்த விருட்சம் ஸ்தல விருட்சமாக எந்த ஆலயம் இருக்கிறது என்று பார்த்து - அந்த ஆலயத்திற்கு , உங்களால் முடிந்தவரை அடிக்கடி சென்று வாருங்கள். உங்களின் ஒட்டு மொத்த தோஷத்தையும் ஈர்க்கும் சக்தி - அந்த குறிப்பிட்ட நட்சத்திர விருட்சங்களுக்கு உண்டு. திருமணம் என்று இல்லை. நீங்கள், நினைத்த அனைத்து நியாயமான கோரிக்கைகளையும் நிறைவேற்றும் சக்தி இந்த விருட்சங்களுக்கு உண்டு. இது மிக மிக சூட்சுமமான ஒரு ரகசியம். 

4)  சிவ வழிபாடு செய்பவர்கள் , உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் பழமையான சிவ ஆலயத்திற்கு பௌர்ணமி அன்று சென்று , குரு ஹோரை வரும் நேரத்தில் - அங்கு நவ கிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு - மஞ்சள் நிற வஸ்திர ஸ்தானம் செய்யவும். குரு பார்க்க கோடி நன்மை உண்டே. திருமண மட்டும் அல்ல, உங்கள் எந்த ஒரு வேண்டுதலும் பலிக்கும். இதை ஐந்து பௌர்ணமிக்கு தொடர்ந்து செய்ய வேண்டும். திருமணம் கண்டிப்பாக நடைபெறும்.

5 ) லட்சுமி நரசிம்மர் வழிபாடு : பானகம் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நீர், வெல்லம், எலுமிச்சை சாறு, ஏலக்காய் கலந்த கலவை. பானகம் நிவேதனம் செய்து - பிரதோஷ தினத்தன்று , பிரதோஷ வேளையில் - ஸ்ரீ நரசிம்மரை வணங்கி வர, 21 பிரதோஷ காலத்துக்குள் எப்பேர்ப்பட்ட திருமணத் தடையும், தகர்ந்து - கருத்தொருமிக்க வாழ்க்கைத்துணை கண்டிப்பாக கிட்டும்.

6 )  சென்னைக்கு அருகில் இருக்கும் அன்பர்கள் - மாங்காடு சென்று அம்மனை வழிபட , அற்புதமான பலன்கள் கிடைக்கும். திருமணத் தடை, கணவன் - மனைவி பிரச்னை இருப்பவர்கள் - செவ்வாய் / வெள்ளி அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில் , ஏதாவது ஒரு நாள் - தொடர்ந்து ஆறு வாரங்கள் செல்ல வேண்டும். வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுத்தால் தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமை செல்ல வேண்டும். தொழிலில் நல்ல முன்னேற்றம் வேண்டுபவர்கள், நல்ல வேலை கிடைக்க வேண்டும் என விரும்புபவர்கள் செவ்வாய்க் கிழமை மட்டும் தொடர்ந்து ஆறு வாரங்கள் செல்ல வேண்டும்.

முதல் வாரம் செல்லும்பொழுது - வெற்றிலை, பழம், பாக்கு, தேங்காய், பூ , இரண்டு எலுமிச்சை பழங்கள் எடுத்துச் செல்ல வேண்டும். பூஜை முடிந்தவுடன், அர்ச்சகர் இரண்டு பழங்களில் ஒன்றை எடுத்து அம்மன் பாதத்தில் சமர்ப்பித்து, இன்னொன்றை உங்கள் கையில் தருவார். இந்த பழத்தை வீட்டில் வைத்து பூஜித்தல் நல்லது. இரண்டாம் வாரம் செல்லும்போது - பழைய எலுமிச்சைப் பழத்துடன் - புதிதாக இரண்டு எலுமிச்சை பழங்கள் மட்டும் எடுத்துச் செல்லவும். பூ, பழம், தேங்காய் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. அர்ச்சகர் - எலுமிச்சை கனியை மட்டும் மாற்றிக் கொடுப்பார்.

ஆறாவது வாரம் செல்லும்போது - திரும்பவும் முதல் வாரத்தில் எடுத்துச் சென்றது போல - பழம், தேங்காய், வெற்றிலை எல்லாம் கொண்டு செல்லவும். ஆறாவது வார, இறுதி பூஜையில் மட்டும் எலுமிச்சை கனியை அர்ச்சகர் திருப்பித் தர மாட்டார். இந்த இறுதி வாரத்தில் மட்டும் - ஒரு லிட்டர் பசும்பாலை நன்றாக காய்ச்சி, அந்த பாலில் - கற்கண்டு, ஏலம், தேன், பச்சை கற்பூரம் எல்லாம் சேர்த்து எடுத்துச் செல்லவும். அர்ச்சகர் , இந்த பாலை அம்மனுக்கு நிவேதனம் செய்து உங்களிடம் கொடுப்பார். அவற்றில் சிறிதளவு நீங்கள் அருந்தி விட்டு , பின் அங்கு இருக்கும் மற்ற பக்தர்களுக்கு அந்த பிரசாத பால் விநியோகம் செய்யவும்.
இந்த ஆறு வார பூஜையை தடையின்றி முடிக்க , நீங்கள் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும்.

ஒருமுறை பலன் கண்டவர்கள், திரும்ப திரும்ப தங்கள் காரிய சித்திக்காக செவ்வாய்க் கிழமைகளில் இங்கு வருவதே இதற்க்கு சாட்சி. நான் சொல்ல வருவது , நேர்மையான முறையில் உழைத்து, தொழில் துறையில் கொடி கட்டிப் பறக்கும் , திறமையான கோடீஸ்வரர்களை. சென்னையில் வசிக்காத அன்பர்கள், இதே முறையை உங்கள் அருகில் இருக்கும், பிரசித்திப் பெற்ற அம்மன் ஆலயங்களிலும் நடைமுறைப் படுத்தலாம். கண்டிப்பாக, நீங்கள் என்னிடம் இதன் பலன்களை ஒரு நாள் தெரிவிப்பீர்கள்.

இந்த பூஜையை கடமைக்குச் செய்யாமல் , முழு நம்பிக்கையோடு உள்ளன்புடன் செய்வது அவசியம். அம்மனின் கருணை பார்வையை நீங்கள் கண்கூடாக உணர முடியும்.

7) திருமணஞ்சேரி - கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயம். மன்மதனுக்கே சாப விமோசனம் கிடைத்த இடம். இந்த மண்ணை மிதித்தவுடனேயே, மன்மத பார்வை கிடைத்து தோஷம் நீங்கப் பெறுவதாக ஐதீகம். இங்கு உரிய பரிகார முறைகளை செய்வது நன்மை பயக்கும். இதைப் பற்றி, அநேகம் பேருக்குத் தெரிந்து இருப்பதால் நான் இந்த கட்டுரையில் , விரிவாக கூறப் போவதில்லை.

 8) காதல் தோல்வியால் மனமொடிந்து , விரக்தி நிலையில் இருப்பவர்கள் , திருமணமே வேண்டாம் என்று நொந்து போய் இருப்பார்கள். பெற்றவர்கள் அதைக்கண்டு நொந்து நூலாகி இருப்பர். சிலருக்கு திருமணம் நடந்தும், இல்லற சுகம் கிடைக்காமல் நோயாளியான வாழ்க்கைத் துணை இருக்க கூடும். இவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் : வெள்ளிகிழமை - காலை பத்தரை மணியில் இருந்து பன்னிரண்டு மணிக்குள் - துர்க்கை அம்மனுக்கு , எலுமிச்சை பழ மூடியில் - நல்லெண்ணெய் தீபமேற்றி , நவ கிரகங்களை வலம் வந்து வழிபட வேண்டும். பதினெட்டு வாரங்களுக்கு இந்த வழிபாட்டை செய்து வந்தால், நல்ல முன்னேற்றம் தென்படும்.

எந்த பரிகாரம் செய்வதாக இருந்தாலும், அசைவம் கண்டிப்பாக தவிர்க்கப் பட வேண்டும். அதெப்படி.. கொஞ்சம் கஷ்டம் சார் என்கிறீர்களா? அப்போ, நடப்பது தான் நடக்கும். நீங்கள் சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டே , கிடைப்பதில் மட்டும் திருப்தி அடைய கற்றுக் கொள்ள வேண்டியதுதான்.

சரி இப்படியே இன்னும் எழுதிக்கிட்டே போகலாம். பதிவின் நீளம் கருதி, இங்கே நிறுத்திக் கொள்கிறேன். வர விருக்கும் பதிவுகளில் இன்னும் சுவாரஸ்யமாக அலசுவோம். குழந்தை பாக்கியம், கடன் பிரச்னை, உத்தியோகம் சிறப்பாக அமைய என்று நமது வாழ்க்கையில் இருக்கும் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு. மனமிருந்தால் மார்க்கம் உண்டு. நம் ஒவ்வொரு மேம்பாட்டுக்கும் , உரிய வழிபாடு செய்வது மனத்தை நம் வசப்படுத்த உதவும். எல்லா தவறுக்கும் பரிகாரம் இருக்கிறதே என்று - தப்பு செய்து கொண்டே போனால், பொளேர் என்று அடி விழும். அதனால், நடந்தவை நடந்ததாகவே இருக்கட்டும். நடப்பவை இன்னும் நலமாக, நம் எண்ணங்கள் இனிதே நிறைவேற அவனை பிரார்த்திப்போம். அவனன்றி நம்மை காக்க யார் உளார்?

மீண்டும் சிந்திப்போம்... 

32 comments:

நந்தவனம் said...

miga arumaiyana pathivu ivalavu deep informations nan engaeyum parthathum illai padithathum illai mikka nandri nandri risyasirungar sir

Gokul said...

Wonderful Work & Good information sharing Sir.. pls Keep doing..

Anonymous said...

சார் கொஞ்சம் லேட்டா பதிவு போட்டாலும் லேட்டஸ்ட போட்டு கலக்குறீங்க சார் ...இந்த பதிவு எனக்காக போட்ட பதிவு மாதிரி இருக்கு...நான் மனசு வெறுத்து இருந்தேன் இந்த பதிவு படிச்ச உடன் மனசு கொஞ்சம் ஆறுதல் அடைந்த மாதரி இருக்கு...மனதை மயில் இறகு கொண்டு வர்டுன மாதரி சுகமா இருக்கு...கரண்ட் கட் ஆகி ஒரு இருட்டு அறையில் இருக்கும் பொழுது ஒரு மெழுகுவத்தி பத்த வெச்சா அப்பாடானு ஒரு சிறு மகிழ்ச்சி ஏற்படுமே அந்த மாதரி இருக்கு சார்...நல்ல மண வாழ்க்கை அமைவது அவரவரின் பூர்வ ஜென்ம பலாபலன், கொடுப்பினை என்று ஜாதகம் கூறினாலும், விதியையே மாற்றும் சக்தி இறைவழிபாட்டிற்கு எப்போதுமே உண்டு. சரியாய் சொன்னிர்கள் சார்....ஜாதகப் பொருத்தம் பார்ப்பதையும் விட - மண வாழ்வுக்கு முக்கியமான விஷயம் - தகுதி. ஒவ்வொருவரும் குடும்பம் நடத்த தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது கல்வியோ, ஞானமோ - பொருளாதாரமோ , நற்பண்புகளோ , தீய பழக்கங்கள் இல்லாமல் இருப்பது ஆஹா அருமை அருமை...ஐயா ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை...ஆனால் ஜோதிடர்கள் பொய்யர்கள்...இவர்கள் பொலப்பு நடத்த மற்றவர்கள் வாழ்கையில் விளையாடுகிறார்கள் ...எப்பொழுது சென்றாலும் கட்டதுரைக்கு கட்டம் சரி இல்ல ஒரு பரிகாரம் போடவும் என்கிறார்கள்...ஹ்ம்ம்ம் இவர்களை நம்பி போவதை விட நீங்க சொன்ன மாதிரி, இறைவா நான் உன்னை சரண் அடைந்து விட்டேன் நல்லதோ ,கெட்டதோ எல்லாம் உன் சித்தம் என்று போவது மேல் .....
நன்றி,
ஜெயசுந்தரம்...

Anonymous said...

Everyday visiting your site for your posts. Meaningful information. God bless you with immense happiness

Anonymous said...

Hi rishi,
i am malathi from Bangalore. Daily I check my mail for world is not enough!! what u said is true only disappointment. today happy to see your article.
keep going..
enjoy with family and kid
sometime concentrate this site also

god bless you
malathi

geethalakshmisuresh said...

really its very good parigaram and also easy to do let me thankyou so much and try to write more god bless geethalakshmisuresh

PALANI said...

thanks... waiting for next posts

Elavarasu said...

miga neenda idaiveliyil vantha pathivu,mikavum arumai,iravu vegu neram aanalum mail check seithu ematramay mitcham eni virayvil pathividavum mikka nantrikal

Elavarasu said...

sir,ippa kooda 11 peru onlinela irrukangaley athuthan sir intha pathivoda vetri

Senthil IITM said...

Hello sir, good morning. I have some questions and for them I am not able find answers
(I)Presence of God is true? and if he is there, he is a kind person?
(ii)

யவனிகை said...

//இரண்டு கண், இரண்டு காது, இரண்டு கை, இரண்டு கால் என்று இரண்டு இரண்டாக நமக்கு படைத்த இறைவன் - நமது உயிரையே இயக்கும் இதயத்தை மட்டும் ஏன் ஒன்றாக படைத்து விட்டான்....? தெரியுமா ..? ஒவ்வொரு மனிதனுக்கும் பொருத்தமான இன்னொரு இதயத்தை தேர்ந்தெடுத்து - இணைத்துக் கொள்ளத்தான். (அடேங்கப்பா.. ரூம் போட்டு யோசிக்கிறதுங்கிறது இதைத்தானோ? ) //
அட, அட,,,, கலகிட்டேள்,,, போங்கோ,,,,
திருப்பரங்குன்றம் படங்கள் மிக அருமை. சுப்ரமணியசாமி, தெய்வயானை திருமணக்கோலம் பதிவிற்கு மிகவும் பொருத்தம் (அய், கண்டுபுடுச்சிட்டோம்ல )
பதிவு as usual ரொம்ப நல்லா இருக்குணா,
ஓம் க்ரியா பாபாஜி நம ஓம் ஓம் நமச்சிவாய

Anonymous said...

ஜாதகப் பொருத்தம் பார்ப்பதையும் விட - மண வாழ்வுக்கு முக்கியமான விஷயம் - தகுதி. ஒவ்வொருவரும் குடும்பம் நடத்த தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது கல்வியோ, ஞானமோ - பொருளாதாரமோ , நற்பண்புகளோ , தீய பழக்கங்கள் இல்லாமல் இருப்பது ஆஹா அருமை

karthik said...

puthiya pathivirgu miga nandri, anpana kovathirugu ippadi oru nalla
payanulla pathivau meendum oru nandri, ungalai thitiyatharu oru sorry, one week oru thadavai puthiya pathivu varavendum anbaga kettukkolgiren.

karthi

arul said...

thanks for sharing new remedies

Madeshwaran said...

Really Hats of to U Sir...
For Giving all the Good Information for the People....
Information is Wealth.....
But Giving Correct information and Helping people in their worst and Bad time is a Great Job...
Really God Will bless U....I Will Pray for You....

Nanjil Kannan said...

Hi Rishi anna ,

Vanakkam , pala naal piragu Rishi Back to Form agi irukeenga ( En pechayum mathichu keteengalae !!!) .. a great Start anna .. (Offc trainingla irukkurathaala tamilula typa mudiyala.. Mannikavum ) Anna sonna matahiriyae ella postum ini poduveenga (podanumnu ) vendi kettukuren .. a Real great post anna .. Keep Rocking as usual..


Surely ennoda korikkayai pariseelanai panni pathil poduveenganu ethir paarkiren ..

nandri again ...

Endrendrum Ungal Thambi

Kannan

MP@HOSUR said...

MP,HOSUR.
UNGAL SITE VANTHU PORAVANKALUKKUM [NANUM]UNKALUKKUM YETHO POORVA JENMA THODARBU IRUKKUNNU NAMBUKIREN,YELLORUDAYA VAZHVILUM NAMBIKAI VITHAIPATHAYUM, NERIMURAIPADUTHUVATHAIYUM MANAMARA NANDRI KOORI PARATTUKIREN,NANDRI

Rameshkumar Thangaraj said...

Ayya ennakku eppo soluvinga? I already sent my DOB, Place,Time.
I wish you

Warms Regards
RTRKARUR
rtrkarur@gmail.com

SIVANADIMAI VELUSAMI said...

OHM NAMASIVAAYA
DINDUGUL THADIKKOMBU SRI SOUNDRARAJA PERUMAAL AALAYATHIL RATHI MANMATHA POOJA SEITHAAL MARRIAGE QUICK KA NADAKKUM. ENNUDAIYA OHM NAMASIVAAYA NAMALIGITHA JABAM PADIVAM PATRI VELIYITTAMAIKKU NANDRI.RUDRATCHAM THEVAIPPADUVORKU FREE OF COST ANUPPI VAIKKIROM,ETHAIYUM VELIYITTU MAKKAL SIVANARUL PERA UTHAVUNGAL.THANK YOU.THIRUCHITRAMBALAM.SMS YOUR ADDRESS TO9965533644 FOR RUDRATHCHAM

Sunish said...

Dear Rishi Sir,

Countless people will benefit from this parigaaram. May GOD gives you all the 16 wealth for your deed.

Thanks,
Sunish

KALA KANNAN said...

Thx Rishiji.
Everyday i was visiting this site, eventhough was busy with my son's trip to US.

With divine blessings he left for US and ur article appeared.

Its a tonic to read that with strong faith and divine blessings ur bad karmas can be erased and ofcourse u should stop doing bad things.

Om kriya babaji nama om
shashikala

Anonymous said...

அய்யா வணக்கம் ,

மிகவும் அருமையனா பதிவு. எனது சிறு சந்தேகத்தை தங்களிடம் தெளிவு படுத்தும்படி கேட்டு கொள்கிறேன். திருச்சி ஸ்ரீரங்கத்தில் சக்ரத்தால்வார் சன்னதி காலை ஏழு மணிக்கு தான் நடை திறக்கப்படும் , அதே போல் மதியம் பனிரெண்டு மணிக்கு நடை சாற்றப்படும். தாங்கள் சக்ரத்தால்வாரை தரிசனம் செய்துவிட்டு பிறகு தாயாரையும் ரங்கநாதரையும் தரிசிக்க சொல்லி இருந்தீர்கள். மேலும் ஸ்ரீரங்கத்தில் எபோழுதும் கூட்டம் அதிகமாகவே இருக்கும் என்பது தாங்கள் அறிந்ததே, அப்படி இருக்க ஒரு மணி நேரத்திற்குள் தாயாரையும் ,ரங்கநாதரையும் தரிசனம் செய்வது சற்று கடினம். இதற்கு வேறு வழி ஏதேனும் இருந்தால் அதையும் நம் வாசகர்களுக்கு தெரிவிக்கவும்.

தங்களின் ஆன்மீக பணிக்கு என்னுடைய நன்றிகள் .

Rishi said...

சார், உங்கள் பெயரைக் குறிப்பிடவில்லை. மிக அருமையான கேள்வியைக் கேட்டு இருக்கிறீர்கள். இதைப் போன்ற பெரிய ஆலயங்களில் , விசேஷ நாட்கள் என்று இல்லை. சாதாரண நாளிலேயே கூட்டம் அதிகம் இருக்கும். ஒரு மணி நேர இடைவெளியில் , நான் சொன்ன முறைப்படி வழிபடுவது சற்று சிரமம் தான். இந்த ஒரு மணி நேரத்தில் ஆலயத்தில் இருந்தாலே போதும். மிக அற்புதமான பலன்கள் கிடைக்கும். இந்த குறிப்பிட்ட நேரத்தில் வரிசைக் கிராமமாக பண்ணுவது சிரமம் எனினும், அரங்கனை நினைத்தபடி, மனதுக்குள் உருகி பிரார்த்தனை செய்தபடி, ஆலயத்தில் இருந்தாலே போதும் என்பது என் கருத்து. கருத்துக்கள் பரிமாறிக் கொண்ட அனைவருக்கும், உங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

Madeshwaran said...

Hi Sir..

Need one Clarification for you...
Can u give the Details of the Trees for all the Stars....
Bcz it will help many people like me who doesn't Know the tree for their Star...

Anonymous said...

Rishi sir,

என்னுடைய சந்தேகத்தை தெளிவுபடுத்தியதற்கு மிக்க நன்றி. மன்னிக்கவும் என்னுடைய பெயரை குறுப்பிட தவறிவிட்டேன்.

with regards,
Priyatharsini.

Anonymous said...

THANKS RISHIJI,
USEFULE INFORMATION TO LOT OF PARENTS.
THANKS
GREAT JOB.

BALU.AV.
SALEM

Jeya said...

hello sir,
i am daily visiting your webpage also other aanmeega sites.
your article make good openion about u compare to others.i going to try to say more commenets later.

thanking you

god blessu & our friends

Suresh kumar.k said...

Nanbar Rishi avargaluku,
ungalin valai thalathirku pudhiyavan, anaithum arumai, thirumana virunthai irukirathu..... Jodhidathil miga aarvam ullavan Naan.... thangaling Johida soochumangal mutru petruvittatha enna? antha thalaipoadu 21 m pathipirku piraghu kaanavillaiyae.... edir paarkiraen ungalin vazhi kaatudhalai.....
K.Sureshkumar
Chennai - India

Jeya said...

hello rishi sir,

veey good useful comments posted in your sites. i am fan of you. i expect more from you.

Aravindhan said...

யாகத்தில் அம்மன் நடனமாடிய அதிசயம் ; மாவிலிங்கை படைவெட்டி கோவிலில் பரபரப்பு

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=539900

RAMESH V said...

Thank you sir, I am waiting for குழந்தை பாக்கியம் session.

இராஜராஜேஸ்வரி said...

நடப்பவை இன்னும் நலமாக, நம் எண்ணங்கள் இனிதே நிறைவேற அவனை பிரார்த்திப்போம்.

சிறப்பான பகிர்வு ..

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com