Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

நிஜமாகவே வாழ்க்கை என்றால் என்ன..?

| Jul 23, 2012
நமது வாசகர்களைப் பற்றி, எனக்கு எப்போதுமே உயர்வான எண்ணம் உண்டு. இணையம் என்னும் கடலில், கெட்டுப் போக கோடிக்கணக்கில் விஷயங்கள் இருந்தாலும், முத்துக்குளிப்பதற்கு சமமாக நமது தளம் போல  நல்ல நல்ல தளங்களை மட்டுமே பார்வையிடும் உயரிய கொள்கை உள்ளவர்கள். உங்களிடம் கேட்டால், ஒரு கேள்விக்கு விடை கிடைக்கும் என நினைக்கிறேன்...  ஒரு சுவாரஸ்யமான கலந்துரையாடல் , உங்கள் கருத்துக்களாக பின்னூட்டங்களில் வெளிப்படுத்துவீர்கள் என நினைக்கிறேன்.

கேள்வி இதுதான்..!

நிஜமாகவே வாழ்க்கை என்பது என்ன?

உயிர் உடலுக்குள் தங்கி இருக்கும் இந்த ஜென்ம வாழ்க்கையில் - எத்தனையோ எண்ணங்கள் - வாழ்க்கையைப் பற்றி நம் ஒவ்வொருவருக்கும் ஒரு அபிப்பிராயம் இருக்கிறது. வாழ்க்கை ஓட்டத்தில் - வெறும் நினைவுகள் மட்டுமே ஒவ்வொருவருக்கும் எஞ்சி இருக்கிறது. அவை, நல்லதோ - கெட்டதோ..... வெறுமனே எண்ணங்கள். நினைவுகள் மட்டுமே. 

நல்லதையே நினை. நல்லதையே செய் என்று ரொம்ப சிம்பிளாக வாழ்க்கையை வாழ்ந்துவிடலாம். ஆனால் என்ன செய்கிறோம்..? ஆடி , அடங்கி, கடைசியில், விழிகள் நிலை குத்தி , நம் சொந்த பந்தம் சுற்றி இருக்க, விடை பெறுகிறோம்... இடையில், நம்மால் முடிந்த அளவு , நம் வாழ்க்கை சிறக்க போராடுகிறோம், நம் குழந்தை, குடும்பம் அவர்களின் நல்லது கெட்டது, கூட வாழும் சொந்த பந்தம், சமூகத்தில் நல்ல பெயர் எடுப்பது - இப்படித் தான் ஒட்டு மொத்த வாழ்க்கையுமே அடங்கி இருக்கிறது என நினைக்கிறோம்... நிஜமாகவே இதுதான் வாழ்க்கையா..? இல்லை இதைத் தாண்டி ஏதோ ஒன்று இருக்க, அதை அறியாமலேயே நம் கூடு அடங்கிவிடுகிறதா...?

என்ன ஏது என்று தெரியாமலேயே,  வாழ்ந்து முடித்து விடும் அளவுக்கு - வாழ்க்கை ஒரு அற்ப விஷயமா? ஒரு ஜென்ம வாய்ப்பு அல்லவா? அதை நாம் உணருகிறோமா..?  கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் , நாம் இப்போது வாழும் வாழ்வில் - எத்தனை விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்...? அந்த விஷயங்கள் எல்லாம் நிஜமாகவே அந்த அளவுக்கு தகுதி வாய்ந்தவையா..? பக்குவம் என்ற பெயரில், இன்று அதி முக்கியமாக இருக்கும் விஷயமே, சில வருடம் கழித்து - ஒன்றும் இல்லாத விஷயமாக தோன்றுகிறதே...? எது நமக்கு நிரந்தரம்..?

எண்ணங்கள் - எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்று உணர முடிகிறதா? சின்ன சின்ன விஷயங்களில் நம் ஆற்றல் வீணடிக்கிறோமே..! எத்தனை கோபம், வெறுப்பு, காழ்ப்புணர்வு , அதை ஒட்டிய நம் நேர விரயம், சக்தி விரயம்..! அவசரம், பதட்டம்..! 

 (எங்க வீட்டு காலண்டர் கூட தெரிஞ்சு வைச்சிருக்கிற விஷயத்தைப் பாருங்க..: அவசரப்படுவது ஈக்களை அடிக்க மட்டுமே உதவும்..!)

மனத்திற்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயங்களுக்காக நம் முயற்சி, நம் அன்றாட வாழ்வில் மிக மிக குறைவே...! ஏன் இப்படி? இப்படியே தான் இருக்கப் போகிறோமா..?

உங்கள் கருத்து என்ன கொஞ்சம் சொல்லுங்க நண்பர்களே...! 

யோசித்து , உங்கள் கருத்துக்களை அனுப்புங்கள்..! ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்... என்னுடன், நம் சக வாசக நண்பர்களும்! 
  ==============================================================

நான் சென்ற பதிவில் குறிப்பிட்டபடி, எழுதிக் கொண்டு இருக்கும் கட்டுரை இன்னும்  முழுமையாக நிறைவடையவில்லை. அனேகமாக நாளை முடிந்துவிடும் என நினைக்கிறேன். அதே நேரத்தில், தினமும் நமது தளத்தை பார்வையிடும் நமது வழக்கமான வாசகர்களுக்காக இந்த கட்டுரை. தினமலர் ஆன்மிகம் பகுதியில் வெளியானது, நம் வாசகர்களும் தெரிந்து கொள்ளும் விதத்தில் இங்கு பகிர்ந்து கொண்டுள்ளேன். புதன்கிழமை, நமது  ஸ்பெஷல் கட்டுரை வரும் வரை, இந்த பதிவை பார்வையிட்டு உங்கள் எண்ண ஓட்டத்தை பகிர்ந்துகொள்ளுங்கள்...

அறிந்தும் அறியாமலும் சில நேரங்களில் பிறர் மீது வீண் பழி சுமத்துவதற்கு நாம் காரணமாகி விடுகிறோம். பின்பு அதற்கு என்ன பிராயச்சித்தம் செய்யலாம் என்ற வருத்தம் அனைவருக்கும் இருக்கும். இதற்கு மகான் ஒருவர் எளிய வழி ஒன்றைக் கூறுகிறார்...

தலைசிறந்த மகான் ஒருவரிடம் வந்த ஒருவன், சுவாமி! நான் ஒருவர் மீது வீணாக பழி சுமத்திவிட்டேன். என் மனசாட்சி இப்போது உறுத்துகிறது. நான் செய்த தவறுக்கு ஏதாவது பிராயச்சித்தம் இருந்தால் கூறுங்கள் சுவாமி என்று கூறினான். அவனையே சிறிது நிமிடங்கள் உற்றுப் பார்த்த சுவாமி, ஒரு காகிதத்தை எடுத்து பல துண்டுகளாக கிழித்தார். அதை அவனிடம் கொடுத்து, நாளை காலை இது ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரது வீட்டு வாசலிலும் வைத்து விட்டு வா என்று கூறினார். அவ்வாறே செய்து விட்டு வந்தவன், இப்போது என் பாவம் தொலைந்திருக்கும் அல்லவா? என்று வினவினான். சிறிது நேரம் கழித்து, நீ இன்னொரு வேலை செய்! ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வைத்த காகித துண்டுகளை மீண்டும் எடுத்து வா என்று கூறினார்.

இதைக் கேட்டு திகைத்த அவன், என்ன சுவாமி கூறுகிறீர்கள் காற்றில் அவையெல்லாம் பறந்து போயிருக்குமே என்றான். மகனே! இப்படித்தான் ஒருவர் மீது சுமத்திய பழியும்; காகிதத்துண்டு போல் உன் வாயிலிருந்து வந்த வார்த்தையும் திரும்ப வராது. அதற்காக கவலைப்படாதே! நீ மனப்பூர்வமாக வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கேள். அவர் எல்லையற்ற கருணை கொண்டவர். நீ செய்த பாவத்தையும் அவர் பறந்தோடச் செய்வார். எனவே செய்த தவறுக்கு மனப்பூர்வமாக வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

நிஜமாகவே ஆன்மீகம் என்றால் என்ன..? 

ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதி அணிந்து கொண்டு, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மீகம்.

அடுத்ததாக, பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல்,   இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, எனக்கு உன்னை தவிர வேறு யாரும் தெரியாது, உன்னை தவிர வேறு யாரும் கிடையாது அனைத்தும் நீயாக இருக்கிறாய், இந்த உடலை நீயே வழிநடத்தி செல், என இறைவனிடம் சரணடைந்து விட்டு
நமது கடமைகளை மிகச்சரியானதாக செய்வது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.

நான் தினமும் நான்கு முறை குளிக்கிறேன். ஆறு முறை சுவாமி கும்பிடுகிறேன். ஆனால், இறைவன் என்னை கண்திறந்து பார்க்க மாட்டேன் என்கிறார், என்றெல்லாம் நிறைய பேர் குறைபட்டுக்கொள்கின்றனர். ஆனால், நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல், இது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.  நமது வலது கையில் செயல் திறமை உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி தானாகவே வந்து சேரும்.

இறைவனுக்கு நீங்கள் பிரசாதம் செய்து, படையலிட்டு, மிகப்பிரமாண்டமான பூஜை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அதை அவன் விரும்புவதும் இல்லை. அவன் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது தான் உண்மையான பக்தி. இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து, சதா சர்வ காலமும் அவனை நினைத்து, எந்த செயல் செய்தாலும், அது அவனால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து, அந்த செயலின் பலனை அவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே உச்சகட்ட ஆன்மீகம்.

ALL IS NOT GOD, BUT GOD IS ALL 

கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து, அதற்கான பலனை எதிர்பார்க்காமல், வாழ்ந்து வந்தால், மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
========================================================
 விரைவில் மீண்டும் சந்திக்கிறேன்...!

47 comments:

Anonymous said...

நிஜமாகவே வாழ்க்கை என்பது என்ன ?
கேள்வி கேட்பது சுலபம் ஐயா? பதில் கொடுப்பதுதான் கஷ்டம்...வாழ்க்கை என்பது பல எதிர்பார்ப்புகள் இடையே ஏமாற்றங்களும் , இன்பங்களுக்கு இடையே துன்பமும்,மேலும் கோபம்,காமம்,கொரோதம், இது போன்று உணர்சிகள் நிறைந்தது வாழ்க்கை என்பது இந்த சிறுவனின் கருத்து...தவறு இருந்தால் மன்னிக்கவும் ......
Jayasundaram

GAYATHRI said...

Very inspirational

Arun said...

ஐயா! நமது வலைத்தளத்தில் பதிவுகள் மீண்டும் வருவதை கண்டு மனம் மகிழ்கிறது.
வாழ்கையை பற்றி நம் வாசகர்களிடம் கருத்து கேட்கிறீர்கள்.. நான் என் என்னத்தை சொல்கிறேன்...

வாழ்கையை பற்றி விளக்கும் அளவுக்கு நான் இன்னும் வாழ்ந்துவிடவும் இல்லை... கருத்து தெரிவிக்கும் அளவுக்கு எனக்கு அறிவோ, அனுபவமோ இல்லை...
ஆனால், நான் என் வாழ்கை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்றேன் என்பதை பகிர்ந்து கொள்கிறேன்.. தவறு இருந்தால் திருத்தவும்...

1. என்னால் எந்த உயிருக்கும் தீமை நடந்துவிட கூடாது.
2. நான் சாகும் பொழுது எனக்கு யார் என்றே தெரியாத ஒரு நான்கு பேராவது என் மரண செய்தி கேட்டு கண்ணீர் விட வேண்டும். அதற்காக நான் இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் என் வாழ்நாளுக்குள் எதாவது நன்மை செய்ய வேண்டும்.

Shanthi said...

Epidi Sir!! Co-incidence than. neenga pesrathu naa pesra mariyae iruku.

Enaku kashtama irukum pothellam unga site ku adikadi varuven. manasuku aruthala irukum. Ipo daily i am visiting ur site.

harikrishnan said...

Hi Rishi,
Nice question. I believe buddha did not answer this question immediately after getting enlightment. He took his time to transform his experience to preaching(sharing knowledge) because he did want to dilute the meaning of his learning by explaining in sentence. you are asking this question over long time in years in this blog?.
Please give choice to answer

கோடியில் ஒருவன் said...

நீண்ட நாட்களுக்கு பிறகு "பதிவு எழுதா விரத"த்தை முடித்த ஆசியருக்கு நன்றி. இனி அடுத்தடுத்து, பட்டையை கிளப்பும் பதிவுகளை எதிர்பார்க்கலாம்.

'உங்கள் வழிச் செலவு தான் எங்கள் வாழ்க்கைப் பயணத்துக்கு' - என்று ஒரு வாசகத்தை சென்னை ஆட்டோ ஒன்றில் பார்த்தேன். அது போல, உங்கள் கடுமையான பணிகளுக்கிடையே போகிற போக்கில் நீங்கள போடும் பதிவுகள் எத்தனையோ பேரின் வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.

நன்றி!

சரி... "வாழ்க்கை" என்றால் என்ன?

‘ஆனை துரப்ப அரவு உறை ஆழ்குழி
நாநவிர் பற்றுபு நாளும் ஒருவன் ஓர்
தேனின் அழிதுளி நக்கும் திறத்தது
மானுடன் இன்பம் மதித்தனை கொள்நீ‘


என்ற ஒரு சங்க காலப் பாடல் மனித வாழ்க்கையை தெளிவாக விளக்குகிறது.

காட்டு வழியே செல்லவேண்டிய நிர்பந்தம் உள்ள ஒருவனை யானை துரத்துகிறது. தப்பிக்க அங்குமிங்கும் ஓடுகின்றான். கடைசீயில் பாழுங்கிணறு ஒன்றை பார்க்கிறான். யானையிடம் மிதிபட்டு சாவதற்கு பதில் பாழுங்கிணறே மேல் என்று கருதி அதில் இறங்கித் தப்ப முயலுகிறான். அந்தோ பரிதாபம்.... கீழே பாம்புகள் படமெடுத்து ஆடுகின்றன.

பக்கவாட்டில் வளர்ந்துள்ள புற்கற்றைகளைப் பற்றி, பாழ்குழியில் விழாமல் அந்தரத்தில் தொங்குகிறான். மேலே போனால் ஒன்று யானையிடம் மிதிபட்டு சாகலாம். அன்றேல் அரவம் கொத்தி இறக்கலாம். எது நல்ல சாய்ஸ்?

இதில் கொடுமை என்னவென்றால், பிடித்து தொங்கும் அந்த புற்கட்டுக்களையும் மரத்தின் துளையில் உள்ள எலிகள் கத்திரிக்க முற்படுகின்றன என்பது தான். இந்நிலையில் பாழ்க்குழியின் பக்கத்தில் நிற்கும் மரத்தில் தொங்கும் தேன் கூட்டில் இருந்து துளித் துளியாய் தேன் சொட்டி இவன் மூக்கின் அருகே விழுகிறது. அனைத்தையும் ஒரு கணம் மறந்து அந்த தேன்துளியை நக்க முயல்வது போலத் தான் மனித வாழ்க்கை என்பது இதன் பொருள்.

தலை போகிற பிரச்னைகள் எத்தனையோ சூழ்ந்திருக்க, சராசரி மனிதனின் வாழ்க்கை இப்படித்தான் போய்கிட்டுக்கு அன்பர்களே!

திண்டுக்கல் தனபாலன் said...

சிந்திக்க வைக்கும் பதிவு...
பல இடங்களில் உங்கள் சிந்தனைகள் எனக்குள் எழுந்தவைகளையும் நினைத்து ஆச்சரியப்படுகிறேன்.
தங்களின் ஓய்வு நேரத்தில் எனது பதிவை படித்து பார்க்க அழைக்கிறேன்... நன்றி... லிங்க் கீழே :

1. தெய்வம் இருப்பது எங்கே ?

2. மனிதனின் பிரச்சனைக்கு காரணமான குணம் எது ?

suresh said...

ஐயா,
நிஜமாகவே வாழ்க்கை என்பது என்ன என்று எனக்கு தெரியாது. அதனை புரிந்துகொள்ள நான் முயற்சி செய்கிறேன். நாம் உண்பது மண் தான் என்று நன்றாக புரிந்துகொண்டேன். ஒரு செடித்தொட்டியில் குறிபிட்ட அளவு மண் எடுத்து அதில் ஒரு செடிக்கான விதை போட்டு நீர் விட்டு வளர்த்தால் அந்த தொட்டி நிறைய வேர் வந்துவிடும். பின்பு அந்த செடியை புடுங்கி எடுத்து மீதி மண் எடுத்து பார்த்தால் அந்த செடியால் உறிந்து எடுக்க முடியாத சில கற்கள்தான் மீதி இருக்கும். மண் தான் செடியானது என்பது நான் அனுபவரீதியாக நான் கண்டு புரிந்துகொண்டேன். அதே போல் நான் இந்த உடலை வளர்க்கவில்லை அதுவாகவே வளர்கிறது என்றும் புரிந்துகொண்டேன். ஆனால் நிஜமாகவே வாழ்க்கை என்பது என்ன என்று தெரியவில்லை. இந்த பிறவியில் அதிக கஷ்டங்கள் இருந்தாலும் அதிக சுதந்திரம் இருக்கிறது. இது எனக்கு கொடுத்து வைத்த பிறவி. நான் பிறந்தது வாழ்வது குமரி மாவட்டம். இந்த பிறவியில் ஆன்மிகம் பத்தி அறிய முடிகிறது. நான் இலங்கயில் முள் வேலியில் பிறந்திருந்தால் ஆன்மிகம் பத்தி அறிய முடியுமா அல்லது சுதந்திரம் தான் இருக்குமா. கோயம்பத்தூரில் இஷா தியானலிங்கம் கோவில் இருக்கிறது அந்த கோவிலில் ஒருமுறை சென்றுவிட்டால் ஆன்மீக விதை நம் உயிரில் கலந்துவிடும் அதன் பிறகு அதுவே நம் வாழ்க்கையை ஆன்மீக பாதையில் கொண்டு செல்லும். ஆகவே மனிதனாக பிறந்த அனைவரும் கோயம்பத்தூரில் இஷா தியானலிங்கம் கோவில் செல்வது நல்லது. நம் வாழ்வு எப்போது முடியும் என்று தெரியாது.அடுத்த வருடம் போகலாம் என்று தள்ளி போய்கொண்டே இருந்தால் நம் வாழ்வு முடிந்துவிடும். அடுத்த பிறவியில் கோயம்பத்தூரில் இஷா தியானலிங்கம் கோவில் பத்தி தெரியாமல் போய்விடும்.அதனால் இந்த பிறவியை பயன்படுத்துவது நல்லது.
நன்றி.

VIJAYAKUMAR.R said...

இந்த வாழ்கையில் , நாம் நமது விருப்பபடி வாழ்வதை விட , மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று பயந்து விட்டு கொடுத்து செய்கின்ற செயல்கள் அதிகம் . மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்தே பாதி நேரம் விரயமாகிறது .

Gnanam Sekar said...

கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார்.என்ற பழமொழி எவ்வளவு உன்னதனமான உண்மை. நன்றி அய்யா

Rishi said...

இங்கு தெரிவித்த பின்னூட்டங்கள் தவிர்த்து, மெயிலிலும் கருத்துக்கள் தெரிவித்துள்ள நண்பர்கள் அனைவருக்கும் , என் மனமார்ந்த நன்றி. ஒவ்வொரு கருத்தும், கலக்கலோ கலக்கல்... நண்பர் கோடியில் ஒருவன் வழக்கம்போல் கலக்கி இருக்கிறார். சுரேஷ் சார் , உங்கள் கருத்தும் வெகு அருமை. மேலும், அருண் சார், ஜெயசுந்தரம் சார், காயத்ரி மேடம், சாந்தி மேடம், ஹரி சார், தனபாலன் சார், விஜயகுமார் சார், சேகர் சார் - எல்லோருக்கும் மிக்க நன்றி. இனிமேல் படிக்க விருக்கும் வாசகர்களிடம் இருந்தும், பல நல்ல கருத்துக்கள் வரும் என நம்புகிறேன்..... . அனேகமாக ஒரு சுவையான கட்டுரை எழுதும் அளவுக்கு, நம் சிந்தனையையும் வாசகர்கள் தூண்டி இருக்கிறார்கள்.. திரும்பவும் வருகிறேன்..

Anonymous said...

Ingu oruvar kurippitapadi matravargaludan compare seide vazhkayay veenadikkirom. Set a goal. Keep going without hurting others would be the best thing to lead a peaceful life in this Kali Yuga.-Krishnakumari

Anonymous said...

Enda oru Uyirkkum theemai seiyyamal, seiyya ninaikkaamal iruppadu sirandadhu - Malini KSwamy

Anonymous said...

ரிஷி சார் வணக்கம்
உங்களின் பதிவுக்காக காத்திருந்த கண்களில் அடியேனும் ஒருவன்...
"நிஜமாகவே வாழ்க்கை என்றால் என்ன..?"
இந்த கேள்வி எத்தனை லட்சம் பேருகிட்ட கேட்டாலும் அத்தனை லட்சம் பதில் உண்டு கேட்கும் பொழுது உள்ள சூழ்நிலையும் பதில் சொல்லுபவர்களின் மனநிலையை பொருத்து மாறுபடலாம். ஆனால் பெரும்பாலும் அவர்களின் இன்ப துன்ப பகிர்வை தவிர வேறு பதில் கிடைப்பது அரிது என்று தான் நினைக்கிறன் சார்.
எனது பதில்...
இந்த "ஜீவ ஆத்துமா பரம் பொருளை அடையும் பயணம்"
நம் பரம்பொருள் இயற்கையாகவே நாம் புரிந்து கொள்ள பல தடையங்களை உருவாக்கி உள்ளார் என்று நினைக்கிறன் சார்.
அதில் ஒன்று அருவியை எடுத்துகாட்டாக எடுத்துக்கலாம் அருவி மலை உச்சியில் உருவாகும் மழைத்துளியில் மாசு இல்லை, அதன் பயணத்தில் அசுத்தம் அடைந்தாலும் மீண்டும் நீராவியாக பரிசுத்தம் அடைந்து விடுகிறது. நாமும் இப்படி தான் சுற்றி கொண்டுருகிறோம். இந்த பயணத்தை தொடங்கிவைத்த இறைவனின் பாதம் பற்றினால் துக்கிவிடுவான் என்பது சத்தியமே. பழனிமணி
திருச்சி

யவனிகை said...

எந்த கேள்வியின் பதிலுக்காக நாம் இன்னும் தொடர்ந்து பிறப்பெடுத்துக் கொண்டிருக்கிறோமோ அந்த கேள்விக்கான பதிலை சொல்லச் சொல்லி அனாயாசமாக கேட்டுவிட்டீர்கள்,
ம்ம்ம், வாழ்க்கை என்றால் என்ன அல்லது எது வாழ்க்கை, வாழ்ந்து முடிந்துவிட்டாலே வாழ்க்கையா, அல்லது ஒரு நிறைவு பெற்றால்தான் வாழ்க்கையா,
எது நிறைவு, தேடுதலா, ஞானமா, அல்லது இறைவனை அடைவதா, அது சரி, எதை தேடுகிறோம் என்ற தெளிவும் பக்குவமுமே இல்லாதபோது எதை தேடுவது,
கேள்விகளின் முடிவிலாவது ஞானம் கிடைக்குமா, பதில் கிடைத்தால் நாமும் ரமணராகவோ, பரமஹம்சராகவோ உட்கார்ந்து விடுவோமோ, கடவுளை அடைவதுதான் வாழ்க்கையா, அப்படியென்றால் கடவுளாகவே மாறிய தெரசா அன்னை போன்றவர்களை எதில் சேர்ப்பது,
மனது ஒரு பிரம்ம முடிச்சுடன் பிணைக்கப்பட்டு கேள்விகள் அதன் நீட்சிகளாகின்றன.
விடை தெரிந்தவர் எவரேனும் இருந்தால் சொல்லுங்கள், புத்தருக்கு போதி மரத்தடியில் கிடைத்த ஞானம் எனக்கு என்னறையில் கணிப்பொறியின் முன்னால் கிடைக்கட்டும்,
ஓம் க்ரியா பாபாஜி நம ஓம் ஓம் நமச்சிவாய
(மற்றபடி,ரிஷி அண்ணா, இந்த குழந்தைகளையும் ஞாபகம் வைத்து அவ்வப்போது வந்து கவனித்துவிட்டு போவதற்கு மிக்க நன்றி, கோடியில் ஒருவன் சார், கலக்கிடீங்க)

யவனிகை said...

///இந்த பிறவியில் அதிக கஷ்டங்கள் இருந்தாலும் அதிக சுதந்திரம் இருக்கிறது. இது எனக்கு கொடுத்து வைத்த பிறவி. நான் பிறந்தது வாழ்வது குமரி மாவட்டம். இந்த பிறவியில் ஆன்மிகம் பத்தி அறிய முடிகிறது. நான் இலங்கயில் முள் வேலியில் பிறந்திருந்தால் ஆன்மிகம் பத்தி அறிய முடியுமா அல்லது சுதந்திரம் தான் இருக்குமா.///

சுரேஷ் சார், வெகு ஆத்மார்த்தமான கருத்துக்கள் சார், நம் பிறப்பின் முன் பின் தெரியாவிட்டாலும் மூவாசைகளையும் ஒழித்து முடிவினில் அவன் பாதம் அடைவதற்க்காகத்தானே இத்தனை பாடு, இடையிடையே நம்மால் பிறர் முகத்தில் தோன்றும் உண்மையான நகையும், நல்ல மனிதர்களின் நட்பும், வாழ்த்தும்தானே இன்னும் நம்மை உயிர்ப்புடன் வைக்கின்றன, தங்கள் வழிகாட்டலுக்கு நன்றி, கண்டிப்பாக ஈஷா த்யானலிங்கத்தை தரிசிக்க முயற்சிக்கிறோம்,

ஓம் க்ரியா பாபாஜி நம ஓம் ஓம் நமச்சிவாய

THEIVAM said...

intha kelvikku pathil sollum alavukku intha aathmavukku thaguthi illai

Munikrishna said...

நிஜமாகவே வாழ்க்கை என்பது என்ன?
வாழ்க்கை என்பது ஆத்மா எதொ ஒரு உடலில் இருந்து அதற்க்கு என வறையறைக்கப்பட்ட காலம் வரை புவூலகில் வாழ்வதுதான் வாழ்க்கை தான் வாழ்க்கை.உடல் கிடைப்பது ஆத்மா முற்பிறவியில் செய்த பலன்களின்படி கிடைகிறது.இந்த வாழ்க்கையில் தீமைகள் செய்யாமல், சுயநலம் இல்லாமல், நம்மால் முடிந்த பத்து பேருக்கு நல்லது செய்து புண்ணியம் செய்தால் அதுதான் வாழ்க்கை.இதுதான் அடியேனின் கருத்து. நான் இன்னும் ஆன்மீக குருவை தேடி போகவில்லை. எனக்கு ஆன்மீக குரு இருந்தால் மிகவும் சிறந்த கருத்தை கூறியிருப்பேனொ யென்னவொ.
முனிகிருஷ்ணன்.

Raaj said...

வாழ்க்கை என்பது , நாம் வாழ்வதற்கே வாழ்க்கை ஆனாலும் ! ,
என் சிற்றறிவுக்கு தெரிந்த வகையில் , நடப்பது எல்லாம் இறைவன் நாட்டம் , அவனன்றி அணுவும் அசையாது என்று பெரும்பாலான மதங்கள் சொல்கின்றன ,... ஆக அவனது ஏபாட்டின் படி நாம் வாழ்கிறோம் ....அவனது நாட்டப்படி செயல்படுகிறோம் ... இதில் நாங்களாகவே வாழ்வது எவ்வளவு தூரம் சாத்தியம் ??? அவ்வாறாயின் வாழ்க்கை என்பது சித்தர்கள் சொவது போல "நாம் எமது கதாபாத்திரங்களை சரியாக நடிக்கும் ஒரு மேடை இந்த உலகம் எமது கதாபாத்திரம் வந்து போகும் காலம் வாழ்க்கை என்று சொல்லத்தோன்றுகிறது .....

Anonymous said...

ஒவ்வரு பதில்களும் அருமை.. கோடியில் ஒருவன் சார், மற்றும் சுரேஷ் சார் ஆஹா அருமையான பதில்கள்....சிந்திக்க தூண்டிய சிறந்த பதில்கள்.....நான் கோவை மாவட்டத்தை சார்ந்தவன் இருப்பினும் இது நாள்வரை இஷா தியானலிங்கம் சென்றது இல்லை....கூடிய விரைவில் கண்டிப்பாக செல்லுவேன்....நன்றி...
jayasundaram

Anonymous said...

Life is something we should treasure. We should live a life so that we are liked by others and not being a burden or a hindrance to others.

கோடியில் ஒருவன் said...

எனது கருத்துக்கு பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் நன்றி!

பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல, ஏதோ ஆசிரியரின் உயர்ந்த எழுத்துக்களை படித்து படித்து நமது சிந்தனையையும் கொஞ்சம் கொஞ்சமாக பக்குவபடுத்தி வருகிறேன்.

மற்றபடி... வாழ்க்கை குறித்து திருக்குறளில் பல இடங்களில் மிக அருமையாக கூறப்பட்டுள்ளது. (ஐயனே சொன்ன பிறகு அப்பீல் உண்டா என்ன?)

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.
(376)

நமக்கு சொந்தமில்லாத பொருளை வருந்தி அழைத்தாலும் வாராது. நமக்கு சொந்தமான பொருளை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா.
(அது சரி எது நமக்கு சொந்தம்? அதை அவன் மட்டுமே அறிவான்!)

Rose Anu said...

Its Very interesting site

sugantha said...

sir,
vaazhkai enbathu inimel vazhkai nadatha pirakamal iruka iraivan tharum vaippu.intha vazhkayai iraivanai adayum muyarchiyil kazhitha nanru.sir, why don't u arrange a pilgrimage to important temples?please consider-----sugantha

கோடியில் ஒருவன் said...

புதன்கிழமை பதிவு போடுறதா சொன்னீங்களே எந்த புதன்கிழமைன்னு சொல்லலியே? ஒருவேளை ஆகஸ்ட் 22 வர்ற புதன்கிழமையோ? (இந்தக் குழந்தைகளையும் கொஞ்சம் கண்டுக்கோங்கண்ணா!)

suresh said...

ஐயா,
வணக்கம்.புதன் கிழமை முதல் பதிவுவரும் என்று எதிர் பார்த்தேன் வரவில்லை. இனி தாங்கள் இந்த நாள் அடுத்த பதிவு வரும் என்று சொல்லாதீர்கள். தினமும் கிடைக்கும் நேரம் எல்லாம் பதிவை எதிர்பார்த்து ஏமாந்து போகிறேன்.
2012 வருடத்திற்கான மைத்ராமுகூர்த்தம் தெரிவிக்கவும்

Chitti said...

ஆசிரியர் மீது எனக்குள்ள கோபம் நான் இந்த வலைதளத்தை வாரத்திற்கு ஒரு முறை இந்த தளத்திற்கு வரலாம் என்று நினைக்க துண்டி விட்டது. பின்ன என்னங்க நல்ல பதிவுகள் போடுபவர், மாசத்திற்கு ஒன்று போட்டால் என்ன செய்வது????. (அதற்காக ஆசிரியரை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. வாரம் ஒரு பதிவாவது போட வேண்டும் என்பது என் விருப்பம்).

அதனால், இப்போது தான் பார்த்தேன். அதற்குள் ஒரு பதிவும், அதற்க்கு வாசகர் பலரின் அருமையான பதில்களும் வந்து விட்டன. சரி விஷயத்திற்கு வருவோம்,
என்னுடைய பதில்: வாழ்கையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் புரிந்து வைத்து உள்ளனர். சுகி. சிவம் அவர்கள் சொன்னதையே என்னுடைய பதிலாக சொல்கின்றேன்.
வாழ்க்கை - என்பது நமக்கு நடக்கும் செயல்களை பொருத்து அல்ல. நாம் அந்த செயல்களை எப்படி எடுத்து கொண்டு, எதிர்கொள்கிறோம் என்பது தான்.
Its not what happens to you, but how you react to it that matters.
எனவே, நண்பர் கோடியில் ஒருவன் போல் உலகில் பல நடந்தாலும், அவற்றை எல்லாம் பெரிதுபடுத்தாமல், நமக்கு உள்ளனவற்றை வைத்து வாழ்க்கையை ஒவ்வொரு கணமும் அனுபவித்து வாழ வேண்டும் (count your blessings instead of your troubles and live your life happily). இல்லையெனில், நாம் இருத்தல் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம் (மனித பிறவியில் மூன்று நிலை இருக்குங்க: பிழைத்தல், இருத்தல், வாழ்தல்).
So, Be happy yourself and make others happy ALWAYS!!! .
And also, We should not limit ourself to not to commit bad things but to extend to do good things as much as we can - like what Mr. Rishi is doing.
இப்படி ஒவ்வொருவரும் நம்மால் ஆன நல்லதை செய்து வந்தால், இந்த உலகமே சுபிச்சமாக இருக்கும்.

By,

**Chitti**

- Thoughts Becomes Things.

Chitti said...

குறிப்பு: இங்கு விளக்கமளித்த அனைவரின் பதில்களும் மிகவும் அருமை. ஜெயசுந்தரம், அருண், சுரேஷ், விஜயகுமார், கிருஷ்ணகுமாரி, பழனி மணி, யவனிகை பதில்களை நான் ரசித்தேன், சிந்தித்தேன். அனைவருக்கும் மிக்க நன்றி. ரிஷி அவர்களுக்கும் மிக்க நன்றி இந்த பதிவினை போட்டதற்கு.

Rishi said...

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். ஏங்க, எனக்கு மட்டும் ஆசையா இல்லை..... புதன்கிழமை போடுறதா இருந்த கட்டுரை, சில தவிர்க்க முடியாத சொந்த அலுவல்களால் நிறைவு பெறவில்லை. பதிவு ஒன்னு போட்டால் , சிலருக்காவது அது பயனுள்ளதாக இருக்கவேண்டும் இல்லையா..? அதுதான் கொஞ்சம் தாமதம். ஆனால், உங்களை காக்க வைக்க வேண்டும் என்கிற எண்ணம் நிச்சயம் இல்லை... உங்களின் மேலான ஆதரவுக்கு என்றும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்... கண்டிப்பாக நாளை ஒரு புது பதிவில் சந்திப்போம்...

Chitti said...

To Mr. Rishi,

sorry if my comment hurts you. I just mentioned it to put up more articles. In any case, if it hurts you, I apologize...

Rishi said...

சிட்டி சார்! கொஞ்சம் கூட எனக்கு வருத்தம் இல்லை. பதிவுகளை குறிப்பிட்ட இடைவெளியில் அளிக்க முடியவில்லை என்று எனக்குத் தான் லேசாக குற்ற உணர்ச்சி.
Absolutely no need for you to apologise. I take it purely in a positive sense only....
I thank you personally & all our readers for sending your valuable time by sendng comments....
I will surely try my best to reduce the time gap between articles.

Shanmugam Chandrasekaran said...

வாழ்க்கை என்ப‌து என்ன‌? ப‌லாயிர‌ம் வ‌ருடங்க‌ளாக‌ மானுட‌ம் தேடிக்கொண்டிருக்கும் ப‌தில்.வாழ்வை உணர்ந்த‌ ஞானிகள் பேசுவ‌தில்லை.ச‌ர‌ணாக‌தி அடைந்த‌ நிலையில் பேர‌ருள் கொண்ட‌ ம‌ஹான்க‌ளின் ம‌னஅலைக‌ளே வாழ்க்கை த‌த்துவ‌த்தை உணர்த்திய‌தாக‌,அனுப‌வ‌ம‌டைந்தவர்க‌ளின் க‌ருத்து.ம‌ஹாகுரு ப‌க‌வான் ஸ்ரீ ர‌ம‌ணமகரிஷி அவ‌ர்க‌ளின் க‌ருத்தான‌ "ஸ்ரீ ர‌ம‌ணவ‌ழி" நூலின் வ‌ழி அறிந்த‌ சில க‌ருத்துக்களை,என் அனுப‌வ‌ங்க‌ளோடு இங்கு ப‌கிர்ந்து கொள்கிறேன்.
நம்மை ஒருவ‌ர் பெய‌ரிட்டு அழைத்தால் நாம் திரும்பி பார்க்கிறோம்,உட‌லைத்தான் தான் அந்த‌ பெய‌ரிட்டு அழைக்கிறோம்.உட‌ல் இற‌ந்த‌தும் அந்த‌ பெய‌ரும் ம‌றைந்து விடுகிற‌து.இது என‌து பெய‌ர்,இது என‌து உட‌ல் ,இது என‌து பொருள்,இது என‌து உற‌வு என்கிறோம்.என‌து என்னும்பொழுது அது, ந‌ம‌து உட‌லுக்கு சொந்த‌மான‌ பொருளைக்குறிக்கிற‌து.ப‌ணம்,பொருள்,சொந்த‌ம்,ப‌ந்த‌ம் அனைத்தையும் இழக்கும் ஒரு நிலை வ‌ந்த‌ பிற‌கு, இனி நான் இழப்ப‌த‌ற்கு ஒன்றும் இல்லை என்ற நிலைக்கு த‌ள்ளப்ப‌டுகிறோம்.த‌ற்பொழுது இந்த உட‌லுக்கு, உலக‌ பொருட்க‌ள் ம‌ற்றும் ம‌னித‌ர்க‌ள் மீது எந்த‌வித‌ ப‌ற்றும் இல்லை,இந்த‌ நிலையில் நான் யார்?உட‌ல் ம‌ட்டும் தான் நானா?
மிகுந்த‌ க‌லைப்ப‌ட‌ந்த‌ நிலையில் நீண்ட‌ ஆழ்நிலைத்தூக்க‌ம் ஏற்ப‌டும்பொழுது,க‌ன‌வ‌ற்ற க‌ல‌ங்க‌ம‌ற்ற அந்த‌ தூக்க‌த்தின் பொழுது எந்த‌ ச‌ப்த‌மும் ந‌ம‌க்கு கேட்ப‌தில்லை,இடி இடித்தால் கூட‌ ந‌ம‌க்கு உறைப்ப‌தில்லை,ஒருவ‌ர் உசுப்பி அசைத்தாலும் நாம் உணர்வ‌தில்லை.இந்த‌ நிலையில் ந‌ம‌து பெய‌ரை அழைத்தாலும் நாம் எழுவ‌தில்லை.இப்பொழுது உட‌லையும்,உணர்வையும் இழந்த‌ ஒரு உன்ன‌த‌ நிலை ஏற்ப‌டுகிற‌து.இந்த‌ நிலையிலும் எஞ்சி இருக்கும் ஆன்ம‌ நிலை தான் அந்த‌ நான்.
இந்த‌ நானை உண‌ர்ந்த‌ வினாடியில், மின் காந்த‌ அலைக‌ளால் பேரின்ப‌க்க‌ட‌லில் உட‌லும் ம‌ன‌மும் மூழ்கிவிடும், இந்த‌ எல்லைய‌ற்ற இன்ப‌க்க‌ட‌லின் முன் உல‌க‌ சிற்றின்ப‌ங்க‌ள் அனைத்தும் பொடியாகி க‌ரைந்துவிடும்.பின்பு இந்த‌ சேற்றுக்கும்பி உட‌ம்பு ஒளி நிற‌ம்பி என் எல்லைய‌ற்ற அய்ய‌னின் ப‌ர வெளியில் சேர்ந்து க‌ரை சேரும்.
இந்த‌ அணுத்துக‌லுக்குள் ஒளிந்திருக்கும் நானைக்க‌ண்டு ஜென்ம‌ம் க‌ரைசேர‌ என‌து ப‌ர‌ம‌குரு இர‌ண்டு உபாய‌ங்க‌ள் சொல்லித்த‌ருகிறார்.
ஒன்று:எல்லைய‌ற்ற‌ அய்ய‌ன் மீது அன்புகொண்டு ச‌ர‌ணாக‌தி அடைந்து விடுவ‌து.
இர‌ண்டு:மேற்கூறிய‌ வ‌கையிலே உள்நோக்கி,ஆழ்நிலைப்ப‌டுத‌லில் ஈடுப‌ட்டு நான் யார் என்று உண‌ர்த‌ல்.
உண‌து எண்ண‌ங்களுக்கெல்லாம் அடித்தள‌ம் எது என்று க‌ண்டுபிடி,எங்கிருந்து அவை புற‌ப்ப‌டுகின்ற‌ன என்று உள்நோக்கு.நீ யார் என்று உண‌ர்ந்த‌ பின்ன‌ர் உன‌க்கு ஏதேனும் தேவைப்ப‌டுகிற‌தா என்று பார் என்கிறார் ப‌க‌வான்.
உட‌லைப் ப‌ட்டினி போட்டு,மிகுந்த‌ துன்ப‌த்திற்குள்ளாக்கி இறைவ‌னைத்தேடி த‌வ‌ம் இருப்ப‌வ‌ர்க‌ள் பேய் கூட்ட‌த்தின‌ர் எங்கிறார் மானுல‌த்திற்கு யோக‌ சாஸ்திர‌ம் அருளிய‌ மகரிஷி ப‌த‌ஞ்ச‌லி முனிவ‌ர்.
உட‌ல் என்ற புனித‌ ஆல‌ய‌த்தில்,ஆன்ம‌ வ‌டிவ‌த்தில் வ‌சிக்கிறான் இறைவ‌ன்.ஆல‌ய‌த்தை புனித‌ப்ப‌டுத்தி இறைவ‌ன் நிரந்த‌ர‌மாக‌ வ‌சிக்க‌ ஏற்புட‌ய‌தாக‌ வைப்ப‌து ந‌ம‌து பாதையை மிக‌ இல‌குவாக்கும்.
குடும்ப‌த்துட‌னும், ச‌மூக‌த்துட‌னும் சேர்ந்து இருந்து கொண்டே இரைவ‌னை அடைய‌லாம் என்று ந‌ம‌க்கு வாழ்ந்து காட்டிய‌ ம‌ஹான்க‌ள் பாபாஜி அவ‌ர்க‌ளின் பிர‌த‌ம‌ சீட‌ரான,‌ "லாகிரி ம‌ஹாசாய‌ர்"
அவர்க‌ளும் க‌ருணைக்க‌ட‌ல் அருப்பெரும் ஜோதி வ‌ள்ளல் பெருமான் அவர்க‌ளும்.
லாகிரி ம‌ஹாசாய‌ர் அவர்க‌ளுக்கும்,ப‌க‌வான் அவர்க‌ளுக்கும் இறைவ‌னிட‌ம் ஐக்கிய‌மாகும் முன் உட‌லில் புற்று நோய்க்கட்டி தோன்றி,ப‌க்த‌ர்க‌ளின் வேண்டுகோளிற்கிண‌ங்க‌ ப‌ல‌முறை அறுவை சிகிச்சை செய்ய‌ப்ப‌ட்ட‌து.அப்பொழுது ப‌க்த‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்கு ஏற்ப‌டுகிற இந்த‌ நோய்க்கு கார‌ண‌ம்
என்ன என்ற கேட்ட‌ன‌ர்.அத‌ற்கு அவ‌ர்க‌ள் சொன்ன ப‌தில்,உட‌ல் என்ற‌ இந்த‌ ச‌ட்டை க‌ழன்றுகொள்ள ஒரு கார‌ணம் வேண்டும் என்றும் அத‌னால் ஆன்மா என்றும் பாதிப்படைவ‌தில்லை
என்றும் கூறின‌ர்.
உல‌கிலுள்ள அனைத்து இன்ப‌, துன்பங்க‌ளை அனுப‌விப்பது நானாகிய‌ என்றும் அழிவ‌ற்ற ஆன்ம‌ வ‌டிவ‌மே என்று உண‌ர்ந்து,இறைவ‌ன் மீது பக்தி கொண்டு அணுகும்பொழுது,இறைவ‌ன் ந‌ம் மீது மிகுந்த‌ அன்பு கொண்டு ந‌ம்மை அர‌வ‌ணைக்கிறான்.

ச‌.ச‌ந்திர‌சேக‌ர‌ன்
காரைக்கால்

suresh said...

பெரிய துறவி


ஒருமுறை ராமகிருஷ்ண பரமஹம்சருடன் செல்வந்தர் ஒருவர் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர், “சுவாமி, கடவுளுக்காகத் தங்களுடைய வாழ்க்கையையே துறந்து விட்டீர்களே?!” என்று நக்கலாகக் கேட்டார்.

அதற்கு ராமகிருஷ்ணர் புன்னகையுடன், “நான் ஒரு துறவியாக இருக்கலாம். ஆனால் என்னைவிட பெரிய துறவி நீங்கள்தான்!” என்று கூறினார்.

இதைக் கேட்ட செல்வந்தருக்கு தூக்கிவாரிப் போட்டது. “உங்களை விட நான் பெரிய துறவியா? எப்படி?!” என்று திகைப்புடன் கேட்டார்.

ராமகிருஷ்ணர் சிரித்துக் கொண்டே, “ஐயா, நானோ கடவுளுக்காக என்னுடைய வாழ்க்கையைத்தான் துறந்தேன். ஆனால் நீங்களோ, சுகபோக வாழ்க்கைக்காக கடவுளையே துறந்து விட்டீர்களே…. எனவே, என்னைவிட நீங்கள்தான் பெரிய துறவி!” என்றார்.

இதைக் கேட்டதும் செல்வந்தர் வெட்கத்துடன் தலைகுனிந்து கொண்டார்.

Chitti said...

@ Mr. Rishi,
Thanks for understanding all of us. And I feel good when you take them in a positive way.
**
That shows you're more matured person.
****
The comments by Mr. Chandrasekharan and Mr. suresh are laudable. I really enjoyed them.

***
God bless all.
**Chitti**.

மகேஸ்வரன் said...

வாழ்க்கைப்பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும். இது எனது புரிதல். பலர் முரண்படலாம். சிலர் ஆமோதிக்கலாம்.

ஐவிரல் தத்துவம்:இறைவன் எங்கும் இறைந்து கிடக்கும் அருட்பெரும்ஜோதி
ஆவார். நேரம்,இடத்தை கடந்து நிற்கும் கடவுள் (பெருவிரல்) ஆவார். அந்த
ஜோதிபிழம்பின் ஒரு துளி ஆன்மாவாகிய நாம் (சுட்டு விரல்) ஆவோம்.

இறைவன் ஆன்மாவை (மனித உடலில்) உலகிற்கு அனுப்பும்போது மனம் (என்னும் திரை
மூடி) என்றையும் சேர்த்து அனுப்பிவிடுகிறார். இந்த மனத்திரை வரும்போதும்,
வளரும்போதும் மேலும் மூன்று திரைகளை சேர்த்து "நாம் எல்லாம் ஆத்மா" என்ற
உணர்வை மறைக்கிறது. அது முறையே ஆணவம்(நடுவிரல்), கர்மா(மோதிர விரல்),
மாயை(சுண்டு விரல்.)திருமூலர் இவற்றையே மும்மலங்கள் என்று கூறுகிறார்.

இறைவன் இட்ட கடமையை (அ) கட்டளையை நிறைவேற்றுவதும், இம்மும்மலங்களை நீக்கி
ஆத்மா (என்ற) இறைவனை தரிசிப்பதும் இப்பிறப்பின் நோக்கமாகும். இதை நோக்கி
நாம் உயிர் வாழ்வதே வாழ்க்கை ஆகும். இறைவனுக்கு அது கண்ணாமூச்சி
விளையாட்டு ஆகும்.

சின்முத்திரை: சுட்டுவிரலையும்,பெருவிரலையும் ஓன்றாய் சேர்த்து, மற்ற
விரல்களை ஒதுக்கி வைக்கும் சின்முத்திரை விளக்குவதும் இதுவே...


மகேஸ்வரன்
(இரையுடன், இறை தேடுபவன்)

யவனிகை said...

ஆசிரியர் சரியில்லைனா தலைமையாசிரியர்கிட்ட புகார் குடுக்கலாம், ஆனா அந்த வாத்தியாரே சரியில்லைனா..........,
ஒருநாளைக்கி வந்து 'பசங்களா, இத செஞ்சிட்டு வாங்க'ன்னு எங்க எல்லாருக்கும் வீட்டுப்பாடம் குடுத்துட்டு போயிட்டீங்க, அதுக்கப்பறம் பள்ளிகுடத்துக்கே லீவு விட்டுடீங்க, ஒருவேள நீங்களும் பாடத்திட்ட குளறுபடில குழம்பிட்டிங்கலோ,
(அண்ணா, சீக்கிரம் பதிவு போடுங்க இல்ல அதுவரைக்கும் எல்லாரும் உங்கள ஓட்டுவோம்)

Anonymous said...

ஆசிரியர் மீது எனக்குள்ள கோபம் நான் இந்த வலைதளத்தை வாரத்திற்கு ஒரு முறை இந்த தளத்திற்கு வரலாம் என்று நினைக்க துண்டி விட்டது. பின்ன என்னங்க நல்ல பதிவுகள் போடுபவர், மாசத்திற்கு ஒன்று போட்டால் என்ன செய்வது????. (அதற்காக ஆசிரியரை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. வாரம் ஒரு பதிவாவது போட வேண்டும் என்பது என் விருப்பம்).

suresh said...

நிஜமாகவே வாழ்க்கை என்பது என்ன? என்று தாங்கள் கேள்வி கேட்டது போல் நிஜமாகவே உங்கள் வாழ்க்கையின் நோக்கம் என்ன? என்று தாங்கள் கேள்வி கேட்டால் எல்லோருடைய பதிலும் பிறவி இல்லா நிலையை அடையவேண்டும் என்று தான் சொல்வார்கள். ஆனால் என்னுடைய நோக்கம் இன்னும் பிறவி வேண்டும் என்பதுதான். நல்ல ஒரு ஆன்மீகமான குடும்பத்தில் பிறந்து சிறு வயதிலேயே ஈசனை பாடி துதித்து உள்ளம் உருக அவனையே எப்போதும் நினைத்து உருகிக்கொண்டிருக்கவேண்டும் என்பது தான் என் ஆசை.
இவ்வளவு சொல்கிறேனே நான் யார்?
நான் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவன். எனக்கு யார் எதை சொன்னாலும் உண்மை என்ன என்பதை அறிய முற்படுவேன். அதனால் தான் தெய்வம் உண்டா என்று என் உள்ளம் தேடுதல் வேட்டை தொடங்கியது.உணரவும் தொடங்கியது.அதனால் தென்கைலாயம் முதல் காசி வரை சென்று ஈசனை தரிசித்தேன் மேலும் கைலாயம் சென்று ஈசனை தரிசிக்கவேண்டும் என்பது ஆசை. அதுவும் நடக்கும்.ஈசனே என்னை அங்கு கூட்டிச்செல்வான்.
ஊரில் சொல்வார்கள் வயதான பின்புதான் புண்ணியஸ்தலம் செல்லவேண்டும் என்று. அன்று நடந்து செல்லவேண்டும் திரும்ப வருவது கஷ்டம். இன்று வாகன வசதி பணவசதி தொலை தொடர்பு வசதி போன்றவை இருக்கிறது. இன்று மனம் மட்டும் வேண்டும். இந்த பிறவியில் உறுதியான மனம் மட்டும் போதும் அவனே கூட்டிச்செல்வான்.
உங்களுக்கும் அவன் மீது அளவற்ற பற்று இருந்தால் இறைவனை உணர்ந்து தரிசனம் செய்யுங்கள்.இப்போது இந்த நொடி நாம் இருக்கிறோம். அடுத்த நொடி நாம் உயிருடன் இருப்போமா என்பது தெரியாது. எனவே அவனை சரணடைவோம்.

யவனிகை said...

சுரேஷ் சார், உங்களை பார்க்கும்போது நானெல்லாம் எத்துணை தூசென்று புரிகிறது, உண்மையை சொல்வதென்றால் எனக்கு இந்த கிருஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்கள் மீது மிகுந்த கோபம் உண்டு, அவர்களின் பென்சில்,ரப்பர், மிட்டாய் குடுத்து குழந்தைகளை ஈர்க்கும் தந்திரம், ஆதரவற்றோர், வெளிப்படையான பிரச்சனையிலிருப்போர் என பார்த்து பார்த்து ஆள் சேர்க்கும் கொள்கை, மக்களின் அறியாமை என நொந்திருக்கிறேன் (சொந்த அனுபவம்). ஆனால் நீங்கள் இவ்வளவு வெளிப்படையாக இருப்பது சந்தோஷமாக இருக்கிறது, அவர் கூப்பிட வேண்டும், அப்பா கூப்பிட வேண்டும், இந்த ஜென்மத்தில் இத்தனை ஆலயங்களை தரிசிக்க நீங்கள் எத்தனை எத்தனை ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும், உங்களைப்பற்றி பேசியதால் நானும் புண்ணியம் பெற்றேன்.
உண்மையில் எங்களுக்கு இயேசு சாமியின்மீதேல்லாம் கோபமில்லை, இன்னும் சொல்லப்போனால் அவர் குரு மகாவதார் பாபாஜியிடம் இமய மலையில் தீட்சை பெற்றவர், ஆனால் இதெல்லாம் சொன்னால் யார் நம்புவார்கள். வாழ்க்கையே ஆன்மீகத்தோடு பிணைந்த அற்புதமான மதம் நம் இந்து மதம், சயனங்களிலும், முத்திரைகளிலும் பல வாழ்வியல் தத்துவங்களை உரைப்பது, பிசாசு என அவர்கள் வர்ணிக்கும் காளியின் நின்ற கோலம் ஒரு ஆசனம், தினமும் அவ்வாறு நாக்கை நீட்டி, கண்களை விழித்து பயிற்சி செய்தால் வயது முதிர்வு தடுக்கப்படும் (anti-aging) என்கிறார்கள் , இதுபோல பல கரணங்கள் நம் அப்பனுடையது,
எனக்கும் ஆரம்பத்தில் (ஆரம்பத்தில் என்ன ஆரம்பத்தில் இப்போதுகூட) பல சந்தேகங்கள் இருந்தது, அதென்ன எல்லா திருவிளையாடல்களும் பாரத தேசத்திலேயே நடக்கிறது என்று , அதற்கு என் நண்பர் ஒரு அருமையான விளக்கம் சொன்னார்,
ஆதியில் நிலப்பகுதி எல்லாம் ஒரே திட்டாக இருந்தது (பூகோளம் நினைவு வருகிறது), அப்போது இப்புனித பூமியில் மனிதர்களோடு மனிதர்களாக கலந்து திருவிளையாடல்கள் புரிய அவர்கள் தேர்ந்தெடுத்த தலமே நம் பாரதம் என்று, உண்மைதானே,
முதலாம் தமிழ் சங்கத்தில் சிவபெருமான், முருகன், அகஸ்தியர் இருந்தார்கள் என அறிகிறோம், என்ன, அவர்களை மனிதர்களாக சித்தரித்திருப்பார்கள், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தம் மெய்ஞானத்தால் நம் சித்தர்களும், முனிகளும் கண்டு சொன்ன அனைத்தும் உண்மையென இன்று நாம் ஏற்கும்போது கடவுள் பற்றி அவர்கள் கூறியது மட்டும் எப்படி மிகைப்படுத்தலாக இருக்க முடியும், அவை சத்தியம், பெருவெடிப்பில் இருந்துதான் இப்பேரண்டம் தோன்றியது என்று சொல்லும் இவர்களால்கூட அதற்கு முன் என்ன இருந்தது என அறுதியட்டு கூற முடிகிறதா, சுரேஷ் சார்,நீங்கள் சொல்வது போல் சரணாகதி, முழுமையான சந்தேகமற்ற சரணாகதி இருந்ததால் போதும், எல்லாம் அறியலாம், (சுரேஷ் சார், ஏதோ உங்களிடம் இதெல்லாம் பகிர்ந்துகொள்ள வேண்டுமென தோன்றியது, ஒருவேளை என் வார்த்தைகள் உங்களையோ அல்லது மற்றவர்களையோ வருத்தி இருந்தால் என்னை தயவுசெய்து மன்னிக்கவும்)
ஓம் க்ரியா பாபாஜி நம ஓம் ஓம் நமச்சிவாய

karthik said...

editor avargalugu puthiya pathivu
irunthal podavaum, illai endral palya
important pathivivu eathavathu podavum, nalaku intha pathu iruka koodathu, ithu en anpu kattalai.

suresh said...

ஐயா,
வணக்கம்.புதன் கிழமை பதிவு போடுவதாக சொன்னீர்கள். போடவில்லை.
நிஜமாகவே வாழ்க்கை என்பது என்ன?
ஒரு உயிர் மனித ஜென்மமாக பிறவி எடுப்பதற்கு முன்னால், ஒரு செல் உயிரினமாக பிறவி எடுத்த பின்பு, பல ஆயிரம் வருடங்களாக பல பல பிறவிகளை கடந்து மனிதனாக பிறவி எடுக்கிறது. அதனால் தான் மனிதனின் குணங்கள் மிருக குணங்களை கொண்டு கூடவே அறிவையும் கொண்டுள்ளது.
நிஜமாகவே வாழ்க்கையின் நோக்கம் மகிழ்ச்சியாக, ஆனந்தமாக வாழ்வது ஆகும்.
மகிழ்ச்சியாக, ஆனந்தமாக வாழவேண்டுமென்றால் போதும் என்ற மனம் வேண்டும்.
பிற உயிர்களை நேசிக்கவேண்டும்
பிறருக்கு உதவவேண்டும்.
சாகும்போது எதுவுமே கொண்டுசெல்ல முடியாது என்று உணரவேண்டும்
நம் உடலை விட்டு உயிர் பிரிந்து போனபின், சில காலங்கள் கழித்து நம் பக்கத்து பரம எதிரி வீட்டில் மகனாகவோ பேரனாகவோ பிறந்தால், நம் போன ஜென்மத்து சொந்த மகனையோ அல்லது கொஞ்சி விளையாடிய பேரனையோ நம் பரம எதிரியாகவோதான் பார்ப்போம். அதனால் பிறரை தன் உயிர் போல் நேசிக்கவேண்டும் .
நம் கல்வி முறையில் மாற்றம் தேவை.
சைவ உணவு மட்டுமே உண்ணவேண்டும்.
அசைவ உணவு உண்ணும் ஒருவர் பூரண சைவ உணவு மட்டுமே உண்ணத்தொடங்கினால் சுமார் இரண்டு மாதத்திலேயே அவருடைய கஷ்டங்கள் மாறுவதை அவரால் உணரமுடியும். இதனை நான் அனுபவபூர்ணமாக உணர்ந்து அதன்படி கடைபிடிக்கிறேன்.
நம் வாழ்க்கையை பற்றி எவ்வளவு சொன்னாலும் யாராலும் புரிந்து கொள்ள முடியாது. அப்போது புரிந்துகொள்ள என்ன வழி?. வழி இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் ஆன்மீக யோகா கற்று அப்படி பயிற்சி எடுத்தால் நிஜமாகவே வாழ்க்கை என்பது என்ன என்பதனை அறியலாம்.
ஒரு திடலில் சுமார் ஐம்பது வயதான இரண்டு மாமரங்கள் இருந்ததாம். அதில் ஒன்று இதுவரை பூ பூத்து காய் காய்க்காததால் அந்த மரம் அடர்த்தியான இலைகளோடு நல்ல நிழல் தரும்படி நின்றதாம். அதனால் அந்த நிழலில் நின்று யோக பயிற்சி பதினாலு நாட்கள் நடந்தது. பயிற்சி முடிந்த பதினாலாவது நாள் அந்த மரம் இலை தெரியாதவாறு வெறும் பூவாக பூத்து குலுங்கி நின்றதாம். ஓர் அறிவு பெற்ற மரத்துக்கே இப்படி என்றால் ஆறறிவு பெற்ற மனிதனுக்கு எவ்வளவு பிரயோஜனம் கிடைக்கும். இது உண்மையில் நடந்ததாக யோக ஆசிரியர் கூறினார்.
இது உண்மையா என்று நானும் அறிய பூக்காத ஒரு மாமரத்தின் பக்கத்தில் இருந்து பயிற்சி செய்து வந்தேன் .அது உண்மை என்பதை கண்கூடாக உணர்ந்தேன். அதனால் தேவையில்லாமல் ஒரு செடி அல்லது ஒரு மரத்தின் இலையை கூட கிள்ளக்கூடாது. புல்,மரம்,செடி,கொடி,பூ போன்றவற்றை ரசிக்கலாம், இயற்கையை நினைத்து வியக்கலாம்.
ஒரு ஊரில் இரு தரப்பு மக்கள் ஒன்றை ஒன்று அடித்துக்கொண்டார்களாம்.அதை பார்த்து ஒரு புறாகுஞ்சு தாய்புறாவிடம் அவர்கள் ஏன் ஒன்றை ஒன்று அடித்துக்கொள்கிறார்கள் என்று கேட்டதாம்.அதற்கு தாய் புறா சொன்னதாம்,நாம் கோவிலில் வசித்தபோது நம்பெயர் புறா,கோவில் குடமுழக்கின் போது நாம் சர்ச்சில் வசித்தோம் அப்போதும் நம்பெயர் புறாதான்,டிசம்பர் மாதம் வெள்ளை அடித்தபோது தர்காவில் குடி புகுந்தோம் அப்போதும் நம்பெயர் புறாதான். ஆனால் மனிதன் கோவில் போனால் அவன் இந்து ,சர்ச் போனால் அவன் கிறிஸ்தவன், தர்கா போனால் அவன் முஸ்லிம் என்று ஆகிவிடுகிறான் அதனால் அவர்களுக்குள் சண்டை என்று கூறியதாம்.இது எழுத்தாளர் ராஜேஷ் குமார் எழுதிய கதை.
நாமும் எல்லோரையும் நேசிப்போம்.

suresh said...

யவனிகை அவர்களுக்கு நமஸ்காரம் ,

இந்த உலகத்தில் யாருமே தூசு கிடையாது . உண்மைகளை உணரவேண்டுமானால், நடக்கின்ற ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக பதட்டபடாமல் கூர்மையாக கவனித்தாலே போதும். அதற்கு பொறுமை மட்டும் நிறைய வேண்டும்,அதோடு சிந்திக்கும் தன்மையும் வேண்டும்.நன்றி

BALACHANDAR T J said...

வாழ்க்கை என்றால் என்ன ?இறைவன் நமது கடமையை நிறைவேற்றுவதற்கு அமைத்து கொடுத்த வாய்ப்பு. இறைவன் தான் அனைத்தையும் இயக்குகிறான்.ஒருவனுடைய பிறப்புக்கும் இறப்புக்கும் மட்டும் இல்லாமல் வெற்றி தோல்வியிலும் சுக துக்கங்களை அனுபவிப்பதிலும் இன்னும் எண்ணற்றவை அனைத்தும் இறைவனால் தான் நடத்தபடுகிறது. யார் கைவிடுகிரார்களோ இல்லையோ..இறைவன் கைவிட மாட்டார்.இறைவனிடம் சரணடைவது வாழ்கையின் சிறந்த வழி

maladhesi said...

miga nandru naan epathuthaan muthal muthalaga ethan vaasagar aagi vullen thodarnthu vaseeppen

Logesh said...

வாழ்க்கை என்றால் என்ன?

ரிஷி ஐயா அவர்களே, ஆன்மீக பகுதியில் என் அறிவு பூஜ்ஜியம் இருந்தாலும் வாழ்கை பற்றி எனக்கு தெரிந்த கருத்துக்களை சொல்கிறேன் தவறுகள் இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்.

இன்பம் துன்பம் எல்லாம் கலந்தது வாழ்க்கை !

இந்த கேள்விக்கு பதில் அவரவர் வாழும் மற்றும் இருக்கும் சூழ் நிலையை பொறுத்து தான் அமையும்.

முதலில் நாம் அம்மா வை காண்கிறோம் பிறகு அப்பா , சகோதரிகள் சகோதரர்கள், உறவினர்கள்,இப்படியே

இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது....இன்னும் புது புது உறவுகளையும் சந்திக்கின்றோம் இன்னும் சந்திப்போம் உயிர் உள்ள வரை.....என் பெயர் லோகேஸ்வரன் எனக்கு வயது 28 ஆகின்றது அப்பா அம்மா இரண்டு அக்கா நான் குடும்பத்தில் கடைசி, என்னுடைய அம்மா நான் 7 ஆம் வகுப்பு படிக்கும் போது சுகமில்லாமல் போனார்கள் எனக்கு அப்போ 12 வயது சரியாக என்னுடைய 21 ஆவது வயதில் என் அம்மா

இறந்து விட்டார்கள், இறக்கும் முன் என் அம்மா ICU அறையில் வைத்து என்னிடம் கேட்டது "லோகேஷ் அப்பா

அக்கா எல்லோரையும் நல்ல படியா பார்த்துக்கொள் " என்று , என்னால் முடிந்த வரை நான் அதை நிறைவேற்றி கொண்டிருக்கிறேன்....உறவுகள் நம்முடன் இறுதி வரை வருவதில்லை இறுதி வரை எம்முடன் வருவது இறைவன் ஒருவனே ஆகையால் வாழ்கையில் நம்மால் முடிந்த வரை உதவிகளை செய்து கொண்டு அதே நேரத்தில் இறை பணிகளையும் செய்து கொண்டு இன்பங்களையும் துன்பங்களையும் ஏற்றுக்கொண்டு அதை இறைவனிடத்தில் சமர்ப்பித்து விட்டு அன்றாட வேலைகளை கவனிப்பதே வாழ்கை என்னை பொறுத்த வரையில்.

உங்கள் இணைய பதிவுகளை வாசித்தேன் மனம் அமைதியாக இருக்கின்றது நன்றிகள்.


அன்புடன்

லோகேஷ் .

Job foryou said...

தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
அனைத்தும் ஒரே இணையத்தில்....
www.tamilkadal.com

Job foryou said...

மூலிகை முருகன்
http://www.tamilkadal.com/?p=1817
பழநி மலைக்கோயில் மூலவர் தண்டாயுதபாணியின் சிலை நவ பாஷாணம் என்னும் ஒன்பது வித மூலிகைக் கலவையால் ஆனது. இந்தச் சிலைக்கு அபிஷேகம் செய்த பால், பஞ்சாமிர்தம் மருத்துவகுணம் பெறுகிறது. மூலவர் சிலை உயிர்ப்புள்ளது. என்பதும், வியர்க்கும் என்பதும் ஐதீகம். அந்த வெப்பத்தை தணிக்க கொடுமுடியில் இருந்து தீர்த்தம்
http://www.tamilkadal.com/?p=1817

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com