Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

மன்னிக்க வேண்டுகிறேன் இறைவா....

| Jul 18, 2012
அன்பு வாசகர்களுக்கு என் பணிவான வணக்கம். பதிவுகளில் ஒரு பெரிய இடைவெளி விழுந்ததற்கு மன்னிக்கவும். சில முக்கிய அலுவல்களில் முழு ஈடுபாட்டுடன், கவனச் சிதறல் இல்லாமல் ஈடுபட வேண்டி இருந்ததால், இணையதளம் பக்கமே வர முடியவில்லை. அன்போடு விசாரித்து மெயில் அனுப்பி இருந்த நண்பர்கள் அனைவருக்கும், மனமார்ந்த நன்றி. இனி, வழக்கம் போல் - வாரத்துக்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று பதிவுகள் கண்டிப்பாக பதிவிட முயற்சி செய்கிறேன்.

சரி, விஷயத்துக்கு வருவோம்.....

இப்போது ஜோதிட நிலைமையில் பார்க்கும்போது - கிரகங்களில் கோச்சார ரீதியாக நடக்கும் சூழல், அவ்வளவு சுமுகமாக இல்லை. மிகப் பெரிய எதிரி கிரகங்கள் என்று கருதப்படும், செவ்வாயும் - சனியும் இணைந்து - கன்னி ராசியில் இருக்கின்றனர். பொதுவாக , பன்னிரண்டு ராசிக்காரர்களுக்குமே இது கொஞ்சம் பொல்லாத நேரம் என்று தான் கூற வேண்டும். துலாம், விருச்சிக ராசி - இலக்கின காரர்களுக்கு ஓரளவுக்கு நேரம் பரவா இல்லை. மற்ற அனைவரும் கொஞ்சம் பொறுமை காப்பது நல்லது. கடந்த மூன்று / நான்கு வாரங்களாக நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை கொஞ்சம் கூர்ந்து கவனித்தோமேயானால் , உங்களால் ஓரளவுக்கு ஊகிக்க முடியும். நல்லத்தானேயா வண்டி போய்க்கிட்டு இருந்துச்சு.. திடீர்னு மக்கர் பண்ணுதேன்னு தோன்றி இருக்கும்.   என்னய்யா இது..... இப்படியேத் தான் இருக்குமா வாழ்க்கை என்கிற விரக்திக்கு வந்துவிட வேண்டாம்... நிலைமை நிச்சயம் மாறும். முடிந்த அளவுக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கு கொஞ்சம் பொறுமையாக இருந்து விட்டால் போதும்.

இந்த இடைப்பட்ட நேரத்தில். உங்கள் முழு பலத்தையும் பயன் படுத்துகிறேன் பேர்வழி என்று தாம் தூம் என்று குதிக்காமல் , கொஞ்சம் அடக்கி வாசித்தாலே போதும். புலி பதுங்குவதில் தப்பில்லை. இரையில் மட்டும் கண் இருக்கட்டும்... அகற்றாமல் கொஞ்சம் பொறுமை காத்து இருங்கள்... இப்போது கிடைக்கும் விருப்பமில்லா சூழ்நிலையையும், உங்களை இன்னும் மெருகேற்ற , பக்குவப்படுத்த என்று நினைத்துக் கொள்ளுங்கள்...

இஷ்ட தெய்வ வழிபாடு இந்த கால கட்டத்தில் மிக மிக அவசியம். உங்கள் மன பலம் பெருகி, இன்னல்களை தைரியமாக உடைத்து வெளி வர உங்களுக்கு சக்தி அளிக்கும். அவனைப் பற்றிக்கொள்ளுங்கள்... அவன் கருணையை ,  மகத்துவத்தை நீங்களே உணர முடியும் ......

நாம் நீண்ட இடைவெளி விட்டதினால், "உங்கள் தள வாசகர்களுக்கு இப்போதைக்கு இதை பதியுங்கள். உங்களுக்கு நேரம் கிடைத்த பின்பு வழக்கம்போல் கலக்குங்கள்" என்று கூறி நண்பர் Simple Sundar, OnlySuperstar.com கீழ்காணும் பதிவு ஒன்றை அனுப்பியிருந்தார். உண்மையில் நாம் படித்து தெளிவு பெறவேண்டிய பதிவு. அவருக்கு நன்றி.

அடுத்த பதிவு, உங்கள் வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனை ஏற்படுத்தும் அளவுக்கு, ஒரு ஸ்பெஷல் பதிவாக இருக்கப் போகிறது. இந்த ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பாக பதிவிட முயற்சி செய்கிறேன்....


மன்னிக்க வேண்டுகிறேன் இறைவா....

இந்தப் பூவுலகில் நாம் படும் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஒரு வகையில் நாமே காரணம். முந்தைய பிறவிகளில் நாம் செய்த பாவங்களின் பலன்களை இந்த பிறவியில் அனுபவிக்கிறோம். அப்படி என்றால் "நாம் செய்த பாவங்களுக்கு விமோசனமே கிடையாதா?" என்றால்... "உண்டு!!".

செய்த தவறுகளுக்கு கண்ணீர் மல்க இறைவனிடம் மன்னிப்பு கேட்டு, இனி பாவமென்ற ஒன்றை செய்யமாட்டேன் என்று அவனிடம் உறுதியளித்தால் அவரவர் செய்த பாபங்களின் தன்மைக்கேற்ப அவர்களது கர்மாவின் கடுமை குறைக்கப்படும்.

உதாரணத்திற்கு ஒரு பெரிய மரத்தை கட்டி இழுத்துச் செல்வது தான் உங்களுக்கு தண்டனை என்று வைத்துக்கொள்வோம்....  நீங்கள் அதை அனுபவித்தே தீரவேண்டும் என்கிற விதி இருக்கும்போது, இறைவனிடம் மன்னிப்பு கேட்டால், அந்த தண்டனையின் கடுமை சற்று குறைக்கப்படுகிறது. எப்படி? அதே மரத்தை தண்ணீரில் இழுத்து செல்லவேண்டும் என்று தண்டனை மாற்றியமைக்கப்படுகிறது. தற்போது அது சுலபமல்லவா? மரத்தை தண்ணீரில் இழுத்துச் செல்வதற்கும் தரையில் இழுத்துச் செல்வதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.

பாபம் செய்ததால் தான் நாம் இந்த மானிடப் பிறவி எடுத்திருக்கிறோம். சென்ற ஜன்மத்திலோ ஏன் இந்த ஜென்மத்திலோ கீழ்கண்ட பாவங்களுள் சிலவற்றையோ பலவற்றையோ தெரிந்து தெரியாமலோ செய்திருப்போம்.

முதலில் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்....

எந்தப் பிறவியில் என்ன பாவம் செய்தேன்?
என் இறைவா!

நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ?
வழிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ?
தானம் கொடுப்போரை தடுத்து நின்றேனோ?
கலந்த சிநேகரை கலகம் செய்தேனோ?

மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்தேனோ?
குடி வரி உயர்த்தி கொள்ளை கொண்டேனோ?
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ?
தருமம் பாராது தண்டம் செய்தேனோ?

மண்ணோரம் பேசி வாழ்வளித்தேனோ?
உயிர்கொலை செய்வோர்க்கு உபகாரம் செய்தேனோ?
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ?
பொருளை இச்சித்து பொய் சொன்னேனோ?

ஆசை காட்டி மோசம் செய்தேனோ?
வரவு போக்கு ஒழிய வழி அடைத்தேனோ?
வேலையாட்களுக்கு கூலி குறைத்தேனோ?
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ?
இரப்போர்க்கு பிச்சை இல்லை என்றேனோ?

கோள் சொல்லி குடும்பம் கலைத்தேனோ?
நம்பியோரை நட்டாற்றில் நழுவ விட்டேனோ?
கலங்கி ஒளிந்தோரை காட்டி கொடுத்தேனோ?
கற்பிழந்தவளை கலந்திருந்தேனோ?

காவல் கொண்டிருந்த கன்னியரை அழித்தேனோ?
கணவன் வழி நிற்போரை கற்பழித்தேனோ?
கருப்பம் அழித்து களித்திருந்தேனோ?
குருவை வணங்க கூசி நின்றேனோ?

குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ?
கற்றவர் தம்மை கடுகடுத்தேனோ?
பெரியோர் பாட்டில் பிழை சொன்னேனோ?
பட்சியை கூண்டில் பதைக்க அடித்தேனோ?

கன்றுக்கு பாலூட்டாது காட்டி வைத்தேனோ?
ஊண் சுவை உண்டு உடல் வளர்த்தேனோ?
கல்லும், நெல்லும் கலந்து விற்றேனோ?
அன்புடையோர்க்கு துன்பம் செய்தேனோ?

குடிக்கின்ற நீருள்ள குளம் தூர்த்தேனோ?
வெய்யிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழித்ததேனோ?
பகை கொண்டு அயலார் பயிரழித்தேனோ?
பொது மண்டபத்தை போய் இடித்தேனோ?

ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ?
சிவனடியாரை சீற வைத்தேனோ?
தவம் செய்தோரை தாழ்வு சொன்னேனோ?
சுத்த ஞானிகளை தூஷணம் செய்தேனோ?
தெய்வம் இகழ்ந்து செருக்கு அடைந்தேனோ?

என்ன பாவம் செய்தேனோ? இன்னது என்று அறியேன்.
என் இறைவா...
உய்யும் வழியும் உண்டோ - உணர்த்திடுவாய்
உலகெலாம் காத்திடும் உமையொரு பாகா!
தாயும், தந்தையும் நீ ஆவாய்
தனயன் என்னை மன்னித்தருள் செய்வாய்...

"ஆம்" என்று உங்கள் உள் மனம் கூறினால், இனியாவது அவற்றை தவிர்த்திடலாமே! எஞ்சிய நாட்களில் உத்தமனாக வாழ்ந்து, கருணைக்கடலாம் இறைவனின் மன்னிப்பை பெற்று நல் வாழ்வை அடைந்திடலாமே!!

(Source : ஏம்.எம் ராஜகோபாலன் அவர்கள் எழுதிய "வாழ்க்கை நெறிமுறை நூல்" Thanks : Simple Sundar, OnlySuperstar.com)

39 comments:

narayana said...

Really i audict to your blog...everyday check ur blog...today i have seen your post..i am very happy..Thanks for the Good posting...

narayana said...

Thanks for nice post

arul said...

nice post

Anonymous said...

Thanks for coming back...Expecting your post at lest twice in a week..hope u don't make disappointment us...

with loads of respect,
Jayasundaram

Anonymous said...

very good post bless you

hema said...

nice post after a long interval

S.V.KUMAR said...

A GOOD ONE. EVERYBODY SHOULD REPENT FOR THEIR WRONG DOINGS AND DESIST FROM DOING SUCH THINGS IN FUTURE.

VIJAYAKUMAR S

RAJAGOPAL said...

DEA SIR,EXCELLENT ARTICLE.PLEASE KEEP WRITING WITHOUT LONG GAP.YOUR WRIITING HAS ALWAYS BEEN AN INSPIRATION FOR MY LIFE.RESPECTS.
RAJAGOPAL

saravanan said...

பாவத்தில் இத்தனை பாவம் உண்டோ (நான் என்ன பாவம் செய்தோனே தேரியவேல்லை) நன்றி இனிமேலாவது பாவம் செய்வதை குறைக்கின்றேன்

Anonymous said...

very article , happy to see you after a long gap

prema srinivasan said...

very good article and it is very useful to everyone

sugantha said...

Sir, nalla pathivu.naan nithamum ungal pathivukaga kathirupyn.inru magilvu.----sugantha

SELVI said...

VERY VERY GOOD
TO COME BACK AND POST GOOD ARCTILE
THANKS A LOT
SELVI

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பதிவு...

பகிர்வுக்கு நன்றி...தொடருங்கள்...
வாழ்த்துக்கள்...

gnana moorthydkr said...

Dear friend excellent quotes, please send the link about "om siva siva om" (directions to use) thanks for your effort, may god bless you.

சரவணன் said...

மேலே தெரிவித்துள்ள பாவங்களில் பாதிக்கு பாதி இன்று பெரும்பான்மையோர் செய்கின்றனர் (நான் உட்பட). இவை பாவங்களே என்று தெரியாமல் செய்வோரும் உண்டு, பாவம் என்று தெரிந்தும் செய்வோரும் உண்டு. பாவம் என்று தெரிந்தும் தற்காலத்தில் இவைகளில் பல பாவங்கள் பாவங்களாக சொல்லிதரபடுவதில்லை. தற்காலத்தில் இந்த பாவங்கள் செய்பவர்களை எல்லாம் பிழைக்க தெரிந்தவர்கள், திறமைசாலிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். காலமும் அவர்களை செம்மையாக வைத்துள்ளது. அவர்களை பார்த்து நல்லவர்களின் மனம் கூட சஞ்சலபடுகிறது. "கொஞ்ச நாளைக்கு நாம லைட்டா பாவம் செய்யலாம், ஒரு position வந்தவுடன் மனச மாத்திட்டு கோவிலுக்கு போய் பாவம்களை கழுவலாம்" என்று நமக்கு நாமே சமாதனம் செய்யுறோம். பல வருசங்களுக்கு முன்னர் நம்ம மக்கள் கோவிலுக்கு பக்தியோட போனாங்க, 10, 20 வருஷம் முன்னாலே பய பக்தியோட போனாங்க, ஆனா இப்போ பயத்தோட போறாங்க, சிலர் பிக்னிக்கா போறாங்க. "நான் இந்த கோவிலுக்கு போனேன் அந்த கோவிலுக்கு போனேன்" என்று பெருமை வேற! மேலே சொன்ன பாவ கணக்கை படிக்கும் பொழுது, "தம்பி சரவணா, நீ ரொம்ப பாவம் செய்துட்டே கொஞ்சம் அடக்கி வாசிட", அப்படின்னு எனக்கு அலாரம் அடிக்குது. புண்ணியம் செய்யாட்டி கூட atleast பாவம் செய்யாம இருக்க அருள் செய்யப்பா என் அய்யனே!

Saran said...

Manadhai thotta padhippu...paditha pin manam kalanginen....nanri rishi sir...

THEIVAM said...

helo rishi sir how r u??? ungaloda advice partha piraguthan sir nimathiya irukku last 15 days i have lot of problem, but unga advice partha piragu oru thempu irukku sir. ethavathu manasu kastama iruntha unga pathivu thembu tharuthu. illaina unga number kodunga manasu sari illaina kuppittu pesikirom. inimel pathivu latea pottal unga number neenga koduthuthan aganum ithu en anbu kattalai

Anonymous said...

i want to see you in person sir. really excellent

யவனிகை said...

ரொம்ப சரியா சொன்னீங்க சரவணன் சார், நல்லவங்களுக்கு கிடைக்க வேண்டிய எல்லா நல்லதும் ஊரை ஏமாத்துறவன், அயோக்யன்களுக்கு கிடைக்கிறப்போ நல்லவங்களா நடந்துக்குறதுல எந்த அர்த்தமும் இல்லன்னு விரக்திதான் வருது, கேட்டா பிஸ்னஸ்ல அதெல்லாம் சகஜம்ன்னு சொல்றாங்க, பாவம் செய்றவன் அவனவிட பாவம் செய்றவன உதாரணம் காட்டி நா அவன் அளவுக்கு பாவம் செய்யலைன்னு!!! கொஞ்சம்கூட உறுத்தாம பேசுறாங்க, என்ன செய்றது, சேவைக்காகன்னு சொல்லி உள்ள வர்ரவங்ககூட பணம் பழகினதும் புத்தியே மாறிடுறாங்க,

இதுல ரொம்ப வருத்தமான விஷயம் என்னன்னா இப்டி பாவம் செய்றவங்கள்ல பாதி பேர் கடவுள கும்பிடுறவங்க, தேடி தேடி கோயிலுக்கு போறவங்கதான், பண்ற பாவமெல்லாம் பண்ணிட்டு சாமிக்கி பிப்டி பிப்டி லைப் லைன் கொடுத்துடுறாங்க,

ஒண்ணுமில்ல, நேத்து ஒரு கோயிலுக்கு போயிருந்தேன், அர்ச்சகர் நின்னுகிட்டு இருந்த எங்க எல்லாருக்கும் தீபாராதனை காமிச்சிட்டு!! போய் ஒரு land விஷயமா பேச ஆரம்பிச்சிட்டாரு (சைடு பிஸ்னஸ் போல) தப்பில்ல, ஆனா அதுக்கப்றம் ஒரு அம்மா வந்து ரொம்ப ஆசையா பூ குடுத்து போடா சொன்னாங்க, அவர் சட்டுன்னு எல்லார் முன்னாலையும் ' ஆமா எதாவது பேச ஆரம்பிக்கும்போதுதான் கிராக்கி வரும், ச்சே, போய் நில்லும்மா' அப்டின்னுட்டார், பாவம் அந்த அம்மா என்ன நெனச்சு வந்தாங்களோ, ஒரே வேலைய திரும்ப திரும்ப செய்யும்போது எரிச்சல் வர்றது மனித இயல்புதான், ஆனா இது அதற்க்கான இடம் இல்லையே,மொத்தத்துல க்யூல நிக்கிற மனுஷங்களுக்கும் நல்ல எண்ணங்கள் இல்ல, பூசாரிக்கும் பொறுமையில்ல, உள்ள உக்காந்து இருக்குற சாமிக்கும் கண்ணு இல்ல, ஓம் க்ரியா பாபாஜி நம ஓம் ஓம் நமச்சிவாய

harisivaji said...

Everything is Related
It can be previous birth sin or whatever
We should try to MoveON...
Give everything in to the Hand of GOD
Accept Everything as God Wish
(It will be Good for u or for the society)

harisivaji said...

Great Post at right time

யவனிகை said...

எனக்கு தெரிஞ்சு ஊன் உண்டு உடல் வளர்த்தத தவிர நான் எந்த பாவமும் பண்ணலையே, பார்க்கலாம் அவர் என்னதான் வச்சிருக்கார்ன்னு, ஆமா அதென்ன 'மண்ணோரம் பேசி வாழ்வளித்தேனோ?' அர்த்தம் புரியல அண்ணா, கொஞ்சம் ஓய்வா இருக்கும்போது விளக்கம் சொல்ல முடியுமா, ஓம் க்ரியா பாபாஜி நம ஓம் ஓம் நமச்சிவாய

MUTHU SELVAM M.S. said...

வணக்கம் குருஜி
இது வள்ளலாரின் மனுநீதி வாசகம் இல்லையா?
தொடரட்டும் தங்கள் பணி!

Chitti said...

நான் என்ன என்ன பாவங்கள் செய்தேன் என்று முழுமையாக தெரியவில்லை. இருப்பினும், கடந்த காலத்தில் மூழ்கி போகாமல், எதிர்கால வாழ்க்கையில் என்ன என்ன புண்ணியங்கள் செய்து அதை ஈடு கட்ட முடியுமோ அதை கண்டிப்பாக செய்வேன். அதே சமயத்தில், பாவங்களை (முழுமையாக குறைக்க முடியாது) முடிந்த அளவில் குறைக்க முயற்சி பண்ணுகின்றேன்.

இந்த பதிவை இட உதவிய சுந்தர்க்கும், பதிவிட்டதற்கு ஆசிரியருக்கும் நன்றிகள் பல.

மண்ணோரம் பேசி வாழ்வளித்தேனோ? - இதற்க்கான அர்த்தம் எனக்கும் தெரியவில்லை. ஆசிரியர் இதனை தெளிவாக்கவும்.

மற்றபடி, திரு.சரவணன், சகோதரி யவனிகை சொன்னவை மனதை உறுத்தும் உண்மைகள் ("உள்ள உக்காந்து இருக்குற சாமிக்கும் கண்ணு இல்ல" - என்ற கூற்றினை தவிர).
*************
அப்புறம், ஆசிரியர் இந்த பதிவில் வந்த பாவங்கள் அல்லாது ஒரு பாவத்தை செய்கிறார். - அதாங்க பாவப்பட்ட மக்களை (நம்மளை தாங்க) காக்க வைக்கிறது!!!

அதற்க்கு பரிகாரம், பதிவுகளை மிக நீண்ட இடைவெளி இல்லாமல் (ஒரு மாதத்திற்கு ஒன்று என்றில்லாமல்), atleast இரு வாரத்திற்கு ஒரு பதிவாகவது போடலாம் (அ) கோபால் (தெய்வம்) சார் சொன்னது போல் அவர்க்கு தண்டனை கொடுக்கலாம். ஹிஹிஹி.

தயவு செய்து பதிவுகள் நிறைய போடுங்க ரிஷி சார்..

By,

**Chitti**

- Thoughts Becomes Things.

கோடியில் ஒருவன் said...

//////////////////மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ?//////////////////

நிலம் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்களில் நீதி தவறி ஒரு தலைபட்சமாக தீர்ப்பு சொல்வது.

கோடியில் ஒருவன் said...

நல்ல பதிவுக்கு ஆசிரியருக்கு நன்றி!

annapoorani said...

Hello Sir,
I have sent a mail to your mailid editor@livingextra.com, but unfortunately no reply from you sir..Pl. provide your correct email id.

M.A.ELAVARASU said...

VANNAKKAN SIR,NEENDA NATKALAGA PATHIVU ILLATHATHAL MIKKA SORVU, MIKUNDA EAMATRAM,THAVARAMAL PATHIVIDUNGALEN,MANATHU ILLAGUVAKIYATHU MIKKA NANTRIKAL

Balaji said...

Nice. Shall I post it in my blog with your permission?

sathyamdharmam.blogspot.in

யவனிகை said...

நன்றி கோடியில் ஒருவன் சார், சிட்டி சார், எனக்கும் அது தோன்றியது, பின்னோட்டம் குடுத்துவிட்டு பின் அதற்காக வருந்தினேன், விடுங்க, நமக்கு இதே பழக்கம் ஆய்டுச்சு,
ஓம் க்ரியா பாபாஜி நம ஓம் ஓம் நமச்சிவாய

Prakash Krishnamurthy said...

en blogspot www.iraiinbam.blogspot.in உங்கள் ப்லொக்ச்பொட் நேயர்களுக்குப் பிடிக்கும் என தோன்றுகிறது

Sunish said...

Dear Sir,

Thanks for sharing a precious article which indeed corrects man's mistakes.

Kumaran said...

அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்..தொடருங்கள்..சிறிய இடைவெளிக்கு பிறகு அருமையான பதிவு ஐயா..நன்றி.

suresh said...

வணக்கம் ,

ஐயா,

தங்களுடைய பதிவுகளை ஒவ்வொரு நாளும் படித்தால் மட்டுமே மனதுக்கு நிம்மதி கிடைக்கிறது நன்றி .

கடன்கள் தீர வருடம் 2012 க் கான மைத்ர முகூர்த்தம் நேரம் தெரிவிக்கவும் .

கோடியில் ஒருவன் said...

@ யவனிகை
இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது? ஒரு விஷயம் புரியவில்லை என்றால் அதை பிறரிடம் கேட்டு தெளிவு பெறுவதில் எந்த தவறும் இல்லையே.

vivek said...

i am missing the updatefor longtime. Now i am happy to reada nice information

Kousalya said...

Good Article, Thanks. Kousalya

BI_Buff said...

excellent writeup, keep it up rishi.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com