Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

Sri Agasthiya Nama jebam - மகா குரு அகஸ்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)

| Jun 19, 2012
நமது கஷ்டங்களுக்குத் தீர்வு கிடைக்காதா என்று ஏங்குபவர்களுக்கு, மிகப் பெரும் அருமருந்தாக இருப்பது இறைவனின் நாம ஜெபம். இதே மாதிரி லிகித ஜெபம் என்று ஒன்றும் இருக்கிறது. பேப்பரில், பழைய டைரியில் , நோட்டுப் புத்தகங்களில் இறை நாமத்தை எழுதுவார்களே அதைத் தான் லிகித ஜெபம் என்று கூறுகிறார்கள். எனக்குத் தெரிந்த சில பிராமண குடும்பங்களில் வயதான அனைவரும், ஒரு நாளின் குறிப்பிட்ட நேரத்தை இதற்கெனவே ஒதுக்கி இடைவிடாமல் எழுதுகிறார்கள். இதனால் கிடைக்கும் சக்தி அபரிமிதமானது. அப்படி எழுதும் குடும்பங்கள் அனைத்திலும், பரிபூரண குடும்ப அமைதி நிலவுகிறது. அந்த குடும்ப வாரிசுகள் அனைவரும், இன்று நல்ல வேலையில், மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். காலம் கெட்டுக் கிடக்கும் சூழலில், ஒரு மனிதன் தவறான பாதைக்கு செல்ல நிமிஷ நேரம் போதும். அவ்வாறு செல்ல விடாமல் , இறையருள் தடுத்தாட்கொள்ள - இந்த லிகித ஜெபம் நிச்சயம் உதவும். 

மேலும், மனம் ஒன்றி எழுத எழுத - இறை சிந்தனை மேலோங்கும். நம்மை அறியாமலே , நாம் அந்த இறைவனின் நேரடிப் பார்வைக்கு உட்படுகிறோம்.
என்னுடைய சின்ன வயதில், என்னுடைய தகுதிக்கு கிடைக்கவேண்டிய சில அரிய வாய்ப்புக்களை ஸ்ரீ ராம ஜெயம் எழுதி சாதித்தேன். நடக்க வாய்ப்பே இல்லை என்று நினைத்த விஷயங்கள் கூட, ஒரு அதிசயம் போல நடந்த சம்பவங்களும் உண்டு. அப்படி மகத்தான வல்லமை இந்த லிகித ஜெபத்திற்கு உண்டு.

அந்த காலத்தில் ஆலயங்களுக்கு மூலவரை ஸ்தாபிக்கும்போது, எந்திரத் தகடுகளில் சில மந்திரங்களை எழுதி, அந்த மூலவருக்கு உரிய மூல மந்திரங்களை எழுதி ஸ்தாபனம் செய்வார்கள். விண்ணில் நிறைந்து இருக்கும் சக்தியை கும்பம் மூலம் ஆகர்ஷித்து , அதை உள் வாங்கி, தீப வழிபாட்டின்போது அதை வழிபடுபவர்களுக்கு கிடைக்க செய்வதில், இந்த மந்திரங்களுக்கு பெரும் பங்கு உண்டு.

இதைப் போன்ற மிக அரிதான வாய்ப்பு, ஒன்று நம்மைத் தேடி வந்து இருக்கிறது. விரைவில் ஸ்தாபனம் செய்யப்பட விருக்கும், மகான் ஒருவரின் சித்த ஜீவ சமாதிக்கு - சித்தர்களின் தலையாய சித்தரான , ஸ்ரீ மஹா குரு அகஸ்தியரின் லிகித நாம ஜெபம் தேவைப் படுகிறது.

நீங்கள் எழுத வேண்டிய மந்திரம் " ஸ்ரீ அகஸ்தியாய நம"

அகஸ்தியரின் அருளைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. நாம் யார், நமது முந்தைய பிறவிகளின் பாவ புண்ணியங்கள் , நாம் இந்த பிறவியில் எந்த நிலையில் இருக்கிறோம் , என்ன செய்ய விருக்கிறோம், அடுத்த பிறவியில் நம் நிலை என்ன என்பதை , முற்றும் அறிந்த மகா ஞானி அகஸ்தியப் பெருமான். அகஸ்திய தரிசனம் ஒன்று போதும். ஒரு கணப் பொழுதில் நம் கர்மங்கள் அனைத்தும் தொலைந்து போகும். நம் வாழ்வில் சிகரம் தொடும் அளவுக்கு சாதனைகள் செய்ய இயலும். நம்பி இந்த காரியத்தில் ஈடுபடுங்கள்.

நோட்டுப் புத்தகத்தில், அல்லது வெள்ளைப் பேப்பர்களில், " ஸ்ரீ அகஸ்தியாய நம"  என்று நீலம் அல்லது பச்சை மையினால் , தங்களால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு எழுதி - கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் அக்டோபர் முதல் வாரத்திற்குள் வந்தடையுமாறு, எழுதி அனுப்புங்கள். ஒவ்வொரு முறை எழுதத் தொடங்கும்போதும், உங்கள் குல தெய்வத்தை ஒரு முறை வேண்டிக்கொண்டு , பின்பு மனதிற்குள் உங்கள் நிறைவேற வேண்டிய கோரிக்கை (களை) மனதிற்குள் சங்கல்பம் செய்து கொண்டு, உலக ஷேமத்திற்காகவும் வேண்டி  எழுதுங்கள்.

குளித்து முடித்து, சுத்தமான உடை அணிந்து, வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி - குல தெய்வத்தை ஒருமுறை மனதில் வேண்டி - ஓம் ------------------ போற்றி! என்று வேண்டிக்கொண்டு - அர்ச்சனைக்கு சொல்வோமே அப்படி, குலம் / கோத்திரம் , பெயர், நட்சத்திரம் சொல்லிவிட்டு - உங்கள் அவசியமான கோரிக்கைகளை வேண்டிக்கொண்டு - கடன் தொல்லை தீர, வீடு கட்ட, கார் வாங்க, திருமணம் நிறைவேற, குழந்தை பாக்கியம் கிடைக்க, நிம்மதியான வாழ்வு கிடைக்க, குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்கு, உடல் நலம் வேண்டி இப்படி உங்களை வருத்திக்கொண்டு இருக்கும் கோரிக்கைகளை மனதிற்குள் வேண்டி, அகஸ்திய பெருமானை நல் வழி காட்டுமாறு பிரார்த்தனை செய்துகொண்டு எழுதத் தொடங்குங்கள்...!

அதன் பிறகு நடக்கும் அற்புதத்தை பாருங்கள்..! எழுதத் தொடங்கிய சில நாட்களிலேயே அந்த அதிசயம் கண்டிப்பாக நிகழும்.

நீங்கள் லிகித நாம ஜெபம் எழுதி அனுப்ப வேண்டிய முகவரி :

Mr. K.MURALIDHARAN,
TOTAL OIL INDIA (P) LTD
3, Bharathi Park Cross Road - 2,
Saibaba colony, Coimbatore - 11
Cell : 99949 74557 / 97903 73973

அந்த அகஸ்திய மகரிஷியே திருவுளம் கொண்டு , இந்த அரும்பெரும் வாய்ப்பை நல்கியதாகவே நான் கருதுகிறேன். உங்களுக்கும் இதே போன்ற எண்ணம் தோன்றுமேயானால், அவசியம் நீங்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேரமோ அல்லது பொருள் விரையமோ என்று நினைக்க வேண்டாம். உங்கள் சந்ததிக்கே நீங்கள் சேர்க்கும் சொத்து இது என்று நம்பி செயல் பட்டு, அகஸ்திய மகரிஷியின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.

இந்த தகவலை தகுதி வாய்ந்த உங்கள் உறவினர் / நட்பு வட்டத்திற்கும் தெரியப்படுத்துங்கள். Facebook / Twitter என்று உங்களால் முடிந்தவரைக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். யார் யாருக்கெல்லாம் ப்ராப்தம் இருக்கிறதோ, அவர்கள் அனைவருக்கும் இந்த தகவல் பயன் தரட்டும்.

இந்த அரும்பெரும் பணியில் ஈடுபட்டு இருக்கும், சகோதரர் முரளிக்கு வாழ்த்துக்களும்,  இந்த வாய்ப்பை நமக்குத் தந்ததற்காக நன்றிகளும்..!
கீழே இது சம்பந்தப்பட்ட அறிக்கையை இணைத்துள்ளேன். படத்தில், ரைட் க்ளிக் செய்து, வியூ இமேஜ் க்ளிக் செய்யுங்கள். அதன் பிறகு, கர்சரை படத்தில் க்ளிக் செய்ய படம் பெரிதாகத் தெரியும்.

வாழ்க அறமுடன்! வளர்க அருளுடன்!


36 comments:

THEIVAM said...

payanulla thagaval ithai engalukkku theriya paduthiya rishi sirukku nandri

நந்தவனம் said...

Aga arumaiyana vaipai valankigya Editor avarkalaukkum, Murali sir avarkalukkum nandri

நந்தவனம் said...

Aga Arumaiyana vaippai valangiya Risya sirungar avarkalukkum,murali avarkalukkum Nandri nandri

gayathiri said...

Yean nam eluthiya lagitha jebam intha mugavariku anupi veika vedum..enna karanam endru therinthu kolathan kedkirean ..nandri

திருவாரூர் சரவணன் said...

இப்படி ஒரு வாய்ப்பை சுட்டிக்காட்டியதற்கு கோடானுகோடி நன்றி

Narasimha swamy said...

Immense thanks for info...

VIJAY - HARISH said...

Kodana kodi nandrigal.

CHANDRASEKAR said...

இந்த தகவல் எனக்கு சரியான நெரத்தில்தான் அந்த கடவுள் தெரியபடுத்தியுள்லார் என நினைக்கின்ரென்.நம்பிக்கையுடன் செய்கின்ரென்,ஆனால் இப்பவே உங்கலுக்கு நன்றீ கூரமட்டென்.காரனம்,என் தந்தை ஒன்பபது மதமாக வலது காள் வராமள்
கஸ்டபடுகிராற்,என்சக்திக்கு மீரிய பனம் செலவாயிற்று மருத்துவர் கைவிட்டனற்,தர்பொது படுக்கையில்தன் உல்லார்,நீங்கல் தெரிவித்துல்ல இந்த அகஸ்தியர் மந்திரத்தை எழுதுகிறேன்,பலன் கிடைத்த்வுடன்.உங்கலுக்கு தெரியபடுத்துகிறேன்.

கோடியில் ஒருவன் said...

அந்த காலத்துல சின்ன வயசா இருக்கும்போது, "ஸ்ரீ ராம ஜெயம்" பேப்பர்ல எழுதி அதை சுருட்டி மாலை மாதிரி செஞ்சி, ஆஞ்சநேயர் கழுத்துல போட்டு அழகு பார்த்த ஞாபகம் வருது.

சென்னைப் பட்டணத்துக்கு வந்து நான் தொலைத்த நல்ல பழக்கங்களுள் இதுவும் ஒன்று.

நல்ல வேளை தற்போது மீண்டும் அதை தொடர சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக நினைக்கிறேன். இந்த லிகித ஜெபம் எழ்துவதால் என்ன பயன் என்று பார்த்தால், மனம் ஒருமுகப்படும். ஒருமுகப்படும் மனதுக்கு அபார சக்தி கிடைக்கும். நினைத்தது எல்லாம் நடக்கும்.
மறுபடியும் எழுதத் தூண்டியிருக்கும் ஆசிரியருக்கு நன்றி.

இதைப் படித்தவுடன் உங்களுக்கு அகஸ்திய மகரிஷியை நேரில் தரிசிக்கவேண்டும் என்று ஆவல் எழுகிறதா? கவலை வேண்டாம்.

சென்னையிலேயே அகஸ்தியருக்கு கோவில் ஒன்று அவர் பெயரிலேயே உள்ளது. ஆச்சரியமாக இருக்கிறதா....? சென்னையின் மையப்பகுதியான தி.நகரில், வெங்கட்நாராயணா சாலைக்கு அருகே (திருப்பதி தேவஸ்தானம் அமைந்துள்ளதே அதே சாலை) உள்ளது அகஸ்தியர் கோவில். அங்கு யாரைக்கேட்டாலும் சொல்வார்கள். பாண்டி பஜாரிலிருந்தும் செல்லலாம்.

ஆரவாரமான தி.நகரில் அமைதி தவழும் இப்படி ஒரு விசாலமான அழகிய கோவிலா என்று ஆச்சரியப்படுவீர்கள். அத்துணை அமைதி. அத்துணை பெரிய கோவில் இது.

இந்கே மகா விஷ்ணு, சுவாமி ஐயப்பன், சிவபெருமான், பார்வதி, நவக்கிரகங்கள், என எல்லா சந்நிதியும் உண்டு. அகஸ்தியர் தனது துணைவி லோப முத்திரை அன்னையுடன் எழுந்தருளியிருப்பது தனது தமிழ் கடவுள் முருகப் பெருமான் சன்னதிக்கு எதிரே.

ஏற்கனவே ஒரு முறை இந்த கோவிலுக்கு சென்றிருக்கிறேன். அடிக்கடி இந்தப் பகுதிக்கு நான் சென்றாலும், இந்த கோவிலுக்கு சென்றதில்லை. ஒரு நாள் அந்த பகுதியை எனது டூ-வீலரில் கடக்கும்போது வருண பகவான் மழையின் சொரூபத்தில் திடீரென்று ஸ்பரிசிக்க, மழைக்கு ஒதுங்க இந்த கோவிலுக்குள் சென்றேன். அப்போது தான் கோவிலின் பெயரையே கவனித்தேன். (சென்னைவாசிங்க நிறைய பேர் இப்படித்தாங்க!). உள்ளே கோவிலின் அழுகு கொள்ளை கொள்ள, அப்படியே அனைத்து மூர்த்தங்களையும் தரிசித்தேன்.

சென்னையில் இருப்பவர்கள் நேரமிருந்தால் போய் வாருங்கள். தி.நகருக்கு பர்சேசிங் செல்பவர்கள், அப்படியே ஒரு எட்டு அகஸ்தியரையும் தரிசித்துவிட்டு வாருங்கள்.

முகவரி :
அருள்மிகு அகஸ்தியர் திருக்கோவில்,.
(இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்),
13, ராஜா தெரு, தி.நகர், சென்னை - 600017.
தொலைபேசி எண் : 044-24332299

(கடந்த சில நாட்களாக மனதில் ஒரு சஞ்சலம். அகஸ்தியர் பெயரை லிகித ஜெபம் எழுதிட்டு, மறுபடியும் மேலே நான் சொல்லியிருக்குற அகஸ்தியர் கோவிலுக்கு போய்ட்டு வந்து உங்களிடம் சொல்கிறேன்.)

— கோடியில் ஒருவன்

யவனிகை said...

எப்பவும் போல நல்ல தகவல் அண்ணா, கொஞ்சம் வேலை, அதுதான் ஆன்லைன் பக்கமே வரமுடியவில்லை, சேர்த்துவைத்து முத்தான மூன்று கட்டுரைகள், ஆமாம், அகஸ்தியர் சித்தருடைய நாமத்தைதான் எழுத வேண்டுமா, நமக்கென்று ஆதர்ஷமான சித்தர்கள் பெயரை எழுதலாமா, ( முடிவு பண்ணிட, இனி என்ன கத்துனாலும் நீ நினைச்சததானே எழுதபோற, எழுது, அப்படிங்கறீங்களாணா), சரிணா, இன்னைக்கே எழுத தொடங்கிருறேன், ஓம் நமச்சிவாய ஓம் க்ரியா பாபாஜி நம ஓம்

யவனிகை said...

மன்னிக்கவும் அண்ணா, அந்த நோட்டிஸ்'ஐ இப்போது தான் ஆற அமர படித்தேன், கண்டிப்பாக சித்தர்களுக்கெல்லாம் சித்தர் அகஸ்தியர் நாமத்தை எழுதி அனுப்புகிறேன், நண்பர்களுக்கும் பரிந்துரைக்கிறேன்,

karthik said...

agathiyar kovil irugum idam sonatharku miga nanri

karthik said...

05.07.2012 indru t.nagar agathiyar kovil cendru vanthee thagaval sonathargu ungaluku kodana kodi nandrikal

James said...

Well... For what reason i have to send லிகித நாம ஜெபம் to the said address??? Please advice thank you...

kumar said...

அருமையான கட்டுரை,நண்றி ஐயா

Saran said...

vry useful info rishi sir...thnks a lot...

Anonymous said...

Sir, enga poiteenga.... romba naala kanom.........

sakthi tiruppur

THEIVAM said...

ANYBODY KNOW. WHERE IS MR.RISHI????

Anonymous said...

If you don't mint who is Mr. K.MURALIDHARAN? Let me know details because why i want to send " நீங்கள் லிகித நாம ஜெபம் எழுதி அனுப்ப வேண்டிய முகவரி " - Thanks R Gopi

Sunish said...

Thanks you Rishi Sir and Murali Sir.

கோடியில் ஒருவன் said...

காணவில்லை

பெயர் : ரிஷி

வயது : 60 (எழுத்துல இருக்குற பக்குவத்தை வெச்சு பார்க்கும்போது அப்படித்தான் தெரியுது!)

தொழில் : வழிகாட்டுவது (ஆன்மீகம், ஜோதிடம், தன்னம்பிக்கை உள்ளிட்ட விஷயங்களில்)

உண்மையான தொழில் : ஏதோ ஒரு பெரிய கம்பெனில பெரிய போஸ்ட் (கோடியில் ஒரு சிலரைத் தவிர விபரம் யாருக்கும் தெரியாது!)

எத்தனை நாளாக காணவில்லை : கடந்த 23 நாட்களாக (ஜூன் 19 முதல்)

கூடுதல் விபரம் : அகத்தியர் பத்தி பதிவை போட்டதுல இருந்து அவரை நேர்ல பார்க்கனும்னு நண்பர்கள் கிட்டே சொல்லிகிட்டிருந்ததா தகவல். ஒருவேளை, சதுரகிரிக்கோ அல்லது கைலாயத்துக்கோ கமண்டலத்தோட காவி ட்ரெஸ் போட்டுக்கிட்டு போயிருக்கனும்னு சொல்றாங்க.

குறிப்பு : ஆன்மீக பதிவுலகே இவரை காணாமல் கலங்கி போயிருப்பதால் இவரை கண்டுபிடிச்சு கொடுப்பவர்களுக்கு 'கோச்சடையான்' முதல் நாள் முதல் ஷோ டிக்கட் தரப்படும்.

(இதுக்கு மேலேயும் ஆசிரியர் பதிவை போடலேன்னா... வேற வழியில்லே... இதை அப்படியே பிட்நோட்டீஸ் & போஸ்டர் அடிச்சிட வேண்டியது தான். என்ன சொல்றீங்க நண்பர்களே?)

- கோடியில் ஒருவன்

யவனிகை said...

அண்ணா இவங்க சொல்றதுக்காகெல்லாம் நீங்க ஒண்ணும் பீல் பண்ணாதீங்க, கவுண்டரே, தலை குனிஞ்சு நிக்கிறது கதிருக்கு வேணா பெருமையா இருக்கலாம், தலை நிமிந்து நடந்தாதான் எங்க கவுண்டருக்கு பெரும, எங்க ரிஷியண்ணா திரும்பி வர்றப்ப அல்லாருக்கும் நெறைய நெறைய பதிவு கொண்டு வருவாரு, அப்ப பேசுங்க (முக்கியமா கோடியில் ஒருவன் சார், கிர்,,,,,,,,,)

ஓம் க்ரியா பாபாஜி நம ஓம் ஓம் நமச்சிவாய

முட்டாள் said...

நான் எழுதுல மனதுக்குள்ளவே 1008 முறை சொன்னேன் நான் எதிர்பார்த்த ஓரு சில மாற்றங்கள் தெரியுது. தொடர்ந்து சொல்லகிட்டிருக்கேன். நான் நினைத்து நடந்தவுடன் எழுதி அனுப்புகிறேன்

யவனிகை said...

இன்விடேஷன் அடிச்சு வந்தாச்சு, எங்க கோவில் அருள்மிகு ஸ்ரீ செல்வவிநாயகர் மற்றும் மீனாக்ஷி சொக்கநாதர் ஆலய ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வரும் ஆவணி மாதம் 13 ம் தேதி (29 .8 .2012), எல்லாரும் கண்டிப்பா வந்துருங்க நண்பர்களே, அண்ணா நீங்களும்தான், நாலு நாளா மனசு என்னமோ ரொம்ப கஷ்டமா இருந்தது, பரவாயில்ல, வாழ்க்கைல சந்தோஷப்பட்டுக்றதுக்கும் அப்பப்ப எதாவது நடக்கத்தான் செய்யுது,

எனக்கு நின்னு பல அதிசயங்கள நிகழ்த்துன கோயில், அண்ணாக்கு எப்டி ஸ்ரீ'வி அம்மனோ அந்த மாதிரி எனக்கு, கொஞ்ச பேரே மட்டும் தொடர்ந்து வர்ற கோயில், ரொம்ப அமைதியான, மரங்கள் சூழ்ந்த இடத்துல,

அங்க இருக்குற லிங்கத்த பாத்திங்கன்னா, யாரோ ஒரு ஆஜானுபாகுவான ஒரு ரிஷி கால்மேல கால் போட்டு உட்கார்ந்து இருக்குற மாதிரி ஒரு பிரமிப்பு வரும் (அல்லது எனக்கு வரும்), இந்த சம்ப்ரதாயம் இதெல்லாம் இல்லைனா பிள்ளையாரப்பா மாதிரி எங்க அப்பாவ கட்டி புடிச்சிகிட்டு அங்கேயே அப்டியே இருந்திரலாம்னு தோணும் (நம்மல்ல நிறைய பேருக்கும் இப்படி தொனியிருக்கும்னு நம்புறேன்). அதென்னமோ தெரியல பல கோயில்கள்ல ரொம்ப ஆடம்பரமா எல்லா பூஜையும் நடக்கும், அதுல நிர்வாகத்ல இருக்றவங்ககிட்ட யார் பெரிய கையின்னு ஒரு போட்டியே நடக்கும், ஆனா உண்மைலேயே சக்தியான கோவில் அது பக்கத்லையே எந்த ஆரவாரமும் இல்லாம இருக்கும் (ஒருவேள டேய் மனுஷ பயலுகளா, உங்க ஆட்டத்துக்கெல்லாம் நீங்க ஒரு இடம் வச்சுகோங்கடா, எனக்கான இருப்பிடத்த நானே அமைச்சுகுறேன்னு நெனச்சிருப்பாரோ, அவருக்குத்தான் வெளிச்சம் ) ஆனா இந்த கோவில் திருப்பணிக்கு போல எந்த கோவிலுக்கும் சிரமப்பட்டிருக்க மாட்டாங்கன்னுதான் தோணுது, ரசீது 500 ரூபாய்க்கு போட சொன்னவங்ககூட அப்புறம் ' நா மல்லிகைநகர் கோவில்ன்னு இல்ல நெனச்சேன், பரவால, 100 ரூபா போட்டுகோங்க'ன்னு சொல்லும்போது மனசுக்கு கஷ்டமா இருக்கும், ம்ம்ம், கடவுளுக்குகூட மார்கெடிங் தேவைபடுது, இதெல்லாம் சொல்லி என் நண்பர்கிட்ட வருத்தப்பட்டப்போ ' கஷ்டப்பட்டு ஒரு காரியம் பண்ணிமுடிக்கிரப்போ அதோட பலனே தனிதான், கும்பாபிஷேகத்துக்கு அப்புறம் பாருங்க' ன்னு சொன்னார், ஆச்சு, இன்னும் 2 பிரதோஷம்தான், கிட்டத்தட்ட 7 மாசத்துக்கு அப்புறம் எங்க அப்பாவ பாக்க போறேன், மறுபடியும் உங்க எல்லாரையும் கூப்புடுறேன், கண்டிப்பா குடும்பத்தோட வாங்க, (என் கோயில் என் கோயில்ன்னு சொல்றதால எங்க கோயில் இல்ல, அது எங்களுக்கு அடுத்த பகுதில இருக்குற கோவில், இதுல ஒரு அணில் மாதிரி உதவுறது நா செஞ்ச போன பிறவி புண்யம் ). ஓம் க்ரியா பாபாஜி நம ஓம் ஓம் நமச்சிவாய

நந்தவனம் said...

sir oru A4 size note fulla one side ayya periyavaroda mandiram likitha jabam seyapattuvitathu , appadiyee notebook agaveee anupalama.
Then one side mattum than eluthi iruken , innum next page la eluthalama

Anonymous said...

Agasthiya guruvin ligitha jebam ezhudikondu irukiren...Sri ramajeyam ezhudha aarambikalam endru ninaikiren..ungal karuthai sollavum...

Velusami K R said...

ohm namasivaya
naangal ohm namasivaya nama ligitha jabam prathosa velayil sivalayankalil eltha form print seithu koduthu varukirom thangalum intha sevaiyai ungal oor sivalayankalil seyya viruppa irunthal elavasamaka anuppukirom
cotact;ananya24velu@gmail.com

Ragunathan Duraisamy said...

Thank you for the guidance. I will start to write Angasthia's Namavali for my son's marriage. I request all friends prayer. With regards.
RAGUNATHAN.D

Narasimhan Ramamoorthy said...

என்னோட அண்ணா ரொம்ப நாளைக்கு முன்னாடியே இந்த லிகித ஜபம் பற்றி சொன்னங்க. ஏதோ ஒரு காரணத்தினால அது பத்தி மறந்திட்டேன். இன்னைக்கு மறுபடியும் அண்ணா கேட்டாங்க. இப்பதான் இந்த லிங்க் படிக்க வாய்ச்சிது. இதோ இப்பவே ஆரம்பிக்கறேன்!!! இந்த வாய்ப்பை அளித்த நல்லுங்களுக்கு கோடானுகோடி நன்றி

Anonymous said...

It works.
I told my cousin by accident and he tried only 5 days and 5 pages only, ge got an interview today. also his sister start wrting he house was sold in a month. Great manthara. This thinks happen in canada.
Thanks for Rishi & Agastiar

Parani. S

Anonymous said...

Rishi sir i too started writing Agasthiyar nanma likitha japam, but due to some resons i am not able to write for 5 days. Now i continue to write. It will create any problem? pls reply sir........

Rishi said...

Hello Sir, This will not create any problem. You can please continue. Think for a moment - Agasthiya magarishi - as your Guru. You can feel his presence in and around you. You can feel his guidance. Never be panic for anything & you need not to worry for anything sir!

Sriram R said...

Pranams.
I recently visited Velladai Siddhar Jeeva samadhi for which this ligitha jabam is being written. It was a fantastic experience and blissful.
I request everyone to experience this and definitely you will be surprised.

regards,

Sriram R

Anonymous said...

நன்றி. வலைதளத்தை பார்க்க இன்றுதான் வாய்ப்பு கிடைத்தது. நம்பிக்கையுடன் எழுதுவேன். நன்றி

Poorna said...

kadandha silam madhangalaga Sri Agasthiyar Nama jebam ezhudhiyadhan moolam nan ninaithapadi en thirumanam kadandha oct 21 nallapadiyaga mudindhathu. ippoludhu ennudaya vazhakai miga sirappaga ulladhu. miga miga nandri ipadi patta nalla visayangalai pakirndhu konda editor avarkaluku. Sri Agasthiyaya nama.

vijayalakshmipadmanathan said...

rishi sir,

enga poitenga , indha mathiri arpudamana thagaval ellam tharama ....please do post your article , last 3 months no post in you blog . om agatheesaya namaha.

viji

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com