Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

தாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம் (கடன் நிவாரண ஸ்தோத்ரம்)

| Jun 19, 2012
இன்பமும் துன்பமும் இணைந்ததுதான் வாழ்க்கை. நிதானமாக திட மனத்துடன் முயற்சிகளைத் தொடர்ந்தால் நிச்சயம் நிம்மதியான வாழ்வு கிடைக்கும். இருந்தாலும் செய்த தவறுகளுக்கு உரிய தண்டனை எந்த ஒரு மனிதருக்கும் ஏழரை சனி, அஷ்டமச் சனி காலத்தில் நடந்து விடுகிறது. கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்களுக்குக்  கூட, சனி பகவான் பெயரைக் கேட்டாலே , கொஞ்சம் உள்ளுக்குள் கிலி ஏற்படத்தான் செய்கிறது. ரொம்ப நல்லவன் என்று இருப்பவர்களுக்கு உத்தியோக ரீதியாக அலைச்சல், ஸ்திரமின்மை, கடுமையான கடன் பிரச்னையோடு நின்று விடுகிறது. ஆட்டம் அதிகமாக ஆடியவர்களுக்கு - அடி செமத்தியாக விழுகிறது. கூடி இருந்த எந்த உறவும் உடன் இல்லாமல், ஆதரவு கிடைக்காமல் நாம் அனாதையோ என்கிற எண்ணம் தோன்றும் அளவுக்கு - ஒரு பரிபூரண பக்குவம் கிடைக்க வைப்பதில் சனிபகவானுக்கு நிகர் அவரே தான்.

நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது, ஆண்டவன் என்று சொல்கிறோமே அவர் உண்மை என்பதை நிரூபித்துக் கொண்டு இருப்பவர்கள் - நவ கிரகங்கள்.
இதில் சனியின் பாதிப்பினால் - கண்டிப்பாக நடக்கும் ஒரு விஷயம் கடன் தொல்லை.... கிட்டத் தட்ட பத்து வருடங்களுக்குக் குறையாமல் கடனில் மூழ்க வைத்து, பணம் மேல் ஒரு வெறுப்பும், மரியாதையும் , பயமும் தோன்ற வைத்து விடுவார்..... !

ஐயா மிஸ்டிக் செல்வம் அவர்கள் தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு, கூறிய உண்மை - சனி பாதிப்பு இருப்பவர்கள் வேறு எந்த தெய்வத்தையும் வணங்குவதையும் விட - பைரவரை வணங்கினால் மட்டுமே அவர்கள் பாதிப்பு நீங்கும் என்று கூறுகிறார். குறிப்பாக சொர்ண ஆகர்ஷன பைரவரை வணங்கினால் கடன் வருவதற்குப் பதிலாக குபேர சம்பத்து கிடைக்கும் என்று உறுதியாக கூறுகிறார். 

நமது பழைய பதிவுகளில் சனி பகவானுக்கு உரிய பரிகாரங்கள் பற்றி நிறையவே எழுதி இருக்கிறோம். குறிப்பாக வன்னி மரத்தடி விநாயகருக்கு பச்சரிசி மாவை அல்லது பச்சரிசியை அவரை சுற்றிலும் தூவி வருவது. எறும்புகள் அதை எவ்வளவு காலம் வரை பத்திரமாக எடுத்து வைத்து இருக்கிறதோ, அத்தனை காலம் தேவர்களின் ஆசி நமக்கு தொடர்ந்து கிடைக்கும். இதனால் நேரடியாக பலன் பெற்றவர்கள் ஏராளம். விரிவான தகவல்களுக்கு நமது பழைய கட்டுரையை பாருங்கள்.

அதே அளவுக்கு மகத்துவம் வாய்ந்த அற்புதமான பரிகாரங்களை இன்று பார்க்க விருக்கிறோம்..! பிரச்னைகள் தீரவே தீராதா என்று ஏங்கிக் கொண்டு இருப்பவர்களுக்கு அது ஒரு அருமையான வாய்ப்பாக அமையும் என்று கருதி, நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். படித்துப் பயன் பெறுங்கள்.

வாழ்க அறமுடன் ! வளர்க அருளுடன்!

சனி பகவான் ஸ்தோத்திரப் பிரியர். சனி தோஷம் நீங்க சனிக் கிழமைகள்தோறும் விரதமிருந்து, சனி பகவான் சந்நதியில் இரண்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமிட்டு, எள்ளன்னம் நைவேத்யம் படைத்து, மனமுருக, சனி கவசம், சனிஸ்வர அஷ்டோத்ரம் பாராயணம் செய்திடலாம். முடிந்தவரை ஏழைகளுக்கு எள்ளன்னம், கருப்பு வஸ்திரங்களை தட்சணையுடன் தானம் தரலாம்.

இவ் வழிபாட்டை திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி செய்வது மிகச் சிறந்த பலன்களை தரும். திருநள்ளாற்று தர்பாரண்யேஸ்வரரையும், அம்பாளையும், சனி பகவானையும் வழிபடுவது சனி தோஷம் தீர்க்கும்.

கறந்த பசும் பாலினைக் கொண்டு சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்வதும், சனிக் கிழமைகளில் சிவனை வில்வம் கொண்டு அர்ச்சித்து, விளக்கேற்றி வழிபடுவதும் சிறப்பு. பிரதோஷ வழிபாடு மிக நன்று. சிவ புராணம், பஞ்சாட்சரம், சுதர்சன மூல மந்திரம், சுதர்சன அஷ்டகம் போன்றவற்றை பாராயணம் செய்வதும், சிறந்த பலன்களை கொடுக்கும்.

விநாயக பெருமானை வழிபடுவதும், ஆஞ்சனேயரை சனிக் கிழமைகளில்    துளசி மாலை அல்லது வடை மாலை அணிவித்து, அர்ச்சித்து 27 முறை வலம் வருவதும் அஷ்டமச் சனி தோஷ நிவர்த்தி தரும். காக்கைக்கு தினந்தோறும் அன்னம் இடுவதும், உளுந்து தானியத்தை தானம் செய்வதும், கோவில்களில் நவக்கிரகங்களை 9 முறை வலம் வந்து வணங்குவதும், நீலக் கல் அணிந்த மோதிரத்தை அணிந்து கொள்வதும், சனிக் கிழமை அதிகாலை வேளைகளில் சுந்தர காண்டம் பாராயணம் செய்வதும் ஏழரைச் சனியின் தோஷம் குறைக்கும்.

சனி தோஷத்தினால் துன்பங்கள் அதிகமாகும் நேரங்களில், கருப்பு தோல் அகற்றாத முழு உளுந்து தானியத்தை 108 என்ற எண்ணிகையில், இரவு தலையணை அடியில் வைத்து உறங்கி, பின்னர் காலையில் எழுந்து நீராடி, சனி பகவானை 108 முறை வலம் வந்து, ஒவ்வொரு வலம் முடிந்தவுடனும் ஒரு உளுந்தை தரையில் இட வேண்டும். உளுந்து தானியம் தானம் சனி பகானின் நல்லாசி கிடைத்திட அருளும்.

தசரத மஹாராஜா அருளிய, சிவனை போற்றும் "தாரித்ரிய தஹன ஸ்தோத்திரம்" பாராயணம் செய்வதன் மூலம் சனி தோஷத்தால் உண்டான பணக் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து சனி பகவானின் கடாட்சம் கிடைக்கும்.

தாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம் (கடன் நிவாரண ஸ்தோத்ரம்)1. விச்வேச்வராய நரகார்ணவ தாரணாய
கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய
கர்பூரகாந்தி தவளாய ஜடாதராய
தாரித்ரிய துக்க தஹணாய நமசிவாய

2. கௌரீ ப்ரியாய ரஜனீச கலாதராய
காலாந்தகாய புஜகாதிப கங்கணாய
கங்காதராய கஜராஜ விமர்தனாய
தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

3. பக்தி ப்ரியாய பவரோக பயாபஹாய
உக்ரராய துர்க பவஸாகர தாரணாய
ஜ்யோதிர்மயாய குணநாம ஸீந்ருத்யகாய
தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

4. சர்மாம்பராய ஸவபஸ்ம விலேபனாய
பாலேக்ஷனாய பணிகுண்டல மண்டிதாய
மஞ்சீர பாத யுகளாய ஜடாதராய
தாரித்ரிய துர்க்க தஹனாய நமச்சிவாய

5. பஞ்சானனாய பணிராஜ விபூஷணாய
ஹேமாம் சுகாய புவனத்ரய மண்டிதாய
ஆனந்த பூமிவரதாய தமோமயாய
தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

6. கெளரி விலாஸ புவனாய, மஹேஷ்வராய
பஞ்சானனாய சரணாகத கல்பகாய
ஷர்வாய, சர்வ ஜகதா மதிபாய - தஸ்மை
தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

7. பானுப்ரியாய பவஸாகர தாரணாய
காலாந்தகாய கமலாஸன பூஜிதாய
நேத்ர த்ரயாய சுபலக்ஷண லக்ஷிதாய
தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய


8. ராமப்ரியாய ரகுநாத வரப்ரதாய
நாகப்ரியாய நரகார்ணவ தாரணாய
புண்யேஷு புண்யபரிதாய ஸுரார்ச்சிதாய
தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

9. முக்தேச்வராய பலதாய கணேச்வராய
கீதப்ரியாய வ்ருஷபேச்வர வாஹனாய
மாதங்க சர்மவஸனாய மஹேச்வராய
தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

வசிஷ்டேன க்ருதம் ஸ்தோத்ரம்
சர்வ தாரித்ரிய நாசனம்
சர்வ சம்பத்கரம் ஷீக்ரம்
புத்ர பெளத்ராபி வர்தனம்

சனீஸ்வர பகவானால் ஏற்படும் புத்திர தோஷம் நீங்கிட, தசரத சக்கரவர்த்தி நமக்கு அருளிய " புத்திர ப்ராப்தி ஸ்தோத்திரத்தினை " பாராயணம் செய்திடலாம்.

ஸ்ரீ கணேசாய நமஹ

அஸ்ய ஸ்ரீ சனைச்சர ஸ்தோத்திர மந்த்ரஸ்ய

தசரதரிஷி : சனைச்சர தேவதா

த்ரிஷ்டுப் சந்த : சனைச்சர

ப்ர்த்யர்த்தே ஜபே வினியோக

தசரத உவாச :

1. கோணோந்த்தகோ ரௌத்ரயமோநத பப்ரு:

க்க்ஷ்ருண : சநி : பிங்களமந்தஸெளரி

நித்யம் ஸம்ரு தோமு யோ ஹராதக பீடாம்

தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய

2. ஸூரா ஸூரா : கிம்புருஷோர கேந்த்ரா

கந்தர்வ வித்யாதர பன்னகாச்ச

பீட்யந்தி ஸர்வே விஷமஸ்திதேன

தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய

3. நரா நரேந்திரா : பசவோ ம்ருகேந்திரா

வன்யாச்ச யோ கீட பதங்க்கப்ப்ருங்கா

பீட்யந்தி ஸர்வே விஷமஸ்திதென

தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய

4. தேசாச்ச துர்காணி வனானி யுத்ர

ஸேனான நிவேசா : புரபத்தனானி

பீட்யந்தி ஸர்வே விஷமஸ்திதென

தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய

5. திலைர்யவைர்மாஷ குடான்ன தானை:

லோஹேன நீலாம்பர தானதோவா

ப்ரீணாதி மந்த்ரைர் நிஜ வாஸரே ச

தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய

6. ப்ரயாக கூலே யமுனாதடே ச

ஸரஸ்வதீ புண்யஜலே குஹாயாம்

யோயோகினாம் த்யான கதோநபி ஸூஷ்ம

தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய

7. அந்த்யப்ரதேசாத் ஸ்வக்ருஹம் ப்ரவிஷ்ட

ஸ்திதீய வாரே ஸ நர : ஸூகி ஸ்யாத்

க்ருஹாத் கதோ யோ ந பு ந : ப்ரயாதி

தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய

8. ஸ்ரஷ்டா ஸ்வயம்பூர்வனத்ரயஸ்ய

ந்ராதா ஹரிசோ ஹரதே பிநாகீ

ஏகஸ்த்ரிதா ருக்யஜூ சாம மூர்த்தி :

தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய

9. சன்யஷ்டகம் ய : ப்ரயத : ப்ரபாதே :

நித்யம் ஸூபத்ரை : பசுபாந்த வைச்ச

படேத்து ஸௌக்யம் புவி போக யுக்த :

தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய

10. கோணஸ்த : பிங்களோ பப்ரு :

க்ருஷ்ணோ ரௌத்ரோ பிந்தகோயம

ஸெளரி : சனைச்சரோ மந்த :

பிப்பலா தேன ஸம்ஸ்துத :

11. ஏதானி தச நாமகநி ப்ராதருத்தாய ய : படேத்
சனைச்சரக்ருதா பீடாத கதாஷித் பவிஷ்யதி
இதி ஸ்ரீ சனைச்சர ஸ்தோத்ரம் சம்பூர்ணம்

12 comments:

udaya kumar said...

Dear sir

Video file for Daridraya Dukha Dahana Shiva Stotram

http://www.youtube.com/watch?v=vxxhlJdq9JA

Rishi said...

Thank you Uday Sir! I have uploaded the video file in the post. So kind of you!

sugantha said...

sir vanakkam.sani bagavan sthotirathai copy seithu word -il paste seithal kattam kattam-aga varugirathu.i have all tamil fonts.what can i do to get the same version as posted by u ?thank u
sugantha

Rishi said...

Hello Sugantha madam! I will check and confirm you how you can retrieve it. You can save as a PDF file also
( from File - Save as ) , as this will still be an easy option. You can try and confirm it.

திருமாறன் said...

@Sugantha:
paste the document in word. Select all, and change the font to Arial Unicode MS. you can see tamil words.
If you do not have the said font, you can download from net and install.

திருமாறன் said...

@sugantha: After pasting in to the word, select all and change the font to Arial Unicode MS. You can see the Tamil words. You can download the font from internet and install, if you don't have it already.

BI_Buff said...

Hi Rishi,
Very good article, thank you for sharing the sani sthothram. I have a question regarding effects of Sani on folks living abroad, is the effect same regardless of where one lives?

Thank you

vinod kumar said...

I really thank God for getting introduced to this website through my friend Sundar.
Regards,
Vinod.

Gnana Boomi said...

நண்பரே,
தாரித்ரிய துக்க தஹன ஸ்தோத்ரம் வசிஷ்டரால் வழங்கப் பட்டது. மேலும், இதில் ஒரு பாரா விடுபட்டிருக்கிறது, தயைகூர்ந்து பின்வருவனவற்றைச் சேர்க்கவும்.

5 ஆவதிற்குப் பின் (பஞ்சானனாய...) ஆறாவதாக வரும் இது.

6. கெளரி விலாஸ புவனாய, மஹேஷ்வராய
பஞ்சானனாய சரணாகத கல்பகாய
ஷர்வாய, சர்வ ஜகதா மதிபாய - தஸ்மை
தாரித்ரிய துக்க தஹனாய நமஷிவாய

இதன் முடிவில் ஃபலஸ்ருதி என்று வருவது...

வசிஷ்டேன க்ருதம் ஸ்தோத்ரம்
சர்வ தாரித்ரிய நாசனம்
சர்வ சம்பத்கரம் ஷீக்ரம்
புத்ர பெளத்ராபி வர்தனம்

(வசிஷ்டரால் இயற்றப்பட்ட இந்த சிவ ஸ்துதியை ஸ்தோத்ரம் பண்ணுபவர்களுடைய அனைத்து விதமான தாரித்ரியங்களும் நாசமடைந்து, அனைத்து விதமான சம்பத்துகளும் சீக்கிரமாகக் கிடைப்பதுடன் புத்ர, பெளத்ரர்களுடன் சுகமாக வாழ்வார்கள் என்ற பொருளில் வரும்).

எப்படி author information ஐ அழகாக பாடலிலேயே கொடுத்திருக்கிறார்கள் பாருங்கள் நம் முன்னோர்கள் (தமிழிலும் அழகாக சம்பந்தாண்டான் வழங்கிய என்றெல்லாம் வரும்).

நன்றி
ஞானபூமி

Rishi said...

Thank you sir! @ Gnaanabhoomi. I have corrected now. Thank you for your presence and valuable comments.

கோடியில் ஒருவன் said...

உண்மையில் மிக மிக பயனுள்ள, போற்றி பாதுகாக்கவேண்டிய பதிவு.

இன்பமும் துன்பமும் என்று ஆரம்பித்து அவருக்கு நிகர் அவரே என்று ஆசிரியர் முதல் பத்தியில் கூறியிருப்பது அப்படியே எனக்கு பொருந்துதுங்க. ஏழரைச் சனி என்னை படாதபாடு படுத்தினாலும், என்னை அவர் ரொம்ப பக்குவப்படுத்திட்டாரு என்பது நிஜம்.

உலகத்துல எந்த ஸ்கூல்லயும் காலேஜ்லயும் சேர்ந்தாலும் இந்த பக்குவமும் பாடமும் நமக்கு கிடைக்காதுங்க. (அனுபவிச்சங்களுக்கு தெரியும்.)

நண்பர் ஒருவர் கூறிய ஆலோசனையை ஏற்று கடந்த பல மாதங்களாக சென்னையில் ஆழ்வார் திருநகரில் உள்ள கோவிலில் (நான் அலுவலகத்துக்கு போற ரூட்ல இருக்கிறதால இந்த கோவில் நமக்கு நல்ல சௌகரியமுங்க) சனிக்கிழமையன்று சனீஸ்வரருக்கு விளக்கேற்றி வருகிறேன். கூடவே நம்ம ஆஞ்சநேயருக்கும் நெய் விளக்கேற்றி வர்றேன். இதற்க்கு காலக்கெடு எதுவும் வைக்காது வாழ்நாள் முழுதும் தொடர விரும்புகிறேன். அவங்க நம்மளை கவனிக்கிறாங்களோ இல்லையோ. நாம ஒரு நல்ல பக்தனா இருந்திட்டு போவோமே.

- கோடியில் ஒருவன்

Sunish said...

Dear Rishi Sir,

Thanks for sharing this rare and precious கடன் நிவாரண ஸ்தோத்ரம் of Lord Shiva.

Hats off to your service for man kind who suffers a lot in this materialistic world.

Thanks
Sunish

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com