Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

நாளைய உலகின் நாயகன் நீயே...! (உங்கள் சிந்தனைக்கு !)

| Jun 14, 2012
நேற்று என்பது வெறும் கனவு
 நாளை என்பதோ கற்பனை மட்டுமே
 இன்று சிறப்பாக வாழ்ந்தால்
 அது நேற்றைய கனவையும் இனிமையாக்கும்
 நாளைய தினத்தையும் நம்பிக்கைக்குரியதாக்கும்
 அதனால் இன்றைய தினத்தைக் கவனி
 அதில் தான் விடியலுக்கான தீர்வே உள்ளது

இந்த அருமையான வரிகளுக்கு சொந்தக்காரர் - மகாகவி காளிதாசர். இதைப் போல, எத்தனையோ நம் படித்து இருந்தாலும், தெரிந்து இருந்தாலும் - நிகழ் காலத்தை உருப்படியாக வைத்து இருக்கிறோமா என்றால், இல்லை என்றே கூற வேண்டியிருக்கிறது.  

ஏன் என்றால், அதற்க்கு விடை இல்லை. ஒன்று கடந்த காலத்தை நினைத்து, ஒரு சோகப் போர்வையை போர்த்திக்கொண்டு முடங்கிக் கொண்டு இருப்போம். அல்லது எதிர் காலத்தை நினைத்து மனக் கோட்டையை கட்டிக்கொண்டு, முண்டி முரண்டு பிடித்துக் கொண்டு - நிகழ் காலத்தில் நிம்மதியைத் தொலைத்துக் கொண்டு தான் இருக்கிறோம்...
நம் நிகழ்கால நம்பிக்கையை குலைப்பதில் தான் விதி விளையாடுகிறது. நம்பிக்கையை வளர்க்க நாம் என்ன செய்யலாம்?

இணையத்தில் நண்பர் ஒருவர் பிரசுரித்ததை நமது வாசகர் ராம்பிரசாத் , நம் வாசகர்களிடம் பகிர்ந்துகொள்வதற்காக அனுப்பி இருந்தார். எளிதான, அதே சமயம் கடை பிடிக்கக் கூடிய நடைமுறைகள்... படித்துப் பயன் பெறுங்கள்... !


1. நம்பிக்கையைத் தூண்டும் வழிகள்.

அடிமனதில் வெற்றிபெற துடிக்கும் எண்ணங்களை வரிசைப்படுத்து..
சிறப்பான வழிகளை தேர்வு செய்..
எப்படி செய்வதென எழுது..
வழக்கமான பணி நேரம் போக இதற்கென நேரத்தை ஒதுக்கு..
தினமும் எப்படி செய்வதென எழுது..
தயார் நிலைக்கு வந்ததும் சரியான சூழலை எதிர் நோக்கு..
தினமும் அதற்காக செயற்படப்போவதை கற்பனை செய், செயலாக்கு..
வெற்றி பெற்றவர் அணுகுமுறையை கையாள்..
தினமும் வெற்றி பெற்றவர்களை பார், படி..
மாதம் தவறாமல் வெற்றி இலக்கை நோக்கி உற்சாகப் பயிற்சியில் ஈடுபடு. .

2. உனக்குள்ளேயே இன்னொரு மனிதனாக உருவெடுத்து தூண்டுதலை வழங்கி வெற்றி பெறு..

3. வெற்றிக்கும் சாதனைக்கும் அடிக்கல்லாய் அமைவது தன்னம்பிக்கையே.

4. கடந்த கால வெற்றிகளையும் தோல்விகளையும் ஆராய்ந்து அதில் சிறந்ததை தெரிவு செய்..

5. உறங்கப் போகுமுன் உள்ளம் உறுதியாகும்படி மனதில் பேசிப்பழகு...

6. உறுதியுள்ள மனிதரோடு அடிக்கடி பேசிப்பழகு..

7. பகை எண்ணங்களை விட்டொழிந்து தைரியமாக செயற்படு..

8. தோல்வியடைந்தாலும் முழுமையான ஆற்றலை இணைத்து செயற்படு..

9. சிறந்த வழியை கண்டெடுத்து உடனடியாக செயற்படு..

10. எப்போதோ சுடுவதற்கு இப்போது ஏன் பயிற்சி என்று கேட்காதே, கேப்டன் சுடச் சொல்லும் போது சுட்டால் குறி தவறிவிடும் நீ பகைவனின் குண்டுக்கு பலியாவாய்.

11. ஒவ்வொரு நாளையும் நிமிடங்களையும், தன் வசமாக்கும் சாகசக்காரராக மாறி ஓர் ஒழுங்கு முறைக்கு கொண்டுவந்து செயற்படுபவனே வெற்றியாளன்.

12. திட்டமிடுவதும் அதன்படி நடப்பதுமே வெற்றி தரும்.

13. வெற்றிபெற எண்ணுபவன் சோர்வதுமில்லை, தடுமாறுவதும் இல்லை..

14. நடக்கும் என்ற எண்ணத்தோடு செயற்பட்டு, எந்தத் தடைக்கும்
அஞ்சாமல் முன்னேறு...

15. உனக்கே நீ ஆணை பிறப்பித்து செயற்பட்டு வெற்றிபெறு, மற்றவரின் ஆணைக்காக பார்த்திருக்காதே...

16. மாறி வரும் விஞ்ஞான உலகத்திற்கு ஏற்றவகையில் தங்களை மாற்றிக்கொள்ள முடியாத காரணத்தாலேயே பலர் தோல்வி அடைகிறார்கள்...

17. எதையும் பின்தள்ளிப் போடாதே கண்டிப்பாய் இன்றே முடித்துவிட வேண்டுமென எண்ணிச் செயற்படு...

18. எவ்வளவுதான் சிந்தனை இருந்தாலும் அதைச் செழுமையாக்கி ஒரே சமயத்தில் வலுவான விதமாக செலுத்த அழுத்தமான நிர்வாகத்திறன் வேண்டும்.

19. எல்லாப்பக்கமும் திரும்பாமல் ஒரே குறியாக ஒன்றைத் தேர்ந்தெடுத்து முழுக்கவனத்தையும் செலுத்தினால் மாபெரும் வெற்றி கிடைக்கும்.

20. வெவ்வேறு திட்டங்களை தூக்கியெறிந்துவிட்டு ஒரே இலக்கை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதில் வரும் சிக்கல்களை ஆராய வேண்டும். அதை வரிசைப்படுத்தி ஒவ்வொன்றாக தீர்க்க முயல வேண்டும்.

21. மனதை ஒரு நிலைப்படுத்த இப்போதே பழகுங்கள் வெற்றி தானாகத் தேடி வரும்.

22. ஒவ்வொரு நாளும் பல தடவை வெற்றி பெறுவேன் என்ற சிந்தனையை பல தடவைகள் சொல்ல வேண்டும்.

23. பிறர் நம்மை என்னவாக எண்ண வேண்டுமென நினைக்கிறோமோ அதை நாம் முதலில் எண்ண வேண்டும்.

24. வெற்றி என்பது தானாக வராது மற்றவருக்கு உதவுவதாலும் வரும்.

25. வெற்றி என்பது கொடுப்பது, பின் அடைவது இது விளையாட்டல்ல நிஜம்.

26. வெற்றிபெற வைப்பவன் பின் தானும் வெற்றி பெறுவான்.

27. வாழ்க்கையில் வெற்றிபெற விரும்புகிறாயா முதலில் பாராட்டக் கற்றுக்கொள்.

28. பாராட்டுகிற பழக்கமுள்ளவன் ஒருபோதும் தோல்வியடையமாட்டான் அவனை மற்றவர்கள் தோளில் சுமந்து சென்று வெற்றி மேடையில் அமர வைப்பர்.

29. எண்ணங்களோடு உங்களை இணைத்துக் கொள்ளாதீர்கள். உணர்வுகளுக்கான நேரம் வரும், நேரம் போகும். எதிர்மறை எண்ணங்களோடு உங்களை இணைத்தால் அதற்கு அடிமையாவது நிச்சயம்.

30. உங்களைச் சுற்றிப்பாருங்கள். உலகம் முழுவதையும் புரிந்து கொள்ள வேண்டியதைப் புகட்டும் பல்கலைக்கழகம் சுற்றியிருப்பதை உணர்வீர்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஆழமான விசயம் ஒன்றைப் புரிய வைக்கிறது.

31. பறவைகள் கூடு கட்டும்போது ஒரு சொட்டு நீர் கூட உள்ளே புகாத வகையில் கூட்டைக் கட்டும். இந்தப் பொறியியல் அற்புதத்தை எங்கிருந்து அவை பெற்றன. அவை தமது தாய்ப்பறவையின் கருவில் இருந்தே கற்றுவிட்டன. பிறக்கப் போகும் குஞ்சுகள் மீதுள்ள அன்பு, குஞ்சுகளுக்கு கூடுகட்டும் கலையையே கற்றுக் கொடுக்கிறது.

32. தங்கள் மனைவியைவிட தங்கள் அபிப்பிராயத்தை பலர் அதிகமாக காதலிக்கிறார்கள். இதனாலேயே பலர் தங்கள் மனைவியை மதிக்காது அவமதிக்கிறார்கள். ஆகவே உங்கள் கருத்துக்களை கண் மூடித்தனமாக மதிக்காதீர்கள், உலகத்தில் எந்தக் கருத்தும் மாறக்கூடியதே.

33. பாரம்பரியத்தை சிறிது ஒதுக்கி வைத்துவிட்டு, உறவுப் பிணைப்புக்களை கவனிப்பதில் கவனம் செலுத்துங்கள்.

34. காதலி ஏமாற்றிவிட்டாள் என்று கருத வேண்டாம், காதலி மீது நீங்கள் இதுவரை வைத்திருந்த அபிப்பிராயம்தான் உங்களை ஏமாற்றிவிட்டது என்பதே உண்மை.

35. நீங்கள் இந்த உலகத்தில் பிறந்ததற்கான காரணம் முழுமையாக நடைபெற வேண்டுமானால் குறைந்தபட்சம் மற்றவருக்கு உதவுவதை நிறுத்தாதீர்கள். ஒருவேளை உங்களால் மற்றவருக்கு உதவ முடியாமல் போனால் அவர்களை வேதனைப்படுத்தாதாவது இருக்கப்பாருங்கள்.

36. அறிவு புத்தகங்களில் இருந்து படிக்கும் ஒன்றல்ல, ஒருவர் பழகும் முறையில் இருந்து அவரிடமுள்ள அறிவின் ஆழத்தைப் படிக்கலாம்.

37. ஒருவர் தொழிலில் முன்னேற வேண்டுமானால் 35 சதவீதமான அறிவு போதமானது. 65 சதவீதம் மற்றவர்களோடு எப்படி பழக வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

38. நீங்கள் செய்த தவறு என்னவென்று .. கூறியபடி மற்றவருடன் பேச ஆரம்பிக்க வேண்டாம். புகழ்ச்சியுடன் இடையிலேயே விமர்சனங்களை வையுங்கள்.

39. துறை முகத்தில் இருக்கும் கப்பல் பாதுகாப்பாகவே இருக்கும், அதற்காக கப்பல்கள் எல்லாம் துறைமுகத்திலேயே இருக்க வேண்டுமானால் கப்பல்களே வேண்டியதில்லையே.

40. முதன் முதலில் சிகரட்டை பிண நாற்றமெனக் கூறி ஒதுக்கிய மனிதன் பின்னர் புகைத்தலே ஆண்மைக்கு அழகு என்பது போன்ற பிரச்சாரங்கள் வந்ததும், பிணத்தையும் மறந்து, நாற்றத்தையும் மறந்து அதற்காகவே பணத்தையும் இழந்தான். இப்படித்தான் பிரச்சாரமும், மூளைச் சலைவையும் சமூகத்தை சீரழிக்கக் காரணமாகியிருக்கின்றன.சிகரெட்டை பிடிக்கும்போது தட்டும் சாம்பல், புகையிலையை எரிப்பதால் வருவது அல்ல! உங்களை எரிக்கும்போது கிடைக்கப் போகும், அந்த கடைசி சாம்பல்... அதை, நீங்களே தட்டிப் பார்க்கிறீர்கள் என்பதை உணருங்கள்!    

41. நீ கேட்க முடியாத ஒரு குரலை நான் கேட்கிறேன், அது சொல்கிறது நீ பின்தங்கிவிடக் கூடாது என்று, அதுபோல நீ காண முடியாத ஒன்றை நான் காண்கிறேன் அது என்னை பொருத்தமான இடத்திற்கு அழைத்துச் செல்கிறது. காணவும் முடியாது, கேட்கவும் முடியாத உன்னை நான் எப்படி பின்பற்றுவது ?

42. தான் செய்ய வேண்டிய வேலையுடன் பிறக்காத மனிதன் எவனும் உலகில் இல்லை. அதை அறிய முன்னரே பிள்ளைகளை பலவந்தப்படுத்தி இன்றய உலகின் மோசமான கல்விக்குள் கட்டாயப்படுத்தித் திணிக்காதீர்கள்.

43. யாரோ ஒருவர் பணம் சம்பாதித்துவிட்டார் என்பதற்காக அவருடைய தொழிலையே நீங்களும் தேர்வு செய்யாதீர்கள்.

44. வாய்ப்பை உபயோகிக்கத் தெரியாத மனிதனுக்கு அதைக் கொடுப்பதால் என்ன பயன் இருக்கப்போகிறது. வாய்ப்பு வந்தும் பலர் செக்குமாடுகளாக இருப்பதற்குக் காரணம், அவர்களுக்கு வாய்ப்பு வருவதும் தெரியாது, போவதும் தெரியாது.

45. வாய்ப்புக் குறைவு என்று கூறுவது பலவீனமான சஞ்சல மனம். உண்மையில் வாய்ப்புக்கள் நிறைந்துள்ளன என்பதே யதார்த்தம்.

46. ஊருக்கு உபதேசம் செய்து தம்மை உத்தமர் போல காட்டுவோர், இரகசியமாக ஒழுக்கம் குன்றி நடப்பது அம்பலமாகும் போது அவர்களே செல்லாக்காசுகளாகிறார்கள்.

47. தன்னை வளர்க்க, உருவாக்க, தயார்படுத்த பொருத்தமான காலம் இளமைப்பருவமாகும்.

48. இந்த உலகம் ஆர்வமுள்ளவர்களுக்கு பரிசாக அளிக்கப்பட்டுள்ள நன்கொடையாகும் அதை அறிந்து உலகை நல்லவிதமாக பயன்படுத்த வேண்டும்.

49. சில நேரங்களில் சில சங்கடங்களை சந்தித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்

50. பூரணத்துவத்தை மெதுவாகவே அடைய வேண்டும், அதற்குக் காலம் என்ற கை உதவ வேண்டும்.

நன்றி : Mr.கோவை ராமநாதன் வலைப்பூ .
நன்றி : Mr.ராம்பிரசாத் for sending this wonderful message

10 comments:

கோடியில் ஒருவன் said...

முதல் பாயிண்டே அடி தூள். அதை தானுங்க இப்போ நான் செஞ்சிட்டு வர்றேன்.

///////////////////////////////// 30. உங்களைச் சுற்றிப்பாருங்கள். உலகம் முழுவதையும் புரிந்து கொள்ள வேண்டியதைப் புகட்டும் பல்கலைக்கழகம் சுற்றியிருப்பதை உணர்வீர்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஆழமான விசயம் ஒன்றைப் புரிய வைக்கிறது. /////////////////////////////////

உண்மை... உண்மை... உண்மை.... இதுக்கு நேரடி உதாரணம் வேணுமா? இந்த கமெண்ட்டை டைப் பண்ணி போஸ்ட் பண்ணியிருக்கிறாரே அவரு தானுங்க அது!

//////////////////// பறவைகள் கூடு கட்டும்போது ஒரு சொட்டு நீர் கூட உள்ளே புகாத வகையில் கூட்டைக் கட்டும். இந்தப் பொறியியல் அற்புதத்தை எங்கிருந்து அவை பெற்றன. ///////////////////////

கல்லில் உள்ள தேரைக்கும் அமுது படைக்கும் சர்வேஸ்வரன்... பறவைகளுக்கு கூடு கட்ட கற்றுத் தரமாட்டானா என்ன?

//////////////////// சில நேரங்களில் சில சங்கடங்களை சந்தித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள் ////////////////////

சில நேரங்கள்ல இல்லைங்க... பல நேரங்களில் இன்றைய உலகில் பல சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. என்ன செய்ய?

எழுதிய கோவை ராமநாதன் அவர்களுக்கும் அதை இங்கு பரிந்துரைத்த ராம்பிரசாத் அவர்களுக்கும் சிறிதும் தயங்காது அதை பதிவாக அளித்த நமது ஆசிரியர் ரிஷி அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!

- கோடியில் ஒருவன்

THEIVAM said...

super super super

திண்டுக்கல் தனபாலன் said...

ஆஹா... ஐம்பதும் அருமை ! வாழ்த்துக்கள் சார் ! நன்றி !

rajesh said...

அனைவரும் படிக்கவேண்டிய பதிவு.

http://astrovanakam.blogspot.in/

Ramesh trichy said...

nanga yenna than nambikaiku uriyathai sonalum tholil saigiravanukku nalla neram kaalam yellam vara vendum illai yendral yellam waste aagi kandipaga tholviyai santhikiran ithu than unmai nilavaram.

sila samayam neardiyaga yeathirpugalum undu sila samayam maraimuga yeathirpugalum undu

neradiyaga varum prachanaigalai samalithu vidalam maraimugamaga varum prachanaigalai samalika mudiyathu ( athavathu saivinai sammanthapatathu ) avan yeapoothu yeapadi saivan yenbathai yaaralum solla mudiyathu ithu unmai

kandipaga nearm kaalam nanraga irunthal yellam kandipaga athavathu thiramai illathavan kuda seekiram panakaran aagi viduvan.

nearam sari illa vital nalla irupavan kuda athavathu nalla thiramaisaliyaga irupavargal kuda kadipaga tholviyai santhikirargal ithuvum unmai than.

Muthukumar said...

nalla karuththukkal.........
arumai.........

Muthukumar said...

நல்ல கருத்துக்கள்......
அருமை.....

Gnanam Sekar said...

நல்ல கருத்துக்கள் . நன்றி

Anonymous said...

அனைவரும் படிக்கவேண்டிய பதிவு.
http://www.indianmake.com

sabari priya said...

Very nice sir and useful for all

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com