Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

நள தமயந்தி !

| Jun 5, 2012
ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டிலுள்ள குகை ஒன்றில் வசித்தனர். அவ்வழியே வந்த துறவி ஒருவரை அவர்கள் உபசரித்தனர். இரவாகி விட்டதால், குகைக்குள் துறவியும், ஆகுகியும் தங்கினர். அதில் இருவர் தான் தங்க முடியும் என்பதால் வேடன் வெளியில் தூங்கினான். தன் மனைவி ஒரு ஆணுடன் தங்கியிருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. தன் மீது நம்பிக்கை வைத்த வேடனை முனிவர் பாராட்டினார். அயர்ந்து உறங்கிய வேடனை ஒரு மிருகம் கொன்று விட்டது. விஷயமறிந்த ஆகுகியும் உயிர் துறந்தாள். சுயநலமில்லாத இத்தம்பதியர் மறுபிறவியில் நள தமயந்தியாகப் பிறந்தனர்.

துறவி அன்னப்பறவையாக பிறந்தார். நளன் நிடதநாட்டின் மன்னராக இருந்தான். ஒருநாள் அன்னப்பறவையைக் கண்டான். நளனின் அழகைக் கண்ட பறவை, “”உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்தி தான். அவளை திருமணம் செய்து கொள். உனக்காக தூது சென்று வருகிறேன்,” என்றது. அன்னத்தின் பேச்சைக் கேட்ட தமயந்தி காதல் கொண்டாள்.

இதனிடையே சனீஸ்வரர் உள்ளிட்ட தேவர்கள் தமயந்தியை விரும்பினர். அவளின் சுயம்வரத்தில் அனைவரும் பங்கேற்றனர். எல்லாருமே நளனைப் போல் உருமாறி வந்தனர். நிஜ நளனும் வந்திருந்தான். புத்திசாலியான தமயந்தி உண்மையான நளனுக்கே மாலையிட்டாள். அவர்களுக்கு இந்திரசேனன், இந்திரசேனை என்ற குழந்தைகள் பிறந்தனர். தமயந்தியை பெற முடியாத தேவர்கள், சனீஸ்வரரிடம், நளனைப் பிடிக்கும்படி கூறினர். கடமை உணர்வு மிக்கவர்களை சனீஸ்வரர் ஏதும் செய்யமாட்டார். அதே நேரம், கடமையில் சிறுகுற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார். நளனோ நல்லாட்சி செய்தான். இப்படிப்பட்ட ஒருவனை அவரால் பிடிக்க முடியவில்லை. ஒருமுறை பூஜைக்கு தயாரான போது, சரியாகக் கால் கழுவவில்லை. “”இதைக் கூட சரியாக செய்யாத மன்னன் நாட்டை எப்படி ஆளமுடியும்?” என கருதிய சனி, அவனைப் பிடித்து விட்டார்.

இதன் பின், புட்கரன் என்பவனிடம் சூதாடி பொன், பொருளை இழந்தான். குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினான். காட்டில் மனைவி,குழந்தைகள் படும் துன்பத்தைக் கண்ட நளன், ஒரு அந்தணர் மூலம் குழந்தைகளை தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பினான். பின், மனைவியையும் பிரிந்தான். நடுக்காட்டில் தவித்த அவளை, ஒரு மலைப்பாம்பு சுற்றியது. ஒரு வேடன் அவளைக் காப்பாற்றினான். ஆனால், அவள் மீது ஆசை கொண்டு விரட்டினான். தப்பித்த அவள், சேதிநாட்டை அடைந்து பணிப்பெண்ணாக இருந்தாள். ஒரு வழியாக அவளை, தமயந்தியின் தந்தை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

தமயந்தியை பிரிந்த நளன், காட்டில் கார்கோடன் என்னும் பாம்பு கடித்து கருப்பாக மாறினான். அப்பாம்பு ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது. அழகு இழந்த அவன், அயோத்தி மன்னன் மன்னன் ரிதுபன்னனின் தேரோட்டியாக வேலை செய்தான். அவன் அங்கிருப்பதை அறிந்த தமயந்தி, நளனை வரவழைக்க தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தாள். ரிதுபன்னன் அதற்கு புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக உடன் வந்தான். அப்போது, நளனைப் பிடித்த சனி நீங்கியது. தேரோட்டியாக இருந்த நளனையும், தமயந்தி அடையாளம் கண்டாள்.

 நளன், கார்கோடன் அளித்த ஆடையை அணிந்து தன் அழகான சுயஉருவை மீண்டும் பெற்றான். திருநள்ளாறு என்னும் தலத்தை அடைந்தபோது, ஏழரைச்சனி நீங்கியது. சனீஸ்வரர் நளன் முன் தோன்றி, தன்னால் ஏற்பட்ட கஷ்டத்திற்குப் பரிகாரமாக வரம் தருவதாகக் கூறினார். “”சனீஸ்வரரே! நான் பட்ட கஷ்டம் யாருக்கும் நேரக்கூடாது. என் மனைவிபட்ட துன்பம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. என் கதையை படிப்பவர்களை துன்புறுத்தக் கூடாது” என வரம் கேட்டான். சனிபகவானும் அருள் புரிந்தார்.

நளன் கதை படிப்பவர்களுக்கு சனியினால் ஏற்படும் பாதிப்புக்கள் வெகுவாக குறையும் என்பது ஐதீகம்.

நன்றி : தினமலர் 

7 comments:

arul said...

nice post

யவனிகை said...

சிறு வயது ஞாபகம் வந்துவிட்டது, " தேவர்களின் நிழல் பூமியின்மீது விழாதாம், அவர்களின் கண்கள் நம்மைப்போல் அனிச்சையாக இமைக்காதாம்", புத்திசாலியான தமயந்தி எப்படி நளனை சுயம்வரத்தில் கண்டறிந்தாள் என்று நான் கேட்டதற்கு என் தமிழாசிரியர் சொன்ன விளக்கம் இது, தகவலுக்கு நன்றி ரிஷி அண்ணா, ஓம் நமச்சிவாய ஓம் க்ரியா பாபாஜி நம ஓம்

THEIVAM said...

nanum padichutten enakkum konjam sani pathipu vilagum romba nandri rishi sir

vivekanandan.p said...

sani bagavanai kandu payam vendam,
enakku simma rasi,sani ennodu irundu pala nalla velaikalai seithu irukkirar,avar ennai vittu sentratharku varuttappadugiren,avarai nalla nanbaragave parungal

கோடியில் ஒருவன் said...

நள-தமயந்தி கதையை சிறு வயதில் படித்ததுண்டு என்றாலும், தற்போது மீண்டும் அதை படிப்பதற்கு வாய்ப்பை வழங்கிய ஆசிரியருக்கு நன்றி. எனக்கு தெரிந்து இந்த குறிப்பிட்ட பதிவை ப்ராப்தம் இருப்பவர்கள் மட்டுமே படிக்க முடியும். காரணம் நளன் சநீஸ்வரரிடம் கேட்டுள்ள வரம் அப்படி!

@ யவனிகை.....

யவனிகை அவர்களே, நீங்கள் கூறியதை படித்ததும் எனக்கும் தமிழாசிரியர் கூறிய கதை நினைவுக்கு வருகிறது. மேற்படி சுயம்வரத்தில் நளனை அடையாளம் காண நீங்கள் சொன்ன விஷயங்களை மட்டுமின்றி வேறு சிலவற்றையும் தமயந்தி உன்னிப்பாக கவனித்து உண்மையான நலனை கைப்பிடித்தாள். அதில் ஒன்று : தேவர்கள் அணிந்திருந்த மாலை சிறிதும் வாடாது, புத்தம் புதிதாக இருந்தது. ஆனால் மானுடன் நளன் அணிந்திருந்த மாலை வாடியிருந்தது. அதை வைத்தும் அவள் நளனை அடையாளம் கண்டுகொண்டாள்.

மேலும் நளனுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. சமையற்க் கலையில் மிகவும் சிறந்து விளங்கினான நளன். அவனைப் போல எவரும் சமையலை சிறப்பாக செய்ய முடியாது. இப்போது கூட சிறந்த சமையலுக்கு 'நளபாகம்' என்று கூறுவதை கேட்கிறோம் அல்லவா... அதற்க்கு காரணம் இது தான். அதே போன்று தேரோட்டுவதிலும் அவனுக்கு நிகர் அவனே. புவியிலேயே அதிவேகமாக தேரோட்டுபவன் என்ற பெயர் நளனுக்கு உண்டு.

மேலும் இந்த கதையில் வரும் முனிவர் வேறு... யாருமல்ல... அரிச்சந்திரனையும் இதே போன்று படாது பாடு படுத்தி, கடைசீயில் அவன் சோதனையில் வென்றவுடன் தனது தவப் பலனில் பாதியை அவனுக்கு வழங்கிய பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர் தான்.

சனீஸ்வர பகவான் "என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டபோது, "தனது சரித்திரத்தை கேட்பவர்களுக்கோ படிப்பவர்களுக்கோ நீங்கள் கெடுதல் செய்யக்கூடாது!" என்று கேட்ட, அந்த உத்தமனை போற்றுவோம்.

நன்றி நள மகராஜா!

- கோடியில் ஒருவன்

vivek said...

nanri anna, en mahanukku elaraisani nadakkirathu, naanum en manaiviyum jothitar sonnathal vinayakarai viyalakkilamai anru sila vaarangalaga valipattu kondu vanthom, tharpothu nalathamayanthi padiththu sani vilakiyathu ponra nimmathi adainthom. thangalin pathivirku romba nanri.polimar chenalil thinamum iravu sani bagavan mahimai anaivaraiyum paarkka sollungalen payanullathaaka irukkum.om harihari om

A.K.GOPI said...

The couple might have decided to sleep outside both together .

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com