Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

அவசியம் தரிசிக்க வேண்டிய அதி அற்புத ஆலயங்கள் ( பாகம் - 02 )

| Jun 7, 2012
அன்பு நண்பர்களுக்கு வணக்கம். நமது சென்ற வார திருவலம் வில்வநாத ஈஸ்வரர் கட்டுரையை படித்துவிட்டு , நிறைய வாசகர்கள் நன்றி கூறி மின்னஞ்சல் அனுப்பி இருந்தனர். கிட்டத்தட்ட இதே சூழ்நிலையில் தான் இருக்கிறேன், சரியான நேரத்தில் இந்த ஆலயம் பற்றிய தகவல் கிடைத்தது. அந்த இறைவனே அழைத்தது போல இருந்தது என்று கூறி இருந்தனர். மேலும், நமது தளத்தில் படித்துவிட்டு அந்த ஆலயம் சென்று , அவரை முதன் முறையாக சென்று தரிசித்த நண்பர்கள் அனைவரும், ஏதோ ஒரு விதத்தில் மன நிம்மதியை உணர்ந்து இருப்பதாக கூறி இருக்கின்றனர். அனைவருக்கும் இறை அருள் தொடர்ந்து கிடைக்கட்டும்....!

இது தவிர, சென்ற வாரக் கட்டுரையை படித்து விட்டு , நமது தளத்தின் ஆரம்ப காலத்தில் இருந்தே தீவிர வாசகராக இருக்கும் நண்பர் ஒருவர், ஒரு நீண்ட மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். சாராம்சம் மட்டும் கூறுகிறேன்..!
" சார், உங்களது இந்த ஸ்தலம் பற்றிய கட்டுரைக்கு மிக்க நன்றி.. அவசியம் , விரைவில் அங்கு சென்று தரிசிப்பேன். அதே நேரம், இந்த ஆலயங்கள் பற்றிய தொடரில், நீங்கள் இதற்க்கு முன்பு எழுதிய அன்னை - பத்திரகாளியின் ஆலயம் பற்றி அவசியம் நம் வாசகர்களுக்கு நினைவூட்டுங்கள். என் வாழ்க்கையில் நான் மிகப் பெரிய பாக்கியமாக கருதுவது, உரிய நேரத்தில் உங்கள் அந்த கட்டுரையைப் படித்ததுதான்... ! அதன் பிறகு, இந்த ஒரு வருட காலத்தில், நிஜமாகவே என் நிலைமையில் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்துள்ளேன். அன்னைக்கும், இந்த ஆலயம் பற்றிய தகவல் அளித்த உங்களுக்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.." என்று உருக்கமாக கூறி இருந்தார்.....

அந்த கட்டுரையை படிக்காத, நம் புதிய வாசகர்களுக்காக - அதன் லிங்கைக் கீழே கொடுத்துள்ளேன்...! நீங்கள் பொறுமையாக படிக்க வேண்டிய பதிவு. தட்டுத் தடுமாறி, வாழ்க்கையில் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு எதிர் நீச்சல் போடுபவர்கள் அனைவரும், அவசியம் படிக்க வேண்டிய பதிவு.

நண்பர் தனது கடிதத்தில், மேலும் ஒரு தகவல் கூறி இருந்தார். சில முக்கிய வேண்டுகோளுக்காக அன்னையை தரிசிக்க செல்லும்போது, எங்கிருந்தோ ஒரு சுண்டெலி வந்து அன்னை சிலையின் மேல் ஏறி விளையாடுகிறதாம்.. அன்னைக்கு மேல் சாற்றியிருக்கும் மாலையின் உள் புகுந்து விளையாடிக்கொண்டு இருக்குமாம். கைக்கு கீழே, அது விளையாடும்போது, அந்த மாலை ஆடும்போது, அன்னையே கையை ஆட்டி ஆசி பண்ணுவது போல் இருக்கிறதாம். சொல்லி வைத்தாற்போல, அந்த பிரச்னைகள் ஓரிரு வாரங்களுக்குள்ளாகவே, தீர்ந்து விடுகிறது... அன்னையே அந்த சுண்டெலி வடிவில் வருகிறாரோ.. அல்லது அங்கு இருக்கும் லாட தவசி என்கிற சித்த சந்நியாசி தான் வருகிறாரோ.. தெரியவில்லை என்று வியக்கிறார்...

அதை அறிந்துகொள்ள நமக்கு தகுதி இல்லை. ஆனால், இந்த கலியுகத்தில் - நம் கர்மங்களை கரைக்க, வேண்டும் வரம் கிடைக்க, அன்னை இங்கே அருள் பாலிப்பது நம் அனைவருக்கும் கிடைத்துள்ள ஒரு அரிய வாய்ப்பு என்பதில் ஐயமில்லை... தனிப்பட்ட முறையில், என் பல பிரச்னைகளை தீர்த்து , தன் அன்பினால் என்னை அரவணைத்துக் கொண்டு இருப்பவர் அன்னை பத்திரகாளி... இந்த பதிவை நீங்களும் ஒரு முறை படித்துப் பார்க்கவும் ... வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம் ஒருமுறை சென்று வரவும்.


பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா? உங்கள் சந்ததிக்கே ஒரு கலங்கரை விளக்கமாகும் - சிறப்புக் கட்டுரைஇந்த சுண்டெலி சம்பவம் பற்றிய மெயில் படித்துக் கொண்டு இருக்கும்போதே, சகோதரி யவனிகை - இன்னொரு மெயிலில் சில படங்களை அனுப்பி இருந்தார். நமது தேப்பெருமா நல்லூர் கட்டுரைக்கு தொடர்புடைய படங்கள்.
இரண்டு வருடம்  முன்பு - சூரிய கிரகணத்தின்போது, ஒரு பெரிய பாம்பு, தனது வாயில் வில்வ இலையை பறித்துக்கொண்டு சிவனை அர்ச்சித்ததாக கேள்விப்பட்டு இருப்பீர்களே... அதே கோவில் தான். அந்த கோவில் பற்றிய நம் பழைய கட்டுரைகளின் லிங்குகள் கீழே கொடுத்துள்ளேன்... படித்துப்பாருங்கள்..!


சித்தர்கள், ரிஷிகள் - இதே போல் வேறு ரூபத்தில் இறைவனை தொழுவது, சில குறிப்பிட்ட ஆலயங்களில் அடிக்கடி நடக்கும். இங்கே அந்த சர்ப்பம், பல பேர் கூடி இருக்கும்போது - அந்த குறிப்பிட்ட கிரகண நேரத்தில் - ஆலயத்தின் உள்ளே வந்து, இறைவனின் சிரசில் அமர்ந்து வில்வ இலையை வைத்து இருக்கிறது. இரண்டு, மூன்று முறை இது நடந்ததாம். இரவு நேரங்களில் யாரும் இல்லாத நேரத்தில் அடிக்கடி நடப்பதாகவும் கூறுகிறார்கள்... கொஞ்சம் மிகைப் படுத்தலாகவும் இருக்கலாம்...

ஆனால், ஒரு பாம்பு வந்து கும்பிடுகிறதே என்னும்போது - கடவுள் இல்லை என்று சொல்வது மடத்தனமாக தெரிகிறது. வில்வத்தின் மகிமையையும் , இந்த ஆலயத்தின் மகிமையையும் பாருங்கள். இந்த நிகழ்வு நடந்த மறுநாளே, தின இதழ்களும் இந்த நிகழ்வை உறுதிப் படுத்தி இருந்தன. பல ஆன்மீக இதழ்களின் 'கவர் ஸ்டோரி' யாகவும் இருந்தது... இருந்தபோதும், நிறைய பேருக்கு தெரியாமல் இருந்து இருக்கலாம். அது சரி, யார் யாருக்கு எது பிராப்தமோ - அது தானே. நம் புதிய வாசகர்கள் அவசியம் தெரிந்து கொள்ளும் பொருட்டு - அந்த படங்களையும், கட்டுரைகளையும் இணைத்துள்ளேன்.... படித்துப் பாருங்கள்...

இன்னும் சில ஆலயங்களில் ஆலயம் மூடிய பிறகு, நடு நிசியில் -நாம் பார்த்தே இராத, கேள்விப்படாத சில மலர்களால் இறைவனை அந்த சித்தர்கள் பூஜிக்கிறார்கள். காலையில் ஆலயத்திற்குள் வரும் குருக்கள் மிரண்டு , பயபக்தியுடன் இறைவனை பூஜிக்கிறார்கள். சில ஆலயங்களில் கதவுகளை மூடிய பிறகு - பைரவர் கோவிலில் உலாவுவாராம். நாய்களின் மூச்சு இரைக்கும் சப்தம் நன்றாக கேட்கிறதாம். கதைகளில் வருவது போல தோன்றினாலும், பகுத்தறிவுக்கு உட்படாத பல விஷயங்கள் - இன்னமும் நம் நாட்டில் நடப்பது நிச்சயமான உண்மை.

சதுரகிரி, அண்ணாமலை போன்ற இடங்களில், மலை ஏறும் போது - கிரிவலம் செல்லும்போது - கண்முன்னே நடந்து செல்லும் சில பேர் மறைந்தே போயிருக்கிறார்கள். சித்தர் தரிசனம் அந்த மாதிரி சில பாக்கியவான்களுக்கு கிடைத்துவிடுகிறது. இது போன்ற நமக்கு வரும் சில உண்மையான அனுபவக் கட்டுரைகளை, உரிய நேரத்தில் - உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த சிவ ஆலயம் என்று இல்லை, எல்லா பழமையான ஆலயங்களும் - நம் குறை தீர்க்கவென்றே ஏற்படுத்தப்பட்டுள்ளன..! நாம் அந்த ஆலயங்கள் இருப்பது பற்றி அறிந்து கொள்வதே, அந்த பிரச்னைக்கு விமோச்சனம் கிடைக்கத்தான்...! எதையும் நினைத்துக் கலங்க வேண்டாம்.. எல்லா பிரச்னைகளுக்கும் விடிவு உண்டு. இறை அருளோடு , அதை நாம் விரைவில் சாதிப்போம்..!

இதைப் போன்ற அதிசயங்கள் , நம் கண் முன் நடந்தால் தான் - இறைவனை நம்புவேன், என்று உரைக்கும் உங்கள் உள் மனதின் மடத்தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு - உண்மையான பக்தியுடன், முழு நம்பிக்கையுடன் - இறைவனை அணுகுங்கள்..! அதன் பிறகு நடக்கும் அற்புதத்தை உணர்ந்து பாருங்கள்..! நம் தகப்பன் நம்மை நிச்சயம் ஆசீர்வதிப்பான்! 
வாழ்க அறமுடன் ! வளர்க அருளுடன்!
தேப்பெருமா நல்லூர் - ஆலயம், அவற்றின் பெருமைகள் - மேலும் அங்கு நடந்த ஒரு அதிசயம் பற்றி, நமது பழைய கட்டுரைகளை படிக்க கீழே 'க்ளிக்' செய்யவும். 

First Article :

மீண்டும் பிறவா நிலை அடைய வைக்கும் அற்புத கோவில்

 

Second Article :

தேப்பெருமாநல்லூர் மீண்டும் ஒரு அதிசயம் : அம்மன் சந்நிதியில் அணைந்து , அணைந்து எரிந்த தீபம்

 

 வழக்கம்போல், உங்கள் அனுபவங்களும்,கருத்துக்களும், விமரிசனங்களும் வரவேற்க்கப் படுகின்றன! தொடர்ந்து ஊக்குவிக்கும் வாசகர்கள் அனைவருக்கும், படங்களை நமக்கு அனுப்பிவைத்த சகோதரி யவனிகைக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

11 comments:

Atchaya said...

அவசியம் தரிசிக்க - திருமாற்பேறு மணிகண்டீசுவரர் ஆலயம். அற்புத சொல்ல இயலாத அற்புதங்களை அருளும் ஒரு உன்னதத் தலம்.

அருமையான பதிவினையும், தேன் சொட்டும் தமிழில் தந்தமைக்கு மிக்க நன்றி!

THEIVAM said...

arputham saar, ethanai murai padichalum thirumba padikkum pothu puthithai padipathagave thondrukirathu

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பதிவு ! படங்கள் மனதை கொள்ளை அடிக்கின்றன.... நன்றி !

rekha said...

Dear sister,
This photos is veru beautyfull, please inform whare is the temple,which place and the cove shado stil is in my eyes is arthanatheswarar. please inform the place. Om Nama sivaya.

Anonymous said...

arumai..
..gowry

சரண் said...

வெள்ளிக்கிழமையில் அன்றாட பணிகள் தவிர நான் இதுவரை தொடங்கிய வேலைகள் எதுவுமே தோல்வி அடைந்ததோடு, பொருள்விரயம், மனக்கஷ்டம் என்று தீய பலன்களைத்தான் தந்திருக்கின்றன. என்னுடைய தாயார், தாத்தா என்று சில பெரியவர்களிடம் கேட்டபோது வெள்ளிக்கிழமை கலக நாள். அன்றைக்கு எந்த காரியமும் செய்யாதே என்று சொல்கிறார்கள்.

உண்மையில் பெரும்பாலானவர்களுக்கு வெள்ளிக்கிழமை தொடங்கும் காரியம் தோல்வியிலேயே முடிவதை நான் பார்த்திருக்கிறேன். இதற்கு என்ன காரணமாக இருக்கும்?

வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி தோல்வியடைந்த அல்லது மாபெரும் பிரச்சனைகளை தந்த சில விஷயங்கள்.

1. நான், இன்னொரு நண்பர், ஆலய அர்ச்சகர் சேர்ந்து 4.9.2009 வெள்ளிக்கிழமை அன்று ஒரு பழைய ஆலயத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டுவதற்கு பாலஸ்தாபனம் செய்தோம். ஆலயத்தை ஆக்கிரமித்திருந்த ஒருவரால் மிகப்பெரிய வம்பு, வழக்கு எல்லாம் 2 ஆண்டு 6 மாதம் எங்களை படுத்தி விட்டன. இப்போதுதான் திருப்பணி வேலைகள் மெல்ல மெல்ல திணறலுடன் நடைபெற்று வருகிறது.

2. பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திய நான் மீண்டும் 12ஆம் வகுப்பு படிக்கலாம் என டுடோரியலில் பணம் கட்டிய நாள் ஒரு வெள்ளிக்கிழமை. அவர்கள் அரசின் கருவூலத்தில் பணம் கட்ட தாமதமானதால் நான் 1999ல் அரசுத்தேர்வு எழுத முடியாமல் மீண்டும் அடுத்த ஆண்டுதான் எழுதி கல்லூரி செல்ல முடிந்தது.

3. இப்போது அச்சகத் தொழில் செய்து வருகிறேன். தவிர்க்க இயலாத காரணத்தால் இது வரை 10 தடவை வெள்ளிக்கிழமையில் நோட்டீஸ், பிளக்ஸ் போன்றவை பிரிண்டிங் செய்ய வெளியில் கொடுக்க நேர்ந்தது. ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு தவறு நடந்து நஷ்டம் வந்து விடும். அதனால் அந்த ஆர்டர் கேன்சலானாலும் பரவாயில்லை என்று வெள்ளிக்கிழமை அச்சுக்கு அனுப்பும் வகையில் எந்த ஆர்டரையும் ஏற்றுக்கொள்வதே இல்லை.

இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

முக்கியமாக, போகிற போக்கில் நான் அதிகம் யோசிக்காமல் முக்கியமாக பலனை எதிர்பார்க்காமல் செய்யும் காரியம் ஓரளவு வெற்றி பெறுகிறது. சில நேரங்களில் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் அளவில் பரிசுகளையும் பெற்றுத்தருகிறது.

ஆனால் மிகவும் சிரத்தை எடுத்து பார்த்து பார்த்து செய்யும், கவனமாக முன் கூட்டியே திட்டமிடும் வேலைகள் கண்டிப்பாக சொதப்பி, எனக்கு தோல்வியை தருகிறதே


இதற்கு என்ன காரணம்?

என் பிறந்த தேதி 07.10.1981, துன்மதி வருஷம் புரட்டாசி 21, சுக்ல பட்ச நவமி (சரஸ்வதி பூஜை)

உத்திராடம் 2ஆம் பாகம், மகர ராசி,

ராசி
துலாம் லக்னம்.
02ஆம் இடம் - விருச்சிகத்தில் சுக்ரன்,
04 ஆம் இடம் - மகரத்தில் சந்திரன், கேது.
10 ஆம் இடம் - கடகத்தில் செவ்வாய், ராகு
12ஆம் இடம் - கன்னியில் சூரியன், சனி, குரு, புதன் (வ) உச்சம்.
3ஆம் இடம் - தனுசுவில் மாந்தி.

அம்சம்
மிதுன லக்னம்
லக்னத்தில் - சனி, சூரியன், புதன், மாந்தி

2 ஆம் இடம் - கடகத்தில் சுக்ரன் - ராகு

4ஆம் இடம் - கன்னியில் குரு

8ஆம் இடம் - மகரத்தில் சந்திரன், கேது.

9ஆம் இடம் - கும்பத்தில் சந்திரன்.

தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி பதில் அளிக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.


Saravanan,
Thiruvarur.

யவனிகை said...

ஏதோ பெண் தெய்வம் எப்பவும் எனக்கு துணை இருக்குற மாதிரி எப்பவும் தோணும், அண்ணா சத்தியமா சொல்றேன் இப்ப அந்த தெய்வம்தான் உங்க வழியா எனக்கு ஆறுதல் சொல்லுதுன்னு முழுசா நம்புறேன், ஒரு பதிவு ரெண்டு பதிவு நமக்கு சம்மந்தப்பட்டதா இருந்த பரவால, எப்படி நீங்க எழுதுற எல்லா பதிவும் எனக்காகவே எழுத முடியும், யாரோ ஒருவர் பின்னூட்டத்தில் எழுதி இருந்த மாதிரி, சத்தியமா எனக்கு இந்த வலைப்பதிவே மாயமோ இங்க பின்னூட்டம் போடுறவங்க எல்லாருமே மாயையோ, என் அப்பாதான் எனக்கு ஆறுதலா ரிஷி'ங்குற மாய மனுஷன உருவாக்கி எழுதுறாரோ'ன்னு தோணுதுண்ணா, இந்த மாய மனுஷனுக்கு கோடி கோடி நன்றி ஓம் நமச்சிவாய ஓம் க்ரியா பாபாஜி நம ஓம்

Rishi said...

சகோதரி, உங்கள் பின்னூட்டம் படித்து நெகிழ்ச்சியாகி விட்டேன். எதோ புலம்பித் தீர்த்தற்கு இப்படி ஒரு பாராட்டா? நிஜமாகவே எங்கள் பொறுப்பை அதிமாக்கி இருக்கிறீர்கள்... இன்னும் தரமான பதிவுகளை, வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் மனதுக்கு இதமாக, நம்பிக்கை ஊட்டும்படி எழுத முயற்ச்சிக்கிறோம். உங்கள் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும், மனமார்ந்த நன்றி! இறையருள் தொடர்ந்து நம் அனைவருக்கும் கிடைக்கட்டும்.....! வாழ்க அறமுடன்! வளர்க அருளுடன்!

கோடியில் ஒருவன் said...

இப்படி ஒரு அற்புதமான பதிவில் - வேலைப் பளு மற்றும் இதர பிரச்சனைகள் காரணமாக என்னுடைய கருத்துக்களை உடனடியாக அளிக்க முடியவில்லை. ஆசிரியர் மன்னிக்கவேண்டும்.

கட்டுரையையை தற்போது தான் முழுமையாக படித்தேன். (பாம்பு படங்களை முதலில் பார்த்துவிட்டேன். பார்த்து பரவசப்பட்டது தனிக்கதை!)

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களோ அல்லது அரைகுறையாக உள்ளவர்களோ நம் தளத்தை சற்று தொடர்ந்து வாசித்துவந்தால் முற்றிலும் இந்த விஷயத்தில் தெளிவு பெற்றுவிடுவார்கள்.

என்ன சொல்வது... ஐந்தறிவு (ஊர்வனவற்றுக்கு ஐந்தறிவு தானே?) பாம்பு எத்துனை அழகாக வில்வத்தை பறித்து சென்று அச்சிக்கிறது. திருவானைக்காவில் தன்னை பூஜித்த சிலந்தியை மறுஜென்மத்தில் மன்னனாக உயர்த்திப் பார்த்த பரமேஸ்வரன் இந்த அரவத்தை என்ன செய்யப்போகிறானோ? பேரும் பெற்ற பாம்பு! வேறு என்ன சொல்ல.

///////////////////சித்தர்கள், ரிஷிகள் - இதே போல் வேறு ரூபத்தில் இறைவனை தொழுவது, சில குறிப்பிட்ட ஆலயங்களில் அடிக்கடி நடக்கும்.////////////////////

உண்மை உண்மை. தொன்மை வாய்ந்த பல ஆலயங்களில் இதி நாம் காணலாம். திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவலில் ராமர் சன்னதியின் பின்புறம் சுவற்றில் நூற்றுக்கணக்கான வௌவ்வால்கள் இப்போதும் தொங்கிக்கொண்டுள்ளன. (வௌவ்வால்கள் மரத்தில் தொங்குவது யல்பு. ஆனால் இங்கு அவை தொங்குவது கருங்கல் கூரை மீது என்பது தான் அதிசயம்!). நான் சம்பீபத்தில் அந்த ஆலயம் செல்லும்போது அதை பார்த்து பிரமித்தேன். அவை யாவும் ரிஷிகள் என்று கூறப்படுகிறது. (இது விஷயமாக விபரம் தெரிந்தவர்கள் - திருவள்ளூர் அன்பர்கள் யாராவது இருந்தால் - சற்று கூறலாமே!)

மற்றபடி தேப்பெருமாநல்லூர் செய்தி மற்றும் அற்புத புகைப்படங்களை பகிர்ந்துகொண்டுள்ள தோழி யவனிகை அவர்களுக்கு நன்றி!

- கோடியில் ஒருவன்

SSS said...

Thepperumanallur Shiva Temple

Distance: 8 kms from Kumbakonam; 1.5 kms north of Thirunageswaram
Main Deity: Viswanadhar with Ambal Vedantanayaki

Baskaran A said...

Sir intha website palar oda kastatha theerkuthu ungalala pala per palan adayaranga unga nalla manasuku neenga nalla irupinga

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com