Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

பொக்கிஷம்! A tabloid to succeed in real life Endeavours!

| May 30, 2012
நண்பர்களுக்கு வணக்கம். என்னோட சின்ன வயசுல ஏழு அல்லது எட்டு வயசு இருக்கிறப்போ எங்கள் ஸ்கூல் ஆண்டுவிழாவுக்கு கொடியேற்ற மாவட்ட கலெக்டரை சிறப்பு விருந்தினராக வரவழைத்து இருந்தனர். மிக நேர்த்தியான சபாரி டிரஸ். கூலிங் கிளாஸ் என்று பார்த்ததுமே மனதில் பதிந்த உருவம். அவர் பெயர் தங்கராஜ்.

அன்னைக்கே மனதில் ஒரு எண்ணம் பதிந்தது - நாமளும் ஒருநாள் பெரிய ஆளாகி, நம்ம ஸ்கூலுக்கு வந்து பசங்க முன்னாடி கொடியேத்தனும், சமூகத்தில பெரிய பொறுப்புல வரணும் என்று.  

உடனே அப்படி வந்தாச்சான்னு கேட்காதீங்க... கூடிய சீக்கிரம் வந்திடுவோம்னு நம்பிக்கை இருக்கு. எதுக்கு சொல்ல வர்றேன்னா, குழந்தைகள் மனதில் - ஒரு நல்ல எண்ணம் விதைக்கப் படுவது ரொம்ப முக்கியம் . நம் வாசகர்களில் யாரேனும் ஆசிரியப் பணியில் இருந்தால், அவசியம் இந்த கட்டுரையின் சாராம்சத்தை - உங்கள் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

நீங்கள் பொறுப்புள்ள பெற்றோராக உங்கள் குழந்தைக்கு - ஒரு நம்பிக்கை உற்சாக டானிக் கொடுக்க விரும்புகிறீர்களா? உங்களுக்கும் இந்த கட்டுரை மிக உதவியாக இருக்கும்.

வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று ஆசை இல்லாதவர்கள் யாருமே இல்லை. ஆனால் நிஜத்தில் ?
வெற்றி பெற நினைத்து, முட்டி , மோதி , உழன்றுகொண்டு - நல்லதுக்கு காலமே இல்லைப்பா என்று ஒதுங்கி விட்டீர்களா? மனதை தளர விடாதீர்கள்..! அவசியம் இந்த கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள்..!

 இணையம் பயன்படுத்துபவர்களில் பாதிக்கும் மேல் நேரத்தை வெட்டியாக கழிப்பதில் தான் ஈடுபடுவர். ஆனால், ஒரு சில வாசகர்கள் தேடித் தேடி நல்ல பதிவுகளை படிக்கின்றனர், பல ஆக்கப்பூர்வமான வேலைகளுக்கு இணையத்தை பயன்படுத்துகின்றனர். எவ்வளவுக்கு எவ்வளவு குப்பை அதிகமோ, அதே அளவுக்கு மாணிக்கமும் நிறைந்த ஒரு அதிசயம் இணைய தளம். தேடும் நமக்குத் தான் - தெளிவான இலக்கும், சிந்தனையும் வேண்டும்.

நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அப்படித்தானே . இலக்கு தெளிவில்லை என்றால், எங்கெங்கோ அலைவது தான் நடக்கும்.

அப்படித் தேடி எடுத்த மாணிக்கம் போன்ற ஒரு அபூர்வ கட்டுரையை, நம் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன்...! கீழே அந்த கட்டுரைகளின் லிங்கைக் கொடுத்துள்ளேன். நம் வாசகர்கள் ஒவ்வொருவரும், அவசியம் படிக்க வேண்டிய பதிவு...

சென்ற வாரத்தில் நமது தளத்தில் வெளியான - சுவாமி ஐயப்பன் கருணை கிடைத்த தொழிலதிபர் திரு. சந்திரசேகரன் அவர்கள் பற்றிய கட்டுரையை படித்து இருப்பீர்கள்... அவரது பேட்டியை முழுவதும் படிப்பதற்கு ஆவலாகவும் இருந்து இருப்பீர்கள்.

கிட்டத்தட்ட விரக்தியின் விளிம்பில் - இனி வாழ்க்கையே இல்லை என்று முடிவுக்கு வந்துவிட்ட , ஒரு சாமானியன் சரித்திரம் படைத்த சம்பவத்தை - அவர் கடந்து வந்த பாதையை, அவரது வாழ்வியல் கோட்பாடுகளை, வெற்றி ரகசியத்தை - அவரே பகிர்ந்து கொண்டு இருக்கிறார். எத்தனையோ கம்பெனிகளை நிர்வகித்துக் கொண்டு, நேரத்திற்கு சாப்பிட, தூங்க கூட முடியாமல் இருக்கும் இந்த மாமனிதர்,  இதற்கென நேரம் ஒதுக்கியதற்கு அவருக்கு ஒரு ராயல் சல்யூட்.

இவரைப் போன்ற வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எல்லாம், அவர்களது கடந்து வந்த பாதையை, வெளிச்சம் போட்டு காட்டுவது அபூர்வம். எத்தனையோ வாழ்வியல் தத்துவங்களை, அறிஞர்களின் உரைகளை  புத்தகங்களில்  படித்தாலும், கண் முன்னே வாழ்ந்து காட்டும் ஒரு மனிதனை நாம் உணர்வதற்கு ஈடாகாது.

மிக நேர்த்தியாக , அவரது கருத்துக்களை எழுத்து வடிவில் கொண்டுவந்து , படிக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் நம்பிக்கை சுடரை தூண்டி விட்டிருக்கும் நண்பர் சுந்தருக்கு, மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வளவு பெரிய பேட்டியை நேர்த்தியாக வடிப்பதற்கு அவர் உழைத்து இருக்கும் உழைப்புக்கு இன்னொரு ராயல் சல்யூட்.

அரை குறையாக நம்பியும், நம்பாமலும் கடவுளை வணங்கும் அனைவருக்கும், இவர் மேல் இறைவன் காட்டிக் கொண்டிருக்கும் கருணையை உணர்ந்த பிறகு, இறை நம்பிக்கை பல மடங்கு அதிகமாகும்.பொறுமையாக, ஓய்வு நேரத்தில் படியுங்கள்... உங்களின் பலப்பல கேள்விகளுக்கு, வாழ்க்கை புதிர்களுக்கு -  விடைகள், இந்த கட்டுரைகளில் ஒளிந்து இருக்க கூடும். 

படித்தோம், மறந்தோம் என்று இல்லாமல், எதை எல்லாம் வாழ்வில் நடைமுறைப் படுத்த இயலுமோ, அதை உடனடியாக நடைமுறைப் படுத்துங்கள்.. நிச்சயம் உங்கள் வாழ்வில் பல மடங்கு முன்னேறுவீர்கள்!

To read the interview of the legend - Mr. Chandra sekaran, please click on the following links :
You will proudly feel that you are gifted by God to read these articles.

சாம்பிளுக்கு :
======================================================================
திரு.ஆர்.சந்திரசேகரன் : எந்தக் கடவுள் கிட்டயும், நாம் வேண்டுவது ஒன்றாகத் தான் இருக்கவேண்டும். 1) அமைதியான வாழ்க்கையை கொடு 2) நிம்மதியான வாழ்க்கை கொடு 3) பிறருக்கு உதவும்படியான வாழ்க்கையை கொடு. இது மட்டும் தான் நாம் இறைவனிடம் வேண்டக்கூடியது. இது மூன்றையும் வேண்டினாலே எல்லாம் வந்துடும்.

அமைதியான வாழ்க்கை எப்படி வரும்? குடும்பத்துல எந்த சண்டை சச்சரவும் இல்லாம எல்லாரும் சந்தோஷமா இருந்தா அமைதி தானா வரும். நிம்மதி எப்போ வரும்? நாம் செய்யும் காரியத்துல ஒரு தன்னிறைவு நமக்கு ஏற்பட்டா நிம்மதி தானே வந்துவிடும். பிறருக்கு உதவக்கூடிய வாழ்க்கை எப்போ வரும்? பொருளாதார ரீதியாக நாம தன்னிறைவு பெற்று நம்மகிட்டே எக்ஸசா பணம் இருக்கும்போது தான் பிறருக்கு உதவமுடியும்.

So, மேலே சொன்ன மூன்றும் வேண்டிப் பாருங்க…. வாழ்க்கையில உங்களுக்கு எல்லாம் கிடைக்கும். நிறைவான வாழ்க்கை என்பது தான்.
“கேளுங்கள் கொடுக்கப்படும்…. தட்டுங்கள் திறக்கப்படும்….” அப்படின்னு சொன்னது உண்மை. கடவுளுக்கு இப்போல்லாம் நேரம் இல்லே. பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாயிடிச்சு. So, நம்ம ப்ரேயர் எப்பவுமே ஷார்ட் & ஸ்வீட்டா இருக்கணும்.
======================================================================
படித்து முடித்த பிறகு, யாரேனும் ஒருவருக்காவது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்கிற துடிப்பும், நம்பிக்கையும் அதிகமானால் - அதுவே இந்த கட்டுரை ஆசிரியருக்கு கிடைத்த வெற்றி!

இவ்வளவு நேர்த்தியான கட்டுரையை படைத்த திரு.சுந்தர் அவர்களை, நேரில் தொடர்பு கொண்டு பேசினேன். எப்படி இவரைப் பற்றி வெளியுலகுக்கு தெரியாமல் இருந்தது? படிக்கும் எங்களுக்கே இப்படி இருக்கிறதே! நேரில் நீங்கள் இருந்த போது எப்படி உணர்ந்தீர்கள்? முதலில் உங்களுக்கு இவரைப் போன்ற மனிதர்களை சந்திக்கும் எண்ணம் எப்படித் தோன்றியது? என்று கேட்டேன்.

அவர் சொன்ன சிம்பிளான பதில். "ரிஷி, சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு வெறியாக உள்ளே பதிந்து விட்டது.  அந்த எண்ணமே, இதைப் போன்ற சாதாரண நிலைமையில் இருந்து சாதித்துக் காட்டிய ஒவ்வொருவராக எனக்கு அடையாளம் காட்டுகிறது. முதலில் அவர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டு, என்னை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி வருகிறேன். இவற்றில், மிகச் சிறந்த கட்டுரைகளை , எனது இணைய தளத்தில் பகிர்ந்து கொள்கிறேன்...

திரு.சந்திரசேகரை சந்தித்தது, என் வாழ்வின் பெரிய திருப்புமுனை ... ஐயப்பனின் செல்லக் குழந்தையாக இருக்கும் இந்த மகா மனிதரை, அவரது நெருங்கிய வட்டம் தாண்டி - வெளியுலகத்துக்கு தெரிய வைக்க உரிய நேரத்தில் , அந்த ஹரிஹர சுதனே என்னைக் கருவியாக பயன்படுத்தி இருக்கிறான். அந்த வகையில் நான் பாக்கியசாலி. என்னையும், என் இணைய தளத்தையும், ஐயனின் கையில் ஒப்படைத்துவிட்டேன். கீழே உள்ள ஐயப்பன் படத்தைப் பாருங்கள். அருள்பாலிக்கும் கரத்தின் கீழே, தளத்தின் லோகோ இருக்கும்." என்று பரவசத்துடன் கூறுகிறார்.

என்னை மாதிரி லட்சக்கணக்கில் வாசகர்கள் , நேரத்தை முறையாக பயன்படுத்தாதவர்கள், பயன் படுத்த தெரியாதவர்கள் - என்று நிறைய பேர் இருக்கலாம். அவர்களில் ஒரு சிலருக்காவது இது மனதில் பதிந்து , நம்பிக்கையை பலப்படுத்தும், பாசிட்டிவ் எண்ணங்கள் அதிகமாகும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. நாங்களும் சாதிப்போம் ஒரு நாள் , இதே மாதிரி நாங்களும் ஒரு நாள் சாதனையாளர்களாக அறியப்படுவோம் " என்று நம்பிக்கையுடன் கூறினார்.  இந்த பெரிய மனதுக்கு , அவரும் அவரது நண்பர்களும் எடுக்கும் முயற்சிகள் வரலாறு படைத்திட, இறைஅருள் என்றும் துணை புரியட்டும்!

உங்களால் முடிந்தவரை , உங்கள் நட்பு வட்டாரத்தில் இந்த கட்டுரைகள் சென்றடைய உதவுங்கள்.. வாழ்க்கையின் வெற்றி சூட்சுமத்தை உணரும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

Part - ONE

அன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்!


Part  - TWO

மரத்தை வெச்சவன் தண்ணி ஊத்துவான் மனசை பார்த்து தான் வாழ்வை மாத்துவான் — கிரானைட் & ஹோட்டல் அதிபர் ஆர்.சந்திரசேகரனுடன் ஒரு சந்திப்பு! — PART II

Part  - THREE

“ரஜினியைப் போல உண்மையான உழைப்பு & நேர்மையான பக்தி இரண்டும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்!” – கிரானைட் அதிபர் திரு.சந்திரசேகரனுடன் ஒரு சந்திப்பு – FINAL PART!!


 வாழ்க அறமுடன்! வளர்க அருளுடன்!

3 comments:

யவனிகை said...

மனதை பெரிதும் தொட்ட வார்த்தைகள் "யாரையும் மனசாலயோ உடலாலயோ வதைக்கிறதுக்கு ஆண்டவன் நமக்கு அனுமதி கொடுக்கவேயில்லை". நம்ம பிள்ளைங்கள பெருசா படிக்கவக்கிறதோ இல்ல மீடியா'வோட வெளிச்சம் அவுங்க மேல பட்றதோதான் அவுங்க சாதனை இல்லை, எல்லாருக்கும் எல்லாரும் நல்லவங்களா தெரிய முடியாதுதான்,, ஆனா நம்மால ஒருத்தர் மனசு நொந்தாலோ, கண்ணீர்விட்டாலோ அதுதான் பாவம், அதேபோல நிச்சயமா ஒருத்தர் செய்ற துரோகத்த பொறுத்துக்க முடியாதுதான், ஆனா நாம பெத்தவர்கிட்ட கண்ணீர் விடுவோம், அவுங்க நல்லா இருக்க கூடாது அப்படின்னு இல்ல, "கடவுளே, அவங்கள தண்டிக்க வேணாம், ஆனா அவங்க எனக்கு செஞ்சது தப்புன்னு அவங்களுக்கு உணர்த்து, அவங்க நேரடியா வந்து மன்னிப்பு கேக்க வேணாம், ஆனா அவங்க மனசுலயாவது இத தோண வை", அப்படிங்கறதுதான். அந்தவகையில் சந்திரசேகரன் ஐயாவின் அம்மா அவரை நல்லபடியாகவே வளர்த்திருக்கிறார்,
ஆனால் நாமெல்லாம் என்ன செய்கிறோம், "அந்த தாத்தா பாட்டிகிட்ட போகாத, ஒட்டிக்கும், வாய் நாறும்","என் மாமியா சரியானது, என் பிள்ள நாள்பூரா அழுதாகூட விட்டுட்டு டிவி பாக்கும்", மனைவிவழி உறவுகளால் அனுகூலம் என்றால் பெற்றவர்கள்கூட விருந்தாளிகள், இவர்கள் என்ன செய்துவிட்டார்கள் எனக்கு, பள்ளிக்கு பழையசோறு, ஒரேமாதிரி துணியில் அனைவருக்கும் சட்டை, அப்பா குடித்துவிட்டு வந்து அடித்தவர்தானே எனும் மனப்பாங்கு, இதை நம் பிள்ளைகள்மூலம்தான் மாற்ற முடியும், வீட்டிற்கு வருபவர்களுக்கு நீர்குடுக்க பழக்குவது, யோசித்துபாருங்கள், அதன் ஆழாக்கு சைசுக்கு அதன் சைசிலேயே ஒரு ஜக்கை தூக்கமுடியாமல் தூக்கிவருவதை, கற்பனைக்கே திருஷ்டி சுற்றவேண்டும், பள்ளிவிட்டு வந்தவுடன் தாத்தா பாட்டி சாப்டிங்களா என கேட்க பழக்குவது, அவர்கள் கையால் பால் குடிப்பது, இருவீட்டு பெரியவர்களையும் சமமாக மதிக்க பழகுவது என நாம் கற்றுகொடுக்கும் பழக்கங்கள்தான் உண்மையில் அவர்களின் சொத்து. அவ்வகையில் வாழ்வில் தன்னிறைவு, நல்லகுடும்ப பழக்கம், முயற்சி, கடவுளிடம் சரணாகதி உடையவன் எதையும் அடையலாம் என்கிறது சந்திரசேகர் அவர்களின் வாழ்க்கை,

Rishi said...

மிக அருமையாக, தெளிவாக கூறியிருக்கிறீர்கள் சகோதரி. எங்கோ இருக்கும் முகம் தெரியாத மனிதர்களிடம் நல்ல பெயரெடுப்பது , உலகப் புகழே அடைவது கூட முக்கியமில்லை. நம் நெருங்கிய ரத்த பந்தமும், சொந்த பந்தமும் நம்மை மதிக்கும்படி, அன்பு செலுத்தும்படி , நாம் அவர்களிடம் அன்பு செலுத்த வேண்டும். இறைவன் , இது மாதிரி சொந்த பந்தங்களுக்கு இடையில் நம்மை பிறக்க , வளர வைத்திருப்பதற்குப் பின்னால், நிச்சயம் ஏதோ ஒரு கணக்கு இருக்க வேண்டும். உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!

Simple Sundar said...

என்னுடைய இந்த சந்திப்பை இங்கு பதிவிட்ட ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றி. ஒரு பதிவை எத்துனை பேர் படிக்கிறார்கள் என்பதை விட யார் யாரெல்லாம் படிக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் வாழ்க்கையில் பயனுள்ளவற்றை, நல்ல விஷயங்களை, தெய்வத்தை, கருணையை, வழிகாட்டுதல்களை தேடி வந்து இங்கு வாசகர்களாக மாறிவிட்ட நமது LIVINGEXTRA.COM தள அன்பர்களுக்கு இந்த கட்டுரை சமர்பிக்கப்பட்டதை என்னை பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

கட்டுரை உங்கள் அனைவரையும் கவர்ந்திருக்கும் என நம்புகிறேன்.

திரு.சந்திரசேகர் கூறியவற்றை நடைமுறைப் படுத்தி பாருங்கள்.... உங்களை சுற்றி நடக்கும் அதிசயத்தை உணர்வீர்கள். ஏனெனில், இது அவரது வாக்கு அல்ல... அவரை இயக்கொண்டிருக்கும் அந்த கருணைக் கடல் ஐயப்பனின் வாக்கு!

என்றென்றும் நன்றியுடன்...

- சுந்தர்
OnlySuperstar.com

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com