Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

இந்த மாதிரி எப்போதாவது யோசித்து பார்த்ததுண்டா? (A must read article till the end)

| May 19, 2012
விஞ்ஞானிகள் எல்லோரும் கிட்டத்தட்ட சொல்ற ஒரு விஷயம் - நம்ம இந்த பூமிங்கிறது சூரியனில் இருந்து தெறித்த ஒரு நெருப்புத் துளி. மெல்ல மெல்ல அது குளிர்ந்து, நிலமாக, நீராக , காற்றாக மாறி - பின் உயிரினங்கள் தோன்றி இருக்கின்றன. இதற்க்கு பல லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகி இருந்து இருக்கும் என்கிறார்கள். (படிச்ச புள்ளைங்க எப்படிய்யா பொய் சொல்லும்? )

இப்படி இருக்கும்போது, கடவுள் / இறைவன் என்பது எங்கு , எப்போது இருந்தது வந்தது என்பது , அவர் ஒருவர் இருப்பதை ஒப்புக்கொள்வது என்பது - முழுவதும் நிரூபணம் ஆகாத ஒரு விஷயம். அவரவர் தனிப்பட்ட அனுபவங்கள் பொறுத்து அல்லது நம்பிக்கை பொறுத்து தான் இறைவன் இருக்கிறார். கடவுள் என்பவர் சர்வ வல்லமை பொருந்தியவர். அவர் நினைத்தால், ஒரே கணத்தில் நம் கஷ்டங்கள் பறந்து விடும். அவரிடம் சரணடைந்து விடு. அவர் எல்லாம் பார்த்துக்கொள்வார் என்று சொல்லி, சொல்லித் தான் நாம் வளர்க்கப்பட்டு இருக்கிறோம். குழந்தையாக இருக்கும்போது குழம்பாமல் ஏற்றுக்கொண்ட நாம் , கொஞ்சம் வளர்ந்த பிறகு - கடவுள் இல்லையென்று சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்குமே என்று தசாவதாரம் படத்தில் கடைசியில் கூறியதைத்தான் மனதளவில் பிரதிபலிக்கிறோம்.

ஆனால், நம் நாட்டிலோ சித்தர் பெருமக்கள் - அவன் அருளை உணர்ந்து அனுதினமும் பரவசப்படுகிறார்கள். நம்மைப் போன்ற சாமான்யர்களும் இறைவனின் கடைக்கண் பார்வை கிடைக்காதா என எதிர்பார்ப்புடன் ஏங்குகின்றனர். கார்த்திகை தீபத்திற்கும், தைப் பூசத்திற்கும், சித்ரா பௌர்ணமிக்கும், சூர சம்ஹாரத்திற்க்கும் - லட்சோப லட்சம் மக்கள் கூடுகின்றனர். எல்லோருக்குமே பிரச்னை தீர்ந்து விடுகிறதா? ஒரு சிலருக்கு கிடைக்கும் பாக்கியம் ஏன் அனைவருக்கும் கிடைப்பதில்லை. கும்பிடுபவர்களின் அப்பழுக்கற்ற நம்பிக்கை என்று ஒரே வார்த்தையில் சொல்லி விடுகின்றனர் , விவரம் அறிந்தவர்கள்.

ஆனால் உயிர் என்பது என்ன? உடலில் எங்கே இருக்கிறது? இறந்த பிறகு அந்த உயிருக்கு என்ன நடக்கிறது ? பிறக்கும் ஒரு குழந்தை எப்படி குடிசையில் ஐந்து குழந்தையோடு ஆறாவதாகப் பிறந்து கஷ்டப்பட விருக்கிறது? இன்னொரு குழந்தை - குளு குளு AC அறையில் பிறக்கிறது? இதை யார் தீர்மானிப்பது - என்பதற்கு எல்லாம் - விடை இன்னும் கிடைத்த பாடில்லை. புதிர். அல்லது இதெல்லாம் ஒரு இயல்பான சம்பவம். இயற்கை. இதையெல்லாம் முழுவதுமாக புரிந்து கொள்ள முடியாது என்று தீர்மானிக்கிறார்கள்.

ஒரு பெரிய ஆட்டு மந்தையில் பிறக்கும் ஒரு ஆட்டுக்குட்டி, எத்தனையோ ஆடுகள் கூட இருக்கும்போதும், பிறந்ததும் தனது தாய் ஆட்டை சரியாக அடையாளம் கண்டு, சரியாக பால் மடியில் - வாயை வைத்து உறிஞ்சுவது - இதையெல்லாம் யார் அதற்க்கு சொல்லிக் கொடுத்து இருப்பார்கள்? வீல், வீல் என்று கத்தும் குழந்தையை அன்னை எடுத்து அணைத்ததும், அந்த கத கதப்பை உணர்ந்ததும் - படக்கென்று அழுகையை நிறுத்தி , புன்னகை செய்கிறதே..? எப்படி? என்ன நடக்குது இங்கே? எப்படி இதெல்லாம் !

சரி, உயிர்னா நிஜமாவே என்ன பாஸ்? நம் உடம்புக்குள் ஓடும் காற்றா? இருக்காதே..? செத்துப் போன பிறகும் , காற்று உள்ளே போய் வந்துக்கிட்டுத் தானே இருக்கும்? அப்படித் தானே சொல்றாங்க.. ஓகே.. காற்றைப் பார்க்க முடியலை. ஆனா உணர முடியுதே. காற்று வீசினால் , செடி கொடிகள் அசைகின்றன. நம்ம உடம்புக்குள்ளே காற்று போகுது. வெளியே வருது. ரத்தமா? தெரியலை. இப்படி இருக்குமோ...? சூடு - உஷ்ணம் ! அட, இருக்கலாம்பா. இந்த சூடு போயிடுச்சுனா, உசிர் போயிடுச்சுனா, உடம்பு சில்லுனு ஆகிடுதே. இதைத் தான் உயிர்னு சொல்றோமோ..! ஒரு குறிப்பிட்ட உஷ்ணம் , நம்ம உடம்புலே எப்படி மைண்டைன் ஆகுது..? கூடுச்சுனா, காய்ச்சல் அடிக்குதுங்கிறோம். குறைஞ்சதுனா, குளிர் ஜுரம். உடம்புக்கு முடியிறது இல்லே.., தெம்பு இல்லே..!

உயிர் எங்கே , எந்த புள்ளியிலே இருக்கு? சூரியன் - நெருப்பு. சூரியன்ல இருந்து வந்த பூமி ஒரு நெருப்புத் துளி. பூமியில் இருக்கிற நமக்குள்ளேயும் ஒரு சின்ன உஷ்ணம் இருக்குது இல்லே..? அதையே உயிர்னு சொல்றாங்களோ..!

எப்படி இந்த உயிர் உற்பத்தி ஆகி இருக்க கூடும் என்பதை விஞ்ஞானிகள் சொல்வது ஒரு புறம் இருக்கட்டும். நாம கொஞ்சம் இப்போ யோசித்துப் பார்ப்போம்.

கசாப்பு கடையிலே ஆட்டை வெட்டி , கட்டித் தொங்க விட்டு இருப்பாங்க, பார்த்து இருப்பீங்க....! அதை வெட்டி, கூறு போட்டு கொடுக்கிறாங்க. அதை, அப்படியே ஒரு நாள் விட்டுட்டா, என்ன ஆகும்..? புழுவா நெளிய ஆரம்பிக்கும்? இந்த புழு எல்லாம் எங்கே இருந்து வந்தது..? அதுக்கு முன்னேயே அந்த ஆட்டு உடம்புலே இருந்து இருக்குமோ? இறந்த பிறகு தான் வரணுமா?

சூரியன்ல இருந்து, தெறிச்சு விழுந்த பூமி - ஆறிய பிறகு, உயிரினங்கள் இப்படித்தான் தோன்றி இருக்குமோ..? ஆனா, பூமி செத்துப் போயிடுச்சுன்னு கூட சொல்ல முடியாதே..! அதுவா தன்னை சுத்திக்குது. அப்படியே வருஷத்துக்கு ஒருமுறை சூரியனையும் சுத்துது... ! ஒரு குறிப்பிட்ட அச்சுல சாய்வா வேற இருக்கு...! எந்த விசை இதை தாங்கிப் பிடிக்குது? கடல், ஆறு, மழை, தண்ணி .... அப்புறம் ஒரு குறிப்பிட்ட உயரம் வரை காற்று. குறிப்பிட்ட உயரம் வரை இருக்கிற ஈர்ப்பு சக்தி... ! அடேங்கப்பா..! அப்புறம் - நெருப்பு , வெளிச்சம், ஒளி. இப்படி நீர், நெருப்பு, காற்று என்கிற - மூன்று மாபெரும் விஷயங்கள்.

அதுக்கு அப்புறம், நிலம். ---- அட அடா! நிலத்தை சும்மா தோண்டிப்பார்த்தா , ஒண்ணுமே இல்லை - வெறுமே மண்ணுதான் வருது. அதுலேயே ஒரு விதையைப் போட்டு , தண்ணி ஊற்றி விட்டால் - கொஞ்ச நாள் கழிச்சு என்ன என்னமெல்லாம் வருது..! காய் கனி , பூக்கள் , மரம், செடி , கொடி , கிழங்கு , நெல் , கோதுமை , என்ன வேணும்..? எல்லாமே தர்றேன்..! எடுத்துக்கோ... ! விதை - இடம் - காலம் அவ்வளவுதான் , என்ன வேணும்னாலும் கிடைக்கும்... இப்படி ஒரு உயிர் துடிப்புள்ள நிலம் இருக்கும்போது , பூமி ஒரு உயிர் இல்லாத வஸ்து என்று எப்படிக் கூற முடியும்? நிலம் உயிருள்ளது, அபரிமித சக்தியை உள்ளடக்கியது என்கிற அடிப்படையில் தான் வாஸ்து சாஸ்திரத்தையே நம்மவர்கள் கண்டு பிடித்துள்ளார்கள்

இந்த நான்கு விஷயங்கள் தவிர - ஐந்தாவது வானம்... அடேயப்பா... ! இருக்குதா இல்லை கற்பனையா அது..? ஆனா, எந்த ஒரு உயிரினமும், வானத்தில் இருந்துதான் எல்லா சக்தியையும் எடுத்துக் கொள்கிறதாம். பஞ்ச பூதங்களுக்கும் ஆதாரமாக இருப்பது - இந்த ஆகாயம் தான். மேகத்தில் தொடங்கி, பூமி , சூரியன், கோடானு கோடி சூரியன்கள் எல்லாவற்றுக்கும் இடம் கொடுத்து - மாபெரும் சக்திக் களஞ்சியமாக இருப்பது இந்த ஆகாயம் தான். அங்கு இருப்பது தானே சூரியன். சூரியனில் இருந்து பூமி, இப்படி தொட்டு தொட்டு எல்லா சங்கதிகளும் ஆரம்பித்தன.

ஒரு துளி விதையில் இருந்து, இல்லை விதையில் கூட ஒரு சிறு புள்ளியில் இருந்து , நிலத்தில் உள்ள சத்துக்களை உறிஞ்சியபடி வளரும் ஒரு செடி, ஆகாயத்தில் இருந்தே, முழு சக்தியையும் பெற்றுக்கொண்டு , ஒரு குறிப்பிட்ட கால கதியில் - ஒரு மாபெரும் விருட்சமாக வளர்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால், சாதாரண வளர்ச்சி என்றுதான் தோன்றும். ஆனால், யோசித்துப் பாருங்கள்.. நிஜமாகவே அதிசயம். !

ஒரு சிறு குழந்தை எப்படித் தோன்ற ஆரம்பித்து , வளர்ந்து - மாபெரும் மனிதனாக வளர்கிறான்.... ஒரு நிமிடம் கற்பனை செய்து பாருங்கள்....! இயற்கையில் இருந்து எவ்வளவு சக்தியை எடுத்துக் கொண்டுள்ளோம்..! பஞ்ச பூதங்களில் இருந்து தான் எல்லாமும் பெற்றுள்ளோம். அவற்றின் ஒரு அங்கமாக தான் நம் உடலும் இருக்கிறது. நம்முள்ளும் தசை, நீர், ரத்தம், காற்று, வயிற்றில் பசியாகிய நெருப்பு - அடேங்கப்பா..!

ஆகாயம் , எங்கேப்பா இருக்கிறது என்று கேட்கிறீர்களா? அதுதான் நம்ம மனசு. அப்படி ஒன்னு இருக்குதா, இல்லையான்னே தெரியாத, ஆனால் உணர மட்டுமே முடிந்த ஒரு விஷயம். இயற்கையைப் போலவே - இங்கும் மனத்தில் ஒரு எண்ணம் (விதை) விழுந்து, அந்த எண்ணம் நிறைவேற - நம் செயல்கள் (சத்துக்கள்) துணை நிற்க, அங்கே ஒரு குறிப்பிட்டகால இடைவெளியில் வளர்ச்சி தென்படும். எண்ணங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய செயல்கள் மட்டுமே மனிதனின் வாழ்வை தீர்மானிக்கின்றன.

ஒளியையும், ஒலியையும் விட வேகமான ஒரு விஷயம், நம் மனது தான். எப்படி, நினைத்த மாத்திரத்தில் ஒரு பத்து வருடங்களுக்கு முன்னே நடந்த ஒரு விஷயத்தை , மனக் கண்ணில் உங்களால் கொண்டு வர முடியுமோ, அதே போல - பத்து வருடம் கழித்து நடக்க விருப்பதையும், நீங்கள் பார்க்க முடியும். இந்த visualisation தான் , ஒரு சாதிக்க கூடிய உத்வேகத்தை உங்களுக்கு அளிக்கும். சில வருடங்கள் கழித்து, நமக்கு என்ன வேண்டும், எப்படி ஆக விருக்கிறோம் என்கிற எண்ணத்தை, விதையை - மிக தெளிவாக உங்கள் மனதில் பதித்து, அதற்கேற்ப செயல்களை ஒரு முகப்படுத்தி செய்ய செய்ய - அந்த விதை விருட்சமாக வளர்ந்து, உங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்லும்... !

இந்த கால சூத்திரத்தை உணர்ந்து, அதை ஜெயித்தவர்களே சித்தர்கள். ஒருவரை பார்த்தவுடன், அவர்களது ஜென்மாந்திரத்தையே கணிக்க கூடியவர்கள்.இந்த கால சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே , ஜோதிட சாஸ்திரம் தோன்றியிருக்கிறது.

இந்த மனதை மட்டும் அவ்வப்போது கவனித்து வாருங்கள். நீங்கள் நல்லது செய்யும்போதும், கெட்டது செய்யும்போதும், ஏன் இந்த கட்டுரையை படிக்கும்போதும் - அது உங்களிடம் பேசும். அதை நீங்கள் உணர முடியும். மனதையும் கட்டுப் படுத்தும், கவனிக்கும் அந்த 'நான்' தான் - நீங்கள். ஆன்மா என்கிறார்கள் இதை.

நமக்கு மிக வேண்டியவர்கள் கண் முன்னே துடிக்கும்போது , வருத்தப்படுவது இந்த நான் தான். ஆத்மாவும், ஆத்மாவும் உணரக்கூடிய இடத்தில் அன்பு மேலோங்கும். ஆத்மார்த்தமான நட்பு என்கிறோமே..! நம் சொந்த உறவுகளிலும் கூட, இந்த ஆத்ம பரிச்சயம் அவசியம். வெறுமனே மேலோட்டமாக அப்பா, அம்மாவிடம் அண்ணன், தங்கையிடம், நபர்களிடம் பழகுவதை, பேசுவதை விட, ஆன்ம ஈடுபாட்டோடு - அவர்கள் சொல்வதை கவனித்துப் பேசிப் பாருங்கள். உங்கள் அந்த நான் அதை உணர்ந்து கவனிக்கட்டும். வாழ்க்கையில், உயரங்களைத் தொட்டவர்கள் அனைவரும், இன்றும் கடை பிடிக்கும் ஒரு அடிப்படை விஷயம் இது.

ஆகாயத்தில் இறைவன் இருக்கிறார் என்பது போல, நம் மனத்தின் உள்ளும் - இறைவன் இருக்கிறார். உள்ளத்தின் நின்று ஒளிரும் அந்த ஒளி, இந்த அண்ட, பிரமாண்டத்தைப் படைத்த அதே பேரொளி தான்.
கடவுள் இருக்கிறாரா, ஆலயங்களில் இருப்பது நிஜமா...? சந்தேகத்துக்கு இடமில்லாத சர்வ நிச்சயம் இது. நமக்குள்ளேயே இறை ஒளி இருக்கும்போது, ஆலயங்களில் அந்த ஒளி இன்னும் அதிகமாகவே இருக்கிறது. தீப ஒளி வழிபாடு , இதில் இருந்தே தொடங்கி இருக்கவேண்டும். ஆலயங்களுக்குள் செல்லும்போது, நம் மனது ஒடுங்கி, அமைதி பெறுகிறதே, இதில் இருந்தே தெரிந்து கொள்ள வேண்டாமா..?
இத்தனை தெய்வங்கள் இருக்கிறார்களே ? ஆமாம் இருக்கிறார்கள். அவர்களை தரிசித்த சித்த பெருமக்களும் நம்முள் இருக்கிறார்கள். நமக்கு , நம் கஷ்டங்களில் இருந்து விடுபட சில அரிய வழிமுறைகளையும் ஓலைச் சுவடிகளில் எழுதி இருக்கிறார்கள். நாம் அவற்றை உணர்ந்து கொள்ள, நமது நேரம் அதற்க்கு ஒத்துழைக்க வேண்டும். அந்த காலத்தில் சுவடி. இந்த காலத்தில் பேப்பர், பேனா , கம்ப்யூட்டர் என்று வந்து விட்டது.
அந்த மாபெரும் பரம்பொருளின் கருணையால், அண்ணாமலையாரின் அனுக்ரஹத்தால், பொக்கிஷம் போன்ற சில குறிப்புகள், எளிய பரிகார முறைகள் - ஒவ்வொரு ராசி, நட்சத்திரத்திற்க்கும் பொருந்தக் கூடிய முத்துக்கள்,  பழைய ஓலைச் சுவடிகளில் இருந்து எடுத்த அபூர்வ குறிப்புகளைப் பார்க்கும் பாக்கியம் எனக்கு சமீபத்தில் கிட்டியது. அதில் உள்ள சில ஆலயங்கள் பற்றிய வியக்கத்தக்க தகவல்கள் , நிஜமாகவே என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. அதில் சில ஆலயங்கள் இப்போது சிதிலமடைந்து, அதே இடத்தில் இப்போது புதிய ஆலயங்களும் எழுப்பப்பட்டுள்ளன. அவற்றிலும், அதே அருள் இன்றும் நித்திய பரிபூரணமாக கிடைத்து வருகிறது. எதோ ஒரு காரணத்தால் , விண்ணில் இருந்து சில குறிப்பிட்ட கதிர் வீச்சுக்கள் அந்த ஆலயத்தில் கிரகிக்கப் படுகிறது என்பதை உணர முடிகிறது. . கூடிய விரைவில், கொஞ்சம் கொஞ்சமாக உங்களிடம் பகிர்ந்து கொள்ள விருக்கிறேன்.
என்னோட நல்ல நேரம், நான் இந்த தளத்தோட கட்டுரைகளைப் படிக்க வாய்ப்பு கிடைச்சதுன்னு, இங்கு வரும் ஒவ்வொரு வாசக அன்பு உள்ளங்களும் நினைக்கணும். அவங்க வாழ்க்கைக்கு உபயோகமா ஒரு ஒரு சிறிய தகவலாவது, நமது இந்த கட்டுரைகளில் கிடைக்கணும். கஷ்டங்களில் இருந்து முழுவதும் விடுபட்டு, வாழ்க்கையில் பெரிய அளவில் சாதிக்க விருக்கும் உங்கள் எண்ணங்களுக்கு ஒரு சிறிய நம்பிக்கைப் பொறி இங்கே இருந்து கிடைக்கணும்.

இது எல்லாமே, உங்களைப் போலவே கொஞ்சம் கொஞ்சமா வாழ்க்கையில நானும் நல்லதொரு நிலைமைக்கு வந்துக்கிட்டே, கிடைக்கிற நல்ல அனுபவங்களை,எனக்கு நன்கு தெரிந்த,  மிக  உருப்படியான விஷயங்களை  உங்க கிட்டே இங்கே பகிர்ந்து கொள்ளனும். அவ்வளவுதான் பாஸ்... ! எனக்குள்ளே மட்டும் பொத்தி பொத்தி ரகசியமா வைச்சுக் கிட்டு , எதை சாதிக்கப் போறேன்..?

After  all , ஒரு மனுஷனுக்கு என்ன சார் வேணும்? ஒரு USEFUL BODY with PEACEFUL MIND. சொன்னது யார்னு நினைக்கிறீங்க..? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். யோசிச்சுப் பாருங்க... !இதுக்குள்ளேயே சகலத்தையும் அடக்கிட்டாரு.  நம்ம ஒட்டு மொத்த வாழ்க்கையுமே, அந்த பாதையில் தான் போய்க்கிட்டு இருக்கு. அப்படிப் போகலைனா, டக்குன்னு அந்த பாதைக்கு வாங்க..!மன நிம்மதி அவரவருக்கு வேறுபடலாம். நல்லா சம்பாதிப்பதாக இருக்கலாம். நிறைய சாதிப்பதாக இருக்கலாம். குடும்பத்தை நல்லபடியா வைத்துக் கொள்வதாக இருக்கலாம். மனசு சஞ்சலப்படாம, கவலைப்படாம, குதூகலமா, நிர்மலமா இருக்கணும். அதன் பிறகு, 'ஆட்டோமேட்டிக்'கா கடவுளைத் தேட ஆரம்பிக்கும்.

OK , பதிவு கொஞ்சம் நீண்டு விட்டது. மீண்டும் அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்...!
========================================================
இந்த தளம் ஆரம்பித்ததில் எவ்வளவு நன்மை பாருங்கள்... நமது வாசக நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த மின்னஞ்சலை கீழே கொடுத்துள்ளேன். கடவுளை நம்புபவர்களுக்கு , இது ஒரு புதையல் கிடைத்த மகிழ்ச்சி தரும். இது சம்பந்தமாக , நமது பழைய கட்டுரை ஒன்று உங்களுக்கு ஞாபகம் வரலாம்...! அது இரண்டாவது சம்பவம்.  படித்துப் பாருங்கள்... ! பரவசப்படுங்கள்...!


Hanuman seen in the Himalayas?


"TRUTH IS STRANGER THAN FICTION
The picture was purportedly taken of Hanuman in a cave at Manasarovar Lake (Kailash) in the Himalayas during 1998 summer.

A group of people went to Manasarovar for a piligrimage trip. It is said that person taking the picture saw a light inside a cave, photoed that light and died there on spot for reasons not known (this part every one is confirming who went along). Later the friends developed the roll from the camera and got this print!.

9 comments:

arul said...

nice explanation

ஸ்ரீகாந்த் said...

nice posting...keep posting.....lord shiva bless you.....

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல விளக்கங்கள் ! வாழ்த்துக்கள் !

muniasamy said...

nice explanation sir, aanal aanmavai ariya oru aria vaippu sorry, sorry, ariya alla unara oru aria vaippu பாண்டிச்சேரி, நாகர்கோவில் ஸ்பெஷல்… என்ன ஸ்பெஷல் இரண்டிற்கும்? ஒன்று குமரி முனையில் மற்றொன்று எதிர்முனையில். இரண்டிற்கும் என்ன ஒற்றுமை என்று கேட்கும் அனைவருக்கும், புன்னகையோடு நாங்கள் கூறும் பதில்… சத்குருவுடன் ஈஷா யோகா.சந்தோஷம்கிறது எனக்குள்ளேதான் இருக்குன்னு நல்லா புரிஞ்சிருச்சு!

இவ்வளவு நாளா நான் காத்திருந்தது இந்தப் பயிற்சிக்குத்தானோன்னு தோணுது!

உடம்பையும் மனசையும் உயிரையும் தெரிஞ்சுக்கிற அதிசயம் இங்கே நடந்தது.

என்னை வாட்டியெடுத்த உடம்பு வலியெல்லாம் எங்கே போச்சுன்னே தெரியலை. சுகர் பேஷன்ட்டான எனக்கு இப்போ எல்லாமே கன்ட்ரோலுக்கு வந்துருக்கு!

- சந்தோஷமும் உற்சாகமுமாய் பதில் கூறுவது, ஏற்கனவே சத்குருவுடன் ஈஷா யோகா வகுப்பில் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்புவோர் கவனிக்க வேண்டியவை:
முன் பதிவு அவசியம். ஜாதி, மதம் தடையில்லை. 15 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் அனைவரும் பங்கேற்கலாம். இதுவரை ஈஷா வகுப்புகளில் கலந்து கொள்ளாதவர்கள் மற்றும் ஏற்கெனவே 13 நாட்கள் ஈஷா யோகா வகுப்புகளில் கலந்து கொண்டு, இன்னும் ஷாம்பவி மஹாமுத்ரா தீட்சை பெறாதவர்கள், சத்குரு நடத்தும் இந்த வகுப்புகளில் பங்கேற்கலாம். தொலைதூரத்தில் இருந்து வந்து கலந்து கொள்பவர்களுக்கு தங்கும் வசதி செய்து தரப்படும் (தங்குமிட வசதிக்கும் முன்பதிவு அவசியம்).பங்கேற்றவர்கள்தான்.

கோடியில் ஒருவன் said...

////////////////////// எண்ணங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய செயல்கள் மட்டுமே மனிதனின் வாழ்வை தீர்மானிக்கின்றன. ////////////////////

உண்மை தான். நம் மனதிற்கு இருக்கும் சக்தி வேறு எதற்கு கிடயாது. சுவாமி விவேக்காந்தர் இதை அடிக்கடி கூறுவதுண்டு.

/////////////////////// ஒரு சாதிக்க கூடிய உத்வேகத்தை உங்களுக்கு அளிக்கும். சில வருடங்கள் கழித்து, நமக்கு என்ன வேண்டும், எப்படி ஆக விருக்கிறோம் என்கிற எண்ணத்தை, விதையை - மிக தெளிவாக உங்கள் மனதில் பதித்து, அதற்கேற்ப செயல்களை ஒரு முகப்படுத்தி செய்ய செய்ய - அந்த விதை விருட்சமாக வளர்ந்து, உங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்லும்... ! //////////////////////

மெய்யாலும் மெய் வார்த்தைகள். இத்தோட வலிமையை உணர்ந்தவங்க என்னை விட வேறு யாராவது இருக்க முடியுமா? இத்தோட நற்பலன்களை அனுபவித்து வருகிறேன். எதிர்காலத்தில் ஆண்டவன் அருளால் பெரியளவில் அனுபவிப்பேன்.

////////////////////// என்னோட நல்ல நேரம், நான் இந்த தளத்தோட கட்டுரைகளைப் படிக்க வாய்ப்பு கிடைச்சதுன்னு, இங்கு வரும் ஒவ்வொரு வாசக அன்பு உள்ளங்களும் நினைக்கணும். கஷ்டங்களில் இருந்து முழுவதும் விடுபட்டு, வாழ்க்கையில் பெரிய அளவில் சாதிக்க விருக்கும் உங்கள் எண்ணங்களுக்கு ஒரு சிறிய நம்பிக்கைப் பொறி இங்கே இருந்து கிடைக்கணும். //////////////////////

இதோ நானே சொல்றேனுங்க.... என்னோட நல்ல நேரம், நான் இந்த தளத்தோட கட்டுரைகளைப் படிக்க வாய்ப்பு கிடைச்சது. இது பற்றி நான் நேரம் வரும்போது பேச வேண்டிய இடத்துல பேச வேண்டியவங்க மத்தியில பேசுவேன். அது மட்டும் உறுதி.

எத்தனையோ வேலைகளுக்கு மத்தியிலும் நான் இந்த தளத்துக்கு வந்து கட்டுரைகளை படிச்சு அதுக்கு தவறாம பின்னூட்டம் போடுற காரணம் என்ன தெரியுமா?

எந்த வித பிரதிபலனும் இல்லாமல், இதை செய்யும் ஆசிரியருக்கு நான் செய்யும் சிறு கைம்மாறு. ஒரு படைப்பாளிக்கு அவனது படைப்பை பாராட்டுவதை விட சந்தோஷம் வேறு என்ன இருக்கமுடியும்?

அதுவும் நம் ஆசிரியர் போன்ற படைப்பாளிகள் நம்மிடம் எதிர்பார்ப்பது புகழ்மொழிகளை கூட அல்ல. அவரது எழுத்துக்கள் மற்றும் கருத்துக்கள் மீதான தங்களின் விமர்சனங்கள், பதில்கள் இவை தான்.

நம் எழுத்துக்களால் உலகில் எந்த மூலையிலாவது துயரப்படும் கஷ்டப்படும் யாராவது ஒருவர் பயன் பெற்றால் கூட சந்தோஷமே என்று எண்ணி, பக்க பக்கமாக எழுதும் அவரது அந்த நல்ல உள்ளத்திற்காகத் தான் நான் பின்னூட்டம் இடுகிறேன்.

குப்பைகளையும், வதந்திகளையும், தரக்குரைவான் தனி நபர் தாக்குதல்களையும், சினிமா நடிகைகளை பற்றியும் இணையங்களில் வரும் கட்டுக்கதைகளையும் தங்களது பேஸ்புக்கில் தினசரி ஷேர் செய்து சமூகத்துக்கு மாபெரும் தொண்டாற்றி வரும் பலர், இது போன்ற நல்ல கட்டுரைகளை மட்டும், தாங்கள் படிப்பதோடு நின்றுவிடுகிறார்கள். அவற்றை மறந்தும் கூட ஷேர் செய்வதில்லை. நமக்கு தெரிஞ்ச நாலு விஷயம் மற்றவர்களுக்கும் தெரியட்டும் என்று ஆசிரியர் நினைப்பதனாலே தான் இந்த தளமே நமக்கு கிடைத்தது? இல்லேன்னா கிடைக்குமா?

இந்த கட்டுரைகளை படிப்பதனால் எனக்கு நேரடியாகவே பயன் கிடைப்பது ஒரு புறமிருக்கட்டும்... மறுபுறம் இதை தனது கடும் வேலைகளுக்கு மத்தியில் செய்து வரும் ஆசிரியரைப் பற்றி நினைத்து பார்க்கவேண்டும்.

இந்த தளத்தில் இடம்பெறும் வார்த்தைகளைஎல்லாம் வெளிநாட்டில் பணம் கட்டி போய் வகுப்பில் உட்கார்ந்து கற்றுக்கொண்டு வருகிறார்கள். ஏன் இங்கேயே கூட அது மாதிரி வந்துடுச்சு. இது இலவசமா கிடைக்கிறதனால என்னவோ இத்தோட அருமை நிறைய பேருக்கு தெரியலே. ஏன்னா எது ஒன்னு சுலபமா கிடைக்குதோ அத்தோட அருமை மனுஷனுக்கு அதிகம் தெரிவதில்லே.

நல்லதை செய்பவர்களை, நல்ல விஷயங்களை எப்பவுமே என்கரேஜ் செய்ய கற்றுக்கொள்வோம்.

We often take for granted the very things that most deserve our gratitude.” — Cynthia Ozick

இந்த சூழலில், இந்த தளத்திற்கு வருகை தரும்போது மறக்காமல் தங்கள் பின்னூட்டங்களை - அவை ஒரு சில வார்த்தைகளானாலும் தெரிவித்து வரும் அனைவருக்கும் என் நன்றி. மற்றும் இங்கு வரும் நல்ல கட்டுரைகளை தங்கள் பேஸ்புக்கில் ஷேர் செய்பவர்களுக்கும் நன்றி.

இதை நான் ஆசிரியர் சார்பா சொல்லலே. பலனடைந்தவர்கள் சார்பா சொல்றேன்.

செய்த உதவிக்கும் நன்றி தெரிவிப்பவன் மட்டுமே மேற்கொண்டு எதிர்பார்க்கும் உரிமையை பெறுகிறான். நாம் ஆசிரியரிடமிருந்து பெறவேண்டிய எழுத்துக்கள் வழிகாட்டுதல்கள் இன்னும் நிறைய உள்ளன.

நன்றியுடன் இருப்போம். நன்மைகளை பெறுவோம்!!

- கோடியில் ஒருவன்

Rishi said...
This comment has been removed by the author.
aru said...

powerfull matter told very lightly superb thanks
aru
9486474975

Rishi said...

வழக்கம்போல், உற்சாகமாக வாழ்த்துக்கள் தெரிவித்த அருள் சார், ஸ்ரீகாந்த் சார், தனபாலன் சார், முனிசாமி சார் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி...! நண்பர் கோடியில் ஒருவன் தெரிவித்த கருத்துக்கள், பாராட்டுக்கள் எல்லாம் கலக்கல். நண்பா, எல்லோரும் உங்களை மாதிரி இருக்க முடியாது இல்லையா, அவங்க அவங்களுக்கு வேலை... வீட்டுலேயும், வெளியிலேயும் பிரச்னைகளுக்கா பஞ்சம்? இந்த நெருக்கடிக்கு இடையிலே, அவங்க நம்ம கட்டுரைகளை வாசிச்சிட்டுப் போறதே, மிகப் பெரிய விஷயம். மனசுக்குள்ளே, ஒரு நல்ல அபிப்பிராயம் இருந்தாலும், வார்த்தைகளாக மாற்ற கொஞ்சம், கூச்சம், தயக்கம், நேரமின்மை, நம்ம கருத்து சொல்லித்தான் ஆகப் போகுதோ.. இதோ நம்ம நினைச்சதை இவர் சொல்லிட்டாரே என்று பல காரணங்கள் இருக்கலாம். உங்களை மாதிரி ரொம்ப நல்லவங்க வேற, வரிக்கு வரி - அலசி , பிழிஞ்சு காய வைச்சுடிறீங்க.... அதனால, நாம வருத்தப் பட வேண்டியதில்லை... எதை, எப்போ செய்யணுமோ அதை கரெக்டா நம்ம வாசகர்கள் செய்வாங்க... நம்ம முயற்சிகளுக்கு , அவங்க மனசார வாழ்த்தினா கூட போதும் சார், வார்த்தையா வரணும்னே இல்லை... பார்க்கலாம், அடுத்த கட்டுரையில் ஒரு சிறிய integration பண்ண முடியுமா என்று பார்க்கிறேன்.... மற்றபடி, சிரமம் பாராமல் ஒவ்வொரு முறையும், நீங்கள் அனுப்பும் உங்கள் கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி..! உங்களை மாதிரி வாசகர்களின் உற்சாகம், செய்யும் இந்த வேலையை , இன்னும் காதலுடன், செய்யத் தூண்டுகிறது... நன்றி, நன்றி...!

raji said...

ஆசிரியருக்கு மிக்க நன்றிகள் பல.இந்த தளத்தை பார்வை இட படிக்க உதவிய மாபெரும் சக்தி ஆகிய இறைவனுக்கும் ஆசிரியருக்கும் கோடன கோடிகள் நன்றிகள் நன்றிகள்.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com