Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

ரங்கா...! என் ரங்கா!

| May 25, 2012
மீண்டும் ஒரு அசத்தலான அனுபவம்! வாசகர்கள் பார்வையில் எங்கே தப்பிவிடப் போகிறதோ என்று எண்ணி..தனிப்பதிவாக....!
 ============================================================
THEIVAM said...


திரு சிட்டி ஸார், ரிஷி ஸார், வணக்கம், என் அன்னையாய், தந்தையாய், குருவாய், தெய்வமாய் என்னுள் இருந்து என்னை வழி நடத்தும் என் குருவின் மகிமைகளை சொல்ல வார்த்தை ஏது? நம் கண்முன்னே எத்துனை ரஜினி ஸார், ராகவா லாரன்ஸ் இப்படி எத்தனையோ பேர். சரி என் வாழ்வில் திருவரங்கன் நடத்திய ஒரு விளையாட்டை சொல்கிறேன். எப்போது நினைத்தாலும் என் கண்களில் நீர் வருவதை தடுக்க முடியாது. எங்கள் பரம்பரையில் குழந்தைகளுக்கு முதல் மொட்டை திருவரங்கனுக்குத்தான் அவர்தான் எங்கள் பரம்பரை குடிபாட்டு தெய்வமாம் (என் தந்தை என்னிடம் கூறியது) ரிஷி ஸார் குடிபாட்டு தெய்வம் என்றால் என்ன என்று கொஞ்சம் விளக்கவும்).

 2001 ம் வருடம் எனக்கு அப்பொ மாத சம்பளம் ரூ.950/- மட்டுமே.நான் என் வறுமையின் பிடியில் சிறுக சேர்த்து ரூ.400/- வைத்து இருந்தேன், வருடம் ஒரு முறையாவது அரங்கனை தரிசித்து விடுவது வழக்கமான குடும்ப நடைமுறை, நான், என் மனைவி, என் 1 1/2 வயது பெண் குழந்தையுடன் கரூரில் இருந்து பஸ்ஸில் அதிகாலை 3.30க்கு கிளம்பினோம் என் சட்டையில் பாக்கெட் இல்லாததால் (கோவிலுக்கு செல்லும் போது வேஸ்டி அணிவது என் வழக்கம்) என் மனைவி ரூ.400/- வைத்து இருந்தார் அதை தவிர எந்த ஒரு பைசாவும் என்னிடம் இல்லை. வழக்கம் போல 80% பெண்களை போல பணத்தை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து இருந்தார் 6 மணியளவில் அம்மா மண்டபத்தை அடைந்து காவேரில் குளிக்க தயார் ஆனோம்.

 என் மனைவி பணம் நாங்கள் குளிக்க தயாரான இடத்தில் விழுந்து விட்டது, எங்கள் உடமைகளையும் அங்கேயே வைத்து விட்டு என் மனைவியை உடமைகளை பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு, நான் குளித்து விட்டு வந்து என் மனைவியை குளிக்க போக சொன்னேன். இதற்கிடையில் ஒரு பணக்கார குடும்பம் (கழுத்து ஃபுல்லா நகை, 10 விரலும் மோதிரம், உயர் ரக ஆடைகள் , சொகுஸு கார் இதெல்லாம் இருந்தா பணக்கார குடும்பம் தானே) நான் நிற்கும் இடத்திற்கு அருகில் தங்கள் உடைமைகளை வைத்தனர் அவர்களில் ஒருவர் தன் சட்டயை கழற்றி என் காலடியில் போட்டார், அவர் மனைவி "என்னங்க ஈரத்துல சட்டய போடுறிங்க என்றார்".

 அதற்கு அவர் கொஞ்சம் சும்மா இருடி என்று அதட்டியாவாறு கிழே குனிந்து சட்டயை எடுத்து சுருட்டி மடித்தார். இதற்குள் என் மனைவி குளித்து விட்டு வந்து பணத்தை காணவில்லை என்றார். என் தலையில் இடி இறங்கியது போல் இருந்தது வேறு பணம் இல்லை,கோவிலுக்கு போக வேண்டும் தேங்காய் பழதட்டு வாங்க வேண்டும், துளசி தாமரை வாங்க வேணும், முக்கியமாக கரூர் திரும்ப வேணும், 80 கிலோ மீட்டர் கையில் குழந்தை வேறு என்ன செய்வேன்.

 "என் அரங்கா, பச்சை மாமலைபோல் மேணியனே என் குழந்தைக்கு பசிக்குமே அதற்கு பால் வாங்க கூட என்னிடம் பணம் இல்லையே ஆயர் பாடி கோபாலா, என்று என் உள்ளம் கதறியது, என் மனைவி ரங்கா ரங்கா என்று கதறினாள் என் குழந்தை மட்டும் சிரித்தது அப்போதுதான் கவனித்தேன் எங்களிடம் இருந்த ஒரே நகை என் குழந்தையின் கால் கொலுசு என் கண்ணில் பட்டது, என் மனைவியிடம் ஆறுதல் சொன்னேன் இந்த கொலுசை எங்காவது விற்று விட்டு அரங்கனை தரிசிப்போம் என்றேன். என் மனைவி சொன்னார் "அப்பாடா அப்போ சாமிய பார்த்துடலாம்" அவரை பொருத்தவரை சாமிய வெரும் கையுடன் பார்க்க முடியாதே என்ற கவலை மட்டுமே.

வாழ்க்கை முழுவதும் உணவளிப்பவருக்கு ஒரு தேங்காய் கூட உடைக்க முடியாதே என்ற கவலை மட்டுமே, இதற்கிடையில் என் காலுக்கு அடியில் ஈரத்தில் சட்டை போட்டவர் குளிக்க சென்று இருந்தார், அரங்கனின் ஆணைப்படி காவேரி அன்னை அவரின் 2 விரல்களில் இருந்த 2 பவுன் மோதிரங்களை தன்னுடன் எடுத்து கொண்டாள், நாங்கள் ஆடை மாற்றி கிளம்பிய போது, என் காலுக்கு அடியில் ஈரத்தில் சட்டை போட்டவர் மனைவி ஓடி வந்து இதுவரை நீங்கள் அழுததை பார்த்தேன் இந்தாங்க உங்க பணம் என் கணவர்தான் சட்டய போட்டு எடுத்தார் இதற்கு பதிலாக 2 பவுன் மோதிரம் தண்ணில போச்சு என்றார் உங்க பணத்தை எடுத்ததுக்கு நீங்க சாமிகிட்ட சொல்லி மண்ணிக்க சொல்லிடுங்க 2 பவுனோட போகட்டும் பெரிசா எதுவும் ஆகிட போகுது என்றார்.நாங்கள் அரங்கனை தரிசித்து அவருக்காக மன்னிப்பு வேண்டி ஊருக்கு நல்ல முறையில் வந்து சேர்ந்தோம். "நாராயண மந்திரம் அதுவே நாளும் பேரின்பம்"


===================================================
மெய் சிலிர்க்கிறது...! இந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு வாசகர்கள் சார்பில் - மனமார்ந்த நன்றி!

10 comments:

யவனிகை said...

படித்து வெகு நேரத்திற்கு என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை, அதனோடுதான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன், ஓம் நமச்சிவாய ஓம் க்ரியா பாபாஜி நம ஓம்

arul said...

nice post

THEIVAM said...

அரங்கனின் கருணைக்கு அளவில்லையா, அவரின் திருவிளையாடலை 11 வருடங்கள் காத்திருந்து சொல்ல வைத்தார், அதை வெளி உலகுக்கு தனி பதிவாக ரிஷி அவர்களை கொண்டு வெளியிட வைத்தார், அவருக்கு நான் என்ன கைமாறு செய்வேன் அவர் அளித்த என் சந்ததிகள் முழுவதும் அவருக்கே அடிமையாகி அவர் புகழை உலகம் உள்ள வரை சொல்லி மகிழ்வதை தவிர. இந்த ஆன்மிக உலகுக்கு தொண்டாற பிறந்த ரிஷி ஸார் அவர்களுக்கு நன்றி. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு என் வாழ்வில் படி படியான முன்னேற்றம் கரூர் மாநகரில் சொந்தமாக ஒரு வீடு, 2சக்கர வாகனம். பிறகு ஒரு ஆண் குழந்தை இன்று ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் மேலாள்ர் பதவி. இப்படி நிம்மதியான வாழ்க்கை வேறென்ன வேண்டும், என்ன வேண்டும் அரங்கனை கேளுங்கள் "நாராயண மந்திரம் அதுவே நாளும் பேரின்பம்"

Sivanadimai Arun said...

_/\_ஓம் சிவசிவ ஓம்_/\_
எல்லாம் அவன் செயல். அவனின்றி அணுவும் அசையாது.

(என் மனைவி சொன்னார் "அப்பாடா அப்போ சாமிய பார்த்துடலாம்" அவரை பொருத்தவரை சாமிய வெரும் கையுடன் பார்க்க முடியாதே என்ற கவலை மட்டுமே.) இறைவனை பார்த்தால் போதும் பணம் ஒரு விசயமில்லை என்று நமக்கு பாடம் சொல்லும் ஒரு உண்மையின் கதை. அரங்கனின் விளையாட்டு.

வாழ்க வளமுடன்! வளர்க அருளுடன்!

Chitti said...

கோபால் சார், இந்த உங்களின் அருமையான அனுபவத்தை எங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
அதை தனி பதிவாக வெளியிட்ட ரிஷி அவர்களுக்கும் எனது நன்றிகள்.
கோபால் சார், உங்களின் குழந்தை வடிவில் அந்த அரங்கனே, "இனி என்ன நடக்க போகிறது பாருங்கள்!" என்று சிரித்ததாக எனக்கு தோன்றுகிறது!
என்ன வெட்கக்கேடான செயல் அந்த பணக்காரர் செய்தது. இவ்வளவு பணம் இருந்தும் அவருக்கு 'போதும்' என்ற மனம் இல்லையே. அது இல்லை என்றால் போதுமே, மனம் அமைதி கொள்ளாது பித்து பிடித்த போல் திரிவதற்கு. நம்மில் பலர்க்கு பணம் அவ்வளவாக இல்லா விட்டாலும் மனம் அமைதியாக இருக்கிறது. இது எவ்வளவு பெரிய குடுப்பினை.

அதற்க்கு தான் அந்த அரங்கன் 'என் கோயிலிலே இப்படியா நடந்து கொள்கிறாயா? உன்னை என்ன செய்கிறேன் பார்' என்று அவரின் இரு மோதிரங்களையும் எடுத்து கொண்டார். அதற்க்கு மேலும் தண்டித்திருப்பார். ஆனால், நீங்கள் சொல்வதை பார்க்கும் போது, அவரின் மனைவி நல்ல மனிதராக, தெய்வத்திற்கு அஞ்சுபவராக இருந்திருக்கிறார். அவரின் மனைவி தன் மேல் கொண்ட பக்தியினால் அவரை விட்டுவிட்டான், அந்த அரங்கன்.

அதே சமயம், உங்களையும் உங்கள் பக்தியால் முன்வினை காரணமாக இருந்த பாவத்தில் இருந்து விடுவித்து விட்டான். சந்தோஷம்.

by,
Chitti.
Thoughts becomes things.

Rishi said...

யவனிகை : சகோதரி, படிக்கும் ஒவ்வொருவருக்கும் கிடைத்த உணர்வை, உடனே பிரதிபலித்திருக்கிறீர்கள். கோபால் சார், அரங்கனுக்குத் தெரியாதா..எதை எப்போது வெளிப்படுத்த வேண்டுமென்று? படிக்கும் எங்களுக்கே ஆடிப் போகிறது என்றால், அதை நேரில் அனுபவித்த உங்களுக்கு எப்படி இருக்கும்! சிட்டி சார்! ,மீண்டும் ஒரு முறை, உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!

என்ன செய்வது - சில மனிதர்களுக்கு, பிறரை பற்றிய உணர்வே வருவதில்லை. அந்த பணத்தை எடுக்க துணிந்தபோது, எதிரில் தானே இருக்கிறார்கள்.. உங்களோடதா என்று ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாம். மனித மனம் ரொம்ப விசித்திரமானது...போதும் என்று நினைத்தால் , முன்னுக்கு வர முடியாது என்று யாரோ எப்போதோ , விதைத்த விதை.

இதிலும்,ஒரு நல்லது பாருங்கள்..! இதை மாதிரி இருந்ததால்தானே, நமக்கு இப்படி ஒரு அனுபவம், அவன் மகிமை பற்றி உணர..! இந்தாங்க சார்! உங்க பணம் மாதிரி இருக்கிறது, என்று - அவர் எடுத்துக் கொடுத்து இருந்தாரேயானால், இது ஒரு சர்வ சாதாரண சம்பவமாக இருக்க கூடும். அரை மணி நேரம் கழித்து, நம்ம கோபால் சாரே, மறந்து இருப்பார். ஆனால், இத்துணை வருடங்களாக , அவர் அரங்கனை இடைவிடாது பற்றி இருந்திருக்க முடியாதல்லவா? அவன் வைக்கும் சோதனை, ஏன் எதற்கு என்று அவன் மட்டுமே அறிவான்..!

நம்மிலும்,அப்படித்தான் இருக்கிறோம் - கிட்டத்தட்ட எல்லோருமே! அவர் வந்து ஒரு தடவை , நமக்கு அவரை உணர்த்தணும்..! அதன் பிறகு தான் , நாம ஒழுங்கா இருப்போம்.. அதுவரைக்கும், ரெண்டும் கெட்டான் மனநிலமையோடு தான், இறைவனை தொழுவது...! கோவில்ல இருந்து வெளியே வந்த பிறகு - திரும்ப பழைய கதை தான்...! வேஷம் அவன் முன்னால் போட்டால் வேலைக்கு ஆகுமா? அதுதான் உடனே தண்டித்து இருக்கிறான்!

அருண் சார்! : நலமா, ரொம்ப நாளாச்சு ! வேலை எல்லாம் பரவா இல்லையா? இந்தியா எப்போ வர்றீங்க ...? I know you may be too busy with your tight schedule. Thank you for your presence and impression.
வாழ்க அறமுடன்! வளர்க அருளுடன்!

திண்டுக்கல் தனபாலன் said...

நெகிச்சியான பதிவு !

கோடியில் ஒருவன் said...

தற்போது தான் இந்தப் பதிவை ஆற அமர படித்தேன். என்ன சொல்வது...வார்த்தைகளே தோன்றவில்லை. யவனிகை சொல்வது போல, கண்களில் நீர் ஆறாய் பெருகி ஓடிவிட்டது. என்னால் கட்டுப்படுத்தமுடியவில்லை. காரணம் தெரியவில்லை.

அண்ட சராசரங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரங்கனுக்கு இந்த திருவிளையாடல் என்ன பெரிதா?

நினைப்பதை நடத்தி வைப்பாய் வைகுந்தா
மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா

இந்த அற்புதமான அனுபவத்தை எங்களிடம் பகிர்ந்துகொண்டு அரங்கனின் கருணை மழையை உணரவைத்த (தெய்வம்) கோபால் சாருக்கு நன்றி. நன்றி.

அற்புதமோ அதிசயமோ திருவருளோ அதை நம்புபவர்களுக்கு மட்டுமே அது சாத்தியப்படும். நம்புங்கள் எங்கள் நாராயணனை. நம்பியவர்களை அவன் என்றுமே கைவிட்டதில்லை.

ஆசியர் ரிஷி சாருக்கும், கமெண்ட்டில் கலக்கிகொண்டிருக்கும் சிட்டி சாருக்கும் நன்றி. (என்ன சார் சௌக்கியமா?)

- கோடியில் ஒருவன்

shakthi s ramesh said...

Dear sir/madam
we s.ramesh and r.shakthi husband and wife are from thoothukudi, tamilnadu,
India. we are having two children .we are having one ready-made shop at thoothukudi.
as we had many health&mind problems in the past five years we had been forced to
get money for interest up to 48% per annum from private parties . as we cannot
concentrate in business due to health problems we became more and more debtors. now
we are ready to run the business, but the fact was we have the asset of rs 6 lakhs worth
shop only but the credit is nearly 23 lakhs with interest to be paid nearly
70thousand/month. we have the turn over of 2-3lakhs per month and profit of
10% stands after shop expenses. so we cant manage the credits and we are in the stage
to give yellow notice .but we like to be loyal to our debtors and the
guarantors. we like to payback the money promptly with out any deal .we think to barrow
30lakhs from any one with helping & understanding mind for an interest of 12% per
annum to invest in our business &to clear all our lenders. anybody who is well to do
with understanding our mind with helping tendency from this world pls help us.
we will be loyal to you for ever. we will return your money at any cost by our business.
we swear that the above all in formations are true. if any ideas other than this
can also be advised. if any other help to improve our business or training to enter a
new business with sufficient income to overcome our problems with our own leg is also
expected with eagerness. totally we are ready to do any business lawful and worthy.
any one importer from other than India can also help us by encouraging us in export
anything from India {having vast knowledge about textiles}
any help as father's support with guidance is also expected. thanks for reading this
with patience. pls reply us if you read this which will make us faith to live.
let your answer be anything creating positive thoughts. Thank you.
S Ramesh
R shakthi
28june2012
mail id
mobile no:-08220123331

இராஜராஜேஸ்வரி said...

"நாராயண மந்திரம் அதுவே நாளும் பேரின்பம்"

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com