Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

ஒரு குட்டிக் கதை

| May 31, 2012
எந்த ஒரு கணமும் , இறைவன் பார்வை நம் மேல் இருக்கும். சரி, இப்போது பயன் படுத்திக்கொள், இது உனக்கான நேரம் என்று - அவன் ஒரு சில சமயம் கதவைத் திறப்பதுண்டு. ஆனால், அது நமக்கு தெரியாமல், அசிரத்தையுடன் நாம் வேறு பாதையில் , சலிப்போடு பயணம் செய்வோம்.  அக்கறையுடன் எந்த வேலையும் செய்பவர்களுக்கு வாழ்க்கை அலுப்புத் தட்டுவதேயில்லை. அது ஒரு செடிக்கு தண்ணீர் ஊற்றும் வேலையாக இருந்தாலும் சரி, வீடு துடைக்கும் வேலையாக இருந்தாலும் சரி, நண்பர்களோடு பேசுவதாக இருந்தாலும் சரி, சாப்பிடுவதாக இருந்தாலும் சரி, அலுவலக வேலையாக இருந்தாலும் சரி.

அக்கறையும், நேசமும் அப்பப்போ இருந்தால் போதாது. தொடர்ந்து இருக்க வேண்டும்.அதனால் எப்போதுமே, பலன்கள் அதிகமாக இருக்கும்.


இதை விளக்கும் ஒரு அருமையான கதையை, நண்பர் ஒருவர் மெயிலில் அனுப்பி இருந்தார். படித்து முடித்த பிறகு, கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்... நாமே , நம்மை சுய பரிசோதனை செய்து கொள்ள உதவும்... வாழ்த்துக்கள்..!

===================================================================
பல வருடங்களாக தச்சர் பணி செய்து வந்த தொழிலாளி ஒருவன் தன் பணியிலிருந்து ஓய்வு பெற விரும்பினான். எஜமானனிடம், தான் தன் குடும்பத்துடன் அமைதியாகக் காலம் கழிக்க விரும்புவதைத் தெரிவித்தார். எஜமானனுக்குத் தன் தொழிலாளியை விட மனமில்லை. இருந்தாலும், கடைசியாக ஒரே ஒரு வீடு கட்டித் தந்துவிட்டு ஓய்வு பெறுமாறு கேட்டுக் கொண்டார்.

தச்சர், சரி என ஒப்புக் கொண்டாலும், அவர் மனம் வேலையில் ஆழ்ந்து ஈடுபடவில்லை. ஏனோ தானோவென்று மட்டமான பொருள்களைக் கொண்டு வீடு கட்ட ஆரம்பித்தார். தன் கடைசிப் பணியை அப்படி அசிரத்தையுடன் செய்தது துரதிர்ஷ்டம்தான். எப்படியோ ஒரு வழியாக வீடு கட்டி முடிந்ததும், வீட்டை வந்து பார்த்தார் எஜமானன்.

அமைதியாக வீட்டின் சாவியைத் தச்சரிடம் கொடுத்து, இதோ, இந்த வீடு உனக்காக நான் அளிக்கும் பரிசு என்றார். அதிர்ச்சி! வெட்கம்! அடடா, இது தனக்கான வீடு என்று முன்பே தெரிந்திருந்தால் நன்றாகக் கட்டியிருக்கலாமே? தான் மோசமாகக் கட்டிய வீட்டில், தானே வாழ வேண்டிய நிலைமை அந்தத் தச்சருக்கு.

மனிதர்களும் இப்படித்தான். தங்கள் வாழ்க்கையை ஏனோ தானோ வென்று வாழ்ந்து கழிக்கிறார்கள். தங்களுடைய திறமையை முழுமையாகப் பயன்படுத்தாமல் சோம்பி வாழ்கிறார்கள். திறமை காட்ட வேண்டிய சந்தர்ப்பங்களைக் கோட்டைவிட்டு விடுகிறார்கள்.

நம் வாழ்க்கையும் அந்த வீடைப் போன்றதுதான். ஒவ்வொரு ஆணி அடிக்கும் போதும், மரத்துண்டுகளைச் சேர்க்கும் போதும் புத்திசாலித்தனத்தோடு செயல்படுங்கள்.

இந்த வாழ்க்கை உனக்காகத் தான், உனக்கு தான் அளிக்கப்பட்டுள்ளது. அதை நீயே உருவாக்குகிறாய். ஒரு நாள் நீ வாழ்ந்தாலும் அமைதியோடும் கவுரவத்தோடும் வாழ வேண்டும். வாழ்க்கை என்பது நமக்கு நாமே கட்டிக் கொள்ளும் வீடு.

Thanks தினமலர் for the story

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கதை சார் !

perumal shivan said...

naan eathirppaarrkkave illai boss climax .
superb.

Rose Anu said...

story very nice.

Yaneshanandh said...

Migavum Nandraga Irukkirathu

gayathri said...

அருமை

yoga begginers said...

good

புஸ்பலதா said...

நாமும் கற்று உணர வேண்டிய கதை.. செய்யும் தொழிலே தெய்வம்

THEIVAM said...

padikkum pothu manam thalarchiya irunthuchu ippo fresh ayiduchu

யவனிகை said...

கட்டுரை அருமை, அண்ணா தங்கள் email id கிடைக்குமா, ஓம் நமச்சிவாய ஓம் க்ரியா பாபாஜி நம ஓம்,

BI_Buff said...

Very good story and a nice quote: One can start today and have a new ending.

BI_Buff said...

nice story and a nice quote.

Rishi said...

Mails can be sent to editor@livingextra.com please

கோடியில் ஒருவன் said...

நல்ல கருத்துள்ள கதையை பகிர்ந்துகொண்ட ஆசிரியருக்கு நன்றி.

இந்தக் கதையில் வரும் முதலாளியை போன்று தான் கடவுளும் நமக்கு அவ்வப்போது பரீட்சை வைக்கிறார். நாமும் அது இறைவன் நமக்கு வைக்கும் பரீட்சை என்பதை உணராமலே, அதை அலட்சியப்படுத்துகிறோம்.

நடப்பதெல்லாம் நன்மைக்கே... என்று அனைத்து பாரத்தையும் அவன் மேல் போட்டுவிட்டு, நமது கடமையை குறைவின்றி செய்து வருவோம். வாழ்க்கை மட்டுமல்ல... அந்த வானமும் வசப்படும் ஓர் நாள்.

தண்ணீரை கூட சல்லடையில் அள்ளலாம்...
அது உறையும் வரை நீ பொறுத்திருந்தால்....!!
(எப்பொழுதோ எங்கேயே படித்தது!)

- கோடியில் ஒருவன்

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com