Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

குளிர்ந்த நாயகியின் மனம் குளிர்ந்தால் எதுவும் நடக்கும்!

| May 28, 2012
நமது வாசகர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு, இங்கே ஒரு அன்பர் தனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதிசயம்! அற்புதம் ! இதைப் போன்ற பிரச்னை, பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படுகிறது. மருத்துவம் ரொம்ப சிம்பிளாக உணவில் ரசாயனம் அதிகம் கலந்து இருப்பதால் தான் என்று சொல்லிவிடுகிறது. இங்கே அம்மனின் கருணையை பாருங்கள்.. அருமையான அனுபவம். நேரில் உணர்ந்தவர் எந்த அளவுக்கு மெய் சிலிர்த்து இருப்பார் என்பதை உணரமுடிகிறது! இந்த கோவிலுக்கு செல்ல  - சென்னை பூந்தமல்லி, திருவள்ளூர், திருநின்றவூர் பகுதிகளில் இருந்து போக்குவரத்து வசதி உள்ளது..!

இந்த சம்பவம் நடந்தது - ஒரு வாரத்திற்கு முன் தான். அதனால் , இந்த பிரச்னை என்று இல்லை, உங்களுக்கு என்ன நியாயமாக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அம்மனிடம் கேளுங்கள்! இப்போதும் உயிர்த்துடிப்புடன் அம்மன் இருப்பதற்கு ஒரு சாட்சி, இந்த சம்பவம்..! படித்துப் பாருங்கள்!  
இந்த அருமையான கட்டுரையை அனுப்பி வைத்த ஸ்ரீவத்சன் சாருக்கு, வாசகர்களின் சார்பில் என் மனமார்ந்த நன்றி!

======================================================================
அன்புள்ள நண்பருக்கு,

வணக்கம். மிக சமீப கால அளவையில் என் சகோதரியின் வாழ்வில் நிகழ்ந்த இந்த நிகழ்வை பகிர்கிறேன்.

என் மூத்த சகோதரிக்கு சில மாதங்களாக பெண்களுக்கான பிரச்சனை கூடுதாலாக (hypermenorrhea) இருந்தது. போக்கு நிற்காமல் சற்று ஏறக்குறைய  3 மாதங்களாக தொடர்ந்தது. அவர் ஏற்கனவே சர்க்கரை நோயாளி வேறு இந்த பிரச்சனை அவரை பலஹீன சூழலை நோக்கி இட்டுச் சென்றது. அதிக மன உளைச்சலும் விரக்தியும் தொடர்ந்தது.

அவர் பார்க்காத மருத்துவம் இல்லை, செல்லாத மருத்துவர் இல்லை. அத்திப்பட்டை, அசோகாரிஷ்டம் முதல், harmone ஊசி வரை எல்லா வழிகளையும் பார்த்தாகி விட்டார். ஒரு scan report-இல் node என்றும் இன்னொரு report-இல் adenomyosis என்றும் சொல்லப்பட்டது (18-05-2012). ஒரு மருத்துவர் எதோ புது விதமான மருத்துவத்தில் 60% குணமாக வாய்ப்பு உள்ளது என்றும் அதற்கு 1.5 லட்சம் செலவாகும் என்றும் சொன்னார். இன்னொரு இடத்தில் இதற்கு ஒரே வழி கருப்பையை அகற்றி விடுவது என்று சொன்னார்கள்.

இப்படி என்ன செய்வது என்று தெரியாமல் உடல் உபாதையில் தவித்து கொண்டிருந்த நிலையில், "நான் ரொம்ப நாள் உயிரோட இருக்க மாட்டேன்" என்று புலம்பும் நிலைக்கு  வந்து விட்டார். இதற்கு இன்னொரு காரணம் இப்படியே போக்கு தொடர்ந்தால் கூடிய விரைவில் உங்களுக்கு cancer வந்துவிடும் என்று பல மருத்துவர்கள் மிரட்டியது! 21-05-2012 அன்று மற்றுமொரு பரிசோதனைக்காக என் சகோதரியை வர சொல்லி இருந்தார்கள்.

இடையில் நான் 19-05-2012 அன்று திருமழிசை உறை குளிர்ந்த நாயகியிடம் மனதளவில்  ஒரு பிரார்த்தனை வைத்தேன். "உன் மனமும் வயிறும் குளிரட்டும், நீ இந்த பிரச்னையை நிறுத்து, உன்னிடம் நான் உடனடி magic எதுவும் எதிர்பார்க்கவில்லை. உனக்கு 2 நாள் அவகாசம் தருகிறேன் 21-05-2012 அன்று இந்த போக்கை  நிறுத்த ஏற்பாடு செய்" என்றேன். கடவுளிடம் வியாபாரம் செய்யும் போக்கு எனக்கு பிடிக்காது என்றாலும் இந்த பிரச்சனையில் இருந்து விடுபட வேறு வழி தெரியாமல் உனக்கு பாலாபிஷேகம் செய்கிறேன் என்று பேரம் பேசினேன். இந்த வேண்டுதல் எனக்கே வேடிக்கையாகவும் முட்டாள்தனமாகவும் இருந்ததால் யாரிடமும் சொல்லவில்லை.
திங்கள்கிழமை (21-05-2012) அன்று மாலை அலுவலகத்தில் இருந்து வரும்போது என் சகோதரிக்கு எப்படி இருக்கிறாய் என்று ஒரு sms அனுப்பினேன். "இன்று பரவாயில்லை" என்று பதில் வந்தது. அப்படிஎன்றால் என்ன என்று மீண்டும் கேள்வி எழுப்பினேன் "இன்று போக்கு இல்லை" என்று பதில் வந்தது. அதிகமாக இல்லையா இல்லை முற்றிலும் இல்லையா என்று  மீண்டும் கேட்டேன். "இன்று சுத்தமாக இல்லை" என்று பதில் வந்தது. எனக்கு உடலில் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு உணர்வு. உடனே அவருக்கு இது குளிர்ந்த நாயகியின் அருளில் நிகழ்த்த விஷயம் என்றேன். இருந்தாலும் கொஞ்சம் அவநம்பிக்கை, ஒரு நாள் நிகழ்வை வைத்து இப்படி ஒரு முடிவுக்கு வருவதா என்று. ஆனால் குளிர்ந்த நாயகியின் அருளில் இன்று வரை (27-05-2012) பிரச்னை இல்லை.

என் சகோதரி என்று கோவிலுக்கு வர முடியும் என்பது தெரியாததால் 26-05-2012 சனிக்கிழமை நான் போய் பாலபிஷேகம் செய்து வந்தேன். இன்று 27-05-2012 என் சகோதரி வந்தார். மீண்டும் ஒரு முறை பாலபிஷேகம் செய்து வந்தோம். குருக்கள் என்ன விஷயம் என்று கேட்டார், ஒரு வேண்டுதல் நிறைவடைந்தது அதன் பொருட்டே பாலபிஷேகம் என்றேன்.
 
அவர் நான் இந்த கோவில் குருக்கள் என்பதால் சொல்லவில்லை இங்கு மனப்பூர்வமாக எதாவது வேண்டிக்கொண்டால் அது கண்டிப்பாக நடக்கும். இந்த சுவாமியின் பேரே சீதளாம்பாள் (சமஸ்க்ரிதத்தில் குளிர்ந்த நாயகி) சமேத மனோ அனுகூல சுவாமி (நினைத்ததை நடத்துபவர்) என்றார்.

இந்த ஒத்தாண்டீஸ்வரர் கோவிலை குறித்த முழு விபரங்களையும் படங்களையும் http://drlsravi.blogspot.in/2011/01/sri-seethalambikai-sametha.html என்ற பதிவில் பார்க்கலாம். இந்த பதிவை மிக அருமையாக செய்துள்ள  Dr. ரவிசங்கர் அவர்களுக்கு எனது நன்றிகள்.

நம்புங்கள் குளிர்ந்த நாயகியின் மனம் குளிர்ந்தால் நடக்காதது என்பது எதுவும் இருக்காது.

Srivathsan Margan


Nothing exists except atoms and empty space; everything else is opinion.
 - Democritus of Abdera (470 BC - 360 BC)

9 comments:

arul said...

manam kulirntha nayagi anaivarin manathaiyum kavarnthu vittar

கோடியில் ஒருவன் said...

என்ன சொல்வது... மற்றுமொரு சிலிர்ப்பான பதிவு.

பல ஆண்டுகளுக்கு முன்பு என் அம்மாவிற்கும் இதே போன்று பிரச்னை ஏற்பட்டு வலியால் அவர்கள் துடிப்பதை காண சகியாது, இறுதியில் 1999 ஆம் ஆண்டு வேறு வழி இன்றி சென்னை மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை செய்து கருப்பையை அகற்றினோம்.

பெண்களுக்கு ஏற்படும் இந்த பொதுவான பிரச்னை சிலருக்கு தாங்கொண்ணா துயரத்தை வலியை தரும்.

ரம்மியமான சூழலில் அமைந்துள்ள திருமழிசை உறை குளிர்ந்த நாயகியின் கோவிலுக்கு நான் ஏற்கனவே ஒரு முறை (5 ஆண்டுகளுக்கு முன்பு) சென்றுள்ளேன். ஆனால் இதன் அருமை எனக்கு அப்போது தெரியாது. என் தங்கையின் திருமணத்திற்காக திருமாங்கல்யம் வாங்கிய பின்னர், அதை இந்த அம்பாளின் பாதத்தில் தான் வைத்து ஆசி பெற்றோம். இதை படித்தவுடன் அம்பாளை மற்றொருமுறை தரிசிக்க ஆவல் எழுந்துள்ளது. வரும் வார இறுதியில் போய்விட்டு வந்து புகைப்படங்களை அள்ளித் தருகிறேன்.

திருமழிசை ஆழ்வார் அவதரித்த புண்ணிய பூமி இது.
ஒத்தாண்டீஸ்வரர் கோவில் தவிர புகழ் பெற்ற ஜகன்னாத பெருமாள் கோவிலும் இங்குள்ளது. சென்னையில் இருந்து பூவிருந்தவல்லி சென்று, அங்கிருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் உள்ளது.

அம்பாளின் கருணா கடாக்ஷத்தை அறிந்துகொள்ள உதவிய ஸ்ரீவத்சன் அவர்களுக்கும், பதிவளித்த ஆசிரியருக்கும் நன்றி.

வையகத்துக் கில்லை,மனமே!நினக்குநலஞ்
செய்யக் கருதியிவை செப்புவேன்-பொய்யில்லை
எல்லாம் புரக்கும் இறைநமையுங் காக்குமென்ற
சொல்லால் அழியும் துயர். - மகாகவி பாரதியார்

-- கோடியில் ஒருவன்

Anonymous said...

Thirumazhisai as a town must be having tremendous power. Sri Thirumazhisai Alwar is one of the 12 Alwars who provided us some fantastic Divya Prabhanda Pasurams. Not only that, the Alwar was said to have directly seen and talked to Perumal in Sri Sarangapani (known as Aravamudhan) Temple in Thirukkudandhai (Kumbakonam). In Kanchi Or Irukkai the 'Sonna Vannam Seitha Perumal' is said to have moved from one place to another at the behest of this Alwar. Evidently the Alwar is known to have extraordinary power and influence on the Deities. That substantiates the glory of Thirumazhisai. Your report on Sri Ambal reinforces it.

யவனிகை said...

பெயரிலேயே மனது நிறைகிறது, தகவலுக்கு நன்றி ஸ்ரீ வத்சன் சார், ரிஷி அண்ணா ஓம் நமச்சிவாய ஓம் க்ரியா பாபாஜி நம ஓம்

Anonymous said...

matrumore thakaval. nam arugil ulla durgai idam saran adaiyugal. avaluku kugumathal archanai saiyungal. ragu kalathil panagam nivadanam saiyungal. nala palan undu

valli said...

Pleaase give me the Amman Photo if possible. So we can worship atleast that photo we are living in abroad.

Anonymous said...

manamaarndha NANRI annaa...

Gnanam Sekar said...

அம்பிகையின் பெயரை கேட்டாலே மனம் குளிர்கின்றது . நன்றி

THEIVAM said...

nalla manam niranitha anupavangalai pakirntu kolla kalam amaithu koduthu irukkum rishi sarukku nandrikal pala

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com