Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

முடியவிருந்த வாழ்க்கை.... மீட்டுக்கொடுத்த இறைவன்!

| May 9, 2012

கடவுளை நம்பி, அவன் வசம் பொறுப்புகளை - ஒப்படைத்துவிட்டு முழு முயற்சியுடன் வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டால் , சாதனை சிகரம் தொடுவது உறுதி என்பதற்கு ஒரு அருமையான உதாரணம்  இந்த கட்டுரை. நம் வாசகர்களுக்காக இங்கே பகிர்ந்து கொண்ட  அன்பு நண்பர் சுந்தருக்கு என் நெஞ்சார்ந்த  நன்றி ....!  படித்துப் பாருங்கள்...!  நம் தளத்தில்,  ஏன் இணைய தளத்திலேயே  வெளியாகும் மிகச் சிறந்த கட்டுரைகளுள் ஒன்று ! Thank you Very much Sundar Ji!
======================================================

    அன்பு நண்பர்களுக்கு வணக்கம்....!

என் பெயர் சுந்தர். ஒரு தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வருகிறேன். தவிர ஒய்வு நேரத்தில் திரு.ரஜினிகாந்த் அவர்களை பற்றி பிரத்யேக செய்திகளை தாங்கி வரும் ONLYSUPERSTAR.COM என்ற தளத்தை  நடத்தி வருகிறேன். நமது LIVINGEXTRA.COM தளத்தின் கடைக்கோடி வாசகன் நான். எத்தனையோ சூழ்நிலைகளில் இந்த தளம் எனக்கு கலங்கரை விளக்கமாக இருந்து வழி காட்டியுள்ளது.

திரைத்துறை பிரபலங்கள் பலரை இதற்கு முன்பு நான் பலமுறை பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளேன். வெளியிட்டு வருகிறேன். ஆனால் நிஜ வாழ்க்கையில் சரித்திரம் படைத்த சாதனையாளர்களை சந்திக்கவேண்டும், அவர்களது வெற்றிக்கான ஃபார்முலாவை அனைவருக்கும் கூறி அவர்களையும் சாதனையாளர்களாக்க வேண்டும் என்கிற அந்த ஆவல் என்னுள் எழுந்தது நமது LIVINGEXTRA.COM தளத்தை நான் வாசிக்க ஆரம்பித்த பின்னர் தான். எனவே இந்த தளத்தை நன் படிக்க ஆரம்பித்தது என் வாழ்வில் மிகப் பெரிய திருப்பு முனை ஆகும்.

விதியை வென்று, சோதனைகளை சாதனைகளாக்கி இன்று நம் கண் முன் உதாரணங்களாக வாழ்ந்துவரும் சாதனையாளர்களின் அனுபவத்தை அவர்கள் வாழ்க்கையில் வெற்றி கண்ட அந்த வழிமுறைகளை, சக்சஸ் மந்திரத்தை அனைவரும் தெரிந்துகொண்டு அவர்களும் பயன்பெறவேண்டும் என்ற ஒரு லட்சியத்தின் அடிப்படையில் சாதனையாளர்களை தேடிப் பிடித்து பேட்டி கண்டு வருகிறேன். அதை எனது தளத்தில் வெளியிட்டும் வருகிறேன்.

இதற்க்கு முன்பு, திரு.இளங்கோ அவர்களைப் பற்றி நாம் வெளியிட்ட பேட்டியை நம் மதிப்பிற்குரிய ஆசிரியர் ரிஷி அவர்கள் இங்கு வெளியிட்டது நினைவிருக்கலாம். திரு.இளங்கோ அவர்களை தொடர்ந்து இதோ மற்றொரு சாதனையாளரின் சாதனைத் துளி. இளங்கோவை பற்றியாவது இதற்கு முன்பு பல பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளது. ஆனால், நாம் கீழே பார்க்கப்போகும் சாதனையாளர் பற்றி வெளியுலகிற்கு அதிகம் தெரியாது.

நம் எல்லோருக்கும் நம்பிக்கையையும் வாழ்வில் பிடிப்பையும் ஏற்படுத்தக்கூடிய இவரது சாதனை சரித்திரத்தை தெரிந்துகொள்ளும் முன், இவர் வாழ்க்கையில் இறைவன் நடத்திய ஒரு அதிசய சம்பவத்தை கூறுகிறேன். கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பதற்கு மிகப் பெரிய உதாரணம் இவரது வாழ்க்கையில் நடைபெற்ற அந்த பேரதிசயம்.

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை!

கணவன், மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் என தென் தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த ஒரு எளிய குடும்பம் அது. அது ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பம். ஒரு காலத்தில் ஓகோவென்று இருந்து, உறவுக்காரர்களின் சூழ்ச்சி மற்றும் தவறான குடும்ப நிர்வாகம் ஆகியவற்றால், ஒரு வேளை சோற்றுக்கே கஷடப்படும் அளவிற்கு பிற்காலத்தில் வந்துவிட்டனர். வசதியே இல்லாம வாழ்ந்துடலாம். ஆனா வசதி வந்துட்டு மறுபடியும் போனா அதை தாங்கிக்க யாராலையும் முடியாது.  மூன்று வேளை சாப்பாடு என்பது அவர்கள் வீட்டில் இல்லை. இரண்டு வேளை தான். அதுவும் பெரும்பாலும் பழைய சோறு மற்றும் கூழ் தான். குழந்தைகளை அவர்கள் விரும்பும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வசதியில்லை. ஆங்காங்கு கிடைத்த நகராட்சி பள்ளிகளில் தான் படிக்க வைக்க முடிந்தது.


அந்த குடும்பத்தில் இரண்டாவது வாரிசு அவன்.... கான்வென்ட்டில் படிக்கவேண்டும் என்கிற ஆசை இருந்தும் கார்பரேஷன் பள்ளி ஒன்றில் தான் 6 வது சேர்க்க முடிந்தது. ஆசையோடு பள்ளிக்கு கிளம்பும் மகனுக்கு சீருடை கூட வாங்கி கொடுக்க வழியில்லாது.... கணவரின் நல்ல வேட்டி ஒன்றை எடுத்து கத்திரித்து, அதில் சட்டை தைத்து தருகிறாள் மனைவி. மகனும் ஆவலோடு பள்ளிக்கு செல்கிறான். இப்படியாக வறுமையின் போராட்டங்களுக்கு நடுவே பள்ளி படிப்பு ஒரு வழியாக முடிகிறது.


கல்வி மீதிருந்த ஆர்வத்தால் அதற்கு பிறகு ராமகிருஷ்ணா கல்லூரியில் பட்டபடிப்பு சேர்கிறான். படிக்கும் காலத்தில் தங்களது உறவினர் வைத்திருந்த ஹோட்டல் ஒன்றில் மாலை வேளைகளில் பில்போடும் வேலை கிடைத்தது. காலை கல்லூரி. மாலை ஓட்டல் வேலை என்று நகர்ந்தது வாழ்க்கை.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கனவு... ஏக்கம்... ! ஆசைக்கு என்று இல்லாமல் தேவைக்கு மட்டுமே வாழ்க்கை வாழ வேண்டிய ஒரு நிர்பந்தம்.

கல்லூரி படித்து முடித்த பின்பு, லெதர் கம்பெனி ஒன்றில் மாதம் ரூ.850/- சம்பளத்தில் சூப்பர்வைசராக வேலை கிடைத்தது. அதுவும் சில ஆயிரங்கள் செலவழித்த பின்னர் தான்.


"ஏதாவது நிச்சயம் சாதிக்க வேண்டும்" என்ற லட்சியத்துக்கிடையே பலப் பல வண்ணக் கனவுகளுடன், வாழ்க்கை துவங்குகிறது அந்த இளைஞனுக்கு. அதற்கு பிறகு திருமணம். ஒரு சிறிய அறையில் ஒண்டுகுடித்தனத்தில் தான் இல்லறம் நடக்கிறது. வறுமையில் இருந்தாலும் அவன் மகிழ்ச்சியோடு இருந்த நாட்கள் இவை தான். கணவன் மனைவி அன்பின் விளைவாக குழந்தை ஒன்று பிறக்கிறது. ஆண்டுகள் சில உருண்டோடுகின்றது. மனைவி அடுத்த குழந்தைக்கான கருவை வயிற்றி சுமந்து வருகிறாள்.

இந்நிலையில் ஒரு நாள், காலையில் கண் விழித்தபோது வலது புறக் கண்ணில் பார்வை மிக மிக மங்கலாக தெரிகிறது. எதிரே இருப்பது எதுவும் சரியாக தெரியவில்லை. (ஏற்கனவே இவருக்கு MYOPIA - கிட்டப் பார்வை உண்டு. அதற்காக கண்ணாடி அணிந்திருந்தார்). கண்ணுக்குள் ஏதோ ஒரு வித வலி. அருகே உள்ள அரசு கண் மருத்துவமனைக்கு ஓடுகிறார். "பயப்படாதீங்க.... ஒன்னும் இல்லே. ட்ராப்ஸ் எழுதித் தர்ரேன். அதை போட்டுட்டு வாங்க... சரியாகிவிடும்." என்று கூறுகிறார். ஆனால், ஒரு சில நாட்கள் அதை போட்டும் எந்தப் பயனும் இல்லை. நாளாக நாளாக பார்வை போய்கொண்டே இருக்கிறது. இவரது தந்தைக்கு, மறைந்த பேச்சாளர் வலம்புரி ஜானை நன்கு தெரியும். அவரது பரிந்துரையின் பேரில், நகரிலேயே பெரிய கண் மருத்துவமனைக்கு தனது மகனை அழைத்து செல்கிறார். அங்கு தலைமை மருத்துவர் கண்களை பரிசோதிக்கிறார். "உங்களுக்கு கண்களில் வந்திருப்பது RETINAL HAEMORRHAGE என்னும் ஒரு வித நோய். அதாவது உங்கள் கண்ணுக்குள் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை நிறுத்த முடியாது. தானாக நின்றால் தான் உண்டு. இது ஏன் வருகிறது எப்படி வருகிறது இதெல்லாம் தெரியாது." என்கிறார். (1989 இல் நடக்கும் விஷயம் இது. இப்போதுள்ளது போல அப்போது கண் மருத்துவத்தில் நவீன வசதிகள் எல்லாம் கிடையாது.).


இவர் கண்கள் கலங்க...."இதுக்கு என்ன தான் வழி சார்?" என்று கேட்க, அதற்க்கு மருத்துவர் "இப்போவே ஒரு ப்ளைண்ட் ஸ்கூலில் நீங்க சேருவது தான் நல்லது. ஏன்னா... இந்த பிரச்னை உங்களோட இடது கண்ல கூட ஸ்டார்ட் ஆயிடுச்சு. சீக்கிரம் உங்களோட இடது கண் பார்வையும் போய்விடும். இதுக்கு ஒரே வழி... பார்வை இல்லாத சூழ்நிலையை எதிர்கொள்ள பழகிக்கொள்வது தான். Rest is with God" என்று கூறுகிறார்.


இவருக்கு ஒன்றுமே புரியவில்லை. வாழ்க்கையே ஒரு கணம் இருண்டுவிட்டது போல உணர்கிறார். வீட்டிற்கு வருகிறார். அக்கறையுடனும் கவலையுடனும் விசாரிக்கும் மனைவியிடம் கூட இவருக்கு உண்மையை சொல்ல தைரியம் இல்லை. என்ன சொல்வது? எதை சொல்வது? "கொஞ்ச நாள் மருந்து போட்டுட்டு வந்தா குணமாயிடும்னு சொல்லியிருக்கிறார்" என்று  சும்மா ஒப்புக்கு சொல்லிவைத்துவிட்டு படுக்கையில் சாய்கிறார். தூக்கம் வரவில்லை. எப்படி வரும்? இன்னும் கொஞ்ச நாள்ல ரெண்டு கண்லயும் பார்வை போய்விடும்னா எப்படி தூக்கம் வரும்? எல்லாத்தையும் ஆண்டு அனுபவித்துவிட்டு ஒரு 70 வயதுக்கு மேல் இப்படி ஒரு பிரச்னை வந்தாக் கூட பரவாயில்லே. தாங்கிக்கலாம். ஆனா, வாழ்க்கையே இப்போ தான் ஆரம்பிச்சிருக்கு. இந்த சூழ்நிலைல இப்படி ஒரு பிரச்னை வந்தா யாரால தாங்கிக்க முடியும்?


இரவு முழுதும் யோசிக்கிறார். "நமக்கு மட்டும் ஏன் இப்படி? அப்படி என்ன பாவம் செஞ்சோம்?" எண்ணங்கள் பலவாறாக ஓடுகிறது.


திக்கற்றோருக்கு அந்த தெய்வம் தானே துணை? கடைசியில், இறைவனின் கால்களைப் பற்றுவது தான் ஒரே வழி என்று முடிவுக்கு வருகிறார். இவருக்கு சுவாமி ஐயப்பன் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. இவரது இஷ்ட தெய்வம் என்றால் அது ஐயப்பன் தான். மனம்விட்டு அடிக்கடி ஐயப்பனிடம் பேசுவது இவரது வழக்கம். 


எனவே, தன் வீட்டில் உள்ள ஐயப்பன் படத்தின் முன்பு நின்று ஐயப்பனிடம் மனமுருகி பேசுகிறார். "நான் என்ன பாவம் செய்தேன் ஐயப்பா? எனக்கு ஏன் இப்படி ஒரு பெரிய தண்டனை? வாழ்க்கையே இனிமே தான் ஆரம்பிக்கப்போகிற ஒரு சூழ்நிலைல இப்படி ஒரு தண்டனை எனக்கு ஏன்? உன்னைத் தவிர எனக்கு வேறு யாரு இருக்கா? நீ தான் என்னை காப்பத்தனும்..." இப்படி பலவாறாக புலம்புகிறார்.


கடைசியில் ஒரு முடிவுக்கு வருகிறார். அப்போதெல்லாம் 'டிக் 20' என்ற ஒரு வகை பூச்சி மருந்து ரொம்ப பேமஸ். அதை வாங்கி வைத்துக்கொள்கிறார்.


நேரே ஐயப்பன் முன்பு போய், "பார்வையில்லாமல் இந்த உலகத்தில் வாழ்வதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. உனக்கு ஒரு வாரம் டயம் தருகிறேன். அதற்குள் என்னுடைய இந்த பிரச்னை முடிவுக்கு வரவேண்டும். இல்லையெனில் இந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு உயிர் துறப்பேன். நிச்சயமாக" என்று அந்த இறைவனுக்கு கெடு வைக்கிறார்.


சரி... பூச்சி மருந்தை சாப்பிட்டும் சாகலேன்னா என்ன செய்றது? (சில பேர் அந்த பூச்சி மருந்தை குடித்தும் பிழைத்திருக்கிறார்களாம்.) எனவே முன்னெச்சரிக்கையாக அரை பாட்டில் தூக்க மாத்திரைகளையும் வாங்கி வைத்துக்கொள்கிறார். தூக்க மாத்திரைகளை முதலில் சாப்பிட்டுவிட்டு பின்னர் பூச்சி மருந்தை குடிக்கலாம் என்று பிளான்.


ஐயப்பனுக்கு ஒரு வாரம் கெடு வைத்தாயிற்று. இவர் கெடு விதித்த நாட்கள் துவங்குகிறது. அதாவது கவுண்டிங் வித் டெத் ஸ்டார்ட்ஸ். மருத்துவத்துக்கும் இறைவனுக்கும் இவர் வைத்துள்ள போட்டிக்கான விடை தெரிய இன்னும் ஒரு வாரமே உள்ளது.


இவரை பொறுத்தவரை எப்படியும் ஒரு வாரம் கழித்து சாகப் போகிறோம் என்று முடிவுக்கு வந்துவிடுகிறார். ஏனெனில், நகரிலேயே தலை சிறந்த கண் மருத்துவர் கூறிய வார்த்தைகளையும் மீறி தனக்கு பார்வை வரும் என்கிற நம்பிக்கை இவருக்கு இல்லை. இருப்பினும். பாறையில் துளிர்விடும் வேரைப் போல ஒரு ஓரத்தில் சின்ன நம்பிக்கை இருக்கிறது. "அந்த ஹரிஹரசுதன் நம்மை கைவிட மாட்டான்" என்று.


இந்த இடைப்பட்ட ஒரு வாரம், இவர் மிகவும் விரும்பிய ஆடைகளை வாங்கி அணிந்துகொள்கிறார். ஆசைப்பட்ட உணவு வகைகளை வாங்கி சாப்பிடுகிறார். குழந்தையை கொஞ்சுகிறார். மரணத்தை அடுத்த வாரம் சந்திக்கப்போகும் ஒருவனுடைய மனநிலையில் இருந்துகொண்டு அனைத்தையும் செய்கிறார். இவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என்று அவரது மனைவிக்கோ அல்லது வேறு எவருக்குமே தெரியாது. இந்த ஒரு வாரமும் ஒவ்வொரு நாளும் தூங்கி விழித்த பின்பு, ஐயப்பன் படத்தை ஒரு சில வினாடிகள் பார்த்துவிட்டு தான் மறு வேலை பார்ப்பதை வழக்கமாக வெச்சிக்கிறார்.


7 வது நாள் -  ஞாயிற்றுக் கிழமை படுக்கச்செல்லும் முன் நினைத்துக்கொள்கிறார். "இது தான் நமது கடைசி தூக்கமோ... ஒருவேளை...ஹூம்... !" என்று.

மறுநாள் திங்கட்கிழமை காலை எழுந்திருக்கிறார். வழக்கம்போல ஐயப்பன் படத்தை பார்க்கிறார். ஆனால் இம்முறை பார்வையில் ஏதோ வித்தியாசம். வித்தியாசம் அல்ல. மிகப் பெரிய முன்னேற்றம். எந்த கண்ணில் பிரச்னை என்று தற்கொலை முடிவிற்கு போனாரோ அந்தக் கண்ணில் பார்வை முன்னை விட பிரகாசமாக தெரிகிறது. ஒரு கணம் இது கனவா நிஜமா? தன்னை கிள்ளி பார்த்துக்குறார். நிஜம் தான். "ஐயப்பாஆஆஆஆஆஆஆ............." கதறுகிறார் ஐயப்பன் முன்பு. வேறு வார்த்தைகள் வரவில்லை.


உடனே தான் மருத்துவமனைக்கு ஓடுகிறார். அதே மருத்துவர் இவரது கண்களை பரிசோதித்து ஒரு கணம் ஷாக் ஆயிடுறார். "இந்த கண்ணையா நான் இதுக்கு முன்னாடி டெஸ்ட் பண்ணினேன்? எல்லாம் ரொம்ப கரெக்டா இருக்கே இப்போ. ஒன்னுமே புரியலியே எனக்கு?" என்று தனது அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார். இடது கண்ணை டெஸ்ட் செய்கிறார். அங்கு கூட அந்த ரத்தக் கசிவு இருந்ததற்கான சுவடே தெரியவில்லை.


"தம்பி உன் ரெண்டு கண்ணும் நல்லா பர்ஃபெக்டா  இருக்கு. இதுக்கு முன்னாடி டெஸ்ட் பண்ணப்போ எங்கே தப்பு நடந்துச்சுன்னு தெரியலே..." மருத்துவர் நடந்தது என்னவென்று புரியாமல் சம்பிரதாயமாக சில வார்த்தைகள் கூறுகிறார்.


ஆனால் நடந்தது என்னவென்று அந்த ஐயப்பனுக்கு தானே தெரியும்!!!!!!!!!!!!!!!!!!!!!


இவரோட வாழ்க்கையில் எப்படி இந்த அதிசயம் சாத்தியமாச்சு? ஒரு பட விழாவுல சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்னது தான் நினைவுக்கு வருகிறது.... "நாம் எந்த தெய்வத்தை வணங்கினாலும்... அந்த தெய்வத்தின் மீது நாம் எந்தளவு நம்பிக்கை வைக்கிறோமோ அந்தளவு அந்த தெய்வத்துக்கு சக்தி இருக்கும்! So, கடவுள் மேல் நீங்கள் வைக்கும் நம்பிக்கை அசைக்க முடியாததாக இருக்கவேண்டும்!" என்று.


(மேற்படி நண்பருக்கு அந்த சூழ்நிலையிலும் ஐயப்பன் மேல இருந்த அந்த பக்தி - அந்த சின்ன நம்பிக்கை - மிகப் பெரிய விஷயமுங்க. அதை நினைவுல வெச்சிகோங்க!)


என்ன நம்புறதுக்கு கஷ்டமா இருக்கா? அட... நம் கண் முன்னே வாழ்ந்துவரும் நேரடி சாட்சிங்க இவர். நம்பலேன்னா எப்படி?


அன்றைக்கு ஐயப்பனால் காப்பற்றப்பட்ட இவர் அதற்கு பிறகு வாழ்க்கையில் சோதனைகளை, அவமானங்களை சந்திக்காமல் இல்லை. ஆனால், கடவுள் நம்முடன் இருக்கிறார். அவரது பரிபூரண கருணை நமக்கு என்றும் இருக்கிறது என்ற நம்பிக்கையில், சோதனைகளை எல்லாம் சாதனைகளாக்கி, அவமானங்களை எல்லாம் அவன் இட்ட உரங்களாக கருதி, அல்லும் பகலும் அயராது உழைத்து, இன்று மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தை நிறுவியிருக்கிறார்.


MADURAI APPU GROUP OF RESTAURANTS, R C GOLDEN GRANITES, SHRI SABARI BHAVAN, BLITZ BAKERY & CONFECTIONARY, BARBEQUE BISTRO என்று சுமார் அரை டஜனுக்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் முதன்மை நிர்வாக இயக்குனர் மற்றும் நிறுவனர் ஆர்.சந்திரசேகர்.


ரூ.850/- மாதச் சம்பளத்தில் வாழ்க்கையை துவங்கிய இவர் இன்று பல கோடிகளை ஒவ்வொரு மாதமும் அனாயசமாக TURN-OVER செய்யும் நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்.


விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும், அயராத உழைப்பும் கூடவே கொஞ்சம் தெய்வ நம்பிக்கையும் இருந்தால் எப்பேற்ப்பட்ட சாதனையும் சாத்தியமே என்று கூறும் இவரது வரலாறு நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.


எப்படி இவற்றை இவர் சாதித்தார்? அதற்கு இவர் கண்ட வழிமுறைகள் என்ன? உழைத்த விதம் என்ன? பட்ட அவமானங்கள் என்ன? சந்தித்த துரோகங்கள் என்ன? அனைத்தையும் விரிவாக உங்களிடம் பகிர்ந்துகொள்கிறார்.

விரைவில் தனிபதிவாக... ONLYSUPERSTAR.COM தளத்தில்... 

நண்பர் சுந்தர் திரு.சந்திர சேகர் அவர்களுடன் :

To read more on 'Rendezvous with Mr. Chandrasekar' : Please click
=============================================================

என்ன நண்பர்களே...! நல்ல மனசுக்கு வரும் சோதனைகள் எல்லாம் , நிச்சயம் ஒருநாள் பனித்துளி போல மறைந்து விடும் என்பதை உணர  முடிகிறதா? கவலையே பட வேண்டாம். இதோ நெருங்கி விட்டோம்  வெற்றிப்  படிகளை. நாமும் நம் இஷ்ட தெய்வத்தை பற்றிக்கொள்வோம்..!

19 comments:

arul said...

superb and excellent post please post more posts about people's experiences

PS said...

Mei silirkirathu. migavum arumai. pl post similar posts like this to give us hopes in life

PS said...

Excellent

திருமாறன் said...

மெய் சிலிர்க்க வைத்த கட்டுரை. கடவுளை நம்பினோர் கைவிடப்படார்!

Simple Sundar said...

எனது கட்டுரையை வெளியிட்ட ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றி!!

நல்லதே நினைப்போம். நல்லதே பேசுவோம். நல்லதே செய்வோம். நல்லதே.... நடக்கும்!
இது தான் நமது தளத்தில் நான் கற்றுக்கொண்டது.

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.(குறள் 442:)

- என்ற தெய்வப் புலவரின் வார்த்தைக்கு இணங்க, தங்கள் மற்றும் தங்கள் தளத்தின் அறிமுகம், எனக்கு விளைவித்திருக்கும் நற்பயன்களை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

எல்லாரும் எல்லாம் பெற்று சந்தோஷமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

என்றென்றும் நன்றியுடன்,
- சுந்தர்
OnlySuperstar.com

World Views said...

Great....
http://improvementyou.blogspot.in/

Chitti said...

நினைக்கவே மெய்சிலிர்க்கிறது. வாழ்க்கையில் இந்த மாதிரி தற்கொலை வரை சென்று வந்தவர்கள் தான் இன்று இந்த மாதிரி வானுயர்ந்த லட்சியங்களை அடைந்து இருக்கிறார்கள்.

இதை நான் பலரின் வாழ்க்கையில் உணர்ந்துள்ளேன். அவர்களை எந்த ஒரு தடையும் தடுக்க முடியாது. இருப்பினும், அதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், பல பேர் தற்கொலை முயற்சி செய்யும்போது அதில் தங்கள் உயிரை மாய்த்தும் கொள்கிறார்கள். ஆனால், ஒரு சிலர், அவர்களுக்கு இறை பக்தி ஏற்கனவே இருந்து, அவர்கள் தற்கொலை முடிவு எடுக்கும் போது அந்த இறை சக்தி அவர்களை இறுதி முடிவில் இருந்து, தடுத்தார் கொண்டு, அவர்கள் என்ன முடியாத அளவிற்கு அவர்களை உயர்த்தி விடுகிறது. உதாரணத்திற்கு இவர், ரஜினி, மற்றும் இந்த கட்டுரையின் ஆசிரியரை போல, இந்த தளத்தின் ஆசிரியரை போல, அவரும் ஒரு எழுத்தாளர். ஆனால், அவர் பல புத்தகங்களை எழுதி வருபவர். அவர் தான் திரு. அம்மன் சத்தியநாதன் அவர்கள். இவர்களை போன்று இன்னும் அனேக பேர் இருக்கின்றனர்.

எனவே, எந்த நிலையிலும் (தற்கொலை முடிவு எடுக்கும் நிலையிலும் இறை பக்தி இருந்தால்), இறைவன் நம்மை ஒரு எட்ட முடியாத உயரத்திற்கு கொண்டு சென்று விடுவான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இந்த பதிவு மற்றொரு தளத்தில் வந்தததை விட மிகவும் அருமையாக உள்ளது. இதை போன்று பல சாதனை சரித்திரங்களை வெளி கொண்டு வர வாழ்த்துக்கள்.
இந்த தளத்தை நடத்தி வரும் திரு. ரிஷி அவர்களுக்கும் நன்றி. ஏனெனில், இந்த தளத்தின் மூலம் தானே இந்த கட்டுரையின் ஆசிரியரும் தனக்குள் ஒரு மிக பெரிய மாற்றத்தை உணர்ந்து இந்த பதிவை அளித்திருக்கிறார். இவரை போன்று இன்னும் கண்ணுக்கு தெரியாத பலரை உருவாகியதற்கு நன்றிகள் பல!!!
**சிட்டி**

Anonymous said...

SWAMIYE SARANAM AYYAPPA

great...........

Anonymous said...

Sir i saw ur article, really it is very super, give some confident for my life also, i'm facing one problem, that is hurting me a lot, one of my close friend is angry on me, i do not know i went wrong, we did not speak for past 2 years, i called her number, but she did not pick up the call, later some month she has changed her number and did not give that number also i left as it is.

but often i'm thinking about her, last december i send an email, and she replied for that i was so happy, but i did not reply for that mail, then i thought she is normal. she dont have any angry on me.

Now new problem has come, her marriage got fixed, coming june is her marriage, and given card to all of my friends except me, even she has given card to my own sister and my uncle, one of my friend asked regarding this to my close friend, did u give card to (my name), she replied, no i will not give it to her, y should i have to give it to her, that this and all she told to that friend, one of my friend called me and told regarding this, after hearing those words and all, i feeling so much sir, solve my problem, daily i'm praying to god, i have to over come from this problem, i do have family, my husband and for my child if i feel ok acceptable, why should i feel for others like that also i'm thinking, but did not get solution, please help me sir

Rishi said...

பின்னூட்டம் இட்ட ஒவ்வொரு நண்பருக்கும், என் மனமார்ந்த நன்றிகள். உங்கள் வேலைப்பளுவுக்கு இடையில், தங்களின் மேலான கருத்துக்கள், எங்களுக்கு மிகப் பெரிய ஊக்கி. கடைசியில் ஒரு பின்னூட்டம் . ஒரு தீர்வை எதிர் பார்த்து இடப்பட்டு இருந்தது. அன்பு சகோதரி, தாங்கள் எவ்வளவு மன உளைச்சலில் இருப்பீர்கள் என்பதை , படித்ததும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதற்குத் தகுந்த முறையான வழிபாட்டை, நான் நாளைக்குள் பின்னூட்டத்தில் இடுகிறேன். நிச்சயம் உங்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். நல்ல ஆரோக்கியமும், மன நிம்மதியும் உங்களுக்கு விரைவில் கிடைக்க, இறைவனை நாங்களும் பிரார்த்திக்கிறோம். வாழ்த்துக்கள்.

BI_Buff said...

Hi Rishi,
Very good article, thanks for publishing such articles and giving us hope. I am not good at writing tamil, so please bear with me.

Thank you

Simple Sundar said...

அன்புச் சகோதரி,

உங்கள் தோழியின் செயலால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் காயத்தின் ஆழத்தை உங்கள் வார்த்தைகளில் இருந்தே நன்கு உணர முடிகிறது.

உங்களுக்கு உங்கள் தோழிக்கும் இடையே யாரோ மூன்றாம் நபர் கலகமூட்டியிருக்கவேண்டும். மனமொத்த நட்பிற்கு வஞ்சனை செய்வது பாபத்திலும் கொடிய பாபம். இது ஏற்படுத்தும் வலி மிக மிக கொடுமையானது. அதை அனுபவித்தவர்களுக்கு தான் அது தெரியும்.

கவலை வேண்டாம்....

63 நாயன்மார்களுள் தனிச் சிறப்பை பெற்ற முதல் மூவருள் ஒருவரான, சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய கீழ்கண்ட பதிகத்தை தினமும் பக்தியுடன் பாராயணம் செய்துவரவும். உங்கள் தோழியின் மனதில் மாற்றம் ஏற்பட்டு, உங்களை தேடி வருவார். உங்களுக்கிடையே கலகமூட்டிய அந்த மூன்றாம் நபரும் அடையாளம் காணப்படுவார்.

நல்லதே நடக்கும். கவலைவேண்டாம். உங்கள் தோழி உங்களுக்கு பத்திரிக்கை வைக்கும் விபரத்தை மறக்காது இங்கு தெரியப்படுத்தவும்.

ஏழிசையாய் இசைப்பயனாய்
இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யுந்
துரிசுகளுக் குடனாகி
மாழையொண்கண் பரவையைத்தந்
தாண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே.

குறிப்புரை : இறைவனிடம் தோழமை உறவு பூண்டவர் சுந்தர மூர்த்தி சுவாமிகள். இறைவனை எழிசையாகவும், இசைப்பயனாகவும் மட்டுமின்றி, தோழனாகவும் பெற்றமையால் தான் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு இறைவனும் உடன் நிற்கிறார் என்று உரிமையுடன் பாடுகிறார். அதே இறைவன் தான் தன்னை காணவேண்டும் என்ற காரணத்திற்க்க்காகவே சுந்தரர் செய்து கொடுத்த சத்தியத்தை மீறி திருவொற்றியூர் தாண்டியதும் அவர் கண்களை பறித்தார். பிறகு ஒவ்வொரு கண்ணாக பார்வை வரச் செய்தார். எனவே தொழமைஎன்று உரிமை பூண்டாலும் நடுவுநிலைமை தவறாத இறைவனின் தன்மையை இந்தப் திருப்பாடல் வழியாகவும், சுந்தரர் வாழ்வில் தொடர்ந்து வந்த நிகழ்வுகள் வாயிலாகவும் அறியலாம்.

(நன்றி : அருளும் பொருளும் தரும் திருப்பதிகங்கள் - வெளியீடு : விஜயா பதிப்பகம்.)

Anonymous said...

very nice articles sir
please post more articles
last 2 months you post only 3 to 6 articles.
such a motivational website

Anonymous said...

Thanks Simple Sundhar Sir for your reply,happy to see ur comment, i know very well tamil, but i dont know how to type in comment pane, sorry for that.

Ya what u told about our relation ship is 100% correct, someone made something in between us that why our friendship has broken, they have to stop, and my freind also has to understand me, that is more than enough for me, but i can not identify who is that making something wrong in between us, anyhow, your words has given good positive energy to me, thanks a lot Sir.

i dont know because of u people prayers i got a good result from oneside, my friend's father has called me, and was asking about my family and also invited for my friend's marriage, i was so happy and told her father, i dont know appa why she is that much angry on me, really it is hurting me a lot. then he replied dont worry ma, will talk about that later, but u should come for marriage, and give ur address i will send invitation, but i told, i dont want invitation pa, phone call in enough and i informed regarding this to my husband, he was telling, ok we will go for her reception, dont mind that ur friend has to invite, her father has invited know that is more than enough.

i will do prayer with slogam which u given, i'm expecting that my friend has to invite me sir.....
Surly i will post once i will get a call from my friend.

Thanks & Regards

Ashok kumar, Pudukkottai said...

Sundar Sir,

It is a very good encouraging article. I too believe Lord Ayyappan. He always does Miracles in our Life.

Anonymous said...

Hi Rishi,

I'm waiting for your result, for the comment on May 15

lucia kumar said...

can any one tell me a sloham to get a job for my daughter soon and also get rid of financial problem.my email id is lucia.swaminathan@yahoo.com

Sudha Subramani said...

Hi Rishi Sir,

I wrote a comment on March 15 2012, about my friend, and i mentioned that she did not invite for her marriage, A two years passed, I received an email from my friend (last month 2013) and she asked me about me and my family, and she said past is past, i dont have any angry on u,and she has given her no. and told me give a call, and did the same, i called her and we started to talking now and i asked her why u didn't invite for ur marriage, only mom and dad called me for ur marriage,then she replied me as i said to u before past is past, dont ask anything about that v will forget that, and three days once i'm getting call from her and i used to call her three days once, i'm very happy to share this with u and simple sundar, simple sundar has has given slogam to recover from that one month i said infront of god, and i left, but after 2 years i got benefit of that slogam, pray for our friendship should not break up and it should go with life long.....and happy new year

BillalliB Change said...

Good is Great ......

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com