Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

2012-2013 குருப் பெயர்ச்சி பலன்கள் (Guru Peyarchchi palankal)

| May 9, 2012

நமது வாசகர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப, பன்னிரண்டு ராசிகாரர்களுக்கும்  உரிய இந்த வருட குருப் பெயர்ச்சி பலன்களை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கீழே இரண்டு பிரபல ஜோதிடர்கள் கணித்த பலன்களின் 'லிங்க்'குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டையும் படித்துப் பார்க்கவும்...

திரும்பவும் கவனப் படுத்துகிறேன். இவை ராசிகளுக்கு உரிய பொதுப் பலன்களே...  தங்கள் சுய ஜாதகப்படி, பலா பலன்கள் கூடுதலாகவோ, குறைவாகவோ அமையும். அதனால், ஜெனன கால ஜாதகத்தையும் பரிசீலித்து - கவனமுடன் இருந்து உரிய தெய்வ வழிபாட்டை செய்து வந்தால், எந்த தீமையும் நம்மை அசைக்க முடியாது.

இந்த வருடம் குரு - ரிஷப ராசியில், கேதுவுடன் இருந்து பலன் அளிக்க விருக்கிறார். ரிஷபம் - சுக்கிரன் வீடு. இவருக்கு பகை வீடு. ஒரு எதிரியின் வீட்டில் இருந்து கொண்டு - கூடவே ஒரு சர்ப்பமும் கூட இருந்து , அவர் பலமிழந்து தான் இருக்க கூடிய சூழல் நிலவுகிறது. அதனால், இந்த வருட குரு பெயர்ச்சியால் நல்ல பலன்கள் கிடைக்காத ராசிகள் கூட , வருந்த தேவையில்லை என்பது என் அபிப்பிராயம்.....

இஷ்ட தெய்வ வழிபாட்டை, விடாமல் மேற்கொள்ளுங்கள். உங்கள் மேல் நம்பிக்கை வைத்து, முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். கிடைக்கும் பலன்கள் அனைத்தும் அவன் வரம் என்று நம்புங்கள்... நிச்சயம் வாழ்வில் வசந்தம் நிகழும்...!

வாழ்க அறமுடன் ..! வளர்க அருளுடன்..!

2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்:


http://www.ziddu.com/download/19342493/27.5.2013-.pdf.html



2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள் : 
 
http://www.ziddu.com/download/19342500/27.5.2013-.pdf.html

3 comments:

ஒட்டக்கூத்தன் said...

எல்லாம் அவன் செயல்

கோடியில் ஒருவன் said...

அற்புதமான பலன்கள். எளிய பரிகாரங்கள். பகிர்ந்துகொண்ட ஆசிரியருக்கு மிக்க நன்றி. தொடரட்டும் உங்கள் பணி!

ஜோதிடம், ராசிபலன்கள் இதெல்லாம் பொதுவாக வாகனம் ஓட்டும்போது நாம் அணியும் தலைக்கவசம் போலத் தான் நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கவசம் இருக்கிறதே என்று கண்ணாபின்னாவென்று வண்டியை ஓட்டகூடாதல்லவா?

இங்கே நல்லா வண்டி ஓட்டுவதென்பது யாருக்கும் எந்த வித தீங்கும் செய்யாமல், எல்லாம் அவன் செயல் என்று கருதி நம் கடமையை செவ்வனே செய்வது. தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளை விலக்கி, இனி வரும் காலங்களில் நல்லவனாக வாழ முயற்சிப்போம். நல்லவனாக இருப்பதைவிட மிகப் பெரிய ஆன்மிகம் எதுவுமில்லை.

பலன்கள் சற்று சுமாராக இருப்பவர்கள் வருந்த வேண்டியதில்லை.

நாளென்ன செய்யும், கோளென்ன செய்யும் சிவனை வணங்குபவர்களை?

திருஞான சம்பந்தர் அருளிய கோளறு பதிகத்தை சிரத்தையுடன் படித்து வரவும். நல்லதே நடக்கும்.

(நம்ம ஆசிரியரோட எழுத்துக்களை படிச்சி படிச்சி இப்படியெல்லாம் சிந்திக்க தோணுதுங்க!)

- கோடியில் ஒருவன்

Anonymous said...

All is good but the photo is not suit for this post, because guru peyarchi is planet."Not thachina moorthy".

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com