Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

அவசியம் தரிசிக்க வேண்டிய அதி அற்புத ஆலயங்கள் : (பகுதி - 01)

| May 23, 2012
வாசக அன்பர்களுக்கு என் பணிவான வணக்கம். நமது வாசகர்கள் அனைவரிடமும், ஒரு உதவியை எதிர் பார்க்கிறேன். எந்த ஒரு முயற்சியும், தனிப்பட்ட முறையில் செய்வதை விட, ஒரு கூட்டு முயற்சியாக செய்தால், அது எளிதாக நிறைவேறிவிடும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

சென்ற பதிவில், நான் குறிப்பிட்ட படி - சித்தர்கள் நமக்கு அருளிய அபூர்வ ஆன்மீக குறிப்புக்களை பற்றிய கட்டுரைகள் நாம் தொடங்கும் முன்பு, இந்த பதிவு அவசியம் என எண்ணியதன் விளைவே இந்த கட்டுரை. நமது வாசகர்களில் சும்மா ஒரு வாசிப்பு சுவாரஸ்யத்துக்கு வருபவர்கள் எத்தனை பேர், நிஜமாகவே ஆர்வத்துடன் வருபவர்கள் எத்தனை பேர், நான் மட்டும் நல்லா இருந்தாப் போதும் என்று நினைக்காது, பொது நல நோக்குடன் இருப்பவர்கள் எவ்வளவு பேர்  என்று அறிய ஒரு சின்ன முன்னோட்டமாக இந்த முயற்சி.

என்னடா, ஓவர் பில்ட் அப் ஆக இருக்கிறதே, ஏதாவது அறக்கட்டளை, மடம், கோவில் பணி என்று பைசா சம்பந்தப்பட்ட விஷயமோ என்று ஜெர்க் ஆகிடாதீங்க... இது அப்படிப்பட்ட விஷயமே அல்ல...! அது நமது நோக்கமும் அல்ல. கிட்டத்தட்ட அறுநூறு பாலோவர்ஸ்,   இரண்டாயிரத்து ஐநூறு இ-மெயில் சப்ஸ்க்ரைபர்ஸ் என்று ஒரு பெரிய நெட்வொர்க் ஆக நமது தளம் இப்போது இயங்கிக்கொண்டு இருக்கிறது. இவங்க எல்லோரையும் இந்த பதிவு மூலம் ஒரு சின்ன ஒருங்கிணைப்பு பண்ணனும்னு ஒரு ஆசை.. அதிக பட்சம் உங்கள் மேலான நேரத்தை, ஒரு அஞ்சு நிமிஷம் ஒதுக்கினாப் போதும். ஒன்னும் இல்லை, இந்த பதிவு படிச்சதும், நீங்க ஒரு E-mail / பின்னூட்டம் இடணும். படிக்க வரும் வாசகர்களுக்கு ஒரு உபயோகமான தகவலா இருக்கணும். அவ்வளவுதான் விஷயம். In future, நாம எல்லோரும் ஒரு குடும்பம் மாதிரி , ஒரு குழுவா அல்லது ஒரு forum போன்று நமது விவாதங்கள், கருத்துக்கள் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று  ஒரு ஆசை.

விஷயம் இதுதான் : நமது பாரத பூமியில் எவ்வளவோ ஆலயங்கள் இருக்கின்றன. ஆனால், ஒரு சில கோவில்களுக்கு சென்று வணங்கி வரும்போது, சில கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறுகிறது. அதற்க்கு என்ன காரணம், என்ன சூட்சுமம் எல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால், உங்கள் மனது அதை உணரும். முதல் தடவை எதோ எதேச்சையாக நடந்தது போல தோன்றினாலும், அடுத்தடுத்து அந்த குறிப்பிட்ட ஆலயத்திற்கு சென்று வரும்போது, ஆச்சரியப் படத்தக்க விஷயங்கள் நடக்கும். மனது அந்த இறைவனை 'சிக்' கென பற்றிவிடும். இந்த அனுபவம், உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயமாக இருந்து வந்து இருக்கும். அல்லது உங்களுக்கு மிக நெருக்கமானவர்களுக்கு நீங்கள் சொல்லி இருக்கக் கூடும். இந்த ரகசியத்தை, நீங்கள் நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டால், நமது வாசகர்கள் குழுவில் உள்ள அனைவரும் பயன் பெற உதவியாக இருக்கும்.

இறைவனின் அருள் கடாட்சம் பரிபூரணமாக நிலவும் ஆலயம் பற்றி நீங்கள் உணர்ந்த அனுபவம், அந்த ஆலயம் எங்கே இருக்கிறது, என்ன பலன்கள் உடனடியாக கிடைக்கும் என்பது பற்றிய தகவல்கள், துன்பத்தில் உழன்று கொண்டு இருக்கும் எதோ ஒரு நல்ல ஆத்மாவுக்கு, உடனடி தீர்வாக அமையும்.

நமது வாசகர்கள் அனைவரும் ஏனோ தானோவென்று இருப்பவர்கள் இல்லை. அவர்கள் மிக மிக நல்ல மனிதர்கள் என்பதை , நம் வாசகர்களும், புதிதாக நம் தளத்துக்கு வரும் வாசகர்களும் உணர வேண்டும். ஏற்கனவே நாம், பல ஆலயங்களைப் பற்றியும், அவற்றின் மகத்துவம் பற்றியும் பல கட்டுரைகளில் அலசி இருந்தாலும், இந்த பதிவும், இதை சார்ந்து நீங்கள் இடும் பின்னூட்டங்களும், இணைய தள வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைய வேண்டும் என்பது என் ஆசை.

பிள்ளையார் சுழியாக, நான் ஆரம்பித்து வைக்கிறேன். ஒரு சின்ன கோடு போட்டா, நீங்கள் ரோடே போட்டு விடுவீர்கள் என்று நம்புகிறேன்.
====================================================================
இந்த ஆலயம் ஒரு பழம்பெரும் சிவ ஆலயம். கட்டி முடித்து ஆயிரம் வருடங்களுக்கு மேல் இருக்கும். காலம் காலமாக பல சிவன் அடியார்களின் திருவடி பட்ட இடம். சத்தமே இல்லாமல், பல ஆச்சர்யங்களை அற்புதங்களை நடத்திக் கொண்டு இருக்கிறார், இங்கு உள்ள சிவன்.அந்த சித்தர் வந்து வழிபட்டு இருக்கிறார், இந்த நாயன்மார் வந்து தொழுது இருக்கிறார். தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் என்று ஒவ்வொரு ஆலயத்திற்கும் , எவ்வளவோ பெருமைகள் இருக்கும்.

 இந்த ஆலயத்திற்கும் இருக்கிறது. ஆனால், எது எப்படி இருந்தாலும், நம் மனது அறிய சில அதிசயங்கள் நிகழ்ந்தால் ஒழிய, நாம் நம்புவதேயில்லை, இந்த மாதிரி நிறைய கோவில்களை பார்த்திருக்கேன் சாமி, ஆனா, நான் போய் கும்பிட்டா, அந்த சாமி கண்டுக்கிறதே இல்லை.. மேலே சொல்லு..! என்று தான் தோன்றும் இல்லையா? பர்ட்டிக்குலரா நான் ரொம்ப மோசம்... அவ்வளவு சீக்கிரம் என் மனசு எந்த விஷயத்தையும் சீர் தூக்கிப் பார்க்காமல் ஒப்புக்கொள்வது இல்லை.

அப்படிப்பட்ட என்னையும் மாற்றியவர் இங்கு அருள் பாலிக்கும் அய்யன். கிட்டத் தட்ட பத்து வருடங்களாக , வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் இங்கு வழிபட்டுக் கொண்டு இருக்கிறேன். தனிப்பட்ட முறையில் எனக்கு பல அற்புதங்களை இவர் நடத்தி இருந்த போதிலும், என் நண்பர் இருவரின் வாழ்க்கையில் இவர் நடத்தி இருக்கும் அற்புதங்கள், சத்தியமாக எதேச்சையாக நடந்த விஷயம் அல்ல.

விசேஷ தினங்களில், பிரதோஷ நாட்களில் கூட்டம் அலைமோதும். சாதாரண நாட்களில் , இவரைக் காண சென்றால் நீங்களும், இறைவனும், கோவில் குருக்களும் மட்டுமே இருப்பீர்கள். சமயத்தில் குருக்கள் கூட வெளியில் நந்தி மண்டபத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருப்பார். நீங்களும், பரம்பொருளும் மட்டுமே. நீங்கள் உரையாடுவதை அவர் காது கொடுத்து கேட்கும் உணர்வு , உங்களுக்கு ஏற்படும். இதை எழுதும்போதே , சில சம்பவங்கள் நினைத்து மயிர் கூச்செடுக்கிறது.

"ஐயனே, என்னாலே முடியலை, என்னோட சக்திக்கு உட்பட்டு என்னாலே சமாளிக்க முடியும்னு தெரியலை, தயவு செய்து அருள் புரியுங்கள்" - என்று உங்கள் மனதுக்குள்  ஒலிக்கும் ஓலக்குரலை, ஒரு தாயின் கருணையுடன் - செவி மடுத்து , பிரச்னைகளை உடனுக்குடன் ஊதித் தள்ளி, பரவசத்தில் ஆழ்த்துபவர், இந்த ஆலயநாதர்.

என்னதான் பகீரதப் பிரயத்தனம் எடுத்து நாம் முயற்சிகள் மேற்கொண்டாலும் , சில விஷயங்களில் இறைவனின் கருணை கண்டிப்பாகத் தேவைப்படுகிறது. சிலருக்கு அது அலுவலக சம்பந்தமாக இருக்கலாம், கடன், சொத்துப் பிரச்னை, திருமணம் என்று பிரச்னைகளுக்கா பஞ்சம். இதோ முடியப்போகிறது என்று நினைத்து இருக்கும் நிலையில், எங்கிட்டிருந்தோ ஒரு புது குறுக்கீடு வந்து, மறுபடியும் முதல்ல இருந்தா.. "த்ஸ்..அப்பா, இப்போவே கண்ணைக் கட்டுதே..." , என்று நொந்து நூடுல்ஸ் ஆகிவிடுவோம்.

ரொம்ப கூலா சில பேர் சொல்லிடுறாங்க, மனுஷனா பொறந்தா, கஷ்ட நஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். எல்லாத்தையும் சமாளிக்கனும்னு. கரெக்ட்ங்கண்ணா  .. வெறும் கஷ்டமும், நஷ்டமும் மட்டும் தான் இருக்கு... என்னைக்கு கரை ஏறப்போறோம்னு தெரிய மாட்டேங்குதே... அதைத் தானே யோசிக்கிறீங்க... மேலே படிங்க.. ! என் நண்பருக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறுகிறேன்.

"ஐய்யா, இந்த ஜாதகத்தைப் பாருங்கள், எனக்கு குழந்தை பாக்கியம் இருக்கிறதா , இல்லையா ? எதாவது நல்ல வார்த்தை கூறுங்கள்" என்றுதான் அவர் அறிமுகம் சென்ற வருடத்தில் நடந்தது. கணவன், மனைவி இருவர் ஜாதகமும் இருந்தது. ஏற்கனவே தாமத திருமணம். ஜாதக ரீதியாக அவர் மனைவிக்கு மிக உஷ்ணமான உடம்பு. கரு தங்கினாலும், மருத்துவ ரீதியாக கரு நிலைப்பதற்கு உடம்பு ஒத்துழைக்காது. ஜாதகத்திலும் புத்திர பாக்கியத்திற்கு வாய்ப்பு இல்லை என்றே நிலை. ஆனால், ஒரு நல்ல ஜோதிடன் அனுகூலமான பலன்கள் நடக்க வாய்ப்பு இல்லையெனினும், அதை வாய் விட்டு கூற இயலாது, அதை ஒரு கொள்கையாகவே வைத்து இருப்பவன் நான்.

அவருக்கு நான் கூறிய பரிகாரம் இதுதான். சிவ ராத்திரி நெருங்கிக்கொண்டு இருந்த வேளை அது. நீங்களும் , உங்கள் மனைவியும் சிவ ராத்திரி முழுவதும், இந்த ஆலயம் சென்று - உங்களால் எவ்வளவு நேரம் ஆலயத்தில் இருக்க முடியுமோ, அவ்வளவு நேரம் இருந்து - மனம் உருக இறைவனிடம் வேண்டுங்கள். நிச்சயம் உங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. விரைவில் நீங்கள் அப்பாவாகப் போகிறீர்கள் என்று, நானும் அவருக்காக வேண்டினேன். வீட்டில் இருந்த கல்கண்டு கொஞ்சம் எடுத்து, அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சார் என்று இனிக்க இனிக்க வாழ்த்தி அனுப்பினேன்.

அவரும் சும்மா இல்லை, சிக்கென அவன் திருவடிகளைப் பற்றி சரணடைந்தார். கிட்டத்தட்ட மருத்துவ உலகமே, கைவிரித்து விட்ட சூழலில் அந்த தம்பதிகள் இருந்தனர். நம்பிக்கையின் ஒளி கீற்று மொத்தமாக மங்கிய நிலை.... ஆனால், இன்று ! ஆம், அந்த பேரதியசம் நடந்தே விட்டது... மிகச் சரியாக பதினைந்து மாதத்திற்குள் அவர் இன்று ஒரு அழகான ஆண் குழந்தைக்குத் தந்தை.

சிவராத்திரி அன்று, இரவில் இந்த ஆலயத்திற்கு வந்த அவருக்கு, ஒரு வயதான பெரியவர் பேச்சுத் துணைக்கு கிடைத்து இருக்கிறார். பொதுவாக பேசத்தொடங்கிய அவர்கள் உரையாடல், ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்ததாம். சிவ ராத்திரியின் மகிமைகள், சிவனின் திருவிளையாடல்கள் என்று பேச்சு மிக அருமையாக நடந்து இருந்து இருக்கிறது. அந்த பெரியவர் யார், என்ன என்று விவரம் தெரியவில்லை. மனது முழுவதும் லேசாகி, ஒரு அபரிமிதமான பரவச அனுபவத்தில், அந்த தம்பதிகள் திளைத்து இருந்தனராம். அவர் எதோ ஒரு சித்தராக இருக்கலாம் என்று அந்த நண்பர் மனப்பூர்வமாக நம்புகிறார்.

"சார், இன்னைக்கு என் பையன்  என் கன்னத்தைப் பிடித்து, முத்தம் கொடுத்தான் , பாருங்க! நான் அவுட் சார், வாழ்க்கையில இம்புட்டு சந்தோசமா நான் இருந்ததே இல்லை"ன்னு இன்று அவர் கூறியபோது , அவர் முகத்தில் தெரிந்த அந்த மகிழ்ச்சி, நிம்மதி... அடேங்கப்பா...! ஈடு இணையே இல்லை. எத்தனை கோடி சொத்து இருந்தாலும், கொஞ்ச ஒரு மழலை இல்லையென்றால், அது தரும் வேதனை அதை அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும்...

முக்கியமாக சிவ ராத்திரி தினத்தில் அத்தனை மகிமை பொருந்திய ஆலயத்தில் இருந்ததே, ஜாதக ரீதியாக அத்தனை குளறுபடிகளையும் தூக்கி கடாசி இருக்கிறது,... நாளென்ன செய்யும் ? கோள் என்ன செய்யும்- அவன் கருணை இருக்கும் இடத்தில். இந்த நண்பர் வாழ்க்கையில், அவன் அதை நிரூபித்துவிட்டான். இது நூறு சதவீதம் உண்மையாக நடந்த நிஜம்.

இன்னொரு நண்பருக்கு, நடந்த சம்பவம்.... கந்து வட்டியால் கதறி கதறி துடித்துக் கொண்டு இருந்தவர். நல்ல சம்பளம் வாங்கியும், ஒரு பிரயோஜனமும் இல்லை, வாழ்க்கை முழுவதுமே வட்டி கட்டியே ஓடிவிடுமோ என்கிற நிலை. சொந்தம், பந்தம் நட்பு என்று அத்தனை பேரிடமும் ஏற்கனவே உதவி வாங்கி, அதை திருப்பிக்கட்ட தலை குப்புற குட்டிக்கரணம் அடித்து, வேறு எங்கும் உதவி கேட்க முடியாத சூழ்நிலை.

கிரெடிட் கார்ட் கடன் நிரம்பி வழிகிறது.. மாத மாதம் , பேங்க் காரர்கள் வீட்டுக்கு வந்து சட்டையை பிடிக்கின்றனர். ஏற்கனவே ஒரு பாங்க்கில் லோன் எடுத்து திருப்பிக் கட்ட முடியாத சூழ்நிலை. இப்போதெல்லாம், ஒரு டெலி போன் பில் ஒழுங்காக கட்டவில்லைஎன்றாலே, உடனே CIBIL ரிப்போர்ட்டில் பதிவாகிவிடும். எந்த பேங்க்கிலும் லோன் கிடைக்காது. ஆரும் பேச மாட்டாங்க. ஆரும் தண்ணி கொடுக்க மாட்டாங்க.. நாட்டாமை தீர்ப்புக்கு மதிப்பு கொடுத்து. இந்த நிலைமையில் வீட்டிலும் அனுசரணையாக யாரும் இல்லை. ஒரே சண்டை, களேபரம். இப்படி இருந்தா, யார் மதிப்பா...? எதுக்கும் ஒரு லிமிட் இருக்கு இல்லே...!

மனுஷன் கிட்டத்தட்ட விரக்தியின் உச்சத்துக்கே வந்து விட்டார்...! செத்துப் போறதுதான், இருக்கிற ஒரே வழி. ஆனா, குடும்பம் , குட்டி என்ன செய்யும்...? பெருமைக்கு , பந்தாவுக்குன்னு நிறைய செலவு பண்ணி, சொத்து வாங்குறேன், ஷேர் வாங்குறேன்னு இறங்கி, இன்னைக்கு அத்தனையும் விற்றும், கடன் தீர்ந்த பாடு இல்லை. யாரைப் பார்த்தாலும், முகத்துல சிடுசிடுப்பு. வாழ்க்கையில தோத்துக்கிட்டு இருக்கிறவங்க ஒவ்வொருத்தருக்கும் இருக்கிற அதே உணர்வு.கடைசியில் நடுத்தெரு நாராயணன் நிலைமை. இவரு நல்ல நேரம், ஆரம்பமாகிற நேரம் அது. எதேச்சையா, என்னை சந்தித்தார்.

"சார், சாமி, கடவுள் , ஜாதகம் எதிலேயும் எனக்கு நம்பிக்கை ரொம்பவே இருந்துச்சு, ஆனா இப்போ இல்லை. எத்தனையோ கோவில் - எத்தனையோ பரிகாரங்கள், எல்லாம் வேஸ்ட் சார்.. ஒவ்வொருத்தரும் முடிஞ்ச அளவுக்கு இன்னொருத்தனை ஏமாத்தி காசு சம்பாதிக்கிறாங்க. அறிவு தான் ஒரு மனுஷனை வழி நடத்துது. அதுதான் நான் உணர்ந்த ஞானம். எனக்கு இருக்கிற அறிவு பத்தலைன்னு நான் நினைச்சுக்கிறேன். ஆனா, இப்படியே வாழ்க்கை போச்சுன்னா, நான் வாழுறதிலேயும் அர்த்தம் இல்லை"ன்னு தான் ஆரம்பிச்சார்....

 நான் அவர் கட்டத்தை வாங்கிப் பார்த்திட்டு, முதல்ல அவர் கையை பிடிச்சு குலுக்கினேன். முதல்ல கையை கொடுங்க சார்.. நீங்க எவ்வளவு கஷ்டப் பட்டு இருப்பீங்கன்னு கட்டத்தைப் பார்த்தாலே தெரியுது... ஆனா, போன மாசத்தோட எல்லா நிலைமையும் முடிஞ்சது. இவ்வளவு தூரம் நீங்க கடந்து வந்ததிலேயே, நீங்க எவ்வளவு பெரிய திறமைசாலின்னு தெரியுது... கவலையே படாதீங்க...! எண்ணி ரெண்டு மாசத்துக்குள்ளே, உங்க கஷ்டம் எல்லாம் பறந்து போகும்... நீங்க பெரிய ஆளா ஆகப் போறீங்க... ! நம்பிக்கையோட இருங்க....! இனி தொட்டது எல்லாம் வெற்றிதான்னு சொன்னேன்.

இப்படி ஒரு வார்த்தையை அவர் எதிர் பார்க்கவே இல்லை....வெயில்ல கிறங்கி, தண்ணி தண்ணின்னு வர்றவனுக்கு - சும்மா கும்முன்னு மோர் கிடைச்சா எப்படி இருக்கும்? " ரொம்ப சந்தோசம் சார்... என்ன பரிகாரம் செய்யனும், எல்லாமே ஏற்கனவே செஞ்சுட்டேன்.. இனியும் எதுவும் செய்யணும்னாலும் செய்றேன்"னு சொன்னார்...

"நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம் சார்.. நீங்க ஒரு கோவிலுக்கு மட்டும் போயிட்டு வாங்க"ன்னு நான் கைகாட்டினது இந்த கோவில் தான்... "எப்படி கும்பிடனும், ஏதாவது வழிமுறைகள் இருக்குதா?"....ன்னு கேட்டார். அவர் நிலைமை எனக்கு நல்லாவே தெரியும். ஒரு பார்மாலிட்டியும் கிடையாது. உங்க தாய், தகப்பனை பார்க்கிறதுக்கு எதுக்கு சம்பிரதாயம், சாஸ்திரம் எல்லாம்..? உங்க சொந்த வீட்டுக்கு போற மாதிரி போய்ட்டு வாங்க.  "சார்... உங்களால முடிஞ்சா, ஒரு மல்லிப் பூ மாலையும், தேங்காயும் உடைச்சிட்டு வாங்க, மீதி எல்லாம் அவன் பாத்துப்பா"ன்னு தைரியமா அவனை நம்பி, இவரை அங்கே அனுப்பினான். "கடையில் பேரம் பேசாமல், கேரி பாக் இல்லாமல், உங்கள் கைகள் பட, இறைவனுக்கு சமர்ப்பியுங்கள்...அது போதும். அப்படி முடியலைனாலும் பரவா இல்லை"ன்னு அனுப்பினேன்.

பஸ்சுக்கு கூட காசு இல்லாமல், கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் நடந்தே, அவர் அந்த கோவிலுக்குச் சென்றார். மாலையும்  இல்லை, தேங்காயும் இல்லை. கோவிலில் வேறு யாரும் இல்லை. குருக்கள் கூட அந்த சமயம் இல்லை. கதறி, கதறி, கண்ணில் நீர் கொப்பளிக்க அவர் இறைவனை சந்திக்கும்போது, அங்கு மௌனமாக அவரை பார்த்துக் கொண்டு இருந்தது, வெறும் கல் என்று நம்மில் பெரும்பாலானோர் நினைக்கும் அந்த லிங்கம் மட்டுமே...! ஒரு அரை மணி நேரம் ஆலயத்தில் இருந்துவிட்டு, வெளியில் வந்து , நடந்தே வீடு திரும்பி இருக்கிறார்...!

அதற்க்கு ஒரு மாதம் முன்பு SBI பாங்க்கில் லோனுக்கு அப்ளை பண்ணி இருந்தாராம். கிட்டத்தட்ட இருபது, முப்பது முறை பாலோ பண்ணியிருந்து இருக்கிறார். செஞ்சு தர்றேன், தர்றேன்னு 'தா' காட்டி, காட்டி அலைக்கழித்து இருக்கின்றனர். இவருக்கு நம்பிக்கையே இல்லை. சரி, CIBIL ரிப்போர்ட்டில் தகராறு.. இருந்ததும் போயி, நாலு வருடம் முன்பு இதே SBI யில், இன்னொரு ப்ரான்ச்சில் அந்த செலுத்தாத லோனுக்கு , சேர்த்து பிரஷ்ஷர் எந்த நேரத்திலும் வரவிருக்கிறது... லோனுக்கு அப்ளை பண்ணாமலே இருந்து இருக்கலாம் போல, சரி வருவது வரட்டும். சேர்த்து அனுபவிக்க வேண்டியதுதான் என்று நினைத்து இருந்தாராம்.

மத்த பேங்க் ஐ விட, SBI யில் லோன் கிடைப்பது என்பது, குதிரை கொம்பு என்பது அதை அனுபவித்தவர்களுக்குத் தெரியும். "லோன் எனக்கு இல்லை, சொக்கா ! அவனை கூப்பிடக் கூடாது, கூப்பிடக்கூடாது , ஏன் எதுக்கு கூப்பிடனும்" என்று தருமி ரேஞ்சில் இருந்த நிலையில் தான், அவர் என்னை சந்தித்து - இந்த கோவிலுக்கு சென்று வந்தது...

இது நடந்த மூன்றாவது நாள், SBI பாங்க்கில் இருந்து அவருக்கு போன், " சார், நான் பீல்ட் ஆபீசர் பேசுறேன், கொஞ்சம் பேங்க் வரைக்கும் வந்து போக முடியுமா?", சரிதான், அந்த பழைய லோன் மேட்டருதான் போல, இன்னைக்கு நம்மளை சுழுக்கு எடுக்கப்போறானுங்கன்னு நினைச்சுக்கிட்டே போயிருக்கார். சரி, கழுத்துலையா, கத்தி வைச்சுடப் போறாங்க...  SBI கொஞ்சம் டீசன்ட் பார்ட்டி தானே, கிரெடிட் கார்ட் மாதிரி, கந்து வட்டி மாதிரியா அசிங்கப் படுத்திடப் போறாங்க? என்ன, கம்பனிக்கு லெட்டர் போடுவாங்க, பாத்திக்கிடலாம்" ன்னு - பில்டிங் ஸ்ட்ராங், basement தான் கொஞ்சம்....ன்னு போயிப் பார்த்தா..... அட,  நம்ப முடியாத அதிசயம் அங்கே அரங்கேறியது.அவர் லோன் சாங்க்க்ஷன்.

 "அஞ்சு லட்ச ரூபாய் உங்க அக்கௌன்ட்ல ட்ரான்ஸ்பர் பண்ணுறோம் சார், அமௌன்ட் கொஞ்சம் அதிகம்ங்கிறதால லேட் ஆயிடுச்சி. சாரி சார்"ன்னு சொல்றாங்க.

இவருக்கு சந்தோசம் தாங்க முடியலை. வெளியில வந்த உடனே எனக்கு போன்..." சார், நீங்க..... நீங்க ..." பேச வார்த்தையே இல்லை. ! "லோன் கிடைச்சிடுச்சி சார்.. கம்பெனிக்கு அரை நாள் லீவ் சொல்லிட்டேன்.... நான் அந்த சாமியைப் பார்க்க போயிட்டிருக்கேன்"னார்...

மூணு லட்ச ரூபாய் வட்டிக்கு வாங்கி, வட்டி மட்டுமே ஒன்பது லட்சம் கட்டிய ஆள் அவர். அசல் திருப்பித் தரவே முடியாதோங்கிற நிலைமைல, லோன் கிடைக்கவே வாய்ப்பே இல்லாத நிலைமைல, இந்த அஞ்சு லட்சம், அவருக்கு அஞ்சு கோடிக்கு சமம். இதில இன்னொரு ஆச்சர்யம், இவரு கூட அப்ளை பண்ணின, இவரை விட சம்பளம் அதிகம் வாங்கின ஆளுங்களுக்கு கூட, லோன் சாங்க்க்ஷன் ஆகாம இன்னும் 'பென்டிங்'லேயே கிடந்து இருக்குது.

இன்னைக்கு வர்ற சம்பளத்துல, நிம்மதியா லோன் அடைச்சுக்கிட்டு, கந்து கடன் எல்லாம் முடிச்சிட்டு , குடும்பத்தை சந்தோசமா வைச்சுக்கிட்டு இருக்கார்.

"இனி எனக்கு கவலை இல்லை சார், நான் நிமிர்ந்துடுவேன். எனக்கு இந்த போதாத கால கட்டத்துல கிடைச்ச அனுபவத்துக்கு விலை மதிப்பே இல்லை சார். திரும்ப தப்பு செய்யாம இருக்கணும். இதுக்கு மேலே, என்ன நடந்தாலும், உடனே சரி செய்ய என் சாமி இருக்கிறப்போ , எனக்கு என்ன கவலை"ன்னு, அவர் இந்த சிவனை சொல்லும்போது, நமக்கே ஜிவ்வென்று இருக்கிறது.
கடவுள் இல்லை என்று யாராவது சொன்னால், இவர்கள் பதிலுக்கு , "ஹா... ஹா..." வென்று பலத்த குரலில் சிரிக்கிறார்கள்.
அப்பேற்பட்ட மகத்துவம் பொருந்திய, இறைவன் யார் என்று அறிந்து கொள்ள ஆவல் உங்களுக்கும் இருக்கும் இல்லையா..?

சந்தேகமே இல்லாமல், இறைவன் இருக்கும் அற்புதத்தை நீங்கள் உணர , அவசியம் ஒருமுறை இந்த ஆலயம் வந்து பாருங்கள். இது இருக்கும் இடம் : திருவலம்  (Thiruvallam / Tiruvalam ) என்ற சிறிய ஒரு ஊர். பிள்ளையார் - திருவை (அம்மை , அப்பனை) வலம் வந்ததை ஒட்டிய காரணப் பெயர்.

வரலாறு கொஞ்சம் ஞாபகம் இருப்பவர்களுக்கு, வல்லவரையன் வந்தியத்தேவன் பிறந்து வளர்ந்து ஆண்ட பகுதி என்று சொன்னால் ஞாபகம் வரலாம். அதே வல்லவரையர் தான். அருண்மொழியின் உற்ற நண்பனாக, குந்தவையை கரம் பிடித்த வந்தியத்தேவன், பலமுறை தொழுது இருக்க கூடிய ஆலயம் தான் இங்கு இருப்பது.வேலூர், ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா என்று அருகில் இருக்கும் பெரிய ஊர்களில் இருந்து பஸ் வசதி இருக்கிறது. இந்த ஊர்களில் இருந்து அரை மணி நேர பயண நேரம் ஆகும். பத்து முதல் பதினைந்து கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.

ஸ்தலப் பெருமைகள் நிறைய, அது எல்லாம் உண்மையோ, பொய்யோ - அது நமக்குத் தெரியாதுங்க.... ஆனா, இங்கு அருள் பாலிக்கும் இறைவன் - (நாமம் வில்வநாதர் - அம்மன் தனுமத்யம்பாள்) - இருவரும், ஹைலி , ஹைலி பவர்புல். இது இங்கு அருகில் இருக்கும் வட்டார மக்களுக்கே, ஏன் இந்த கோவிலில் இருப்பவர்களுக்கே கூட தெரியுமோ, தெரியாதோ....சந்தேகம் தான்.

ஆனால், கண் முன்னே , நிஜத்தை பார்த்தபிறகு, இவரிடம் நம் கோரிக்கை நிச்சயம் நிறைவேறும் என்கிற நம்பிக்கை நிறையவே இருக்கிறது.

மேலே சொன்ன இரண்டு சம்பவங்களும் நடந்த நிஜ சம்பவங்கள். படிக்கும் உங்களுக்கு , நீங்களும் இங்கு ஒருமுறை வந்து பார்க்கவேண்டும் என்கிற உணர்வைத் தூண்டவில்லையெனில், அது என்னுடைய எழுத்து வசீகரம் இன்மையே தவிர வேறில்லை.
 
ஒரே ஒருமுறை, உங்கள் நீண்ட நெடுநாள் பிரச்னை தீர, நேரில் நீங்கள் வந்து இவரிடம் பேசிப் பாருங்கள். எவ்வளவு சீக்கிரம் அந்த பிரச்னை தீர்கிறது என்கிற அதிசயத்தை உணர்வீர்கள்... .... இது வெறும் கல்லால் ஆன லிங்கம் இல்லை, சத்தியமா சாமி, இது... என்ன ஆச்சர்யம், எப்படி இவ்வளவு நாளா வெளி உலகத்துக்கு தெரியலைன்னு ஆச்சர்யப்படுவீங்க...!

ஒரு தீபத்துக்கு கூட வழியில்லாமல் எத்தனையோ ஆலயங்கள் இருக்கின்றன. உங்களால் முடிந்த அளவுக்கு அதைப் போன்ற ஆலயங்களை மெருகேற்ற, விளக்கு ஏற்ற உதவி செய்யுங்கள். என் நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவார். ஆலயங்களுக்கும் ஒரு நேரம், காலம் இருக்கிறது போல. சில கோவில் எல்லாம் பத்து வருஷத்துக்கு முன்னே, ஒண்ணுமே இல்லாம இருந்துச்சு. இப்போ பாரு, எவ்வளவு கூட்டம் என்று.

இந்த சிதிலமடைந்த கோவில்கள் எல்லாம், ஒரு காலத்தில் ஓகோவென்று இருந்து இருக்க கூடும். இந்த ஆலயங்களை மெருகேற்ற, நாம் நமது பங்களிப்பை அளிக்க இறைவன் நமக்கு ஒரு வாய்ப்பு அளிப்பதாக நினைத்து, இங்கு குறைந்தபட்சம் விளக்கு ஏற்றவாவது உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள். விளக்கு ஒளி ஏற ஏற, ஆலயமும் புத்துயிர் பெரும், நம் வாழ்விலும் ஒளி ஏறும்... இது நிச்சயம்...! சிதிலமடைந்த ஒரு ஆலயம் பற்றி ஒரு தகவல் உங்களுக்கு வருகிறது என்றால், உங்களுக்கும் அந்த ஆலயத்திற்கும் எதோ நெருங்கிய முன் ஜென்ம தொடர்பு இருந்து இருக்க கூடும்.

அதை நீங்கள் நேர் செய்யும்போது, நமது கர்மக் கணக்கு நேர்த்தியாகி, நாமும் நல்ல நிலை அடைய ஒரு அரிய வாய்ப்பாகவும் அமையும்...!
தவறு செய்யாத மனிதனே இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவன் பாதம் சரணம் அடையும்போது, மனதை உறுத்தும் தவறுகளை திரும்ப செய்வதில்லை என்ற உறுதி மொழி எடுத்து, அதை இறுதி மூச்சு வரை கடைபிடியுங்கள்....! அவனன்றி ஒரு அணுவும் அசைவதில்லை. இதை நீங்களே உணர்வீர்கள் வெகு விரைவில்...!

ஓம் சிவ சிவ ஓம்..!

எந்த ரூபத்தில் , எந்த ஊரில் இருந்தாலும் இறைவன் இறைவனே. இதைப் போலவே, உங்கள் பகுதியில் உங்கள் அனுபவத்தில், நீங்கள் நிஜமாகவே  வியந்த ஆலய மகிமைகள் பற்றி, ஒரு நாலு வரி எழுதினீங்கன்னா, நாங்களும், நம்ம வாசர்களும் தெரிஞ்சுக்கிடுவோம்...சரிங்களா? கூச்சப்படாம, தமிழிலோ, ஆங்கிலத்திலோ - எழுதி மெயில் / கமெண்ட்ஸ் இல் பதிவு செய்யவும்...

கம் ஆன்..! உங்கள் கருத்துக்களும், விமரிசனங்களும் வரவேற்க்கப்படுகின்றன...!

வாழ்க அறமுடன் ! வளர்க அருளுடன் ! 

Nearest Railway station : Katpadi ( From Katpadi local buses avaialble. approx 15 Kms)
From Ranipet, Vellore, Walajha, Arcot - Approx 15 kms distance.
From chennai direct buses available to Chittoor , which go via Tiruvalam (Approx : 130 Kms)
From Tiruvalam bus stand , Temple is just 50 metres walkable distance.
60 comments:

NAHARANI said...

Thank you sir for the next siva temple information.. this month with god's bless i try to go.

THA.PI.SUNDAR said...

An useful article with experience- Everyboody to have dharshan in Thiruvalam Temple- whether with problems or not. I will definitely go.
-Madurai Subramanian

Madurai Subramanian said...

The temple every human being to worship, whether with problems or not.

rajee said...

super super sir, (not able to type in tamil)
really useful,
if we are helpless , GOD doesnt leave us alone. we are his child.

these two stories give hope for me
to tackle my difficult situation.
really God can do miracles,

if we know one or two solution for a difficult situation ,but God have
million of million ways to solve those problems.
the only way when we are in helpless situation, is surrender surrender surrender............ to him

surely we should do as you plan, sir.
regards
rajee


god is always with us

sakthi said...

VERY VERY USEFUL ARTICLE. i will be very much greatful if you provide me the full address of the temple

Anonymous said...

Even Iam living nearest to the temple we dont know about these much matter realey thanks

Anandhiselva said...

I am really astonished to see this article. Will try to visit once (atharkum avan sitham vendumae).

Velmurugan said...

VERY NICE INFORMATION This is the nice initiative to get information from all our readers.

Please give us the correct address and bus/train route to go to temple.

Om siva siva Om.

Rishi said...

Nearest Railway station : Katpadi ( From Katpadi local buses avaialble. approx 15 Kms)

From Ranipet, Vellore, Walajha - Approx 15 kms distance.

From chennai direct buses available to Chittoor , which go via Tiruvalam (Approx : 130 Kms)

From Tiruvalam bus stand , Temple is just 50 metres walkable distance.

udaya kumar said...

Thanks Rishi

its great and valuable information , continue your writing's for great Temple.

shan said...

This is my first comments for this marvelous site.

I am sincerely reading this blog. after reading this site, there are some changes in my life.

coming to this post, that two incident was really awesome one.when I study that second story, same things are happing for me too. I am sure very soon am going to that temple.

millions of thank you sir for posting such a wonderful story..
Regards,
Srivi Shan

Mahesh said...

வெளிநாட்டில் வசித்து வருகிறேன். இந்தியா வரும்பொழுது எல்லாம் விசேஷ கோயில்களை தரிசனம் செய்ய ஆசை கொண்டுள்ளேன். இந்த ஏப்ரலில் இந்தியா வந்தபொழுது சதுரகிரி சென்று மஹாலிங்கத்தை தரிசித்தேன். உங்கள் பதிவுகளை வைத்து அடுத்து இந்திய வரும்பொழுது கும்பகோணம் செல்லலாம் என்று முடிவு செய்துள்ளேன். அற்புத ஆலயங்கள் தொடரில் வரும் ஆலயங்கள் பற்றிய குறிப்புகளை வைத்து அவனருளால் அவன் பாதங்களை அந்த அற்புத ஆலயங்களில் பணிய ஆவல் கொண்டுள்ளேன். உங்கள் இந்த தொடரை ஆவலுடன் எதிர்நோக்கும் ஒரு வாசகன்.

subramanian said...

well said i am satisfied visit sortly

chidambaram said...

Thanks a lot Sir. Will go there at the earliest.

chidambaram said...

Thanks Sir. Will visit at the earliest and seek his blessings

sen said...

sir my native is ranipet i use to visit this temple.i got turning point because of this temple in my age of 18. what you have have written is true .

vivekanandan.p said...

nalla karuthu hindu matham valka

vivekanandan.p said...

nalla karuthu,appadiye karur nerur sadasiva pirmendiral pattriyum eluthalame

Shiva said...

// படிக்கும் உங்களுக்கு , நீங்களும் இங்கு ஒருமுறை வந்து பார்க்கவேண்டும் என்கிற உணர்வைத் தூண்டவில்லையெனில், அது என்னுடைய எழுத்து வசீகரம் இன்மையே தவிர வேறில்லை.//
இல்லை உங்கள் எழுத்தும் வசீகரம் , தரிசிக்க வேண்டும் என்ற உணர்வும் அபாரம் .

Anonymous said...

Neer vaalga! nin kulam vaalga! nin pani sirakka!...

Sakthi
Tiruppur

கோடியில் ஒருவன் said...

நண்பர்களுக்கு வணக்கம்.

ஆசிரியர் மற்றுமொரு சிக்சர் அடித்திருக்கிறார். அதாவது டபுள் சிக்சர். அசத்தலான அற்புதமான பதிவு. நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆசிரியர் சொல்லியிருக்கிற இந்த கோவிலுக்கு நான் நிச்சயம் போவேன் என்பது வேறு விஷயம். அதே சமயம் என் வாழ்வில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய கோவில் ஒன்றை பற்றியும் அங்கு நடந்த சிலிரிப்பான அனுபவத்தை பற்றியும் கூறியிருக்கிறேன்.

ஆசிரியர் அதை சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய அந்த அனுபவத்தை தனிப் பதிவாகவே அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.livingextra.com/2012/03/blog-post_26.html

நான் நரசிம்மனின் தீவிர பக்தன் என்றாலும், அதே அளவு சிவன் மீதும் அன்பு வைத்துள்ளேன். இருவரும் என்னை பொறுத்தவரை வேறு வேறு அல்ல. இவனை கூப்பிட்டால் அவன் வருவான். அவனை கூப்பிட்டால் இவன் வருவான். எப்படியோ இரண்டு பேரும் என் குரலுக்கு ஓடி வருவார்கள். அது மட்டும் உறுதி. இப்படி சொல்றதுன்னால நான் ஏதோ பெரிய புண்ணித்மான்னு நினைக்காதீங்க. நான் சராசரி மனுஷன் தான். ஆனா தவறுகளை திருத்திக்கனும், யாருக்கும் கெடுதல் பண்ணகூடாது, நல்லவனா வாழ முயற்சி பண்ணனும். நம்மால ஒரு நாலு பேருக்கு ஒரு உத்வேகம் வரணும் அப்படின்னு நினைக்க ஆரம்பித்திருப்பவன். நான் கூப்பிட்டா ஹரியும், சிவனும் ஓடிவர்றதுக்கு இந்த ஒரு குவாலிபிகேஷன் போதாதா?

மேற்படி பேரம்பாக்கம் நரசிம்மர் ஆலயம் என் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு கோவிலாகவே மாறிவிட்டது. எந்த சூழ்நிலையில் நான் இந்த கோவிலுக்கு சென்றேன், பிறகு என்ன நடந்தது என்பது பற்றி மேற்படி பதிவில் விளக்கியிருக்கிறேன். படியுங்கள்.

பதிவில் நான் கூறியுள்ள சம்பவம் நடைபெற்றபோது நான் இருந்த நிலை வேறு. இப்போது என் நரசிம்மன் என்னை வைத்திருக்கும் நிலை வேறு. நாளை வைக்கப்போகும் உயரம் வேறு.

பொறுத்திருங்கள். எதிர்காலத்தில் பல சுவாரஸ்யங்கள் காத்திருக்கிறது.

ஆசிரியர் கூறியுள்ள மேற்படி தளம், திருஞான சம்பந்தப் பெருமானால் பாடல் பெற்றுள்ள தலமாகும்.

முகவரி :
அருள்மிகு வில்வ நாதேஸ்வரர் திருக்கோவில்
திருவலம் அஞ்சல்
வழி இராணிப்பேட்டை
காட்பாடி வட்டம்
வேலூர் மாவட்டம்
PIN - 632515

- கோடியில் ஒருவன்

skumar said...

Thank you for your detailed message
GOD BLESS YOU

Muthukumar said...

(இறைவனை)
பற்றுபவர்களுக்கு
(கடன்)
பற்று குறையும்.....

வாழ்த்துக்களுடன்,
முத்துக்குமார். ச,
ஈரோடு....

saravanan said...

sir. this is one of the best article i reed recently.
how many peoples are crying for a bit of remedy ....god shows the way through you sir
thanks lot on behalf of all suffering peoples.
R.SARAVANAN

sekar said...

அருமையான தகவல் . தங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல அந்த ஈசனை பிறாத்திக்கின்றேன்.

g_sekar33@yahoo.com

suganthamohan@yahoo.com said...

sir vanakkam i am sugantha i read ur writings regularly.'thiruvalam' pathivu arumai.i want to tell about bala tripura sundari at nemili near arakonam . if we want to go there we cannat reach the place,but if bala want to see us she call us and we can feel the call.in net u can find her at balapeetam nemili.she gives us sowbakiyam i.e sakala backiam. ----sugantha.

VCTALAR said...

அன்புள்ள வாசர்களுக்கும் ஆசிரியருக்கும் வணக்கம் வாழ்த்துக்களுடன். உங்கள் அறிமுகப் பகுதி மிக அருமை. எங்கள் ஆவலைத் தூண்டி விட்டு உள்ளது. முதல் பகுதியும் மிக நன்றாக இருந்தாலும் இக்காலத்தில் வேலைப் பழு காரணமாக நீண்ட பகுதிகளைப் படிக்க ஆசை இருந்தாலும் ஆழமாகப் பொறுமையாகப் படிக்க முடியாமல் விடவும் முடியாமல் தடுமாறினேன். அதிலும் எந்தக் கோயில் என்பதைத் தெரிந்து கொள்ள மிக நேரம் எடுத்துக் கொண்டது. கோயில் பேரைத் தெரிவித்துப் பின் விளக்கங்களைச் சுருக்கமாகக் கொடுக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.தாங்கள் தங்கள் விருப்பம் போல் தொடர்ந்து தத்துவ விளக்கங்களுடன் எழுதுங்கள்.
VCTAL அருணாசலம்

Rishi said...

வாழ்த்துக்களும், கருத்துக்களும் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும், நன்றி. நண்பர் கோடியில் ஒருவன் இங்கும் குறிப்பிட்டது போல, பேரம்பாக்கம் நரசிம்மர் ஆலயம் - அருள் அலைகளை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கும் ஆலயம். நமது வாசகர்களுக்காக தகவல் அளித்த நண்பருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. சகோதரி சுகந்தா அவர்கள், நெமிலி பால திரிபுர சுந்தரி பற்றி குறிப்பிட்டு இருந்தார். நானும் அவர் கருத்தை வழிமொழிகிறேன். கலியுகத்தில் பல அற்புதங்களை அன்னை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். அவசியம் அனைவரும் ஒருமுறை செல்ல வேண்டிய இடம் நெமிலி. வாய்ப்பு கிடைக்கும்போது, விரிவான ஒரு பதிவு இட முயற்ச்சிக்கிறேன். வாசகர்கள் இன்னும் சில தகவல்களை பகிர்ந்துகொள்வார்கள் ஏன் நம்புகிறேன்.... கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி!

Unknown said...

One more nice article in Livingextra.

Iam reading articles from this blog for the past 06 months. It just happend accidently to see this blog while searching some other details.

I want to share a temple name "Perichuyur saniswaran temple" and "Variavanpatti Vairavar temple" (Bairavar). Both of the temples are situated near Pillayarpatti temple (Near Karikudi).
Perichuyur saniswaran temple is ancient temple and it is more equal to kalahasti And it has Navabashana bairavar like Navabashana Murugan in palani. And Vairavar temple in vairavanpatti is more powerful place which you can feel like me if you visit both the temples.
--- Iraipakthan.
GOD IS GREAT.

Nanjil Kannan said...

ரிஷி அண்ணா ,

மிக அற்புதமான முயற்சி , நலல் தொடக்கம் , உங்களுடைய இந்த பதிவுகள் பலருடைய வாழ்வில் வசந்தங்களை ஏற்படுத்தும் என்பதில் சிறு ஐயமும் இல்லை , யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்னும் வாசகமே இப்போது என் நினைவுக்கு வருகிறது . மீண்டும் மீண்டும் உங்கள் தம்பி என்ற முறையிலும் , வாசகம் என்ற வழியிலும் நன்றிகள் .

என் வாழ்வில் இது போல் இன்று வரை பல வசந்தங்களை , நடக்கவே நடக்காது என்று நினைத்த காரியங்களை செய்து என் வாழ்வில் ஒளி ஏற்றிய தெய்வம் சித்தூர் பேச்சி அம்மன் .

ஒரு முறை பங்குனி உத்திர நாளில் சென்று வணங்கி பாருங்க எப்பேர்பட்ட காரியமும் (நியாமாக இருந்தால்) அவள் நிறைவேற்றி தருவாள் .

பேச்சி அம்மன்-சித்தூர்

சித்தூர் பற்றி எனக்கு தெரிந்ததை நான் எழுதியது அண்ணா

சித்தூர் தென்கரை மகராஜன்

நன்றி
என்றென்றும் உங்கள் தம்பி

கண்ணன்

chinnadurai keeranur said...

very verysuper

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பதிவு ! தொடருங்கள் !

Chitti said...

**In future, நாம எல்லோரும் ஒரு குடும்பம் மாதிரி , ஒரு குழுவா அல்லது ஒரு forum போன்று நமது விவாதங்கள், கருத்துக்கள் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று ஒரு ஆசை.**
மிக அருமையான யோசனை. மிக்க மகிழ்ச்சி.
***
நான் எனக்கு தெரிந்த கோயிலை பற்றி சொல்வதர்க்கு மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.

என்னுடைய குரு "ஸ்ரீ ராகவேந்த்ரர்". (அவரை பற்றி எடுத்து சொல்ல அவரின் வியாழ கிழமையன்றே எடுத்து சொல்ல வைத்திருக்கிறாரே. இதுவே ஒரு (என்னை பொறுத்த வரை) மிக பெரிய ஒரு விஷயம் தான். ஏனெனில், நேற்று நம் தளத்தை பார்க்கவில்லை. இன்று தான் பார்த்தேன்). இவர் 1671 -இல் மந்த்ராலயத்தில் ஜீவ சமாதி அடைந்து இன்றும் மக்களுக்கு நல்வழி காட்டி வருகிறார்.

தான் இன்னும் ஏழு நூறு வருடங்கள் (2300 - ஆம் வருடம் வரை ) இந்த பூவுலகில் இருந்து தான் பெற்ற 'இறை' ஆசி எல்லாம் மக்களுக்கு தந்து விட்டு தான் போவார். அதனால், இவரிடம் கேட்கும் அனைத்தும் கிடைக்கும் அது நியாமாக இருக்கும் பட்சத்தில். இவர் சொல்லியதர்கேற்ப நாடெங்கும் (இன்னும் சொல்ல போனால் வெளி நாட்டிலும் ) இவருக்கு ஏழு நூறு பிருந்தாவனங்கள் தோன்றி கொண்டு இருக்கின்றன. (ஆதாரம் - 'ஸ்ரீ ராகவேந்திர மகிமை' நூல்).

நான் சொல்ல போகும் கோயில் - அவரின் ஜீவ சமாதி அமைந்திருக்கும் 'மந்த்ராலயம்' தான். குருவருள் இருந்தால், திருவருள் கண்டிப்பாக, எளிதாக கிடைக்கும்.

நான் அங்கு பல முறை சென்று பல வித (எனது வாழ்வில்) அதிசயங்களை கண்டு இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் ஒரு புது அனுபவம். நீங்கள் சிவனை வணங்கினாலும் சரி, விஷ்ணுவை வணங்கினாலும் சரி -இவரையும் சேர்த்து வணங்குங்கள். இவர் எல்லாவற்றுக்கும் பொதுவானவர். இவருக்கு அணைத்து தெய்வங்களின் ஆசி உள்ளது.

அது மட்டும் இல்லாமல், இவர் தீவிரமாக வணங்கும் பக்தர்களுக்கு இவர் இன்றும் காட்சி தருகிறார் - கனவிலோ, அல்லது நிஜத்திலோ. (இதற்காக மற்ற அணைத்து தெய்வங்களும் தங்களின் பக்தர்களுக்கு காட்சி தர மாட்டார்கள் என்று பொருள் அல்ல. தெய்வங்களை இந்த கலியுகத்தில் நேரே சந்திப்பது அரிது (அவர்களின் உருவில். ஆனால், மற்ற சாதாரண உருவில் சந்தித்து விடலாம்). ஆனால், குருவை சந்திப்பது சுலபம். இன்றும், லட்சக்கனக்கனவர்களின், ஏன் அதற்கும் மேல் பலருக்கும் கனவிலோ, நேரிலோ காட்சி தந்திருக்கிறார் (அவரின் நிஜ உருவிலே). தந்து கொண்டும் இருக்கிறார்.

நீங்கள் உங்களின் தேவதையும் வணங்குங்கள். அதே சமயம் குருவையும் வணங்குங்கள். உங்களுக்கு தேவையான 'நியாயமான' கோரிக்கைகளை உங்கள் தெய்வங்களிடம் இவர் உங்களுக்காக முறையிட்டு எளிதாக நடத்தி வைப்பார்.

'மந்த்ராலய' ஷேத்ரம் ஆந்திராவில், கர்னூல் மாவட்டத்தில் உள்ளது. அதே மாவட்டத்தில் நரசிம்மனின் அவதார ஸ்தலம் 'அகோபிலம்' உள்ளது. இங்கு தான், நரசிம்மன் அவதாரம் நடந்து உள்ளது. அதற்க்கான ஆதாரம் 'ஸ்ரீ ராகவேந்திர மகிமை - ஐந்தாம் பாக' புத்தகத்தில்.

மந்த்ராலயத்தில் இன்றும் தினந்தோறும் வரும் லட்சக்கான பக்தர்களுக்கு 'மதியமும் ' இரவிலும் சாப்பாட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்படுகிறது. தங்கும் இடம் மிகவும் குறைந்த கட்டணத்தில் கோயில் விடுதிகளில் வழங்கப்படுகிறது. அவ்வளவு தொகை இல்லை என்றாலும் மிகவும் குறைந்த கட்டணத்தில் 'லாக்கர்' வசதியுடன் தங்குவதற்கு பொது மண்டபம் உள்ளது.

அது மட்டும் இல்லாமல், அங்கே 'துங்க பத்ரா' நதி உள்ளது. வற்றாத நதியாக எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டு பலரின் உடல் பிணியை எல்லாம் நீக்கி ஒரு புத்துனர்ச்சியை ஏற்படுத்துகிறது. இப்படியாக, பல நல்ல விஷயங்கள் அங்கே உள்ளது.

வாழ்வில் ஒரு முறையாவேனும், அனைவரும் செல்ல வேண்டிய ஒரு ஷேத்ரம் அது. அது முடியாதவர்கள், அவரின் பிறப்பு ஸ்தலம் 'புவனகிரி' கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ளது. சென்னையில் இருந்து பஸ்சில் சுமார் ஐந்து மணி நேர பயணம்.
அதுவும் முடியாதவர்கள் அவரவரின் ஊரிலோ, அல்லது பக்கத்துக்கு ஊரில் உள்ள அவரின் 'மிருத்திகா' பிருந்தாவனத்திற்கு செல்லலாம். அவரின் அருள் உங்களுக்கு பரிபூர்ணமாக கிடைக்க நான் அவரை வேண்டி கொள்கிறேன்.

இத்தகைய நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்த திரு. ரிஷி அவர்களுக்கு மனப்பூர்வமாக நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
--
By,

**Chitti**

- Thoughts Becomes Things.

Rishi said...

சிட்டி சார்! இவ்வளவு அருமையான தகவல் தந்ததற்கு , வாசகர்கள் சார்பாக - மனப்பூர்வமான நன்றி! மந்த்ராலயம் பற்றி பெருபாலானோர் அறிந்து இருந்தாலும், புவனகிரி பற்றிய தகவல் அருமை - "இங்கு தானே இருக்கிறது, ஒருமுறை போய் வருவோமே என்கிற எண்ணம், நிச்சயம் பலருக்கும் வரும்". எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களும் ஸ்ரீ ராகவேந்திரர் பற்றி ' பிருந்தாவனம் ' நாவலில் எழுதி இருக்கிறார். நீங்கள் படித்து இருக்க கூடும். பாலாவைப் பற்றி - ஒரே மாதிரியான கதைகள் எழுதுகிறாரே, பிராமணாள் பற்றி அதிகம் எழுதுகிறாரே என்று - ஒரு விதமான கருத்துக்கள் சிலருக்கு இருக்க கூடும். ஆனால், பிருந்தாவனம் - அற்புதமான ஒரு சரித்திரம். அப்படியே அந்த கால கட்ட சுல்தான்கள் காலத்து சூழலை , நம் கண்முன்னே நிறுத்தி - இந்த அவதார புருஷரின் மகிமைகளை எழுதியிருப்பார். படிக்கும் பலரும், மெய் மறந்து அந்த சூழலுக்கு ஐக்கியமாவது உறுதி. ஸ்ரீ ராகவேந்திர மகிமை போல அவ்வளவு விஸ்தீரணமாக இல்லாவிட்டாலும், மிக சாமான்யரும் புரிந்து கொள்ளும் மிக எளிமையான நடை...! இது தவிர, படிக்கும் காலத்தில் எங்களின் மாஸ்டர் ஒருவர், தீவிர ராகவேந்திர பக்தர். மிக நல்ல மனிதர். அவரை மாதிரி ஒரு இஷ்ட தெய்வத்துக்கு பக்தனாக இருப்பதில், ஒரு பெரிய சவுகரியம் இருக்கிறது. பழி, பாவத்திற்கு கொஞ்சம் அஞ்சுவோம். அதனால் இறைவனின் அணுக்கம் அதிகமாகும்... !
குருவின் திருவடிகளைப் பணிவோம்..!
Thank you so much for your valuable comments! This will still open up the gate for many of our readers to express their views and experience.

nagen said...

சந்தர்ப்பாமும் நேரமும் அமைந்தால் சென்று வருகிறோம்.

rekha nithiyanandan said...

sir,

Thank you for the details, you have now the SRI PARUVATHA MALAI
sivan temple , please send the infarmation, this temple also very old that is 2000 year old sivan temple.any other infarmation of sivan temple details please send the next part.

Pazhani said...

Arumaiyana thagaval...Nichchayam oru nal kandippaga vanthu tharisikka aasaiyaga irukkirathu....nanrigal pala

Elavarasu said...

I am sincearly reading this blog lot of useful informations lotof changes in my life thank you

Murali said...

http://www.facebook.com/photo.php?fbid=364015083663436&set=a.364013696996908.86985.100001648410283&type=1&theater.

pls go this link to see a temple

யவனிகை said...

பொதுவாக பெண்கள் சிவனை அதிகம் கும்பிடக்கூடாது, சின்ன தப்புனாலும் ரொம்ப கஷ்டபடுதிருவாரு அப்டினெல்லாம் சொல்வாங்க, ஆனா என்ன ஆட்கொண்டது எங்க அப்பாதாங்க, சின்ன சின்னதா எனக்கும் என் மூலமா என் நண்பர்களுக்கும் நடத்துன நடத்துற அதிசயத்த என்னன்னு சொல்ல, ஒண்ணுமில்ல வழக்கமா அபிஷேகத்துக்கு வாங்குற பொருட்களுக்கு பதிலா இந்த தடவ பிரதோஷத்துக்கு மாலை வாங்கிட்டு போவோம்ன்னு தோணும், போய் பாத்தா இருக்குற வெறும் பூவ மட்டும் வச்சு அலங்காரம் பண்ணிருப்பாங்க, நம்ம மாலை மட்டும்தான் அங்க பெரிய மாலையா அப்பாக்கு போடுவாங்க, இதெல்லாம் சத்தியமா கோஇன்சிடன்ஸ் இல்லன்னு உணர்ந்தவங்களுக்கு புரியும்,
நா குருவா நினைக்கிறது என் மகாவதார் பாபாஜி, என்னோட கோவில்னு சொன்னா திருவண்ணாமலைதான், அதோட சிறப்புபத்தி ரிஷி சாரே எவ்வளவோ சொல்லி இருக்காரு, 2 வருஷமா மனைவிகூட சேர முடியாம எல்லா கோவிலுக்கும் போய் எல்லா பரிகாரமும் பண்ண என் நண்பர ஒரு தடவ என்மூலமா கிரிவலம் கூட்டிட்டு வர வச்சாரு, எண்ணி 2 நாள், அந்த பொண்ணு போன்கால் அட்டென்ட் பண்ணி கோபமாவாவது பேசுச்சு, அவருக்கு அதுவே பெரிய விஷயம், 2 மாசம், இப்போ ஒன்னு சேர்ந்து சந்தோஷமா இருக்காங்க, என் விஷயத்தையே எடுத்துகிட்டாலும் 3 வருஷமா போராடுறேன் விடிஞ்சிரும் விடிஞ்சிரும்ன்னு, எல்லா கோவிலும் போறேன், எல்லா பரிகாரமும் பண்றேன், நா சில சமயம் வெறுத்து நேரம் நல்லா இருந்தாதான் சாமிகூட உதவும், நேரம் நல்லா இல்லைனா சாமிகூட கை விரிச்சிரும்னு அழுது புலம்பி இருக்கேன், ஆனா அப்பவும் நா விட்டாலும் அவர் என்ன விடாம புடிச்சு இழுத்துகிட்டு வருவாரு, நா இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா சரணடைங்க, சந்தேகமில்லாத முழுமையான சரணாகதினால மட்டும்தான் அவர அடைய முடியும், நல்லவங்கள நெறைய சோதிப்பார் சாவோட விளிம்புக்குகூட கூட்டிட்டு போவார் ஆனா கைவிட மாட்டார்.அவர் ரஜினி மாதிரி கரெக்டா வரவேண்டிய நேரத்துக்கு கண்டிப்பா வருவார், சிவன கும்பிடுங்க செல்வாக்கு உயரும்,
அப்புறம் ஒன்னு பிரிஞ்சவங்க ஒன்னு சேரணும்னா ஸ்ரீ சரபேஸ்வரர் பிரத்யங்கரா தேவி அம்மாக்கு விளக்கு போட்டு அமாவாசை யாகத்ல கலந்துக்கோங்க, இதவிட இதுக்கு சரியான பரிகாரம் இருக்க முடியாது, ரிஷி சார் சரிதானே,
நீங்க கும்புடுற கோயில் உடனே எனக்கு பலிக்காது, நா கும்புடுற கோவிலும் உடனே உங்களுக்கு பலன் குடுக்காது, ஆனா அவரே உங்களுக்கு உணர்த்துவார் யார் மூலமாவது எது மூலமாவது, ஆண்டவன கேளுங்க, அவர் உங்க குருவ காட்டுவர், அவர் மூலமா உங்க நியாயமான கோரிக்கை நிறைவேறும், ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான் என்னைக்காவது நானும் என் கோரிக்கைய நிறைவேத்துன அதிசயத்த எழுதுவேன் அப்டிங்கற தைரியத்ல - ஓம் நமச்சிவாய ஓம் க்ரியா பாபாஜி நம ஓம்

Chitti said...

மிக்க நன்றி ரிஷி அவர்களே அருமையான விஷயத்தை எங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு (பிருந்தாவனம் நூல் பற்றி).

ஆம், புவனகிரியில் தான் எனது சிறு வயதை நான் கழித்தேன். மிகவும் அருமையான கோயில். அங்கு இருக்கும் சுவாமி ஸ்ரீ ராகவேந்த்ரரின் சிலாரூபத்தை நாள் முழுவதும் கண்டுகொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகு. மந்த்ராலயத்தில் கூட அப்படி ஒரு சிலை இல்லை. அங்கே பிருந்தாவனம் மட்டும் தான். நூற்றுக்கு தொண்ணுறு சதவிதம் (எனக்கு தெரிந்த வரை) அவரின் கோயில்களில் பிருந்தாவன தரிசனம் மட்டுமே. ஒரு சில கோயில்களில் மட்டும் தான் அவரின் சிலாரூபங்களை தரிசிக்கலாம். அதில், மிகவும் பிரசக்தி பெற்றது அவரின் பிறப்பு ஸ்தலம் 'புவனகிரி'.

ஆம், நீங்கள் சொல்வது சரி தான். அவரிடம் நாம் நம்மை ஒப்படைத்து விட்டால், அவர் எல்லாவற்றையும் பார்த்து கொள்வார். அவரை பற்றி சொல்ல, சொல்ல எனக்கு சொல்லொணா மகிழ்ச்சி ஏற்படுகிறது. தேவைப்பட்டால், இன்னும் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறேன்.

இந்த வாய்ப்பை எனக்கு அளித்ததற்கு மிக்க நன்றி திரு. ரிஷி அவர்களே.

Anonymous said...

naan ungalin ella pathiyaium avasiyam palamurai padippen. en manathukku nimmathya unarven. naan avasiyam entha aalayathirgu sendur varuven. en manam migavum vedanai padum nerangalil ungal pathiyu miganvum aaruthalagaum, marunthagavum irukkum. nantrigal pala

perumal shivan said...

om namasivaya potri!
om siva paathame potri
om ammai appane potri
nin thaal oliye potri
om siva siva om
om sri bavaaya nama
om sri sarvaaya nama
om sri ruthraaya nama
om sri pasupathiye nama
om sri ugraaya nama
om sri maha thevaaya nama
om sri beemaaya nama
om sri eeshanaaya nama

THEIVAM said...

திரு சிட்டி ஸார், ரிஷி ஸார், வணக்கம், என் அன்னையாய், தந்தையாய், குருவாய், தெய்வமாய் என்னுள் இருந்து என்னை வழி நடத்தும் என் குருவின் மகிமைகளை சொல்ல வார்த்தை ஏது? நம் கண்முன்னே எத்துனை ரஜினி ஸார், ராகவா லாரன்ஸ் இப்படி எத்தனையோ பேர். சரி என் வாழ்வில் திருவரங்கன் நடத்திய ஒரு விளையாட்டை சொல்கிறேன். எப்போது நினைத்தாலும் என் கண்களில் நீர் வருவதை தடுக்க முடியாது. எங்கள் பரம்பரையில் குழந்தைகளுக்கு முதல் மொட்டை திருவரங்கனுக்குத்தான் அவர்தான் எங்கள் பரம்பரை குடிபாட்டு தெய்வமாம் (என் தந்தை என்னிடம் கூறியது) ரிஷி ஸார் குடிபாட்டு தெய்வம் என்றால் என்ன என்று கொஞ்சம் விளக்கவும்) 2001 ம் வருடம் எனக்கு அப்பொ மாத சம்பளம் ரூ.950/- மட்டுமே.நான் என் வறுமையின் பிடியில் சிறுக சேர்த்து ரூ.400/- வைத்து இருந்தேன், வருடம் ஒரு முறையாவது அரங்கனை தரிசித்து விடுவது வழக்கமான குடும்ப நடைமுறை, நான், என் மனைவி, என் 1 1/2 வயது பெண் குழந்தையுடன் கரூரில் இருந்து பஸ்ஸில் அதிகாலை 3.30க்கு கிளம்பினோம் என் சட்டையில் பாக்கெட் இல்லாததால் (கோவிலுக்கு செல்லும் போது வேஸ்டி அணிவது என் வழக்கம்) என் மனைவி ரூ.400/- வைத்து இருந்தார் அதை தவிர எந்த ஒரு பைசாவும் என்னிடம் இல்லை. வழக்கம் போல 80% பெண்களை போல பணத்தை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து இருந்தார் 6 மணியளவில் அம்மா மண்டபத்தை அடைந்து காவேரில் குளிக்க தயார் ஆனோம் என் மனைவி பணம் நாங்கள் குளிக்க தாயாரான இடத்தில் விழுந்து விட்டது, எங்கள் உடமைகளையும் அங்கேயே வைத்து விட்டு என் மனைவியை உடமைகளை பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு, நான் குளித்து விட்டு வந்து என் மனைவியை குளிக்க போக சொன்னேன். இதற்கிடையில் ஒரு பணக்கார குடும்பம் (கழுத்து ஃபுல்லா நகை, 10 விரலும் மோதிரம், உயர் ரக ஆடைகள் , சொகுஸு கார் இதெல்லாம் இருந்தா பணக்கார குடும்பம் தானே) நான் நிற்கும் இடத்திற்கு அருகில் தங்கள் உடைமைகளை வைத்தனர் அவர்களில் ஒருவர் தன் சட்டயை கழற்றி என் காலடியில் போட்டார், அவர் மனைவி "என்னங்க ஈரத்துல சட்டய போடுறிங்க என்றார்" அதற்கு அவர் கொஞ்சம் சும்மா இருடி என்று அதட்டியாவாறு கிழே குனிந்து சட்டயை எடுத்து சுருட்டி மடித்தார். இதற்குள் என் மனைவி குளித்து விட்டு வந்து பணத்தை காணவில்லை என்றார். என் தலையில் இடி இறங்கியது போல் இருந்தது வேறு பணம் இல்லை,கோவிலுக்கு போக வேண்டும் தேங்காய் பழதட்டு வாங்க வேண்டும், துளசி தாமரை வாங்க வேணும், முக்கியமாக கரூர் திரும்ப வேணும், 80 கிலோ மீட்டர் கையில் குழந்தை வேறு என்ன செய்வேன் "என் அரங்கா, பச்சை மாமலைபோல் மேணியனே என் குழந்தைக்கு பசிக்குமே அதற்கு பால் வாங்க கூட என்னிடம் பணம் இல்லையே ஆயர் பாடி கோபாலா, என்று என் உள்ளம் கதறியது, என் மனைவி ரங்கா ரங்கா என்று கதறினாள் என் குழந்தை மட்டும் சிரித்தது அப்போதுதான் கவனித்தேன் எங்களிடம் இருந்த ஒரே நகை என் குழந்தையின் கால் கொலுசு என் கண்ணில் பட்டது, என் மனைவியிடம் ஆறுதல் சொன்னேன் இந்த கொலுசை எங்காவது விற்று விட்டு அரங்கனை தரிசிப்போம் என்றேன். என் மனைவி சொன்னார் "அப்பாடா அப்போ சாமிய பார்த்துடலாம்" அவரை பொருத்தவரை சாமிய வெரும் கையுடன் பார்க்க முடியாதே என்ற கவலை மட்டுமே. வாழ்க்கை முழுவதும் உணவளிப்பவருக்கு ஒரு தேங்காய் கூட உடைக்க முடியாதே என்ற கவலை மட்டுமே, இதற்கிடையில் என் காலுக்கு அடியில் ஈரத்தில் சட்டை போட்டவர் குளிக்க சென்று இருந்தார், அரங்கனின் ஆணைப்படி காவேரி அன்னை அவரின் 2 விரல்களில் இருந்த 2 பவுன் மோதிரங்களை தன்னுடன் எடுத்து கொண்டாள், நாங்கள் ஆடை மாற்றி கிளம்பிய போது, என் காலுக்கு அடியில் ஈரத்தில் சட்டை போட்டவர் மனைவி ஓடி வந்து இதுவரை நீங்கள் அழுததை பார்த்தேன் இந்தாங்க உங்க பணம் என் கணவர்தான் சட்டய போட்டு எடுத்தார் இதற்கு பதிலாக 2 பவுன் மோதிரம் தண்ணில போச்சு என்றார் உங்க பணத்தை எடுத்ததுக்கு நீங்க சாமிகிட்ட சொல்லி மண்ணிக்க சொல்லிடுங்க 2 பவுனோட போகட்டும் பெரிசா எதுவும் ஆகிட போகுது என்றார்.நாங்கள் அரங்கனை தரிசித்து அவருக்காக மன்னிப்பு வேண்டி ஊருக்கு நல்ல முறையில் வந்து சேர்ந்தோம். "நாரயண மந்திரம் அதுவே நாளும் பேரிண்பம்"

Rishi said...

(தெய்வம் )கோபால் சார்! ரொம்ப நாளைக்கு அப்புறம் கமெண்ட்ஸ் பக்கம் வந்து இருக்கிறீங்க..! ஆனா, சும்மா சொல்லக் கூடாது, செமையான ஒரு அனுபவம்..! படிச்சு முடிச்சதும், கண் கலங்கிடுச்சு... Excellent ! Thank you very much for sharing with us for our readers! எங்களுக்காக நேரம் ஒதுக்கி, இந்த கமெண்ட்ஸ் அனுப்பியதற்கு மீண்டும் ஒருமுறை நன்றி!

THEIVAM said...

"ரொம்ப நாளைக்கு அப்புறம் கமெண்ட்ஸ் பக்கம் வந்து இருக்கிறீங்க.." athu onnum illainga sir unga mela chinna kobam, muthalla mathiri ninga niraiya elutharathu illai. unglai ethirparthu romba naal kathu irukka vendi irukirathu.

Rishi said...

\\\\\\\\\\\\\\\\\THEIVAM said...

"ரொம்ப நாளைக்கு அப்புறம் கமெண்ட்ஸ் பக்கம் வந்து இருக்கிறீங்க.." athu onnum illainga sir unga mela chinna kobam, muthalla mathiri ninga niraiya elutharathu illai. unglai ethirparthu romba naal kathu irukka vendi irukirathu.\\\\\\\\\\\\\\\\\

சார், நீங்களே இப்படி வாருறீங்களே..! இருக்கிற வேலைப்பளுல முடிஞ்சவரைக்கும் எழுதிக்கிட்டு வர்றேன். ஒரு நாள், ரெண்டு நாள் இடைவெளில புதுசா பதிவு போட்டே ஆகணும் என்கிற நிர்ப்பந்தம் நான் வைச்சுக்கிடாததால, கொஞ்சம் ரிலாக்ஸா, தரமான கட்டுரைகளை எழுத முடியுது... அது ஒரு வகையில நல்லதுதானே!?
உள்ளே வந்து பார்க்கிறப்போ - ஒரு புது பதிவு இருந்தா, உடனே மனசு சந்தோசப்படும் இல்லே? அது தரமான பதிவா இருந்தால் தானே, திரும்ப வரத் தோணும்? ஆனா, உங்க கோபம் நியாயமானதுதான். இன்னும் கொஞ்சம் இடைவெளியை குறைச்சிக்க கண்டிப்பா முயற்சி செய்றேன்.... Thank you Sir! We will do our best!

Anonymous said...

WE spent about 7 years in Ranipet but did not know the histroy of vandhiyathevan had birth&lived there.
By knowing it now,feel great and surely will visit again.
Thanks Rishi.

rgds/mani from china

M. Padmapriya said...

தங்களது இந்த முயற்சி மிக நல்ல வழிகாட்டியாக இருக்கும்.

மயிலை ஸ்ரீ முண்டகக் கண்ணி அம்மன் நிகழ்த்தி இருக்கும் அற்புதங்கள் மிக மிக அதிகம் . சமிபத்தியதை சொல்ல வேண்டுமென்றால் ஏப்ரல் மாதம் 1008 பாற்குட விழா அன்று வழக்கம் போல என்னால் தாமதமாகத்தான் - பாலாபிஷேகம் எல்லாம் முடிந்த பின்புதான் கோயிலுக்கு செல்ல முடிந்தது . அங்கு கோயில் வாசலில் மிக அழகாக - ஒரு எலுமிச்சை பழம், ஒரு அடர் செவ்வரளி, கொஞ்சம் வேப்பிலை பின்பு மீண்டும் ஒரு எலுமிச்சைப் பழம் என்ற வரிசையில் வண்ண மயமாக மாலைகள் தொடுத்து விற்பனைக்கு வைத்து இருப்பார்கள். அன்று 21 எலுமிச்சை பழங்கள் அடங்கிய ஒரு மாலை வாங்கிக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அம்மனை தரிசிக்க நின்றேன். பக்தர்களின் காணிக்கைகளை வாங்குபவர் என் பக்கம் திரும்பக்கூட இல்லை. நுற்றுக் கணக்கில் பால் பாக்கெட்டுகள் , அர்ச்சனை பைகள் என அனைத்தையும் வாங்கி கருவறைக்குள் எடுத்து சென்றாரே ஒழிய என் மாலையை வாங்கவே இல்லை. நானும் அவர் கவனத்தை ஈர்த்து இந்த மாலையை தர முயன்றேன். அவர் ஒவ்வொரு முறையும் என்னை பார்த்தும் நிர்சலனமாக என்னை கடந்து சென்று மற்றவர்களிடம் உள்ள ஒரு எட்டணா கற்பூரப் பாக்கெட் கூட விடாமல் வாங்கிச்சென்றார். இதுபோல ஒரு 7 முறை நடந்து இருக்கும். மேலும் அன்றைய பூஜைக்கான உபயதார் எல்லோரும் தடபுடலான பணக்காரர்களாக , பெரிய தாம்பாளங்களில் மாலைகளையும் புடைவைகளையும் அம்மனுக்கு செலுத்த தயாராக வைத்திருந்தனர் .

" முண்டகக் கண்ணி நான் என்ன தப்பு செய்தேன்? நான் எப்பவுமே எதிலுமே லேட்டாதான் வருவேன்னு உனக்கே தெரியும் .. ஏன் என் மாலையை வாங்கவே மாட்டேங்கற? இன்னும் பத்து நிமிஷத்தில இந்த மாலையை நீ வாங்கிக்கற .. இல்லன்னா நான் அழுதுருவேன் .... "
என்று அழுதுக்கொண்டே , பொங்கி வரும் கண்ணீரை துடைத்துக் கொண்டே நெஞ்சுக்குள் வேண்டிக்கொண்டிருந்தேன் . குங்கும அர்ச்சனை நடந்துக் கொண்டிருக்கிறது .

என்ன ஆச்சர்யம்..! கருவறையிலிருந்து வேறு ஒரு அர்ச்சகர் நேராக என்னை நோக்கி வந்து என் கையிலிருந்த மாலையை வாங்கினார்..
நான் : அம்மன் மேல சாத்தினதுக்கு அப்புறம் எனக்கு 2 பழம் தருவிங்களா?
அர்ச்சகர் : அம்மன் மேல சார்த்தினா சார்த்தினதுதான் திரும்ப தர மாட்டோம்..
நான் : சரி.. சரி அம்மன் மேலே சார்த்திடுங்க
என்று சொல்லி அவர் கையில் கொடுத்து நெஞ்சம் நெகிழ்ந்து நின்றேன்.. 1008 பால் குட அபிஷேகம் முடிந்து .. எவ்வளவோ பெரிய மாலைகளும் பூச்சரங்களும் அவள் காலடியில் காத்துக்கிடக்க.. இந்த எளியவளின் சாதாரன எலுமிச்சை மாலையை முதன் முதலாக அணிந்துக் கொண்டாள்.. சிரித்தாள்.. வெகு நேரம் அந்த மாலையை தவிர வேறு எந்த மாலையையும் ஏனோ அவள் அணிந்துக்கொள்ளவே இல்லை.

இதைப்போல் ஒவ்வொருவரும் அவர்களது கோயிலுக்கு நான் போகும் போது ஒவ்வொரு வகையில் பரிட்சிப்பார்கள். அவை அத்தனையும் எழுத என்னுடைய ப்ளாகில் ஆரம்பித்து இருக்கின்றேன் . காண்க :http://priyaraghu.blogspot.com

உங்களது கட்டுரையைவிட எனது இந்தப் பின்னுட்டம் அதிக வள வளன்னு ஆயிடுச்சே ...!

கோடியில் ஒருவன் said...

ப்ரியா ரகு அவர்களே... நெகிழ்ச்சியான பகிர்தலுக்கு நன்றி.

என்னவோ தெரியவில்லை... இது போன்ற அனுபவங்களை படிக்கும்போது என்னையும் அறியாமல் ஒரு கணம் கண் கலங்கிவிடுகிறேன். (ஒருவேளை வாழ்க்கையே கலந்கியிருக்கிரதாள இருக்குமோ?)

பக்தர்களை சோதித்து பார்த்து பின்னர் அருள் புரிவதில் மட்டும் அனைத்து தெய்வங்களும் ஒன்றாகத் தான் இருப்பார்கள் போல. சொல்றது சுலபம்.... அந்த சோதனையை அனுபவிக்கும்போது நம் மனம் ஒரு கலங்கு கலங்கும் பாருங்க... உடம்புல இருந்து உயிரை எடுக்குற மாதிரி இருக்கும். (மாலை வாங்கலேன்ன உடனே உங்களுக்கும் அப்படித் தானே இருந்திச்சு?)

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி... சோதனையோ வேதனையோ... என்னவோ பண்ணிட்டுபோ... இந்த ஏழையை கொஞ்சம் பார்த்தா போதும்.

இன்னும் கொஞ்சம் படிக்கமாட்டோமா என்று நினைக்கும்போதே உங்கள் பின்னோட்டம் முடிந்துவிட்டது வருத்தம். நல்ல அழகான நடை. மற்றபடி... உங்கள் தளத்தை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன் (நரசிம்மர் பற்றி தேடியபோது!). தங்கள் பின்னூட்டத்தை இங்கு கண்டது மிக்க மகிழ்ச்சி. உங்கள் முயற்சி. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். நன்றிகள்.

- கோடியில் ஒருவன்

NAHARANI said...

Really I am blessed by SIVA of THIRUVALAM.. that day of 23 may i dont know that an oppurtunity to pray him will be offered me soon Yesterday 3.6.2012. our family with His wish went there..such a nice experience we all had.. we were there by 12.20 .. the time is about to closure.. fortunatly there was a special Abishegam and so we were asked to be there for half an hour..we prayed well with all god's archana and aarthy right from Kani Vaangiya Vinayak , Subramaniyar, Dhanumathyambal and Great Siva Vilvanatheeswarar.The sahasra lingam we saw and the asthi temple of Great sage Janagar along with the Samathi of Mouna guru siddhar too.. The almighty blessed that much We all free of our mental worries and there till 2.30. The archagar says the mandras ..very well said, still roring in ears. All these are only by God's great Grace alone.Thanks to livingextra.com for the oppurtunity to know the ancient temple and lots of thanks to rishi sir too.

Anonymous said...

Aanmiga thagavalgalai alli tharum indha valai thalathirkku en manamaarndha nanri...

valli said...

படங்கள் பெரிதாக்க முடியவில்லை. முன்றாவது படத்தில் என்ன எழுதி உள்ளது என படிக்க முடியவில்லை.Please do to make it bigger. Thanks Valli.

இல.உதயகுமார் said...

ஓம் நமசிவய........

இது போன்று மக்களின் மகத்தான வாழ்விற்கு வழி வகுக்கும் உங்களின் இறைபணி சிறக்க என்றும் எங்கள் வாழ்த்துக்கள்.

இல.உதயகுமார்.

இராஜராஜேஸ்வரி said...

பயன் மிக்க அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

Balaram Srinivasan said...

ஓம் நமசிவய........

இது போன்று மக்களின் மகத்தான வாழ்விற்கு வழி வகுக்கும் உங்களின் இறைபணி சிறக்க என்றும் எங்கள் வாழ்த்துக்கள்.

thamilarasi said...

இந்த ஆலயத்தை கடக்கும் போதெல்லாம் கவனிப்பார் அற்ற ஆலயம் என்ற எண்ணமும் கோவில்களை பார்த்தல் கன்னத்தில் இட்டுக்கொள்வதுமாய் ரொம்ப பொத்தாம் பொதுவாய் கடந்ததுண்டு. இதை படித்ததும் கண்கள் கலங்கி உடல் சிலிர்த்து போனது, எனக்காக என்னை இங்கே போகச்சொல்லி என் நண்பர் அறிவுறுத்த வாசிக்க நேர்ந்தது, முதல் நன்றி நண்பருக்கும் அடுத்த நன்றி கருணைக்கடல் ஈசனுக்கும் சொல்லிக்கொள்கிறேன்.

Balaji Palamadai said...

Dear sir , is this the temple address which you are referring

Arulmighu Vilva Naatheswarar Temple
Tiruvallam
Tiruvallam Post
Via Ranipettai
Katpadi Taluk
Vellore District
PIN 631515

Please confirm. thanks in advance.
-

Gnanam Sekar said...

நல்ல அருமையான தகவல் . நன்றி அய்யா

Mades kavi said...

om namasivaya

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com