Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

ஆண்டவன் அறிய நெஞ்சில் , ஒரு துளி வஞ்சமில்லை - அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை

| Mar 26, 2012
மனிதனம்மா மயங்குகிறேன். தவறுக்குத் துணிந்த மனிதன் அழுவதில்லையே... தவறியும் வானம் மண்ணில் வீழ்வதில்லையே...

நல்லவர்க் கெல்லாம் சாட்சிகள் ரெண்டு. ஒன்று மன சாட்சி. ஒன்று தெய்வத்தின் சாட்சி யம்மா.. ! தெய்வத்தின் சாட்சி யம்மா.. !

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் , தெய்வத்தின் காட்சியம்மா , அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா , அது தான் உண்மையின் காட்சியம்மா!

மனதை மயக்கும் இந்த வைரவரிகள்  காலையில் இருந்து மனதில் வட்டம் இட்டுக் கொண்டு இருக்கிறது....

வாழ்க்கையில் நடைபெறும் சில சம்பவங்கள் இயல்பாக நடப்பது போல தோன்றும். நம் மனது , ஒரு சில அபூர்வங்களை தக்க வைத்துக்கொள்ளும். சிலவற்றை கண்டு கொள்ளாது...  மிகுந்த மன உளைச்சல் ஏற்படும்போது , ஏதோ ஒரு கோவிலுக்கு செல்லுவதாக வைத்துக்கொள்வோம்...  கற்பூர ஆரத்தி காட்டிய பிறகு, அந்த அர்ச்சகர் இறைவனுக்கு அளிவித்த ஒரு மாலையை உங்களுக்கு அணிவித்து, தலையில் வைத்து உங்களை ஆசீர்வதித்தால் எப்படி உணர்வோம்.... அட அடா... இறைவன் நமக்கு ஆசீர்வாதம் அளித்து விட்டார். நமது இந்த முயற்சி நிச்சயம் வெற்றி பெறும், என்கிற ஒரு ஆணித்தரமான எண்ணம் கண்டிப்பாகத் தோன்றும் இல்லையா...?

அப்படி இருக்க, மிகுந்த பிரயாசையோடு நீங்கள் ஒரு கோவிலுக்குச் செல்லும்போது , அந்த ஆலயம் ஏதோ ஒரு காரணத்தால் , பூட்டி இருந்தால்...? சந்தேகமே இல்லாமல், நம் மனது ஓங்கி குரல் எழுப்பும்... அடடா, இறைவன் கூட முகம் திருப்பிக் கொண்டானோ... ? நமக்கு யார் துணையாக இருக்கப் போகிறார்கள்..?

ஆனால், நம்பி அருபவர்களுக்கு இறைவன் என்றும் துணை நிற்ப்பான் என்பதை நிரூபிக்கும் வகையில் நடந்த ஒரு சம்பவத்தை இன்று பார்க்க விருக்கிறோம்... நமது வாசகர்களில் , மிக முக்கியமான நண்பர் , ஒருவர் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை, தனக்கே உரிய சுவாரஸ்யமான எழுத்து நடையில் , சுவைபட எழுதி அனுப்பி இருக்கிறார்.... கொள்ளை அழகுடன் கூடிய புகைப் படங்களுடன்... அடுத்த ஒரு ஆன்மீக எழுத்தாளர் ரெடி ஆகிக் கொண்டு இருக்கிறார்...! அவருக்கு எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்..!
கடந்த சனி, ஞாயிறு இரண்டு தினங்களும் அண்ணாமலையில் இருக்கக் கூடிய பாக்கியம் எனக்குக் கிடைத்தது... விரைவில் அது பற்றிய ஒரு ஸ்பெஷல் கட்டுரையுடன் சந்திக்கிறேன்... ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஒரு சில அனுபவங்கள் கிடைத்தது.... நடக்கும் எந்த ஒரு நிகழ்வும், அவரது திட்டமிடலுடன் தான் நடக்கிறது என்பதை மீண்டும் எனக்கு உணர்த்திய சம்பவம்..... இந்த கட்டுரையின் முக்கியத்துவத்தை கெடுக்கா வண்ணம், அதைத் தனிப் பதிவாக எழுத திட்டமிட்டு இருக்கிறேன்....

நிஜ வாழ்க்கையில் ஒத்திகை என்பது இல்லை. ஒவ்வொரு நாளும் ரியல் ஷோ தான்...அவ்வளவு முக்கியம் நமக்கு ஒவ்வொரு நாளும். ஆனால் நிஜம் நம் கண் முன்னே அறைகிறது..!

நடக்கும் ஒவ்வொரு அடியும், ஒரு மழலை பேசும் குழந்தையாக, தளிர் நடை தான் நடக்க வேண்டி இருக்கிறது... கை பிடித்து அழைத்துச் செல்ல அந்த பரம்பொருளே தந்தையாக இருந்தால்...? ஆசைப் படுங்கள்.. நிச்சயம் நடக்கும்... அவனை நோக்கி நாம் நடக்கும் ஒவ்வொரு தப்படியையும், அவனும் தந்தையின் உவகையுடன் நோக்கிக் கொண்டு தான் இருக்கிறான். நமக்குத் தான் புரிவதில்லை...

கீழே விழுந்து விடுவோமே என்கிற கவலை வேண்டாம்...... நடப்பது மட்டுமே முக்கியம்...!

வேலைப் பளு, சொந்த அலுவல் காரணமாக முன்பு போல், தினமும் தொடர்ந்து எழுத முடியவில்லை... ஆனால், நிச்சயம் எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் பதிவுகளை தொடர்ந்து இடமுயற்சிக்கிறேன்....

தொடர்ந்து படியுங்கள்...! உங்களுக்கும் இதைப் போல அனுபவம் ஏற்பட்டு இருந்தால், தயவு செய்து, சிரமம் பாராது எழுதி அனுப்பவும்... தகுந்த கட்டுரைகள் நிச்சயம் பிரசுரிக்கப் படும்..!

இனி நண்பரின் அந்த அனுபவம் ...!

==================================================
அனைவருக்கும் வணக்கம். சில முக்கியப் பணிகளில் எம்மை ஈடுபடுத்திக்கொண்டிருந்தபடியால் இடையில் சில காலம் இங்கு வரமுடியவில்லை. கமெண்ட்டும் அளிக்க முடியவில்லை. அனைவரும் மன்னிக்கவும். குறிப்பாக ஆசிரியர்.


இந்த இடைப்பட்ட காலத்தில் என்  வாழ்க்கையில் என்னென்னவோ நடந்துமுடிந்துவிட்டது. சாதனைகளுக்கும் குறைவில்லை. சோதனைகளுக்கும் குறைவில்லை. (ஒருவேளை சோதனையும் சாதனையும் ஒண்ணா தான் வருமா?)


ஆசிரியர் சில மாதங்களுக்கு முன்பு சனிப் பெயர்ச்சிப் பலனில் கூறியபடி எனது ராசிக்கு (சிம்மம்) இனி நல்ல காலம் என்று நம்பிக்கையில் உள்ளேன்.


இருப்பினும், சனிப் பெயர்ச்சி முடிந்தபின்பும், அண்மையில் சாதனைகளை நிகழ்த்தும் ஒரு சபையில் எனது எதிரிகளால் ஒரு பெரிய அவமானத்தை சந்திக்க நேர்ந்தது. (வேற யாரவது என் இடத்துல இருந்திருந்தால், அன்னைக்கே தூக்கு மாட்டிகிட்டு செத்திருப்பான்.).


என்னுடன் இருந்த நண்பர்களும் எனக்கு நிகழ்ந்த அவமரியாதையை எண்ணி கண் கலங்கி, "விடுங்கண்ணா... இத்தோட எல்லாம் முடிஞ்சிடிச்சுன்னு நினைச்சுக்கோங்க. எதையும் கண்டுக்காதீங்க. நாம பாட்டுக்கு நம்ம லட்சியத்தை நோக்கி போவோம். சாதிச்சி காட்டுவோம். அவங்க நிச்சயம் இதுக்கு வருத்தப்படுவாங்க" என்று என் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறி, என் மனதை தேற்றினார்கள்.


ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி உண்டு. "COUNT YOUR BLESSINGS; NOT TROUBLES" என்று. அதன்படி, எனக்கு என் விதி தந்த இந்த அவமானங்களுக்கு இடையே இறைவன் என் வாழ்வில் சமீபத்தில் நிகழ்த்திய ஒரு அற்புதத்தை பற்றி உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். (ஆசிரியர் அனுமதித்தால்).


நான் ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு இங்கு கமென்ட் செக்ஷனில் கூறியிருந்தேன். நம்பிக்கை துரோகத்தை தாங்கும் சக்தி உலகில் எந்த மனிதனுக்கும் கிடையாது. சென்ற வருடம் என்னை என் நண்பர்கள் (?!) நடுத் தெருவில் துகிலுரித்துவிட, அவமானத்தால் நிலைகுலைந்த நான், அழுதபடியே ஒரு முழு நாளை கழித்தேன். நியாயம் கேட்டு பேரம்பாக்கம் (திருவள்ளூர்) நரசிம்மரிடம் ஓடினேன்.


சன்னிதானத்தில் அனைவருக்கும் முன்பாக கிட்டத்தட்ட ஒரு பைத்தியம் போல அழுதேன். உடன் வந்த நண்பர் ஆறுதல் கூறி அழைத்து வந்தார்.


என் எதிரிகளையும் துரோகிகளையும் நான் மன்னிப்பது இருக்கட்டும். அவர்கள் என் எதிரிகள் என்பதால் மட்டும் நான் சொல்லவில்லை. மனிதர்கள் போர்வையில் உலவும் அந்த கேவலமான மிருகங்களை அவன் நிச்சயம் மன்னிக்க மாட்டான்.


இது நடந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. வாழ்க்கையே சூன்யமாகிவிட்டதை போல அன்று உணர்ந்தேன். இருப்பினும் ஏதோ ஒரு நம்பிக்கையில் கொஞ்ச கொஞ்சமாக நான் சார்ந்த துறையில், சாதனைகளை (என் அளவில் அது பெரிய சாதனை தான்!) படைக்க துவங்கினேன். பெரிய மனிதர்களின் நட்பு கிடைத்தது. மாதங்கள் உருண்டோடின.


இந்த மாதத்தின் இறுதியில் மிகப் பெரிய சாதனைகளை அடுத்தடுத்து செய்யும் வாய்ப்பை எனக்கு இறைவன் வழங்கினான். சாதனைகளை படைக்கும்போது, கூடவே அவமானமும் சோதனைகளும் வந்தன. ஆகவே அந்த சாதனைகளின் சந்தோஷத்தை என்னால் முழுமையாக அனுபவிக்க முடியாது போனது.


இந்த வருடம் டிசம்பர் 25, அன்று சென்ற ஆண்டு கோவிலுக்கு என்னுடன் வந்த நண்பர் ஃபோன்  செய்தார். "அண்ணா ஞாபகமிருக்கா? போன வருஷம் இதே நாள் நரசிம்மர் கோவிலுக்கு போனோம். இன்னைக்கு பார்த்தீங்களா? நம்ம நிலைமை எந்தளவு உயர்ந்திருக்கு" என்றார். அப்போது தான் எனக்கு சென்ற ஆண்டு நாம் நரசிம்மர் கோவிலுக்கு இதே நாள் சென்றது நினைவுக்கு வந்தது.


இதை என் வேறு சில நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டேன். அதில் ஒருவர், "அவசியம் நீங்க இன்னைக்கு அந்த கோவிலுக்கு போய் நரசிம்மரை பார்த்து நன்றி சொல்லிவிட்டு வரணும். போன வருஷம் பிரச்னையை கம்பேர் பண்ணும்போது இந்த வருஷத்துல நீங்க எங்கேயோ போயிட்டீங்க" என்றனர்.


எனக்கு ஏற்பட்ட பிரச்னைகள் பற்றியே சிந்தித்து வந்தபடியால், எனக்கு கூட அது பற்றி தோன்றவில்லை. நண்பர் கூறியபடி இன்றைக்கு நாம் நிச்சயம் நரசிம்மரை பார்த்துவிட்டு வந்துவிடுவோம் என்று தோன்றவே உடனே ஏற்பாடுகளில் இறங்கினேன்.


இது நடக்கும்போது மணி மாலை 5.00 PM.


உடனே, நண்பர்களிடம் பேசி, வருவதற்கு யார் தயாராக இருக்கிறார்கள் என்று கேட்டு,   தயங்கி பின்னர் ஒருவர் ஒப்புக்கொண்டார். (இந்த காலத்துல கோவிலுக்கு கூப்பிட்டா வர தயாரா இருக்குறவங்க நண்பர்களா கிடைக்கிறதே பெரிய விஷயம். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி தான்!)


நண்பரை வரச் சொல்லி நானும், சுத்தமாக தயாராகி, புறப்படும்போது மணி 6.10 ஆகிவிட்டது. எங்கள் பகுதியிலிருந்து எப்படியும் கோவில் இருக்கும் தூரம் 45 கி.மீ. இருக்கும். நான் ஏற்கனவே ஒரு முறை போயிருக்கிறேன். சரி எப்படியும் வண்டியை வேகமாக ஓட்டி ஒரு மணிநேரத்துக்குள் போய்விடலாம் என்று (தப்பு) கணக்கிட்டு, டூ-வீலரை வேகமாக ஓட்டினேன்.


சென்னை-பெங்களூர் சாலையில் QUEENSLAND தாண்டும்போதே மணி 7 ஆகிவிட்டது. 7.30 மணிக்குள் கோவிலுக்கு போய்விடவேண்டும். நேரமாகிவிட்டபடியால், அந்த நம்பிக்கை குறைந்துகொண்டே வந்தது. (இன்றைக்கு எப்படியும் தரிசித்துவிடவேண்டும் என்று உறுதியாக இருந்தேன்). இருப்பினும், எப்படியும் அரைமணிநேரத்தில் போய்விடலாம் என்றெண்ணி, பேரம்பாக்கம் செல்லும் சாலையில் வண்டியை திருப்பினேன்.


சாலை சில இடங்களில் மிக மிக மோசமாக இருந்தது. நன்கு இருட்டியும் விட்டது. எதிரே வந்த ஒரு சில வாகனங்களின் ஹெட்லைட் கண்களை கூசச் செய்தது. வண்டியை ஓட்ட அது இன்னமும் சிரமத்தை தந்தது. இன்னும் 28 கி.மீ. போகவேண்டும். மணி அப்போது 7.10 pm.


நம்பிக்கை கொஞ்சகொஞ்சமாக குறைந்துகொண்டே வந்தது. இருப்பினும், இப்படி இரண்டு பாவப்பட்ட ஜீவன்கள் தன்னை தரிசிக்க வருவது நரசிம்மருக்கு தெரியாமல் இருக்குமா? எனவே நரசிம்மர் எப்படியும் கைவிடமாட்டார் என்று மனதில் ஓரத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது.


வழியில் எங்கும் நிறுத்தாமல், கரடு முரடான அந்த சாலையில் இருட்டில் வண்டியை விரட்டி ஒரு வழியாக சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு பேரம்பாக்கத்தில் நுழைந்தோம். டூ-வீலரில் செல்வதாக இருந்தால் பேரம்பாக்கம் ஊருக்கு வெளியே மெயின்ரோட்டில் இருந்து பிரியும் 'கூவம்' என்ற ஒரு சிறிய கிராமத்துக்குள் நுழைந்து, கோவிலுக்கு சீக்கிரம் சென்றுவிடலாம். (கோவிலுக்கு போகணும்னா கூவத்தை தாண்டி தான் ஆகணுமோ? இது எதையோ உணர்த்துவது போலில்லை?)அப்படித் தான் அனைவரும் போவார்கள். பஸ்ஸில் போகிறவர்கள் தான் பேரம்பாக்கம் ஊர் வழியாக செல்லவேண்டும்.


அடித்து பிடித்து நாங்கள் கூவம் என்ற கிராமத்தை தாண்டி அட்சம் வயல்வெளிகளுக்குள் நுழைந்து கோவிலுக்கு செல்லும்போது அந்த ஊரே அடங்கிப் போயிருந்தது.


மணி 7.55 .... அங்கே போனால் சன்னதி.... மூடியிருந்தது. விரக்தியின் உச்சிக்கே சென்றோம்.


"என்னப்பா இப்படி கவுத்திட்டியே... உன்னை நம்பி தானே வந்தோம். அட்லீஸ்ட் நடை சாத்தும் சமயத்தில் வந்தாலாவது உன்னை ஜஸ்ட் ஒரு சில நொடிகளாவது பார்த்திருப்போமே. எங்களுக்காக உன் கதவை திறந்து வைக்ககூடாதா?" என்றெல்லாம் மனதில் ஓடியது.


(இதற்கு முன்பு நான் ஒரு முறை சென்ற போது எடுத்த புகைப்படங்களை இணைத்திருக்கிறேன்! பகலிலேயே இந்த ஊர் எப்படி இருக்கு பாருங்க.)


ஒரே ஒரு மனிதர் தூரத்தில் தட்டுபட்டார்.... அவரை நோக்கி ஓடினோம். சென்னையில் இருந்து வந்த விஷயத்தை சொன்னோம். "அடடா... கோவில் ஏழு மணிக்கெல்லாம் சாத்திட்டாங்களேப்பா... இது மார்கழி மாசம் இல்லையா... காலைல சீக்கிரம் திறப்பாங்க. அதுனால, சாயந்திரம் ஏழு மணிக்கெல்லாம் மூடிடுவாங்க." என்றார்.


"நாங்க போன வருஷம் வந்தப்போ, கோவில் 7.45 வரைக்கும் திறந்திருச்சு. கொஞ்சம் முன்னே பின்னா ஆனாகூட எப்படியும் தரிசனம் பண்ணிடலாமேன்னு வந்தோம் சார்" என்றேன்.


அவர், "நேற்றைக்கு கூட சாயந்திரம் 8.30 வரைக்கும் திறந்திருந்துச்சு. யாரோ பெரிய ஆளுங்க கார்ல வந்துக்கிட்டுருக்கோம். வெயிட் பண்ணுங்கன்னு சொன்னாங்க. அவங்க வர லேட்டாயிடுச்சு. அர்ச்சகர்களும் வேற வழியில்லாம் வெயிட் பண்ணாங்க. மற்றபடி கோவில் சாத்தும் நேரம் மாலை 7.30 pm" என்றார்.


அந்த அர்ச்சகர்களின் வீடு இங்கே எங்காவது பக்கத்துல இருக்கா? அவங்களை போய் கூட்டிகிட்டு வந்தா கோவிலை திறந்துவிட்டமாடாங்க?" ஒரு நப்பாசையில் கேட்டோம்.


"அவங்க இந்நேரம் அவங்க ஊருக்கு போயிருப்பாங்க. வாய்ப்பேயில்லை" என்றார் அந்த பெரியவர்.


ஒரு பக்கம் நான் சென்டிமென்ட்டாக மிகவும் ஃபீல் செய்தேன். கஷ்டப்பட்டு பிரயாணம் செய்து கோவிலுக்கு போகும்போது கோவில் சாத்தியிருந்தா அது எப்படி இருக்கும்னு அதை அனுபவிச்சவங்களுக்கு தான் தெரியும். தவிர ஆண்டவன்னு ஒருத்தன் இருந்தா, ஒன்னு எங்களை வர்ற வழியிலேயே தடுத்திருக்கணும். இவ்ளோ தூரம் நாங்க வரவெச்சு தரிசனம் கொடுக்காம திருப்பி அனுப்புவானா? ஒரு வேலை கடவுள் இருக்கிறது இதெல்லாம் பொய்யோ" அப்படியெல்லாம் மனசுக்கு தோணிச்சு. கடவுள் நம்பிக்கை கிட்டத்தட்ட எனக்கு போயே போச்சுன்னு சொல்லலாம்.


என் நண்பரை நினைச்சு வருத்தப்பட்டேன். நானாவது பரவாயில்லே. நான் கூப்பிட்ட ஒரே காரணத்துக்காக என்னோட வந்த அவர் முகத்தை கூட என்னால் பார்க்கமுடியலே. "சரி.. நாளைக்கு வேணா மறுபடியும் வரலாம் பாஸ்" அப்படின்னு சொன்னேன். "இல்லேயில்லே... நியூ இயர் அன்னைக்கு வரலாமே"ன்னு சொன்னார். சரின்னு திரும்ப சென்னைக்கு கிளம்பினோம். மனசு முழுக்க ஒரே பாரம்.


அது ரொம்ப சின்ன ஊருங்க. ஆள் அரவமே இல்லே. மார்கழி மாச குளிர் வேற. கோவிலுக்கு அடுத்து ரெண்டு மூன்று தெரு தள்ளி, ஊர் எல்லைக்கு வெளியே வரும்போது, ஒரே ஒரு சின்ன கோவில் மட்டும் கண்ணுல எங்களோட இடது பக்கம் தட்டுபட்டது. வரும்போது அந்த வழியாத்தான் வந்தோம். வந்த அவசரத்துல அந்த கோவிலை கவனிக்கலை. அந்த கோவிலை வெளியே இருந்து பார்த்தா ஒரு சின்ன பிள்ளையார் கோவில் போல இருந்துச்சு. ஊர் அம்மனோட கோவிலா கூட இருக்கலாம்னு நினைச்சு, வண்டியை அங்கே நிறுத்தினோம். கோவிலுக்குள்ள ஒரு ஆறேழு பிராம்மண இளைஞர்கள் உட்கார்ந்திருந்தாங்க.


மூலவருக்கு முன்பாக ஸ்க்ரீன் போட்டிருந்தார்கள்.அதாவது கோவிலை அன்னைக்கு மூடிவிட்டு இவங்க கிளம்புவதற்கு ஆயத்தமாக இருந்தார்கள்.


அவங்ககிட்டே நாங்கள் சென்னையில் இருந்து வந்த விஷயத்தை சொல்லி, நரசிம்மரை தரிசிக்க முடியாத எங்க சோகத்தை சொல்லி, இந்த கோவிலையாவது தரிசிக்கலாமேன்னு வந்தோம்னு சொன்னேன்.


உடனே அதுல ஒருத்தரு, (அவர் தான் அர்ச்சகர்) எழுந்திருச்சு போய், ஸ்க்ரீனை விலக்கினார். அங்கே பார்த்தால்... சாட்சாத் நம்ம நரசிம்மர். அதுவும் யோக நரசிம்மர். என்ன ஒரு அற்புதமான காட்சி தெரியுமா அது. காண கோடி கண்கள் வேண்டும். நாளெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல. அத்துணை அழகு. அதே சமயம் உக்கிரம்.


எனக்கு ஒரு கணம் சிலிர்த்துவிட்டது. கண்களில் கண்ணீர் மட்டும் தான் வரவில்லை. மற்றபடி நெகிழ்ச்சிய்ல் அழுதுகொண்டிருந்தேன். என்னுடன் வந்த நண்பரும், சிரித்தபடி என்னை பார்த்தார். "பார்த்தீயா... என்னென்னோவோ சொன்னே... நம்ம நரசிம்மர் நம்மளை கைவிடலை" அப்படின்னு அவர் பார்வை சொல்லிச்சு.


நான் ஒரு கணம் அர்ச்சகர் கிட்டே புல்லரிச்சி போய், நாங்க கிளம்பி வந்த கதையை சொல்லிக்கிட்டு இருந்தேன்.


மந்திரம் சொல்லி தீபாராதனை காமிச்சார். கண்குளிர தரிசித்தேன். "இது போதும் இறைவா... அங்கு மூடிய உன் கதவை இங்கு எங்களுக்காக திறந்தாய் பார்த்தாயா... இந்த ஒன்று போதும். உன் அருள் பார்வை என் மீது இருக்கிறது. இனி எந்த துன்பமும்  என்னை ஒன்றும் செய்யாது. மலையை கூட நான் இனி புரட்டுவேன்" என்று அவனிடம் கண்கலங்கியபடி பிரார்த்தனை செய்தேன்.


ஒரு நிமிஷம் இருங்கன்னு சொல்லி எங்களை ஓரமா கீழே உட்கார வெச்சவர், திடீர்னு, சன்னதியின் உள்ளே இருந்த ஒரு பாத்திரத்தில் இருந்து, ஆளுக்கு ஒரு பிடி கேசரி எடுத்து கொடுத்தார். பசியில் வாடியிருந்த எங்களுக்கு கேசரியே கிடைத்தது. அதுவும் என் நரசிம்மனிடம் இருந்து. அப்புறம் ஒரு சின்ன சீதாப் பழத்தை எடுத்து ஆளுக்கு கொஞ்சம் பிட்டு கொடுத்தார். ஒரு கணம் நடப்பது கனவா அல்லது நனவா என்றெண்ணியபடி கேசரியும் சீதாப் பழமும் சாப்பிட்டோம். (ஒரு வேளை அங்கே கோவில் திறந்து இருந்தால் கூட எங்களுக்கு இது போல சாப்பிட இனிப்பும் பழமும் கிடைத்திருக்காது!)


கைகளை கழுவதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொடுத்தார்கள்.


அப்புறம் உட்கார்ந்த படி இந்த கோவில் பற்றி விசாரித்தோம். ஆக்சுவலா இது ஒரு வைணவ பஜனை மேடம் & கோவில். இங்கு இருந்து பஜனை செய்தபடி சோளிங்கரில் உள்ள நரசிம்மரை தரிசிக்க பாதயாத்திரையாக செல்வார்களாம். இவர்களும் அது போல காலை செல்லவிருக்கிறார்களாம். மேலும், அந்த கோவில், உற்சவங்களின்போது சாத்தியிருக்கும்போது, இங்கு பூஜைகள் நடைபெறுமாம். இந்த கோவில் அதற்கு நேரடி தொடர்புடையது அல்ல. இருப்பினும், இங்கு பூஜை புனஸ்காரங்கள், பஜனை, தியானம் முதலியவை செய்யப்படுகிறது.


அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு புறப்பட்டோம்.


இரவு நேரமாகிவிட்டபடியால், கோவிலை வெளியே இருந்து கூட புகைப்படமெடுக்க முடியவில்லை. புத்தாண்டுக்கு செல்லும்போது, புகைப்படங்களை எடுத்து வருகிறேன். இங்கு உங்களுக்கு தருகிறேன்.


வெளியே வந்து, பைக்கை ஸ்டார்ட் செய்து, சிறிது தூரம் வந்தவுடன், "மூலவருக்கு பக்கத்துல இருந்த அந்த குட்டி விக்ரகத்தை பத்தி என்ன நினைக்குறீங்க? அலங்காரம் நல்ல இருந்துச்சு இல்லே?" அப்படின்னார். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. "அதுவும் நரசிம்மர் தான். உலோகத்தால் செஞ்சிருந்தாங்க. ஆபரணங்கள் எல்லாம போட்டு அலங்காரம் பண்ணியிருந்தாங்க" என்றார் நண்பர்.


"என்னப்பா சொல்றே நீ? நான் பரவசத்துல எதையும் சரியா கவனிக்கலை. அங்கே ஏதோ ஒரு விக்ரகத்தை பார்த்த மாதிரி தெரிஞ்சுது. நரசிம்மரை பார்த்த உற்சாகத்துல நான் அதை கவனிக்கலை" என்றேன்.


இப்படியே பேசிக்கொண்டே வந்தோம்.


என்னைப் பொறுத்தவரை இந்த சம்பவத்தை என் வாழ்க்கையில் நடந்த மிகப் பெரிய அற்புதமாக கருதுகிறேன். ஒருவேளை நரசிம்மரை தரிசிக்காமல் நான் சென்றிருந்தால், அது என்னை மிகவும் பாதித்திருக்கும். மன ரீதியாக.


நரசிம்மர் இந்தளவு என் மீது கருணை மழை பொழிய, நான் அருகதை உள்ளவனா என்பதில் எனக்கே சந்தேகம் உண்டு. ஆகையால், நான் இந்த அற்புதத்தை அவன் நிகழ்த்த காரணமாக நான் நம்புவது என்னுடன் வந்த அந்த நண்பரைத் தான். மிகச் சிறந்த பக்திமானாகிய அவர், நல்ல பண்பாளர். நல்ல சிந்தனையுடையவர். மிக சிறிய வயதுக் காரர். ஆனால் பக்குவமானவர். அவரைப் போன்ற ஒருவர் தன்னை தரிசிக்க வெகு தூரத்திலிருந்து வந்து இப்படி மன வருத்ததோடு செல்லலாகாது என்று பகவான் கருதியாதாலேய "போனாப் போகுது போங்கடா" என்ற எண்ணத்தில் இந்த அதிசயத்தை அவன் நிகழ்த்தினான் என்றே நான் கருதுகிறேன்.


எப்படியோ நெல்லுக்கிறைத்த நீர் இந்த வாய்க்காலுக்கும் ஓடி வந்து விட்டது. அந்த வகையில் சந்தோஷமே.


இந்த அற்புதத்தை பற்றி வரும்போது வழிநெடுக இருவரும் பேசிக்கொண்டே வந்தோம்.இதுக்கு அப்புறமும் எனக்கு சோதனைகள் வராமலில்லை. வந்துகொண்டு தானிருக்கிறது. ஆனால் மனதில் ஒரு நம்பிக்கை இருக்கிறது.


"எஸ்... ஆண்டவன் இருக்கான். நல்லவங்க வாழ்வாங்க.... என்ன கொஞ்சம் நேரம் ஆகும் அவ்ளோதான்"


- (பக்த) கோடியில் ஒருவன் 18 comments:

திருமாறன் said...

மெய் சிலிர்த்தேன். தங்களுக்கு நன்றிகளும் (தன்னடக்கமுள்ள) கட்டுரையாளருக்குப் பாராட்டுக்களும்.

Nanjil Kannan said...

மிக அருமையான பதிவு ..
நரசிம்மர் எப்படி உங்களை கஷ்ட படுத்துவார் . பக்த ப்ரஹலாதக்னுகாக நொடி பொழுதில் வந்தவர் அன்றோ ?
இத்தகைய விஷயங்கள் உணர்ந்தவர்க்கே (அனுபவபட்டவர்களுக்கே) புரியும். இது போன்ற ஒரு அற்புதமான விஷயத்தை நானும் ஆண்டாள் சன்னதியில் அனுபவித்து உள்ளேன் . நரசிம்மரின் அருள் பெற்ற (பக்த) கோடியில் ஒருவன் விரைவில் வாழ்வில் மேன்மேலும் வளர்ச்சி பெற்று நீங்கா புகழ் பெற எல்லாம் வல்ல என் அன்னையை வேண்டி பணிகிறேன் ..
நன்றி ..

நண்பரின் கோரிக்கையை ஏற்று பதிவை போட்ட ரிஷி அண்ணனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

சிறியவன் நாஞ்சில் கண்ணன்

கோடியில் ஒருவன் said...

என்னோட இந்த அனுபவத்தை போஸ்ட் பண்ணினதுக்கு ஆசிரியருக்கு நன்றி.

ஆசிரியருக்கு நான் இதை அனுப்பி மூன்று மாதங்கள் இருக்கும். தகுந்த நேரம் வரும்போது பிரசுரிப்பதாக கூறியிருந்தார். மீண்டும் நன்றி.

என்னுடைய இந்த கோவில் அனுபவம் நடந்தது கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில். அடுத்த சில நாட்களில் புத்தாண்டு தினத்தன்று மேலும் சில நண்பர்களோட நரசிம்மரை தரிசிக்க சென்றிருந்தேன். திவ்ய தரிசனம் கிடைச்சது. தரிசனம் முடிந்ததும் நண்பர்கள் என் கைகளை பிடித்து, "ரொம்ப நன்றிப்பா. உன்னால தான் எங்களுக்கு இந்த நியூ இயர் அதுவும் இப்படி ஒரு தரிசனம் கிடைச்சது." என்றனர்.

////////////////////ஆண்டவன் அறிய நெஞ்சில் , ஒரு துளி வஞ்சமில்லை -
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
மனிதனம்மா மயங்குகிறேன்.
தவறுக்குத் துணிந்த மனிதன் அழுவதில்லையே...
தவறியும் வானம் மண்ணில் வீழ்வதில்லையே...////////////////////

வாலியின் இந்த பாடல் வரிகள் அன்று எனக்கு இருந்த சூழலுக்கு மிகப் பொருத்தம். ஆசிரியர் கரெக்ட்டாக அந்த பாடலையே முதல் வரியாக இந்த பதிவில் துவக்கியிருப்பது அவரது சமயோசிதத்துக்கு நல்ல எடுத்துக்காட்டு. நன்றி சார்.

நான் மறுபடியும் எல்லாருக்கும் சொல்வது என்னன்னா... எப்பேற்ப்பட்ட சோதனை வந்தாலும், அந்த ஆண்டவனோட காலை கெட்டியா பிடிச்சிக்கோங்க. எல்லாமே தலைகீழா மாறும். எல்லாத்தையும் தலைகீழா மாத்துறது மனுஷனால சாத்தியம் இல்லே. ஆனா... அவன் ஒருத்தனால மட்டும் அது முடியும்!!!!!

கடவுளை நம்பினோர் கைவிடப்படார். இது நான்மறை தீர்ப்பு!!!!!!!!!!!!!!

- கோடியில் ஒருவன்

arul said...

superb post please share more like this in this blog

Amuthan Sekar said...

நல்ல பதிவு. நன்றிகள் பல.

சே.அமுதன்

நாதன் said...

என் மனதை கஷ்டங்கள் வாட்டும் ஒவ்வொரு முறையும் , தங்களிடம் இருந்து மருந்து போல பதிவுகள் வருவது என் மனதை பண்படுத்த இறைவன் கொடுக்கும் வரங்களாக தோன்றுகிறது.நல்ல பதிவிற்கு நன்றி ரிஷி அண்ணா, "கோடியில் ஒருவன்" அண்ணனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

thiru said...

".. இந்த அற்புதத்தை அவன் நிகழ்த்த காரணமாக நான் நம்புவது என்னுடன் வந்த அந்த நண்பரைத் தான் .."

-இதை ஒத்துக்கொள்வதற்கான பக்குவம் வந்ததே நரசிம்மருடைய கருணை உங்கள் மீது பரிபூர்ணமாக வந்ததின் அடையாளம்

கோடியில் ஒருவன் said...

இங்கு இந்த பதிவை பற்றியும் என்னுடைய கட்டுரையை பற்றியும் தங்கள் கருத்துக்களையும், நல்லெண்ணங்களையும் பகிர்ந்து கொண்டுள்ள அனைவருக்கும் நன்றி. நன்றி.

தெய்வ பக்தியுள்ள பெற்றோர்களுக்கு நான் பிறந்திருந்தாலும், என்னமோ தெரியாது நாள் கிழமை பண்டிகைகள் முதலிவற்றில் பெரியளவில் ஈடுபாடு இல்லாதிருந்தது.

என் மனசுக்கு நான் நல்லவன் - அது போதும் எனக்கு. இதுல மத்ததுக்கு இந்த அவசர உலகத்துல எங்கே இடம் இருக்குன்னு நினைச்சு நுனிப்புல் மேயந்துகிட்டு இருந்தவன்.

நம்ம தளத்தை வாசிக்க ஆரம்பிச்ச நாள் முதல், எனக்குள் புதைந்து கிடந்த ஆன்மீக தேடல்கள் எல்லாம் வெளியே வர ஆரம்பிச்சிடுச்சுங்க. நம்மை சுற்றி நடக்கும், நாள் கிழமை, பண்டிகைகள் குறித்த விஷயங்கள், முக்கிய விரதங்கள் இவற்றையெல்லாம் தெரிந்துகொள்ளும் ஆர்வம், கடைபிடிக்கவேண்டிய ஆர்வம் பன்மடங்கு அதிகமாச்சு.

முடிந்தவற்றை கடைபிடித்துக்கொண்டு தானிருக்கிறேன். வைகுண்ட ஏகாதசி, தைப்பூசம் போன்ற விசேஷ நாட்களின்போது கோவில்களுக்குக் போவதைப் பற்றி இங்கு கமெண்ட்டில் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

நான் ஏன் இதையெல்லாம் இருக்குற வேலையெல்லாம் விட்டுட்டு உங்களுக்கு சொல்றேன்னா... கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் நான் எப்பேர்ப்பட்ட பிரச்சனைகள்ள சிக்கியிருந்தேன்லாம் உங்களுக்கு தெரியாது. என் நிலையில் வேறு யாராவது இருந்திருந்தாங்கன்னா... கற்பனை செஞ்சி கூட பார்க்கமுடியலே. ஆனா நான் என்ன செய்தேன் தெரியுமா? ஜஸ்ட் கொஞ்சம் அவனை நோக்கி என் கவனத்தை திருப்பினே. அவன் கிட்டே அழுது புலம்பினேன். அதுக்கு பிறகு நடக்குறதெல்லாம் அதிசயமாவே எனக்கு படுது. உங்க கவனத்தையும் கொஞ்சம் அவனை நோக்கி திருப்புங்க. அப்புறம் பாருங்க. உங்களுக்கே புரியும் ஆண்டவன் எப்பேர்ப்பட்ட கருணாமூர்த்தி என்று!

நல்லோரைக் காண்பதும் நன்று!
நல்லோர் சொற் கேட்பதும் நன்று!!
நல்லோர் குணங்கள் உரைப்பதும் நன்று!!!
நல்லோருன் இணங்கி இருப்பதும் நன்று!!!!

- கோடியில் ஒருவன்

Siva said...

i am reading this blog without fail. my life style is changing... next trip plan ready to Perambakkam,..
thanks guru ji
sivaa
tirupur

Saravanan-Kanchi said...

thanks for the post. Iam also struggling in life. Your post added more belief and confident.
thanks once again
saravanan.kanchi.

Saravanan-Kanchi said...

Thanks for the belief and confident, you have added to my life.

Chitti said...

**நிஜ வாழ்க்கையில் ஒத்திகை என்பது இல்லை. ஒவ்வொரு நாளும் ரியல் ஷோ தான்...அவ்வளவு முக்கியம் நமக்கு ஒவ்வொரு நாளும்.**

உண்மையிலேயே நூற்றுக்கு நூறு உண்மை. நாம் நம் வாழ்க்கையில் எத்தனை நாட்கள் நன்றாக வாழ்ந்திருக்கிறோம்??? நாட்களை கடந்திருக்கிறோம் அவ்வளவு தான் (நான் என்னை போன்றோரை மட்டுமே கூறி உள்ளேன். மற்றவர்கள் என்னை மன்னிக்கவும்).
****
**(ஒருவேளை சோதனையும் சாதனையும் ஒண்ணா தான் வருமா?) **
கண்டிப்பாக அப்படி வந்தால் தான் நமக்கு அந்த சாதனையின் ருசி புரியும். (வெயிலோட அருமை நிழலுக்கு வந்தால் தான் புரியும் என்பார்களே).
****
** COUNT YOUR BLESSINGS; NOT TROUBLES**
ஆம். வாழ்வை நாம் அனு அனுவாக ரசித்து வாழ்வதற்கு இந்த ஒரு குணம் போதும் (நன்றியுணர்வு). Be Grateful always.
நம்மில் பலபேர் இந்த குணத்தின் அருமை புரியாமல் இருக்கிறார்கள்.
****
சரி விஷயத்திற்கு வருவோம்.
நரசிம்ம அவதாரம் சமிப காலங்கலாவே எனக்கு ரொம்ப பிடிக்கின்றது. காரணம், இந்த அவதாரம் தான் என் ஸ்ரீ ராகவேந்த்ரரின் முதல் அவதாரமான பிரகலாதனின் அவதாரத்திற்கு காரணமானவர்.

நான் வாழ்ந்த ஊர் - புவனகிரி - ஸ்ரீ ராகவேந்த்ரரின் பிறப்பிடம். அதனால், எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்.
***
சரி, என்ன சாமியாக வேண்டுமானாலும் இருக்கட்டும். மனதில், பூரணமான நம்பிக்கை வேண்டும். அதற்காகத்தான், நம் ஊரில் இத்தனை சாமிகள். நாம் அவன் மேல் முழுமையான நம்பிக்கை வைத்து விட்டால், நமக்காக அவன் கண்டிப்பாக வருவான். என்ன, அவரவரின் பூர்வ ஜென்ம விதிபயன்களின் படி சில சமயம் கடந்தோ அல்லது உடனடியாகவோ கண்டிப்பாக வருவார் நம்மை காப்பதற்காக.

அப்படிதான், நம் கோடியில் ஒருவனுக்கும் வந்துள்ளார். அதற்காக மிக்க மகிழ்ச்சி.
***
இப்படிப்பட்ட, நல்ல நல்ல பதிவுகளையும், நிகழ்வுகளையும் நமக்கு அளித்து வரும் ஆசிரியருக்கு நன்றிகள் பல.
***
ரிஷி அவர்களுக்கு,
இது போன்ற பக்தர்கள் வாழ்வில் நடந்த அருமையான நிகழ்வுகள் பல போடவும். ஏனெனில், என்னை போன்று அரைகுறையாய் அந்த ஆண்டவனிடம் நம்பிக்கை வைப்பவர்களுக்கு முழுமையாக நம்பிக்கை வளர்வதற்கு ஒரு ஊட்டமாக இருக்கும். மிக்க நன்றி.
***
**சிட்டி**.
ஜெய் ஹிந்த்!!!

Ravi said...

Please publish the following to attract more people..

பண்டைய தமிழக கோயில் இடிக்கப்படுவதை தடுப்போம்!!!!

http://aadalvallan.blogspot.in/2012/03/blog-post_20.html

http://sivathamiloan.blogspot.in/2012/03/blog-post_21.html

dowsarpaandian said...

_/\_ ஓம் சிவசிவ ஓம்_/\_

நம்பினோர் கைவிடப்படுவதில்லை!
இது நான்மறை தீர்ப்பு!

நாம் அவனை நம்பி கையோடு எங்கும் அழைத்து செல்வோம்! அவன் நம்மோடு வருவான்! அருள்வான்! அருள்தருவான்!

வாழ்க வளமுடன்! வளர்க அருளுடன்!

Hari.S said...

சம்மட்டியால் அடிப்பது
இரும்பை ஒரு உபயோக உள்ள பொருளாய் மாற்ற தான் ....
கஷ்டங்கள் தரும் இறைவனும் அதற்காகத்தான்
வலிகள் தாங்கும் பொது பல வழிகள் பிறக்கும்
பகவத் கீதை
கூறுவது போல்
எது நடக்க இருக்குமோ அது நன்றாக நடக்கும்
நம்பிக்கை தான் வாழ்கை ...
நடப்போம்

Gnana Boomi said...

மிக அருமையான பதிவு. மிக்க நன்றி. நம்பினோர் கைவிடப்படார், ஆண்டவன் சோதிப்பான், ஆனா கை விட மாட்டன் - இதெல்லாம் உண்மையே.

@ நாஞ்சில் கண்ணன் அவர்களே,
நரசிம்ஹர் கஷ்டபடுத்துவதில்லை, ஆனால் பக்தன் தன்னை உளமார அழைக்க ஆவலாய்க் காத்திருக்கிறார். ப்ரஹலாதனுக்கும் பல சோதனைகளைக் கடந்தே காட்சி கிடைத்தது. ஒரு சுவையான நிகழ்வை இங்கே கொடுத்திருக்கிறேன். அன்பர்கள் படித்து மகிழக் கோருகிறேன்.

http://www.gnanaboomi.com/2012/02/blog-post_22.html

அன்புடன்
ஞானபூமி.காம் குழு

Anonymous said...

very well written. it gives positive energy to all the readers.

கோடியில் ஒருவன் said...

@ ஞானபூமி.காம் குழுவினர் கவனத்திற்கு.....தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். தற்போது தான் தங்கள் பின்னூட்டத்தை பார்த்தேன். தாங்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ள ஞானபூமி.காம் குழு நண்பர்களுக்கு என் அன்பான நன்றிகள்.

நீங்கள் இங்கு அளித்த லிங்க்கை செக் செய்த போது அது வேலை செய்யவில்லை. இருப்பினும் தேடல் உள்ளவர்களுக்கு தேடிய பொருள் கிடைக்காது இருக்குமா?

அநேகமாக நீங்கள் மேலே பின்னூட்டத்தில் கூறிய அந்த சுவையான நிகழ்வு இது தானே?
http://www.gnanaboomi.com/பக்தி மணம் – ஸ்ரீ பெரியதாச

மஹா பக்த விஜயம் நூலை நான் ஏற்கனவே படித்திருந்தாலும், என் நரசிம்மனின் திருவிளையாடலை மற்றுமுறை படிக்கச் செய்தமைக்கு என் கோடானு கோடி நன்றிகள்.

பெரியதாசரையாவது கழுவில் தான் ஏற்றினார்கள்... ஆனால் என் எதிரிகள் என்னை நடுத் தெருவில் அல்லவா துகிலுரித்துவிட்டார்கள்... இப்போது நினைத்தாலும் நெஞ்சு பதறுகிறது. என் உயிரை மாய்த்துக்கொள்ளாமல் இன்று நான் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன் என்றால் அதற்க்கு காரணம் என் நரசிம்மனின் கருணை தான்.

இதுவே பெரியதாசரின் காலமாக இருந்திருந்தால் சவுக்கோடு கிளம்பியிருப்பான். இப்போது அவன் அப்படி கிளம்பினால் மஹா பாபிகளுக்கு கூட அவன் தரிசனம் கிடைத்துவிடுமே. ஆகையால் யோசிக்கிறான் போல.

ஆனால் மேற்கூறிய சம்பவம் நடைபெற்றபோது நான் இருந்த நிலை வேறு. இப்போது என் நரசிம்மன் என்னை வைத்திருக்கும் நிலை வேறு. நாளை வைக்கப்போகும் உயரம் வேறு.

வாழ்ந்துகாட்டுவதை விட பழிவாங்கும் செயல் எதுவும் இல்லை என்பதை அவன் அறியாதவனா? ஆகையால் என்னை நிச்சயம் வாழ்வாங்கு வாழவைப்பான் என்பதில் ஐயமில்லை.

- கோடியில் ஒருவன்

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com