Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

சிவராத்திரியன்று- வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுட்ட பாட்டி!

| Feb 27, 2012



நமது பதிவுகளை ஆரம்ப காலத்தில் இருந்து படித்தவர்களுக்கு, நான் பல கட்டுரைகளில் அடிக்கடி குறிப்பிடும் அன்னை பத்திரகாளி அம்மனைப் பற்றி தெரிந்து இருக்கும். 


மிகச் சிறிய கோவில் என்றாலும், தன்னை நாடி வரும் , ஏன் நினைத்த மாத்திரத்திலேயே அவர்களின் குறை தீர்க்கும் - அற்புதம் நிகழ்த்துபவள் அன்னை.

நம் வாசகர்கள் , யாரேனும் அற்புதம் நிகழ்ந்தால் ஒழிய - இந்த பிரச்னைகள் தீராது , என்று அனுதினம் போராடிக்கொண்டு இருப்பவர்கள்- அவசியம் ஒருமுறை இந்த அம்மனை தரிசித்து வாருங்கள்..!

என்னுடைய சொந்த அனுபவத்தில் - நான் நினைத்துப் பார்க்க இயலாத அளவுக்கு சில இன்னல்களை சுமுகமாக தீர்த்து வைத்தது அன்னையின் பெருங்கருணை.....! இங்கு அம்மன் பாதத்தில் வைத்து தரப்படும் - மஞ்சள் காப்பை தினமும் என் நெற்றியில் வைத்துவிட்டு தான் வீட்டில் இருந்து வெளியே கிளம்புவது என் வழக்கம்....!

அம்மன் நிகழ்த்தும் அற்புதங்களை நான் எனக்கு வேண்டியவர்களிடம் சொல்லி - அவர்களும் இன்று தத்தம் குலதெய்வத்துக்கு இணையாக வணங்கிக் கொண்டு இருக்கிறார்கள்..!

அங்கு வருடா வருடம் - சிவராத்திரியன்று நிகழ்த்தப் படும் இந்த நிகழ்ச்சி - பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கும்..!

நாங்களும் போகாத கோவில் இல்லை, வேண்டாத தெய்வம் இல்லை என்று - ஆனால் - இன்னும் இறையருளை நம்பி - வாழ்க்கை நடத்துபவர்கள் - அவசியம் இங்கு ஒருமுறை வந்து செல்லவும்....!

கிராமம் தோறும் இருக்கும் ஏதோ ஒரு சாதாரண கோவில் இல்லை இது. உலகம் முழுவதும் வியாபித்து இருக்கும் அன்னை சக்தி - இங்கு மகிழ்ச்சியுடன் அமர்ந்து அருள் பாலித்துக் கொண்டு இருப்பதை , நீங்களே உணர முடியும்.

இந்த வருட சிவ ராத்திரி நிகழ்வை பற்றி , தினமலர்  நாளிதழில் வந்த செய்திக் குறிப்பு  - நம் வாசகர்களுக்காக.. :
================================================================
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலில் நடந்த சிவராத்திரி விழாவில், கொதிக்கும் நெய்யில், மூதாட்டி கையால் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடந்தது. சிவராத்திரி அன்று ஸ்ரீவி., முதலியார் பட்டி தெருவில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில், கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுடும் நிகழ்ச்சி, 50 ஆண்டுகளாக நடந்து வருகிறது. நேற்று முன் தினம் நடந்த விழாவில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தன. இதன் முக்கிய நிகழ்ச்சியான நெய்யில் கையால் அப்பம் சுடும் நிகழ்ச்சி, நள்ளிரவு 12 மணிக்கு நடந்தது.

இதற்காக ஸ்ரீவி., ஊரணி பட்டியை சேர்ந்த, 78 வயதான முத்தம்மாள், 90 நாள்கள் விரதமிருந்து, அம்மனுக்கு சார்த்தப்பட்ட புடவையை அணிந்தப்படி,கோவில் வளாகத்தில் அடுப்பு மூட்டி, பக்தர்கள் மாவை பிசைந்து கொடுக்க, அதை கொதிக்கிற நெய்யில் போட்டார். பின் கரண்டி பயன்படுத்தாமலேயே கையால், அப்பத்தை புரட்டி போட்டு வேக வைத்தார். அப்பம் வெந்தவுடன் கையினால் வெளியில் எடுத்தார்.இந்த அப்பங்கள் அம்மனுக்கு படையலிட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
 
கையால் கொதிக்கிற நெய்யில் அப்பம் சுட்டு எடுத்தது, பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இதை காண சுற்று கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.


ஆதாரம்  : தினமலர் 






நமது சென்ற வருட பதிவை மீண்டும் படிக்க  இங்கே க்ளிக் செய்யவும்.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தகவலுக்கு நன்றி நண்பரே !

கிருஷ்ணா said...

அதே கொதிக்கும் நெய்யை குடிப்பாங்களா பாட்டி ???

Rishi said...

கிருஷ்ணா சார் ! அவங்க நெய்யைக் குடிப்பாங்களான்னு எனக்குத் தெரியாது. ஆனா, இதெல்லாம் ஏதோ டுபாக்கூர் சமாச்சாரம் மாதிரி , கிண்டல் பண்றீங்களோன்னு நினைக்கிறேன்... நீங்க கோவிலுக்குப் போக நேர்ந்தால் , நீங்களே அந்த பாட்டிக்கிட்ட கேட்டுப் பாருங்க அந்த கேள்வியை... ! பெரும்பாலான நேரம் அந்த பாட்டி அங்கே தான் இருப்பாங்க..

redfort said...

Athisiyam aanaal unmai. Ellam amman arul.

கோடியில் ஒருவன் said...

கல்வி அறிவற்ற, எழுத்து வாசனையே அறியாத ஆடு மேய்க்கும் காளிதாஸை மகாகவி காளிதாஸ் ஆக்கியவள் அந்த அன்னை. சுடும் நெய்யில் கையை விடும் அந்த மூதாட்டியின் கைகளை காக்கவா அவளுக்கு தெரியாது?

இது குறித்து சந்தேகம் கொள்பவர்களுக்கு ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

உதாரணத்திற்கு, கீழ்கண்ட கதையை படியுங்கள். உங்களுக்கு புரியும்.

ஒரு முறை நாரதர் பூலோகத்திற்கு வந்தபோது, நாராயணிடம் பெரிதும் அன்பும் பக்தியும் கொண்டிருந்த ஒரு ஏழை விறகுவெட்டி ஒருவனையும், வாதத்தில் வல்ல ஒரு பகுத்தறிவுவாதியையும் சந்திக்க நேர்ந்தது.

அனைத்து விஷயங்களும் அவர்கள் நாரதரிடம் பேசிக்கொண்டிருந்தனர். இறுதியில் பகுத்தறிவுவாதி ஒரு ஐயம் ஏற்பட்டது. "உங்கள் இறைவன் இருக்கிறானென்றே வைத்துக்கொள்வோம். அவன் தற்போது அவன் என்ன செய்துகொண்டிருக்கிறான் என்று கூறமுடியுமா?" என்று நாரதரிடம் ஒரு கேள்வி எழுப்பினான். பகுத்தறிவுவாதி கேள்வி கேட்டதை பார்த்ததும், விறகுவெட்டிக்கும் பகவான் தற்போது என்ன செய்துகொண்டிருப்பார் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது.

இருவரின் ஆர்வத்தையும் உணர்ந்த நாரதர், ஒரு கணம் கண் மூடி பாற்கடலில் துயில் கொண்டுள்ள பரமாத்மாவை தியானித்தார். பின்னர் கண் திறந்து, பகுத்தறிவுவாதியிடம், "பகவான் தற்போது ஊசி ஒன்றின் காதல் யானையை நுழைத்து நுழைத்து வெளியே எடுக்கும் விளையாட்டை விளையாடிக்கொண்டிருக்கிறார்" என்றார்.

இதைக் கேட்டதும், பகுத்தறிவுவாதி சிரித்தான். "ஊசியில் நூலை நுழைப்பதற்க்கே படாத பாடு படேவேண்டியிருக்கிறது. இதில் யானையை எப்படி நுழைப்பதாம்? நல்ல சுத்தீறங்க சார் காதுல பூவை" என்றான் ஏளனமாக சிரித்துக்கொண்டே.

விறகு வெட்டியோ, "அவன் செஞ்சாலும் செய்வான். மாயக்காரனாச்சே அவன். அவனால முடியாததுன்னு ஏதாவது இருக்கா என்ன??" என்றான் இறைவனின் விளையாட்டை என்னை வியந்துகொண்டே.

நாரதர் சிரித்தார். பகுத்தறிவுவாதியிடம் திரும்பி, "உன் வாழ்க்கையில் எதுவெல்லாம் நடக்கூடியதோ அது மட்டுமே நடக்கும்." என்றார். விறகுவெட்டியிடம், "உன் வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்கும். எதுவெல்லாம் நடக்கக்கூடியதில்லை அதுவெல்லாம் கூட உன் வாழ்வில் நடக்கும். நாராயண... நாராயண..." என்று ஆசி கூறிவிட்டு மறைகிறார்.

So, அற்புதமோ அதிசயமோ அதை மனப்பூர்வமா நம்புறவங்களுக்கு அது நிச்சயம் நடக்கும். நம்பாதவங்களுக்கு நடக்கவே நடக்காது.

- கோடியில் ஒருவன்

PALANI said...

ohm sakthi ohm

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com