Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

சிவ ராத்திரி !

| Feb 17, 2012
நீயெல்லாம் ஒரு துரும்புக்கு சமம், தெரிஞ்சுக்கோன்னு இயற்கை நம்மளை புரட்டிப் போடுறதுக்கு ஒரு நிமிஷம் ஆகாது.. ஆனாலும், "விடாப் பிடியா, நாமளும் வாழ்ந்து காட்டுவோம்" ன்னு இருக்கிறோம்... எல்லோருமே ஜெயிச்சுக் காட்டணும்னு தான் போராடுறாங்க... என்னாலே முடியலையா, என் பசங்களாவது ஜெயிக்கணும்னு முயற்சி பண்ணுறாங்க...

எதுக்கு...?
ஒரு நாலு பேரு நம்மளைப் பத்தி நாலு வார்த்தை நல்ல விதமா பேசணும்னு... அம்புட்டுதான்... அந்த நாலு பேரு, நம்ம அம்மா அப்பா , மனைவி, குழந்தையா இருக்கலாம்... இல்லை, காசு கூட வாங்காம, நம்மளை கடைசியா தூக்கிட்டுப் போறவங்களா கூட இருக்கலாம்.. 
கூட்டிக் கழிச்சுப் பார்த்தா , மனுஷன்னு இல்லை எந்த ஒரு ஜீவனுமே ஏங்குகிறது, பாசத்துக்கும், அங்கீகாரத்துக்காகவும்தான்.  நீங்க வீட்டுல வளர்க்கிற ஒரு பூச்செடியில இருந்து, நாய்க் குட்டி வரைக்கும்.... இதுங்களே இப்படின்னா? அப்போ மனுஷனா பிறந்த நாம? 

தட்டிக் குடுத்து வேலை வாங்குறயா... உசுரைக் கொடுத்து வேலை பாப்போம்யா... .... மவனே தட்டி வேலை வாங்கினே...? சமயம் பார்த்து காலை வாருறது மட்டுமா... முதுகுலே கூட குத்தி தூக்கிப் போடுவோம்லே... நாங்கள்லாம் யாரு..?


சிங்கம்டா...... சிங்கம்.... இதுதான் மனிதன். அது உங்க கம்பெனி MD யா இருந்தாலும் , இல்லை உங்க வீட்டு கழிவறையை சுத்தம் பண்றதுக்கு வர்ற ஆளா இருந்தாலும்.... 

எதுக்காக நாம ஆளுக்கு ஏத்தமாதிரி, நம்ம மனசு சொல்றமாதிரி மத்த ஜீவ ராசிகளை ஏத்த இறக்கமா பார்க்கிறோம்னு தெரியலை.... நம்ம மனசு சொல்றதையும் மீறி, எச்சரிக்கை பண்றதையும் மீறி எவ்வளவோ விஷயங்களை செய்றோம்... ஆனா, ஜாதி, மதம் , அற்ப ஜீவ ராசிகள்னு ஏன் ஒரு பாகு பாடு நமக்கு ....?
நாம அவங்க நிலைமைல இருந்தா.. இதே மாதிரி ஒரு மதிப்பு நமக்கு கிடைச்சா.., நாம தாங்கிக் கொள்ளும் பக்குவத்தில இருக்கிறோமா? நிச்சயமா இல்ல. அப்போ, நாம ஓரளவுக்கு நல்ல நிலைலே இருக்கிறோம்... இது இயற்கையோ, கடவுளோ நமக்கு கொடுத்த பிச்சை. இந்த நிலை தொடர்ந்து நீடிக்க வேண்டாமா?  எல்லோரையும் மதிக்க தொடங்குவோம்...
இயற்கை நம்மளை படைச்சதே அதுக்குத்தான்...  அதன் பிறகு நாம இயற்கையை மதிக்க தொடங்குவோம். ஆமா, கடவுளைத் தான்.....

கடவுள் அருள் நமக்கு நிச்சயம் கிடைக்க செய்வது , இந்த சிவ ராத்திரி நன்னாள். சிவ ராத்திரியில் வேறு என்ன விசேஷம்..?


====================

ஒரு கிரிக்கெட் மாட்ச் நடக்குது.... கடைசி பால். நாலு ரன் அடிச்சா வின். எப்படி இருக்கும் நமக்கு...? பந்து போடுறவருக்கும்... பேட் பண்றவருக்கும், அங்க உட்கார்ந்து , இல்லை நம்மளை மாதிரி டிவில வேலை வெட்டி மறந்துபார்க்கிறவங்களுக்கும்...?  

அப்படியே இருக்கை நுனில உட்கார்ந்து பார்ப்போம். கடைசி வாய் சாப்பாடு கூட அந்த பந்து பார்த்த பிறகுதான் உள்ள இறங்கும்... இல்லையா?

கடைசி பந்து...  பத்து ரன் வேணும்.... எப்படி இருக்கும்?  அட போயா.... முடிஞ்சது மேட்ச்.... நாம தோத்துட்டோம்.... அவன்  நோ பால் போட்டு... அதுல ஒரு சிக்ஸ் அடிச்சு, இல்லை மழை வந்து ... (Duckworth  lewis  method  ) கைவசம் இன்னும் அஞ்சு விக்கெட் இருக்கு ..... அதிர்ஷ்டம் இருந்தாத்தான்.... கடவுள் மனசு வைச்சாத்தான்.... அப்படின்னு நினைப்பு போகும் இல்லையா?

இந்த மாதிரி தான் , நம்ம வண்டி ஓடிக்கிட்டு இருக்கு அண்ணே... அவன் மனசு வைச்சாத்தான் உண்டு....... 


நினைச்ச மாதிரி ஒரு நோ பால்.... அதுல ஒரு ஆறு ரன்.... அடுத்த பால், அதே மாதிரி ஒரு தூக்கி அடிச்ச ஷாட்.... பீல்ட் பண்றவர் 'காட்ச் மிஸ்' பண்ணி , ஒரு பவுண்டரி...... ஹே.... ஜெயிச்சாச்சு....... ஒரே ஒரு சதவீதம் நடக்க வாய்ப்பு இருந்த ஒரு விஷயமா அது நடந்தாச்சு..... எப்படி இருக்கும்?


அந்த மாதிரி, நீங்க நினைக்கிற ஆசை, அபிலாஷை எல்லாம் நடக்க முடியாத ஒரு விஷயமா இருந்தாக் கூட , அதை நடத்தி தரக்கூடிய மாபெரும் சக்தி வாய்ந்த விரதம், இந்த சிவ ராத்திரி விரதம்.....

 அடி மேல அடி வாங்கி தலை குப்புற குழிக்குள விழுந்து கிடந்தாலும், உங்களை சிகரத்தின் உச்சாணிக் கொம்பில் தூக்கி நிறுத்தும் அதி அற்புதமான நாள் ... இந்த சிவ ராத்திரி.....


எதுனாலே.... (இதயத்துல) அப்படி என்ன விசேஷம் ? 


சரி, அன்னைக்கு என்ன பண்ணனும்.... ஒன்னும் பண்ண வேண்டாம்....!


தல , புரியலை... ஒன்னும்  பண்ண வேண்டாமா? ஆணியே புடுங்க வேண்டாம்னு வடிவேல் சொல்ற மாதிரி இருக்கு...! 


அட ஆமாம் .... பாஸு ஒன்னும் செய்ய வேண்டாம்.....

சரி, கோச்சுக்காதீங்க.... கட்டுரையோட முடிவுல, Related  Posts  னு இருக்கு இல்லை, அந்த கட்டுரையை திரும்ப படிச்சுப் பாருங்க... படிச்ச பிறகு, நீங்க என்ன என்ன செய்யலாம்னு உங்களுக்கு தோணுதோ, அதை செய்யுங்க...
கீழே கொடுக்கப் பட்டுள்ள கட்டுரை, இணையத்தில் நம்மளைப் போல ஒரு நண்பர் ஏற்கனவே பதிப்பித்து உள்ளார்... அதை அப்படியே வழி மொழிகிறேன்....  திரும்ப முடிவுல வர்றேன்.... 
=========================================== 
நமது தேசத்தில் எண்ணற்ற கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு
கொண்டாட்டங்களுக்கும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. உலக அளவில் பல்வேறு விழாக்கள் இருந்தாலும் நமது நாட்டில் கொண்டாடப்படும் விழாக்களின் பின்புலத்தில் எப்பொழுதும் மெய்ஞான காரணம் இருக்கத்தான் செய்கிறது.எளிய மக்களுக்கு மெய்ஞான கருத்துக்கள் புரிவதில்லை என்பதால் அவர்களுக்கு விளக்கவும், சுவாரசியமாக இருக்கவும் கதைகள் மூலம் அவர்களின் ஆர்வத்தை மேம்டுத்தினார்கள். மெய்ஞான கருத்தை அறிய முடியாத சிலர், அறியாமையில் இருக்கும் மக்களுக்கு சொல்லப்பட்ட கதைகளை பிடித்து தொங்குகிறார்கள். இங்கே மெய்ஞான கருத்து என குறிப்பிடுவது சாஸ்திர ரீதியான தன்மைகளை. விஞ்ஞானத்தை அல்ல.

மனித உடல் இயற்கையானது. மனிதனின் மனம் மற்றும் செயல்களும் இயற்கையை ஒட்டியே செயல்படுகிறது. அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது என கேள்வி பட்டிருப்பீர்கள். அது போல பிரபஞ்சத்தில் என்ன நிகவுகள் இருந்தாலும் அந்த நிகழ்வு நமக்குள்ளும் நடக்கும்.

பிரபஞ்சத்தின் ஒரு புள்ளியில் நடக்கும் நிகழ்வு தனிமனிதனுக்கு உள்ளும்
நடைபெறும். வேண்டுமானால் காலங்கள் வேறுபடலாம். ஆனால் கண்டிப்பாக நடைபெறும்.

மனிதன் பூமியில் வாழ்வதால், பூமி - சந்திரன் - சூரியன் எனும் இந்த மூன்று
பிரபஞ்ச பொருட்களும் மனித வாழ்வில் முக்கிய நிகழ்வுகள் ஏற்படுத்துகிறது.
முப்பரிமாண நிலையில் பூமி-சந்திரன்-சூரியன் ஆகிய கிரகங்கள் மனிதனுக்கு முறையே உடல், மனம் மற்றும் ஆன்மா எனும் நிலையில் செயல்படுகிறது.

பூமியில் இருக்கும் நெருப்பு- காற்று - நீர் - மண் மூலம் நமது உடல் வளர்ச்சி
அடைகிறது. உடலுக்கு பூமியே ஆதாரம். சூரியன் ஆன்மாவிற்கு ஆதாரம் என கூறலாம். காரணம் அது சுயமாக பிகாசிக்கிறது. சந்திரன் தனது நிலையற்ற தன்மையால் மனதை குறிக்கிறார்.

பிரபஞ்ச நிலைக்கும் மனித உடலுக்கும் இருக்கும் தொடர்பை அறிந்த ரிஷிகள், கிரகநிலையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப மனிதனை செயல்படுமாறு வழிநடத்தினார்கள். இந்த வழிமுறையை ஜோதிடம் என்கிறோம்.

மனிதனின் செயல்கள் இரு நிலையில் செயல்படுகிறது. ஒன்று உள் முகமாக, மற்றது வெளிமுகமாக. தியானம், யோக பயிற்சி மூலம் உள்முகமாகவும், உணர்வு-செயல் மூலம் வெளிமுகமாகவும் இருக்கலாம். மனிதர்கள் அதிக சதவிகிதம் வெளிமுகமாகவே இருப்பார்கள்.
 

மனிதன் உடலின் கட்டுப்பாட்டில் இருந்தால் வெளிமுகமாகவும், ஆன்மாவின் கட்டுப்பாட்டில் இருந்தால் உள்முகமாகவும் செயல்படுகிறான். சூரிய மண்டலத்தில் ஏற்படும் சில கிரக நிகழ்வுகள் மனிதனை தன்னிச்சையாக உள்முகமாக்குகின்றன.


 அமாவாசை, பெளர்ணமி நாட்களில் பூமி-சந்திரன்- சூரியன் ஆகியவை ஒருவிதமான கிரக நிகழ்வுகளில் அமைகிறது. இதனால் மனிதன் எந்த விதமான சுயமுயற்சியும் இன்றி உள்முகமாகிறான். இத்தகைய நாட்களில் மனிதன் தனது உடல் செயல் மூலம் வெளிமுகமாக திரும்ப முயற்சி செய்தால் அவனது உடலும், மனமும் சமநிலை தவறுகிறது.

மனிதன் சமநிலை தவறாதவண்ணம் அவனை உள்முகமாகவே வைத்திருக்க ஆன்மீக செயலில் ஈடுபடுத்த நமது முன்னோர்கள் ஏற்படுத்தியது தான் இந்த கொண்டாட்டங்கள். ஒவ்வொரு மாதமும் வரும் பெளர்ணமியை கவனியுங்கள், சித்திரா பெளர்ணமி - வைகாசி விசாகம் என
அனைத்து பெளர்ணமியும் ஏதோ இரு விசேஷ தினமாக கூறி அன்று கோவிலுக்கு செல்லும் சூழலை அமைத்தார்கள். ஆனால் இன்று நடப்பதோ வேறு பெளர்ணமி நல்ல நாள் என திருமணம்,
தொழில் துவங்குதல் என வெளிமுகமான விஷயங்களை மக்கள் செய்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டியது.

 அமாவாசை, பெளர்ணமியில் ஏற்படும் நிகழ்வுகள் போன்று பிற நாட்களிலும் சூரியன் சந்திரன் பூமியின் நிலை மனிதனை உள்முகமாக செயல்படுத்தும் நிலை ஏற்பட்டால் அன்றும் மனிதன் உள்முகமாக இருக்க முயல வேண்டும். மாதா மாதம் வரும் ஏகாதசி, திரயோதசி காலங்கள். வருடத்தில் வரும் கிரகண காலம் மற்றும் மஹாசிவராத்திரி தினங்கள் ஆகியவை மனிதனை உள்முகமாக்க தன்னிச்சையாக செயல்படும்.
 

ஆன்மாவை குறிக்கும் சூரியனும், மனதை குறிக்கும் சந்திரனும் இன்று மட்டும் தான் தங்களின் சுயராசிகளை நேரடியாக பார்ப்பார்கள். சூரியன் (கும்பத்தில் இருந்து - சிம்ம ராசியையும், சந்திரன் மகரத்தில் இருந்து - கடக ராசியையும் பார்க்க விருக்கின்றனர்). 


யோக சாஸ்திர ரீதியாக சூரியன் மற்றும் சந்திரன் இடது , வலது நாடிகளை குறிப்பதால் நாடிகளின் சலனமும் அன்றைய தினம் ஏற்படும். நாம் சுவாசிக்கும்போது, மூக்கின் இரண்டு துவாரங்களில் - ஒவ்வொரு குறிப்பீட்ட நேரத்துக்கும், ஒரு துவாரம் வழியாகவே , காற்று - போகவும் முடியும், வெளியேறவும் முடியும். சிறிது நேரம் கழித்து , அது மாறும். உங்கள் மூக்கின் ஒரு துவாரத்தை அடைத்து , கவனித்துப் பாருங்கள். இதன் பின் மிகப் பெரிய சூட்சுமம் இருப்பதை, நம் சித்தர் பெருமக்கள் நன்கு உணர்ந்து உள்ளனர்.
 

சூரியனும் சந்திரனும் இன்று இரவு தங்களில் நிலையை படிப்படியாக மாற்றி சூரியனை சந்திரன் தழுவிய வண்ணம் இடமாற்றம் அடையும். சூரிய மண்டலத்தின் ஆன்மாவும் , மனதும் தங்களின் நிலையில் மாற்றம் அடைவதால் மனிதனின் ஆன்மாவும் - மனமும் மாற்றம் அடையும். 


அன்றைய தினம் உடலுக்கு (பூமிக்கு) வேலை கொடுக்காமல், உடலை
இயற்கையாக விட்டு உள்நிலையை கவனித்தால் ஆன்மீக மேன்மை ஏற்படும்.

உணவு உண்ணாமல், உறங்காமல் இருப்பது உடல் செயலை தவிர்க்கவே மேற்கொள்ளப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் பலர் இரவில் சினிமாவுக்கு செல்லுவதும், கொண்டாட்டங்களில் ஈடுபடுவதும் செய்கிறார்கள். அது தவறான செய்கை என நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

சிவ எனும் சொல் அழகு அல்லது இயற்கை என்றும் பொருள்படும். அன்று இரவு உன்னதமான இயற்கை நிலையை காண உடல் தயார் நிலையில் இருப்பதால் சிவ ராத்திரி என அழைக்கப்படுகிறது.

சூரியன் சந்திரன் பூமி என்பது தனி ஒரு மனிதனுக்கோ, மதத்திற்கு செயல்படுவதில்லை. அதுபோலவே மஹாசிவராத்தரி “இந்துக்கள்” பண்டிகை அல்ல.

ஆன்மாவிற்கான கொண்டாட்டங்கள்.
ஆன்மாவில் கொண்டாடுங்கள்.
ஆன்மாவாய் கொண்டாடுங்கள்.
ஆன்மாவை உணர இன்றைய நாளை பயன்படுத்தி ஆன்மீகனாகுங்கள்.


 நன்றி :  சுவாமி ஓம்கார். (vediceye)

=============================================


இந்த விவரம் எல்லாம் தெரியாமலேயே , அந்த சிவனால் ஈர்க்கப் பட்டு , சென்னைல படிக்கிற காலத்துலேயே, பச்ச தண்ணி பல்லுல படாம விரதம் இருந்து இருக்கிறேன் நானு. இளமை காலம் அது. 


முடிஞ்ச அளவுக்கு ஒவ்வொரு வருஷமும் இருக்கிற வழக்கம். 


ஒரு தடவை , எங்க அம்மாவையும் கூட்டிக் கிட்டு (65 வயசு இருக்கும் அவங்களுக்கு அப்போ..) சிவ ராத்திரி அன்னிக்கு, அண்ணாமலை போயி , கிரிவலம் வந்துக் கிட்டும் இருந்தேன்.... உடம்புல சுத்தமா எனெர்ஜி இல்லை. ஆனா, அம்மா, இந்த வயசுலேயும் உற்சாகமா நடந்து வர்றப்போ, உலகத்துக்கே தகப்பன் அருணாச்சலம் நம்மை பார்த்துக் கிட்டு இருக்கிறப்போ.... நமக்கு என்ன குறை? இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமா கெஞ்சுது காலு.....

அப்போ , நடந்தது   அந்த விஷயம் ....... நான் ஒரு வேளை இப்படி ஆவேன்னு நினைச்சு, எங்க கூட வந்த ஒரு அம்மணி ....... ஒரு தூக்கு வாளி நிறையா, பழங்களை நாட்டுச் சர்க்கரை எல்லாம் போட்டு, பஞ்சாமிர்தம் மாதிரி பண்ணி.... வயிறு நிறைய சாப்பிட கொடுத்தாங்க..... உண்மையிலேயே அமிர்தம்.....! அந்த அன்னபூரணியே வந்து புள்ளைக்கு கொடுத்த மாதிரி இருந்தது...... (அடியேன், அன்ன பூரணிக்கும் அதற்க்கு முந்தைய மார்கழி மாதம் விரதம் இருந்தேன்... அன்னபூரணி விரதம் எப்படின்னு இன்னொரு கட்டுரையில் பார்க்கலாம்)


அந்த தினத்துக்கு பிறகு, என் வாழ்க்கை அப்படியே " U " டர்ன் எடுத்தது போல ஏறுமுகமாக இருந்து கொண்டு இருக்கிறது...... இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை என்று இருந்த நிலைமை மாறி, இழந்த அனைத்தும் பல மடங்காக வட்டியும், முதலுமாய் திரும்பி வந்தால் எப்படி இருக்கும்? எல்லாம் அண்ணாமலையாரின் கருணை.


இதில் மிகப் பெரிய ஆச்சர்யம்.... சில வாரங்களுக்குப் பிறகு, அந்த அம்மணியை சந்தித்த போது, அவர்கள் சரியான சமயத்தில் அளித்த அந்த பஞ்சாமிர்தத்துக்கு , சம்பிரதாயமாக இல்லாமல், நிஜமாகவே நன்றி கூறினேன். 

சாப்பிடாமலே இருந்து, உடம்பை ரொம்ப வருத்தி எனெர்ஜி கம்மி ஆகினா ரத்தத்துல, சுகர் கம்மி ஆகிடுமாம்ல.  உடனே ஒரு கடலை மிட்டாயாவது சாப்பிடனுமாம். அதுக்குத்தான் நாட்டு சர்க்கரையோ....?


அவங்க கூலா ஒரு விஷயம் சொன்னாங்க...! "அட போங்க சார்..! இப்படியே கிண்டல் பண்றதே உங்க பொழைப்பா போச்சு..... யாருக்காவது உதவும்னு தான் நானும் எடுத்திட்டு வந்தேன். 'வேன்'ல வரும்போதே , நீங்க சாப்பிடுறீங்களா ன்னு எத்தனை தடவை கேட்டேன்? மாட்டவே மாட்டேன்னு சொன்னீங்க.  நான் கொண்டு வந்ததை, ஊர்ல இருந்து , அண்ணாமலை வர்றதுக்குள்ளே , என் பசங்களே சாப்பிட்டு முடிச்சிட்டாங்க... நான் எங்க இருந்து , உங்களுக்கு கொடுக்கிறது?"


ஹா, ஹா... அதனாலே என்ன இருக்கு? அடுத்த தடவை எடுத்திட்டு வாங்க.. அப்போ சாப்பிட்டுக்கலாம்னு சொல்லி , சமாளிச்சு அங்க இருந்து கிளம்பிட்டேன்.....


அப்போ, அன்னைக்கு சாப்பிட சொல்லிக் கொடுத்தது....? 


ஒருவேளை மன பிராந்தியா , விஸ்கியா இருக்குமோ ..? 


நீங்களும் விரதம் இருந்து பாருங்க நண்பா...... எல்லா நாளும், அவனை நம்மாலே நினைக்க முடியுமோ முடியாதோ.... இந்த மாதிரி குறிப்பிட்ட சில நாட்களை தவற விட வேண்டாம்...... 

கிடைக்கிற கடைசி பந்து சிக்ஸ் போறது முக்கியம் இல்லை . அது கேம் முடிக்கிற வின்னிங் ஷாட்டா இருக்கணும்.... இந்த வருஷம் முழுக்க அமோகமா அமைய, இந்த சிவ ராத்திரி விரதம் உங்களுக்கு பலன் கொடுக்கும் என நம்புங்கள்... நிச்சயம் நடக்கும்..... !

அன்னபூரணியின் அரவணைப்பு நம் அனைவருக்கும் கிடைக்கட்டும்...!


========================================

பினிஷிங் டச்   :

கடவுள்னு ஒருத்தர் நிஜமாவே இருக்காரா? அப்படியே இருந்தா, அவரு ஏன் இப்படி இருக்கணும்? ஒருத்தர்  தலைல பாம்பு வைச்சுக்கிட்டு இருக்காரு. ஒருத்தர் அதுல படுத்து இருக்காரு. ஒருத்தர் அதை இடுப்புல கட்டிக்கிட்டு இருக்காரு. ஒருத்தர் யானை முகம் வைச்சு இருக்காரு. எலியாம், புலியாம், காளை மாடாம் , மயிலாம்... இதுல எல்லாம் தான் அவங்க வருவாங்களாம்...

ஒவ்வொருவருக்கும் ஒரு நூறு கதை வைச்சு இருக்கிறாங்க..... எதைக்  கேட்டாலும் ஒரு விளக்கம்...  விளக்கம் இல்லைன்னு நினைச்சா, ஏண்டா இப்படி பய பக்தி இல்லாம பேசுற..? சாமி கண்ணைக் குத்திடும்ங்கிற சின்னப் புள்ளைத்தனமான  பயமுறுத்தல் வேற.

அட, பின்னே என்ன சார்.... ! நியாயம் தானேன்னு தோணுதா..?

நம்ம இந்து மதம்ங்கிறது, எத்தனையோ ஆயிரக்கணக்கான வருடங்கள் , ஏன் கோடிக்கணக்கான வருடங்கள் முன்னாலே கூட தோன்றியதா இருக்கலாம்... யுகம், யுகமா தொடர்ந்து வருது.. எல்லாம் உண்மையா கூட இருக்கலாம். இல்லை, கோடிக்கணக்கான திரிபு நடந்து இருக்கலாம். நாம அதை ஆராய்ச்சி பண்ணி என்ன பண்ணப் போறோம்?

எல்லாத்தையும், தூக்கி தூரப் போட்டுட்டு, முதல்ல நாம யாருங்கிறதை கண்டுபிடிங்க... நம்மோட பூர்வ ஜென்மத்தை பொறுத்துத் தான் இந்த ஜென்மம் ... இந்த ஜென்மம் எப்படிங்கிறதை வைச்சுத்தான், அடுத்த ஜென்மம்... இதை நாம எல்லோரும், வாழ்க்கையிலே எப்போவோ ஒரு தடவையாவது, உணர்ந்து இருப்போம்....

சம்பந்தமே இல்லாம யாரோ ஒருத்தரை, முதன் முதலா பார்க்கும்போதே ஒரு ஈர்ப்பு வரும்... இன்னொருத்தர் , நிஜமாவே நல்லவரா இருப்பார்..... ஆனா, அவரைப் பார்த்தாலே ஆத்திரம், ஆத்திரமா வரலாம்....

நீங்க பிறந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டுல பிறந்த ஒருத்தர், சொத்து , சுகம்னு ஓகோன்னு இருக்கலாம். இந்த பக்கத்து வீட்டுல பிறந்தவர் , உங்களை விட மோசமான நிலைல இருக்கலாம்....

ஊரு, உலகத்துல - எத்தனையோ நாடு இருக்குது, ஊரு இருக்குது.. எல்லாத்தையும் விட்டுட்டு நம்ம ஊர்ல - நம்ம வீட்டுல வந்து ஏன் பிறந்து இருக்கணும்? எங்கே இருந்து வர்றோம்.. பெரிய பெரிய ஆளுங்க சொல்ற மாதிரி - அழிவு உடலுக்கு மட்டும் தானோ..? ஆதமா அப்படின்னு ஒன்னு இருக்கோ..? அது தான் நாமோ..?

ஊர் உலகத்துல எத்தனையோ பொண்ணுங்க இருக்கும்.. உங்க வீட்டுக்கார அம்மணி எங்கேயோ பிறந்து - வளர்ந்து ,  எப்படியோ உங்க வாழ்க்கை முழுக்க கூட இருக்கிறாங்களே, இது எல்லாம் எப்படி...?

இது எல்லாம் தான், நம் பூர்வ புண்ணிய வினைகள், மற்றும் இந்த ஜென்ம வினைகள் தீர்மானிக்கிற விஷயங்கள்....

வேலை வெட்டி இல்லைன்னா... என்ன எதுன்னு சிந்திச்சுப் பாருங்க...

இல்லை, நிறைய வேலை இருக்கு, சாதிக்கணும்னு நினைச்சா... இந்த மாதிரி வர்ற அபூர்வ நாட்களை , பயன் படுத்திக்கோங்க.... நிஜமாகவே உங்கள் முயற்சிகள் கைகூடும்.

வெகு சீக்கிரம் என்பது தான் இங்கு முக்கிய விஷயம்.... இந்த விரத மகிமை.

அது , ஏன்.. எப்படின்னு எல்லாம், நமக்கு தெரியாதுங்க... நானும் உங்களை மாதிரி சாதாரண ஆளுதான்... தெரிய வந்தா கண்டிப்பா சொல்றேன்...

=========================

திங்கள் கிழமை - திருவோணம் நட்சத்திரம் (சந்திரனுக்குரிய நட்சத்திரம்) இணைந்து வரும் மகா சிவராத்திரி இது. குரு மகராஜ் ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சர் பிறந்த நாளும் இணைந்து வருகிறது....!


தவறாமல், அந்த சிவத்தை சிந்தனை செய்யுங்கள்... மனமுருக வேண்டுங்கள்.... உங்கள் வாழ்க்கை அமோகமாக மாறுவது நூற்றுக்கு நூறு உறுதி..!

ஓம் சிவ சிவ ஓம்...!

வாழ்க அறமுடன் ! வளர்க அருளுடன் ! 

13 comments:

கிருஷ்ணா said...

////சென்னைல படிக்கிற காலத்துலேயே, பச்ச தண்ணி பல்லுல படாம விரதம் இருந்து இருக்கிறேன் நானு. இளமை காலம் அது. ////

நாங்க எல்லாம் அப்பவே அப்படி ...இப்ப எல்லாம் சொல்லவா வேணும் :)

இரா. வசந்த குமார். said...

Sir,

one basic doubt.

we have to be awake on sunday night or monday night, if monday is mentioned as sivarathiri/vaikunta egadasi?

redfort said...

Dear Sir,

Good Evening.

Toooooooooooo gap for postings.

But latest post.

Thanks

We need Jothida paadangal???????!!!!!!!!!!!!!!!


Regards
Sengo.

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கமான பதிவு ! நன்றி !

கோடியில் ஒருவன் said...

அருமையான பதிவு. சரியான நேரத்தில் சிவராத்திரி பற்றி நினைவூட்டல். ஆசிரியருக்கு நன்றி.

சிவராத்திரி விரதமிருந்து சிவபெருமானை தரிசிப்பது கற்பனைக்கெட்டா நற்பலன்களை ஒருவருக்கு அளித்திடும்.

சிவராத்திரியன்று என்ன செய்யவேண்டும்?

1) சிவபெருமானை தீர்த்தவாரி செய்யவேண்டும்.

2) மணம் மிகுந்த மலரைச் சிவபெருமானின் உச்சி முதல் கால் வரத் தூவவேண்டும். தூவும்போது ஓம் நமச்சிவாய என்று சொல்லவேண்டும்.

3) சிவ நாமம் ஓதிக்கொண்டே வலம் வரவேண்டும். வணக்கம் செலுத்தவேண்டும்.

4) சிவாலயங்களை துடைப்பத்தால் பெருக்கி தூய்மையான ஆடையை அணிவிக்க வேண்டும்.

5) எருக்க மலர் மாலைகளை பெருமான் மீது வட்டமாக அணியவேண்டும்.

6) சிவ தண்டமான கட்டங்களும், கபாலமும் ஏத்தி அவன் புகழ் பாடவேண்டும்.

7) அஷ்டாங்க நமஸ்காரம் ஆண்கள் செய்ய வேண்டும். பெண்கள் ஐந்தங்க நமஸ்காரம் செய்யவேண்டும்.

8) விபூதி அணிந்து சிவனை போற்றவேண்டும்.

இவ்வாறு லிங்க புராணம் கூறுகிறது.

மேலும் திருமணமான பெண்கள் தன்னுடைய கணவன் மற்றும் பிள்ளைகளின் நலனுக்காகவும், திருமணமாகாத பெண்கள் நல்ல கணவன் வேண்டும் என்பதற்காகவும் இந்த விரதத்தை கடைபிடிக்கவேண்டும்.

சிவராத்திரியன்று விரதமிருப்பதால், புத்தி முக்தி கிடைக்கும். அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். கோடி பாவங்களும் தீரும். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

சிவாரத்தியன்று விரதமிருந்து தான் பிரம்மா சரஸ்வதியை பெற்றார். மகாவிஷ்ணு சக்ராயுதம் பெற்றார்.

நன்றி - 17.02.2012 மாலை மலர் சிவராத்திரி இலவச ஸ்பெஷல் இணைப்பு

- கோடியில் ஒருவன்

சரவணன் said...

அய்யா! அவசியமான கட்டுரை! மெய்ஞானம் மட்டுமல்ல விஞ்ஞானமும் கலந்துது நமது புராணங்களும் இதிகாசங்களும்....இந்த கட்டுரையுடன் சில தகவல்களும் சேர்ந்து இருப்பின் என்னை போன்ற புதியவர்களுக்கு வழி காட்டியாக உறுதுணை புரியும்.
A) எப்பொழுது உண்ணா நோன்பு துவங்கி எப்பொழுது முடிக்க வேண்டும்? B) மேலும் உண்ணா நோன்பு துவங்கும் பொழுது என்னன்னா செய்ய வேண்டும் C) மற்றும் உண்ணா நோன்பு எவ்வாறு முடிக்க வேண்டும்? D) திங்கட்கிழமை முழுவதும் நீர் கூட பருகக்கூடதா? (ஏன்னெனில் விரதம் இருப்பது இதுவே எனது முதல் முறை)...மற்றும் வேறு ஏதும் தகவல் இருப்பின்......

கோடியில் ஒருவன் said...

நண்பர் சரவணன் அவர்களின் கேள்விக்கு பதில் இதோ.

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி ?

நம் ஆசிரியர் இது குறித்து பதிவளிப்பார் என்று நம்புகிறேன். இருப்பினும் எனக்கு தெரிந்தவற்றை கூறுகிறேன்.

A) எப்பொழுது உண்ணா நோன்பு துவங்கி எப்பொழுது முடிக்க வேண்டும்?

திங்கள் கிழமை அதிகாலை எழுந்து நீராடிவிட்டு அன்று முழுதும் விரதம் இருக்கவேண்டும். மதியம் உறங்கக்கூடாது. பக்திபடங்கள், பாடல்கள் கேட்கலாம். படிக்கலாம். சிவராத்திரியன்று மாலை 5.30 க்கு முதல் கால பூஜையை துவக்கிவிடுவார்கள். அதற்க்கு பிறகு தொடர்ச்சியாக பூஜைகள் நடைபெறும். போகும்போது சிவாலயத்திற்கு வில்வ இலை மற்றும் இதர புஷ்பங்களை அவரவர் சக்திக்கேற்ப வாங்கி செல்லவேண்டும்.

B) மேலும் உண்ணா நோன்பு துவங்கும் பொழுது என்னன்னா செய்ய வேண்டும்

உண்ணாவிரதத்தை துவங்கும்போது தீருநீறந்து, தூய்மையான நாகரீகமான ஆடைகள் அணிந்து அவரவர் வீட்டில் உள்ள பூஜையறையில் சுவாமியை வழிபட்டுவிட்டு துவக்கவேண்டும்.

C) மற்றும் உண்ணா நோன்பு எவ்வாறு முடிக்க வேண்டும்?

திங்கள் மாலை சிவாலயம் சென்று அங்கு தொடர்ச்சியாக நடக்கும் நான்கு கால் பூஜைகளிலும் பங்கேற்க வேண்டும். சிவபெருமானுக்கு நடைபெறும் அர்ச்சனை, ஆராதனை முதலியவற்றை பார்க்கவேண்டும். இரவு முழுதும் அங்கேயே தங்கியிருந்து மறு நாள் அதிகாலை நான்காம் கால் பூஜையை பார்த்துவிட்டு திருக்கோவிலை வலம் வந்து அன்னதானம் செய்ய வேண்டும். அன்னதானத்துக்கே பிறகே சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். (அன்னதானத்திற்கு முன்னரே பணம் கட்டிவிடுவது சிறந்தது. கடைசி நேரத்தில் முடிவெடுத்தவர்கள் கலங்க வேண்டியதில்லை. அவரவர் சக்திக்கேற்ப தூய்மையான தரமான உணவுப் பொட்டலங்களை அந்தந்த திருக்கோவில் பிரசாத ஸ்டால்களில் வாங்கி அவற்றை விநியோகிக்கலாம்.)

கோவிலில் சிவனின் பெருமைகளை கூறும் எந்த நூலையும் படிக்கலாம். சிவ சுலோகங்கள் சொல்லலாம்.

D) திங்கட்கிழமை முழுவதும் நீர் கூட பருகக்கூடதா? (ஏன்னெனில் விரதம் இருப்பது இதுவே எனது முதல் முறை).

நீர் பருகுவது அவரவர் சக்தியை பொருத்தது. பருகக்கூடாது என்பது கட்டாயமில்லை. (உடல் நலிவுற்றவர்கள் ஏதாவது ஒரு வேளைக்கு வாழைப்பழம், பால் முதலியவற்றை மிதமாக உட்கொள்ளவேண்டும்.)

- கோடியில் ஒருவன்

ssmani said...

Sir

It is a very good posting.
Let us celebrate "Sivarathri"

NAHARANI said...

thank you very much.. praying for you too towards god for the posting of such a nice articles..

Anonymous said...

om,namahasivaya,OM,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,omnamahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,oMNAMAHASIVAYA,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Nahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,OM,nAMAHASIVAYA,oMnAMAHASIVAYA,oMnamahasivaya,Om,Nahasivaya,Om,Nhasivaya,Om,Namahasivaya,Om,Namhasivaya,Om,Nmahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Nmahasivaya,om,namahasivaya,om,Namahasivaya,OmNamahasivaya,Om,Namahasivaya,O,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,0m,Namahasivaya,Om,Namahasivaya,Om,NamahasivayaOm,Namahasivaya,Om,Namhasivaya,............................................................................................................

R.MRUGESAN said...

om,namahasivaya,OM,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,omnamahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,oMNAMAHASIVAYA,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Nahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,OM,nAMAHASIVAYA,oMnAMAHASIVAYA,oMnamahasivaya,Om,Nahasivaya,Om,Nhasivaya,Om,Namahasivaya,Om,Namhasivaya,Om,Nmahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Nmahasivaya,om,namahasivaya,om,Namahasivaya,OmNamahasivaya,Om,Namahasivaya,O,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,0m,Namahasivaya,Om,Namahasivaya,Om,NamahasivayaOm,Namahasivaya,Om,Namhasivaya,............................................................................................................

R.MRUGESAN said...

om,namahasivaya,OM,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,omnamahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,oMNAMAHASIVAYA,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Nahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,OM,nAMAHASIVAYA,oMnAMAHASIVAYA,oMnamahasivaya,Om,Nahasivaya,Om,Nhasivaya,Om,Namahasivaya,Om,Namhasivaya,Om,Nmahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Nmahasivaya,om,namahasivaya,om,Namahasivaya,OmNamahasivaya,Om,Namahasivaya,O,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,Om,Namahasivaya,0m,Namahasivaya,Om,Namahasivaya,Om,NamahasivayaOm,Namahasivaya,Om,Namhasivaya,............................................................................................................

rosy said...

Dear Sir,
I am daily doing Ganesh pooja at home long back. Now I want to know that which idols (made up) are best for daily pooja at home. kindly clarify my doubt along with pooja rules.
Thanking You,
Regards,
E.Margasagayam.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com