Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

திருப்பம் தரும் தைப் பூச வழிபாடு

| Feb 6, 2012
வாசக நண்பர்களுக்கு வணக்கம். பயணம் வெற்றிகரமாக முடித்து நலமுடன் நேற்று தாயகம் திரும்பினேன். நான் இருந்த ஜெர்மனி பகுதியில் நினைத்துப் பார்க்க முடியாத குளிர். ஜஸ்ட் மைனஸ் 20 டிகிரிதான். செல்லும் சாலையைத் தவிர எங்கு பார்த்தாலும் கண்ணுக்கு எட்டிய வரை பனிப் படிவுகள். மிக வித்தியாசமான , சுவாரஸ்யமான அனுபவம்.... 
கூகுள் புண்ணியத்தில் ஏற்கனவே அங்கு நிலவக்கூடிய சீதோஷ்ண நிலையை , பார்த்து அதற்கேற்ப தயாராக சென்று இருந்தேன்... இருந்தாலும் அது எல்லாம் ஓரளவுக்கே என்பது , அங்கு சென்ற பிறகு தான் உணர்ந்தேன்...
 
 ஓஷோ சொல்லி இருந்த கருத்துப்படி , மனிதனுக்கு இரண்டே வாய்ப்புகள் தான். ஒன்று , இருக்கும்  நிலைமையை , புலம்பிக்கொண்டே புழுங்கிக் கொண்டு எதிர் கொள்வது . இரண்டாவது , அதை மாற்ற முடியாது என்கிற பட்சத்தில், அதை மன நிம்மதியுடன் அனுபவிப்பது... ...

நான் எதை செய்து இருப்பேன், என்று நீங்கள் யூகித்து இருப்பீர்கள் என நினைக்கிறேன்... Yes ... I  enjoyed  it  thoroughly though  it  was  supposed  to  be  a  huge  shock  for  me .....  !

நிஜமாகவே, என் நிறுவனத்தின் சக நண்பர்கள், என் மனோ தைரியத்தை வியந்து சிலாகித்தார்கள். திடு திப்பென்று , இருக்கும் வெப்ப நிலையில் இருந்து ஒரு அம்பது டிகிரி கீழே இறங்கி , பாதரசம் நிற்பதை  பார்ப்பது ஒரு பரவசம் தான். அந்த சூழலிலும் அங்கு மக்கள் , இயல்பாக இயங்கிக் கொண்டு இருப்பதை பார்த்த போது, நம் ஊர் குளிருக்கு நான் நடுங்கியதை நினைத்தபோது , வாய் விட்டு சிரித்தேன்.... 

கடைசி நிமிடம் வரை, எங்கே விமானம் ரத்து செய்து விடப் போகிறார்களோ என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்... நல்ல வேளை, அப்படி ஒன்றும் நடக்கவில்லை.....!

இன்னைக்கு பார்த்தால்... லண்டனில் விமானப் போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டதாக நண்பர் செய்தி அனுப்பி இருந்தார்... Narrowly  escaped .. I think .

நல்ல சில வித்தியாசமான அனுபவங்களும் கிடைத்தது. நேரம் கிடைக்கும்போது பகிர்ந்து கொள்ள முயற்ச்சிக்கிறேன்...
============================================================
 நாளை தைப் பூசம்.. மிக விசேஷமான நாள். நமது வாசக நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பி இருந்த, மின்னஞ்சலில் இருந்த அந்த சுவாரஸ்யமான பதிவை நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்....

நாளை , ஒரு ஸ்பெஷல் பதிவில் மீண்டும் சந்திப்போம்...!

 
பூமியில் உயிர்கள் உருவாவதற்கு வெப்பமும், குளிச்சியும் தான். எங்கு வெப்பத்துடன் குளிர்ச்சி இருக்கிறதோ அங்கு உயிர் அணுக்கள் உருவாகிறது. அந்த வெப்பத்தை `அக்னி' யாக கொடுத்து வருபவர் `சூரியன்', குளிர்ச்சியை `நீர்' சக்தியாக கொடுத்து வருபவர் சந்திரன். மனிதன் உருவாவவதற்கு அப்பாவும், அம்மாவும் தான் காரணம் என்று நமக்கு தெரிந்தாலும், அப்பா-`அக்னி' வடிவமான சூரியனின் ஆதிக்கமும், அம்மா `நீர்' வடிவமான சந்திரனின் ஆதிக்கம் இரண்டும் இணைகின்ற போது `ஜீவன்' உருவாகிறது.
 
மனிதனுக்கு அப்பா, அம்மா போன்று தான், பூமிக்கு அப்பாவாக சூரியனும், அம்மாவாக சந்திரனும் இருந்து `அக்னி'யையும் நீரையும் கொடுத்து வெப்பத்தையும், குளிச்சியையும் பருவ கால மாற்றத்திற்கு ஏற்றபடி கொடுத்து, காய், கனி, களையும் உணவு, மற்றும் கனிமங்களையும், புழு, பூச்சி, பறவை, மிருகங்கள், மனி தர்கள் என்று பல ஆயிரம் ஜீவராசிகளை உருவா வதற்கு காரணமாக இருப்பவர்கள், சூரியனும், சந்திரனுமே. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதை நமது பல `வேத' சாஸ்திரங்களில் ஆராய்ச்சி செய்து எழுதி வைத்து உள்ளார்கள்.
 
பூமியில் உயிரினங்கள் வாழுவதற்கு சூரியனும், சந்திரனும் தான் என்று உணர்ந்தவர்கள், இதையும் அனைத்து மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தார்கள். இந்த உலகத்துக்கு உயிர்களை உற்பத்தி செய்கின்ற சக்தியாக `ஜீவனாக' இருக்கின்ற சூரியனுக்கு `ஜீவன்' என்றே பெயர் வைத்தார்கள். அது நாளடைவில் பல காலத்திற்கு பிறகு மருவி, மருவி, `சிவன்' என்று ஆனது.
 
`சிவன்' தான் இந்த உலகத்தின் `ஆதி' ஆவார். இதனால் தான் சூரியனுக்கு `ஆதி` என்ற பெயரும் உண்டு. `ஆதிமூலம்' என்ற பெயரும் சிவனையே குறிக்கும். `அப்பா'விடமுள்ள `ஜீவசக்தி'யை `அம்மா' வாங்கி கொண்டு பாதுகாத்து, வளர்த்து முழு ஜீவனாக கொடுப்பது போலத்தான் `சூரியனிலிருந்து வரும் `சக்தி'யை முழுமையாக பெற்று, பூமியின் `மின்' காந்த ரசாயன சக்தியுடன் கலந்து நம்மை `மதி'யுடன் அறிவுடன் இயங்க செய்வது `மதி' என்ற சந்திரனே.
 
சூரியனிடமிருந்து வரும் `ஒளி`க்கதிர்களை பெற்று பூமிக்கு கொடுக்கும் அளவுகளில் தினமும் மாறுதல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த அளவுகளுக்கு பெயர் தான் `திதி' ஆகும். முழுமையாக சூரியனின் `சக்தி'யை சந்திரன் பெறும் நாள் தான் `பௌர்ணமி' ஆகும். சந்திரனுக்கு சூரியனின் சக்தியே கிடைக்காத நாள் தான் `அமாவாசை' ஆகும். கிரகணம் `சக்தி' குறைந்த நாட்கள் ஆகும்.
 
இந்த நாட்களில் முக்கியமான சக்தி வாய்ந்த புதிய மருந்து எதையும் மனிதனின் உடலில் செலுத்துதல், ஆபரேசன் செய்தல் போன்றவற்றை தள்ளி  வைத்து சொல்வது நல்லது என்று தற்போது `விஞ்ஞானி'கள் கூறி வருகிறார்கள். இதை எல்லாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது வேதங்களில், `மறை' களில் புராணங்களில், மந்திர, தந்திர, பூஜைகளில் எழுதப்பட்டு உள்ளது.
 
`பவுர்ணமி' அன்று சூரியனின் சக்தியும், சந்திரனின் சக்தியும் பூமிக்கு வருவதால் தான் பூமியில் எல்லாவற்றிலும் மாறுதல் வருகின்றது என்பதை நமது முன்னோர்கள் அனுபவித்து உணர்ந்தார்கள். இதனால் தான் இந்த `பவுர்ணமி' தினத்தன்று `ஈல்லரன்', `ஈஸ்வரி', அதாவது சிவன்-பார்வதியாக பல பெயர்களில் காட்சி கொடுக்கும் கோவில்களில் சிறப்பாக கோவில் விழாக்கள் நடந்து வருகிறது.
 
இந்த செய்தி ஆதி புரராணங்களிலும் இருந்து வருகிறது. சிவன்-பார்வதியின் மகனாக `முருகன்' கோவில்களிலும் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 62 ஆயிரம் கோவில்கள் இருக்கிறது என்றும், இதில் 32 ஆயிரம் கோவில்கள் தினசரி பூஜை வழிபாட்டில் உள்ளது என்றும், மற்றும் பல புராதன கோவில்கள் பராமரிப்பு இல்லாத நிலையில் இருந்து வருகிறது என்றும் ஆன்மீக ஆய்வாளர்கள் எழுதி வருகிறார்கள்.
 
இது நமது தமிழ்நாட்டுக்கு மட்டுமே கிடைத்த பெரிய பாக்கியம் ஆகும். பவுர்ணமி அன்று இரவில் வரும் மின் கதிர் வீச்சு மனிதனின் உடலில் படும் போது, அதாவது ஆண்- பெண்களின் உடல் மீது படும் போது `சிவன்' சக்தியும் `அம்மன்' சக்தியும் முழுமையாக படுகிறது. இதனால் ஆண்-பெண் இருவரது உடலிலும் மின்காந்த உணர்ச்சியினால் `வெப்பம்' ஏற்பட்டு இருவரின் நாளமில்லா சுரப்பிகளும் சமமாக சுரக்கின்றன.
 
ஏறத்தாழ `27' வகையான மின்காந்த ரசாயன `என்சைம் அயனி'கள் `27'நட்சத்திரங்களாக பரிமளித்துக் கொண்டிருக்கிறது. இந்த சக்திகள் ஆண்-பெண் உடல் எங்கும் உட்புகுகிறது. இதனால் உடலில் உள்ள `செல்'கள், திசுக்கள் மீது மின்காந்த ரசாயன கிரியைகளை `27' என்சைம்களும் உண்டாக்கி ஒரு மாதத்திற்கு தேவையான உடல் சக்தியையும் அழகையும், ஆண்-பெண் இருபாலருக்கும் கிடைக்க செய்கிறது.
 
இதை தான் `சிவபுராணத்தில்' சிவதாண்டவம் என்று எழுதி உள்ளார்கள். இதை அறிந்த நமது முன்னோர்கள் ஒவ்வொரு மாதமும் `பவுர்ணமி'யில் நமது உடலில் மின்காந்த சக்தி வருவதற்காகத் தான் `பவுர்ணமி' நாளில் பாட்டும், பரதமும், கோவில் பூஜை வழிபாடுகளையும் வைத்து, `பவுர்ணமி' இரவில் மக்கள் தூங்காமல் இருப்பதற்கு வழி காட்டினார்கள். இன்றும் பல சிறிய கிராமங்களில் மாதாமாதம் `பவுர்ணமி' பூஜை வழிபாடுகள் நடந்து வருகிறது.
 
பவுர்ணமி பூஜை `ஒன்பது' மாதம் முழுமையான மனஈடுபாட்டோடு செய்து வருகின்றவர்களுக்கு சக ஐஸ்வரியங்களும் கிடைத்து வருகிறது. `சிவன்' `சக்தி' `முருகன்' ஆகிய 3 தெய்வங்களும் பூமியில் வந்து இறங்கி தங்களை நாடி வரும் பக்தர்களுக்கு கேட்கும் வரங்களை எல்லாம் அள்ளி வழங்கி வருகிறார்கள். மிகவும் முக்கியமாக கடல், நதி, ஆறு, மலை அருகில் உள்ள கோவில்களில் பவுர்ணமி பூஜை செய்து வருபவர்களுக்கு கேட்கும் வரம் நடந்து வருகிறது.
 
பெரியவர்கள் பூஜைகள் செய்வது கடமை ஆக்கப்பட்டு உள்ளது. இன்றும் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி கிராமங்களில் சிறுவர்-சிறுமியர்கள், தங்களது வீடுகளில் இருந்து இரவு சாப்பாட்டை எடுத்து வந்து, பவுர்ணமி இரவில் ஓர் மைதானத்தில் `கூட்டாஞ்சோறு' சாப்பிடுவதை காணலாம். இதன் நோக்கம் பவுர்ணமி சக்தி மூளை வழியாக சென்று அவர்களுக்கு படிப்பில் ஆர்வத்தையும், தெளிவையும், ஞாபக சக்தியையும் கொடுப்பதற்காகத்தான்.
 
இப்படி `கூட்டாஞ் சோறு' சாப்பிடும் மாணவ-மாணவிகள் படிப்பில் உயர்ந் தவர்களாக இருப்பதை காணமுடிகிறது. குழந்தை பாக்கியம் தாமதம் ஆகி விடும் தம்பதிகள், `பவுர்ணமி' பூஜையில் கலந்து கொண்டு, பவுர்ணமியின் ஒளி முழுமையாக படும்படி இரவில் பூஜைகள் மூல மாகவோ, தியானம் மூலமாகவோ, கோவிலை வலம் சுற்றி வருவதன் மூலமாகவோ தங்களை ஈடுபடுத்திக் கொள்வோருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்து வருகிறது.
 
உத்தியோகத்தில், வியாபாரத்தில் செய்தொழிலில், கைதொழிலில் நிம்மதி இல்லாத நிலையில் கடனுன் போராடி வருபவர்களுக்கு கடன் தொல்லையில் இருந்து படிப்படியாக விடுதலை கிடைத்து வருகிறது. குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே பிரச்சினை, பிரிவினை என்று வாழ்ந்து வருபவர்களுக்கு மகிழ்ச்சியும், சந்தோசமும் கிடைத்து வருகிறது.
 
பூஜை முறை.........
 
திருமணம் ஆக மாங்கல்ய பாக்கியம் கிடைக்கிறது. எனக்கு தெரிந்து பல பிரசித்தி பெற்ற கோவில் இருக்கும் ஊர்களில் எல்லாம் பவுர்ணமி பூஜை வழிபாட்டை மக்கள் செய்து பயன் அடைந்து வருகிறார்கள். குறிப்பாக சென்னையில் ஒவ்வொரு பவுர்ணமியிலும் நள்ளிரவு 12 மணிக்கு திருவான்மியூரில் உள்ள `பாம்பன்' சுவாமி மடத்தில் தொடர்ந்து பவுர்ணமி பூஜை முருகன் பூஜையாக ஒரு பெரியவர் மூலம் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
 
அங்கு தற்போது கிட்டத்தட்ட 10 ஆயிரம் மக்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு பயன்பெற்று வருவதை பார்க்க முடிகிறது. இத்தகைய பவுர்ணமி பூஜையில் ஒவ்வொரு பூஜைக்கும் தனிததன்மை உண்டு. அதிலும் குறிப்பாக `தை' மாத பவுர்ணமிக்கு தனி சக்தி உண்டு என்று பூஜை சாஸ்திரங்கள் கூறுகிறது. ஏன் என்றால் இந்த மாதத்தில் இருந்து தான் `சூரியன்' தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணம் செய்கிறார்.
 
மக்களுக்கு அறுவடை மூலம் உணவு தானியங்களை கொடுக்கும் கால உத்ராஅயனம் புண்ணிய காலம் ஆகும் வருகின்ற 6.2.2012 அன்று இரவு `தை' மாத பவுர்ணமி ஆகும். மேலும் ஓர் சிறப்பு, அன்றுதான் முருகப்பெருமானின் `தைப்பூச' திருவிழாவும் ஆகும். இதனால் இயற்கையாகவே இந்தமாத வழிபாட்டில் உள்ள அனைவரும் தைப்பூச திருவிழாவின் காரணமாக பவுர்ணமியின் மின்காந்த அணுக்கள் நம்மீது படும்படியான சூழ்நிலை, கிரகநிலை அமைந்துள்ளது.
 
 ஒரு விழாவில் அந்த விழா பற்றிய செய்தியை நாமே அறியாமல் கலந்து கொள்வதற்கும், அந்த `விழா' பற்றிய அனைத்து செய்திகளையும் அறிந்து, தெரிந்து, கலந்து கொள்ளும் போது, நமது மனம் அதில் முழுமையான ஈடுபாட்டுடன் சிவன், அம்மன், முருகன் மீது எல்லையில்லாத பக்தி பெருக்குடனும் கலந்து கொள்ளும் போது, தெய்வ சக்தியின் அருள் நமக்கு முழுமையாக கிடைக்கும்.
 
குழந்தை பாக்கியம் பெற........
 
மேலும் ஒரு முக்கிய செய்தி, `தை' மாத `பவுர்ணமி'க்கு மட்டும் ஏன் சிறப்பு என்றால், அசுப கிரகங்கள் ஆன, ராகு-கேது இருவரும் `நான்கு' வேதங்களையும், `மகர' ராசி, `கடக' ராசி என்ற கடல் ராசியில் தான் மறைத்து வைத்து அறிந்து கொண்டார்கள் என்பதால். இந்த மை மாத `பவுர்ணமி'யில் கலந்து கொண்டவர்களுக்கு நான்கு வேதமும் அருள் பாலிக்கும் என்பது ஐதீகம்.
 
குழந்தை பாக்கியம் கிடைக்க, கடன் தொல்லையில் இருந்து படிப்படியாக விடுபட `பவுர்ணமி' பூஜை நேரத்தில் இரவில், நமது வீட்டு வாசல்களிலும், வீட்டின் மொட்டை மாடிகளிலும், வீட்டை சுற்றியும் விளக்கு ஏற்றி ஈஸ்வரன், ஈஸ்வர, முருக காய்திரி மந்திரங்களை வானத்தை பார்த்து தியான நிலையில் இருந்து கூறி வருவது நல்லது.
 
ஆன்மீகத்தில் விருப்பம் உள்ளோர் வெட்டவெளி வானத்தை நோக்கி, பவுர்ணமியை பார்த்துபடி, இறைவனின் மந்திரங்களை மனதில் கூறியபடி தியானத்தில் இருந்து வர, சிவனின் அருள், முருகனின் அருள் கிடைக்கும். சிவன், அம்மன், முருகன், கோவிலை நோக்கி நடந்து போக, கோவிலை கிரிவலம் வர தற்போது இருந்து வரும் அத்தனை பிரச்சினைகளில் இருந்தும் படிப்படியாக நிம்மதி கிடைக்கும்.
நன்றி :  `ஜோதிட ஆசான்' கீழஈரால் பண்டிதர் பச்சைராஜென்.

5 comments:

redfort said...

Dear Sir,

Welcome to India.

Nalla pathiuvkku nanrigal iyya.


Regards
Sengo/Tirupur

சரவணன் said...

தங்களின் கருத்தான "ஒரு விழாவில் அந்த விழா பற்றிய செய்தியை நாமே அறியாமல் கலந்து கொள்வதற்கும், அந்த `விழா' பற்றிய அனைத்து செய்திகளையும் அறிந்து, தெரிந்து, கலந்து கொள்வதற்கும்" உள்ள வித்தியாசங்கள் சிந்திக்க பட வேண்டிய ஒன்று! நான் இலங்கை சென்று வந்த பொழுது அறிந்த விசயம் இதே போன்றதே. அங்குள்ள மக்கள் புத்தரை வழிபடுபவர்கள். பௌர்ணமி தினத்தை அவர்கள் போயா டே [POYA DAY] என்கிறார்கள். அனைத்து அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகள் விடுமுறை விடப்படும். ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் காலை முதல் இரவு வரை பூஜை நடைபெறும் [அவர்கள் முறைப்படியான பூஜைகள்]. பெரும்பாலனோர் வெள்ளை உடுப்புடன் தான் பண்சாளைக்கு வருகிறார்கள். (நமது இன்றைய கலாச்சாரத்தை நினைத்து கொண்டேன் - வேறென்ன? கோயிலக்கு ஜீன்சும் T-shirtum தான்). குறைந்தபட்சம் ஒவ்வொரு வெள்ளிகிழமையாவது கோயில்'க்கு செல்ல வேண்டும் என்பதை நாம் பின்பற்ற வேண்டும். இது போன்ற இணையதளங்களை வளரும் தலைமுறைக்கு அறிமுக படுத்த படவேண்டும். அவர்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நான் எனக்கு தெரிந்தவர்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் சார் ! நன்றி !

அருட்சிவஞான சித்தர் said...

அன்புடையீர்,
தங்களின் வாசக நண்பர் அனுப்பியிருந்த கட்டுரையை தாங்கள், வலையில் பிரசுரித்ததற்கு மிக்க நன்றி!.
அதில் பெளர்ணமி பற்றி கூறிய விஷயங்கள் அனைத்தும் உண்மை.
என்னளவில் நான் பெளர்ணமி வழிபாடு செய்து வருகின்றேன். எனது வலைப்பூவின் மூலம் பெளர்ணமி பிரார்த்தனையும் செய்து வருகின்றேன்.
இக்கட்டுரையின் ஆசிரியருக்கும் எனது நன்றிகள்.

பெளர்ணமி பிரார்த்தனை குறித்து அறிய எனது வலைத்தளத்துக்கு வருகை தர வேண்டுகிறேன்.
www.siddharkal.blogspot.in

Anonymous said...

Highly informative posts. Keep on going..

Regards
Prakash
http://medicalinformationforyou.blogspot.com/

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com