Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

தமிழன் என்று தலை நிமிர்ந்து சொல்வோம்....!

| Jan 27, 2012
இததகவலை நம் வாசகர்களுக்காக அனுப்பிவைத்த நண்பர். கோபால கிருஷ்ணனுக்கு நன்றி...

இன்று பல பெரிய பெரிய பல்நாட்டு நிறுவனங்களுக்கு - பயிற்சி அளிக்க வருபவருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று எதிர் பார்க்கின்றனரோ, அந்த தகுதிகளை தனது பத்தே வயதில் , சாதித்துக் காட்டிய - இந்த நெல்லை குழந்தைக்கு , அவர் மென்மேலும் சாதனை படைக்க மனமுவந்து வாழ்த்துவோம்... !

நம் வாசகர்களில்  அரசு உயர் மட்டத்தில் இதை எடுத்துச் சொல்ல செல்வாக்கு வாய்ந்தவர்கள் , கொஞ்சம் சிரமேற்கொண்டால் மிக்க மகிழ்ச்சி அடைவோம்...!

                                
              ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி - சந்தேகமின்றி இந்தியாவின் விடிவெள்ளிதான்!  
                              வயது பதினொன்று(பிறந்த தேதி:23.05.2000). IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியாவென்பதால்தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லை. இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.
                                         
                                     வயதிற்கேற்றார்போல் சைக்கிள் ஓட்டுவதும், கார்ட்டூன் பார்ப்பதும் இவள் பொழுதுபோக்கென்றாலும், இவள் படைத்துள்ளது இமாலய சாதனை. கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெற இவள் வயது காணாதாம். ஆம், பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெறுமாம். இந்த வயதிலேயே,  பள்ளிப்படிப்பிலும் இருமுறை இவள் தாவியுள்ளாள். ஆமாம், இரண்டுமுறை இவளுக்கு கிடைத்துள்ளது டபுள் புரமோசன்.

                                        கல்லூரியில் பயிலும் B.E., B.TECH  மாணவர்களுக்கு கணினிப்பிரிவில் உரையாற்றும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ளாள். சமீபத்தில் மங்களூரிலுள்ள NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் (INTERNATIONAL CONFERENCE), விசாலினிதான் சிறப்பு அழைப்பாளர். அதில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களும் விசாலினியின் அறிவுத்திறனைக் கண்டு வியப்புற்றுள்ள்னர். 


15.12.2011 அன்று ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்ட
பாராட்டு சான்றுடன்
விசாலினியின் பாட்டி,அம்மா மற்றும் விசாலினி.

                                                     
                                         இத்தனை சாதனைகள் படைத்துள்ள இந்தக் குழந்தை சிறு வயதில் பேச, சற்றே சிரமப்பட்டிருக்கிறது. அக்குழந்தையின் தாய் திருமதி.சேதுராகமாலிகா, மருத்துவர் ஒருவர் அளித்த ஆலோசனையின்படி, அந்தக் குழந்தையுடன் இடைவிடாது அளவளாவியதின் பலன், அடுத்த ஒன்பது மாதங்களில் விசாலினியின் பேசும் திறனை பெருகச்செய்தது.  இன்று உலகமே விசாலினியின் திறனைக்கண்டு வியந்துகொண்டிருக்கிறது. 
                                                 
                                            உலக சாதனை படைத்துள்ள இந்த குழந்தையின்  தந்தை திரு.கல்யாண குமாரசாமி ஒரு எலக்ட்ரிசியன். அவரது குழந்தை படைத்துள்ள சாதனைகள் இதோ:

           MCP     (Microsoft Certified Professional)

   CCNA   (Cisco Certified Network Associate),

   CCNA Security(Cisco Certified Network 

                 Associate Security),

   OCJP   (Oracle Certified Java 
                 Professional).
 
                                         


               CCNAவில் இவள் பெற்ற மதிப்பெண் 90 சதவிகிதம். இதுவும் ஒரு உலக சாதனைதான்.மங்களூரிலுள்ள NITயும், திருவில்லிபுத்தூரிலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேர அழைத்தும் இவர் பெற்றோர்கள், இன்னும் சில ஆண்டுகளுக்கு, இந்த இளம் அறிவாளியை, கல்லூரி வாழ்க்கைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடவில்லை.பாகிஸ்தானில் உள்ள பன்னிரண்டு வயது மாணவர் இரிடிசா ஹைதரின் சாதனையை பத்து வயதில் முறியடித்து  THE YOUNGEST CCNA WORLD RECORD HOLDER என்ற உலக சாதனை படைத்துள்ளார்.                  

           உலகமே இந்தக் குழந்தையின் சாதனைகளை உற்றுப்பார்க்கும் இந்த நேரத்திலும்,உள்ளூரில் இன்னும் இந்த குழந்தையை உச்சி முகர்ந்து பார்க்கவில்லையென்பதே இவள் பெற்றோரின் ஆதங்கம். ஆம் நம் மத்திய, மாநில அரசுகளின் பார்வை இந்த உலக சாதனையாளர் மீது இன்னும் படவில்லை.பதிவுலகில் குவியும் பாராட்டுக்களாவது, இந்தத் தெய்வக்குழந்தையை உலக அரங்கிலும், உள்ளூரிலும் உச்சத்திற்குக் கொண்டு செல்லட்டும்.நன்றி:தகவல் பகிர்வு:திருமதி.சேதுராகமாலிகா மற்றும் http://www.visalini.com    
வேண்டுகோள்:1) ஒரு இந்திய்ர்,அதிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்த சிறுமியின் சாதனை உலகறியச் செய்திட, முடிந்தவரை அனைத்து நண்பர்களும் இந்தச் செய்தியினை அவரவர் தளத்தில் பகிருங்கள்.
      2)விசாலினியின் இ-மெயில் ஐ.டி: visalini2000@gmail.com. இதற்கு நம்மாலானது, ஒரு பாராட்டு மெயிலை அனுப்பி அப்பெண்ணை ஊக்குவிக்கலாமே!

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விசாலினி-க்கும், பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் ! நன்றி நண்பரே !

செ.கதிர்வேலு said...

Way of living with a long life!

All the lost world of the living species, they have to live a long life is the acaikalo unarvukalo

Only man has a long life, thoughts and feelings and the wish to live long lives from there, but if you live that long, and about how one can live without the disease is not kataipitippat., No one would follow me through the process data

They made it Vallalar instructions clearly, not only to live a long life that death can be overcome, has lived rather than told.

If you want to live longer, says the jiva karunyam. I mean, life is not selfish to want to grant to aid with public health. So if you can live as long as the total truth நம்பிக்கையுமாகும் Vallalar.

Suspicion that they could not possible!

America's viskan city of about 10317, uyarkkalvi students over the past 1957, since 2008, and the style of research, information check, the participants in more than half of women. And the 2008 year old, an average of 69.12. Years indicate ratify.

The volunteer charity work involved in, their choice had lived as a separate silk inspection took place, the study of alcohol people and smoking, economics seekers, enjoy the 2008, No. salutary affect silk, 75%, died and left. The remaining members of his labor, his family For those who want only to live with less than 20% health is affected body nalaka,

The remaining 5%, those volunteers who are not selfish. How are they are excited with physical health, mental happiness of the living God with an even charitable organizations are doing to aid the species alive.

Vallalar it 180 years ago is that we did not listen ear. Read the review request if we believe this is our position.

Where are the mercy of nature
Arutperum torch as there!

Anyway who sympathize kinrarkkuca
Chidambara cire civame provided!

They knew what life uyirul emmul
Welfare stated that life is real civame paravuka!

Uyirelam public image in the ulam nokkuka
Vittuka enaca ceyirelam civame ceppiya!

Common sense when sensing alal piritte
If it is absent arutperum torch!

Vallalar is not clear that in many of the songs. I feel happy people live longer, healthier lives

Our body atoms in {cells} The seven types are; - valanu, fluid power, kuruanu, Laghu atom, atom, atom, vipuanu, such vaiyakum the task atom, cause the cell, prudential reasoning power, that the three types. These are all jiva There are general rules for the zodiac. They operate according to the nature of the organism,

Fear and fear the pain of sorrow, and death comes to all the lives that povatumay, this passing of human origin, is the responsibility of the human viscera, so that human birth is the birth

Other organisms charity by doing a life of happiness is reached, the pleasure the human soul on the record, the record of human viscera of the atoms excited ataiyaca, and charitable ceykinravarkal his body and the atoms are happy to see. The happiness in the body of the cell longevity and lasting. Atoms and longevity because of human longevity The honest truth perishes.

This; - jiva Moksha karunyame key of the house and worship of God and human life irakkame jivarkal Vallalar has put a strong light. Think it will work now.

Upakarikinrar down generally find that evvuyirum yavar antaca
Q. I heard that Mr. Executive's Actions cevviyar tan

And, -

If they die muratu consider differences in talent evvuyirum
He has the right to accept utaiyavaray yavar uvakkinrar ulantan Cleaner
I heard that emperuman natama citturuvay Employed
Purintita my conscience dictate to the master of the most sought postulate their tale!

Vallalar says. Vallalar want to live a long life to live as a man's path pataitan nervali.

Neriye kuvalayam onkuka kill!
Inpurru all the life you live!

I anmaneyan; - katirvelu,

marimuthu said...

ஹாய் விசாலினி குட்டிஉன் சாதனைக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.மென் மேலும் நீ பல சிகரங்களைத்தொட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.இந்த செய்தியை வெளிஉலகுக்கு அறிமுகப்படுத்திய பதிப்பாளருக்கும் என் நன்றிகள் பலபல.....


By KP Marimuthu,nangow@gmail.com

PM.Hemanandhini,PM.Kowsika,Velammal Vidhiyalaya School,Karur

nan31101999@gmail.com, kowsi22112001@gmail.com

கோடியில் ஒருவன் said...

துளசி தளங்களுக்கும் வில்வ இலைகளுக்கும் இடையே, கற்கண்டை போல அகமும் மனமும் குளிரவைக்கும் ஒரு பதிவு.

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

என்ற குறளுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் விசாலினிக்கு என் வாழ்த்துக்கள். உன் பெற்றோர்களுக்கு என் வணக்கங்கள். என்னால் இயன்ற அளவில், ஊடகத்தில் தெரியவைக்க முயற்சிக்கிறேன். திருவருள் துணை புரியட்டும்.

விசாலினிக்கு வாழ்த்து சொல்லி மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன்.

நன்றி.

- கோடியில் ஒருவன்

R.V.Nathan said...

Greetings and best wishes to Visali to do more.,R.Vaithinathan,Thanjavur.

Rtn.R.Vaithinathan said...

Best wishes and greetings to Selvi.Visali.

sribalaram said...

god bless you allways

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com