Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

சென்னையில் இந்து ஆன்மிக சேவை கண்காட்சி!

| Jan 27, 2012
சென்னை மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள வாசகர்கள் பயன்பெறலாம்.... சற்று தாமதமாகப் பதிவிட்டதற்கு மன்னிக்கவும்... 
================================================================
160 க்கும் மேற்பட்ட ஸ்டால்களுடன் சென்னையில் இந்து ஆன்மிக சேவை கண்காட்சி

சென்னை, ஜன.24 ஆம் தேதி முதல் 29  ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இது குறித்து, இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி அமைப்புக்குழு தலைவரும், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவருமான ஆர்.நட்ராஜ் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:

ஆன்மிக சேவை

“மக்கள் சேவையே மகேசன் சேவை" என மக்கள் சேவையை முன்னிறுத்தி இந்து சமயத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் ஆன்மிகப்பணிகளில் மட்டுமின்றி, கல்வி, மருத்துவம், பொருளாதார மேம்பாடு என மக்களுக்கான பல்வேறு சமுதாயப்பணிகளை நிறைவேற்றி வருகின்றன. இந்த அமைப்புகளின் சேவை, ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருந்துவிடாமல் நாடு முழுவதும் பரந்து விரிந்து அமைந்துள்ளன.

மக்களுக்கான பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு அமைப்புகள், பல துறைகளின் நிபுணர்கள், வித்தியாசமான பார்வையாளர்கள், வித்தியாசமான அணுகுமுறைகளை கொண்டவர்கள் சேவை மனப்பான்மை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, ஒரே நோக்கத்துடன் ஒருங்கிணைந்து சேவை புரிந்து வருகிறார்கள்.

கண்காட்சி

இது போன்ற அமைப்புகளின் சேவையைப் பாராட்டுவதற்காகவும், அவற்றின் செயல்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வரவேண்டும், அந்த சேவையில் நாமும் பங்குபெறவேண்டும் என்ற உத்வேகம் அனைத்து தரப்பினரிடமும் வரவேண்டும் என்ற நோக்கத்தில், இந்து ஆன்மிக மற்றும் சேவை மையம் ஆண்டுதோறும் ஆன்மிக கண்காட்சியை நடத்தி வருகிறோம்.

அந்த வகையில் 4வது ஆண்டாக இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி வளாகத்தில் 24  ஆம் தேதி - புதன்கிழமை தொடங்கி 29ந் தேதி , ஞாயிறு வரையில் நடக்கிறது.

கண்காட்சியை ஆதி சுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தானந்த சுவாமி தொடங்கிவைக்கிறார். கோவை சிரவை ஆதீனம் கவுமார மடாதிபதி குமரகுருபர சுவாமிகள் ஆசியுரை வழங்குகிறார். இந்து சமய மற்றும் அறநிலையத்துறை செயலாளர் எம்.ராஜாராம் வாழ்த்துரை வழங்குகிறார்.

160க்கும் மேற்பட்ட ஸ்டால்கள்

இந்த கண்காட்சியில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை, திருமலா&திருப்பதி தேவஸ்தானம், ராமகிருஷ்ணா மடம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம், சத்யசாய் சேவை அமைப்பு உள்பட 160&க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்கின்றன.
இந்த அமைப்புகளின் ஆன்மிக, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சமுதாயப்பணிகள் இந்த கண்காட்சியின் மூலம் வெளிப்படுத்தப்படும். கடந்த ஆண்டு 2 லட்சம் பேர் இந்த கண்காட்சியை காண வருகை தந்திருந்தனர். இந்த ஆண்டு அதைவிட அதிகமாக வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

அனுமதி இலவசம்

கண்காட்சியை அனைத்து தரப்பினரும் கண்டு அந்தந்த அமைப்புகளின் சேவையை அறிந்து கொள்ள வகை செய்துள்ளனர். கண்காட்சிக்கு அனுமதி இலவசம். தினசரி காலை 10 மணியில் இருந்து இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

கண்காட்சியில், ஆன்மிக சொற்பொழிவுகள், திவ்யபிரபந்தம், திருப்புகழ், பன்னிருதிருமுறை பாராயணம் போன்றவையும், பரதநாட்டிய மேதை பத்மா சுப்பிரமணியம், கேரளாவைச் சேர்ந்த கலைஞர்களின் கதகளி நடனம், கர்நாடக கலைஞர்களின் யக்ஷகானம், ஆந்திராவைச் சேர்ந்த கலைஞர்களின் குச்சுப்பிடி நடனம், பிரபல யோகா கலைஞர்களின் யோகாசன பயிற்சி என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளோம்.

200&க்கும் மேற்பட்ட பள்ளிக்கூட நிர்வாகிகள் கண்காட்சி குறித்து எங்களோடு தொடர்பு கொண்டுள்ளனர். மாணவ&மாணவிகளுக்கான போட்டிகளும் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறு ஆர்.நடராஜ் கூறினார். அப்போது, இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் துணைத்தலைவரும், பரதநாட்டிய மேதையுமான பத்மா சுப்பிரமணியம், இந்து ஆன்மிக சேவைக்கண்காட்சி நிர்வாகிகள் சிவா,வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர். 

நன்றி : (பக்த) கோடியில் ஒருவன் 

4 comments:

NAHARANI said...

Thanks for the information at right time

HG said...

During this period we are un fortunate to be in India. Can we have the proceeds posted as audio and video formats.

Thanks & regards
HGphil@gmail.com

சரவணன் said...

இப்படிபட்ட கண்காட்சி சென்னை மட்டும் அல்லாமல் பிற நகரத்திலும் நடந்தால் அனைத்து நகர மக்களுக்கும் நன்மை பயக்கும்.

கோடியில் ஒருவன் said...

பதிவிட்ட ஆசிரியருக்கு நன்றி.

இந்த கண்காட்சிக்கு கடந்த வெள்ளியன்று சென்றேன். மறக்க முடியாத ஒரு அனுபவம். இது நான்காவது வருடமாம். இத்துனை வருடங்கள் இதை மிஸ் செய்துவிட்டோமே என்று மிகவும் வருத்தப்பட்டேன்.

காஞ்சி பெரியவர் 'தெய்வத்தின் குரல்' சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் போலவே, தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட சிலையை பார்த்து பெரியவர் தான் வந்துவிட்டாரோ என்று ஒரு கணம் நினைத்து ஏமாந்தது தனிக்கதை. அத்துணை தத்ரூபம். அந்த புனிதரை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருந்தது அந்த சிலை. தவிர, பிரம்ம குமாரிகள் ஆன்மீக சங்கத்தினர் நிர்மாணித்திருந்த 12 ஜோதிர் லிங்கங்களின் தரிசனம்... அப்பப்பா... பிறவிப் பயனை அடைந்தேன்.

தேவையான புகைப்படங்களை எடுத்திருக்கிறேன். ஆசிரியர் அனுமதித்தால் விரையில் நாம் சென்று வந்த அனுபவத்தை இங்கு விரிவாக தருகிறேன்.

- கோடியில் ஒருவன்

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com