Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

தை பிறந்தால் வழி பிறக்கும்.. தங்கமே தங்கம் !

| Jan 10, 2012
வாசக அன்பர்களுக்கு வணக்கம். றெக்கை கட்டி பறக்கிறமாதிரி பரபரப்பா ஓடிக்கிட்டு இருக்கு , கடந்த சில நாட்கள். டிசம்பர் மாத முடிவு, வருடக்கடைசின்னு கம்பெனி வேலை கொஞ்ச அதிகம்... அனேகமா பொங்கல் முடிகிறவரை --- கொஞ்சம் பதிவுகள் வருவதில் தாமதம் வரலாம். பொறுத்துக்கோங்க....!

பொங்கலுக்கு அப்புறம் பட்டையை கிளப்பலாம்......

சரி, கீழே வந்த இந்த மின்னஞ்சலை அப்படியே பதிவிடுகிறேன். தமிழாக்கம் பண்ற அளவுக்கு கூட நேரம் இல்லை... முடிந்தவரை , உங்கள் நண்பர்களுக்கு , forward  செய்யுங்கள். யாராவது ஒரு நல்ல உள்ளத்திற்கு மிக மிக தேவையான தகவலாக , உரிய நேரத்தில் அமையும். 

மனிதனுக்கு கல்வி கண்ணைவிட முக்கியம். நல்லா படிக்கிற பிள்ளைங்க , மேல்படிப்பு படிக்க வசதி இல்லாதவங்களுக்கு இந்த தகவல் மிக மிக உபயோகப்படும்..!
============================================================
Hi All,


If you have come across any bright students coming from poor financial background who have finished their 10th standard this year and scored more than 80%, please ask them to contact the NGO - Prerana (supported by Infosys foundation).

The NGO is conducting a written test and those who clear the test will be eligible for financial help for their further studies.

Please ask the students to contact the people mentioned below to get the form:
580, Shubhakar, 44th cross, 1st A main road, Jayanagar, 7th block, Bangalore .

Contact numbers:
1. Ms. Saraswati - 99009 06338
2. Mr. Shivkumar - 99866 30301
3. Ms. Bindu - 99645 34667

Even if you don't know anyone, please pass on this info, someone might be in need of this help.

==================================================================

ஜனனி  ஜனனி பாட்டுல ஆரம்பத்துல இளையராஜா பாடி இருப்பாரே ... அந்த ஸ்லோகம் தான் இது. Highly  Powerful .... ! காலையில் தினமும் வாய்விட்டு சொல்லுங்கள்... நிச்சயம் மங்களம் பெருகும்..!மனது வலிமை அடையும்..!

சிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திது -மபி (ந)
அதஸ் -த்வா (மி) மாராத்யாம் ஹரி (மி) ஹர -விரிஞ்சாதி 
பி (மி) ரபி ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதம்: க்ருத (மி) புண்ய:  
ப்ரபவதி
விளக்கம்:
திங்களைச் சடையில் தரித்திடும் சிவன்பால் தேவிநீ அன்புடன் ஒன்றித் தங்கிடிலன்றி இயங்கிடும் திறமும் இறைவனே இழந்திடும் என்னில் கங்கைவார் சடையன் அயன்திரு மாலூம் கைதொழுதேந்தியே போற்றும் பங்கயச் செல்வி, புண்ணிய மிலார் நின் பாதமே தொழுவதும் எளிதோ
பயன்கள்:::
இந்த அம்பாள் ஸ்லோகம் செளந்தர்யலஹரி -  ஸ்ரீ ஆதிசங்கரர் அவர்கள் அருளியது ஆகும். இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும்.
=============================================================

வீட்டில் ஐஸ்வர்யமும், தனமும் என்றும் பெருக - சில அடிப்படை தகவல்களை தெரிந்துகொள்வோம்.....!
1. அதிகாலை 5 மணிக்கு கொல்லைப்புற வாசலைத் திறந்து வைத்து அதன் பின்னரே தலைவாசலைத் திறக்க வேண்டும்.
2. அதிகாலை விழித்தவுடன் பசுவையாவது, தன்முகத்தையாவது, தன் வலது உள்ளங்கையாவது முதலில் பார்த்துவிட வேண்டும்.
3. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 5 முகம் கொண்ட குத்துவிளக்கு ஏற்றி திருமகளை வழிபட வேண்டும்.
4. வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.
5. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும், மாலை குளித்து சத்ய நாராயணரை துளசி, செண்பக மலர் இவைகளால் அர்ச்சித்து, பால் பாயாசம், கற்கண்டு கனி வகை வைத்து வணங்கிய பின்னரே இரவு உணவு உண்ண வேண்டும்.
6. வைரம், வெள்ளி பாத்திரங்கள் லட்சுமி கடாட்சம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். ஒருவர் தனக்குச் சீராக அளிக்கப்பட்ட மேற்கூறியவற்றைத் தனது ஜீவித காலத்தில் விற்கவோ, தன் பிள்ளைகளுக்கோ கூட அன்பளிப்பாகவும் கொடுக்கக் கூடாது. தன் காலத்திற்குப் பின்னரே அவர்களுக்கு சேர வேண்டும். முடிந்தால் அவர்களுக்கு புதியதாக வாங்கிக் கொடுக்கலாம். 
7. ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்.
8. வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
9. இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்க கூடாது.
10. வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது, வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.
11. சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது.
12. குத்து விளக்கை தானாக அணைய விடக்கூடாது, ஊதியும் அணைக்க கூடாது. புஷ்பத்தினால் அணைக்கலாம்.
13. வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. இழவு என்றும் கூறக்கூடாது.
14. அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது
15. துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது.
16. உப்பைத் தரையில் சிந்தக் கூடாது. அரிசியைக் கழுவும் போது தரையில் சிந்தக் கூடாது.
========================================================================


வாசகர்கள் அனைவருக்கும் , எங்கள் அனைவரின் சார்பாக இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...! தை பிறக்கப் போகுது..!  நம்ம எல்லோருக்கும் நல்ல வழி கிடைக்கட்டும்..!


வாழ்க அறமுடன்..! வளர்க அருளுடன்.....!

7 comments:

THEIVAM said...

thanks bosssssss

uthra said...

சார் நீங்க சொல்லிருக்கிங்க அதிகாலை விழித்தவுடன் பசுவையாவது, தன்முகத்தையாவது, தன் வலது உள்ளங்கையாவது முதலில் பார்த்துவிட வேண்டும்.
அப்போ மனைவிய்ன் முகத்தை பார்க்கலாமா ?.................


அடுத்து ...

12. குத்து விளக்கை தானாக அணைய விடக்கூடாது, ஊதியும் அணைக்க கூடாது. புஷ்பத்தினாலும் அணைக்க கூடாது.

பின்ன எப்படி சார் குத்து விளக்கை அணைக்கறது???????????????
ப்ளீஸ் சொல்லுங்க......

YourFriend said...

லக்ஷ்மி கடாட்சம் கிட்ட ஆசிரியர் கூறியிருக்கும் விஷயங்கள் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நன்றி.

நம் மதத்தில் பெரியவர்கள் கூறும் ஒவ்வொரு சாஸ்திர சம்பிரதாயங்களுக்கும் ஏதாவது ஒரு காரணம் உண்டு. சாஸ்திர ரீதியிலும், ஆன்மீக ரீதியிலும், அறிவியில் ரீதியிலும் நிச்சயம் அந்த சம்பிரதாயங்களுக்கு அர்த்தம் உண்டு. சாஸ்திர ஆன்மீக காரணங்கள் அனைவராலும் புரிந்துகொள்ளமுடியாது. ஆனால் அறிவியல் ரீதியிலான காரணங்களை கொஞ்சம் யோசித்தால் நாம் சுலபமாக புரிந்து கொள்ளலாம்.

>>>>>>>>>>>>>>>அதிகாலை 5 மணிக்கு கொல்லைப்புற வாசலைத் திறந்து வைத்து அதன் பின்னரே தலைவாசலைத் திறக்க வேண்டும்<<<<<<<<<<<<<<<<<<<

உதாரணத்திற்கு சமையலறையில் ஈரப்பதமும், உணவுப் பொருட்களின் வாசமும் இருக்கும். சின்னஞ் சிறு ஜந்துக்கள் முதலிய ஜீவராசிகள் இரவு நேரத்தில் அங்கு ஆதிக்கம் செலுத்தும். காலை எழுந்தவுடன் கொள்ளைக் கதைவை திறக்கும்போஹ்டும் அவை வெளியேறிவிடும். யாருக்கும் எந்த தீங்கும் இல்லை. வாசல் கதவை முதலில் திறந்தால் மேற்படி ஜீவராசிகள் வீட்டுக்குள் நுழைந்து மற்ற அறைகளில் தஞ்சமடைந்துவிடும். ஆகவே தான் முதலில் கொள்ளைக் கதவை திறக்கவேண்டும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கவேண்டும்.

>>>>>>>>>>>>>>>வைரம், வெள்ளி பாத்திரங்கள் லட்சுமி கடாட்சம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். ஒருவர் தனக்குச் சீராக அளிக்கப்பட்ட மேற்கூறியவற்றைத் தனது ஜீவித காலத்தில் விற்கவோ, தன் பிள்ளைகளுக்கோ கூட அன்பளிப்பாகவும் கொடுக்கக் கூடாது. தன் காலத்திற்குப் பின்னரே அவர்களுக்கு சேர வேண்டும். முடிந்தால் அவர்களுக்கு புதியதாக வாங்கிக் கொடுக்கலாம்.<<<<<<<<<<<<<<<<<<<

சேமிப்பை வலியுறுத்தும் வகையில் தான் இது கூறப்பட்டிருக்கவேண்டும். கடைசி காலத்தில் நம் பிள்ளைகள் நிச்சயம் நம்மை காப்பாற்றுவார்கள் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. ஒவ்வொருவரும் தனக்கென்று தன இறுதி காலத்திற்கு எதையாவது வைத்துக்கொள்ளவேண்டும்.
இப்படி ஒவ்வொரு சம்ப்ரதாயத்துக்கும் நிச்சயம் அறிவியில் ரீதியாகவும், சாஸ்திர ரீதியாகவும் காரணங்கள் உள்ளன.

எல்லோருக்கும் பொங்கல் நல வாழ்த்துக்கள்.

வழியின்றி தவிக்கும் நல்லோர் அனைவருக்கும், தை முதல் வழி பிறக்கும்.

"எண்ணங்கள் மாறினால் எல்லாம் மாறும்."

- கோடியில் ஒருவன்

srividhya said...

வணக்கம்,
தங்கள் பதிவுகளை சமீப காலமாக வாசித்து மனதில் ஏற்றி வருகிறேன், அற்புதமான பணி - வாழ்த்துக்கள்.

சில சந்தேகங்கள் ...
12ஆம் இடம் விரயஸ்தானத்தில் ராகு அமர்ந்து ராகு திசை நடை பெற்றால், திசை காலத்தில் விரையமே என்பது நண்பர்கள் விவாதம் இது சரியா? சற்று விளக்கமாக கூறவும்.

நன்றி
ஸ்ரீவித்யா

Anonymous said...

Dear Sir,

Hearty Pongal Wishes to you and your
Family

Sakthivel
Tiruppur
9952152777

ERODERANGA said...

sir ennakku tholilil nastam jothagarai poye kettal 12manty athnale than nastam engerar unga pathil,

Anonymous said...

hi rishi,
plz try to pass this message(finacial help) to mari also who scored anove 90%in 10 th.can u upadate the status how is he now?.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com