Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

விஜய் டி.வி. செய்யும் தாங்க முடியாத ரவுசு... கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம்...!

| Jan 3, 2012

வாசக அன்பர்களுக்கு வணக்கம். நேற்றைய  - ராசி பலன்கள் பற்றிய - நமது கட்டுரையை உங்களில் அனைவரும் படித்து இருப்பீர்கள்.... படிக்காதவர்கள் ஒரு முறை படித்து விட்டு - இந்த பதிவை வாசிக்கவும்....


விஜய் டி.வி. - நீயா நானா - நம்மளையெல்லாம் முட்டாளாக்குறாங்கப்பா  ...! ன்னு இந்த கட்டுரை முடிவிலே - நீங்களே பீல் பண்ணுவீங்க...!
நான் எந்த நோக்கத்திற்காக அந்த கட்டுரையை பகிர்ந்து கொண்டேனோ , அது நடந்து விட்டது. விஜய் T .V . எந்த மாதிரி அந்த நிகழ்ச்சியை எடிட் செய்து இருப்பார்கள் என்று வெறுமனே என் யூகத்தை சொல்லி இருக்கலாம். ஆனால், அங்கு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் யாராவது ஒருவராவது , இந்த பதிவை எப்போதாவது படிக்க நேரிட்டால் , உண்மை என்ன வென்று நிச்சயம் நமக்கு சொல்வார்கள் என்று கருதி இருந்தேன்,,,,, அதற்க்கு உடனடியாக response  கிடைத்தது எனக்கு பயங்கர ஆச்சர்யம்...!

அந்த பதிவுக்கு , அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதிப்பிற்குரிய நண்பர் . திரு . இனியன் பாலாஜி அவர்கள் , தனது அனுபவத்தை கமெண்ட்ஸ் பகுதியில் பின்னூட்டம் இட்டு இருந்தார்.... பல பேரின் பார்வைக்கு அது தெரிய வராது என்பதால்... அதை இங்கு கீழே கொடுத்துள்ளேன்.......

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
iniyan balaji said...


நண்பரே


நான் தொடர்ந்து தங்களது கட்டுரை களை படிப்பதுண்டு. அனைத்தும் மிகவும் அருமை.
நானும் நேற்று ஒளிபரப்பிய நீயா நானா வில் கலந்து கொண்ட ஜோதிடர்களில் ஒருவர்.மேலிருந்து இரண்டாவது இடம்
எனக்குத் தரப்பட்டது. நாங்கள் ஏற்கெனவே கூறினோம் லக்னத்தை வைத்து சொன்னால் தான் சரியாக இருக்கும் என்று. ஆனால் கோபி
நாத் அவர்களோ இல்லை இல்லை அதை கடைசியில் வைத்துக்கொள்ளலாம். இப்போதைக்கு ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் பலன் சொல்லுங்கள் என்றார். ஒருவேளை புத்தாண்டு க்கு எல்லோருக்கும் பலன் சொல்லலாம் என்பதனாலோ என்னவோ. அப்போதுதான் எல்லோரும் பார்ப்பார்கள் என்பதற்காக இருக்கலாம். நான் பேசியவை அனைத்தும் எடிட் செய்யப்பட்டன.எனக்கு ஆரம்பத்திலேயே இதில் கலந்து கொள்ள விருப்பமில்லை. எனது அலுவலகத்தில் என்னை அனுப்பி விட்டார்கள்.
எனவே திரைக்கு பின்னால் நடந்த விஷயங்கள் தங்களுக்கு தெரியாது என்பதனாலேயே இதைத் தெரியப்படுத்தினேன்.
மேலும் எனக்கு பிடிக்காத ஒரு விஷயமென்னவென்றால் ஜோதிடர்கள் நெகடிவாக பேசினதுதான்.பொதுவாக சொல்லும் போது அனைவரும் பயந்துவிடுவார்கள். என் வீட்டிலேயே கூட என் மகள் கன்னி ராசி.ஆக்ஸிடென்ட் ஆகும் எனும் போது என் மனைவியும் பயந்துவிட்டாள். பிறகு நான் விஷயத்தை எடுத்து கூறினேன்/நான் பாசிடிவாக சொன்ன பலன் கள் எடிட் செய்யப்பட்டன. பரவாயில்லை.புகழுக்கு ஆசைப்படாதவனாதலால் இதைப் பற்றி கவலை இல்லை.
தாங்கள் தொடர்ந்து சோதிடமும் ஆன்மீகமும் கலந்து படைக்கும் படைப்புக்கள் அற்புதமாக உள்ளது.
தொடர்ந்து எழுதுங்கள்.தாங்கள் எல்லா நலமும் , வளமும் பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.


அன்புடன்


இனியன் பாலாஜி
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\


Arunsiva said...


வணக்கம்,
சார் நானும் அந்த நிகழ்ச்சியை கொஞ்ச நேரம் பார்த்தேன், நீயா? நானா? வாதத்திற்கு உரிய தலைப்பை எடுத்தால் நன்றாய் இருக்கும்.கடவுள் உள்ளாரா ? இல்லையா? ஜோதிடம் சரியா? தவறா ? இவை போன்ற விதண்டாவாதம் நிச்சயமாய் மத சீண்டலே! ( ரஜினியை பற்றி தெரிந்து கொள்ள யாராவது ரஜினி படம் பார்பார்களா? அதான் சின்ன பிள்ளைக்கு கூட தெரியுமே. அந்த மாதிரி தான்.) மற்றபடி கடலில் (கஷ்டங்களில்) தத்தளிப்பவர்களுக்கே துடுப்பு (ஜோதிடம்) தேவை, கரையில் நின்று பார்பவர்களுக்கு அல்ல.
தங்கள் பதிவுக்கு நன்றி.
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
எனது கருத்து  :


எல்லா சானல்களும்  சினிமா ,  பிழிய பிழிய சோகம் கொண்ட சீரியல் என்று - தமிழகத்தின் அத்தனை வீடுகளையும் ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தபோது - ஓரளவுக்கு வித்தியாசம் எதிர்பார்ப்பவர்களுக்கு, படித்தவர்களுக்கு - ரசனையுடன் நல்ல , நல்ல நிகழ்ச்சிகளை வழங்குவதில் விஜய் டி. வி. க்கு நிகர் இல்லை. கோபிநாத்தின் நீயா நானா புரோகிராம் - கிட்டத்தட்ட ஒவ்வொரு நல்ல ரசிகனும் பார்க்கின்ற நிகழ்ச்சி.  


ஆனால் , அங்கு பேசுவதில் லயித்து - அதன் பின்னணி பற்றி அறிந்து கொள்ள யாரும் நினைத்து இருக்க மாட்டார்கள்... இந்த மீடியாவில் இருப்பவர்கள் யாவரும் , வெகு மோசமான ஒரு மன நிலைக்கு மாறிக்கொண்டு இருக்கின்றனர். மக்களை கவர வேண்டும். உணர்ச்சி வசப்பட வைக்க வேண்டும்...... வேறு எதுவும் முக்கியம் இல்லை.... யாரையாவது கூப்பிட்டு , அவங்க கதறி , கதறி அழவைச்சு - உண்மை நிகழ்ச்சி , என்ன பண்ணப் போறீங்க... னு - லக்ஷ்மி ஒரு டாக் ஷோ பண்ணுனாங்க... ! அப்புறம் சிங்கர் , டான்சர் னு - யாராவது தோத்துட்டு போறப்போ--- சோகமா ஒரு மியூசிக் போட்டு , அவங்களை அழ வைச்சு - அந்த மாதிரி புரோகிராமுக்குள்ளேயே - ஜட்ஜ்ஜா    வர்றவங்க - பார்டிசிபன்ட் கூட சண்டையெல்லாம் போட்டு - அதகளப் படுத்துனாங்க... ஆனா, எல்லாமே ஒரு விளம்பர ஸ்டன்ட்... பக்கா ப்ரீ பிளான்ட்.. 


ஆனா, இது பாவம் நம்மளை மாதிரி சாதாரண ஜனங்களுக்கு எல்லாம் தெரியப் போறது இல்லை..... சில நிகழ்ச்சிகளை பார்த்திட்டு , வீட்டுல குழந்தைகள் லாம் - பயங்கர அப்செட் ஆகிடுறாங்க... அவங்களை தேத்த, உண்மை சொல்லிப் புரியவைக்க போராட வேண்டி இருக்குது....!


பக்தி மனம் கமழ , கமழ - கைலாஷ் யாத்திரை போடுவாங்க... ! காசி , கும்ப மேளா , சதுரகிரி எல்லாம் போடுவாங்க.... கூடவே நக்கலா , இது எல்லாமே பெரிய டுபாக்கூர் மேட்டருங்கிற  தொனியில முடிப்பாங்க....!


நீங்களே கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க...! நீயா , நானாவில்  -  கொஞ்ச நாளைக்கு முன்னாலே - தாலி பொண்ணுக்கு அவசியமா? ங்கிற ரேஞ்சுல எல்லாம் விவாதம் நடந்தது....! நாமளும் பக்கர பக்கர அதையும் பார்த்தோம்.. உச் உச் னு உச்ச கொட்டினோம்....! ஒரு புள்ளை தாலியை கழட்டி வீசிடுச்சு... யோசிச்சு பார்த்தா... இதெல்லாம் கூட பேசி வைச்சு செஞ்சதா தான் இருக்கும்..!

ஐயா , இந்த புரோகிராம் டைரக்ட் பண்ற புண்ணியவானே , இந்த மாதிரி உங்க வீட்டு ஆளுங்க தாலியை கழட்டி வீசி இருந்தா, நீங்க கம்முன்னு இருப்பீங்களா? இதை எல்லாம் எடிட் பண்ணி இருக்கலாமே...? எதுக்கு மத்தவங்களை உசுப்பேத்தி விட்டு , அதுல குளிர் காயணும்..?  


இன்னும் கொஞ்சம் கூர்ந்து கவனிச்சா... நிஜமாவே பத்திரிகை சுதந்திரம்ங்க்கிற  பேர்ல - மத உணர்வை கொச்சைப் படுத்துகிற , மகா கேவலமான நிகழ்வுகளைத் தான் காட்டுறாங்க....!


இதுவே இந்து மதத்தை தவிர வேறு எந்த மத உணர்வுகளையும் புண் படுத்துவது போல ஒரு சின்ன கருத்து யார் பேசினாலும், உடனே அந்த அமைப்புகள் பொங்கி எழுந்துவிடுகின்றன....! 


இந்துக்கள் பொறுமை சாலிதான்... மத்த மதங்களையும் மதிக்கிறவங்கதான்... ஆனா, பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு...!


மேலே நண்பர் இனியன் பாலாஜி சொன்னது போல, லக்கினம் எல்லாம் அப்புறமா பேசிக்கிடலாம்னு சொல்றது...! அப்புறம் , அந்த ஜோசியர் இவங்க சொன்ன எல்லாமே தப்புன்னு சொன்னப்போ.... டோய்ங்குனு மியூசிக் போட்டு - ஹாலையே  நிசப்தமாக்கினது....! இதை எல்லாம் பாக்கிறப்போ.... அந்த புரோகிராம் பார்க்கிற எல்லா ஜனங்களும்... முட்டாப் பசங்கன்னு நினைச்சுக்கிட்டாங்க போல....!

யாராவது கேட்டா... உடனே மன்னிப்பு கேட்பாங்க... அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு , திரும்ப இதே கதை நடக்கும்...!

பார்ப்போம்...... ! யார்கிட்ட என்னைக்கு மாத்து வாங்கப்போறாங்கன்னு தெரியலை... கூடிய சீக்கிரம் நடக்கும்னு நினைக்கிறேன்...!


கோபிநாத் என்னும் தனிப்பட்ட நபரை கண்டித்து இங்கு பேசவில்லை. இந்த இளம் வயதில் அவரது திறமை ஆச்சரியப் பட வைத்த ஒன்று..! அவரைப் போன்ற திறமை சாலிகளும், நல்லவர்களும் கூட , நிர்வாகத்தின் நிர்பந்தத்திற்கு அடி பணிகிறார்களே என்கிற ஆதங்கம் தான்..! 
என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டாங்கப்பான்னு, ஒரு நாள் அவரே சொல்லுவார்னு நினைக்கிறேன்..!


விஜய் டி.வி யின் இந்த  மடத்தனத்தை , பாரபட்ச போக்கை - வன்மையாக கண்டிக்கிறேன்...! எந்த ஒரு மீடியாவும்,  எந்த மத உணர்வுகளையும் புண் படுத்துவதை தயவு செய்து தவிர்த்து விடுங்கள்...!

எனதருமை வாசக நண்பர்களே , யார் உசுப்பேத்தினாலும் - உணர்ச்சி வசப்படாது உண்மையை உணர்வோம்...! 

மனிதம் வளர்ப்போம்...!

13 comments:

redfort said...

ஐயா வணக்கம்,

நானும் உங்கள் கருத்துக்களுக்கு வலுச் சேர்க்கிறேன்.விஜய் டிவியை வன்மையாக கண்டிக்கிறேன்.

மேலும் ஒரு உண்மை இங்கு சொல்ல விரும்புகிறேன் என்னவென்றால்,
தற்போது விஜய் டிவி யில் வரும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சிக்கு தொடர்பு கொண்டால் முதலில் அவர்களது Rules and regulationச் சொன்ன பிறகு நாம் ஆணா? அல்லது பெண்ணா? என்று பதிய 1 அல்லது 2 ஐ அளுத்த சொல்கிறது கணிணி. நாம் அளுத்தும் போது மட்டும் SORRY TECHNIKAL PROBLEM மீண்டும் தொடர்பு கொள்ளளவும் என்கிறது கணிணி.

5 அல்லது 6 முறை இப்படித்தான் நடந்தது. நிமிடத்திற்க்கு 5 ரூபாய்.
கணக்கிடவும் அவர்களது வருவாயை மற்றும் ஏமாற்றுதலை.

Regards,
Sengotaian.P.K.
Tirupur.

Arun Murugan said...

வணக்கம்!
சாமி! கடவுள் இல்லைன்னு சொல்ரவன்கூட இந்து கடவுளைதான் இல்லைங்றான்!

என்ன சாமி பன்றது! நம்ம பொறுமைதான் நம்பளோட பலம்! நம்ம சாமிங்க நமக்கு மேல! பணம் சம்பாதிக்கிறதுக்காக என்னவெல்லாம் ஆடுறாங்க! ஆட்டம் நிற்க்கும் வரை ஆடிட்டு போகட்டுமே! ஓரிஜினல் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களுமே ஆட்டி பார்த்தும் ஆடாத மதம்! இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது சாமி. ஆனா ஒரு சின்ன வருத்தம்! கடவுள் இல்லைன்னு சொல்லிட்டு இருக்கிற ஒருவன் ரம்ஸான் கஞ்சியை குடிக்கிறான், அவன் பின்னாடி நம் மாக்கள்(சாரி மக்கள்)காசுக்காக அலைகிறார்கள். கொள்கை இல்லாத தலைவர்களை போலத்தான் இந்த தினசரி செய்திதாள்கள், வார பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளும் இருக்கின்றன! அவர்களின் தர்மமே! இந்துக்களை வைத்து பணம் சம்பாதிப்பது.

நம்ம பொறுமைதான் நம்பளோட பலம்னு பீத்திக்கிட்டாலும் மறுபக்கம் நமக்கு சூடு சொரனை இல்லையோன்னு தோனுது! உண்மையும் இதுதானோ.....

அருண் முருகன்.

rasican said...

அன்பு வணக்கம் ,
இது போல ஆயிரம் முட்டாள் தனமான கர்பனைகளும் ,கண்மூடி தனமான நிகழ்சிகளும்
தினமும் வந்து கொண்டுதான் இருக்கிறது,என்ன செய்வது வெற்றி மட்டுமே நோக்கமாக கொண்டு நடத்தபடும்,
பொழுது போக்கு என்ற பார்வையிலே பார்க்க படுவதால் இது போல இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு
இருந்தாலும் இது போல நிகழ்வுகலை கண்டிக்க தான் வேண்டும் ,ஒரு ஜம்பது ஆயிரம் மெயில் அனுப்பி நம்
கண்டனத்தை தெரிவிக்கலாமா இந்த விஜய் டிவி க்கு

THEIVAM said...

good good good good appadi podu thairiyam iruntha neeya nanavil muslim matha sampirathayangalai patri vivathikka sollungal illai endral vijay TV yai iluthu mudivittu (mudikittu gateai) poga sollungal

nila said...

pl you know the truth..
gobinath himself is a christian and the programee
director also is christian.. they have to destablise of hindu religion for that they receive fund from foreign countries...ndtv is backed christian missionaries.

chandran

arul said...

thanks for sharing

naveenkumar said...

Enakkau oru nalla nermaiyana josiar irunthal koora mudiuma chennai il...

YourFriend said...

ஜோதிடர்களை பரீட்ச்சித்து பார்ப்பதே பாபம் என்று சாஸ்திரம் சொல்கிறது. பரிகசிப்பவர்களை என்னவென்று சொல்வது? 'ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி' என்று சொல்வார்கள். அது போல, நம்மவர்கள் மரக்கட்டை போல இருப்பதை இவர்கள் சாதகமாக்கி கொள்கிறார்கள். இவர்களாக திருந்த வேண்டும். இல்லையெனில் திருத்தப்படுவார்கள்.

- கோடியில் ஒருவன்

பத்மநாபன் said...

ஐயா வணக்கம் ,

லக்னதை வைத்து பார்த்தால் ,
விருச்சிக லக்னம் துலாம் ராசியாக இருந்த்தால் பலன் எப்படி இருக்கும் ?
இதற்கு கட்டுரையாளர் பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்

Anonymous said...

விஜய் டிவி முதல்ல ஆபாச படங்களை ஒளிபரப்பி விளம்பரம் தேடியவர்கள் தானே
இதவிட இன்னும் கீழ்தரமா போக மாட்டாங்களா ? போறாங்க. . .நிகழ்ச்சிகளின் நடுவர்கள் உணர்ச்சிவசப்பட நடிப்பது( சூப்பர் சிங்கர் ஜட்ஜஸ், கோபிநாத் உட்பட)
கண்ணீர்விட்டு அழுவது, நடுவில் சண்டைபோட்டு கொள்வது பின்னர் எதிர்பாராத விதமாக நடந்துவிட்டாதால் பிரேக்னு சொல்லிவிட்டு வழக்கத்துக்கு மாறா நிறைய விளம்பரங்களை போட்டு காசு பார்ப்பது.
தமிழ் கலாச்சாரத்தையும், ஹிந்து மத்தத்தையும் தூக்கிபிடிப்பதுபோல் மறைமுகமா இழிவுபடுத்தி பார்க்கும் வக்கிரம்.
ஊடகத்தை தவறாக பயன்படுத்தி சம்பாரிப்பதும், அதேசமயம் ஹிந்து மதத்தை மறைமுகமாக தூற்றுவதும் என இரண்டு மாங்காய்.
அரசிடம் சிக்காமல் இருக்க "செய்திகளே" இல்லை.
இந்த டிவியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்ப்பதை தவிர்க்க மக்களிடம் விழிப்புணர்வு வேண்டும்.
படிக்காதவன் ஏமாந்தா அதிலே பொருள் உண்டு ,படிச்சவனே ஏமாந்தா ? ஆடம்பரத்தால் மொழி, இன வரலாறு தெரியாதவன்.

Shanthi said...

All are nothing but nonsense

Shanthi said...

Mr.Gopinath is very much dominating

nhs said...

better we avoid to see vijay t.v. programmes. i already delete vijay T.V., and KalaiGnar (Group)channel my from t.v.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com