Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

ஜோதிட ராசி பலன்கள் ஒரு டுபாக்கூர் சமாச்சாரமா?

| Jan 2, 2012
வாசக அன்பர்களுக்கு வணக்கம். நேற்று விஜய் டி.வி.யில் நீயா? நானா? நிகழ்ச்சியில் ஒரு சுவாரஸ்யமான விவாதம் நடந்து கொண்டு இருந்ததை ஒளி பரப்பினார்கள். இந்த 2012  - ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் , எப்படி இருக்கும் என்பதை பற்றி. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பிரபலமான ஜோதிடர்கள் அந்த விவாதத்தில் கலந்து கொண்டு தங்கள் கணிப்புக்களை கூறிக்கொண்டு இருந்தார்கள்...   

ஜோதிடர்களிடமும் சில முரண்பாடுகள், அவரவர் கணிக்கும் முறை என்று - நகைச்சுவையும் , சுவாரஸ்யத்துக்கும் குறைவில்லாமல் நன்றாகவே நடந்து கொண்டு இருந்தது. 

வெறுமனே ராசியை மட்டுமே வைத்துக் கொண்டு - அவரவருக்கு இந்த மாதிரி நடக்கும், நடக்காது என்று அவர்கள் சொல்வதை வைத்து வேடிக்கையாகத் தான் இருந்தது. 

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஒரு ஜோதிடர் கடைசியில் போட்டு உண்மையை உடைத்தார். "இவங்க சொல்ற எதுவுமே சரி இல்லை. லக்கினம் எதுன்னு தெரியாம - ராசியை மட்டும் வைச்சுக்கிட்டு பலன் சொல்லக் கூடாது.  இது இங்கே வந்து இருக்கிற எல்லா ஜோதிடர்களுக்கும் தெரியும்". எல்லா ஜோதிடர்களும் ஒரு நிமிடம் அரண்டு போயிட்டாங்க.. அவங்களுக்கும் தெரிஞ்ச ஒரு அடிப்படை விஷயம்தான்... ஆரம்பத்துலேயே சொல்லி இருந்து இருக்கலாம்....

சார், எந்த ஜோதிடரும் பலன் சொல்வது - முதலில் அவர் லக்கினம் , மற்றும் பிறந்த ஜாதகம் வைத்து அங்கு இருக்கும் நவ கிரக நிலைகளை வைத்து - தற்போது கோசார ரீதியாக கிரகங்கள் எங்கு இருக்கின்றது என்பதைப் பொறுத்து மட்டுமே. நாள் இதழ்களில் வரும் ராசி பலன்கள் - அனைத்தும் பொதுவான பலன்களே. 

நம் வாசகர்களுக்கு இதை பலமுறை நான் நினைவுப் படுத்தி இருக்கிறேன். நடப்பு தசா , புக்தி மோசமாக இருந்து - பேப்பரில் நல்ல விதமாக போட்டு இருக்கிறார்களே....என்று உடனடியாக எந்த ஒரு அவசர முடிவுக்கும் வந்து விடாதீர்கள். பிறந்த ஜாதகப்படி நல்ல தசை ஓடிக்கொண்டு இருந்தால் - கோச்சார ரீதியாக மோசமாக இருந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம். 

அதைப் போலவே மோசமான தசை நடந்தாலும் - கோச்சார ரீதியாக நல்ல விதமாக இருந்தால் , ஓரளவுக்கு அந்த காலம் சமாளிக்க கூடிய அளவில் இருக்கும். 

எந்த பெரிய முடிவுகளும் எடுக்கும் முன்பு , ஜோதிடத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் - உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தை , நல்லதொரு ஜோதிடரிடம் காண்பித்து அதன் படி நடந்து கொள்ளவும். ராசி பலன்கள் என்று கூறப்படும் அனைத்தும் பொதுவான பலன்களே. அதை மட்டுமே முழுக்க நம்பி , எந்த பெரிய காரியத்திலும் இறங்க வேண்டாம்.

பொதுவில் மனிதன் துன்பத்தில் சிக்கி சீரழியும்போது தான் - ஜோதிடம் பக்கமே திரும்புகிறான். நல்ல ஜோதிடர்கள் அவனுக்கு ஆறுதல் அளிக்கும் படி, நம்பிக்கை அளிக்கும்படி பேசி ,  உரிய காலம் வரை பொறுத்துக் கொள்ளவும் ,  நற்பலன்கள் பெற தகுந்த இறை வழிபாடு பரிகாரங்களை சொல்லியும்  - வழி நடத்துவார்கள். 

கெட்ட பலன்கள் நடக்கும் என்று தெரிந்தாலும், அதை பட்டவர்த்தனமாக உடைத்து சொல்ல மாட்டார்கள். இந்த கால கட்டத்தில கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள் என்று பொத்தாம் பொதுவாக கோடிட்டு காட்டுவர்.

நேற்று வந்து இருந்த ஒவ்வொரு ஜோதிடரும், மிக நல்ல முறையில் பலன்கள் சொல்லி, அவரவர் இருக்கின்ற ஏரியாவில் அவ்வளவு பிரபலமானவர்கள். ஆனால் , விவாதத்தில் பங்கு கொண்டு இருந்த பொது ஜனங்கள் எல்லோரும் - ஜோதிட நம்பிக்கை மட்டும் கொண்டவர்கள் இல்லை. ஜோதிடர் வேண்டாம்னு சொன்னாலும், என் மனசு வீடு கட்டுன்னு சொன்னா , நான் கட்டுவேன் சார்னு ஒரு அம்மா சொன்னாங்க....!

 மிக சரியான வார்த்தை...

ஐயா, TV ல ஒரு டாக் ஷோ - புத்தாண்டு ஸ்பெசல் நிகழ்ச்சி- கலந்துக்கிட கையை பிசஞ்சுக்கிட்டு , கண்ணீர் விட்டு , கலங்கி - வாழ்க்கையில திக்கு தெரியாம நிற்க்கிறவங்க யாரும் இந்த புரோகிராமுக்கு போகப் போறது இல்லை. 

ஓரளவுக்கு மகிழ்ச்சியா, சந்தோசமா இருக்கிறவங்க - ஜோதிடம் பக்கமே வரப் போறது இல்லை.கல்யாணம் மாதிரி ரொம்ப பெரிய விஷயம் தவிர ஜோதிடம் அவங்களுக்கு தேவையே இல்லை. நேற்று வந்தவங்களும் அந்த மாதிரி தான் ஜோதிட நம்பிக்கை இருக்கு..... ஆனா இல்லைங்கிற மாதிரி ... 

சரி விடுங்க.... அவங்கள்ளே ஒரு சிலர் சில ஜோதிடர்கள் பேசுறதைப் பார்த்து - நக்கலா , நமுட்டு சிரிப்பு சிரிச்சதுதான் , கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தது. சரி, விடுங்க.... சந்தோசமா இருந்திட்டுப் போகட்டும். கடவுள் எல்லாரையும், இந்த மாதிரி சந்தோசமா வைச்சு இருக்கணும்...! 

அவங்க நினைக்கிறதும் சரிதான். எந்த காலத்துலே...இருக்கிறோம்? விஞ்ஞானம் வளர்ந்து உச்சத்தில இருக்குது..! கூடிய சீக்கிரம் எல்லா புதிர்களுக்குமே விடை கிடைக்கப் போகுது... இப்போ வந்துக்கிட்டு ராசி - ஜாதகம்னு எல்லாம் பேசுறாங்க பாருங்கன்னு திங்க் பண்ணி இருந்து இருப்பாங்களோ...?

சரி, நிஜமாவே இந்த ஜோதிடம் , ஜாதகம் எல்லாம் உண்மை தானா? நம்மோட வாசகர்களுக்கு , என்னுடைய பதில் என்னன்னு நான் சொல்லாமலே தெரியும்.

என்னுடைய பழைய பதிவுகளை படிச்சு இருக்கிறவங்களுக்கு தெரியும்.... 
ஒருவரது ஜாதகம், வாழும் வீடு , சுய எண்ணங்களும் அவற்றின் செயல்வடிவமும் - இந்த மூன்றும் தான் ஒரு மனிதனின் வாழ்வை தீர்மானிக்கிறது...

இதில் ஜோதிடமும், வாஸ்துவும் - பெரிய பம்மாத்து விஷயங்களாக மாறிவிட்டது - ஜோதிடம் அரை குறையாக தெரிந்த ஜோதிடர்களால் தான். 
ஒழுங்க படிக்க முடியாம, வேற எந்த வேலையும் செய்ய திறமை இல்லாம, ஒரு ஏமாத்து வேலையா ஜோதிடம் பக்கம் வந்தவங்க கூட அதிகமா இருக்கிறாங்க...!

ஒன்று - இவற்றை சரியாக கணிக்க கூடிய வல்லுனர்களை நாட வேண்டும்... இல்லையா.... நீங்களே இவற்றின் அடிப்படையை தெரிந்து கொள்ள ஆரம்பியுங்கள்... அதன் பிறகு உங்களுக்கே புரிய ஆரம்பிக்கும்... சுய ஜாதகம், தங்கி இருக்கும் வீட்டின் வாஸ்து - இதில் ஒன்று நன்றாக இருந்தாலே , மீதி இரண்டையும் நல்ல விதமாக மாற்றும் சக்தியாக அது இருக்கிறது....

ஜோதிடமோ , வாஸ்துவோ கூட வேண்டாம்... இறைவனை முழு மனதுடன் நம்பி - நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் கவனத்துடன் எடுத்து வந்தாலும் , நீங்கள் நினைத்ததை சாதிக்கலாம். 

வீட்டில் தினமும் தீபம் ஏற்றி - சந்தியா வேளைகளில் காலையும், மாலையும் அகர் பத்தி வாசனை நிரம்பும் வீட்டில் , ஒளியும் மணமும் நிறைந்து இருப்பது போல - மன மகிழ்ச்சியும், உடல் நலமும் நிரம்பி இருக்கும்.  தினமும் மாலை கவிந்து இரவு தொடங்கும் முன்பு பத்தி காட்டப்படும் வீட்டை, எந்த துர் ஆவிகளும் நெருங்காது. 

தினமும் ஏதாவது ஒரு வேருக்கு தண்ணீர் விடுவதை நித்திய கடமையாக கொள்ளுங்கள். அது ஒரு துளசி செடியாக இருக்கலாம், அல்லது உங்களின் நட்சத்திர விருட்சமாக இருக்கலாம். அல்லது உங்கள் வீட்டில் வளரும் வேப்ப மரமாக கூட இருக்கலாம்..

வீட்டுக்கு யார் ஒருவர் வந்தாலும் - வந்தவருக்கு அவர் உள்ளே நுழைந்ததும், குடிப்பதற்கு குடி தண்ணீர்  கொடுங்கள். இதை எந்த காலத்திலும் மறக்காமல் செய்யுங்கள்..!

உங்கள் வாழ்க்கை நிச்சயம் பலமடங்கு மேம்படும்...!

மற்றபடி , இந்த புது வருடம் - மனதில் நீங்காத மகிழ்வான நினைவுகளை நம் ஒவ்வொருவருக்கும் அளிக்கட்டும்..!

12 comments:

iniyan balaji said...

நண்பரே

நான் தொடர்ந்து தங்களது கட்டுரை களை படிப்பதுண்டு. அனைத்தும் மிகவும் அருமை.
நானும் நேற்று ஒளிபரப்பிய நீயா நானா வில் கலந்து கொண்ட ஜோதிடர்களில் ஒருவர்.மேலிருந்து இரண்டாவது இடம்
எனக்குத் தரப்பட்டது. நாங்கள் ஏற்கெனவே கூறினோம் லக்னத்தை வைத்து சொன்னால் தான் சரியாக இருக்கும் என்று. ஆனால் கோபி
நாத் அவர்களோ இல்லை இல்லை அதை கடைசியில் வைத்துக்கொள்ளலாம். இப்போதைக்கு ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் பலன் சொல்லுங்கள் என்றார். ஒருவேளை புத்தாண்டு க்கு எல்லோருக்கும் பலன் சொல்லலாம் என்பதனாலோ என்னவோ. அப்போதுதான் எல்லோரும் பார்ப்பார்கள் என்பதற்காக இருக்கலாம். நான் பேசியவை அனைத்தும் எடிட் செய்யப்பட்டன.எனக்கு ஆரம்பத்திலேயே இதில் கலந்து கொள்ள விருப்பமில்லை. எனது அலுவலகத்தில் என்னை அனுப்பி விட்டார்கள்.
எனவே திரைக்கு பின்னால் நடந்த விஷயங்கள் தங்களுக்கு தெரியாது என்பதனாலேயே இதைத் தெரியப்படுத்தினேன்.
மேலும் எனக்கு பிடிக்காத ஒரு விஷயமென்னவென்றால் ஜோதிடர்கள் நெகடிவாக பேசினதுதான்.பொதுவாக சொல்லும் போது அனைவரும் பயந்துவிடுவார்கள். என் வீட்டிலேயே கூட என் மகள் கன்னி ராசி.ஆக்ஸிடென்ட் ஆகும் எனும் போது என் மனைவியும் பயந்துவிட்டாள். பிறகு நான் விஷயத்தை எடுத்து கூறினேன்/நான் பாசிடிவாக சொன்ன பலன் கள் எடிட் செய்யப்பட்டன. பரவாயில்லை.புகழுக்கு ஆசைப்படாதவனாதலால் இதைப் பற்றி கவலை இல்லை.
தாங்கள் தொடர்ந்து சோதிடமும் ஆன்மீகமும் கலந்து படைக்கும் படைப்புக்கள் அற்புதமாக உள்ளது.
தொடர்ந்து எழுதுங்கள்.தாங்கள் எல்லா நலமும் , வளமும் பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

அன்புடன்

இனியன் பாலாஜி

KANNAN said...

அருமையா சொன்னீங்க சார். நேற்று அந்த நிகழ்ச்சியை பார்க்க முடியலை சார்.(கேபிள் பலி பண்ணிடுச்சு). ஜாதகம் உண்மை தான். ஆனா அதை முழுமையா தெரியாதவங்க தான் அதன் மேலுள்ள நம்பிக்கையை குறைச்சுடறாங்க. நன்றி சார்.

Arunsiva said...

வணக்கம்,
சார் நானும் அந்த நிகழ்ச்சியை கொஞ்ச நேரம் பார்த்தேன், நீயா? நானா? வாதத்திற்கு உரிய தலைப்பை எடுத்தால் நன்றாய் இருக்கும்.கடவுள் உள்ளாரா ? இல்லையா? ஜோதிடம் சரியா? தவறா ? இவை போன்ற விதண்டாவாதம் நிச்சயமாய் மத சீண்டலே! ( ரஜினியை பற்றி தெரிந்து கொள்ள யாராவது ரஜினி படம் பார்பார்களா? அதான் சின்ன பிள்ளைக்கு கூட தெரியுமே. அந்த மாதிரி தான்.) மற்றபடி கடலில்(கஷ்டங்களில்) தத்தளிப்பவர்களுக்கே துடுப்பு(ஜோதிடம்) தேவை, கரையில் நின்று பார்பவர்களுக்கு அல்ல.
தங்கள் பதிவுக்கு நன்றி.

redfort said...

Dear Sir,

Wish you a happy new year.

Neeya nana Nanum paarthu athirthu than ponen bcoz Ethartha jothidar SELVE kooda lagnam patri kooramal pothu rasi palangalai sonnuthu varutham alitthathu.

ONCE AGAIN HAPPY NEW YEAR TO YOU AND YOUR FAMILY.

Nanjil Kannan said...

பல விதமான சூழ்நிலைகளின் போராட்டங்களில தவிக்கும் போது உங்கள் ஒவ்வொரு பதிவும் ஆழ்ந்த அமைதியை, போராடும் வல்லமையை , நம்பிக்கையை அளிக்கிறது . அருமையான பதிவுகள் , கோர்வையான எழுத்துக்கள் .. மிக்க நன்றி :))) சற்று நேரம் கிடைப்பின் மின்னஞ்சகளுக்கு பதிளிடுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன் :)) நன்றி

அடியவன்

கண்ணன்

thiru said...

Very pleasant post in the very beginning of the year. Happy New Year!

perumal shivan said...

//நல்லதொரு ஜாதகரிடம் காண்பித்து அதன் படி நடந்து கொள்ளவும்.//
nanbare mele ullavaiyil jothidaridam ena maatrungal.

Anonymous said...

அருமையா சொன்னீங்க sir...

\\\வீட்டுக்கு யார் ஒருவர் வந்தாலும் - வந்தவருக்கு அவர் உள்ளே நுழைந்ததும், குடிப்பதற்கு குடி தண்ணீர் கொடுங்கள்.\\\

இது நல்ல விஷயம்...

நான் ஏன் என்று நண்பர்கள் இடம் கேட்டேன்.... தன்னி குடுக்ககுட கேள்விய என்று கேக்கறக...

நீங்க சொலுகா சார்...இதன் ரகசியம் என்ன சார்...

Kasi viswanathan said...

நன்று. நான் ஒரு கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். விதியை மதியால் வெல்லலாம் என்று கூறுகிறார்கள். அதன் உண்மை அர்த்தம். "விதி எனும் லக்னம் தெரியாத போது மதி எனும் ராசி மூலம் பலன் அறியலாம் ". இதை தவறாக அர்த்தம் கொண்டு விதியை வெல்லமுடியும் என்று கூறுகின்றனர். http://www.facebook.com/groups/smgtrust/

P.GOBINATH said...

I am interest to learn how to write horoscope. how to calculate karppacell kalam. and how to know about lucky number to kept names.
please reply to my mail id pgobinath24@hotmail.com

arun said...

Dear Sir,

Humbly request you to give link to Jothida Paadam 1 - Indhu laknan.

With regards

Arun
Muthur

vs prabhakar shambanthan said...

ஐயா, வணக்கம், வாழ்க வளமுடன்,தினந்தோறும் லக்னம் தெரிந்துகொள்வது எப்படி. தயவு செய்து சொல்லுங்கள் .

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com