Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

" பூத் கபூத் ஹை த்தோ க்யூ தன் சஞ் ஹை ; பூத் சபூத் ஹை த்தோ பி க்யூ தன் சஞ் ஹை "

| Oct 29, 2011
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQ61IQJQwpsEFawaQoBa_6BXJEifLXoiuPuKosm6nND-lbTYuP3
வாசக அன்பர்களுக்கு வணக்கம். ஒரு வாரமா , எந்த கட்டுரையும் எழுதாம இருந்ததுனால , கொஞ்சம் நிம்மதியா இருந்து இருப்பீங்க.... நிம்மதியை கலைக்கிறதுக்கு திரும்ப களத்துல இறங்குறோம்... வழக்கம்போல பொறுத்துக்கோங்க.. 

இன்னைக்கு ஒரு முக்கியமான சிவ ஆலயம் பற்றி பார்க்க விருக்கிறோம். நம் முன்னோர்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே, பெரிய பெரிய ஆலயங்களை ஏன் கட்டி இருக்கிறார்கள் என்கிற கேள்வி , நம் எல்லோருக்கும் எழும். மேலோட்டமாகப் பார்த்தால், ஒரு கல் சிலை, அதற்க்கு ஏன் இவ்வளவு அபிஷேகம், ஆராதனை.... எல்லோருமே கொஞ்சம் ஓவராக அலட்டிக் கொள்கிறோமோ, அந்த சிலை அவ்வளவு சக்தி வாய்ந்தது என்றால், நம் கண் முன்னே வெறுமனே அநியாயம் மட்டுமே செய்து கொண்டு இருக்கிற, மகா கேவலமான ஆட்களை எல்லாம், இந்த தெய்வம் ஒன்றும் செய்யாமல் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறது..?

இதோ, நம்ம ஊர் ( எந்த ஊருன்னு கேட்குறீங்களா.. அட எல்லா ஊர்லயும் தாங்க..) நகரசபை தலைவரைப் பாருங்க... கொஞ்ச வருஷம் முன்னாலே வரைக்கும் எப்படி இருந்த ஆளு...! அடுத்த வேளை சாப்பாடுக்கே காசு இல்லாம , கூச்சப் படாம நம்ம கிட்டேயே கை நீட்டுன ஆளு. அப்புறம் , அடிதடி , கட்டப் பஞ்சாயத்துன்னு பெரிய ஆளா ஆகிட்டாரு. அவரு வீட்டுக் காரி,  பாவம் ... கையெழுத்து கூட போடத் தெரியாது அந்த அம்மாக்கு. இன்னைக்குப் பார்த்தா, அந்த அம்மா கையிலே ஒரு ஹான்ட் பாக். அதுக்கு உள்ளே வெறும் ஆயிரம் ரூபாய் நோட்டு தான்.  அட என்ன தான்பா நடக்குது... !  புத்தம் புதுசா ஒரு டொயோட்டா போர்சூனா கார் தலைவரு வாங்கி இருக்காரு.... (இருபது லட்சமாமுல...!) அடுத்த தடவை , எவ்வளவு அமௌன்ட் சொன்னாலும் பரவா இல்லை, எம். எல். ஏ. சீட்டு வாங்கிடுவாராம்.

நம்ம பர்ஸைப் பாருங்க...ஒரு நூறு ரூபாய் அதுல எங்கேயாவது , நம்ம கண்ணுக்கு தெரியாம , தவறிப் போய் இருக்குமான்னு எத்தனை தடவை தேடி இருப்போம்..? என்னதுங்க.. பர்ஸ் வைச்சுக்கிடுறது இல்லையா, அட நீங்க நம்ம கேஸு.. எம்புட்டு அடி வாங்கினாலும் , உருப்படாத ஆளுங்க. நாம எல்லாம் ..!

பணத்தை பார்க்காதீங்க நண்பா! நம்ம மனசைப் பாருங்க..னு சொல்றீங்களா..! மனசை எல்லாம் யாரும் பார்க்கிறது இல்லை பாஸூ.. ! ஒரு உண்மையை தெரிஞ்சுக்கோங்க,... எல்லோரும் நம்மளை மாதிரி ஆசைப் படாம எல்லாம் இருக்க முடியாது. (ஆசைப் படாமலா ... நம்மளோட கையாலாகாத் தனம் அதுன்னு சொல்லுங்க). உங்க, அம்மாவாகட்டும், இல்லை உங்க மனைவி ஆகட்டும்.... இந்த கவுன்சிலர் , அல்லக் கைங்க மாதிரி எல்லாம் நீங்க ஆகணும்னு எதிர் பார்க்கிறது இல்லை. ஆனா, கிட்டத் தட்ட , உங்களை மாதிரியே இருக்கிற உங்க நண்பர்களோட கொஞ்சம் ஒப்பிட்டுத் தான் பார்க்கிறாங்க.. ! உங்க மனசு கஷ்டப் படக் கூடாதுன்னு, உங்களுக்கு ஆறுதல் சொல்ற மாதிரி பேசலாம். ஆனா, ரொம்ப பகட்டுத் தனம் இல்லைனா கூட, சில விஷயங்கள் எல்லாம் அடிப்படை னு நினைக்கிற வரை தான் இருக்கிறாங்க....  

சொந்தமா, சின்னதா ஒரு வீடு, ஒரு நாலு அஞ்சு சவரன் நகை, கார் கூட வேண்டாம்.. குறைந்த பட்சம்  ஒரு டூ வீலர்... அது போக மளிகை சாமானை , மாசத்துக்கு ஒரு தடவை மொத்தமா வாங்குறமோ, இல்லையோ - வாரத்துக்கு ஒரு தடவையாவது வாங்குற சக்தி... இது போதும்...! த்ஸ்.. அப்பா ... இப்போவே கண்ணை கட்டுதேன்னு நெனைக்கிறீங்களா... !    அப்படி நினைச்சீங்கன்னா , ஐயோ பாவம் நீங்க தான். முதல்லே இதுக்கு என்ன பண்ணனும்னு யோசிங்க. சம்பாதிக்கிற வழியைப் பாருங்க.... சும்மா ,சும்மா சாமி சாமின்னு கும்பிட்டுக் கிட்டே இருந்தா, கடவுள் கூட உங்களை மதிக்க மாட்டாரு.

நாட்டில காதல் தோல்வி, வாழ்க்கைத் துணை பிரிவு மாதிரி விஷயங்களுக்கு - பணம் இல்லாம இருக்கிறது தான் , மிக பெரிய காரணி. உங்களை விட வேற ஒருத்தர் நல்ல சம்பாதிக்க முடியும், இல்லை ஏற்கனவே சொத்து நிறைய இருக்குதுன்னு நினைச்சா, பொண்ணை பெத்தவங்க , நீங்க உருகி உருகி காதலிச்சாலும் , உங்களை கண்டுக்கவே மாட்டாங்க.. இதுல கொடுமை என்னன்னா , அந்த பொண்ணே காதலாவது, கத்திரிக்காயாவதுன்னு மனசு டக்குன்னு மாறிடுறதுதான்....

உங்களுக்கு பாசம் நிலைச்சு நிக்கணும்னா , நீங்க பணம் நிறைய சம்பாதிக்க கூடிய அளவுக்கு திறமைசாலியா இருக்கிறது அவசியமுங்கோ...


நல்லதுக்கு காலமே இல்லையா... ! நாம படிச்ச படிப்புக்கும், இருக்கிற திறமைக்கும் என்னதான் மதிப்பு? நம்மளை மட்டும் ஏன், இந்த ஆண்டவன் கண்ணு வைச்சு வஞ்சம் வைக்கிறான்னு தெரியலையே..ன்னு புலம்பிக்கிட்டே இருக்கிறதுல எந்த பிரயோஜனமும் இல்லை...!  இந்த கவுன்சிலர் , சேர்மன் மாதிரி எல்லாம் போக வேணாம். நாளைக்கே இந்த சேர்மன் நடுத் தெருவுக்கு வந்து நிப்பாரு. எவனாவது வந்து வெட்டு, குத்துன்னு நிப்பாங்க.. ! நமக்கு அந்த கருமம் எல்லாம் எதுக்கு?

உங்க, கண்ணு முன்னாலேயே - செய்யும் தொழிலை திருந்த செய்கிற, சில நல்ல உள்ளங்கள் - வாழ்க்கைலே நல்லதொரு நிலைமைல இருக்கிற ஆட்கள் இருக்க தான் செய்வாங்க... அவங்களை உங்க ரோல் மாடலா நினைச்சுக்கோங்க. நல்ல வழியிலேயே போவோம்...  நல்ல விதமா சம்பாதிக்கிற காசே, நம்ம கையிலே நிக்க மாட்டேங்குது.. அநியாயமா ஏன் போகணும்.. ஆனா, சம்பாதிங்க... !

ஒரு விதண்டாவாதத்துக்கு , ரொம்ப நாளா ஒரு விஷயம் சொல்லிக்கிட்டு இருக்கிறாங்க.. அமிதாப் பச்சன் KBC ல கூட பல தடவை சொல்லி இருக்கிறாரு.. " பூத் கபூத் ஹை த்தோ க்யூ தன் சஞ் ஹை ; பூத் சபூத் ஹை த்தோ பீ க்யூ தன் சஞ் ஹை "  இதுக்கு அர்த்தம் தெரியுமா? உன் பிள்ளை உருப்படாம போறவனா இருந்தா, நீ சம்பாதிச்சு என்ன பிரயோஜனம். சரி, உன் பையன் , திறமைசாலியா இருந்தா , நீ சம்பாதிச்சு அதனாலேயும் என்ன பிரயோஜனம்? அவனே பார்த்துக்கிடுவான் இல்லே?

அட, ஆமா இல்லைன்னு யோசிக்கிறீங்களா? ஏன் கிட்டேயும் இதே கேள்வி, என்னோட நண்பர் ஒருத்தர் கேட்டாரு. நான் என்ன சொன்னேன்னு நினைக்கிறீங்க?

இல்லை பாஸூ... நீங்க ஏன் தகப்பனா யோசிக்கிறீங்க? பிள்ளையா யோசிங்க.. நம்ம தகப்பன், நம்மளை " சபூத் " , திறமைசாலி ன்னு நினைச்சுக்கிட்டு , நம்ம கிட்ட பொறுப்பை விட்டுட்டாரு.. நாம , அதை நிரூபிக்க வேண்டாமா? பொறுப்பில்லாம  இருந்து - நாங்களும் போராடிப் பார்த்தோம், ஜெயிக்க முடியலை, நம்ம புள்ளைகளாவது..... ன்னு ஒதுங்கனுமா? போராடுவோம்..!

பாறையை தூக்கி வேற இடத்துல வைக்கணும் , இது தான் டார்கெட். யார் உங்களை கையிலே தூக்க சொன்னா, JCB  , கிரேன் வைச்சு தூக்கிடுறோம் இல்லே..? ஒவ்வொரு நோக்கத்திற்கும், அதற்கேற்ற வழிகள் , வலிகள் கண்டிப்பாக  இருக்கத் தான் செய்யும்.. ! கண்டுபிடிப்போம்..!

முதல்லே, நம்ம வாழ்க்கையிலே பொருளாதார ரீதியா, எந்த நிலைமைலே நாம இருக்க நினைக்கிறோம்னு முடிவு எடுங்க... டார்கெட் என்னன்னே தெரியாம , நீங்க எந்த ஸ்கோரை சேஸ் பண்ணப் போறீங்க... நம்ம வாசகர்கள்ளேயே , நிறைய பேர் இருக்கிறாங்க... என்ன லட்சியம் வைச்சு இருக்கிறீங்க ஒரு கேள்வி கேட்டா ... ? திரும்ப , திரும்ப ப்ளிங்க் பண்ணிக்கிட்டே தான் இருப்போம்...!

இதை, நீங்க அடுத்தவங்களை கேட்டு முடிவு எடுக்க முடியாது... சாகும் வரை , நம் உற்ற நண்பன், ஏன் ஜென்ம ஜென்மமா நம் உற்ற நண்பன் , யார் தெரியுமா? நம்ம மனசு தான். !

ஆத்மாவுக்கு அழிவில்லை , நீ எதை நினைக்கிறாயோ , அதுவாகவே ஆகிறாய்.. தத்வமசி  ! எல்லாம் ஞாபகத்துக்கு வருதா?

குறைந்த பட்சம் நம்ம இலக்கு என்னன்னு நீங்க தெளிவா முடிவு எடுங்க. அப்புறம், நீங்க பண்ண வேண்டியது, அதை அப்படியே உங்க ஆழ் மனசுக்கு பதிய வைங்க... நல்ல கோரிக்கைகள் , நல்ல லட்சியம்னா , உங்க மனசும், குதியாட்டம் போட்டுக்கிட்டு உங்களுக்கு உதவி பண்ணும்... தினம் , கொஞ்ச நேரம் உங்க ஆழ்மனசுக்கிட்டே பேசி பழகுங்க.. நீங்க போக வேண்டிய பாதை, செய்ய வேண்டிய முயற்சி எல்லாம், அது தெளிவா உங்களுக்கு காட்டும்...

தினம் நீங்க தூங்குறதுக்கு முன்னே , கொஞ்ச நேரம் - நீங்க என்னவாக விரும்புறீங்கன்னு தெளிவா, ஒரு கற்பனை காட்சி ஓடனும்.. உதாரணத்துக்கு ஒரு வீடு , கார்னு யோசிச்சா .. எவ்வளவு பெரிய வீடு, எத்தனை சதுர அடி இருக்கணும்? எத்தனை மாடி இருக்கணும்? போர்டிகோ எத்தனை அடி? கதவு எந்த மரம்? டைல்ஸ் என்ன கலர்.. பூஜை ரூம் எந்த பக்கம்? அதுலே என்ன படம் இருக்கு? சிலை இருக்கா?  சாப்பிடுற ரூம்ல எத்தனை டேபிள், சேர்.. சோபா என்ன சைஸ் ? எந்த மேக்? தூங்குற ரூம் .. AC எந்த கம்பெனி? இப்படி, பிட்டு பிட்டா , அணு அணுவா , நீங்க பத்திரம் பதிவு பண்ணி, வானம் தோண்ட ஆரம்பிச்சு... வீடு உங்க கண்ணு முன்னே கட்டுனா, என்ன பண்ணுவீங்களோ, அத்தனை விஷயமும் , உங்க கண்ணு முன்னாலே ஓடனும்... ஒரு சின்ன படம் மாதிரி ஓடனும்,... கார்னா , அது எந்த கலர், எந்த கம்பெனி , எத்தனை சீட்டர் , டாஷ்போர்ட்ல  எந்த மியூசிக் சிஸ்டம்..? இப்படி ஒன்னு விடாம , படம் ஓடனும். !

நம்ம பூசலார் - ஹிருதயாலீஸ்வரரர் கோவில் கட்டுனாரே..! மனக் கோவில் கொண்ட பூசலார் கதை தெரியும் இல்லே? அதே மாதிரி,,,,!

இதே மாதிரி , உங்க மற்ற இலட்சியங்களுக்கும், அது தொடர்பா ---- அணு அணுவா படம் பாருங்க.. தினமும், தூங்க முன்னாலேயும்... காலைலே தூங்கி எழுந்த பிறகும்... ஒரு பத்து நிமிஷம் போதும்... தூங்கி எழுந்த பிறகுன்னா..காலைலே ஏழரை மணிக்கா..? இல்லை பாஸூ... நாலரை மணிக்கு... ! நாம உருப்படணும்னா, முதல்லே பண்ண வேண்டிய விஷயம், சீக்கிரம் எழுந்துக்க ஆரம்பிப்பதுதான்.. சூரிய உதயம் பார்க்கும்போதே , உங்க மனசு பரவசப் படும்... எப்படி, கடலை பார்க்கிறப்போ, மனசுக்குள்ளே ஒரு நிர்மலமான எண்ணம் இருக்கிறதோ, அல்லது ஒரே விஷயத்தை மனசு அசை போடுமோ.. அதே effect சூரிய உதயத்துக்கும் உண்டு...!

இதை ஒரு 48 நாள் தொடர்ந்து பண்ணுங்க.. இப்படி செய்ய , செய்ய - உங்க ஆழ் மனசு உங்க லட்சியம் என்னான்னு புரிஞ்சுக்க ஆரம்பிக்கும். அதுக்கு அப்புறம், அது காட்டுற வழியைப் பாருங்க.. உங்களை பம்பரமா சுத்த விட்டு , வேலை வாங்கும்.... பஸ்சுல, ரயில்லே கூட்டத்துல நெருக்கி அடிச்சுக்கிட்டு , நொந்து போய் நீங்க போகும்போது கூட - உங்க லட்சிய விஷயங்கள் சம்பந்தமா, யாரவது ரெண்டு பேர் பேசிக்கிட்டு வருவாங்க.. உங்க காதும் அதை கேட்கும். ஏதாவது ஒரு புத்தகம் யாராவது படிச்சிக்கிட்டு வருவாங்க.. உங்க கண்ணும் அதைப் பார்க்கும்..!

மனசு , ஐம்புலன்களையும் விழிப்பா வைச்சுக்கிடும்...!கிடைக்கிற , பார்க்கிற ஒவ்வொரு விஷயமும் , உங்களுக்கு பயனுள்ளதா இருக்கும்.

அதுக்கு அப்புறம், நிஜமாவே - நீங்க உங்க லட்சிய பாதையில் , வேகமா பயணிக்க ஆரம்பிப்பீங்க..!

இன்னைக்கு , பல புகழ் பெற்ற பிரபலங்கள் , இந்த மாதிரி அனுபவத்தில இருந்தவங்க தான்.. ! ஒரு தடவை - புகழின் உச்சியில் இருக்கும்போது நடை பெற விருக்கும் சம்பவத்தை - ஒரு ஆயிரம் தடவையாவது மனசுக்குள் அசை போட்டு இருந்தவங்க தான்.." பத்தாயிரம் பேர் கூடி இருக்கிற அரங்கம்... நான் என்ன கலர் டிரஸ் போட்டு இருந்தேன். முதல் வரிசைலே யார் , யார் இருந்தாங்க.. அவங்க எந்த டிரஸ் ல இருக்கிறாங்க.. யார் , யார் கை தட்டுனா, விசில் அடிச்சா... இப்படி எல்லாமே... ! சார், உங்களுக்கு ஒன்னு தெரியுமா, இதே மாதிரி சம்பவம் , நான் எத்தனயோ தடவை பார்த்து இருக்கேன்"னு சொல்லுவாங்க..!

கனவு காணுங்கள்னு - டாக்டர் அப்துல் கலாம் சொல்றது இதைத்தான். சினிமா இயக்குனர்கள் காட்சியை கற்பனை பண்ற மாதிரி , நம்ம வாழ்க்கையை நாம கற்பனை பண்ணி பார்க்கிறப்போ, மனசு - நம்மளை சரியா இயக்க ஆரம்பிக்கும்.

இதை தான், தன் நம்பிக்கைனு சொல்லுறாங்க... ! "எவ்வளவு இடர் வந்தாலும், லட்சியப் பாதையில் - தொடர்ந்து செல்" னு சொல்றாங்க...!  அதாவது இந்த ஆழ் மனசுக்கும் , பிரபஞ்சத்துக்கும் ஒரு நேரடி தொடர்பு , இந்த தியானப் பயிற்சி ஏற்படுத்துது. ... ! ஆல்பா எனெர்ஜினு இதற்குப் பெயர்..! ஆழ்நிலை தியானப் பயிற்சியில்  இதை தான், உங்களுக்கு நல்லா , புரியும்படி - அடிப்படைலே இருந்து , கொஞ்சம் கொஞ்சமா கற்றுக் கொடுக்கிறார்கள்.. !  

அப்புறம், கறி, மீன் , மாமிசம் சாப்பிடுவதை - நிறுத்துங்க... ! உங்களுக்காக ஒரு உயிர் பிரியும்போது, அந்த கொலை செய்த பாவம், அந்த கோழியோ , ஆடோ -- அதன் குட்டிகளிடம் இருந்து தாயைப் பிரித்த பாவம், என்று பாவ மூட்டையை , நம் முதுகில் நாமே ஏற்றுகிறோம்..! அந்த ஸ்தூல உடல் , உங்களின் ஸ்தூல சரீரத்துக்கு கிடைக்கும் நல்ல பலன்களை , சமயத்தில் தட்டி விடும்..! எல்லா ஜீவன்களும் இறைவனின் பிள்ளைகள் எனும்போது,,, அந்த ஜீவனை துடிக்க வைக்கிற காரணத்தால், இறைவனும் நம் மேல் இரக்கப் படுவது கிடையாது..!

நான் வெஜ் சாப்பிடுறவங்க யாரும் நல்லா இல்லையானு கேட்குறீங்களா? இருக்கட்டும்..! நமக்கு இது தேவையா? நமக்கு கடவுள் அனுக்கிரகம் வேணுமா. வேண்டாமா? இது தான் கேள்வி..!

மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் புத்தகத்தை படிக்கும்போது , தெரிந்து கொண்ட ஒரு வியக்க வைத்த சம்பவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்..

திருநெல்வேலி யிலிருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் உள்ள ஒரு சிறிய ஊர் பொன்னாக்குடி .  இங்கு ஒரு புகழ் பெற்ற சிவ ஆலயம் உள்ளது. இறைவன் அம்மனுடன் அருணாச்சலேஸ்வரர் என்கிற நாமம் தாங்கி அருள் பாலிக்கிறார். கேரளாவுக்கு - இறைச்சிக்காக கொண்டு செல்லப் படும் மாடுகள் , இந்த சாலை வழியாகத் தான் கொண்டு செல்லப் படுமாம். அங்கே கரண்ட் ஷாக் கொடுத்து கொல்கிறார்கள் .. சாலை முழுக்க அம்மா , அம்மா என்று கதறியபடியே மாடுகள் கொண்டு செல்லப் படுகின்றன...! படிக்கிறதுக்கே மனசு கஷ்டமா இருக்கு இல்லே... !

நாம இறைச்சி சாப்பிடும்போது அந்த ஜீவன்களை கொல்லும்போது , அந்த ஜீவன்கள் உயிர் போகுதேன்னு துடிச்சு இருக்கும்.. அதை தான் நாமளும் சாப்பிடுறோம்.. மாடு ன்னா மட்டும் பதைக்குறோம், ஆடு , கோழின்னா பரவா இல்லையா..?

அந்த ஆண்டவனுக்கே நெஞ்சு பதறி இருக்கு... மேலே படிங்க.. 
சில ஆண்டுகளுக்கு முன் , பிரதோஷ பூஜை நடந்து கொண்டு இருக்கும் ஒரு பூஜை வேளையில் - பல பக்தர்களின் முன்னிலையில் நடந்த , உண்மை சம்பவம் இது...!

ஆலயத்தில் இருந்த அதிகார நந்தி - அம்மா அம்மா என்று வாய்விட்டு கத்தி இருக்கிறது... !

கல்லுக்கே மனசு உருகி இருக்கு, நடக்கிற கொடுமைகளைப் பார்த்து. நாமதான் , இன்னும் கல்லாவே இருக்கிறோம்..!

இந்த கோவில் சம்பந்தமா , தினமலர் வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பிலும், இந்த செய்தி உறுதிப் படுத்தப் பட்டு இருக்கு. கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து பாருங்கள்..


அதனாலே, நாம சொல்ல வர்றது என்னனு கேட்டீங்கன்னா, பெரிய பெரிய கோவில் கட்டுன நம்ம ஆளுங்க எல்லாம், மடத்தனம் பண்ணலை, இன்னும் அங்கே சக்தி இருக்குது.. உள்ள உள்ள சிலைகள் எல்லாம் , வெறும் கல் இல்லை.

உங்களோட நியாயமான கோரிக்கைகளை , நீங்களும் நியாயமாக இருக்கும் பட்சத்தில் - இறைவன் விரைவில் நிறைவேற்றுவான்.

மனமுருக , நீங்கள் நம்பிக்கையுடன் ஜெபிக்கும் மந்திர ஜெபங்கள் - நிச்சயம் வீணல்ல. இப்போது இருக்கும் உங்கள் நிலையை விட, பலமடங்கு அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கை உங்களுக்கு அமைய அது வழி அமைத்து தரும்.

ஓம் சிவ சிவ ஓம் - மந்திரத்தை தினமும் ஜெபிப்பது , உங்களுக்கு பல நன்மைகளைத் தரும்.வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் விரதம் இருந்து ஜெபிப்பது - சில குறிப்பிட்ட செயல்கள் சீக்கிரம் நிறைவேற வழி வகுக்கும்.
 அது என்ன எப்படின்னு , நாம் அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்..!

இது தவிர , ஓம் சிவ சிவ ஓம் மந்திரம் போலவே - அகத்தியர் அருளிய - லட்ச தடவை உருவேற்றுவதால் - நவ கிரகங்களை திருப்தி படுத்தும் , எளிய சக்தி வாய்ந்த மந்திரங்கள் உள்ளன. இதையும் அடுத்த கட்டுரையில் காண்போம்..

இப்படி மந்திர ஜெபங்களை பண்ணும் காலத்தில் - நாம் அசைவ உணவு தவிர்த்தல் , ஒரு அடிப்படையான விஷயம். இறைவனின் அனுக்கிரகம் நமக்கு பரிபூரணமாக கிடைக்க செய்யும் இந்த நல்ல விஷயங்கள் மேலும் நமக்கு எந்த விதத்தில் அனுகூலம் தெரியுமா?

வாழ்க்கையில யார் வேணும்னாலும் - ஜெயிக்கலாம், உயரம் தொடலாம். ஆனா, மேலே போனவங்க, அந்த வெற்றியை தக்க வைக்க, இந்த மந்திர ஜெபம் உதவும். அகந்தை , ஆணவம் - பதவி , பணம் வந்த பிறகு, சர்வ சாதாரணம் . ஆனால், மந்திர ஜெபம் பண்ணுபவர்களுக்கு - அகந்தை , புகழ் போதை ஏறாது.
முக்கியமாக வக்கிர , காம எண்ணங்கள் தலை தூக்காது. உச்சியில் இருந்து - பெண்களால் , முறை தவறிய உறவுகளால் - சீரழிந்து , அதல பாதாளத்தில் விழுந்த எவ்வளவு பேர் இருக்கிறார்கள். இந்த மந்திர ஜெபம், வலிய வரும் வழியல் கேசுகளையும் , ஒதுக்கச் செய்யும்..! 


நல்ல வருமானம், நல்ல ஆரோக்கியம், நிம்மதியான வாழ்க்கை - வேற என்ன வேணும் நமக்கு?


மொத்தத்தில் - நீங்களும் , உங்கள் குடும்பமும், உலகமும் பெருமைப் படத்தக்க வாழ்க்கை உங்களுக்கு அமையும்... ! அப்படி அமைவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது...! நீங்க முதல்லே உங்களுக்காக மனசு வைங்க..! ஆண்டவனும் உங்களுக்கு மனசு வைப்பான்.. ! 

என்ன , முயற்சி பண்ணிப் பார்க்கலாமா? 

அடப் போப்பா..உனக்கு இதே வேலையா போச்சு.. ! ( யாரும் இந்த கட்டுரையைப் படிக்காதீங்க பாஸூ..!)

| Oct 22, 2011
http://www.visvacomplex.com/image/paramacharyar.jpg
வாழ்க்கை முழுக்க , கம்பெனி, வேலை - சம்பளம் , அதுல குடும்பத்தை ஓட்டனும் ... இப்படியே அடுத்தவங்களுக்கு வேலை செஞ்சு , அப்படியே வாழ்க்கையை முடிச்சிடப் போறோமா? கடைசி காலத்துல, உடம்பு எல்லாம் தளர்ந்து , அடங்கின பிறகுதான் , நம்மளைப் பத்தி யோசிப்போமா..?


வாழ்க்கையிலே எவ்வளவோ வெட்டித்தனமான வேலைகள் எல்லாம் செஞ்சு இருக்கோம். கொஞ்ச நஞ்ச அநியாயமா பண்ணி இருக்கிறோம்?  ஒரு தடவை, உருப்படியான செயல் ஒன்னு செஞ்சு பார்ப்போமேன்னு தான் இந்த முயற்சி.

சில நல்ல காரியங்களை செய்யும்போது , அதனால் கிடைக்கும் பலன்கள் அபரிமிதமானது. சில ஆலயங்களுக்கு செல்லும்போது , ஒரு சிலர் ஏதாவது மந்திர ஸ்லோகங்கள் அடங்கிய தாள்களை நோட்டீசாக கொடுத்துக் கொண்டு இருப்பார்கள். நம்மிலும் நிறைய பேர், அதை வாங்கி இருப்போம். அவர்கள் ஏதும் பலன் இல்லாமல் , இதைப் போல காசை கரியாக்கும் வேலையை செய்வார்களா? நிச்சயமாக இருக்காது. இந்த மாதிரி செயல்கள் செய்யும்போது அவர்களுக்கு கிடைக்கும் ஆத்ம திருப்தி இருக்கிறதே , அதற்க்கு விலை மதிப்பே இல்லை.

ஒரு சிலருக்கு , இந்த மாதிரி தெய்வீக காரியங்களை செய்யும்படி ,யாராவது பரிந்துரை செய்தும் இருக்கலாம். இது எந்த விதத்தில் உதவும் என்பதை, இந்த கட்டுரை முடிவில் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். 

காஞ்சிப் பெரியவர் - அஷ்டமா சித்திகளை அடைந்த ஒரு அவதார புருஷர். ஆனால், துளி கூட கர்வமின்றி, அதை எந்த ஒரு சுய நலத்துக்கும் பயன் படுத்தாத மகான். அவரைப் போன்ற புண்ணிய ஆத்மாக்கள் எத்தனையோ மனிதர்களின் வாழ்க்கையை இன்றும் பண்படுத்திக் கொண்டு இருக்கின்றன.

பெரியவரின் பக்தர் ஒருவர் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான, உண்மை சம்பவத்தை இன்று நாம் பார்க்க விருக்கிறோம். 
காஞ்சி பரமாச்சாரியாரின் அடியார்களில் ஒருவர் ஒருமுறை கல்கத்தாவைச் சேர்ந்த சேட்டு ஒருவரை அவரிடம் கூட்டிவந்தார். அந்த சேட் மிகவும் வசதிபடைத்தவர். பக்தியும் பணிவும் கொண்டவர்.
அவருக்குக் கடுமையான நோயொன்று சிரமம் கொடுத்தது. இரைப்பைக்கு மேலேயுள்ள உணவுக்குழாயின் இயக்கத்தில் பாதிப்பு. அதன் விளைவாக உணவை வயிற்றில் துவாரம் போட்டு

அதன்மூலம் உணவு செலுத்தப்பட்டு வந்தது.

இருப்பினும் அதையும் தாங்கிக்கொண்டு வாழ்ந்தார். எந்த விதமான வைத்தியமோ, கோயில்களில் செய்யப்படும் பிரார்த்தனையோ, மாந்திரீகமோ எதுவுமே அவருக்குப் பலிக்கவில்லை.

அவர் பரமாச்சாரியாரைப் பற்றிக் கேள்விப்பட்டார். ஆகவே அவரைப் பார்க்க அழைத்துச்செல்லுமாறு அவருடைய நண்பராகிய அடியாரை வற்புறுத்தினார்.
பரமாச்சாரியாரிடம் சொன்னபோது அவர் முதலில் பார்க்க மறுத்துவிட்டார்.
அதனால் சொல்லாமல் கொள்ளாமல் அந்த அடியார் அந்த சேட்டை அழைத்துக்கொண்டுபோய் பரமாச்சாரியாரின் முன்னிலையில் நின்றார். 

அந்த அடியார் என்ன சொல்லியும் பரமாச்சாரியார் ஒன்றுமே பதில் சொல்லவில்லை.
இரவு வெகுநேரமாகிய பின்னர் அதைப் பற்றி பேசினார்.

ஆனால், இதற்கெல்லாம் ஒன்றும் செய்யமுடியாது; பக்தியுடன் இருந்து நல்ல காரியங்களை நிறையச்செய்யுமாறும் சொல்லிவிட்டார்.

அடியார் விடவில்லை. எப்படியும் இதற்கெல்லாம் விமோசனம்,  பரிகாரம் இருந்துதான் ஆகவேண்டும் என்று பணிவுடன் வாதிட்டு பரமாச்சாரியரை மிகவும் உரிமையுடனும் நம்பிக்கையுடனும் வற்புறுத்தினார்.

 
சிறுது நேரம் மௌனமாக இருந்த பரமாச்சாரியார், அந்த சேட்டிடம் தாம் சொல்வதை அப்படியே செய்யுமாறு வாக்குறுதி கேட்டார். சேட் ஒத்துக்கொண்டார்.
இந்து சமயத்திலுள்ள பதினெட்டுப் புராணங்களையும் பதினெட்டுத் தனித்தனிப் புத்தகங்களாக சமஸ்கிருதத்தில் அச்சிட்டு, தகுதியுடையவர்களாகிய வேத நூல் படிப்பவர்களுக்கு இலவசமாகக் கொடுக்கவேண்டும் என்று பரமாச்சாரியார் ஆணையிட்டார். 

 பரமாச்சாரியாரின் பாதங்களில் விழுந்து வணங்கி, சேட் அந்த நற்காரியத்தைத் தாம் செய்வதாக ஒத்துக்கொண்டார். பரமாச்சாரியர் அந்த சேட்டை ஆசிர்வதித்துப் பிரசாதம் வழங்கச்செய்தார்.
கல்கத்தாவுக்குச் சென்ற சேட், தம்முடைய ஐந்து மாடிக்கட்டடத்தின் மேல்மாடி முழுவதையும் புராண வெளியீட்டிற்காக ஒதுக்கினார். பல சாஸ்திர விற்பன்னர்களை கூட்டுவித்தார். அவர்களின்மூலம் தரமான காகிதத்தில் சுத்தமாக அச்சிட்டுப் பெரிய பெரிய புத்தகங்களாக வெளியிட்டுக் கொடுத்தார்.

 'பக்தியே விலை' என்றும் குறிப்பிடச் செய்தார், சேட்.    
பதினேழு புராணங்கள் அச்சிடப்பட்டுவிட்டன.
ஆனால் சேட் வழக்கம்போல் குழாய்மூலமே உணவு செலுத்தப்பட்டு வந்தார்.

ஆனாலும்கூட சேட் அதைப் பற்றி கவலையும்படவில்லை. அவர்பாட்டுக்கு புராண வெளியீட்டை நம்பிக்கையுடன் ஒரு கர்மயோகமாகச் செய்தார்.

கடைசியாக ஸ்கந்த புராண வெளியீட்டு வேலை தொடங்கியது.

 
அவ்வளவுதான்.
திடீரென்று ஒருநாள் சேட் சாப்பாட்டை வாயால் மென்று விழுங்கி சாப்பிடத் துவங்கினார்.

நன்றாக ரசித்து ருசித்துச் சாப்பிட்டார்.

அதுவரை தீராமல் இருந்த நோய் பரமாச்சாரியார் பேரருளால் நீங்கியது.

பரமாச்சாரியாரைப் போய்ப் பார்த்து விபரத்தைச் சொன்னார்கள்.

பரமாச்சாரியரின் ஆற்றலை வியந்து அவர் தந்த வரத்தால் சேட்டின் நோய் நீங்கிப் பிழைத்துக் கொண்டதாக அந்த அடியார் சொல்லி, 'பரமாச்சாரியார்தான் கடவுள் என்றும் சொன்னார்.

ஆனால் பரமாச்சாரியாரோ ரொம்பவும் 'கூலாக'ச் சொல்லியிருக்கிறார்.

"நம்ம நாட்டோட தர்ம சாஸ்திரங்களோட சக்தியல்லவா அவரக் காப்பாத்தியிருக்கு?"


அதுதான் பெரியவர்.  


சரி, இதைப் போல நாமும் ஏதாவது செய்யலாமே. தனி ஒரு மனிதனாக செய்வதை விட, ஒரு குழுவாக இயங்கி செய்ய முயற்சிக்கலாமே!நமது சகோதரர் , ஆன்மீக கடல் வீரமுனி ஐயா அவர்கள், ஓம் சிவ சிவ ஓம் மந்திரத்தை, ஆன்மீக அன்பர்களுக்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளார். என்னால் முடிந்த அளவு நானும் உதவுவதாக உறுதி அளித்துள்ளேன். நீங்களும் உதவ நினைத்தால், தாரளமாக கை கோர்க்கலாம். என்னுடைய வேண்டுகோள், இதைப் பரப்பும் முன்பு, நாம் ஒவ்வொருவரும் இதை ஜெபிக்கத் தொடங்கி, இதன் சக்தியை மனப் பூர்வமாக உணர்ந்து , பின் மற்றவர்களுக்கும் எடுத்து செல்ல உதவலாம்.   

தமிழ்நாட்டில் இருக்கும் 32 மாவட்டங்களில் மாவட்டத்துக்கு ஒரு சிவ அம்சமுடைய துறவி கிடைப்பது அரிதாக இருக்கிறது.இந்த துர்பாக்கிய சூழ்நிலையை 1980களில் உணர்ந்த மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் ஒரு ஆராய்ச்சி செய்தார்;குடும்பஸ்தராக  இருக்கவேண்டும்;மந்திர சக்தியும் கைகூடவேண்டும்;துறவு நிலையை எட்டாமலேயே சிவனருள் கிட்ட வேண்டும்.தினசரி வாழ்க்கை வேகமாக இருக்கிறது.அதற்கேற்றாற்போல் எளிமையான,ஆனால் சர்வ சக்திவாய்ந்த சிவ மந்திரம் ஏதும் உண்டா? என பல சிவனடியார்களைத் தேடி வேண்டினார்.அவரது பல வருடத் தேடலின் முடிவாக நமக்குக் கிடைத்த சிவ வைரம் “ஓம்சிவசிவஓம்”

இரண்டே இரண்டு கட்டுப்பாடுகளே இந்த மந்திரத்தை ஜபிக்க உண்டு.வேறு எதுவும் தேவையில்லை;

1.21 வயது நிரம்பியிருக்க வேண்டும்.

2.அசைவம் சாப்பிடக்கூடாது.

பிரயாணம்  செய்யும்போது, வாகனம் ஓட்டும்போது, நடந்துகொண்டு ஜெபிக்கவேண்டம். கிரிவலம் சுற்றும்போது, ஆலய வலம் வரும்போது, பாத யாத்திரை, சபரிமலை யாத்திரை செய்யும்போது செய்யலாம்.

எந்த ஒரு மந்திரமும் 1,00,000 தடவைக்கு மேல் உரு (ஜபம்) ஏற்றியபின்னரே வேலை செய்யும்.ஓம்சிவசிவஓம் 10,000 தடவை சொல்வதற்குள் நம்முடைய கடுமையான நெருக்கடியிலிருந்து நம்மை மீட்கத் துவங்கும்;கவனிக்கவும் துவங்கும்.இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தையும் 1,00,000 தடவைக்கு ஜபிக்க வேண்டும்.

எப்படி ஜெபிக்கவேண்டும்?

மஞ்சள்விரிப்பில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;இரண்டு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ஐந்துமுக ருத்ராட்சம் வைத்து,கைகளை மடக்கிக் கொள்ள வேண்டும்.நெற்றியில் விபூதி(திருநீறு) பூசிக்கொண்டோமா? என்பதை பார்த்துக்கொள்ளவும்.செல்போன்,டிவி,காலிங் பெல் இவற்றை மவுனமாக்கிக் கொள்ள வேண்டும்.(அல்லது அதிகாலை 4.30 முதல் 6.00 மணி வரையிலும் மற்றும் இரவு தூங்குவதற்கு முந்திய ஒரு மணிநேரம் வரையிலும் எந்த தொந்தரவும் இராது)

முதலில் ஓம் (உங்களின் குலதெய்வத்தின் பெயர்) நமக

அடுத்து ஓம் கணபதியே நமக

அடுத்து ஓம் (உங்களின் இஷ்ட தெய்வத்தின் பெயர்) நமக என வரிசையாக மனதுக்குள்,உதடு அசையாமல் ஜபிக்க வேண்டும்.

இப்போது உங்களின் நியாயமான ஆசை என்ன வென்பதை நினைத்துக் கொள்ள வேண்டும்.

(சில உதாரணங்களைப் பார்ப்போம்:இந்த வருடம் எனக்கு பதவி உயர்வு கிடைக்க வேண்டும்

நான் விரும்பும் படிப்பில் கவுன்சிலிங்கில் சேர வேண்டும்

எனது இப்போதைய மாத வருமானம் ரூ.15,000/-இது ரூ.45,000/-ஆக உயர வேண்டும்.

எனது நோய் விரைவில் தீர வேண்டும்

எனது பிரிந்த தம்பி என்னிடம் வந்து பேச வேண்டும்

எனது 2 லட்சம் ரூபாய் கடன் தீர வேண்டும்

எனக்கு வர வேண்டிய பணம் விரைவில் கிடைக்க வேண்டும்

என உங்களுக்கு விருப்பமான,நியாயமான,யாருக்கும் தீங்கு தராத ஒரு கோரிக்கையை நினைத்துக்கொள்ளவும்.ஒரு முறை நினைத்தால் போதுமானது)

பிறகு,ஓம்சிவசிவஓம் ; ஓம்சிவசிவஓம்; ஓம்சிவசிவஓம் என தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் ஜபித்து வர வேண்டும்.

சிலருக்கு 10 நாளுக்குள் பலன் கிடைக்கத் துவங்கும்;சிலருக்கு 45 நாளாகலாம்;சிலருக்கு ஆறுமாதங்கள் ஆகலாம்;சிலருக்கு ஓரிரு வாரங்களிலேயே பலன் கிடைக்கத் துவங்கும்.தமிழ்நாடு மாநிலத்தில் ஏழு கோடி தமிழர்கள் வாழ்ந்துவருகிறார்கள்.தமிழ்நாடு தவிர,பிற மாநிலங்களிலும்,அயல்நாடுகளிலும் சுமார் 3 கோடித்தமிழர்கள் வாழ்ந்துவர,ஆக தமிழர்களின் எண்ணிக்கை 10,00,00,000(பத்து கோடி)பேர்களாகும்.இவர்கள் அனைவருக்கும் ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம்  புனிதமான சிவத்தொண்டினைச் செயல்படுத்திட விரும்பும் ஆன்மீகக்கடல் வாசகர்கள் மூன்று விதங்களில் செயல்படமுடியும்.
 
கீழே உள்ள படத்தை க்ளிக் செய்து , மவுசில் ரைட் க்ளிக் செய்து View  Image செலக்ட் செய்யுங்கள். அதன் பிறகு அந்த படத்தை திரும்ப க்ளிக் செய்தால், படம் பெரியதாக தெரியும். 


1.உங்கள் ஊரில் இருக்கும் பழமையான சிவாலயங்களில் பிரதோஷ நாட்களில் மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை ஓம்சிவசிவஓம் ஜபிக்கும் முறையை நோட்டீஸாக அச்சடித்து விநியோகிக்கலாம்.

2.ஓம்சிவசிவஓம் நோட்டீஸ் அச்சடிக்க அன்பளிப்பு அனுப்பலாம்.1000, 2000, 5000, 10,000 50,000 எண்ணிக்கையில் அச்சடிக்க அன்பளிப்பு தரலாம்.(அல்லது) உங்கள் ஊரிலேயே உங்கள் நேரடி மேற்பார்வையில் அச்சடித்து,ஆன்மீகக்கடல் முகவரிக்கு அனுப்பலாம்.

3.வெளிமாநிலம்,வெளி நாடுகளில் இருப்பவர்கள் பதிவிறக்கம் செய்து,உங்கள் பகுதியில் அச்சடித்து விநியோகிக்கலாம்.

அச்சடிக்க இயலாதவர்கள், விநியோகம் செய்ய மட்டும் விருப்பம் உள்ளவர்கள் தங்களின் அஞ்சல் முகவரியை aanmigakkadal @gmail .com  அனுப்பவும்.தங்களுக்கு ஓம்சிவசிவஓம் நோட்டீஸ் அனுப்பி வைப்போம். பழமையான சிவாலயங்களில் பிரதோஷ நாட்களில் , வரும் பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். 


இதைத் தவிர, நாங்களே நேரடியாக - சதுரகிரியிலும், அண்ணாமலையிலும், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திலும் - சில குறிப்பிட்ட தினங்களில் , நோட்டீஸ் அச்சடித்து கொடுக்க முடிவு செய்துள்ளோம். விருப்பம் இருப்பவர்கள் உங்களால் இயன்ற உதவிகளை செய்யலாம்.

நோட்டீஸ் தான் அடிச்சு வெளியிடனும்னு இல்லை. உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு , தெளிவா எடுத்துச் சொல்லலாம். இந்த பதிவை, இணையத்தின் மூலை முடுக்குகளுக்கும் - தமிழ் கூறும் வாசகர்களின் பார்வைக்கு    எடுத்துச் செல்ல உதவினாலே , அது நீங்கள் செய்யும் மகத்தான உதவி.

ஓம் சிவ சிவ ஓம் !

இது, நாம் செய்யும் காரியம் அல்ல. நம்முள் புகுந்து இயக்கிக் கொண்டு இருக்கும் அந்த சிவத்தின் வேலை தான் ! 

இவ்வளவு தூரம் , திரும்ப திரும்ப சொல்றேனேங்கிறதுக்காகவாவது , நம் வாசகர்கள் - ஓம் சிவ சிவ ஓம் - ஜெபிக்க ஆரம்பிப்பீங்கனு நம்புறேன்..!

நமக்கு ஒன்னும் நல்லது நடக்க மாட்டீங்குதேனு புலம்புறதை விட, நம்ம கஷ்டங்கள் தீர , கடவுள் நமக்கு ஒரு சந்தர்ப்பம் , வலிமையான ஆயுதம் அல்லது கவசமா,  இந்த மந்திரம் என்னும் வரத்தை கொடுத்து இருப்பதாக, நம்புங்க..! நடக்கும் சம்பவங்கள் - மிக நன்மையாக முடிய, இறை அருள் புரியட்டும்..! 

வாழ்க அறமுடன் ! வளர்க அருளுடன் !

சுமார் மூவாயிரம் வருடங்கள் பழமையான அற்புத சிவ ஆலயம்

| Oct 20, 2011
வாசக அன்பர்களுக்கு வணக்கம். இன்று நாம் பார்க்கவிருப்பது , நாம் நினைத்துப் பார்க்க இயலாத , மூவாயிரம் ஆண்டுகள் பழமையான , இன்றும் அற்புத பலன்களை அள்ளித்தரும் சிவ ஆலயம் பற்றி. நமக்கு வரலாறு தெரிந்தவரை , ஒவ்வொரு சக்கரவர்த்தியும், அரசவையை அலங்கரித்த அறிஞர் பெருமக்களும் , ஆன்மீக அன்பர்கள் அத்துணை பெரும் , இந்த சிவனை தரிசித்து இருக்க கூடும். நமது வாசகர்களும் தெரிந்து கொள்வதற்காக இந்த பதிப்பு பகிர்ந்து கொள்ளப்படுகிறது. 

தமிழர்களின் கலாச்சாரமும், இந்து மதத்தின் புராதனமும் எவ்வளவு பழமையானது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மனித நாகரீகம் தோன்றிய காலந்தொட்டே , இருந்த சிவ வழிபாடும், அவர்களின் சிற்பக் கலையையும் , நமக்கு தெரிந்து கொள்ள - இது ஒரு மிகப் பெரிய சான்று என்பதில் சந்தேகமில்லை.

நமது இந்து மதக் கோட்பாட்டின்படி, நாம் திரும்ப திரும்ப பிறவி எடுப்பது உண்மையானால், நாம் முன் ஜென்மத்தில் வழிபட்ட ஆலயங்களுக்கு , இப்போதும் போகும்போது , நமது சில பூர்வ ஜென்ம கர்மங்கள் நேர்த்தியாகும். அதனாலதான் சதுரகிரி , அண்ணாமலை போன்ற யுக யுகங்களாக தொன்மை வாய்ந்த ஆலயங்களுக்கு செல்லும்போது , நமக்கும் பல நன்மைகள் கிடைக்கின்றன என்பது என் யூகம். அந்த வகையில், இந்த ஆலயமும் , இங்கு அருள் பாலிக்கும் சிவனும் - ஆயிரக்கணக்கான வருடங்களாக , நம்மையும் ஆசீர்வதித்து இருக்க கூடும். 

வாய்ப்பு கிடைக்கும்போது , ஒரு முறை சென்று வாருங்கள். ஏற்கனவே சென்று வந்தவர்கள் , உங்கள் அனுபவத்தை நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். 

இனி, ஐயா ஆங்கரை கிருஷ்ணன் அவர்கள் கட்டுரை , குடி மல்லம் - சிவ ஆலயம் பற்றி : 
  
 


உலகம் முழுதும் இறைவனை வழிபடுவதில் தொன்மையானது லிங்கவழிபாடு ஆகும். தற்போதைய நிலையில் மிகவும் பழமையான லிங்கங்கள் என்பது
1. ஆந்திரா குடிமல்லம் பரசுராமேஸ்வரர் ஆலய லிங்கமும்
2. “பிடா” எனுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டு லக்னோ அருங்காட்சியகத்தில் உள்ள பஞ்சமுக லிங்கமும் ஆகும்.

 நாம் முதலில் குடிமல்லம் லிங்கம் பற்றி விரிவாகக் காண்போம்.   ஆந்திர மாநிலத்தில் குடிமல்லம் என்ற ஊரில் உள்ள பரசுராமேசுவரர் கோவிலில் வழிபடப் பெறுகிறது. இவ்வூர் சென்னைக்கு அருகே காளஹஸ்தியிலிருந்து 21 கி.மீ., தொலைவிலும், ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு தென் கிழக்கே 11 கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்வூருக்கு சற்று தொலைவில் சுவர்ணமுகி ஆறு ஓடுகிறது.
குடிமல்லம் பரசுராமேசுவரர் கோவில் மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் போற்றி பாதுகாக்கப்படுகிறது. `குடி’ என்றால் தெலுங்கில் `கோவில்’ என்பது பொருள். இக்கோவிலை 1903ம் ஆண்டு கல்வெட்டு அறிஞர் வெங்கய்யா ஆய்வு செய்து இதன் சிறப்பினை எடுத்துக் கூறினார். இக்கோவிலில் காணப்படும் கல்வெட்டுகளின் வரலாற்றுச் சிறப்பினை தொல்பொருள் ஆய்வு அறிஞர் கோபிநாதராவ் எடுத்துரைத்தார்.

தொன்மைச் சிறப்புமிக்க பரசுராமேசுவரர் கோவில், குடிமல்லம் சிவபெருமானை லிங்க வடிவிலே கண்டு போற்றி வழிபடுகிறோம். மிகவும் தொன்மையான அற்புத வடிவம் கொண்ட சிவலிங்கம், இக்கோவிலில் 1973ம் ஆண்டு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டபோது வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப் பொருட்கள், கல்வெட்டுகள் ஆகியவை கிடைத்தன. இக்கோவிலின் தொன்மைச் சிறப்பினை ஆய்வாளர் ஐ.கே.சர்மா என்பவர் தமது `சைவ சமய கட்டடக்கலை வளர்ச்சி’ என்ற ஆங்கில நூலில் ஆய்வுக்கட்டுரையாக எழுதியுள்ளார். இனி இக்கோவிலை காண்போம்!

கிழக்கு நோக்கிய திருக்கோவில். கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்ற அமைப்புகளை உடையதாக விளங்குகிறது. தொண்டை நாட்டுப் பகுதிக்கே உரிய தூங்கானை வடிவில் (கஜபிருஷ்டம்) கருவறை அமைந்துள்ளது. கருவறையின் பின்பகுதி வட்டவடிவமாக அமைந்திருக்கும். கருவறையின் தேவகோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பெருமாள், பிரம்மா, துர்க்கை ஆகிய தெய்வ வடிவங்கள் அமைந்துள்ளன. இவற்றில் தட்சிணாமூர்த்தி வடிவம் சிறப்பானது. தமது மேலிரு கரங்களில் அட்சமாலையும், கெண்டியையும் தாங்கியிருக்கிறார். இடதுமேற்கரத்தில் கெண்டியைத் (கமண்டலம்) தாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
கோவிலில் நுழைந்து செல்லும்போது மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஒன்றுக்கொன்று சற்று பள்ளமாக அமைந்திருப்பதால் `குடிபள்ளம்’ எனவும் இப்பகுதியில் அழைக்கின்றனர். கோவிலில் அம்மன் `ஆனந்தவல்லி’ என்ற பெயருடன் தனிச்சன்னிதியில் அங்குசம் – பாசம், அபய – வரத கரங்களுடன் கருணை பொங்கும் முகப்பொலிவுடன் அருள்மழை பொழிகிறாள். திருச்சுற்றில் பரிவார கோவில்கள் உள்ளன. இவற்றில் வடகிழக்கில் காணப்படும் சூரியன் திருமேனி தொன்மையானதாகும். நுழைவு வாயிலில், மேல் கோபுரம் இல்லாமல் தட்டையாக உள்ளது.
 இக்கோவிலில் 25க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பிற்கால பல்லவ மன்னர்கள், பான அரசர்கள், சோழமன்னர்கள், யாதவராயர்கள் இக்கோவிலைப் போற்றி சிறப்பான வழிபாட்டிற்கு தானமளித்ததைக் கல்வெட்டுகளின் மூலம் அறிகிறோம். கல்வெட்டுகளில் இவ்வூர் திருவிப்பிரம்பேடு பேரம்பேடு என அழைக்கப்படுகிறது.


இங்கு கோவில் கொண்டுள்ள இறைவன் பரசுராமேசுவரமுடைய நாயனார் என்றும் பரசுராம மகாதேவர் எனவும் அழைக்கப்படுகிறார். முதலாம் ராஜராஜசோழனால் இக்கோவிலில், விளக்கு எரிக்கவும், இறைவனுக்கு அபிஷேகம் செய்ய கிணறு அமைக்கவும் தானம் அளிக்கப்பட்டது. விக்கிரம சோழன் காலத்தில் இக்கோவில் திருப்பணி செய்யப் பெற்று மீண்டும் கட்டப்பட்டன என்பதை அறிய முடிகிறது. கருவறையில் மிகவும் அற்புதமான சிவலிங்க வடிவம் வழிபடப் பெறுவதைக் காணலாம்.

 
அருகிலுள்ள திருப்பதி மலைத்தொடரில் காணப்படும் மிக மென்மையான சிவப்பு நிற எரிமலைக் கல்லால் இந்த லிங்கம் செய்யப்பட்டுள்ளது. இக்கல்லினைப் பளபளப்பாக மெருகேற்றி, மூலஸ்தானத்தில் தரையில் எழுச்சியுற்றுக் காணப்படும் பாறையைக் செவ்வக வடிவில் செதுக்கி, நடுவில் குழிவாகக் குடைந்து பிண்டிகையை (பீடத்தை) உருவாக்கியுள்ளது. லிங்கம் இப்பிண்டிகையில் பொருத்தப் பட்டுள்ளது. இந்த லிங்கம் 5 அடி உயரமுள்ளது.


லிங்கம் மேலே சற்று விட்டு 7கோணமாக செதுக்கப்பட்டு, முன்புறப் ப்குதியில் சிவபெருமானின் அழகிய உருவம் செதுக்கப்பட்டுள்ளது.சிவபெருமான் மனித உருவில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இரண்டு கரங்கள். வலது கரத்தில் உயிரற்ற ஆட்டினை தலைகீழாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார். இடது கரத்தில் வாய் குறுகிய குடுவையைப் பிடித்துக் கொண்டிருக்கிறார். இடது தோளின் மீது `பரசு’ எனும் கோடரியை சாய்த்து வைத்துக் கொண்டிருக்கும் கோலத்தில் காணலாம். சிவனது தலை முடியமைப்பு சடையாக இன்றி நீண்ட புரி குழல்களாலான கற்றைகளாக உள்ளது. இக்குழற்  கற்றைகளையே, தலையைச் சுற்றிலும் தலைப்பாகை அணிவது போல் அலங்கதித்துக் கொண்டுள்ளார்.

கன்னக் கதுப்பெலும்புகள் உயர்ந்தும், மூக்கு சற்றே சப்பையாகவும், நெற்றி குறுகலாகவும், கண்கள் சற்றே பிதுங்கியும் அமைந்துள்ளது. கண்கள் சற்றே சரிந்து பார்க்கிறது. இது வேத நெறியில் “விருபாக்ஷன்” எனும் சிவநாமத்திற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. சிவனின் காதுகள் துளையிடப்பட்டுள்ள வடிகாதுகளாக, தோள்களைத் தொடும் வகையில் தொங்குகின்றன.
அத்துளைகளில் குண்டலங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இரு கைகளிலும், முழங்கைக்கு மேலே அங்கதா எனப்படும் அழகிய தோள்வளைகளும் மணிகட்டுக்கு மெலே பல வடிவங்களில் செய்யப் பட்ட ஐந்து ஐந்து வளையலகளும் அணிந்துள்ளார். சிற்பத்தை நுணுக்கமாக நோக்கினால், சிவன்  மிக மெல்லியதான நெய்யப்பட்ட இடையாடைஉடுத்தியுள்ளது தெரியும். ஆயினும் உள்ளுருப்புகள் தெரிவதாக உள்ளது, ஆனால் தினசரி பூஜையில் மேலாடை சார்த்தியே தரிசனம் தரப்படும்.

தலையில் ஜடாபாரமாக முடி அலங்காரம். காதுகளில் பத்ர குண்டலங்கள். மலர்ந்த முகத்துடன் காட்சி தருகிறார். சிவன் அபஸ்மார புருஷனின் அல்லது அரக்கனின் தோள்கள் மீது தன் கால்களை விரித்து ஊன்றி நிற்கிறார். கூன் விழுந்து குறுகிக் காட்சியளிக்கும்  அபஸ்மார புருஷனோ, தன்னுடைய கால்களுக்கருகில் கைகளை ஊன்றி அமர்ந்துள்ளான். அவருடைய காலின் கீழே யக்ஷன் காலை மடக்கி அமர்ந்து, குனிந்த நிலையில் இறைவனைத் தாங்கிக் கொண்டிருக்கிறான். அவனது தலைமுடி ஜடாமகுடம் போலவும், கழுத்தில் மணிமாலையும் காட்சியளிக்கின்றன. குள்ளமான தடித்த உடலுடன் காணப்படும் இவனுடைய காதுகள் படர்ந்து கூர்மையாகவும் உள்ளது. இருப்பினும் இவனது முகத்தில் ஒருவித புன்னகை காணப்படுவதால் இவன் மகிழ்ச்சியாகவே இருக்கிறான் எனத் தெரிகிறது.

நின்ற உருவத்திற்கு மேல் சிவலிங்கத்தின் உருண்டையான ருத்ரபாகம். பின்புறம் பட்டையான வடிவமைப்பு காணப்படுகிறது. சிவலிங்கத்திற்கு பொதுவாக அடிப்பகுதியில் ஆவுடையார் காண்பிக்கப் பெறும். இக்கோவிலில், சிவலிங்க வடிவத்தின் சதுரவடிவமான கீழ்பகுதி (பிரம்மபாகம்) வட்டக்கற்களால் ஆன பீடத்தில் சொருகி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு `அர்க்கபீடம்’ என்பது பெயர். கருவறையின் மேல் உள்ள விமானத்தின் பின்பகுதி அரைவட்டமாக உள்ளது. இதுவும் லிங்க வடிவமாக காட்சி அளிப்பதால், `லிங்க கீர்த்தி விமானம்’ என அழைக்கின்றனர்.

கருவறையில் வழிபடப்பெறும் சிவலிங்க வடிவம் மிகவும் தொன்மையான வடிவமாக அறிஞர்களால் கருதப்படுகிறது. இக்கோவிலைச் சீரமைக்கும்போது கோவிலில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இக்கோவில் பிற்கால பல்லவர் காலம் முதல் கி.பி., 14ம் நூற்றாண்டு வரை தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் அடைந்து வழிபாடுகள் நடைபெற்று வந்துள்ளதை அறிய முடிந்தது. ஆய்வின்போது சிவப்பு வண்ண பூச்சு பூசப்பட்ட பானை ஓடுகள், கறுப்பு – சிவப்பு பானை ஓடுகள் கிடைத்தன. மேலும் லிங்கத்தைச் சுற்றி வேலைப்பாடு மிக்க கருங்கற்களால்ஆன வேலி போன்று அமைக்கப்பட்டுள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதை `சிலா வேதிகலிங்கம்’ எனக் குறிப்பிடுகின்றனர்.

இங்கு நடைபெற்ற ஆய்வின் போது கிடைத்த தொல் பொருட்கள், மண் அடுக்குகள் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது குடிமல்லம் கோவிலில் காணப்படும் சிவனது வடிவம் கி.மு., 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனவும், மிகவும் தொன்மையான வடிவம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சைவ சமயத்தில் பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், பைரவம் என்ற பிரிவுகள் உண்டு.`பாசுபதம்’ தொன்மையான வழிபாடாகும். குடிமல்லம் கோவிலில் காணப்படும் வடிவத்தின் வழிபாடு பாசுபத சித்தாந்த வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டது எனக் கருதப்படுகிறது.

குடிமல்லம் லிங்கத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள்ள சிவன் உருவத்திற்கும் – சாஞ்சி ஸ்தூபத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள்ள யஷன் உருவத்திற்கும் மிக நெருக்கமான உருவ ஒற்றுமை உள்ளதை அறிஞர் பெருமக்களும் ஏற்கின்றனர். முகம், காதுகள், தோள்கள் ஆகியனவற்றில் மட்டுமின்றி – காதணிகள், கையணிகள், கழுத்து மாலை ஆகிய அணிகலன்களின் வேலைப்பாடு, உடை உடித்தியிருக்கும் பாங்கு குறிப்பாகக் குஞ்சம் போன்ற மடிப்புகள் கால்களுக்கு இடையில் கட்டப்பட்டுருக்கும் விதம் ஆகிய இத்தனை அம்சங்களிலும் இவ்விரு உருவங்களும் ஒரே மாதிரியில் அமைந்துள்ளன. கி.மு., 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த உஜ்ஜெயினியில் கிடைத்த தாமிர காசுகளில் குடிமல்ல லிங்க உருவம் உள்ளது.

இக்கோயில் பற்றிய ஒரு அதிசய நிகழ்வு உள்ளூர் மக்கள் கூறுவது: 60 ஆண்டுகட்கு ஒருமுறை பரசுராமேஷ்வரர் உள்ள கருவறையுள் வெள்ள நீர் நிறைந்து அடுத்த நாள் வடிவது. டிசம்பர்-4, 2005 அன்று நீர் வந்து சில நிமிடங்களில் வடிந்ததாம். 1995ல் இது போல் நிகழ்வு இருந்ததாக உள்ளூரின் பெரியவர்கள் மூலம் அறியலாம். நிலத்தடி நீர் 300அடிக்கு கீழ் இருக்க இது அதிசயம் என் அகழ்வுத்துறையும் ஏற்கிறது.

லிங்கத்தில் உள்ள சிவன் வடிவில் கோடரி எனும் பரசு உள்ளமையால் இவர் பரசுராமேஷ்வரர் எனப்படுகிறார். வேதங்களின் உருத்திரன் எனும்படி வேடனுருவில் சிவனுள்ளதால் வைதிக லிங்கம் என்கின்றனர்.

இன்னுமொரு சாரார் கூறும் கதை- தன் தந்தை ஜமதக்னி முனிவர் ஆணைப்படி தன் தாயைக் கொன்ற பரசுராமர், அப்பாவம் நீங்க இங்கே வந்து தவம் செய்திட்டார். அருகிலுள்ள சுனையில் தினம் ஒரு பூ மட்டும் மலரும், அதற்கு காவலாக சித்திரசேனன் எனும் யக்ஷனை நியமித்தார். பிரம்மாவின் பக்தனான  சித்திரசேனன் ஒரு நாள் , வேட்டைக்கு பரசுராமர் சென்று இருந்தபோது தானே  மலரைக் கொய்து பூஜை செய்திட, விபரமறிந்த பரசுராமர் போர் தொடுக்க, 14 ஆண்டுகள் போர் நடந்தும் யாருக்கும் வெற்றி இல்லை, சிவபெருமான் இருவரையும் தன்னுள் ஏற்றுக் கொண்டார். மூல லிங்கம் -சிவன்; பரசுராமர்- விஷ்ணு அவதாரம், யஷன் பிரம்மாவினம்சம்- எனவே மும்மூர்த்திகளும் உள்ள லிங்கமாகும். போக்குவரத்து வசதிகள் இல்லாத காலகட்டத்தில் தென் நாட்டின் உருவம் வடநாடு செல்ல ஓரிரு நூற்றாண்டுகள் நிச்சயம் ஆகும் என்கையில் குடிமல்லம் சிவலிங்கம் கி.மு.500 வாக்கிலானது என பல வரலாற்றாசிரியர்கள் ஏற்கின்றனர்.

நன்றி : திரு . ஆங்கரை கிருஷ்ணன்

தினம் தினம் தாயே தா தரிசனங்கள், உனைவிடத் துணையாமோ பிற ஜனங்கள்..!

| Oct 18, 2011
வாசக அன்பர்களுக்கு வணக்கம். கொஞ்சம் வேலைப்பளு அதிகம். தவிர சொந்த வேலையாவும் அடிக்கடி பயணம் என்பதால், நினைக்கும் நேரத்தில் நெட்டில் உட்கார முடிவதில்லை. அனேகமாக , தீபாவளி முடியும் வரை இந்த நிலைமை தான் இருக்கும் என்று நினைக்கிறேன். முடிந்தவரை , கிடைக்கும் ஓய்வு நேரத்தில் பதிவுகளை இட முயற்சிக்கிறேன்...( ஒன்னும் அவசரம் இல்லை, மெதுவாப் போடுங்க போதும்ங்கிறீங்களா? )
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTvzoBg5vBwYrZaJWvze7KFoWUYPs-3MH_9-amkvOoDtKzExi4P
இன்னைக்கு பார்க்கப் போறது, ஒரு ரெண்டே ரெண்டு விஷயங்களைப் பற்றி மட்டும்தான். ஒன்னு, திருப்பதி கோவில்லே ஏன் கூட்டம் எப்போவும், அலைமோதுது..?  இன்னொன்னு - ரொம்ப சுலபமான நவகிரக வழிபாட்டு முறைகளைப் பற்றி. ரெண்டுமே மாலை மலர் ஆன்மீக பகுதில வந்தவை. நம் வாசகர்களும் தெரிந்து கொள்வது பல வகையில் பயனளிக்கும்.

கொஞ்சம் சுமாரா , நிம்மதியா வாழ்க்கை போயிட்டு இருக்கும். திடீர்னு , யாரோ புகுந்து ஆட்டையைக் கலைக்கிறது மாதிரி தோணும். சில , நுட்பமான ஜோதிட விதிகளை ஆராய்ந்தவன்ங்கிற முறையிலே சொல்றேன். அந்த குறிப்பிட்ட நேரத்தில, தசா அல்லது புக்தி மாற்றம் நடந்து இருக்கும். நம்மளை மாதிரி அப்பாவி ஜனங்க ,அதைப் பற்றி தெரிஞ்சுக்காம , பதிலுக்குப்   பதிலு மல்லுக் கட்டி , இன்னும் அடி வாங்கி சுருண்டு விழுந்து கிடப்போம்.

இது ஒரு துல்லியமாக ஆராய்ந்து , முடிவெடுக்க வேண்டிய விஷயம். ஆனா, சுருக்கமா கொஞ்சம் எல்லாருக்கும் புரியற மாதிரி சொல்ல முயற்சி செய்றேன். 

நம்  ஜோதிட பாடங்களைப் படிச்சவங்க எல்லாருக்கும் அனேகமா ஒரு விஷயம் தெரிஞ்சு இருக்கலாம். சுப கிரகங்கள், அசுப கிரகங்கள் பற்றி. குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன் எல்லாம் சுப கிரகங்கள். தேய்பிறை சந்திரன் , சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது எல்லாமே தீய கிரகங்கள். லக்கினத்துக்கு எந்த வீட்டுக் குரியவர் , எந்த இடத்தில் இருந்து, யாரின் சாரம் பெற்று தசை நடத்துகிறாரோ , அந்த வகையில் தான் - உங்கள் வாழ்க்கையின் அத்துணை விஷயங்களும் , சந்தோசமும், துக்கமும் நடக்கின்றது. 

விஷயம் தெரிஞ்சவங்க, கொஞ்சம் மோசமான தசா , புக்தி வரும்போது - முழுக்க அடக்கி வாசிப்பாங்க. கடவுளை இறுக்க பிடிச்சுப்பாங்க. இப்போ , உங்களுக்கு நடக்கிற தசா , எந்த நட்சத்திரத்துல இருந்து நடத்துதுன்னு பாருங்க. அந்த கிரகங்களுக்கு - உரிய வழிபாடு, பரிகாரம், உரிய ஆலய தரிசனம் - உங்களுக்கு வரக்கூடிய தீய பலன்களை குறைக்கும். 

உதாரணத்துக்கு உங்களுக்கு சந்திர தசை ஆரம்பிக்கப் போகுதுன்னு  வைச்சுப்போம். வளர்பிறை சந்திரனா, தேய்பிறை சந்திரனா பாருங்க. சரி, வளர்பிறைனு வைச்சுப்போம். நீங்க பிறந்த நட்சத்திரம் திருவாதிரைன்னு வைச்சுப்போம். மொத்தம் பத்து வருஷம் சந்திர தசை நடக்கும்.. ... இதுல சந்திர தசை , சுய புத்தி பத்து மாசம் நடக்கும்.

காலத்தோட - ரொம்ப சிம்பிளான ஒரு பார்முலா இருக்கு. இந்த சுய புத்தி உங்களுக்கு ஓகோனு இருந்துட்டா , மீதி இருக்கிற தசா காலம் முழுக்க பலன்கள் கெடுதலா இருக்கும். சுய புத்தி காலத்துல நீங்க கஷ்டப்பட்டுட்டா , மீதி காலம் பரவா இல்லாம இருக்கும். இதை வைச்சு , கொஞ்சம் உஷாரா இருந்துக்கலாம். அதுபோக இறை வழிபாடு எதுக்குன்னு கேட்டா, உங்களுக்கு கிடைக்கிற கெடுதல் பலன்களை குறைச்சு , கிடைக்க விருக்கும் நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கத்தான்.

மேலே சொன்னபடி - திருவாதிரையிலிருந்து சந்திர தசை நடந்தால் - சாரம் கொடுத்த நட்சத்திர நாதனான ராகுவின் பலனையும், சந்திரனின் பலனையும், சந்திரன் லக்கினத்திற்கு எந்த வீட்டுக்குரியவனோ அந்த பலனையும், சந்திரன் அமர்ந்து இருக்கும் வீட்டின் அமைப்பைப் பொருத்தும், சந்திரனுடன் இணைந்த கிரகங்கள், பார்க்கும் கிரகங்கள் இவற்றைப் பொறுத்தும்  - பலன்கள் கிடைக்கும். இது தவிர கோச்சார ரீதியைப் பொறுத்தும் பலன்கள் கிடைக்கும். இது தான் ,பொதுவாக ஜோதிடர்கள் அனைவரும் , பலன் சொல்லும் முறை --- உங்கள் கடந்த காலம் எப்படி இருந்து இருக்கும், எதிர்காலம் எப்படி இருக்கும் என்று..!

புரிஞ்ச மாதிரி இருக்கு, ஆனால் புரியலைனு சொல்றீங்களா?  விடுங்க , ஒரு சின்ன விஷயம் மட்டும் ஞாபகம் இருக்கட்டும். மேலே சொன்ன உதாரணம் படி பார்த்தா,  சந்திரனுக்கு - சிவ பெருமானையும், ராகுவுக்கு - துர்க்கை அம்மனையும் வழிபட்டால் - நலம் பயக்கும் . இதை மட்டும் நீங்க தெரிஞ்சுக்கிட்டா போதும். உங்க ஜாதகப்படி, இப்போ எந்த தசை நடக்குதுன்னு பாருங்க, அந்த தசா நாதனை , அவருக்கு உரிய அதி தேவதையை வணங்கினாலே - நீங்கள் வாழ்க்கையில் , ஒரு நல்ல நிலைக்கு வந்து விட முடியும்.

சந்திர தசை , சுய புத்தியில் - கிட்டத்தட்ட புத்தி பேதலிக்கும் நிலைக்கு தள்ளிவிடும். மனோ காரகன் அல்லவா? திங்கள் கிழமைகளில் விரதம் இருந்து, சிவனுக்கு பாலபிசேகம் செய்து வர - அந்த ஜாதகருக்கு அபரிமிதமான நன்மைகள் கிடைக்கும்.

இது எல்லாமே , வித்தை நல்லா தெரிஞ்ச ஒருத்தர் - ஆட்டத்திலே புகுந்து கலக்குற மாதிரி. டெஸ்ட் மாட்ச்சுல டிராவிட் ஆடுவார் இல்லை... பத்து பால் ஸ்டம்புக்கு சம்பந்தமே இல்லாம போகும்போது, பேட்டை தலைக்கு மேலே தூக்குவாரு .... அட , என்னைய்யா னு பார்க்கிற நாம டென்சன் ஆவோம்.. அடிக்க வேண்டிய பந்தை , லாவகமா ஆடி - பவுண்டரிக்கு அனுப்புவாரு. கடைசிலே பார்த்தா, மேன்  ஆப் தி மேட்ச் அவரா தான் இருக்கும். உங்களுக்கும் இந்த நவ கிரகங்களோட விதிமுறை , ரூல்ஸ் தெரிஞ்சா - நீங்களும் அடி தூள் கிளப்பலாம், நல்ல நேரம் இருந்தா , நீங்களும் சேவாக் , கிறிஸ் கெய்ல் மாதிரி பட்டையை கிளப்பலாம்...

மொத்தத்தில வாழ்க்கைங்கிற விளையாட்டை ஆடுறதுன்னு முடிவாகிப் போச்சு. நாமளும் விதிமுறைகளை , டெக்னிக்குகளை (அதாங்க வழிபாட்டு முறைகளை) தெரிஞ்சுக்கிட்டு விளையாட ஆரம்பிப்போம். பவுன்சர் உங்க முகத்துக்கு நேர வரும்போது - நீங்க அடி வாங்க போறீங்களா, அதனால முகத்துக்கு ஹெல்மட் போடணுமா , இல்லை கீழே குனியனுமா, இல்லை சிக்ஸ்க்கு தூக்கலாமா - இது எல்லாம் தெளிவா சொல்றதுதான் உங்க ஜாதகம். இது எல்லாம், கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டா , ஆட்டம் நிச்சயமா களை கட்டும். இல்லையா , ரிட்டயர்ட் ஹர்ட் , இல்லை ஓவர் முடிஞ்சு போச்சு கதைதான்.     

எது எப்படியோ, விளையாட விதி நமக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து இருக்கு. குறைந்த பட்சம் ஒரு substitute பிளேயரா கூட இருந்திட்டு , வாய்ப்புக்காக எதிர் பார்த்து காத்து இருக்கலாம். பரவா இல்லை. ஆனா, வெறுமனே பார்வையாளர் மாதிரி ஒதுங்கி நின்னு , யாரும் ஆடிக்கிட்டுப் போங்க, நாங்கல்லாம் வேடிக்கை பார்க்கிறதுல கிங்குனு இருந்துடுவீங்க..

தோல்விகளை நினைச்சு துவண்டு போகாம , கடவுளை துணைக்கு வைச்சுக்கிட்டு , ஆட்டத்தை கலக்குங்க. நமக்கு கிடைச்சது எல்லாம் தோல்விகளே இல்லை. அதுக்குப் பேரு தோல்வினு யாரு சொன்னா.. ! நாம நினைச்சதை அடைய, நாம ஏறிக்கிட்டு இருக்கிற படிக்கட்டு.. அவ்வளவுதான். ... ஒரு குழந்தை நடக்கப் படிக்கிறப்போ, கீழே எத்தனையோ தடவை விழுந்து , விழுந்து தான் நடக்கும். அது எல்லாம் தோல்வியா.. சிரிக்க மாட்டீங்க... !

கீழே விழுந்த குழந்தையை , இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை, கம் ஆன் செல்லம், கம் ஆன் னு உற்சாகப் படுத்துவோம் இல்லையா, அந்த மாதிரி நமக்கு உற்சாகம் கொடுக்க தான் , நம் அனைவருக்கும் தந்தையான ஆண்டவன் இருக்கிறான்... அடிபட்டாக் கூட ஓடி வந்து தாங்கிப் பிடிக்க , அந்த தந்தை நம்மை கவனித்துக் கொண்டு இருக்கிறான்... கவலையே வேண்டாம்... எழுந்து நிற்போம் , நடப்போம்.. கூடிய விரைவில் ஓடி , வாகை சூடுவோம்...!

சரி, நான் விட்டா பேசிக்கிட்டே தான் இருப்பேன்... இந்த விஷயங்களைப் படிச்சுப் பாருங்க... உங்களுக்கே சில விஷயங்கள் புரிபட ஆரம்பிக்கும்.. உங்க ஜாதகத்தை எடுத்து வைச்சு உட்கார்ந்து பாருங்க, நீங்களும் ஜெயிச்சுக் காட்டலாம்.... கூட நானும் துணைக்கு இருப்பேன், சந்தேகம் இருந்தா கேளுங்க....

வாழ்க அறமுடன், வளர்க அருளுடன் !

திருப்பதியின் மகோன்னதம் !

சாளக்கிராமம் என்னும் கல் கிடைப்பது மிக அரிதானது, இந்தக்கல்லில் சக்கரம் அமைந்திருக்கும். இப்படிப்பட்ட கற்களை  கோவில்களில் பூஜையில் வைத்து வணங்குவார்கள்.
இந்த சாளக் கிராமம் நேபாளம் முக்திநாத் கோவில் அருகில் கண்கி நதியில் மட்டுமே உருவாகுகிறது. இதில் தான் சுவாமி குடியிருப்பதாக ஐதீகம். பெருமாள் கோவில்களில் இதை சாளக் கிராமம் என்றும், சிவன் கோவில்களில் பானலிங்கம் என்றும், விநாயகர் கோவிலில் சோனபத்ரம் என்றும் அழைக்கிறார்கள்.
இந்த சாளக் கிராமத்தில் பெருமாளின் அத்தனை அவதாரங்களும் அடங்கி உள்ளதாம். பக்தர்கள் இறைவனை வேண்டி துளசி செடியை கண்கி ஆற்றில் போட்டு கைகளை விரித்து தண்ணீரில் மூழ்கியபடி நின்றால் தங்களுக்கு இறைவனின் அருள்படி சாளக் கிராமம் கிடைக்கும் என்கிறார்கள்.
நம் வீட்டிலும் இந்த சாள கிராமத்தை வைத்து வழிபடலாம். 12 சாளக் கிராமங்கள் இருந்தால் அந்த வீட்டில் பெருமாளே குடியேறி இருப்பதாக ஐதீகம். திருப்பதியின் ஏழு மலைகளும் ராட்சத சாளக்கிராமக் கற்களே. இம்மலையில் எந்த இடத்தை வெட்டிப்பார்த்தாலும் வெட்டப்பட்ட இடங்களில் சக்கர அமைப்பு இருப்பதைக்காண முடியும்.சிலா தோரணம் பற்றி, நமது பழைய கட்டுரை , ஞாபத்திற்கு வருகிறதா?
 
சாளக்கிராமம் கல்லை வெட்டிப் பார்த்தால், அதன் உள்ளும் சக்கர அமைப்பு இருப்பதைக் காணலாம். திருப்பதி மலையேறும் போது, சாலை போடுவதற்கு ஆங்காங்கே மலை வெட்டப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இந்த வெட்டுகளில் எல்லாம் சக்கரம் அமைப்பு அமைந்திருப்பதையும் காணலாம்.
ஆக, திருமலையே ஒரு சாளகிராமக்கல் வடிவமாக அமைந்து இருப்பதால் மிகவும் சக்தி படைத்தாக அது  கருதப்படுகிறது.அதன் காரணமாகவே அது  உலக  மக்கள் அனைவரையும் கவர்ந்து இழுக்கிறது. இப்படிப்பட்ட ஒரு  புண்ணிய ஸ்தலமாக அது இருப்பதால், மக்கள்  மீண்டும், மீண்டும் இந்த மலையை நாடி வந்து ஆனந்தம் அடைக்கிறார்கள். 
திருமலையானது ஒரு சாளகிராமக்கல் என்பதால் தான் இதன் புனிதம் கருதி ஸ்ரீராமானுஜர் மலைமேல் தன் பாதம் பதித்துச் செல்ல விரும்பவில்லை. அதனாலேயே அவர் மலையேறி வெங்கடாசலபதியைத் தரிசிக்காமலேயே இருந்தார். பின் இறுதியில் தன் முழங்கால்களைப் பதித்து ஊர்ந்து ஊர்ந்தே திருமலை ஏறி வெங்கடாசலதியைத் தரிசித்தார். 
நலம் தரும் நவக்கிரக வழிபாடு :
 
நவக்கிரகங்கள் என்பது இறைத் தூதர்களாக கருதப்படுகின்றனர். அதாவது இறைவன் நினைத்ததை, அவரது உத்தரவை நிறைவேற்றும் ஊழியர்கள். நவகிரகங்களை வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும்.
சூரியன்:
சூரியனுக்குரிய நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் விரதமிருந்து வணங்க வேண்டும். இதனை ஆதிவிரதமென்றும் கூறுவார்கள். சூரியனுக்கு அதிபதி சிவன் என்பதால் சிவன் கோவில்களில் அர்ச்சனை செய்து வழிபடுவதோடு நவக்கிரக சன்னதியை வலம் வந்து சூரிய பகவானை நோக்கி வழிபட வேண்டும். 
"காசினி இருளை நீக்கும் கதிரொளி ஆகியெங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்போடு சுகத்தை
நல்கும் வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய்
வந்த தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி"
என்று தோத்திரம் சொல்லி வணங்க வேண்டும். இவ்வாறு வணங்குவதால் உடற்பிணி கண்களில் ஏற்படும் நோய்கள் நீங்கும். ஜாதகத்தில் கிரக தோஷமுள்ளவர்களும் மற்றும் சூரிய திசை நடப்பவர்களும் ஞாயிறு விரதமிருத்தல் வேண்டும். 
செவ்வாய்:
செவ்வாய் தோஷமுள்ளவர்கள் செவ்வாய் திசை நடப்பவர்கள் இந்த விரதத்தை மேற்கொள்வதால் குறைபாடுகள் நீங்கும். காலையில் அம்மனையும் மாலையில் முருகனையும் வழிபடுவதோடு நவக்கிரகத்தை வலம் வந்து செவ்வாய் கிரகத்தின் முன்னின்று வழிபட வேண்டும். 
``வசனநல் தைரியத்தோடு மன்னவர் சபையில் வார்த்தை
புசபல பராக்ர மங்கள போர்தனில் வெற்றி ஆண்மை
நிசமுடன் அவரவர்க்கு நீளநிலம் தனில் அளிக்கும்
குசன் நிலமகனாம் செவ்வாய் குரைகழல் போற்றி போற்றி''
என்று தோத்திரம் சொல்லி வணங்கினால் மேற்கூறியபடி தோஷநிவாரணம் ஏற்படுவதோடு அம்மனின் அருள் கிடைக்கும். ரத்த சம்பந்தமான நோய்களும் நீங்கும். வெற்றி கிட்டும். குறிப்பாக இந்த விரதத்தை அனுசரிக்கும் கன்னிப் பெண்கள் மஞ்சள், குங்குமம், வெற்றிலை போன்ற மங்கலப் பொருட்களை சுமங்கலிப் பெண்களுக்கு வழங்க வேண்டும்.
சனீஸ்வரன்:
அஷ்டமத்தில் சனி இருப்பவர்களும் ஏழாண்டுச்சனி இருப்பவர்களும் இந்த விரதத்தை மேற்கொள்வதால் தொல்லைகள் குறைவதோடு நன்மை உண்டாகும். பெருமாளை வணங்கி நவக்கிரக சந்நிதியிலே நவக்கிரகங்களை வலம் வந்து சனீஸ்வரனுக்கு எள்ளை துணியிலே கட்டி நல்லெண்ணெய் ஊற்றித் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். 
"முனிவர்கள் தேவ ரேமும் மூர்த்திகள் முதலினார்கள்
மனிதர்கள் வாழ்வும் உன்றன் மகிமையது அல்லால் உண்டோ
கனிவுள தெய்வம் நீயே கதிர்சேய காகம் ஏறுஞ்
சனியனே உனைத்துதிப்பேன் தமியேனுக் கருள் செய்வாயே!"
என்று தோத்திரம் சொல்லி வணங்குதல் சகல துன்பங்களும் நீங்கப்பெற்று நீண்ட ஆயுள் கிட்டும்.  இந்த சனீஸ்வர விரதத்தை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அனுசரிக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில் மட்டுமாவது அனுசரிக்க வேண்டும். 
சுக்கிரன்:
இவ்விரதத்தை சுக்கிரவார விரதமென்றும் கூறுவார்கள். அம்பாளையும் முருகனையும் வணங்கி விரதம் அனுசரிக்கப்பட வேண்டும். சிலர் அவர்களது இஷ்டதெய்வங்களை வணங்கி மேற்கொள்வதுமுண்டு. நவக்கிரக சந்நிதியை வலம் வந்து சுக்கிர பகவானை வணங்க வேண்டும். 
அப்போது
"மூர்க்கவான் சூரன் வாணன் முதலினோர் குருவாய்
வையம் காக்கவான் மழை பெய்விக்கும் கவிமகன் கனகம்
ஈவோன் தீர்கவா னவர்கள் போற்றச் செத்தவர் தமை எழுப்பம்
பார்க்கவன் சுக்கிரன் தன் பாத பங்கயங்கள் போற்றி! ''
என்ற தோத்திரத்தைப் பாடி வணங்குவதனால் புகழ், செல்வங்கள் பெருகுவதோடு பாவக்கிரகங்களின் பார்வையினால் பலமிழந்திருக்கக்கூடிய சுக்கிர பகவான் தொல்லைகள் நீங்கப் பெற்று நற்பலன்களை அளிப்பார். 
கேது பகவான்:
கேது விரதம் அனுசரிப்பவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் விநாயகரை வணங்கி பின்னர் நவக்கிரக சந்நிதியை வழிபட்டு கேது பகவானை வணங்க வேண்டும்.
"பொன்னையின் னுரத்திற் கொண்டேன் புலவர்தம்  பொருட்டால்
ஆழி, தன்னையே கடைந்து முன்னம் தண் அமுது அளிக்கல் உற்ற
பிள்ளை நின் கரவால் உண்ட பெட்பினிற் சிரம் பெற்றுயர்ந்தாய் என்னையாள் கேதுவே இவ்விருநிலம் போற்றத் தானே!"
என்று தோத்திரம் சொல்லி வணங்கி வர செல்வம், ஞானம், வெற்றி, புகழ் அனைத்தும் வந்து சேரும். 
சந்திரன்:
சந்திரதோஷம் உள்ளவர்கள் இந்த விரதத்தை அனுசரித்தால் தோஷம் நீங்கப் பெறுவார்கள். சிவன் கோவில்களில் நவக்கிரகங்களை வணங்கி சந்திர பகவான் முன் நின்று வழிபட வேண்டும். 
"அலைகடல் அதனில் நின்றும் அன்று வந்துதித்த போது
கலைவளா திங்களாகிக் கடவுளென் றெவரும் ஏத்தும்
சிலை முதல் உமையாள பங்கன் செஞ்சடைப் பிறையாருமேரு
மலைவல மாதவந்த மதியமே போற்றி போற்றி''
என்று தோத்திரம் சொல்லி வணங்குபவர்கள் ஆயுள் விருத்தியும் சகல செல்வ போகங்களும் பெறுவார்கள். 
புதன்:
புதன் விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு கல்வி, ஞானம், தனம் போன்றவை பெருகும் என்பதால் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் அனைவரும் அனுசரிக்கலாம். புதன்கிழமை அன்று நாராயணனை வழிபட்டு பின்னர் நவக்கிரங்களை வணங்கி புதன் பகவான் முன் வழிபட வேண்டும்.
"மதனநூல் முதல் நான்கு மறைபுகல் கல்வி ஞானம்
விதமுடன் அவரவர்க்கு விஞ்சைகள் அருள்வோன்
திங்கள் சுதன்பசு பாக்கியம் சுகம்வபல் கொடுக்க வல்லான்
புதன் கவி புலவன் சீர்மால் பொன்னடி போற்றி போற்றி''
என்று தோத்திரம் பாடி வணங்குவதால் சகல சிறப்புகளும் பொருந்தி வரும் என்று கூறப்படுகிறது. 
குரு:
குரு தோஷமுள்ளவர்கள் மட்டுமின்றி ஏழ்மையில் இருப்பவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குடும்பத்தைப் பிரிந்தவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் அனைவரும் இந்த விரதத்தை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். நவக்கிரகங்களை வலம் வந்து வியாழ பகவானை நோக்கி வழிபட வேண்டும்.
"மறைமிகு கலைநூல் வல்லோன் வானவாக் கரசன்
மந்திரி நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக் கதிபனாகி
நிறைதனம் சிவிகை மண்ணில் நீடு போகத்தை நல்கும்
இறையவன் குரு வியாழன் இரமலாப்பாதம் போற்றி''
என்னும் தோத்திரம் பாடி வணங்க வேண்டும். இவ்வாறு விரதத்தை மேற்கொள்வதன் பலனாக நல்வாழ்க்கை, குழந்தை பாக்கியம் கிடைக்கும். 
ராகு பகவான்:
ராகு தோஷமுள்ளவர்கள் சனிக்கிழமைகளில் இவ்விரதத்தை அனுசரிக்கலாம். காளி கோவிலுக்குச் சென்று வேப்பெண்ணெய் விளக்கேற்றி நவக்கிரக சந்நிதியில் ராகு பகவானை வழிபட வேண்டும்.
"வாகுசேர் நெடுமான் முன்னம் வானவருக்கு அமுதம்
ஈயப்போகும் அக்காலை உன்றன் புணர்ப்பினால் சிரமே
அற்றுப்பாகுசேர் மொழியன் பங்கன் பரன் கையில் மீண்டும்
பெற்ற ராகுவே உனைத் துதிப்பேன் ரட்சிப்பாய் ரட்சிப்பாயே!''
என்ற தோத்திரம் பாடி வணங்குவதால் சகல நோய்களும் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும்.

நன்றி : மாலைமலர் - ஆன்மிகம்  


எட்டு என்ன ஓய், பதினொன்னே போட்டு காட்டுறேன் வாங்க !

| Oct 13, 2011
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQU1imuR4rLIWpm98LAvq4ZyxS5mhkDN-bBEeAx4uUxHkFb-XNi

எனக்கு ரொம்ப வேண்டப்பட்ட என்னோட நண்பர் ஒருத்தர் ,கம்பெனியில கூட வேலை பார்த்துக் கிட்டு இருந்தார். பெங்களூர்ல இருந்து ஒரு செகண்ட் ஹான்ட் கார் வாங்கி இருந்தார். வேலை பார்த்தது ராணிபேட்.  கர்னாடகா  நம்பர்ல இருந்து நம்ம TN registration நம்பரா மாத்தணும். வேலூர் RTO ஆபீஸ்ல , பக்காவா எல்லா பேப்பர்சும் எடுத்திட்டு அப்ளை பண்ணினார். இது நடந்து ஒரு பத்து வருஷம் மேல இருக்கும். அட, இன்னைக்கும் இதே கதை தான், அதை விடுங்க. நம்ம ஊர்ல , RTO ஆபீஸ்ல ஒரு வேலை நடக்கணும்னா , என்ன வேணும்னு ஒரு LKG படிக்கிற பையனுக்கே தெரியும். ஆனா, நம்ம மனுஷன், ரொம்ப தெளிவா இருந்தார். சார், நானே புது கார் வாங்க முடியாம, இந்த கார் வாங்கி இருக்கேன். ரூல் , லாஸ் படி எவ்வளவு பைசா கட்டணுமே, அதை கட்டுறேன். அதுக்கு மேல, ஒரு பைசா கூட தர மாட்டேன். எங்கே இருந்து இது முடிய...?
ஆபீஸ்ல தினமும் - சார், ஒரு டூ அவர்ஸ் பெர்மிசன் வேணும். RTO ஆபீஸ் வரைக்கும் போகணும் . இதே தான் தினமும். ஒரு நாள் , ரெண்டு நாள் இல்லை சார். எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. முப்பத்தி ஏழு தடவை. சலிக்காம, மனுஷன் , விடாம அங்கே போய் , ஒருவழியா, வேலையை முடிச்சார்.

நானே , அவர் கிட்ட கேட்டேன், சார் , விடுங்க சார்... நான் கூட வரட்டுமா, அங்கே ஒருத்தர் நமக்கு நல்லா தெரியும். ரெண்டு நாள்ல முடிச்சிடலாம். அவர் கிட்டேயும் பேசினேன். அப்படியா, வாங்க சார், நான் பார்த்துக்கிறேன்.. என்ன , கருமம் பைசா கேட்பாங்க. என்னோட பைசால இருந்து பிடிச்சுகிடட்டும் (?  என்ன, கொடுமை பாருங்க ) , உங்களுக்கு இல்லாமலானு அவர் சொல்ல ,  இவரு... ஹ்ம்ம்... "இல்லைப்பா , அது மகா தப்புடா அம்பி" ங்கிறார். "என்னோட வேலை. அவர் பைசா ஏன் கொடுக்கணும் ?" "சார், இல்லை சார், அது அவர் பைசா கூட இல்லை, நீங்க ஏன் இவ்வளவு  கஷ்டப்படனும்... நான் பார்த்துக்கிறேன்"... கடைசி வரை கேட்கவே இல்லை.... அந்நியன் படம் வந்தப்போ ஒரு ரூல்ஸ் ராமானுஜம் காரக்டர் பார்த்து இருப்பீங்களே ... அந்த  மாதிரி மனுஷன்.

அந்த ஆபீஸ்ல , இருந்த ஒரு சாதாரண க்ளெர்க் கூட மதிக்கலை அவரை. இத்தனைக்கும் ஒரு MNC கம்பெனில மேனேஜர் அவர் அப்போவே. யோவ், நீ காசு தர மாட்டியானு வாய் விட்டே கேட்டு இருக்கானுங்க, அங்கே. நம்ம அரசு அலுவலகங்கள்ளே , வருஷத்துக்கு  லட்சக் கணக்குல IT கட்டுற ஆளுங்க , ஒரு வேலையா உள்ள போய் , ரத்தக் கொதிப்பு இல்லாம வெளியில வந்தா , அதுவே அவங்க ஜென்ம , ஜென்ம புண்ணியமா இருக்கும். ஐயோ, பாஸ்போர்ட் ஆபீஸ்ல நடக்குற ஒரு கூத்து இருக்கே  , RTO ஆபீஸ்க்கு கொஞ்சம் கூட கம்மி இல்லாத ஒரு விஷயம். சரி, அதை இன்னொரு சமயம் பார்க்கலாம் .

ஆனா, இவர் கடைசி வரைக்கும் , கொஞ்சம் கூட கோவப்படலை. என்னோட போறாத வேளைப்பா இது. பகவான் என்னை சோதிக்கிறான்னாரே  பார்க்கலாம்,... என்னோட ஆபீஸ் ல இருந்த ஸ்டாப்ஸ் எல்லாம் கூட , நக்கலா , ஏளனமா பார்த்து சிரிச்சாங்க ... ஆனா, எனக்கு அந்த விஷயம் , புதுசா ஒரு விஷயத்தை உணர்த்துச்சு...!
கடைசியா, வேற வழியே இல்லாம, இல்லை எவ்வளவு அடிச்சாலும் தாங்கு
றான்னு நினைச்சாங்களா தெரியலை, ஒரு வழியா , அவர் வேலையை , அங்கே இருந்த கருணை மகா பிரபு ஒருத்தர் முடிச்சுக் கொடுத்தார் ....

என்ன பண்றது, இந்தியாவுல இருக்கிறோமே, இங்கே IAS முடிச்சு இருக்கிறவங்களுக்கே மதிப்பு கிடையாது. அட, அரசு ஊழியர்கள்ளேயும், அநியாயத்துக்கு நல்ல மனுஷங்களும்  இருக்கிறாங்க. ஆனா, அவைகளை (!)  எல்லாம் , பொழைக்கத் தெரியாத ஆளுன்னு அவங்க வீட்டுலேயே யாரும் மதிக்கிறது இல்லை.  மனுஷனுக்கு எங்கே சார் மதிப்பு இருக்கு... பணம், பதவி... அவ்வளவுதான், உலகம்னு போய்ட்டு இருக்கோம்....  சரி, விடுங்க அரசியல் நமக்கு எதுக்கு....

சரி, இந்த சம்பவம் நம்ம தளத்துல எதுக்குன்னு கேட்குறீங்களா... பொறுங்க பாஸூ... எதுக்கு அவசரப்படுறீங்க,,, நாம என்னைக்காவது , உபயோகமில்லாத விஷயத்தைப் பத்தி பேசி இருக்கோமா..?


நீங்க, நான் எல்லாருக்கும் குறுகுறுனு ஒரு விஷயம் எப்பவுமே ஓடும். ஏதாவது அதிசயம் நடக்கணும், திடீர்னு ஒரு புதையல் , அந்த மாதிரி,... ஒரு நிமிஷத்துக்குள்ளேயே  எல்லா பிரச்னையும் தீர்ந்துடனும். ஏன்? ஏன்னா, நாமள்லாம் திருந்திட்டோம்... செஞ்ச தப்பை உணர்ந்துட்டோம்  ...  So , We deserve that . தப்பு செஞ்சுக் கிட்டு இருந்த காலத்துல, கிளிப்பிள்ளையை கெஞ்சுற மாதிரி , நம்ம கூட இருந்தவங்க எல்லாம், கெஞ்சி இருப்பாங்க... ஹ்ம்ம்.... நாமளாவது, கேட்குறதாவது.... ! எனக்கு தெரியும்பா, நான் தப்பு தான் செய்றேன்... ஆனா, நான் பார்த்துக்குறேன்... ஒன்னும் பிரச்னை வராது. எவ்வளோ கெத்தா பேசி இருந்து இருப்போம்.... ! அதுக்கு அப்புறம் செமத்தியா ஒரு அடி,... வாங்குன பிறகு, ஞானோதயம் வரும்...

நேத்து  வரைக்கும் இதுதான் உலகம்னு நினைச்ச ஒரு விஷயம், அடத் தூ.. இவ்வளவு கேவலமான ஒரு விஷயமானு தோணும்... 

 ஐயோ... கடவுளே, உனக்கு கண்ணு இல்லையா, ஏன் எனக்கு மட்டும் இப்படி? தப்பு செய்றவன் எல்லாம் நல்லா இருக்கிறானே..... அப்போ கூட , பாருங்க, தப்பு செய்றவன் எல்லாம் நல்லா இருக்கிறானே...! என்னை மட்டும் காலை வாரி விட்டுட்டியே..! ஒரே புலம்பல் மயம் ... !

அப்போ, அது தப்பா சார், இனிமேல் தப்பு செய்ய மாட்டேன், நான் உணர்ந்துட்டேன்.. கடவுள் கருணை காட்ட மாட்டாரா? செஞ்ச தப்புக்கு அதிகமாவே தண்டனை அனுபவிச்சுட்டேன்... போதும், இதுக்கு மேல தாங்குற சக்தி இல்லை சார்....!

கவலைப் படாதீங்க .... கடவுள், உங்களை, என்னை விட ரொம்ப நல்லவர். அழ வைச்சுப் பார்க்கிறதுல சந்தோசப்படுற , ஒரு குரூரத்தனம் சத்தியமா அவர்கிட்ட கிடையாது. மனுஷ மனம் ரொம்ப விசித்திரமானது. கீழே விழுந்தோம்னா,  வெறும் சிராய்ப்பு தான்னு வைச்சுக்கோங்க. திரும்ப ஓடுவோம்... அதே தவறான பாதையில. அதனால, அவர் வேதாளம் திரும்ப முருங்கை மரம் ஏறக்கூடாதுன்னு , கொஞ்சம் முழுசா முடக்குவார். 

ஒரு தகப்பனுக்கு தெரியாதா, புள்ளைக்கு எது , எப்போ கொடுக்கணும்னு... ! ரொம்ப சமர்த்தா , அமைதியா இருக்கிற குழந்தைகளைவிட துரு துரு னு இருக்கிற குழந்தைகளைத் தான் எல்லாருக்கும் பிடிக்கும். தப்பு செஞ்சுட்டோமேனு , உள்ளுக்குள்ளேயே போட்டுக் குமைஞ்சுக்கிட்டே இருக்காதீங்க... ஐயோ.. போச்சேன்னு புலம்பாதீங்க... அவனுக்கு தெரியும், நமக்கு எது , எப்போ கொடுக்கணும்னு.... நாம எல்லாம் செல்லப் புள்ளை சார் அவனுக்கு.. !

இந்தா, தந்தேன் ... னு ஒரே நொடில தூக்கிக் கொடுத்தா, கனம் தாங்காம கீழே கூட போட்டுடுவீங்க... உங்களுக்கு கிடைக்கிற அருமையான விஷயங்கள் , எல்லாம் உங்களுக்கு இப்போ புரியாம இருக்கலாம்... ( இதோ, இந்த கட்டுரை மாதிரி... என்னதுங்க... ரொம்ப ஓவரா இருக்கா .. சரி... சரி.. ) , கொஞ்ச நாள் கழிச்சு பார்த்தா, எப்பேர்ப்பட்ட ஒரு அருமையான விஷயம் உங்களுக்கு கிடைச்சு இருக்குதுன்னு புரியும்... !

நான் திருந்திட்டேன். எனக்கு இப்போவே குடுனு , உடனே போய் மல்லுக் கட்டாதீங்க. முயற்சி திருவினை ஆக்கும். முதல் முறை கேட்டேன். கிடைக்கலை. திரும்ப கேளுங்க. முதல் முறை சரியா கேட்கலைன்னு புரிஞ்சுக்கோங்க... மனுஷ வாழ்க்கையில கர்மத்தால மனுஷன் கஷ்டப்படுறப்போ , அவனுக்கு கை கொடுக்கத் தான் , அந்த காலத்துல நம்ம தாத்தா , பாட்டி எல்லாம் கோவில் கட்டி வைச்சு இருக்கிறாங்க. இந்த காலத்துல , கட்டுற திடீர் கோவிலைப் பத்தி , பக்கா பிசினெஸ் ப்ளான் , பரிகாரம் எல்லாம் பண்ற கோவிலைப் பத்தி சொல்லலை. நான் சொல்றது கோவில்களைப் பத்தி...

மனசு அறிஞ்சு , திருந்தியாச்சா, விடாம போய் நில்லுங்க... முதல்லே மன பாரம் குறையும். அடுத்து எப்போவோ செஞ்ச தப்புக்குத் தான் , இப்போ கஷ்டப்படுறோம்னு மனோ பாவம் வரும். திரும்ப தப்பு செய்யக் கூடாதுன்னு பக்குவம் வரும். இப்போ செஞ்சா, நாளைக்கு கஷ்டப்படுவோம்னு தோணும். நடப்பு வாழ்க்கையில பாவம் குறையும்.. அதனால , நல்லதோட பலம் அதிகமாகி , கெட்டதோட பலம் குறையும். அப்புறம், கெட்டது ஒண்ணுமே இல்லாம போயிடும்.

கோவில்ல இருக்கிறது வெறும் கல்லுன்னு மட்டும், நெனைச்சுடாதீங்க... ! புத்தி தான் பலம், இல்லைன்னு சொல்லலை. நாமளும் புத்தியோட தான் இருந்தோம்.. இருந்தாலும் கீழே விழுந்து புழுதியிலே புரளலை ... அப்போ எங்கே போச்சு நம்ம இந்த புத்தி? திரும்ப நம்ம புத்தி , முழு பலத்தோட வேலை செய்யத்தான் , நாம கோவிலுக்கு போவோம்னு சொல்ல வர்றேன்.
ஆயிரம் வருஷத்துக்கு முந்தி கோவில் கட்டின ஆளுங்க எல்லாம் , பைத்தியக் காரனுங்க.. நாம தான் பயங்கர புத்திசாலி.. இல்லே?

தெய்வம் நம்மளை கை விட்டுடுச்சோனு நினைக்காதீங்க... நாம தான் தெய்வத்தோட கைப்பிடியை விட்டு இருந்து இருப்போம்... எந்த காலத்துல, (அறிவுள்ள )பெத்தவன் , புள்ளையை விட்டுக் கொடுத்து இருக்கான்? ஆனா, எத்தனை புள்ளைங்க , பெத்தவங்களை அநாதை இல்லத்துல, முதியோர் இல்லத்துல சேர்த்து இருக்கிறாங்க?

ஆன்மீக எண்ணம் இருக்கிறவங்களுக்கு  மட்டும் தான் , மனசை காத்து போல லேசாக்கி , கஷ்டங்களை சமாளிக்க கூடிய சக்தி இருக்கும். பதிலுக்கு பதிலு தாக்கி , செத்து மடியிறதுக்கு நாம ஒன்னும் மிருகமா பிறக்கலை... அபூர்வமான மனித இனம். துரோகத்தை தட்டி கேட்குற பொறுப்பை ஆண்டவன் கிட்டே விட்டுட்டு, நிம்மதியா நம்ம வேலையை நாம பார்ப்போம்... பொழைப்பை  பார்க்கலாம்யா... ... 

சட்டம், சாட்சின்னு ஆதரவு இல்லாதவங்களுக்கு அந்த தெய்வம் மட்டும் தான் துணை. போய், காலைக் கெட்டியா  பிடிச்சுக்கிட்டு விடாதீங்க... மனசு  துடிக்க துடிக்க நீங்கள் அழும் குரலுக்குத்தான் சக்தி அதிகம்..! நம் குரலுக்கு எவ்வளவு சக்தி இருக்குதோ, அவ்வளவு சீக்கிரம் அவன் ஓடி வருவான். அப்பன் வரும் முன், அன்னை உடனே ஓடி வருவாள்..!

ஏமாற்றம் தானே எதிலுமே என்று நினைக்க வேண்டாம்... ஏ (சூப்பர்) மாற்றமப்பானு, நீங்களே சீக்கிரம் உணர்வீங்க...!

ரொம்ப பெரிய கட்டுரையா ஆகிடுச்சோ... சரி , அடுத்து பார்க்கலாம்..!

நல்லவனா இருந்தா மட்டும் போதாது பாஸு, நம்பிக்கையோட இருங்க.... நாம கண்டிப்பா ஜெயிக்கிறோம்..... ! ஓம் சிவ சிவ ஓம் ஜெபிக்க ஆரம்பிங்க...! ஜென்ம ஜென்ம எதிரிகளுக்கே உதவி பண்ண ஆரம்பிச்சுடுவீங்க... ! வெட்டிக்கிட்டு கிடக்கவா நாம பிறந்தோம்... இன்னும் ஒரு பாவ மூட்டையா? போதும்பா சாமி...!

கோபத்தை குறைங்க... ! உக்கிரமா இருந்து ஒரு புல்லைக் கூட (புல் தான்) புடுங்க முடியாது. இதுவே பதட்டப் படாம, நிதானமா இருங்க.. புயலையே சமாளிக்கலாம்... ! துன்பியல் சம்பவங்கள் இனியும் தொடர வேண்டாம்... (தயவு செய்து யாரையும் புண்படுத்துறதுக்காக சொல்றதா நினைக்க வேண்டாம் ) 

கடைசி காலத்துல, வெறும் நினைவுகள் மட்டுமே எஞ்சி படுக்கையில் கிடக்கும் அந்த நேரத்தில, ஒரு திருப்திகரமான வாழ்க்கை வாழ்ந்த ஒரு மகத்தான மனுஷனா , நம்ம வாழ்க்கை அமைய , அந்த அருணாச்சலம் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்கட்டும்..!


வாழ்க அறமுடன் ! வளர்க அருளுடன் !

நன்றும் இன்றே செய் ! இன்றும் இன்னே செய் ! - நிச்சயமாக உங்கள் வாழ்க்கைக்கு மாபெரும் பொக்கிஷம் !

| Oct 11, 2011
வாசக அன்பர்களுக்கு என் பணிவான வணக்கம்..! என்னடா, இந்த மாசம் தொடங்கி பத்து நாள் ஆச்சே, இன்னும் ஒரு கலக்கல் கட்டுரை கூட வரலையேன்னு நெனைச்சுக்கிட்டு  இருந்து இருப்பீங்க..... ( என்னது , இல்லையா? அட , எப்போவாவது மறந்து ..... இல்லையா? சரி , விடுங்க)   அதனாலே என்ன , படிச்சதுக்கு அப்புறம், நீங்க ஒரு பத்து நிமிஷமாவது யோசிப்பீங்க , கண்டிப்பா... ! இந்த கட்டுரை, நீங்க எப்போ படிச்சாலும், உங்களுக்கு , உற்சாகம் அளிக்ககூடிய, ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் கட்டுரையா இருக்கும்... அதுக்கு நான் உத்திரவாதம்..!
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQdh2aoPmRkRRBTFqr_LmmsX_yNHl5_XO-Vq_GE-riCUinU9LGE

இங்கே நான் சொல்லப்போற , ஏற்கனவே நான் எழுதி இருக்கிற பல விஷயங்கள் - எத்தனையோ புத்தகங்கள்ளே படிச்சதா இருக்கலாம் . பெரிய பெரிய ஞானிகளின் பல வருட ஆராய்ச்சிக்குப் பின் கிடைத்த பொக்கிஷங்களா இருக்கலாம். என்னுடைய அனுபவத்தில், நான் பட்டு, உணர்ந்து கிடைச்ச தகவல்களா இருக்கலாம். இல்லை, உங்களைப் போல நண்பர்கள் , அனுப்பி வைத்த சிறந்த கருத்துக்களா இருக்கலாம்.  நான் உங்க கிட்டே பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவே.. நம்ம கட்டுரைகளை எல்லாம் படிச்சுட்டு , நான்  ஏதோ பெரிய பிஸ்தான்னு நினைச்சுக்கப் போறீங்க... ! நானும் உங்களை மாதிரி ஒரு சாதாரண ஆளுதான்.. ஏன், உங்களை விட கம்மியா விஷயம் தெரிஞ்சவன் தான். ... ஆனா, உங்களை மாதிரியே, ரொம்ப ஆர்வமா, இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தேடிக்கிட்டு இருக்கிற, அந்த இறை சக்தியை உணரனும்னு துடிக்கிற , இன்னும் கொஞ்சம் நல்லவனா ஆகணும்னு நினைக்கிற , மனிதம் வளர்க்கணும்னு நெனைக்கிற ஒரு சாதாரண ஆளு.... ஏதாவது தவறுதலா கருத்துக்கள் இருந்தா தயவு செய்து சுட்டிக் காட்டுங்க, திருத்திக் கொள்கிறேன்.! இந்த இரண்டாம் ஆண்டு பயணம் , ஒரு சுவாரஸ்யமான , பயணமாக இருக்க  , அந்த இறை என்னுடன் தொடர்ந்து இருக்க பேராசைப் படுகிறேன்!

சரி, மேட்டருக்குப்  போகலாம்!

ஆலயம் என்றால் என்ன? ஏன் நாம அங்கே போகணும்? நம்ம மதத்தில மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள்? கடவுள் நிஜமாவே இருக்கிறாரா/ அப்படி இருந்தா, அவர் எங்கும் இருப்பவர்னா, அப்புறம் ஏன் கோவில்ல மட்டும் நாம போய் கும்பிடனும் ?  மத்த இடங்கள்...? இப்படி உங்களைப் போலவே பல கேள்விகள் எனக்கும் உண்டு.... பொறுமையா, ஒவ்வொரு விஷயமா பார்ப்போம்...!

இந்த கம்ப்யூட்டர் இருக்கு. அப்படினா இதை ஒருத்தர் உருவாக்கி இருக்கணும். இந்த மேஜை, நாற்காலி இருக்கு. இதை ஒரு தச்சர்தான் உருவாக்கி இருக்கணும். ஒரு பொருள் இருந்தா , அதுக்கு ஒரு காரணகர்த்தா உண்டு. அதே மாதிரி, இந்த பூமி, வானம், சூரியன், நட்சத்திரம், அண்டம், பேரண்டம் எல்லாம் இருந்தா , அதுக்கும் ஒரு காரண கர்த்தா இருக்கணும், இருந்தே ஆகணும்....


அப்படி உங்களையும் , என்னையும் இந்த உலகத்தையும் உருவாக்கிய பரம்பொருள் தான் , கடவுள்...! (அப்படின்னு நான் சொல்றேன். நீங்க உங்களுக்கு தோணுன பிறகு சொல்லுங்க போதும் . நாம எல்லாரும் கடவுளின் குழந்தைகள். இறை நம் அனைவரின் உள்ளும் நிறைஞ்சு இருக்கு. ஆபடிப்பட்ட நாமே , மனசு அறிஞ்சு ஏதாவது தப்பு செய்யலாமா? )


அப்போ அவர் எவ்வளவு  பெரிய மகா சக்தி...!  எப்படி இருந்தா, அவர் இத்தனையையும் கட்டிக் காக்க முடியும்..! நாம என்னடான்னாக்க , நம்ம வீட்டை , ஆபீஸை  கட்டுக் கோப்பா வைக்கிறதுக்குள்ளவே , முழி பிதுங்குறோம்...!  

கடவுள் - இந்த உலகத்தை எப்படி சமாளிக்கிறார்னு பாருங்க... !


ஒவ்வொரு ஜீவ ராசிக்கும், அது ஜனிக்கிறப்போவே ஒரு சார்ட் , அதுதாங்க, ஜாதகம்...உண்டு. மனுஷனா இருக்கிறதால, நமக்கு சிந்திக்கிற அறிவு இருக்கிறதால  , ( நமக்கு எல்லாம் ஆறறிவாம்ல) , நம்ம முன்னோர்கள் இதுல எதோ விஷயம் இருக்குதுன்னு , கண்டு பிடிச்சு சொல்லி இருக்கிறாங்க... நாம தான் அதை பெரிசா எடுத்துக்கலை... 

ஒவ்வொரு மனுஷனோட உடம்புலயும், ஒன்பது சக்கரம் சுழலுதாம். நாம பிறக்கும்போது, இந்த ஒன்பது கிரகங்கள் எங்கே , எங்கே இருக்குதோ, அதுக்கு ஏத்த படி இந்த சக்கரங்கள் நம்மை சுழட்டுவித்து - நீ இப்போ இதை செய், இதை செய்யாதேன்னு கொஞ்சம் , கொஞ்சமா ஆட்டுவிக்குது,,, நம் எண்ணங்கள் உள்பட... இதற்க்கு பஞ்ச பூதங்களால் ஆன நம் உடம்பு , இயற்கைக்கு கட்டுப் படுது.  சனி , செவ்வாய் , குரு இந்த மாதிரி கிரகங்கள் உண்டு தானே... கிரகணம் உட்பட...! 

நீங்கள் இயற்கையிலிருந்து  , பஞ்ச பூதங்களில் இருந்து எதை எடுத்தாலும், இந்த நவ கோள்களின் பிடியில் வந்து விடுகிறீர்கள்.

பெரிய , பெரிய முனிவர்கள், ரிஷிகள் - உன்னை உணர் , உன்னை உணர்னு சொல்றது இதைத்தான்... இந்த சக்கரத்தை நாம உணர்ந்து - உள்ளுக்குள் உறைந்து கிடக்கும் அந்த சக்தியை , உபயோகப் படுத்துனு சொல்றாங்க... யோக, பிராணயாம பயிற்சிகள் சொல்லிக் கொடுக்கிறதும் இதைத்தான்.. !
இயற்கை , நவ கிரகங்கள் எல்லாம் வெளிப்படுத்துற சக்தியை , இந்த சக்கரங்கள் வாங்கி, நம்மளை செயல் பட வைக்குது... இது நல்ல வகையில் செயல் நடத்த , நமது பூர்வ ஜென்ம வினைகளைப் பொறுத்து அது அமைகிறது...! 

ஜாதகம், வாஸ்து , அதிர்ஷ்ட்டக் கற்கள் எல்லாம் ஒரு பாதினு வைச்சாக் கூட, மீதி பாதி , உங்க கையில தான் இருக்குது..! போன ஜென்மத்து வினைகள் , கடுமையா இருந்தாக் கூட , தெளிவான மன திடத்துடன், சிந்தனையுடன், உங்கள் உடல்  நலம் பற்றிய அக்கறையுடன் , திட்டமிட்டு , முடிவு எடுத்தாலும், நீங்கள் வெற்றி பெற முடியும்.. ! என்ன , கடினமாக போராட வேண்டி வரும்..!


இதையே , போன ஜென்மத்து புண்ணியம் நிறைய வைத்து இருப்பவர்கள், உங்களில் கால்வாசி முயற்சி செய்தாலே , உங்களை தாண்டிப் போக முடியும்... ! அப்போ, நம்ம முயற்சிக்கு என்ன பலன்னு கேட்காதீங்க...! நடந்து  முடிந்த விஷயங்களைப் பற்றி , யோசித்து என்ன பண்ண முடியும்? இனிமேலாவது , நல்ல காரியங்களை செய்து , புண்ணியக் கணக்குல கொஞ்சம் வரவு  வைப்போம்... !  பாவக் கணக்கை இது தாண்டி வந்திடுச்சுனா, எப்போ வேணும்னானாலும், அது உங்களுக்கு பயன் தருமே ! 

அதனாலே , ஜாதகத்தைப் பார்த்துட்டு - எந்த ஜோதிடரும் , ஒன்னும் சரியா இல்லையேப்பா ன்னு சொன்னாக் கூட , மனம் தளர்ந்து போகாம , தைரியமா , முயற்சி செய்யுங்கள்.. இன்னும் ஒரு பாதி இருக்கு....


நடந்தவை போகட்டும். இனிமேல் நீங்கள் செய்யும் ஒவ்வொரு நற்காரியங்களும், புண்ணிய செயல்களும், தர்ம காரியங்களும் - உங்களுக்கு அடுத்த ஜென்மம் வரை கூட , துணை வரும். உங்கள் சந்ததியையும் காக்கும்.


இது எல்லா விஷயமும் , நம்ம முன்னோர்களுக்கும் தெரியும்.ஆனால், ஏதோ காரணங்களுக்காக , பல புராணக் கதைகளோட அதை மிக்ஸ் பண்ணி, மிகை படுத்தி , ஒரு கேலிக் கூத்தா, நம்பவே கொஞ்சம் கடினமா ஆக்கிட்டாங்க..!


கோவில்கள் எதற்கு தேவை?
சுதி, லயம் எல்லாம் சேர்ந்தாதான் , பாட்டு. அது மாதிரி,ஆண்டவனை , ஆள்பவனை , ஆளப் போகிறவனை சரியான விகிதத்தில் வைத்து இருக்கும் இடம் தான் ஆலயம். இப்படிப் பட்ட ஒரு ஆலயத்தில் நீங்கள் உள்ளே நுழையும்போதே , உங்கள் உடம்பில் சுணங்கிக் கொண்டு இருக்கும் சக்கரம் சீராக சுழல ஆரம்பிக்கும். உங்களுக்கும் தெளிவு கிடைக்கும் . நீங்களும் சுய, புத்தியுடன் செயல் பட ஆரம்பிப்பீர்கள்.  


இப்படி , மிக சரியான விகிதத்தில் அமைந்து இருக்கும் ஆலயங்கள் இந்தியாவில் , ஏராளம். இந்த ஒரு விஷயத்தை நாம் புரிந்து இருப்பதைவிட, நம் எதிரி நாடுகள் தெளிவாகப் புரிந்து , பொறாமையில் புழுங்கிக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக , நம் தென் இந்தியாவில் இப்படிப் பட்ட ஆலயங்கள்  அதிகம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் , பாலை என ஐந்து இயற்கை நிலங்களும் இங்கு அதிகம். பாலை நிலமா ? கடற்கரை கூட பாலை தான்.


இப்படிப்பட்ட மகத்தான ஒரு பூமியில் தான் நாம் பிறந்து இருக்கிறோம். இல்லை , போன ஜென்மத்தில் பிறந்து இருப்போம்... இல்லைனா, நீங்கள் இப்போது எப்படி தமிழில் பேச, படிக்க முடியும்?


அந்த பரம்பொருளின் மகத்தான ஆசி பெற, ஐதீக முறைப்படி அமைந்த ஆலயங்கள்  இங்கு இருப்பதைப் போல , உலகில் வேறு எங்கும் கிடையாது. இன்றைக்கும், அயல் நாடுகளில் வசிக்கும் அன்பர்கள் நம் தமிழ் நாடு வந்தால்,  அது ஒரு கோவிலுக்குப் போக வேண்டும் என்கிற எண்ணத்தை உள்ளடக்கியே இருக்கும்.


நம் ஊரில் இருக்கும் நண்பர்களுக்குத்தான் இந்த ஆலயங்களின் மகிமை புரிவதே இல்லை. பக்கத்து வீட்டில் இருக்கும், பிற மதத்தவர்கள் வாரம் தவறாமல் , அவரவர் கடவுளை வணங்கினாலும் , நமக்கு பிரதோஷம், பௌர்ணமி கூட ஒரு பெரிய விஷயம் இல்லை.


இந்த மாதிரி விசேஷமான நேரங்களில், விசேஷமான ஆலயங்களில் நாம் இருந்தாலே போதும், நமக்கு நம் கர்ம வினைகளின் தாக்கம் குறைய ஆரம்பிக்கும். 


நம் மதத்தில் மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள்?

ஒரு வீடு என்று இருந்தால் , எப்படி ஹால் , பூஜையறை, சமையலறை , தூங்கும் அறை என்று இருக்கிறதோ, அதன் மூலம் குறிப்பிட்ட பலன்கள் நாம் அனுபவிக்கிறோமோ, அதைப் போல - ஒவ்வொரு தெய்வத்திற்கும் , சில குறிப்பிட்ட வரங்களை அளிக்கும் ஆற்றல் இருக்கிறது. இதனால் தான் , பலப் பல ஆலயங்கள் , பலப்பல தெய்வங்கள் நம் முன்னோர்களால் வழிபடப்பட்டு இருக்குமோ என்கிற எண்ணம் தலை  தூக்குகிறது. 


சரி, மனிதனாகப்  பிறந்தவர்களுக்கு எந்த தெய்வத்தை வணங்கினால் நல்லது என்று பார்த்தோமேயானால் - மகத்தான ரிஷிகள் அனைவரும் அறிவுறுத்துவது - கால பைரவரையே.  இவர் தான் சனி பகவானின் குருவாக கருதப்படுபவர். கர்ம வினைகளை அறுப்பவர் இவரே. நாம் எத்தகைய கொடிய பாவங்களை முன் ஜென்மங்களில் செய்து இருந்தாலும், அவற்றின் தாக்கத்தை குறைத்து , நமக்கு கிடைக்கவேண்டிய பலன்களை அள்ளிக் கொடுப்பவர். சிவ சொரூபங்களில், விரைவில் பலன்களை  தருபவர் பைரவர்தான்.


பைரவரை வழிபட தேய்பிறை அஷ்டமி தினம் , மிக உகந்தது. வீட்டில் வைத்து பைரவரை வணங்க இயலாது. பைரவ மூர்த்தத்தில் - சொர்ண ஆகர்ஷண பைரவரை மட்டும் வீட்டில் வைத்து வணங்கலாம். இவரது படம் வீட்டில் இருந்தாலே போதும். உங்களுக்கு பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். முறைப்படி , வழிபடத் தொடங்கி , நம்பிக்கையுடன் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் , உங்களுக்கு மகத்தான வெற்றியை தேடித் தரும்.


விதிப்படி நடப்பதை நாம் தடுக்க முடியாது. உங்களுக்கு ஒரு இழப்பு, பிரிவு , துக்கம் ஏற்பட வேண்டுமெனில் , அது நடந்தே தீரும். அப்ப, இறைவனை வழிபடுவது எதற்கு என்று கேட்கிறீர்களா? இழப்பதை தடுக்க முடியாது தான், அது பூர்வ ஜென்ம வினை. ஆனால், இந்த தெய்வ வழிபாடு உங்களுக்கு வரவிருக்கும் வாய்ப்புகளை விரைவில் கொடுக்கும். உதாரணத்திற்கு , உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பு இருக்கும் என்றால், ஏதோ ஒரு வகையில் , உங்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் வரவு வர வைக்கும். இப்போது, உங்களால் இழப்பை ஈடு செய்ய முடியும் அல்லவா? 


ஒரு பெண்ணை மனதார விரும்புகிறீர்கள் , என்று வைத்துக் கொள்வோம். சந்தர்ப்ப சூழ்நிலையால் , அவரை மணம் முடிக்க இயலவில்லை. காதல் தோல்வியில் முடிகிறது. அது உங்கள் வினைப் பயன். மனம் தளராது , நீங்கள் இறைவனைப் பற்றி நிற்கும் பொழுது, அவர் உங்களுக்கு அந்த பெண்ணை விட , அற்புதமான வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பார். உங்கள் மனம் மகிழ்ந்து , ஏற்கனவே இருந்த வலி , துயரம் மறைந்துவிடும்.


அதை விட்டு , துயரம் வலி வந்தால்  - மதுவின் பிடியில் மாட்டிக்கொண்டு விட வேண்டாம். வாழ்க்கையில் வேதனைப்படும் சம்பவங்கள் எது நிகழ்ந்தாலும், உங்கள் பூர்வ ஜென்மை வினை குறைகிறது என்று மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டு , இறைவனை இன்னும் தீவிரமாக பற்றிக் கொள்ளுங்கள். 


இடுக்கண் வருங்கால் நகும் அளவுக்கு, நாம் இன்னும் போகவில்லை. வலி , வேதனை இருந்தாலும், தினமும் இறைவனை நினைத்து அவன் பொறுப்பில், விட்டுவிடுங்கள். முடிந்தால் தினமும் அவனைப் பார்த்து வாருங்கள். இல்லையா, வாரம் ஒருமுறையாவது கண்டிப்பாக செல்லுங்கள். அழுகிற  புள்ளைக்கு தான் பால் கிடைக்கும். மனதில் , ஆழத்தில் உங்கள் அழுகை தீராமல் இருக்க வேண்டும். கடவுளை பார்க்கும்போதே , கண்ணிலேயே உங்கள் கோரிக்கையை சொல்லுங்கள்.   உங்களைப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும்,அந்த இறைவனுக்கே மனது பதற வேண்டும். என்னடா, நாள் தவறாமல் நம்மளை நம்பி , இங்கே வர்றானே , இவனுக்கு என்ன செய்யலாம்னு யோசிக்க வைக்கும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்களை - அவனே சீக்கிரம் அனுப்ப வேண்டும். கண்டிப்பாக அனுப்புவான், நிச்சயமா அது நடக்கும்...


அதல பாதாளத்தில் விழுந்து விட்டோமே என்று கலங்கி நிற்க வேண்டாம். தோல்விகள் மாதிரி ஒரு நல்ல படிப்பினையை உங்களுக்கு யாரும் கற்றுத் தர முடியாது. சிகரம் நீங்கள் தொடுவது உறுதி..!


தோல்விகளில் இருந்து மீண்டு, வாழ்க்கையில் நீங்கள் சீக்கிரம் முன்னுக்கு வர, சில எளிய யோசனைகளை இப்போது கூறுகிறேன்...


மது , மாமிசம் இனிமேல் மறந்தும் தொட வேண்டாம். எல்லா ஜீவ ராசிகளுக்கும் வினைப் பயன் உண்டு. ஆடு, கோழிகளை நாம் உண்ணும்போது, அவற்றின் பாவத்தையும் நாம் சேர்ந்து சுமக்கப் போகிறோம். நம் பாவத்தை கரைக்கவே இன்னும் எவ்வளவு கஷ்டங்களோ..? அக்பர் சொன்னது போல, நம் வயிறு பிணங்களைப் புதைக்கும் சுடுகாடாக இருக்க வேண்டாம்.


வாரம் ஒரு முறையாவது , உங்கள் மனதுக்கு நிம்மதி  அளிக்கும் ஒரு கோவிலுக்கு சென்று, ஒரு மணி நேராமாவது அங்கே, மனமுருக இறைவனை வேண்டுங்கள். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஒரு ஸ்தல விருட்சம் உள்ளது. அந்த விருட்சம், இறைவன் அமர்ந்து இருக்கும், கர்ப்ப கிருகத்திற்கு சமம்.  உங்கள் தீய வினைகளை ஈர்த்து , உங்கள் வினைச் சுமையை குறைக்கும். எல்லாராலும், கர்ப்ப கிருகத்தினுள்ளே செல்ல முடியாது. ஆனால், ஸ்தல விருட்சத்தின்  அடியில் அமரலாம். அங்கு அமர்ந்து, நீங்கள் ஜெபிக்கும் மந்திர ஜெபம் , அளவில்லாத ஆற்றலுடன், உங்களை கவசம் போல் பாதுகாக்கும். ஆலயங்கள் ஆற்றலுடன் திகழ , கோபுர கலசமும், ஸ்தல விருட்சமும் தான் மிகப் பெரிய காரணிகள்.


ஜாதி மத இன வேறு பாடின்றி , இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரும் ஜெபிக்க வேண்டிய மந்திரம் . ஓம். பிரணவ மந்திரம். சிவ சிவ என்று ஜெபிக்கும்போது உங்களுக்கு கர்ம வினைகள் அழிய ஆரம்பிக்கும். ஆனால், சிவ சிவ மந்திரம் உங்களுக்கு பற்று, பாசத்தை  அழித்து துறவறத்தை நோக்கி இட்டுச் செல்லும். குடும்பஸ்தர்களுக்காகிய நமக்கு இந்த மந்திரம் சரிப் படாது. மகான் மிஸ்டிக் செல்வம் ஐயா, அவர்கள்  தன ஒட்டுமொத்த வாழ்வையே ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபட்டு , கண்டறிந்த மகத்தான மந்திரம் " ஓம் சிவ சிவ ஓம் " , சிவ சிவ மந்திரத்துக்கு முன்னும் , பின்னும் ஓம் சேரும்போது , அதன் சக்தி அளவிட முடியாத அளவுக்கு பன்மடங்கு ஓங்கி விடுகிறது. பல உயரிய வேத மந்திரங்களுக்கு இணையானது இந்த மந்திரம். வேதங்களை கற்று உணர, நமக்கு பாக்கியம் உண்டோ , இல்லையோ தெரியாது. ஆனால் , உரிய நேரத்தில் இந்த மந்திரம் கிடைத்த வகையில் , நாம் ஒவ்வொருவரும் பாக்கியசாலிகளே.


தினமும் , குறைந்தது பத்து நிமிடம் காலையிலும், இரவிலும் ஜெபிக்க ஆரம்பியுங்கள். அவனுள் தொடங்கி, அவனுள் முடிவதே உலகம். ஒரு நாளை தொடங்கும்போதும், முடிக்கும்போதும் இந்த மந்திரத்தை சொல்ல ஆரம்பியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக, நேரத்தை நீங்கள் பின்னர் அதிகரித்துக் கொள்ளலாம். எந்த மந்திரமும், ஒரு லட்சம் முறை ஜெபித்த பிறகே, தன் சக்தியைக் காட்டத் தொடங்கும். 


அதன் பிறகு பாருங்கள், உங்களுக்கு நடக்கும் அற்புதத்தை..!  உங்கள் வாழ்க்கையே , ஜெபிக்கும் முன், ஜெபித்த பின் என்று பிரித்து உணர முடியும்... வஞ்சனை இல்லாது, நீங்கள் உங்களுக்குத் தெரிந்த அனைவருக்கும் , இந்த மந்திரத்தை கற்றுக் கொடுங்கள். ஜெபம் பண்ணும்போது, மஞ்சள் துண்டு, வேஷ்டி , கையில் ருத்திராட்சம் இருந்தால் மிக நல்லது, ஜெபித்த பிறகு - தண்ணீர் அல்லது இளநீர் , அவசியம் அருந்துங்கள். அது, உங்கள் மந்திர சக்தியை உங்கள் உடம்பிலே தங்க வைக்கும். எது இருந்தாலும், இல்லை என்றாலும், இந்த மந்திர ஜெபத்தை ஜெபிக்கலாம். பயண நேரங்களில் கண்டிப்பாக தவிர்க்கவும். நடந்து செல்லும்போதும் ஜெபிக்க வேண்டாம்..!


அண்ணாமலை , சபரிமலை , மேலும் புனித பாத யாத்திரைகளில் ஜெபிக்கலாம்.


மாதம் ஒரு முறை - சதுரகிரி, அண்ணாமலை , உங்கள் குல தெய்வம், ஸ்ரீவில்லிபுத்தூர் அன்னை பத்திரகாளி, முருகனின் அறுபடை வீடுகள், சமயபுரம், மதுரை, கொல்லிமலை , திருவாற்றியூர் , மயிலாப்பூர் , திருப்பதி, ஸ்ரீரங்கம் , காஞ்சிபுரம் போன்ற மேலும் இறை இன்றும் நடமாடும் பல பிரசித்திப் பெற்ற ஸ்தலங்களில் , ஏதாவது ஒன்றிற்கு , அவசியம் சென்று வாருங்கள். தமிழ் நாட்டில் சக்தி வாய்ந்த ஆலயங்கள் ஏராளமாக உள்ளன. 


தவறாமல் , ஆலய தரிசனத்தை பயன் படுத்திக் கொள்ளுங்கள். அந்த கால பழைய ஆலயங்கள் எல்லாம் , இன்றளவும் பல சித்தர்களின் நடமாட்டம் சூட்சுமமாக உள்ள இடங்கள். அவர்களின் ஒரே ஒரு பார்வை கூட, நம் பாவத்தை ஒரு நொடியில் போக்கிவிடும். போலி, பாசாங்கு இல்லாத , பகட்டு இல்லாத - உங்கள் நாம ஜெபம், பல மகா புருஷர்களின் தரிசனத்தை உங்களுக்கு நிகழ்த்தும். 
 
எந்த ஆலயம் சென்றாலும், அவசியம் இந்த மந்திர ஜெபத்தை செய்து வாருங்கள். ஸ்தல விருட்சத்தின் அடியில் , நீங்கள் ஜெபம் செய்யும்போது , பரவச உணர்வு உங்களுக்கு நிச்சயம் உண்டாகும். 


இரவில் சீக்கிரம் தூங்கி, காலையில் சீக்கிரம் எழுந்து - பிரம்ம முகூர்த்த வேளையில், இறைவனை தொழும் பழக்கத்தை , இயற்கையை ஆராதிக்கும் பழக்கத்தை ஆரம்பியுங்கள். இது, எல்லாவற்றிலும் மிக முக்கியமானது. நீங்கள் உங்களுக்கு கொடுத்துக் கொள்ளும், மிக சிறந்த பரிசு , இதுதான். கொஞ்சம் யோகா, கொஞ்சம் மூச்சுப் பயிற்சி , கொஞ்சம் தியானம், மந்திர ஜெபம். உங்கள் உடலும் , மந்திர உடலாகிவிடும். பஞ்ச பூதங்களையும், நவ கிரகங்களையும் நீங்கள் வசியம் செய்து விடலாம்..!தினமும் ஒரு கைப்பிடி அரிசி  , இறைவனுக்கு என்று எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட அளவு சேர்ந்தவுடன், அதை சதுரகிரி போன்ற ஸ்தலங்களில் , அல்லது உங்கள் அருகில் இருக்கும் ஆலயங்களில் அன்னதான திட்டத்திற்கு சேர்த்து விடுங்கள்.. தினமும், வேறு ஒரு ஜீவ ராசிக்கு , சிறிதளவாவது உணவு இடுங்கள். ( காகம், நாய், பசு, உடல் ஊனமுற்ற, ஆதரவு இல்லாத ஏழைகளுக்கு ) . இது உங்கள் தலைமுறைக்கே நீங்கள் சேர்த்து வைக்கப் போகும் புண்ணியம்..!
இந்த ஓம் சிவ சிவ ஓம் மந்திரத்தை - நம் வாசகர்கள் அனைவரும் , குறைந்தது பன்னிரண்டு புதியவர்களுக்கு , அறிமுகப் படுத்துங்கள்... இது மகத்தான, புண்ணிய காரியம். ஓம் சிவ சிவ ஓம் மந்திர அறிமுகத்தை , நோட்டீஸ் போல அச்சடித்து , ஆலயங்களில் வரும் பக்தர்களுக்கு, கொடுக்கலாம்.

எந்த ஒரு கலையையும், நீங்கள் கற்றுக் கொண்டு இருந்தால் , அதை தகுதி உள்ள பன்னிரண்டு பேருக்கு , நீங்கள் சொல்லிக் கொடுக்கும்போது , அந்த கலையில் நீங்கள் சகலகலா வல்லவராவது நிச்சயம் , என்பது விதி.....!
எங்கெங்கும் ஓம் சிவ சிவ ஓம் , அருள் அலை பரவட்டும்..! வைணவ சம்பிரதாயம் மேற்கொள்ளும் அன்பர்கள் ஓம் ஹரி ஹரி ஓம் என்றும் ஜெபிக்கலாம்..! பிறவிப் பயனை அடையுங்கள்.. ! நமக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் , கிடைக்கும் நேரத்தில் கிடைத்தால் போதாது... விரைவில் கிடைக்க வேண்டும்..!


இந்த கட்டுரை, இணைய உலகில் - தமிழ் கூறும் ஒவ்வொரு ஆன்மீக அன்பருக்கும் சென்றடைய உதவுங்கள். நீங்கள் வலைப்பூ வைத்து இருந்தால், இந்த கட்டுரையை பதிவிடுங்கள். அல்லது லிங்க் கொடுங்கள். நமது கட்டுரைகளை, தங்கள் வலைப் பூவில் - காப்பி , பேஸ்ட் செய்து கொள்ளலாமா என்று , நிறைய பேர் அனுமதி கேட்கிறார்கள். தயக்கமே வேண்டாம்..! யான் பெற்ற இன்பம் , பெருக இவ்வையகம்..! பூட்டி பூட்டி வைச்சு , நான் போகும்போது  கொண்டு போகப் போறது எதுவுமே இல்லை.   விருப்பம் இருந்தா நன்றி போட்டு  , லிங்க் கொடுங்க.... இல்லையா , நீங்களே போட்டது போல கூட போட்டுக்கோங்க.. நல்ல கருத்துக்கள் , நாலு பேரை சென்றடைந்தால் போதும்..! அதை நீங்கள் செய்தால் என்ன, நான் செய்தால் என்ன?


உலகம் எவ்வளவு சீக்கிரமா , கேவலமா சீரழிஞ்சுக்கிட்டு இருக்குங்கிறது நான் சொல்லி , தெரிஞ்சுக்க வேண்டியது இல்லை. நாம மட்டும் நல்லா இருந்தா போதாது, சுற்றி இருக்கிறவங்களும் நல்லா இருந்தா, நாமும் நல்லா இருப்போம்..!  ஒரு ரவுடி கிட்ட ஒரு வருஷம் இருக்கிறதுக்கும், ஒரு முனிவர் கூட ஒரு வருஷம் இருக்கிறதுக்கும்   - கிடைக்கும் பலன்கள் எப்படி இருக்கும்னு , நமக்குத் தெரியாதா என்ன? இப்ப நாம எப்படிப் பட்ட ஒரு கூட்டத்தில் இருக்கிறோம் என்று ஒரு வினாடி நினைத்துப் பாருங்கள்.

நம்மை சுற்றி இருக்கிறவங்களுக்கும் - இந்த அருள் அலை பரவ , உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் ..!


நாம் இந்த வாழ்வில் ஜெயிக்க வேண்டுமானால், தனி மனித ஒழுக்கம் , முழு நம்பிக்கையுடன் கூடிய இறை அர்ப்பணிப்பு, தெளிவான இலக்கு , அப்பழுக்கில்லாத திட்டமிடல் , சீரிய முயற்சி இருந்தாக வேண்டும். மெல்ல மெல்ல உறுதியான முன்னேற்றம் நிச்சயம் உங்களுக்கு ஏற்படும்..!


நாம் எந்த மதத்தில், எந்த குலத்தில் பிறந்தோம் என்பது முக்கியமில்லை..! 
போகிற போக்கில் ஒரே ஒரு விஷயம் மட்டும். ஒவ்வொரு முறையும் அண்ணாமலை சென்று , அருணாச்சலேஸ்வரரை தரிசித்து ராஜ கோபுரம் வழியாக வெளியே வரும்போது, இடப் பக்கத்தில் நம் கண்களில் " இளைய ராஜா , ஜீவா அம்மையாரின்" பெயர்கள் தென்படும்.  

ராஜ கோபுரம் - புனருத்தாரணம் செய்ய , நிதி உதவி செய்தவர், இசை ஞானி - நடமாடும் சரஸ்வதி - இளைய ராஜா அவர்கள். மனிதன் பிறந்தது , ஒரு தாழ்த்தப்பட்ட குலத்தில் தான். ஆனால், மனிதனாகப் பிறந்ததற்கு , இதைவிட வேறு என்ன ஒரு சாதனை செய்ய வேண்டும்? 


அவரது சோதனைகள் கடந்த , இந்த சாதனைக்கு - மேலே போல்ட் லெட்டரில் கொடுத்து இருக்கிறேனே , அந்த குணங்கள் தான் காரணம்..!


நம் ஒவ்வொருவரும், இப்படிப் பட்ட பெருமைப் படத் தக்க காரியங்கள் செய்யும் அளவுக்கு, நம் மனசாட்சியே நம்மைப் பார்த்து பெருமைப் படும் அளவுக்கு ,  ஒரு நல்ல நிலை அடைய , அந்த இறைவனின் கருணை நிழல்  , நம் மீதும் விழட்டும்..! சத்தியமும், தர்மமும் நிலைக்கட்டும் !


இதற்க்கு நீங்கள் எடுத்து வைக்கும் முதல் படி தான்... ஓம் சிவ சிவ ஓம் ..! அதன் பின், அந்த இறை உங்களை வழி நடத்தும். இந்த மந்திர ஜெபமே, உங்கள் உடம்பில் உள்ள நாடி நரம்புகளில் ஊடுருவி , நவ சக்கரங்களையும் சுழலச் செய்யும். பல புண்ணிய யாத்திரைகள் செய்த பலன்களை , உங்கள் வீட்டில் இருந்தே கிடைக்கச் செய்யும். 


இதை உணர்வுப் பூர்வமாக அனுபவித்து , உணர்ந்து உங்களுக்கு இதை தெரிவிக்கிறேன்..! இந்த அரிய, பொக்கிஷத்தை , நம் உலக நன்மைக்காக அருளிய ஐயா மிஸ்டிக் செல்வம் அவர்களுக்கு, என் சிரம் தாழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..!


எந்த மந்திர ஜெபமும் , அமாவாசை தினத்தில் ஜெபிக்க ஆரம்பிப்பது நல்லது. ஆனால் , நல்ல காரியம் தொடங்க , இன்னும் பதினைந்து நாட்கள் பொறுக்க முடியாது.. இன்றிலிருந்தே ஆரம்பியுங்கள்..! இன்று ஒரு அபூர்வ சக்தி நிறைந்த தினம். புரட்டாசி மாத பௌர்ணமி. தந்தையும் , மகனுமான - மாபெரும் கிரகங்களான சூரியனும் , சனியும் இணைந்து , சந்திரனை பார்வை இட விருக்கிறது.. !

தந்தை , மகன் உறவு சுமூகமாக இல்லாதவர்கள் , குடும்ப ஒற்றுமை மேலோங்க இந்த நாளின் பௌர்ணமி வழிபாட்டை பயன் படுத்திக் கொள்ளவும்.  விதி வசத்தால் தந்தையை இழந்து - தவிப்பவர்கள், புத்திர சோகத்தால் தவிப்பவர்கள், கர்ம வினைகளால் - தந்தையும், பிள்ளையும் இருந்தும் அநாதை போல தவிப்பவர்கள் , குழந்தை பேறுக்காக காத்து இருப்பவர்கள், குழந்தை வரம் வேண்டி நீண்ட நாள் தவித்துக் கொண்டு இருப்பவர்கள் , அரசு வேலைக்காக போராடிக்கொண்டு இருப்பவர்கள்,  ஏழரை , அஷ்டம சனியால் , புதை குழியில் விழுந்து தத்தளிப்பது போல தவிப்பவர்கள், மேலும் வாழ்க்கையில் முன்னேற துடிக்க தவிப்புடன் போராடும் அத்துணை பெரும் - இன்றைய பௌர்ணமி தின வழிபாட்டை , நம்பிக்கையுடன் செய்யுங்கள்..!  மனம் உருக , ஓம் சிவ சிவ ஓம் ஜெபியுங்கள்..!

அந்த சிவம் உங்களை கவனித்துக் கொள்ளும்..! மீண்டும் இப்படிப் பட்ட நாள் வர இன்னும் பதின் மூன்று மாதங்கள் நீங்கள் காத்து இருக்க வேண்டும்..!நம் முன்னோர்களின் ஆசியை முழுவதும் பெற்று, அவர்களின் மனம் குளிர , அவர்களின் ஆத்மா சாந்தி அடையும் அளவுக்கு, ஒரு நல்ல நிலைமைக்கு நாம் சென்று அடைய , கன்னி ராசியில் சூரியன் நிற்பதால் ஏற்படும் இந்த பௌர்ணமி நன்னாள் , நமக்கு துணை நிற்கட்டும்..!


இனி வர விருக்கும் ஒவ்வொரு நாளும் , புதுப் பொலிவை நமக்கு கொண்டு வர, அந்த இறையருள் என்றும் நம் துணை நிற்கட்டும் ..! 

நினைத்தாலே துயர் துடைக்கும், நம் அன்னை பத்திரகாளியின் அருள் நிழல் , நம் ஒவ்வொருவரையும் வழி நடத்தட்டும்!


மகத்தான , ஒரு ஆன்மீக பரவச அனுபவத்துக்கு தயாராகுவோம் !  


வாழ்க அறமுடன் ! வளர்க அருளுடன் !  

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com